...

"வாழ்க வளமுடன்"

19 ஜூலை, 2011

தொண்டை பாதிப்புகளிலிருந்து தப்பிக்க எளிய வழி !!!சுகாதாரமாக இல்லதிருத்தல் மற்றும் வைரஸ், பக்டீரியாக்கள் தொற்றுக் கொள்வதால் தான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில் புண் இருக்கும் போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது.இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடும். ஆனால் யாரும் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும் போது வைரஸ் அல்லது பாக்டீரியாக்கள் தொற்றும் அபாயம் உள்ளது,


சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும் போது பக்டீரியாக்கள் உட்புகவும் உண்டாகிறது. இதன் அடுத்த கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.பக்டீரியா தொற்றால் ஏற்படும் தொண்டைப் புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. ஸ்டிரெப்டோகாக்கஸ் கிருமி நோய் பரவலுக்கு காரணமாகிறது. தொற்று நோய் பரவும் போது டான்சில்ஸ் வீங்கும்.இதனால் எச்சில் விழுங்கும் போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல் ஏற்படும். சளி, எச்சில் மற்றும் கைகள் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது.


ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விடும் போது நோய் கடுமையாகி மூச்சுக் குழலில் தொற்று உண்டாகி வீக்கத்தால் காற்றுப்பாதை அடைபடலாம். இதனால் மூச்சு விடுவது மற்றும் விழுங்குவது இரண்டுமே சிரமமாகும்.கடும் தலைவலி மற்றும் அதிக காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தொண்டைப் புண்ணுக்கு மருந்துகள் தரப்பட்டால் அவற்றை முழுமையாக உட்கொள்ள வேண்டும். பாதியில் நிறுத்துவதால் சில பக்டீரியாக்கள் தொண்டையிலேயே தங்கி விட வாய்ப்புள்ளது.இந்த பாதிப்புகளிலிருந்து தப்பிக்க தொண்டையில் நோய் தொற்று இருக்கும் பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள்(தண்ணீர், சூப்) எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.


கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.சப்பி சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உமிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும். இந்த மாதிரியான நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம்.


அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும். புகைபிடித்தலை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம். கைகளால் முகத்தைத் துடைப்பதை தவிர்க்கலாம்.குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் தொடர்ந்து மூன்று முறைக்கும் மேல் டான்சில் நோய் தொற்று ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்ற வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அதில் இருந்து கிருமிகள் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.டான்சில் அறுவை சிகிச்சை செய்வதால் குரல் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த பாதிப்பும் இருக்காது. சுகாதாரமான உணவு, குளிர்பானம், தண்ணீர் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் தொண்டை வலியில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
***
thanks adiyakkamangalam
***

"வாழ்க வளமுடன்"

காலணிகள் வாங்க டாக்டர் சொல்லும் டிப்ஸ்


காலணிகள் வாங்கும்போது, மாலை நேரத்தில் வாங்குவதுதான் நல்லது. இது என்ன புதுக்கதை என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
காலையில் இருந்து வேலை, விளையாட்டு என்று ஓடிக்கொண்டே இருக்கும் நமக்கு, மாலையில் பாதத்தின் சுற்றளவு ஒரு இன்ச் வரைகூட கூடியிருக்கும். எனவேதான் இந்தப் பரிந்துரை.
ஷூக்களை டிரயல் பார்க்கும்போது, அவற்றின் முன் பகுதியில் நம் கை கட்டைவிரல் அகலத்துக்கு இடைவெளி இருக்கிறதா... கால் விரல்களை நன்றாக அசைக்க முடிகிறதா... ஷூவின் பின்பக்கம் பாதத்தினை அழுத்தாமல், அதேசமயம் அணைத்தவாறு இருக்கிறதா என்றெல்லாம் சரிபார்க்க வேண்டும்.சாக்ஸ் வாங்குவதிலும் கவனம் தேவை. நம் நாட்டின் வெப்பநிலைக்கு காட்டன் சாக்ஸ் அணிவதுதான் நல்லது. லெதர், ரப்பர், பிளாஸ்டிக் சாக்ஸ்களுக்கு வியர்வையை உறிஞ்சும் தன்மை இருக்காது. விளையாட்டு துறையில் இருப்பவர்கள் 'திக் சாக்ஸ்’ அணியலாம். சரியான உடல்வாகு உள்ளவர்கள் 'தின் சாக்ஸ்’ அணியலாம்.நீரிழிவு நோயாளிகளுக்கு ஆடுசதை வரை அழுத்தும் 'சீம் சாக்ஸ்’ ரத்த ஓட்டத்தை பாதிக்கும் என்பதால், கணுக்காலுடன் முடியும் 'சீம்லெஸ் காட்டன் சாக்ஸ்’ தேர்ந்தெடுக்கலாம். ஸ்போர்ட்ஸ் நபர்கள் கட்டாயமாக 'சீம் சாக்ஸ்’ அணிய வேண்டும்.

***
thanks Mohamed
***"வாழ்க வளமுடன்"

கோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை !!!இந்தியாவின் வரலாற்று பொக்கிஷம், உலகின் விலை மதிக்கமுடியாத பொருள், இங்கிலாந்து ராணியின் கிரீடத்தை அலங்கரிக்கும்


ஆபரணம் மற்றும் இன்னும் பல வரலாற்று பெருமைகளை பெற்ற ஒரு சிறிய வெள்ளைக் கல் இந்த கோஹினூர் வைரம்.இதன் மதிப்பை சுலபமாக சொல்ல வேண்டும் எனில், “இதை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவு அளிக்க முடியும்”என்று அந்த கால வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.இந்த வைரம் முதன்முதலில் அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரால் ஆந்திராவில் இருந்து கண்டறியப்பட்டது. பின்னர் கில்ஜி மீது படையெடுத்து வந்த குவாலியர் மன்னன் விக்ரமஜித்திடம் தஞ்சம் புகுந்தது.அதற்கு பிறகு இந்தியாவை மெல்ல ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருந்த பாபரை எதிர்த்து நின்றனர் இப்ராஹிம் லோடியும், குவாலியர் மன்னன் விக்ரமஜித்தும். இங்கு தான் ஆரம்பம் ஆனது புகழ்பெற்ற பானிபட் போர்.போரில் விக்ரமஜித் மடிந்து விட அவனுடைய குடும்பம் ஆக்ரா அரண்மனையில் ஒளிந்தகொண்டிருந்தது. பாபர் மகன் ஹுமாயூன் ஆக்ரா நகரை கைப்பற்றியபோது அந்த குடும்பத்தினர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அற்புதமான வைரத்தை ஹுமாயூனுக்கு அன்பளிப்பாக கொடுத்தார்கள்.பின்னர் ஹுமாயூனிடமிருந்து பாரசீக மன்னன் ஷா தாமஸ் கைக்கு மாறிய வைரம் மீண்டும் தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷா மூலம் இந்தியா வந்தது. அதைத் தொடர்ந்து 17-ம் நூற்றாண்டில் ஷாஜகான் மூலம் மீண்டும் மொஹலாயர்கள் வசம் வந்தது. ஆனால் அது நீடிக்கவில்லை. கி.பி. 1739-ல்டெல்லியை நாசம் செய்த பாரசீக மன்னன் நாதிர் ஷா வசம் போனது.. கோஹினூர் – அதாவது, “மலையளவு ஒளிவீச்சு” என்று பெயர் வைத்ததும் நாதிர் ஷாதான். பின்னர் சில காலம் அவருடைய வாரிசுகள் கையில் இருந்த வைரத்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தார்.பின்னர் ஆங்கிலேயர்கள் வசம் பஞ்சாப் போன பின் சர். ஜான் லாரன்ஸ் என்ற அதிகாரியின் கைவசம் வந்தது. அவர் தன் கோர்ட் பாக்கெட்டில் போட்டு பீரோவில் மறந்து வைத்து விட்டார். ஆறு வாரங்கள் கழித்து பதறியடித்துப் போய் அதை எடுத்து விக்டோரியா மாகாராணிக்குப் பரிசளித்தார். அன்று முதல் இன்று வரை பிரிட்டிஷ் கிரீடத்தை அலங்கரித்து கொண்டிருக்கிறது இந்த கோஹினூர் வைரம்..***
thanks eegarai
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "