...

"வாழ்க வளமுடன்"

02 டிசம்பர், 2010

மணம் வீசும் மலர்களின் மருத்துவ குணங்கள் :)



இலுப்பைப் பூ:

இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.

*

ஆவாரம்பூ:

ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

*

அகத்திப்பூ:

அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.

*

நெல்லிப்பூ:

நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கஷாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.

*

மகிழம்பூ:

மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலை பாரம் போன்ற நோய்களை நீக்கிவிடும்.

*

தாழம்பூ:

இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.

*

செம்பருத்திப்பூ:

இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

*

ரோஜாப்பூ:

இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.

*

வேப்பம்பூ:

சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள்கூட ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.

*

முருங்கைப்பூ:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்கக்கூடியது.

*

மல்லிகைப்பூ:

கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

*

கருஞ்செம்பைபூ:

இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலைவலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.

*

குங்குமப்பூ:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பகல் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.



***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும் !

புற்றுநோய், மாரடைப்பை பாம்பு விஷம் குணப்படுத்தும்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஆனால் அந்த பாம்பில் இருந்து எடுக்கப்படும் விஷம் பலதரப்பட்ட பெரிய நோய்களை குணப்படுத்தக்கூடியது என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்துஜப்பான் யமனாஷி பல்கலைக்கழக பேராசிரியர் காட்சூ சுசுகி-இனோயூ தலைமையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.


*

அப்போது, பாம்பின் விஷம் மாரடைப்பு, வலிப்பு மற்றும் கேன்சர் போன்ற மிக கொடிய நோய்களைகுணப்படுத்தும் தன்மை கொண்டது என தெரியவந்தது.

*

பாம்பின் விஷம் நச்சுத் தன்மை வாய்ந்தது. அதில் பலவிதமான புரோட்டீன்கள் உள்ளன. அவை இந்த நோய்களை உருவாக்கும் கிருமிகளை அழித்து குணப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளனர்.



***
thanks மாலைமலர்.
***



"வாழ்க வளமுடன்"

குழந்தை பேறுக்கு பின் வயிறு உப்புதா ?

பிரசவத்திற்குப்பின்பு வயிறு உப்பிக்கொண்டே போகிறதே என்று நிறைய பெண்கள் கவலைப்படுவதுண்டு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அற்புதமான பாட்டி வைத்திய முறை இதோ:



"அந்தக் காலத்துல பிரசவத்தப்போ சில மருந்துகளை கட்டாயமா சாப்பிடுவாங்க... இப்பவும் பிரசவ லேகியம்னு விக்கிது... பிரசவத்தின் போது அத வாங்கி சாப்பிடலாம். பிரசவம் ஆகும் போது தச வாயுக்களும் இடம்பெயர்ந்து அங்கங்கே தங்கிக் கொள்ளும்.

*

அது வந்து வயிற்றில் இறங்காமல் இறுக துணியால கட்டிக்கணும். இதெல்லாம் அந்தக் காலத்துல இயல்பாகவே செய்யிறதுதான். இந்தக் காலத்து பெண்களுக்குத்தான் அதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதே..."

*

"பிரசவமான பெண்களுக்கு உணவுக் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். வாயு பதார்த்தங்கள அறவே ஒதுக்கணும். நார்ச்சத்துள்ள பொருட்களையும் பழங்களையும் தவறாம உணவுல சேத்துக்கணும்.

*

எண்ணெயில வறுத்த பதார்த்தங்கள சேத்துக்கக் கூடாது. இப்ப உள்ள பொண்ணுக ரொம்ப பேருக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கு.. பழைய முறைகள மறந்து எதுலயும் புதுமை புதுமைனு...இருக்குறாங்க.."

*

"காலயில ரொம்ப லேட்டா சாப்பிடறது.. இல்லயின்னா சாப்பிடறதே இல்ல... இது ரொம்ப தப்பு. கால சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும். இன்றைக்கு வயிறு தொப்பையா இருக்குறவங்கள்ல முக்கால்வாசிப் பேர் காலை டிபன் ஒழுங்கா சாப்பிடாததுதான் காரணம்னு கண்டு பிடிச்சிருக்காங்க.

*

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி.. காலை சாப்பாடு ரொம்ப முக்கியம். இல்லையின்னா கட்டாயம் தொப்பை விழும். ஏறத்தாழ பத்துமணி நேரம் வயிறு காலியா இருந்துட்டு, காலையிலயும் ஒண்ணும் சாப்பிடலேன்னா காலி இடத்துக்குள்ள காத்துதான் நிரம்பிக்கும். அப்பறமென்ன வயிறு தானா உப்பும்.

*

பிரசவம் ஆன பெண்கள் மேல உள்ள முறைகளையெல்லாம் கடைப்பிடிச்சா வயிறு உப்பாது. அப்பிடியும் உப்புனா குறிஞ்சா லேகியத்தச் சாப்பிடலாம். அது ஓரளவு வயிறு உப்புறத கட்டுப்படுத்தும்.. அதோட வயித்துல வரிவரியா கோடு விழறதையும் மாத்தும்."


***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "