...

"வாழ்க வளமுடன்"

30 ஜூன், 2011

கூரான பொருட்கள் எல்லாம் குத்துவது ஏன்?



கூரான ஊசியானது துணி, அட்டை போன்ற பொருட்களை எளிதில் துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற பொருட்களில் மழுங்கலான ஆணியால் குத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?


கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச்சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால், மழுங்கலான ஆணியில் முனையின் பரப்பு அதிகமாக இருப்பதால், அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியை விடக் கூரான ஊசியை உபயோகிக்கும்போது அதிக அழுத்தம் குறுகிய இடத்தில் பாய்கிறது.


அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று மட்டும் சொன்னால், அதில் இருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில், இந்த சம்பளம் மாதத்திற்கா, வருடத்திற்கா என்பது தெரியாது.


அதுபோலத்தான் சக்தி குறித்த விஷயம். அது ஒரு சதுர சென்டி மீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.


பனிச்சறுக்கு மட்டைகள் நம்மைப் பளபளப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால், நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்? இம்மட்டைகளைப் போட்டுக் கொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது.


மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால் களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட இருபது மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச் சறுக்கு மட்டைகள் அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நம் கால்கள் புதைந்துவிடும்.


***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

பெற்றோர்களே! உங்களுக்கான சில ஆலோசனைகள்….



பெற்றோர்கள் தான் தமது குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் முன் உதாரணமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான, பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டிய 5 சுகாதார ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.


1. உணவுடன் விளையாடல்

குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மிக அதிர்ச்சியூட்டும் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்குத் தெரிவிக்கப்படும் விடயங்கள், ‘அதிகம் வேண்டாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம், அதிகம் தெலைக்காட்சி பார்க்க வேண்டாம், வேண்டாம்…வேண்டாம்…வேண்டாம்…!’ என்பவை தான்.


ஆனால், உங்கள் குழந்தைகள் தமது வாழ்நாளிற்குத் தேவையான சரியான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற செய்திதான் இங்கு தரப்படுகிறது.


உங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஆரோக்கிய உணவுப் பொருட்களை அவர்களைக் கவரும் வகையில் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சொல்லப்படாத விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் இருப்பவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.



2. கொழுப்பை உண்ணுதல்

மனித மூளை 60 வீதம் கொழுப்பை உள்ளடக்கியது. கொழுப்பு அமிலங்களை உட்கொள்ளுமாறு குறிப்பாக ஒமேகா-3 அமிலங்களை உட்கொள்ளுமாறு அதிகமானோர் தெரிவிப்பதற்கான காரணம் இது தான். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.


தானிய வகைகள் மற்றும் சால்மன், மஹி-மஹி போன்ற மீன் வகைகளில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தைகள் மீன் உட்கொள்ள விரும்பாவிட்டால் குழந்தைகளுக்கான கிரில் எண்ணெயினை அவர்கள் உட்கொள்ளக் கொடுங்கள்.



3. மற்றவரைப் போல் இருத்தல்


பெற்றோரின் முரண்பாட்டு விடயங்களைக் குழந்தைகள் விரைவாக பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரதி நியுரான்கள் உங்களது கெட்ட விடயங்களைச் செய்ய அவர்களையும் தூண்டும்.


குழந்தைகள் அடங்கலாக பெரும்பாலான னு குறைபாடு உள்ளது. அதனை அன்றாடம் உணவாகவோ அல்லது 15 நிமிடங்கள் வெயிலில் நின்றோ பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.



4. வீட்டுப்பாட வேலைகளை நிறுத்துதல்

படுக்கை நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவிடுங்கள். 3 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு ஒரு நாளில் 11 முதல் 12 மணித்தியாலங்கள் உறக்கம் தேவைப்படுகிறது. போதிய உறக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத குழந்தைகளின் நடத்தைகள் பிரச்சினைக்குரியனவாகிவிடும்.


எனவே குழந்தைகளைத் தம்முடைய வீட்டுப்பாடங்களை முன்கூட்டிய செய்ய வைத்துவிட்டு அல்லது நாளை செய்யலாம் எனக் கூறி நன்றாக உறங்கச் சொல்லுங்கள்.



5. திரும்பிப் பேசுதல்

கலந்துரையாடல்களின் போது உங்கள் குழந்தைகளை மையப்படுத்துங்கள். குழந்தைகளை அன்பு செய்வது மிக முக்கியமானது. அதைத் தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.


அது அவர்களின் ஒக்சிடாக்சின் மட்டத்தை உயர்த்தவும் செய்கிறது. எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வதோடு பல நல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள்.



***
thanks vanakkamnet
***




"வாழ்க வளமுடன்"

உடல் ஒல்லியாக இருந்தாலும் பிரச்சனை தான் !!!



உடல் பருமனாக இருப்பது ஆபத்து. நீரிழிவு, இருதயக் கோளாறு உட்பட இன்னும் பல நோய்களுக்கு இது ஆபத்தானது என்பது தான் இதுவரை இருந்து வந்த நம்பிக்கை.



இதனால் மெலிந்த உடல் அமைப்பு இருப்பவர்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர். தமக்கு நோய்கள் ஏற்படாது என்று அவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.



உடல் மெலிந்துள்ளது என்பது முழுமையான திருப்திக்கு உரிய விடயமல்ல. உடல் மெலிந்து காணப்படுவதற்கு காரணமாக இருப்பது ஒரு மரபணு. ஆனால் அதே மரபணு அவர்களுக்கு நீரிழிவும், இருதயக் கோளாறும் ஏற்படவும் காரணமாக உள்ளது என்பது தான் புதிய ஆய்வு தருகின்ற தகவல்.



இந்த ஆபத்து ஆண்களுக்கே பெருமளவு காணப்படுகின்றது. எனவே உடல் ஒல்லியாகி, வயிறும் ஒட்டிப்போய் காணப்படுகின்றவர்கள் தாங்கள் நினைக்கின்ற அளவுக்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.



இத்தகைய உடலமைப்பு கொண்டவர்களின் உடல் உள் உறுப்புக்களைச் சுற்றி கொழுப்புப் படிவத்தை ஏற்படுத்தும் மரபணுவே தற்போது இனம் காணப்பட்டுள்ளது. இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 75000 பேரில் அவர்களின் தசைக் கொழுப்போடு ஒப்பீட்டளவில் இந்த மரபணுவும் இனம் காணப்பட்டுள்ளது.


பொதுவாக IRS1 என்று இந்த மரபணு இனம் காணப்படுகின்றது. மெலிந்த உடல் அமைப்பின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் பற்றிய தகவல்களை இது அப்படியே புரட்டிப்போட்டு விடுகின்றது. இந்த ஜீன் உள்ளவர்கள் இரத்தத்தில் கொழுப்புப் படிவு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.



உடம்பில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுவதிலும் இவர்களின் உடல் செயற்பாடு சிரமத்தை எதிர்நோக்குகின்றது. இதனால் இந்த மரபணு உடையவர்களுள் 20 வீதமானவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர். நடுத்தர வயதினரையே இது பெரிதும் பாதிக்கின்றது.



இந்த மரபணுவானது சருமத்துக்கு கீழ் பகுதியிலும், இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புக்களைச் சுற்றியும் கொழுப்பைத் தேக்கி வைக்கின்றது. உலகின் பத்து நாடுகளில் 72 நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் நடத்திய வெவ்வேறு ஆராய்ச்சிகளைத் தொகுத்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.


எனவே மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் இனிமேலும் அலட்சியமாக இருந்து விட முடியாது.



***
thanks ஞானமுத்து
***





"வாழ்க வளமுடன்"

28 ஜூன், 2011

பல் சொத்தைக்கு தீர்வு - யோகா ஆசிரியர் விளக்கம்



பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா?

ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி ஆராய்ந்து உண்மையை அறிந்தால்தான் அடுத்த பல்லை சொத்தையாகாமல் தடுக்கலாம்.


சரி பல் சொத்தை பற்றி நமது யோகா ஆசிரியர் சுப்ரமணியம் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.


பல் சொத்தை என்பது பரம்பரை வியாதியாகும். தாய்க்கோ, தந்தைக்கோ பல் சொத்தை இருந்தால் நிச்சயமாக அவர்களது குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஏற்படும்.



மேலும் நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே கூழ் போன்ற பசை உணவாக உள்ளன.



காய்கறியை பச்சையாக சாப்பிட்டால் அது பற்களில் ஒட்டாது. ஆனால் அதை சமைக்கும் போது அது பசையாக மாறி பற்களில் ஒட்டுகிறது. இப்படி நாள்தோறும் பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்களை பாதிக்கின்றன.



பற் தேய்க்கும் முறை பற்றியும் நமக்கு சரியாகத் தெரிவதில்லை. விளம்பரத்தில் வருவது போல பிரஷ் முழுவதும் பேஸ்டை நிரப்பி பல் துலக்கக் கூடாது. ஒரு பட்டாணி அளவுக்குத்தான் பேஸ்ட் வைத்து பல் தேய்க்க வேண்டும். அதுவும் ஒரு சில நிமிடங்கள் மட்டுமேத் தேய்க்க வேண்டும். ஆனால் பலரும் பிரஷ்ஷை வாயில் வைத்தால் எடுக்க பல மணி ஆகிறது. இதனால் நமது பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போய் பல் கூச்சம் ஏற்படுகிறது.



ப‌ல் தே‌ய்‌ப்பது ம‌ட்டு‌ம் மு‌க்‌கியம‌ல்ல.. வாயை ந‌ன்கு கொ‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். இ‌ர‌வி‌ல் படு‌க்க‌ச் செ‌ல்லு‌ம் மு‌ன்பு உ‌ப்பு‌த் த‌‌ண்‌ணீ‌ரா‌ல் வா‌யை கொ‌ப்ப‌ளி‌ப்பது ‌மிகவு‌ம் ந‌ல்லது.



ஈறு ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌டாம‌ல் இரு‌க்க, ஈறுகளு‌க்கு ந‌ல்ல ர‌த்த ஓ‌ட்ட‌ம் இரு‌க்க வே‌ண்டு‌ம். எ‌ந்த‌ப் பகு‌‌தி‌க்கு‌ம் ர‌த்த ஓ‌ட்ட‌ம் குறையு‌ம் போதுதா‌ன் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌கிறது. கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்களை ந‌ன்கு கடி‌த்து மெ‌ன்று சா‌ப்‌பிடுவது ஈறு‌ப்பகு‌திகளு‌க்கு ந‌ல்ல ப‌யி‌ற்‌சியாக அமையு‌ம்.



அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வத‌ற்கு‌க் கூட சொ‌த்தை‌ப் ப‌ல் இரு‌ப்பவ‌ர்களு‌க்கு ‌சில அறுவை ‌சி‌‌கி‌ச்சைகளை செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். சொ‌‌த்தை‌ப் ப‌ல்லை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு‌‌த்தா‌ன் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்வா‌ர்க‌ள். ‌நீ‌‌ரி‌ழிவு என‌ப்படு‌ம் ச‌ர்‌க்கரை ‌வியா‌தி‌க்கு இரு‌க்கு‌ம் அனை‌த்து ‌விஷய‌ங்களு‌ம் சொ‌த்தை‌ப் ப‌ல்லு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.



சா‌ப்‌பிடு‌ம் போது ந‌ன்கு ‌மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் உண‌வி‌ல் அ‌திகள‌வி‌ல் உ‌மி‌‌ழ்‌நீ‌ர் சே‌ர்‌‌ந்து உணவு செ‌ரிமான‌த்‌‌தி‌ற்கு உத‌வு‌கிறது. அதே‌ப்போல சா‌ப்‌பி‌ட்டது‌ம் வாயை ந‌ல்ல த‌ண்‌ணீ‌ரி‌ல் கொ‌ப்ப‌ளி‌த்து அ‌ந்த ‌நீரை து‌ப்‌பி‌விட‌க் கூடாது. முழு‌ங்‌கி‌விட வே‌ண்டு‌ம். இதுவு‌ம் செ‌ரிமான‌த்‌தி‌ற்கு உத‌வி செ‌ய்யு‌ம்.



அ‌ந்த கால‌த்‌தி‌ல் சா‌ப்‌பி‌ட்டு முடி‌ந்தது‌ம் வெ‌ற்‌றிலை பா‌க்கு போடுவா‌ர்க‌ள். வெ‌ற்‌றிலை‌க்கு செ‌ரிமான‌த் ‌திறனு‌ம், ச‌ளியை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தியு‌ம் உ‌ள்ளது. வெ‌ற்‌றிலை‌ப் பா‌க்கு‌ப் போ‌ட்டா‌ல் அ‌ந்த சாறையு‌ம் து‌ப்‌பி‌விட‌க் கூடாது.



தா‌ய், த‌ந்தைய‌ரி‌ல் இருவரு‌க்கோ அ‌ல்லது யாரேனு‌ம் ஒருவரு‌க்கோ ‌ப‌ல் சொ‌‌த்தை இரு‌ந்தா‌ல், அவ‌ர்களது ‌பி‌ள்ளை‌க்கு‌ம் ப‌ல் சொ‌த்தை க‌ண்டி‌ப்பாக வரு‌ம். அதனை த‌வி‌ர்‌க்க முடியாது. அ‌ப்பாவை ‌விட, அ‌ம்மா‌வி‌ற்கு ப‌ல் சொ‌த்தை இரு‌ந்தா‌ல் குழ‌ந்தை‌க்கு வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன.



ப‌ல்சொ‌த்தை‌க்கு ச‌ர்வா‌ங்காசன‌ம், ‌சிரசாசன‌ம் செ‌ய்தா‌ல் ‌பி‌ர‌ச்‌சினை குறையு‌ம். ‌சிரசாசன‌ம் செ‌ய்யு‌ம் போது ப‌ல் சொ‌த்தை மாறுவது க‌ண்கூடாக‌த் தெ‌ரியு‌ம். பொதுவாக ப‌ற்களை ‌பிடு‌ங்க‌க் கூடாது எ‌ன்பா‌ர்க‌ள். ‌கீ‌ழ்‌ப் ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கினாலு‌ம் மே‌ல் ப‌ல்லை‌ப் புடு‌ங்கவே‌க் கூடாது. ஏ‌ன் எ‌னி‌ல் மே‌ல் ப‌ல், நேரடியாக மூளையுட‌ன் தொட‌ர்பு ‌கொ‌ண்டிரு‌ப்பதாகு‌ம்.



த‌ற்போது சொ‌த்தை‌ப் ப‌ற்க‌‌ளி‌ன் வே‌ர்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌த்து சொ‌த்தையை ச‌ரி செ‌ய்யு‌ம் முறை வ‌ந்து‌ள்ளது. அ‌தி‌ல்லாம‌ல் ஒரு ப‌ல்லை‌ப் புடு‌ங்‌கி‌வி‌‌ட்டா‌ல் அ‌ந்த இட‌த்‌தி‌ல் செ‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்துவது‌ம் ந‌ல்லது. ஏ‌ன் எ‌னி‌ல் ‌கீ‌ழ்‌ப்ப‌ல்லை‌ப் ‌பிடு‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் அதனா‌ல் மே‌ல் ப‌ல் இற‌ங்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம். இதனை‌த் த‌வி‌ர்‌க்கவே செ‌‌ய‌ற்கை‌ப் ப‌ல் பொரு‌த்த‌ப்படு‌கிறது.



ப‌ற்களு‌‌க்கு ப‌ச்சை‌க் கா‌‌ய்க‌றிகளை அதாவது கேர‌ட், வெ‌ள்‌ள‌ரி‌க்கா‌ய் போ‌ன்‌ற‌வ‌ற்றை‌க் கடி‌த்து மெ‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ந‌ல்ல ப‌யி‌ற்‌சி ‌கிடை‌க்கு‌ம்.

**

ஆ‌‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் ப‌ற்‌றி சொ‌ல்லு‌ங்க‌ள்...

ஆ‌யி‌ல் ‌பு‌ல்‌லி‌ங் எ‌ன்பது‌ம் ப‌ற்களு‌க்கு ந‌ன்மை தர‌க்கூடியதுதா‌ன். வெறு‌ம் ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல் கூட செ‌ய்யலா‌ம். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஆ‌யி‌ல் பு‌ல்‌லி‌ங் செ‌‌ய்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.


***
thanks யோகா ஆசிரியர்
***




"வாழ்க வளமுடன்"

செர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்



செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை. இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை.

"பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது. இது புதர்வகைச் செடியாகும்.

நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது.

ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம். செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது.

செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும்.

உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.

தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும்.

இதுதான் செர்ரிப் பழ ஜூஸ். செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும்.

தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும். ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும்.

மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.

அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்


***
thanks luxinfonew
***




"வாழ்க வளமுடன்"

IQ அப்டின்னா என்ன? இதோ விளக்கம் :)



Intelligence Quotient -யோட சுருக்கம் தான் IQ. அப்டின்னா நமக்கு
எவ்ளோ அறிவு இருக்குங்கிறதை , நம்ம அறிவு மற்றும் வயசோட கணக்கிட்டு
சொல்றது.

அதோட ஃபார்முலா இதுதான்

IQ score = (mental age / chronological age) * 100 .

ஒரு சர்வே ரிபோர்ட் சொன்னது...

* 50% மக்களின் IQ ஸ்கோர் 90 முதல் 115 வரை .(ஆவரேஜ்).

* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 130-க்கு மேல். (சிறந்த புத்தி கூர்மைஉள்ளவர்கள்).


* 2.5% மக்களின் IQ ஸ்கோர் 70-க்கு கீழ். (நம்ம பாஷையில சொல்லனும்னா இவங்களுக்கு மண்டைய்ல களிமண்ணுதான் இருக்கும்).


* 0.5% மக்களின் IQ ஸ்கோர் 140-க்கு மேல். (மிகச்சிறந்த புத்தி
கூர்மைஉள்ளவர்கள்).

நாம அடிகடி நம்ம பங்காளிகளை jenious, Brilliant, Average-னு சொல்றமே.. உண்மையிலேயே இந்த லிஸ்ட்-ல இருக்கறவங்கதான் ரியல் jenious.

1. Kim Ung-Yong – IQ = 210
2. Christopher Michael Langan – IQ = 195
3. Philip Emeagwali – IQ = 190
4. Garry Kasparov – IQ = 190
5. Marilyn Vos Savant – IQ = 186
6. John H. Sununu – IQ = 180
7. Judit Polgár – IQ = 170
8. Stephen Hawking – IQ = 160
9. William James Sidis – IQ = 250

உங்களுடைய IQ score தெரிஞ்சுக்கனும்னா இந்த லிங்க்கை க்ளிக் பண்ணி அதுல கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க...


உங்களின் அறிவுகூர்மையை அது சொல்லும்...

http://www.123test.com/iq-test/index.php



***
thanks குணசேகரன்...
***



"வாழ்க வளமுடன்"

நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின்"E" கோடு இருக்கா ?



அன்பர்களே!!!

நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின் "Ingredients" (சேர்க்கப்பட்ட பொருட்களின்) கலவைகளில் கீழ்கண்ட ஏதேனும் "E" கோடு இருந்தால்,நிச்சயமாக அவ்வுணவு பொருளில் "பன்றி கொழுப்பு" சேர்க்கப்பட்டுள்ளது.


E 100, E 110, E 120, E 140, E 141, E 153,

E 210, E 213, E 214, E 216, E 234, E 252, E 270, E 280,

E 325, E 326, E 327, E 334, E 335, E 336, E 337,

E 422, E 430, E 431, E 432, E 433, E 434, E 435, E436, E 440, E 470, E 471, E 472, E 473, E 474, E 475, E 476, E 477, E 478, E 481, E 482, E 483, E 491, E 492, E 493, E 494, E 495,

E 542, E 570, E 572,

E 631, E 635,

E 904.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சுவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes) , டோஃபி (Toffees) , டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.


பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெட்கம் அகன்றுவிடுதல்,

தீய எண்ணங்களை உருவாகிவிடுதல்,

வன்முறை எண்ணங்களை வளர்ந்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி.

***
thanks abuwasmeeonline.blogspot.com
***




"வாழ்க வளமுடன்"

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !


வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .



ஜிப் சூட்கேசிலுள்ள பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட முடியும் .


அதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும்






எனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த
பொருட்களையோ அல்லது பணத்தையோ ஜிப் சூட்கேசினுள் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால் லாக் செய்யுங்கள் .


சொந்த அனுபவம் :

இத்தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்பாக துபாயில் வசித்து வரும் என் நண்பனிடம் கூறியிருந்தேன் .ஊருக்கு வரும்போது ஒரு விலையுர்ந்த செல்போன் வாங்கி வரவும் கேட்டிருந்தேன் .கடந்த வாரம் அவன் ஊருக்கு வந்தான் .

மக்கா செல் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியான்னு கேட்டேன் .அவன் சொன்னான் மக்கா உனக்கு விஷயமே தெரியாதா ஜிப் சூட்கேசுல உனக்கு வாங்கி வச்சிருந்த செல் இருந்துது ,எவனோ ஆட்டயப்போட்டுட்டான் .


பயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .


***
thanks koodal bala
***



"வாழ்க வளமுடன்"

27 ஜூன், 2011

நீரிழிவு நோயாளியும் - மாம்பலமும் !!!


தெருவெல்லாம் மாம்பழம் குவியத் தொடங்கிவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமில்லாமல் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாரெல்லாம் மாம்பழம் சாப்பிடலாம், எத்தனை சாப்பிடலாம் என்றெல்லாம் பலருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா என்ற சந்தேகத்துடன் மாம்பழத்தையே பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்தியாவின் முக்கியமான பழங்களில் ஒன்று மாம்பழம், இல்லாவிட்டால் முக்கனிகளில் ஒன்றாக்கி அதற்கு முக்கியத்துவம் கொடுத்திருப்போமா! இந்தியாவில் மட்டும் 1000 வகை மாம்பழங்கள் இருக்கு. தமிழ்நாட்டு மார்க்கெட்டுகளிலேயே ருமானி, அதிமதுரம், முண்டப்பா பஞ்சவர்ணம், நீலம், பங்கனப்பள்ளி, ஒட்டு மாம்பழம்னு பட்டியல் நீளமா போய்க்கிட்டே இருக்கும்.


மாம்பழங்களில் அதிக அளவில் கரோட்டீன் சத்து உள்ளது. அல்போன்சா வகை மாம்பழத்தில் எக்கச்சக்கமான பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும், பங்கனப்பள்ளி மற்றும் பெத்தராசலு வகைகளில் மிதமான அளவு பீட்டா கரோட்டீன் (Carotene) சத்தும் உள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே மாலைக்கண் போன்ற கண் தொடர்பான நோய்களுக்கு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.


தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் வலுவடையும். காரணம் மாம்பழத்திற்கு இரத்தத்தில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உண்டு. இது மட்டுமல்ல, இதயத்தையும், மூளையையும் பலப்படுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியையும் அதிகரிக்கும். கர்ப்பிணிகள் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்தோடு பிறக்கும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைக்கும் மாம்பழம் சாப்பிடுவது நல்லது. நல்ல கனிந்த மாம்பழங்களை சாப்பிட்டால் மாதவிடாய் ஒழுங்குப்படும். அதேசமயம் பெண்கள் மாதவிலக்கு நாட்களில் காலை நேரத்தில் சாப்பிட்டால் உதிரப்போக்கு அதிகரிக்கும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.


மாம்பழம் பல் நோய்களையும் போக்கும். பழத்தை துண்டு துண்டாக நறுக்கி வாயில் போட்டு ஈறுகளில் படும்படி வைத்திருந்து 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து துப்பிவிட்டால் பல்நோய் பறந்துவிடும். சிறுநீர் பையில் உள்ள கற்களைப் படிப்படியாகக் கரைக்கும் ஆற்றலும் மாம்பழத்திற்கு உண்டு. இரவில் மாம்பழம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினால் அடுத்த நாள் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்.


அதெல்லாம் சரிதான், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா, கூடாதா அதைச் சொல்லுங்க முதல்ல என்கிறீர்களா...? பயப்படாதீங்க தாராளமா சாப்பிடலாம் போதுமா! தினம் ஒரு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதிக கொழுப்புச் சத்து, நீரிழிவு ஆகியவை வருமுன் தடுக்கலாம் என சமீபத்திய ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.... மாம்பழத்தில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் அதிகக் கொழுப்பு மற்றும் நீரிழிவுக்கு எதிரான மருந்துகளைப் போல செயல்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மாம்பழத்திற்கு புற்றுநோய் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் இருக்கிறதா என்றும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


ஹையா ஜாலி! ஆய்வுகளே சொல்லிவிட்டன என்று இன்சுலின் உபயோகித்து வருபவர்கள் மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டு விடாதீர்கள். உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி அளவாகச் சாப்பிடுங்கள்.


100 கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

சக்தி - 70 கிலோ கலோரிகள்

கார்போஹைட்ரேட் - 17.00 கிராம்
சர்க்கரை - 14.08 கிராம்
நார்ச்சத்து - 1.08 கிராம்
கொழுப்பு - 0.27 கிராம்
புரதம் - 0.51 கிராம்
வைட்டமின் ஏ - 38 மைக்ரோ கிராம்
பீட்டா கரோட்டீன் - 445 மைக்ரோ கிராம்
தையாமின்
(வைட்டமின் பி) - 0.058 மில்லி கிராம்
ரிபோஃபிளேவின்
(வைட்டமின் பி2) - 0.057 மில்லி கிராம்
நியாசின்
(வைட்டமின் பி3) - 0.584 மில்லி கிராம்
பான்டோதெனிக்
அமிலம் (பி5) - 0.160 மில்லி கிராம்
வைட்டமின் பி6 - 0.134 மில்லி கிராம்
போலேட்
(வைட்டமின் பி9) - 14 மைக்ரோ கிராம்
வைட்டமின் சி - 27.7 மில்லி கிராம்
கால்சியம் - 10 மில்லி கிராம்
இரும்புச் சத்து - 0.13 மில்லி கிராம்
மக்னீசியம் - 9 மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 11 மில்லி கிராம்
பொட்டாசியம் - 156 மில்லி கிராம்
துத்தநாகம் - 0.04 மில்லி கிராம்



***
நன்றி: தமிழ் வாசல்
***




"வாழ்க வளமுடன்"

நீங்கள் விரும்பும் ஆரோக்கியம் வேண்டுமா?



நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் வயிற்றை நிரப்புவதற்காகவும், சுவைக்காகவும் சாப் பிடப்படுவதில்லை. சத்து, ஆரோக்கியம், உடல் இயக்கம் போன்றவைகளுக்காகவே உணவுகளை சாப்பிடுகிறோம்.

நீங்கள் விரும்பும் படியான ஆரோக்கியம் நீங்கள் சாப்பிடும் உணவில் இருக்க வேண்டுமானால், நீங்கள் சமையலுக்காக வாங்கும் பொருட்கள், அதை நறுக்கும் முறை, சமைக்கும் முறை, பரிமாறும் முறை, சாப்பிடும் முறை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

* காய்கறிகளை மிகச்சிறிய துண்டுகளாக ஒரு போதும் நறுக்கக்கூடாது. சிறிதாக நறுக் கும் போது, அவைகளில் இருக்கும் சாறு வெளியேறி சத்துக்கள் குறையும்.

* சமையலுக்கு தரமான எண்ணையை பயன்படுத்தவேண்டும். பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி சூடாக்குவதற்கு பதில், பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கிவிட்டு, அதன் பின்பு எண்ணையை ஊற்றவேண்டும். எண்ணையை ஊற்றிய பின்பு அடுப்பில் எரியும் தீயின் அளவை குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்தால், எண்ணையில் இருந்து வெளி யேறும் ரசாயனத்தன்மையின் தாக்கமும் குறைவாகவே இருக்கும்.

* எலுமிச்சை பழம், நேந்திரம் பழம், பால் போன்ற மூன்றையும் சேர்த்து ஒன்றாக எந்த உணவும் தயாரித்து சாப்பிடக்கூடாது. பாலும், எலுமிச்சையும் சேர்ந்தால் திரிந்து போகும். ஏத்தன் பழமும் (நேந்திரன்) பாலும் சேர்த்து சாப்பிட்டால், சளித்தொல்லை அதிகரிக்கும்.

* நெய் சேர்க்கும் உணவில் சிலர், தனிச்சுவை கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிதளவு எண்ணையும் சேர்ப்பார்கள். அப்படி சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

* பாகற்காய், வெந்தயம் போன்றவைகளில் இருக்கும் கசப்பு தன்மையை போக்க எந்த பொருளையும் அதனுடன் சேர்க்காதீர்கள். ஏன் என்றால் அவை இரண்டின் மூலமும் உடலுக்கு தேவையானதே கசப்புதான். அந்த கசப்பை நீக்கிவிட்டு அவைகளை சாப்பிட்டு எந்த பலனும் இல்லை.

* முளைவிட்ட தானியங்களுடன் பயறை சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலும் புரோட்டீன் மிக அதிகமாக இருப்பதால், ஜீரணம் ஆக மிகவும் தாமதமாகும்.

* காய்கறிகளை ஒரு போதும் அதிகமான அளவு எண்ணை சேர்த்து வறுக்கக்கூடாது. காய்கறிகளில் தொடர்ச்சியாக ஏற்றப்படும் சூடு அவைகளில் இருக்கும் வைட்டமின், தாதுச்சத்துகளை போக்கிவிடும்.

* தினமும் ஒவ்வொரு நேரமும் எவ்வளவு உணவு சாப்பிட வேண்டும் தெரியுமா? காலையில் பாதி வயிற்றுக்கு உணவும் அதாவது 50 சதவீதம், மதிய உணவு 30 சதவீதம், நான்கு மணிக்கு 10 சதவீதம், இரவில் 20 சதவீதம் என்ற அளவிற்கு உணவு உண்ணவேண்டும்.

* ஒரு சப்பாத்தி அல்லது ஒரு அகப்பை சாதம், பருப்பு குழம்பு, காய்கறி போன்றவை மதிய உணவில் சேர்க்கப்படவேண்டும். இதிலிருந்து கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின், கொழுப்பு, தாதுசத்துக்கள் போன்று உடலுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கின்றன.

* மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடையில் 7-8 மணிநேரம் இடைவெளி இருந்தால் மாலை நேரத்தில் எலுமிச்சை சாறு, பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, வறுத்த முந்திரிபருப்பு போன்றவைகளை சாப்பிடலாம்.


***
thanks koodal
***



"வாழ்க வளமுடன்"

பன்னீர் பரோட்டா


சாதம் பல வகைகளில் செய்கிறோம். மாவு உணவுகள் பல விதமாக தயாரிக்கிறோமா என்றால் குறைவுதான். நாம் இந்த முறை கற்றுக் கொள்ள இருப்பது புதிய வகை மாவு உணவுதான். கோதுமை மாவுடன், பன்னீர் சேர்த்து சுவையான பன்னீர் பரோட்டா செய்து ருசிக்கப் போகிறோம்.

கால்சியம், புரதம், மிதமான கொழுப்பு சத்துகள் அடங்கிய பன்னீரை வீட்டிலேயே மிக சுலபமாக தயாரிக்கலாம். அந்த பன்னீருக்கு தாளிதம் செய்து அந்த `ஸ்டப்பிங்கை` கோதுமை மாவில் பிசைந்த சப்பாத்தியின் உள்ளே வைத்து சுவையாக பன்னீர் பரோட்டா செய்யலாம். இது மிகவும் மிருதுவாக, சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

பால் – 1 லிட்டர்
எலுமிச்சம் பழம் – 1
எண்ணை – 4 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
கோதுமை மாவு – ஒரு கப்
வெண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை

* பாலை நன்கு கொதித்து வரும் வரை காய்ச்சவும்.

* கொதிக்கும் பாலில் எலுமிச்சை சாறு பிழிந்து, பாலைத் திரித்து மேலும் சற்று கொதிக்கவிட்டு பால் முழுக்க திரிந்தவுடன் உலோக வடிகட்டியில் வடிகட்டவும்.

* வடிகட்டியின் மேலே தங்கி உள்ள பன்னீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் பன்னீர் போட்டு அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

* அந்த தாளிதத்தை நன்கு கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* கோதுமை மாவு, உப்பு நீர் சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும்.

* பிசைந்த மாவை சிறு சப்பாத்திகளாகத் திரட்டி ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு பன்னீர் உருண்டையை வைத்து மூடி பரோட்டாவாக திரட்டவும்.

* ஆய்ந்த கொத்தமல்லித் தழைகளின் மேலே அந்த பரோட்டாக்களை ஒரு முறை புரட்டி எடுக்கவும்.

* தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது வெண்ணை ஊற்றி சுட வைத்து பன்னீர் பரோட்டாவை போட்டு சுற்றிலும் வெண்ணை ஊற்றி நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு

* ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பன்னீரைத் துருவியும் உபயோகிக்கலாம்.

* இந்த பன்னீர் பரோட்டாவிற்கு தயிர் அல்லது ஊறுகாய் நல்ல சைடு டிஷ் ஆகும்.



***
thanks கீதா பாலகிருஷ்ணன்
***






"வாழ்க வளமுடன்"

உங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்… நிவாரணமும்…!



பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.

காலை உணவு கட்டாயம்

பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.


உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.


*


நிதானமாக சாப்பிடுதல்

காலையில் ஏதாவது `ஹார்ன்’ சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.


*


செலியாக் நோய்

அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்’ எனப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

*

வயிற்றுப்போக்கு

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.

*

வயிற்று வலி

நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.

அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.

*

துரித உணவுகள்

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார் கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.

*

தண்ணீர்

தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்’ நோய் உண்டாகும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்’ செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.


*

அம்மாக்கள் கவனிக்க…

குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-

* குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.

* வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.

* குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.

* காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.

* சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.

* குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.

* நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.

* நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ...


பெண் ஒரு வெற்றியாளனை, ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல், அரவணைப்பும், நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும்.


பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ, இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில், செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான்.


ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல ஆண்கள் வெளியில் செல்வாக்குடன் உள்ளனரே தவிர, வீட்டில் மனைவியுடன் மனம்விட்டுப் பேசவேண்டும், பழகவேண்டும், காதலைச் சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை.



98 வீதமான பெண்கள், தங்கள் மீதுள்ள காதலை கணவன் அடிக்கடி வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என விரும்புகிறார்கள். தங்களைப் பற்றி, தங்கள் உணர்வுகளைப் பற்றி தங்களுடைய திட்டங்களைப் பற்றி அதிகமாக பேசவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்காத போது 40 வீதமான பெண்கள் விவாகரத்து பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.



42 வீதமானோருக்கு பேர் வேறொரு உறவை நாடுகிறார்கள். அந்த உறவு இன்னொரு ஆணுடனாக இருக்கலாம், தனது குழந்தையின் மீது கவனம் செலுத்துவதாக அல்லது வேலையின் மீது கவனத்தைத் திருப்புவதாக இருக்கலாம். வெளியுலகத்தை சாராமல் வீட்டுச் சூழலில் அதிகம் இருக்கும் பெண் தனது உணர்வுகளை கணவன் தூண்ட வேண்டும் என எதிர்பார்க்கிறாள்.



அதற்குப் போதிய அவகாசம் அளிக்கிறாள். இதைப் புரிந்துகொண்டு மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவதை கணவன் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இருவருக்கும் இடையே நெருக்கமிராது, மனைவியின் மனம் அன்பிற்காக ஏங்கத் தொடங்கும். அந்த ஏக்கம் தேவையற்ற விளைவுகளைத் தரக்கூடும்


***
thanks lf
***



"வாழ்க வளமுடன்"




பிள்ளை பெற்றுவிட்டால் போதுமா - பேணி வளர்க்க வேண்டும்



உங்களுக்குத் தெரியுமா? சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள்! எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!

உங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :

முதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.

குழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.

குழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.

விமர்சியுங்கள் – குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை! இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.

குழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.

குழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.

குழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.

எப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.

குழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி! உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட!

உங்களுக்கு ஒரு சிறிய தேர்வு…

நீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?

“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா?

அப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.

மாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்!

“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை! அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”

வண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை!

எனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.

குழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

உங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்… அவ்வளவுதான்! குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா? வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.

குழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள்! குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.

இவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா?

உங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே…


***
thanks அப்துல்லாஹ்
***





"வாழ்க வளமுடன்"

25 ஜூன், 2011

ஆரோக்கியமான தாய்பால் கிடைக்க



பிரவசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம் . அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.


இந்த தாய்ப்பாலின் காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் தொடர்ந்து எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.


அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும், தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும் குழந்தை பிறந்ததும் நாம் அதற்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால்தான் அந்த தாய்ப்பாலைக் காட்டிலும் மிகச்சிறந்த உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.



பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளரத் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் உள்ளது. அதனால்தான், எல்லா தாய்மார்களையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இந்த தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என்கிறது ஒரு ஆய்வு.தாய்ப்பால் மூலம், குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.


மேலும், முறையாக தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்றெல்லாம் கர்ப்பனை செய்துகொள்ளும் சில தாய்மார்கள், அந்த எண்ணத்தில் இருந்து தங்களை இனியாவது மாற்றிக்கொள்வதுதான் நல்லது


***
thanks ns
***





"வாழ்க வளமுடன்"

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!



தாய்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.



ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்

* தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.



* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.



* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.



* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங் களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.



* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.



* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக் களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும். முழுமையான உணவு



* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.



* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.



* தாய்பால் கொடுப்பது, கர்ப பை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. சிறுவர்களும், சிறுமிகளும்… சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார் மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!



சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும். தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது. பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.



பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனபடுகிறது.



மார்பக பிரச்சினைகள்




சிஸ்ட்கள் – மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.



பைரோடினோமா – இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.



காலக்டோரியா – அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.



கைனகோமேஸ்டியா – ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது.



மஸ்டிடிஸ் – பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது.



மாஸ்டால்ஜியா – மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது.



மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி – மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி.



மார்பக புற்றுநோய் – பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.



***
thanks news
***






"வாழ்க வளமுடன்"

ரோஜா கு‌ல்க‌ந்தின் ப‌யன்கள்



சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். வலியுடன் கூடிய மாதவிடாய்


கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.


பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.


***
thanks google
***



"வாழ்க வளமுடன்"

அமிலச் சத்தும் நோய்களும்



மருத்துவத்தில் மனித உடல் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. டாக்டர் மென்கேல் மனித உடலை அமிலம் மற்றும் காரத்தன்மை அடிப்படையில் அணுகுகின்றார். நமது உடல் 80 சதவீதம் காரத்தன்மை, 20 சதவீதம் அமிலத்தன்மையின் அடிப்படையிலானது என்பதே டாக்டர் மென்கேலின் அணுகுமுறையாகும்.

இவரின் அணுகுமுறை காலத்தால் மிகவும் பழையது என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பிரபலமாகிவருகின்றது.

இந்தியாவிலும் இந்த அணுகுமுறை குறீத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், ஆர்சனிக், குளோரின், புளோரின், அயோடின் ஆகியன உடலுக்கு அமிலத்தன்மையை அளிக்கும் உணவு வகைகள் ஆகும். கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, செம்பு, அலுமினியம், லித்தியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியன காரத்தன்மை அளிக்கும் உணவு வகைகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



உடம்பில் உண்டாகும் மொத்த அமிலக் கழிவில் மூன்றில் ஒரு பகுதியை நுரையீரல் வெளிப்படுத்திவிடுகின்றது. சிறுநீரகம், தோல், மலம் ஆகியவற்றின் மூலம் மற்ற இரு பகுதிகள் வெளியேற்றப்படுகின்றன. நமது உடலில் அமிலச் சத்து அதிகமாவதால் தான் நோய்கள் உண்டாகின்றன என டாக்டர் மென்கல் திட்டவட்டமாகக் கூறுகின்றார். காரச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சேர்க்கும்போது நமது உடலில் இயல்பாகவே அமில நிலையின் அளவு குறைந்துவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், வாழைப்பழம் ஆகியவற்றில் காரத்தன்மை உள்ளது. கோதுமை, சோளம், அரிசி, முட்டை, பன்றிக் கொழுப்பு, சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் அமிலத்தன்மை உள்ளது. உடல் மருத்துவத்தைப் பொறுத்தவரை அமிலம், காரம் குறித்த விழிப்புணர்வும், அறிவும் அனைத்து மருத்துவர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும், நோயாளிகளுக்கும் கட்டாயம் தேவை என மென்கல் கூறுகின்றார்.



***
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?



ஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தள விற்கு, இருதய தசையின் செய லிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.


இதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறை பாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண் டாத, விபரீத விளைவுகளை தவிர்க் கலாம்.


குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. ஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில் தான் 80 சதவீத மரணங் கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த் தாமல் விரைவாக பெறப் படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.



துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறி களை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம். வணிக உலகில், “நேரம் தான் பணம்’ என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், “நேரம் தான் உயிர்!’ எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.



மாரடைப்புக்கான சிகிச்சை முறை:



மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள். இருதய துடிப்பு அதிவேக மாகவோ அல்லது மிகவும் குறை வாகவோ இருக்கும் போது செய்யப் படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை. இத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம்.


மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப் படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப் பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.



மாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:



1) மருந்துகள் மூலம் சிகிச்சை



2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.



மருந்து மூலம் சிகிச்சை:

இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.



* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.



* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.



* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம். * அத்துடன் இருதயத் தசை களை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாது காப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.



* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்… ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டி யிருக்கும். செயல்முறை (Procedure) சிகிச்சை குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.



- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர், மதுரை


***
thanks டாக்டர்
***






"வாழ்க வளமுடன்"

திருமணம் செய்யப்போகும் பெண்களின் முக்கிய கட்டங்கள்....



பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திருமண ஆசை தலை தூக்கலாம். ஆனாலும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரியான பருவம். திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.


ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.


திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என்றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்ணின் கடமை.


எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்தரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவளது வாழ்க்கை முழுவதும் தொடரும்.

எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண்,பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும்,அவனிடம் சுய மதிப்பை இழந்து விடுவாள். காரணம் திருமணத்துக்கு முன்பே இவள் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கும்.


திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்த வரை முற்றிலும் மாறுபட்ட புதியதோர் உலகம். எனவே இந்த வாழ்க்கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகிறவற்றையும் உணர்ந்து உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்.


***
thanks news
***




"வாழ்க வளமுடன்"

பேன் தொல்லையா? பொது இடங்களில் தலை சொறிந்து… !



பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?



மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.



ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.



முதல்வகை தலையில் வசிப்பவை.



இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.



மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.



இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.



மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.



இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.



உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.



மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.



காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.



வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேன் சீப்பு’ பயன்படுத்துவது தான்.



***
thanks news
***





"வாழ்க வளமுடன்"

விமான நிலைய X-ray சோதனை பாதுகாப்பற்றவை! விஞ்ஞானிகள் எச்சரிப்பு (பட இணைப்பு)



அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளையும் விமானச் சிப்பந்திகளையும் முழு உடலையும் சோதனையிடுவதற்காகப் பாவிக்கப்படும் Graphic-image X-ray scanners பாதுகாப்பற்றவை என்று அமரிக்க விஞ்ஞானிகள் இன்று எச்சரித்துள்ளனர்.


இந்தக் கருவிகள் மூலமான ஆபத்து குறைவானதே என்று அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும் இது மனிதர்களுக்கு சருமப் புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.



அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் உயிரியல் பௌதிக மற்றும் உயிரியல் பௌதிக இரசாயனப் பிரிவைச் சேர்ந்த டொக்டர். மைக்கல் லவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


இவர் தனிப்பட்ட முறையில் எக்ஸ்றே ஆய்வுக் கூடம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். எக்ஸ்றே என்பது எப்போதுமே ஆபத்தானது அதில் நன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் இந்த ஆபத்துக்கு முகம் கொடுத்தவர்களாகத்தான் இப்போது விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.


ஒரு மனிதனின் பிறப்பு உறுப்பு முதல் சகல இடங்களையும் காட்டக்கூடியதாகத்தான் விமான நிலைய எக்ஸ்றே கருவிகள் உள்ளன. அண்மையில் ஒரு பிராந்திய விமான சேவையின் விமானி இந்த சோதனையைக் கடக்க மறுத்துள்ளார் அது தன் மீதான தாக்குதல் என்றும் தனது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் இந்த முறை அமுலுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் பல விஞ்ஞானிகள் தமது அதிருப்திகளை வெளியிட்டிருந்தனர்.


***
thanks விஞ்ஞானிகள்
***





"வாழ்க வளமுடன்"

உடம்பு மெலியணுமா? வெறும் ‘டயட்’ மட்டும் போதாது


குண்டான நீங்கள், ‘ஸ்லிம்ரன்’னாக மாற வேண்டுமா? அதற்கு, ‘டயட்’ மட்டும் போதாது; உடற்பயிற்சியும் வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் ஒரேகான் நலவாழ்வு மற்றும் அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். உடம்பு மெலிவதற்கு, உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது தான், ஆய்வின் நோக்கம்.



இதற்காக அவர்கள், பெண் குரங்குகளுக்கு, தொடர்ந்து சில ஆண்டுகளாக நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவாக அளித்து வந்தனர். இதனால் அவை நன்றாகக் கொழுத்து விட்டன. பின் அந்த உணவைக் குறைத்து அளவாகக் கொடுத்து வந்தனர்.



கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் எடைக்கும், உணவுக் கட்டுப் பாட்டின் போது இருந்த உடல் எடைக்கும், பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண் டறிந்தனர்.விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஜூடி கேமரூன், ‘குரங்குகளுக்கு மேலும் உணவைச் சுருக்கினோம்.



அப்போதும் உடல் எடையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் அவை கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் ரீதியான செயல்கள், உணவைக் குறைக்க ஆரம் பித்ததும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன’ என்கிறார்.

இதையடுத்து, மற்றொரு குரங்குக் குழுவுக்கு இதேபோல் நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவைக் கொடுத்து பின், உணவுக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தனர். அதோடு, உடற்பயிற்சியும் அவற்றுக்குக் கொடுத்தனர்.



அப்போது அவற்றின் உடல் எடையில் குறிப் பிடத் தகுந்த மாற்றம் ஏற்பட்டது. உடல் எடை குறைந்தது.’உணவு மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் எடையைக் குறைப்பதற்குப் போது மானதல்ல; அதோடு, உடற்பயிற்சியும் சேர்த்து செய்தால்தான், உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என்பதை இவ்வாய்வு நிரூபித்துள்ளது. குறிப்பாக குண்டான குழந்தைகளுக்கு இம் முறையைப் பயன்படுத்தலாம்’ என்கிறார் ஜூடி கேமரூன்.


***
thanks ஜூடி கேமரூன்
***





"வாழ்க வளமுடன்"

பல் சொத்தை - சைனஸ் தொந்தரவுகள்



பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான்.


பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.


அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும். இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம்.


பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம்.


அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.


விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.


சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ்.


முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும்.


ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும்.


பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை. டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.


பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.


முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும்.


உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.


அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது.


மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது.


சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது.


அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும்.


அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.



***
thanks டாக்டர் ரவிராமலிங்கம்
***





"வாழ்க வளமுடன்"

24 ஜூன், 2011

கோபத்தோடு சாப்பிடாதீங்க! உடலுக்கு கேடு…


சிலர், அரக்கபரக்க சாப்பிடுவர் தினமும்! கேட்டால், “காலை எழுந்ததும் ஏகப்பட்ட வேலைகள்; இதில், சாப்பிட நேரம் இருக்கா…என்ன?’ என்று அலுத்துக் கொள்வர். இப்படி சாப்பிடுவதால் எந்த பலனும் இல்லை என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. திட்டமிடப்படாமல் செயல்படுவதால் தான் இப்படி நேர்கிறது. தினமும் காலை படுக்கையில் இருந்து எழுகிறோம்; காலையில் சிற்றுண்டி முதல் இரவு டின்னர் வரை நேரம் குறித்து சாப்பிட்டலாம். என்ன தான், “டென்ஷன்’ இருந் தாலும், சாப்பாட்டு விஷயத்தில் கண்டிப்பு தேவை.

பிசினசில் இருப்பவராக இருந்தாலும், ஊர் விட்டு ஊர் போகும் வேலை செய்பவராக இருந்தாலும், சாப்பிடுவதில் மட்டும் நேரம் தவறக் கூடாது. அதிலும், நம் கோபதாபங்களை எல் லாம், சாப்பிடும் போது மூட்டை கட்டி விட வேண்டும். இல்லாவிட்டால், நம் உணர்வு, நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் சத்துக்களுடன் சேர்த்து, நம் சுரப்பிகளும் அதிக வேலை செய்து, அதற்கேற்ப, உடலில் விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்கின்றனர் டாக்டர்கள்.உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் “செல்’கள்! அவற்றுக்கு முக்கிய தேவை “ஆன்டி ஆக்சிடெண்ட்’ என்ற ஒரு வித சத்து. நாம் சாப்பிடும் எல்லா உணவு வகைகளிலும் அந்த ,” ஆன்டி ஆக்சிடெண்ட்’ உள்ளது.

அது தான் உடலில் உள்ள “செல்’களை பாதுகாத்து, எந்த வியாதியும் அண்டாமல் செய்கிறது; உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.அதனால், நாம் சாப்பிடும் உணவை முழுமையாக ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், கோபம், கவலையுடன் சாப்பிட்டால், உடலில் ஒன்று எடை கூடும்; இல்லாவிட்டால் எடை பல மடங்கு குறையும்.அமெரிக்க நிபுணர்கள், சமீபத்தில், 3,300 பேரிடம், “ஆன்லைன்’ மூலம் சர்வே நடத்தினர். இதில், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், தாங்கள், கோபம், கவலையுடன் சாப்பிடுவதாக கூறினர். அதுபோல, உடல் எடை குறைந்தவர்களும், இதே காரணத்தை கூறியிருந்தனர்.விருந்துகளில் சிலர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவர். அப்புறம் தான், அதன் விளைவுகள் தெரியும். அவர்கள் உடல் எடை பல மடங்கு அதிகரித்துவிடும்.இதனால், என்ன தான் “டென்ஷன்’ இருந்தாலும், சாப்பிடும் போது மட்டும் மூட்டை கட்டிவிட்டு, சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பாதிப்பு நிச்சயம்


***
thanks nithus
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "