...

"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2012

உங்கள் பி.எம்.ஜ (உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் ) ?



ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.



இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.







***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

ஊட்டச்சத்தும் உணவு கட்டுப்பாடும்





உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவையில் ஒன்றாகும். அவை மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் அடங்கிய சத்துக்களை கொண்டதாகும்.




மேலும் இவை கர்பிணி, தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மற்றும் நோயாளிகளை நோயிலிருந்து விடுவிக்க பெரிதும் உதவுகிறது. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ முக்கிய பங்கு வகிக்கிறது.




உணவுகளின் வெயல்கூறுகள்:



உடலில் நடக்கும் செயல்கூறுகளை அடிப்டையாகக் கொண்டு பத்திய உணவுகள் வகைப்படுத்தப்படுகிறது.



அ) உடற்செயலியல் அடிப்டையில் உணவு வகைகள்:


1. சக்தி அளிக்கும் உணவுகள்:


1.  மாவு மற்றும் கொழுப்பு சத்துக்கள் அடங்களி உணவு வகைகள் ஆகும். உடலில் உள்ள அனைத்து உறுப்பக்களும் செயல்பட சக்தி அளிக்கிறது. (எ-டு) தானியங்கள் வேர் மற்றும் கிழங்கு காய்கறிகள் உலர்ந்த பழ வகைகள், எண்ணெய், வெண்ணெய் மற்றும் நெய்.



2.   உடல் கட்டுக்களை மேம்படுத்தும் உணவுகள்:
புரதச்சத்து அடங்கிய உணவு வகைகள் ஆகும். (எ-டு) பால், இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் கொட்டைகள்.

3. பாதுகாப்பான உணவுகள்:

புரதம், வைட்டமின் மற்றும ்தாதுப்பொருட்கள் கொண்ட உணவு வகை ஆகும். இவை உடற்செயல் மேம்பாடு, உடல் வெப்பத்தை மேம்படுத்துதல் தசை சுருக்குதல், நீர் உடல் நீரை சமநிலையில் வைத்தல் மற்றும் ரத்த உறைதலை தடுத்தல், உடல் கழிவுகள் வெளியேற்றம் மற்றும் இதயத் துடிப்பை சீராக வைத்தல், (எ-டு) பால், முட்டை, கல்லீரல், பழங்கள் மற்றும் காய்கறி வகைகள்.


சமூக செயல்பாடுகளின் அடிப்படையில் உணவு வகைகள்:
உணவு என்பது சமூகம் பண்பாடு மற்றும் மதம் கார்புக் கொண்ட மையப் பொருளாக விளக்குகிறது. மேலும் இலை அனபு, நட்புரிமை, மகிழ்ச்சியை மதம், சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சியில் வெளிப்படுத்தவல்லதாகும்.




உளவியல் செயல்பாடுக் கொண்ட உணவு வகைகள்:


வினை மற்றும் சமூக தேவைகளை பூர்த்தியாவது மட்டுமின்றி மனிதனின் உணர்ச்சியையும் திருப்தி அடைய செய்ய வேண்டும்.
(எ-டு) வீட்டு அருஞ்சுவை உணவு செய்து பரிமாறினால் அதுவே அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாகும்.


ஆ) இந்திய மருத்துவ ஆராய்ச்சி செயலகம்: உணவு வகைகள்:

வ.எண் உணவு வகைகள் முக்கிய வகைகள்


1. தானியங்கள், குறுணிகள் மற்றும் சார்ந்த பொருட்கள்:

நெல், கோதுமை, ராகி, பாஜ்ரா, ஜோவர், பார்லி, அரிசி அப்பளம், கோதுமை மாவு சக்தி, புரதம், கரையாத கொழுப்பு வகைகள் தையாமின், ரிபோப்ளேவின், போலிக் அமிலம், இரும்பு மற்றும் நார் சத்து


2. பருப்பு மற்றும் பயிறு வகைகள்:


கொண்டைக் கடலை, உளுந்து, பாசிப்பயிர், துவரை, மைசூர் பருப்பு, தட்டைப்பயிர், பட்டாணி, சோயா, பீன்ஸ் சக்தி.........
போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து



3. பால் மற்றும் இறைச்சி பொருட்கள்:


பால்: பால், தயிர், ஆடை நீக்கிய பால், நெய்
இறைச்சி: கோழிக்கறி, ஈரல், மீன், முட்டை, மற்றும் ஆட்டிறைச்சி புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்
புரதம், கொழுப்பு, சையனோகோபலமின் கால்சியம்



4. பழங்கள் மற்றும் காய்கறிகள்:


பழங்கள்: மா, கொய்யா, பழுத்த தக்காளி, பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி.

காய்கறிகள்: (பசுங்கீரை), கீரை, ஸ்பினாச், முருங்கை, கொத்தமல்லி, கடுகு மற்றும் வெந்தயக் கீரை.


இதர காய்கறிகள்: காரட், கத்தரி, வெண்டை, குடைமிளகாய், பீன்ஸ், வெங்காயம், முருங்கைக்காய், பூக்கோசு காரட்டினாய்டு, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து.


கரையாத கொழுப்பு வகைகள், காரட்டினாய்டு, ரிபோப்ளேவின், போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.


காரட்டினாய்டு, போலிக் அமிலம், கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து.



5. கொழுப்பு மற்றும் சர்க்கரை கொழுப்புக்கள்:


வெண்ணெய், நெய், நீர்ம எண்ணெய்கள், சமையல் எண்ணெய்கள் (கடலை, கடுகு மற்றும் தேங்காய்)

சர்க்கரை: சீனி, வெள்ளம் சக்தி, கொழுப்பு, தேவையான கொழுப்பு - எண்ணெய்கள் சக்தி




5. வகை உணவுகளின் முக்கியத்துவங்கள்:

நிறையான உணவுகளை தருவதால் ஊட்டச்சத்து குறைபாடுகளை தவிர்க்கிறது.  ஊட்டச்சத்துக்களின் நிலையை அறிதல்இவற்றைக் கொண்டு தனிமனிதனுக்கு ஊட்டவியல் கல்வியை புகட்டலாம்.


உணவு பட்டை கூம்புகள்:


ஜக்கிய வேளாண் மாநில துறை, 1992 ஆம் ஆண்டு உணவு பட்டை கூம்பு கையேடுகளை அறிமுகம் படுத்தியது, ஆரோக்கிய வாழ்வு வாழ இக்கையோடு ஓர் அருமையான சாதனமாகும்.



உணவு பட்டைக் கூம்பு கையேடு:


சமநிலை:

வெவ்வேறு உணவு வகைகளிலிருந்து உணவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
ரகங்கள்:

ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வகை உணவுகளை சேர்க்க வேண்டும்.
மிதமானவை:

பரிமாறும் உணவு வகைகளை அளவோடு மேம்படுத்த வேண்டும்
உணவு பட்டைக் கூம்பு பதிவேடு தனிமனிதனின் உண்ணும் எண்ணிக்கை அளவை பரிந்துரைக்கும்



வயது வந்தோருக்கான சமமான பத்திய உணவு வகைகள்:

உணவு வகைகள் வயது வந்தோர் ஆண் வயது வந்தோர் பெண்
நிலையான பணி மிதமான பணி கடினமான பணி நிலையான பணி மிதமான பணி கடினமான பணி


தானிய வகைகள் 470 550 250 370 450 575
பருப்பு வகைகள் 40 60 60 40 45 50
கீரை வகைகள் 100 100 100 100 100 100
இதர காய்கறிகள் 60 70 80 40 40 50
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 50 70 80 50 50 60
பழங்கள் 30 30 30 30 30 30
பால் 150 200 250 100 150 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 30 40 45 20 25 30
சீனி / வெள்ளம் 30 40 50 25 30 30



குழந்தை மற்றும் வயதுவந்தோருக்கான சமமான உணவு வகைகள்:

உணவு வகைகள் குழந்தைகள் வயது வயதுவந்தோரின் வயது
1-3 4-6 7-9 10-12 13-15 16-18
தானிய வகைகள் 180 275 285 335 300 410 340 460 325
பருப்பு வகைகள் 25 35 60 60 60 60 60 60 50
கீரை வகைகள் 40 50 50 75 75 100 100 100 100
இதர காய்கறிகள் 20 30 50 50 50 75 75 75 75
வேர் மற்றும் கிழங்கு வகைகள் 10 20 30 30 30 50 50 50 50
பழங்கள் 50 50 50 50 50 50 50 50 50
பால் 300 250 200 200 200 200 200 200 200
கொழுப்பு மற்றும் எண்ணெய்கள் 15 25 30 30 30 50 40 50 40
சீனி / வெள்ளம் 30 40 50 40 40 40 40 50 50
(இறைச்சி உண்பர்களுக்கு ஒரு பங்கு பருப்பு உணவுக்கு 50 கிராம் முட்டை / கோழிக்கறி / ஆட்டிறைச்சி / மீன்) என்ற விகிதம் பின்பற்ற வேண்டும்.
மூலதனம்:

இந்தியர்களுக்கு பத்திய உணவுக்கான கையேடுகள் - கை நூல் (1998) தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத் - 500007
‚லட்சுமி . பி. 2003. உணவு பத்தியங்கள் நியூ ஏஜ் இண்டர்நேஷனல் வெளியீட்டாளர் லிட், சென்னை.


கோபாலன். சி. ராமசாஸ்திரி.பி.வி. மற்றும் பாலசுப்பிரமணியம். எஸ்.சி. 1989 இந்திய உணவுகளின் ஊட்டச்சத்துக்களின் மதிப்பு தேசிய உணவியல் நிலையம், ஹைதராபாத்.




***
thanks tamil book
***



"வாழ்க வளமுடன்"

'Credit Card' எனும் கடன் அட்டை பற்றிய சில எச்சரிக்கைகள்

அன்று அடிமைதனத்திலிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம். இன்று ஊழல், பலதரப்பட்ட மோசடித்தனம் போன்றவற்றிலிருந்து நாம் முழுமையான சுதந்திரம் பெற வேண்டியுள்ளது.

அந்த வகையில் வங்கிகள் தரும் கடன் அட்டைக்கு (Credit Card) எதிரான மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நாம் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து சில விவரங்களை நான் இந்த நன்னாளில் உங்களிடையே பதிவு செய்ய விழைகின்றேன்.

1.   வங்கியிலிருந்து உங்களுக்கு அனுப்பட்ட கடன் அட்டை அடங்கிய உறை நன்கு மூடி முத்திரை இடப்பட்ட நிலையில் உள்ளதா என்பதையும், அதில் வங்கி அனுப்பியுள்ள கடிதத்துடன் அக்கடன் அட்டை ஒட்டி அனுப்பப்பட்டுள்ளதா என்பதயும் உறுதி செய்து கொள்ளவும். அதாவது கடன் அட்டை உங்களுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.



2.    கடன் அட்டையை பெற்ற உடன் அதன் பின்புறத்தில் உங்கள் கையொப்பத்தை இட வேண்டும்.



3.   உங்கள் கடன் அட்டை செலவு கணக்கை வாடிக்கையாளர் அழைப்பு மையம் அல்லது இணைய தளம் வாயிலாக அடிக்கடி சரி பார்த்துக் கொள்ளவும்.



4.  உங்கள் கடன் அட்டையை நீங்கள் பயன்படுத்தும் பொழுது, அதன் வாயிலாக செய்யப்பட்ட பரிவர்த்தனை குறித்து உடனடியாக உங்கள் மின்னஞ்சல் அல்லது செல்லிடபேசிக்கு தகவல் (email/mobile alerts ) வரும்படி வங்கிக்கு அறிவுரை கொடுக்கவும்.


5.  அயல் நாடுகளில் கடன் அட்டை பயன்படுத்துவது அவ்வளவு உகந்ததல்ல. எனினும் அவ்வாறு பயன்படுத்தினால் அதன் விவரங்களை இரசீது முதற்கொண்டு பத்திரமாக வைத்துக் கொள்ளவும், பணம் செலுத்தும் வரை.


6.   கடன் அட்டையின் எண் மற்றும் அதன் இரகசிய எண்ணை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.


7.   டன் அட்டையின் இரகசிய எண்ணை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளவும்.


8.  கடன் அட்டையின் இரகசிய எண்ணை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


9.   பயன்பாட்டில் இல்லாத கடன் அட்டையை இரத்து செய்து விடவும்.


10.    டன் அட்டை மூலம் எந்த பரிவர்த்தனை செய்தாலும் அது உங்கள் கண் முன் நிகழும் வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு துணிக் கடையில் சேலை வாங்கிக் கொண்டு அதற்கான விலையை செலுத்தும் போது, அக்கடையின் ரொக்க மேடைக்கு (Cash Counter) நீங்களே சென்று உங்கள் கடன் அட்டையை கொடுக்கவும். உங்கள் அட்டை உங்கள் கண் முன் பரிமாற்ற இயந்திரத்தில் தேய்க்கப்படுவதை கவனித்து, பின் திரும்பப் பெற்றுக் கொள்ளவும். இதற்கு மாறாக, கடை பணியாளரிடம் உங்கள் கடன் அட்டையை கொடுத்து விட்டு வேறு பொருள் வாங்க நீங்கள் அக்கடையின் வேறு பிரிவுக்கு சென்றுவிடக் கூடாது. உணவகங்களிலும் இந்த நடைமுறையை பின்பற்றவும்.



11.   நீங்கள் வாங்கிய பொருளின் மதிப்பும், கடன் அட்டையை இயந்திரத்தில் தேய்த்த பிறகு வரும் ரசீதில் உள்ள மதிப்பும் ஒன்றாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



12.    'ஏடிஎம்' அதாவது தானியியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் மூலம் கடன் அட்டையை பயன்படுத்தி ஏதேனும் செயற்பாடுகளை செய்தால், அச்சமயத்தில் உங்கள் அருகில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.



13.   உங்கள் கடன் அட்டையை நீங்கள் தொலைத்து விட்டால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். அம்மையத்தின் செல்லிடபேசி எண்ணுக்கு உங்கள் கடன் அட்டை தொலைந்த விவரத்தை குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பவும். இவ்வாறு தெரிவிக்கப்படும் வரை உங்கள் கடன் அட்டை வாயிலாக செய்யப்பட்ட அத்தனை பரிமாற்றங்களுக்கும் நீங்களே பொறுப்பாவீர்கள். எனவே இத்தருணத்தில் விரைந்து செயலாற்றுவது முக்கியம்.




14.   உங்கள் கடன் அட்டையையோ, அதன் 'ஏடிஎம்' இரகசிய எண்ணையோ (பின் நம்பர்) சம்பந்தப்பட்ட அதே வங்கியிலிருந்து வருவதாகச் சொல்லிக் கொண்டு வரும் எந்த நபரிடமும் அல்லது வங்கி சம்பந்தப்பட்ட பிற முகமை (ஏஜென்சி) ஆட்களிடமும் அல்லது வேறு வங்கியின் அலுவலர்களிடமும் கொடுக்கக் கூடாது, அவர்கள் தங்கள் ஆளறி அட்டையை (அடையாள அட்டையை) காண்பித்தாலும் கூட.


15.   எந்த ஒரு விண்ணப்பப் பரிசீலனையனாலும் உங்கள் கடன் அட்டையின் பின்பகுதியான CW2/CVC2 எண் (கையெழுத்து பகுதியில் வரும் அட்டை எண்ணை தொடர்ந்து வரும் கடைசி மூன்று இலக்கங்கள்) உள்ள பகுதியை நகலெடுத்து ஒப்படைக்காதீர்கள். மேலே உள்ள படத்தை பார்க்கவும்.


16.   உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி/பணம் அல்லது கடன் அட்டை தொடர்பான தகவல்களை கேள்விப்பட்டிராத இணைய தளத்திலோ அல்லது மேற்கண்டவாறான தகவல்களை கோரும் மின்னஞ்சலுக்கோ உங்கள் கடன் அட்டை சம்பந்தப்பட்ட விவரங்களை அளிக்க வேண்டாம்.




***
நன்றி:சட்டபார்வை
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "