...

"வாழ்க வளமுடன்"

21 ஆகஸ்ட், 2015

உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்!

Health Benefits of Mushrooms - Food Habits and Nutrition Guide in Tamil
காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

***


"வாழ்க வளமுடன்"
      

வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!

Uses and Side Effects of Plantain - Food Habits and Nutrition Guide in Tamil













நம்முடைய வாழ்க்கையில் வாழை என்பது கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி உணவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால்தான் வாழைப்பழம் முக்கனியில் இடம் பிடித்துள்ளது. நமது திருமணம் போன்ற விழாக்கள், சடங்குகளில் வாழை மரம், வாழைப்பழம் முக்கியப் பங்கு பெற்றுள்ளது. வாழையை நம்முடைய முன்னோர்கள் தம் குடும்பத்தின் சொத்தாக நினைத்தனர்.

இன்றைக்கு மருத்துவத்திலும் வாழை பெரும்பாலான ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது.

மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம்.

நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.

வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், கழிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும். ஆனால் வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.


***


"வாழ்க வளமுடன்"
      

காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!


Benefits of Cauliflower and Bottle Gourd - Food Habits and Nutrition Guide in Tamil














காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

காலி பிளவரின் குணங்கள்:

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.


சீதளத்தை போக்கும் சுரைக்காய்.....

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.

ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.


***


"வாழ்க வளமுடன்"
      

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!



எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.

இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!

வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு!

எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.

குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்!

எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

***
fb
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?


Ideal weights of Children - Child Care Tips and Informations in Tamil

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அபயாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே உள்ள உடற்பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த நகரங்களான டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் முக்கியமாக பணக்கார வர்க்கத்தினரிடையே நடத்திய கணக்கெடுப்பின்படி உடற்பருமன் குழந்தைகளிடையே அதிகரித்துக் கொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது. எடை அதிகரிப்பின் முதல் அறிகுறி பிறப்பு எடை, பெற்றோரின் உடற்பருமன் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


ஒழுங்கான உணவு உண்ணும் பழக்கம் இல்லாததாலும், ஒழங்கற்று சக்தியை செலவு செய்வதாலும் அளவுக்கதிகமான உடல் எடை உருவாகிறது. நமது முன்னோர்களின் 'பொருளாதாரப் பெருக்கம்' (Thrifty Genotype) என்பதின்படி உணவு நமது அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது ஆற்றல் அளிக்கிறது. எவ்வாறு உணவு சேமிக்கப் பட்டு பஞ்சத்தின் போது மக்களுக்கு வழங்கப்படுமோ அவ்வாறு. விஞ்ஞான துறையில் வளர்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பங்கள் சுத்தமான உணவு வழங்குவது மட்டுமல்லாது, ஒரு நிலையில் பேரழிவையும் ஏற்படுத்தும்.


ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்:

ஆடம்பரமான விளம்பரங்கள் மக்களை கவர்ந்து, விலை அதிகமான, ஆற்றல் அதிகம் தரும் உணவு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு, சாதாரண மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள் குறைந்த அளவு மட்டுமே தரும் உணவுப் பொருட்களை உண்ண வைக்கின்றனர். இது தவிர இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.


அதிக உடல் உழைப்பில்லாத வேலை உடற்பயிற்சியின்மை

அதிகமான நேரம் திரையின் முன், தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியின் முன் அமர்வது, குறைந்த அளவு வெளி வேலைகளைச் செய்வது.
அளவுக்கதிகமான உடல் எடை என்பது உடல் பொருள் அட்டவணையை பொறுத்து கணக்கிடப்படுகிறது. 85-94% என்பது வயதிற்கு பாதகமான சதவீதமாக கருதப்படுகிறது. 95% மேல் அளவுக்கதிகமான உடல் எடையாக கருதப்படுகிறது.


முதன்முதலில் குழந்தையின் அளவுக்கதிகமான உடல் எடை கணக்கெடுப்பின்போது உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்ப பழக்கவழக்கங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் வெற்றிகரமான மருத்துவ முறைகளுக்கு இந்தப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் காரணங்கள். குழந்தையின் வளர்ச்சி பதிவேடு, உடல் பரிசோதனை மற்றும் பிறபரிசோதனை கணக்கில் கொள்ளப்படுகிறது. இது தவிர ஹார்மோன்கள் மற்றும் மரபணு சோதனைகளும்

மேற்கொள்ளப்படுகிறது. அளவுக்கதிகமான உடல் எடையுள்ளவர்களில் 50% கீழ் வயதிற்கேற்ற உயரமில்லாதவர்கள் ஹார்மோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.


உலக அளவில் வேறுபட்ட ஆய்வுகள் நடத்தியதில் உடற்பருமனால் குழந்தைப்பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.



குழந்தைப் பருவங்களில் ஏற்படும் உடற்பருமனை சீர்செய்யும் வழிமுறைகள்:


எடையை குறைப்பதை விட எடையை பராமரித்தல் முதல் லட்சியம். எடை குறைவு மிக மெதுவான செயலாக இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 0.5 கிலோ வீதமாக 10% எடையை குறைத்தல் என்பது முதல் லட்சியமாக விவரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த எடை குறைப்பு குறைந்தது 6 மாத காலம் பராமரிக்கப்பட வேண்டும்.

வெற்றிகரமான எடைகுறைப்பு மற்றும் எடை பராமரிப்புக்கு முக்கியமான வாழ்வு முறை மாற்றம், அதிகப் படியான உடல் உழைப்பு மற்றும் உணவு, உடற் பயிற்சி, செய்முறை மாற்றங்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.


உடல் பொருள் அட்டவணை(BMI) மற்றும் ஒரு வருடத்திற்கான உடல் பொருள் அட்டவணையை பயன்படுத்தி உடனடியான எடை அதிகரிப்பையும், அடிபோஸ் சேமிப்பும் கணக்கிடப்படுகிறது.


செய்முறை மாற்றங்கள் எடுத்துக்காட்டாக உடல் உழைப்பில்லாத வேலையை குறைத்தல், உடல் உழைப்பை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கைவிடுதல், குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை அதிகரித்தல்.



உணவுப் பழக்க வழக்கங்கள் ஆலோசனை:


1-3 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். 1-6 வயது உள்ள குழந்தைகளுக்கு 4-6 Oz மற்றும் 7-18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 8-12 Oz பழரசம் ஒரு நாளைக்கு கொடுக்கலாம். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும்.

இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.


ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்:


உணவின் போது, குழந்தைகளை தண்டிக்கக் கூடாது. உணவு உண்ணும் போது மகிழ்ச்சியாக பேச வேண்டும்.

பரிசுப் பொருளாக உணவுப் பொருளை உபயோகப்படுத்தக் கூடாது.


உணவு விஷயத்தில் பெற்றோர்கள், சகோதர்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். புதிய உணவுப் பொருளையும், சரிவிகித உணவையும் உண்ண வேண்டும்.

உணவு பலநேரங்களில் வழங்கப்பட வேண்டும். முதலில் விருப்பமில்லாத உணவுப் பொருட்களை பலமுறை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள வெறுப்புகளை உடைத்து விட வேண்டும்.

குறைந்த அடர்த்தியுள்ள உணவுப் பொருள் குழந்தைகளின் ஆற்றலைச் சமப்படுத்தியுள்ளன.
குழந்தைகளின் விருப்பத்தை தடுப்பது ஆசையை குறைப்பதற்கு பதிலாக தூண்டி விடும்.
குழந்தைகளின் புது உணவுப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்ச்சியை வரவேற்க வேண்டும்

குழந்தைகளை 'தட்டைக் கழுவு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது.



உடல் உழைப்பு:


2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி மற்றும் கணிப் பொறி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2-18 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தொலைகாட்சி காண வேண்டும். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கணிப்பொறியில் வீட்டுப் பாடம் செய்தவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். உணவு மற்றும் உடல் உழைப்புடன் மருந்துகளும் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.


உடற்பருமன் வராமல் தடுக்கும் முறைகள்:


கர்ப்ப காலத்தில்


கர்ப்பமாவதற்கு முன் உடல் பொருள் அட்டவணையை சமப்படுத்துதல்.
புகைப்பிடித்தலை தவிர்த்தல்.

அளவான உடற்பயிற்சி.

கர்ப்பகால சர்க்கரை நோயில், சர்க்கரை அளவை சமப்படுத்துதல்.
பிறந்த பின்பும், 3 மாதம் வரை தாய்ப்பால். ஒரு வயது வரை உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் தருவதை தள்ளிப் போடுதல்.



குடும்பங்களில்


குறிப்பிட்ட இடம், நேரத்தில் சாப்பிடுதல்.

நேரம் தவறாமல் சாப்பிடுதல்.

சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

சின்னத் தட்டு மற்றும் கிண்ணம் உபயோகித்தல்..

தேவையில்லாத இனிப்பு, கொழுப்பு மற்றும் பானங்களை தவிர்த்தல்.



பள்ளிக்கூடங்களில்


இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை தடை செய்தல்.
உடற்கல்வி, உணவியல், அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல்.


குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறைபற்றி கற்பித்தல்.


வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற்கல்வி கற்பித்தல்.



சமுதாயத்தில்


குடும்பத்தினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளை எல்லா வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதிகப்படுத்துதல். எவ்வாறு சுகாதாரமான உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென கற்பித்தல்.



மரபியல் மற்றும் செயலியல் காரணங்களை விவரித்தல்

குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடையை அதிகரிக்க முயற்சித்தல்.
உடற்பருமனை நோக்கி உழைத்து, அதன் அங்கீகாரத்தை அதிகரித்து, செலவு செய்த பணத்தை திருப்பி அதற்கான மருத்துவ செலவுக்கு உபயோகப்படுத்துதல்.



உற்பத்தியாளர்கள்


வயதிற்கேற்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கேற்றவாறு கொண்டு வருதல்.


சுகாதாரமான உணவுப் பொருட்கள் பற்றிய விளம்பரம் மூலம் காலை மற்றும் நேரம் தவறாமல் குழந்தைகளை சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்துதல்.



அரசாங்கம் மற்றும் நல சங்கங்கள்


உடற்பருமனை நியாயமான நோயாக வகைப்படுத்துதல். சிறந்த வாழ்க்கையை மேற்கொள்ள நல்வழியில் நிதி ஒதுக்க வேண்டும்.
அரசு சத்துணவு அளிக்க நிதி வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு உடற்கல்வி அளிக்க கூடுதல் உதவி நிதி அளிக்க வேண்டும்.
நகர வரையாளருக்கு இரு சக்கர வாகனங்கள், வழிபாதை ஆகியவை அமைப்பதற்கு நிதி உதவி அளித்தல்.


துரித உணவு பற்றி விளம்பரங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சென்றடையாமல் தடுக்க வேண்டும்.
பச்சை நிற உணவு உங்கள் வாழ்வை வளமாக்கும்.

***
tu koodl
***

"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "