...

"வாழ்க வளமுடன்"

31 மே, 2011

குசந்தைக்கு ஆரோக்கியமான தாய்பால் !!!பிரவசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம் . அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.

இந்த தாய்ப்பாலின் காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் தொடர்ந்து எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.

அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும், தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும் குழந்தை பிறந்ததும் நாம் அதற்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால்தான் அந்த தாய்ப்பாலைக் காட்டிலும் மிகச்சிறந்த உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளரத் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் உள்ளது. அதனால்தான், எல்லா தாய்மார்களையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என்கிறது ஒரு ஆய்வு.தாய்ப்பால் மூலம், குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

மேலும், முறையாக தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்றெல்லாம் கர்ப்பனை செய்துகொள்ளும் சில தாய்மார்கள், அந்த எண்ணத்தில் இருந்து தங்களை இனியாவது மாற்றிக்கொள்வதுதான் நல்லது.


***
thanks varunan
***


"வாழ்க வளமுடன்"

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்!1.நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது. உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம். இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்


***


குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்…

ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும். ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது. அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது. யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது. மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான்.

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு. அதன் பின் தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும். உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும். இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும். அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும்.

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உணவு எளிதில் சீரணமாகும்.

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உணவை செரிமானமாகாமல் தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும்.

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும். பின்தான் அதனை விழுங்கும். இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும். எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது


***
thanks varunan
***


"வாழ்க வளமுடன்"

நடுத்தர வயது பெண்களின் அழகு பராமரிப்புக்கு...அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்பு என ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர். வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒண்ணோ... ரெண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறு நிலைகளை கடந்த நிலையில் தெளிவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயல்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றன. இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின் மினுமினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கருப்பாக தோன்ற ஆரம்பிக்கும்.

சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல், பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35 வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷ’யல் செய்து கொள்வது நல்லது.

சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு ''தெர்மோ ஹெர்பல் மாஸ்க்'' போடலாம். இதனால் சருமம் இறுக்கமாகி சுருக்கம் நீங்கும். வயதை குறைத்துக் காட்ட நிறைய பேஷ’யல் உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷ’யலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.

வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் ஓரத்தில்... கீழ்பகுதியில் கேரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே... இதை நீக்க... முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது.

35 வயதை கடக்கும்போது, ஹார்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் கழுத்து பகுதியில் கருப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை... செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக... தங்க சங்கிலியை தடிமனாக அணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்த கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷ’யல் சுரப்பிகள் செயல்பாடு குறையும். மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி... முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதை கடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற்படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பியூட்டி பார்லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம்.வயது செல்லச்செல்ல கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்கு இரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்க வைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து... பாதங்களை தேய்த்து கழுவினால் மென்மையாகி அழகாக மாறும். மேலும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.

அதேபோல், கைகளில் சருமம் வறண்டு... நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாக தோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில் ''ஆன்டி ஏஜிங் க்ரீம்'' அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.

35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும்.

50 வயதுவரை ஹென்னா பயன்படுத்தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க் பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹேர் டையில் இருக்கும் அமோனியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹேர்டையை பயன்படுத்துவது நல்லது. அமோனியா இல்லாத ஹேர் டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக்கின்றன.

ஹேர் டை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹேர் டை பயன்படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை ''ஹேர் ஸ்பா'' செய்து கொள்ளவும். ''மாய்சரேஷர்'', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவது நல்லது.

கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும். உதடுகளுக்கு இளநிறத்தில் லிப்ஸ்டிக் போட வேண்டும். இயற்கையாக இருக்கும் நிறம் கெட்டுப் போகாமல் இருக்க ''லிப் பாம்'' பூசிவிட்டு லிப்ஸ்டிக் போடுவது நல்லது.


***
thanks tamilsigaram
***"வாழ்க வளமுடன்"

30 மே, 2011

10 & +12 முடித்தப் பிறகு என்ன படிக்கலாம் வழிகாட்டி வரைபடம்

*
10 மற்றும் +12 முடித்தப் பிறகு என்ன படிக்கலாம் என்பதர்க்கான வழிகாட்டி வரைபடம் !!


இன்னும் தெளிவாக காண படத்தை Clik செய்யவும்!***
thanks அபு அஜ்மல்
***
"வாழ்க வளமுடன்"

''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''


'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.

பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.


''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை.


இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும்.


இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.

சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.


உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும்.ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.


நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது.


பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.


அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம்.


இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.


''நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.

தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது.


பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.


சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.

- சி.சரவண


***
thanks நாணய விகடன்
***


"வாழ்க வளமுடன்"

அலர்ஜியைக் (ஆஸ்துமா ) கட்டுப்படுத்த புதிய வழிகள்!!!


இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.


சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் பத்மாசனி வெங்கட்ரமணனிடம் பேசினோம்.


'ஆஸ்துமாவை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால்... மற்ற குழந்தைகள்போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் வாழ்க்கைத் துள்ளலே குறைந்துவிடும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முன்பு சிரப் அல்லது மாத்திரை கொடுப்போம். தொடர்ந்து மருந்துகள் எடுப்பது, குழந்தைக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தவிர, பெரியவர்கள் பயன்படுத்துவதுபோன்று, இன்ஹேலர் மூலம் மருந்துகளை உறிஞ்சுவது குழந்தைகளால் முடியாது. இப்போது, இந்த குறையைத் தீர்க்கும் வண்ணம், 'ஸ்பேஸருடன் பேபி மாஸ்க் இன்ஹேலர்’ என்ற கருவி உள்ளது. இந்தக் கருவியைக் குழந்தையின் முகத்தில் பொருத்தி, மருந்தை அழுத்தி னால் போதும்... மருந்து நேராகக் குழந்தைகளின் நுரையீர லுக்குச் சென்று விடும். மருந்து நேரடியாக நுரையீரலுக்கே செல்வதால், குறைந்த டோஸ் மருந்துகளே குணப்படுத்தப் போதுமானதாக இருக்கி றது. இதனால், பக்க விளைவுகளும் குறைந்துவிட்டன.

உறிஞ்சும் மருந்திலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. முதலாவது குரூப், ரிலீவர். ஆஸ்துமா அறிகுறி தோன்றியதும் குழந்தைக்கு இந்த மருந்தைச் செலுத்தினால், உடனடி ஆறுதல் கிடைக்கும். பிரச்னை சரியானதும், இதை நிறுத்திவிடலாம். மீண்டும் பாதிப்பு அடிக்கடி ஏற்படாமல் இருக்க, பிரிவென்டர் எனப்படும் தடுப்பு மருந்தும் உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதுபற்றிய போதிய விழிப்பு உணர்வு பெற்றோர்களிடமே இருப்பது இல்லை. அதனால், நோய் அறிகுறி இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தி, குணமானதும் நிறுத்திவிடுகிறார்கள். இதனால்தான் மீண்டும் மீண்டும் ஆஸ்துமா பிரச்னை வருகிறது.

பொதுவாக மூச்சை இழுக்கும்போது, அது நுரை யீரலின் சின்னச் சின்னக் குழாய்கள் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. ஆஸ்துமா பாதிப்பில், இந்தக் குழாய்கள் சுருங்கி விடும். மருந்து செலுத்தியதும் மீண்டும் பழைய வடிவத்துக்குத் திரும்பும். இந்த தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நிரந்தரமாகவே அந்தக் குழாய்கள் சுருங்கிவிடுகின்றன. இதை ஏர்வே ரீ-மாடலிங் என்று சொல் வோம். அப்படி நிரந்தரமாகக் குறுகி விட்டால், மிகப் பெரிய பிரச்னையாகி விடலாம். எனவே, தற்காலிக நிவாரணம் கிடைத்துவிட்டது என்பதற்காக மருந்து எடுப்பதை நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

சில குழந்தைகளுக்கு தூசு அலர்ஜி மிகப் பெரிய பிரச்னை. அதற்காக, அந்தக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும், மற்ற குழந்தைகளுடன் விளையாடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு அந்த அலர்ஜியைத் தவிர்க்க, 'சப்லிங்குவல் இம்யூனோதெரபி’ அறிமுகமாகி உள்ளது. இந்தியா வில் ஒரு சில இடங்களில்தான் இந்த வசதி உள்ளது. இந்த முறையில், முதலில் குழந்தைகளுக்கு எதனால், என்ன மாதிரியான அலர்ஜி ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து கண்டறிவோம். அதன் அடிப் படையில், அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பை உருவாக்கும் 'அலர்ஜன்’களை அந்தக் குழந்தையின் நாக்கில் வைப்போம். முதலில் சிறிய அளவில் ஆரம் பித்து நாளுக்கு நாள் அலர்ஜனின் அளவை அதிகமாக்குவோம். இதனால், குழந்தையின் உடலில் அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கூடிக் கொண்டே போகும். சிறிது காலத்தில் அந்த குழந் தைக்கு அலர்ஜி என்பதே இல்லாமல் போய் விடும்!

ஆஸ்துமா நோயில் இன்ஹேலர் விஷயத்தில்கூட பெற்றோர் மத்தியில் பயம் இருக்கிறது. அதாவது, போதைப் பழக்கம்போல, தங்கள் குழந்தைகள் இதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்களோ என்று அஞ்சுவார்கள். இந்த பயம் தேவை இல்லாதது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் பெற்றோர்களிடம் இருந்து விலகவேண்டும்.

அடிக்கடி இருமல், மூச்சு வாங்குதல், மாடிப்படி ஏறினாலோ, விளையாடினாலோ அதிகம் இளைப்பது, மூச்சு விடும்போது விசில் சத்தம் வருவது, மூச்சுவிட முடியாதபடி நெஞ்சில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தாலே ஆஸ்துமாதான் என்றும் முடிவு செய்துவிட முடியாது. வேறு சில நோய்களுக்கும் இதே அறிகுறிகள் உள்ளன. ஆனால், எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சையைத் தொடர்வதுதான் நல்லது.

பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும், குழந்தைக்கும் வர வாய்ப்பு அதிகம். தாய் கருவுற்று இருக்கும்போது புகைபிடித்தாலும், குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பெண்கள் புகைப்பது இல்லை என்றாலும், மற்றவர்கள் புகைக்கும்போது அதை கர்ப்பிணி சுவாசித்தாலும் அது கருவையும் பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் சிகரெட் புகையை சுவாசிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு வேறு ஆகாரங் களைத் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே புகட்டினால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு!' என்கிறார்.

அலர்ஜியை அண்டாமல் காக்க முயற்சிப்போம்!

- பா.பிரவீன்குமார்


***
thanks ஜீனியர் விகடன்
***
"வாழ்க வளமுடன்"

பீர்பால் கதைகள் ! பாதுஷாக்களுக்கு என்றே வரும் சந்தேகம்..!


டில்லிப் பாதுஷாக்கள் என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள் என்று ஒரு பெரிய துதி பாடிக் கும்பலே இருக்கிறதே! இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத் தயாராக இருக்கிற மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற" தர்பாரும் உண்டு! இது போதாதா?


இப்படி அறிமுகத்துடன் இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாக கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம்.நடுவில் கொஞ்சம் இடைவெளி விழுந்ததைச் சுட்டிக் காட்டி டில்லிப் பாதுஷாக்களின் பாதம் தாங்கி ஒருவர் மிகவும் வருத்தத்துடன் கேட்டார்.""ஏன் இப்போதெல்லாம் டில்லி பாதுஷா அக்பர் பீர்பால் கதைகள் வருவதே இல்லை? பாதுஷாவையும் பிரதமர் மாதிரி டம்மிப் பீஸ் பட்டியலில் சேர்த்து விட்டீர்களோ?"


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! பீர்பாலையும், அக்பரையும் மறந்து விட்டால் டில்லி எப்படி நினைவுக்கு வரும்? நடுவில் வேறு கவனங்கள், வாசிப்பு என்று இருந்துவிட்டதால் மே மாதக் கடைசி வாரத்துக்குப் பிறகு பீர்பால் கதைகளைத் தொட நேரம் கிடைக்கவில்லை. அதற்குப் பரிகாரமாக, இந்த வாரம், ஒரே பதிவில் இரண்டு குட்டிக் கதைகள்! குட்டி என்றால் சின்னது என்று மட்டுமே அர்த்தம்!


குட்டி என்று சொன்னேன் அல்லவா! இதோ, பீர்பாலுடைய குட்டிப் பெண் அக்பரைத் திணற அடித்த கதை!


ஒரு தரம் பீர்பால், தன்னுடைய ஐந்து வயது மகளை அக்பருடைய தர்பாரைக் காட்டுவதற்காகத் தன்னுடன் அழைத்துச் சென்றார். டில்லிப் பாதுஷாக்களுடைய மண்டையில் எப்போதுமே விசித்திரமான சந்தேகங்கள் தான் இருக்கும் என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம் அல்லவா! அக்பருக்கும் ஒரு சந்தேகம் வந்தது! பீர்பாலுடைய சிறுவயது மகள் பீர்பாலைப் போல அறிவுக்கூர்மை உள்ளவளா, அல்லது சாதாரண சிறுமியைப் போலத் தானா என்ற சந்தேகம் வந்தது.


"குட்டிப் பெண்ணே! உனக்குப் பாரசீக மொழி தெரியுமா?" என்று சிறுமியிடம் கேட்டார் அக்பர்.


சிறுமியிடமிருந்து தயங்காமல் வந்தது பதில், " ஒ! தெரியுமே! கொஞ்சம் கூட, கொஞ்சம் கம்மி!"


எப்போதும்போல பாதுஷாவுக்கு இதுவும் புரியவில்லை. பீர்பாலைப் பார்த்து அந்த சிறுமி என்ன சொல்கிறாள் என்று வினவினார்.


"ஹூசூர்! பாரசீக மொழி தெரியாதவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும்! பாரசீக மொழி தெரிந்தவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கம்மியாகத் தான் தெரியும் என்று தான் சொல்கிறாள்!" என்று பீர்பால் வியாக்கியானம் செய்தார்.


பாதுஷாவுக்குக் கொஞ்சம் சுயமாக யோசித்துத் தான் பார்ப்போமே என்று கொஞ்சம் சபலம் தட்டிற்று!
சுயமாகச் சிந்திப்பது பாதுஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்ற நினைப்பு வந்தவுடன் அதைக் கை விட்டு விட்டார்! பணம் போனால் வரிவிதித்து ஈடு செய்து கொள்ளலாம்! கௌரவம் குறைந்து போனால்....!


அப்புறம் என்ன, வழக்கம் போல பரிசு கொடுத்து கௌரவப் படுத்தி, பரிசு கொடுத்த தானும் பெரிய ஆள் தான் என்று காட்டிக் கொள்கிற கூத்தும் அரங்கேறியது.

***

எப்போதுமே தர்பாரிலேயே சந்தேகம் கேட்கிற சீனை நடத்தி நடத்தி அக்பருக்கே கொஞ்சம் அலுத்துப் போய் விட்டது!

அதனால் வித்தியாசமாக அரண்மனைத் தோட்டத்தில், பீர்பால், எப்போதும் முதுகு வளைந்து துதிபாடும் கவிஞர்கள், முக்கியமான கைத்தடிகளுடன் அக்பர் உலாத்திக் கொண்டிருந்தார். அங்கே ஏராளமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களைப் பார்த்ததும் துதிபாடிக் கவிஞர் ஒருவருக்கு ஆவேசம் வந்து விட்டது. துதிபாடிகளுக்கு ஆவேசம் வந்தால் அங்கே உளறலைத் தவிர வேறென்ன வரும்?

" ஒ!ஹூசூர்! உலகத்திலேயே இந்த அரண்மனைத் தோட்டத்தில் பூக்கிற மலர்கள் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது! அக்பர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்கிற பூக்களை வேறெங்கு தான் பார்க்க முடியும்?"

அக்பருக்குப் பெருமை தாங்க முடியவில்லை! என்னதான் பொய் என்று தெரிந்தாலும், வலுக்கட்டாயமாகப் பாராட்டுவிழாக்களை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அங்கே காரியமாக வேண்டி வந்த துதிபாடிகள் நீதான் சூரியன்! நீதான் இந்த உலகத்துக்கே ஆதாரம்! உனக்கோ பல தாரம் அதனால் நீயுமொரு அவதாரம் என்று பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்பதில் ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்கிறது அல்லவா!

பீர்பால் இந்தப் பாட்டை அங்கீகரிக்கிறாரா என்று தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது.நேரடியாக பீர்பாலை எப்படி இந்தத் துதிபாடியைப் போலவே சொறிந்து விடச் சொல்வது? பீர்பால் ஏதாவது இடக்கு மடக்காகச் சொல்லி விட்டால்...? அதனால் சுற்றி வளைத்துக் கேட்டார்.

"பீர்பால்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்தப் பூவை விட அழகானதொன்றும் இருக்க முடியுமா?"

"நாளை காலை, இந்தப் பூவை விட அழகானதாக ஒன்று இருக்க முடியுமா இல்லையா என்பதை நிரூபிக்கிறேன் ஹூசூர்!" என்று பணிவாகச் சொன்னார் பீர்பால்.

மறுநாள் தர்பாரில் பீர்பாலை, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு அக்பர் எதிர் கொண்டார். ஆக்ராவில் இருந்து வந்த கைவினைக் கலைஞர் ஒருவரை பீர்பால் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கலைஞர் அக்பருக்குப் பரிசாக பளிங்கில் செதுக்கிய மலர் ஒன்றைப் பரிசாக அளித்தார். உண்மையான பூவைப் போல, மிக நேர்த்தியாக, இயல்பான வண்ணங்களை எப்படித்தான் அதற்குள் கொடுத்தாரோ தெரியாது, அப்படி ஒரு அழகான படைப்பைப் பார்த்த அக்பர் மெய்மறந்துபோனார். ஆயிரம் தங்க முஹராக்களை அந்தக் கலைஞனுக்குப் பரிசாக அளித்தார்.

சிறிது நேரம் கழித்து வேறொருவர் அரண்மனைத் தோட்டத்தில் முந்தைய தினம் பார்த்த நிஜப் பூக்களைக் கொத்தாக அக்பருக்கு வணங்கி கையில் அளித்தார், எப்போதும் பார்க்கிற பூ தானே என்று அக்பர் இரண்டொரு வெள்ளி நாணயங்களை அவருக்கு அளிக்க உத்தரவிட்டார்.

"ஆக, செயற்கையாகச் செதுக்கிய பூ, இயற்கையான பூவை விட நிஜமாகவே அழகு அதிகம் தான் போலிருக்கிறது!" என்றார் பீர்பால்.

பாதுஷாவுக்கு அவர் முந்தைய தினம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டது!

புரிவதற்குத் தான் அதிக நேரமாயிற்று!***
bt- எஸ். கிருஷ்ணமூர்த்தி
thanks http://consenttobenothing.blogspot.com/
***"வாழ்க வளமுடன்"

சீடியில் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.


இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நாமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் 'டொயிங்' என்ற சத்தத்துடன் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.


எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.


நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.


இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.***
thanks விழியே பேசு
***"வாழ்க வளமுடன்"

28 மே, 2011

பீட்ஸா சாப்பிட வாங்க !!!


தேவையானவை:

மைதா - 500 கிராம்
சீனி - 4 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1/2 டீஸ்பூன் (உடன் வெது வெதுப்பான நீரில் கலந்து கொள்ளவும்)
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2டீஸ்பூன்
உப்பு - 2டீஸ்பூன்

செய்முறை:

மைதா மாவில் கலந்துவைத்த ஈஸ்ட், பேக்கிங் பவுடர், வெண்ணெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும். பிறகு சற்று விரிவான பாத்திரம் 8 அங்குல விட்டம் 2 அங்குல உயரம் ஒன்றில் நெய் தடவி, பாத்திரம் கொள்ளும் அளவு மாவு அரை செ.மீ கணம் இருக்கும்படி விரித்து வைக்கவும். வெண்ணெய் தடவி மாவை பேக்கிங் அடுப்பில் வைத்து 350 டிகிரியில் முக்கால் பாகம் வேகும் வரை வைத்து எடுக்கவும்.*


பீட்ஸாவினுள் பரப்புவதற்கு தேவையானவை:

தக்காளி - 600கிராம்
குடை மிளகாய் - 2
மிளகாய் சாஸ் - 4டீஸ்பூன்
பூண்டு - 8 பல்
மிளகாய் தூள் - 2டீஸ்பூன்
வெள்ளரிக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2
சீஸ் - 100 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:

வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கிக் கொள்ளவும். தக்காளிப் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி, தக்காளித்துண்டுகளை போட்டு வதக்கவும். உப்பு, மிளகாய்தூள் போடவும். சாஸ்மாதிரி கெட்டியானவுடன் இறக்கவும். தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காயை வட்டவடிவில் வெட்டி குடை மிளகாயையும் நறுக்கி, சுட்டு வைத்து இருக்கும் முக்கால் பங்கு வெந்த பீட்ஸாவின் உள்ளே வைத்து அடுக்கி, மிளகாய் சாஸ் ஊற்றி சிஸ்ஸை துருவி மேலே தூவிக்கொள்ளவும். வெண்ணெய் 2 டீஸ்பூன் மேலே விட்டு மறுபடியும் 10 நிமிடம் 350 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.


***
thanks subawin
***
"வாழ்க வளமுடன்"

ஏழு பிறவிகள் என்ன என்று தெரியுமா ?

1. தேவர்கள்


*

2. மக்கள்*


3. விலங்கு

*

4. பறைவை
*

5. ஊர்வன

*


6. நீர்வாழ்வன


*


7. தாவரம்
***
thanks கவிதை வீதி
***


"வாழ்க வளமுடன்"

நினைவாற்றலை அதிகரிக்க .....

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. உண்மையில் மனதை எந்தளவுக்கு ஒரு முகபடுத்துகின்றோமா அந்தளவிற்கு எங்களது ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.அடிப்படை நினைவாற்றல் செயற்பாட்டை மனதின் ஒருநிலைப்பாட்டை மையமாகக் கொண்டு விபரிக்க முடியும். யோகா பயிற்சிகளின் மூலம் நினைவுச் செயற்பாட்டை அதிகரிக்க முடியும். அறிவு பலமாக அமையாது, சரியான அறிவே சக்தியாக கருத முடியும்.இந்தப் பகுதியில் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும், அதற்கான ஏதுக்கள் பற்றியும் விபரிக்கப்பட்டுள்ளது.மனதை ஒருநிலைப் படுத்துவதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்க முடியுமா? ஆம், மனதை ஒருமுனைப்படுத்துவதன் மூலம் மூளைக்கு குறியேற்றப்படும் தரவுகளின் அளவினை வெகுவாக அதிகரிக்க முடியும்.


மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, சக்தி வாய்ந்த மூளையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அநேகமானவர்கள் தங்களது நினைவாற்றறை விருத்தி செய்வதில் சிரத்தை காட்டுகின்றனர். அடிப்படை நினைவுத் தொழிப்பாடு மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தல் ஆகியன சிறந்த கலவையை உருவாக்குகின்றன. மூளையில் தகவல்களை ஆழமாக குறியேற்றுவதன் மூலம் தேவையான நேரத்தில் வேகமாக அவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள முடிகிறது.

நினைவாற்றலை விருத்தி செய்வதற்கு பின்வரும் அடிப்படைக் காரணிகள் முதன்மையானவை. அடிப்படை நினைவு தொழிற்பாட்டை சீராக மேற்கொள்வதற்கு முதலாவது,

பத்து கோப்பை நீர் பருக வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 6-8 மணித்தியாலம் உறங்க வேண்டும்.

நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய உணவுகளை வகைளை உட்கொள்ளல்.

பழங்கள், காய்கறி வகைகள் நினைவாற்றலை அதிகரிக்கும் விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ளல் ஏனெனில் காய்கறி பழ வகைகள் சமிபாடடைவதற்கு இந்த மாத்திரைகள் உதவியாக அமைகின்றன.

இரண்டாவது, ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகளை பின்பற்றுதல்

மூன்றாவதாக மூளையில் குறியேற்றம் செய்வது தொடர்பிலான பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஆரோக்கியமான மூளைகளில் மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் அதிகளவான தரவுகளை உள்ளீடு செய்ய முடியும்.

அடிப்படை நினைவுத் தொழிற்பாடு, மூளை குறியேற்றம் ஆகியவற்றில் போதியளவு பயிற்சி பெற்றுக் கொண்டதன் பின்னர் மனதை ஒரு நிலைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்த முடியும். சீரிய முறையில் மனதை ஒழுங்கு படுத்துவதன் மூலம் இலகுவில் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.

யோகா பயிற்சி மனதை ஒருநிலைப் படுத்துவதற்காக மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும். தியானம், மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனைக் கூர்மை போன்றவற்றை யோகாப் பயிற்சி மூலம் விருத்தி செய்ய முடியும்.


*

யோகா பயிற்சிகளின் மூலம்

1. நினைவாற்றலை அதிகரிப்பதற்கு தேவையான மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு


2. மூளையில் தகவல்களை காத்திரமான குறியேற்றம் செய்தல்
அநேகமான யோகா பயிற்சிகள் உடல், உள்ளம் மற்றும் ஆத்மா ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.

மனதை ஒருநிலைப்படுத்துவதன் மூலம் எவ்வாறு நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என கேள்வி எழுப்பக்கூடும். ஆரோக்கியமான மூளைகளில் தகவல்களை குறியேற்றம் செய்வதன் மூலம் சிறந்த நினைவாற்றலை பெற்றுக்கொள்ள முடியும்.

*

மூளைக் குறியேற்று முறைகள்

ஆரோக்கியமான மூளையில் அதிகளவான தரவுகளை குறியேற்றி வைக்க முடியும். ஆரோக்கியமான சக்தியான மூளையின் மூலம் கேட்ட மாத்திரத்தில் தரவுகளை ஞாபகப்படுத்தி பதில்களை வெளியிட முடிகின்றது.

நினைவாற்றலை விருத்தி செய்ய விரும்பும் பயிலுனர்கள் மாதமொன்றுக்கு மூன்று மூளைக் குறியேற்று செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மூளைக் குறியேற்று பயிற்சிகள் மிகவும் இன்றியமைதாதவை.

*

மேலதிக ஆற்றல்கள்

பின்வரும் பயிற்சிகளின் மூலம் சிறந்த ஞாபக சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும்

1. அடிப்படை நினைவுத் n;தாழிற்பாடு

2. நிரூபிக்கப்பட்ட குறியேற்ற வழிமுறைகள்

3. குறியேற்று திறமையை விருத்தி செய்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுதல். கூடுதலான தொடர் பயிற்சியின் மூலம் நிறைவாற்றலை பாரியளவில் விருத்தி செய்ய முடியும்.

மனதை ஒருநிலைப்படுத்தல் மற்றும் சிந்தனை கூர்மை ஆகியவற்றின் மூலம் நினைவாற்றலை விருத்;தி செய்ய முடியும்.***
thanks தினமலர்
***


"வாழ்க வளமுடன்"

26 மே, 2011

குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்...ஒவ்வொரு தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல் வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும். ஏனெனில் குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான் ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது. அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு தெரிவிக்கிறது.


யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம் எனக் கூறுகிறது. மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும் கூறுகிறது.

குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு உண்டாவதும் சகஜம்தான்.

குழந்தை ஏதாவது வேண்டாத பொருளை விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான் படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு. அதன் பின் தாய் காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம் கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம், சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை சில சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். கொதிக்கவைத்து ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும். உணவில் மாற்றமோ, உணவு கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும். இது குறைந்தால் குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க வேண்டும். அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில் ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும்.

குழந்தைகள் உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக மசித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உணவு எளிதில் சீரணமாகும்.

அதுபோல் அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உணவை செரிமானமாகாமல் தடுத்து மலச்சிக்கலை உண்டாக்கும்.

சில சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை ஏற்படுத்தும். இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும். பின்தான் அதனை விழுங்கும். இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில் வைக்கக்கூடாது. வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும். எனவே, பயத்தை வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை பார்க்கச் செய்யக்கூடாது.


***
thanks நக்கீரன்
***"வாழ்க வளமுடன்"

வாத பித்த கப உடற்கூறும் சர்க்கரை நோயும் !!!


இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை நோயும் ஒன்று.


எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே சர்க்கரை நோய் உள்ளது.
உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்னும் 5 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்படைகின்றனர்.

உணவு மாறுபாடு, மனக்கவலை, எப்போதும் தீரா சிந்தனை, அதிவேகம், காலத்தின் கட்டாயச் சூழ்நிலையில் நிம்மதியற்ற வாழ்க்கை. நேரம் தவறிய உணவு, அதிக மனஉளைச்சல் இவைகளினாலும் பரம்பரையாகவும் இவற்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ இருந்தால்கூட சர்க்கரை நோய் ஏற்படலாம்.


பொதுவாக உடல் நிலையில் மாற்றம் ஏற்படும் போது உடலானது தன் நிலையிழந்து, உண்ட உணவு செரிக்காமல் அதிக கொழுப்பு தன்மையடைந்து, அது அதிகளவில் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கிறது. இந்த இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை மாற்றும் கணைய நீர் அதிகம் சுரக்க வேண்டியுள்ளது. இதனால் கணையம் பாதிக்கப்பட்டு கணைய நீர் குறையும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.


பொதுவாக உண்ட உணவில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் குளுக்கோஸ் மூன்று பங்காக பிரிக்கப்படுகிறது. ஒரு பங்கு இரத்தத்திலும், ஒரு பங்கு நீராகவும், ஒரு பங்கு ஆவியாகவும் வெளியேறுகிறது. இதில் நீராகவும், ஆவியாகவும் அதாவது சிறுநீரின் மூலமும், வியர்வை மூலமும் வெளியேறாமல் இரத்தத்தில் அதிகளவு கலந்துவிடுகிறது.


கொழுப்பு தன்மை உடலின் பிற உறுப்புகளையும் பாதிப்படையச் செய்வதுடன் உடல் தன் நிலை மாறி, உறுப்புகளின் இயக்கத்தையும் குறைத்துவிடுகிறது. இதனால் உடல் அசதியுண்டாகி கை, கால் மூட்டுகளிலும், கணுக்காலிலும் வலுவிழந்து இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. மேலும் பாதங்களில் புண், புரை ஏற்படுகிறது. சில சமயங்களில் கால் பகுதிகளில் சருமத்தின் நிறம் முதலில் சிவந்து பின் வீங்கி கருத்தும் போகிறது. புண், புரைகள் எளிதில் ஆறுவதில்லை. காரணம் இரத்தத்ததில் உள்ள அதிகளவு சர்க்கரை புண்ணை ஆற விடுவதில்லை.


பொதுவாக சர்க்கரைவியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவ தில்லை. சித்தர்களின் கூற்றுப்படி, வாத, பித்த, கபம் எனும் முக்குற்றங்களின் அமைப்பில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு பாதிப்பையும் குறி குணங்களையும் காட்டுகிறது.


வாத, பித்த, கபம் (சூலை) உடற்கூறு கொண்டவர்களை நீரிழிவு நோய் தாக்கினால் உண்டாகும் குறி குணங்களையும், பாதிப்புகளையும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.

*

வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

வாதக்கூறு உடலமைப்பு கொண்டவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், நரம்புகள் வலுவிழந்து உடல் பலமிழக்கும். மேலும் காலில் வலி உண்டாகும். மூட்டுக்குக் கீழ் கால்பாதம், நகம், கெண்டை சதைப் பகுதிகள் இறுகி காய்ந்து உலர்ந்ததுபோல் தோற்றமளிக்கும். மலம் கறுத்து வெளியேறும். நகக் கண்கள் கறுத்துப் போகும். வாத உடற்கூறு கொண்டவர்களுக்கு சர்க்கரை நோய் வந்தால், மூட்டு இறுகி கணுக் கால்களில் சிறிது வீக்கத்துடன் வலியை உண்டுபண்ணும். இதுபோல் இடுப்புப் பகுதி, தொடையின் ததைப்பகுதி இறுகி காணப் படும்.


இவர்களுக்கு கால் நகக்கண்ணிலும், விரல் இடுக்குகளிலும் வட்டமாக தோன்றி இவை புண்ணாக மாறிவிட வாய்ப்புகள் அதிகம். மேலும் காலில் அதிக புண், புரை உண்டாகும். இவை எளிதில் ஆறுவதில்லை. கை, கால்கள் மரத்துப் போகும். காலையில் கால்களில் அதிக வலி உண்டாகும். பாதங்களை தரையில் ஊன்றி நடக்க முடியாது.

*

பித்தக் கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

பித்தக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு நீரிழிவு பாதித்தால், கண் நரம்புகள் பாதிப்படைந்து கண் பார்வை குறைபாடு வர வாய்ப்புள்ளது. நேரம் தவறி உண்பதால் மயக்கம் ஏற்படும். உடலில் ஒருவித எரிச்சர் தோன்றும். இதய படபடப்பு ஏற்பட்டு, திடீர் மயக்கம், தலைச்சுற்றல் உண்டாகும்.

கால் பகுதிகளில் நீர் கோர்த்து, தோல் பளபளப்படையும். நடந்தால் மூச்சுத் திணறல் உண்டாகும். முகம் வெளிறிக் காணப்படும். சளியுடன் கூடிய நெஞ்சிரைப்பு உண்டாகும். இரத்த அழுத்தம் அதிகமாக இரத்தக் குழாய்களில் அடைப்புகள் வர வாய்ப்புள்ளது. அதுபோல், ரத்தத்தில் பித்த நீர் அதிகம் சேர்ந்து ரத்தத்திலுள்ள யூரியா, கொழுப்பு, சர்க்கரை மூன்றும் சேர்ந்து ரத்தத்தை பசைபோய் ஆக்கிவிடும்.

இதனால் இரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சு படபடப்பு, நெஞ்சுச் சளி போன்றவை உண்டாகும். கை கால் வெளுத்துக் காணப்படும். மதியம் அல்லது மாலை வேளையில் கை கால்களில் அதிக வலி உண்டாகும்.

*

கபக்கூறு உடலமைப்பு கொண்டவர்களுக்கு

சர்க்கரையின் பாதிப்பால் கை, கால், கழுத்து, இடுப்பு, தோள்பட்டை, முதுகு போன்றவற்றில் வலியை உண்டு பண்ணும்.
குடலின் சீரணத் தன்மையைக் குறைத்து குடல் பகுதிகளில் பாதிப்பை உண்டுபண்ணும்.


இடுப்புக்குக் கீழ் தொடை, முழங்கால் வீக்கம் உண்டாகி அதிக வலி ஏற்படும். அதோடு கால் பாதங்களில் மதமதவென ஈரத்தோடு காணப்படும். பாதம் பஞ்சுபோல் மாறிவிடும்.

இவர்களுக்கு சிறுநீரகம் எளிதில் பாதிப்படைய அதிக வாய்ப்புண்டு. காரணம், ரத்தத்தில் உப்பு நீர் அதிகமாக இருக்கும். அதனால் தசைகளிலும், நரம்பு முடிச்சுகளிலும் மூட்டுகளிலும் வீக்கம் இருக்கும். பெரும்பாலும் இவர்கள் உடல் அதிக பருமனாக மாற வாய்ப்புண்டு.


உடம்பில் எரிச்சல் இருந்தாலும் தசைகள் குளிர்ந்து அதாவது சூடு கலந்து குளிர்ச்சியாக காணப்படும். இவர்களுக்கு வயிற்றில் அதிகம் நீர் சேர வாய்ப்புள்ளது. இதனால் வயிறு பெருத்துக் காணப்படும். கால்கள் இரவு நேரங்களில் வீக்கத்துடன் அதிக வலி இருக்கும்.

*

பொதுவாக நீரிழிவு நோய் வருவதற்கான காரணங்கள்.

முதல்வகை - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது.


இரண்டாம் வகை - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் சிலருக்கு உண்டாகும்.
நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகிறது.


தற்போது தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு ரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப் படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.


இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தை உண்டு பண்ணுகிறது.இதில் உடலைக் கெடுக்கும் மதுப்பழக்கம் கொண்டவர்களுக்கு சர்க்கரை நோயின் பாதிப்பு வேகமாக இருக்கும். பித்த உடற்கூறு கொண்டவர்கள் பகலில் பித்த அதிகரிப்பின் போது மது அருந்தினால் மயக்கம், வாந்தி, பிதற்றல் நிலை ஏற்படுவ துடன் மதுவில் உள்ள ஆல்கஹால் இரத்தத்தில் கலந்து பரவுவதால் இரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கும்.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது.
மனிதனின் உடற்கூறுகளை மாற்ற முடியாது. ஆனால் சர்க்கரை நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. இரவு உணவில் காரத்தை குறைக்க வேண்டும்.அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது.
மன உளைச்சல், மன எரிச்சல், கோபம், பதற்றம் இவற்றைத் தணிக்க தியானமே சிறந்த வழியாகும். தியானம், யோகா இரண்டும் சித்தர்கள் அருளியதுதான்.


தியான நிலையில் சரசுவாசத்தை மேற்கொண்டால் உடலில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.


மன அமைதி, தியானம், சீரான உணவு, இவை மூன்றும் ஆரோக்கியத்திற்கு அற்புத மருந்தாகும். பொதுவாக சர்க்கரை நோய் நரம்புகள், தசைகளை பாதிக்க ஆரம்பிக்கும். உடல் உறுப்புகளின் அசைவுகளை மந்தப்படுத்தும். இதனால் உடல் உறுப்புகளின் இயக்கம் தடைப்பட்டு நரம்பு முடிச்சுகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் நல்ல மூலிகை தைலங்களை தேய்த்துக் குளிப்பது நல்லது.


குறிப்பாக இடுப்புக்குக் கீழ் கால், தொடை, மூட்டு, கெண்டைச்சதை, நகக்கண்களில் தைலங்களை நன்கு தேய்த்து ஊறவிடவேண்டும். அப்போது தசைகளில் உள்ள உப்பு நீர் எண்ணெயுடன் கலந்து வெளியேறிவிடும். இதனால் தசைகள் சுத்தமடைந்து நன்கு இயங்கும். உடலில் உப்புநீர் குறைவதால், கால்பகுதிகளில் உண்டாகும் புண் புரைகள் விரைவில் ஆறும்.


நீரிழிவு நோய்க்கு சித்தர்கள் பல பரிகார முறைகளைக் கூறியுள்ளனர். இதில் அகத்தியர் வர்ம சூத்திரத்தில் கூறியுள்ள தைல முறையைத் தெரிந்துகொள்வோம்

தைலம் தயாரிக்கும் முறை -

கடைமருந்து -
கருஞ்சீரகம் - 25 கிராம்
கார்கோல் - 25 கிராம்
கொட்டம் - 25 கிராம்
தேவதாறு - 25 கிராம்
இராமிச்சம் - 25 கிராம்
சந்தனம் - 25 கிராம்
வசம்பு - 25 கிராம்
குறுந்தொட்டி - 25 கிராம்
மஞ்சள் - 10 கிராம்


இவற்றை எடுத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு.


பச்சிலை மருந்து
குப்பைமேனி - 100 மிலி சாறு
தைவேளை - 100 மிலி சாறு
வேலிப்பருத்தி - 100 மிலி சாறு
கோவை - 100 மிலி சாறு
அமிர்தவல்லி - 100 மிலி சாறு
அருகம்புல் - 100 மிலி சாறு
வெற்றிலை - 100 மிலி சாறு
கறிவேப்பிலை - 100 மிலி சாறு
இவற்றுடன்
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
நல்லெண்ணெய் - 1 லிட்டர்
கடுகு எண்ணெய் - 1 லிட்டர்

எடுத்து, முதலில் சாறுகளை லேசாக கொதிக்க வைத்து, கொதிநிலையில் எண்ணெயை சிறிது சிறிதாக விட்டு, பின் மேற்கண்ட கடை மருந்துகளை சேர்த்து மணல் பக்குவமாக வரும்போது எடுத்து வடிகட்டி, பாட்டிலில் அடைத்து தினமும் கால், கை களில் தடவினால், கைகால் எரிச்சல், நமைச்சல் நீங்கும். மறத்துப்போகும் தன்மை மாறும். சருமத்தின் ஏற்படும் வெளுப்பு நீங்கும். புண் புரைகள் நீங்கும்.***
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
***"வாழ்க வளமுடன்"

அவரைக்காய் !!!


இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.


ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன. இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது.


இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.


ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.


அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.


அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.


நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.


காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.


சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி

-தேரையர் குணபாடம்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.


அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.


அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.


· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.

· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

· சிறுநீரைப் பெருக்கும்

· சளி, இருமலைப் போக்கும்

· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்

· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்

· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.


***
thanks நக்கீரன்
***

"வாழ்க வளமுடன்"

பித்தம் தணிக்கும் கொத்தமல்லி !!!உலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே. நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.


மக்கள் பிணி நீங்கி நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன. இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.


கறிவேப்பிலை போல் கொத்தமல்லியும் நம் சமையலில் அதிகம் இடம்பெறும் ஒரு மூலிகைப் பொருள் ஆகும். இது வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுவது என நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஆனால் வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களும் சேர்க்கப் படுகிறது என்பதை அறிந்திருக்க மாட்டோம்.
நம் முன்னோர்கள் உணவின் மூலமே நோயற்ற வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதற்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்றவை சாட்சிகள்.


கடையில் காய் வாங்கினால் ஏதோ கொசுறாக கொத்தமல்லித் தழையைக் கொடுப்பார்கள். அதை நாமும் வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அதிலுள்ள மருத்துவப் பயனைஅறிந்ததில்லை.


பசுமையான, மணமுள்ள இலைகளையும் சிறிய வெண்ணிற மலர்களையும் உருண்டையான விதைகளையும் உடைய சிறு செடி கொத்தமல்லி. இதன் விதைகளுக்கு தனியா என்று பெயர். இது பலசரக்குக் கடைகளில் கிடைக்கும்.


நஞ்சை, புஞ்சை காடுகளிலும் இதனைப் பயிரிட்டு வளர்க்கின்றனர். இதன் விதை மிகவும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் உடையவை. இது இந்தியா முழுவதும் பணப்பயிராகப் பயிரிடப் படுகிறது.


இது கார்ப்புச் சுவை கொண்டது. குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயுவகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவப் பயன்களைக் கொண்டது.


கொத்துமல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்
பித்தமெல்லாம் வேருடனே பேருங்காண்- சத்துவமாம்
வெச்செனவே போகம் விளையுஞ் சுரந்தீருங்
கச்சுமுலை மாதே! நீ காண்
-அகத்தியர் குணவாகடம்
பொருள் -

சுவையின்மை, சுரம் நீங்கவும், உடலை வன்மையாக்கவும், விந்துவைப் பெருக்கவும் உதவும்.

*

கொத்தமல்லியின் பயன்கள்


· சுவையின்மை நீங்கும்.

· வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்.

· செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணிக்கச் செய்யும்.

· வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறுகளைப் போக்கும்.
மலச்சிக்கல் நீங்கும். இதில் உள்ள நார்ச்சத்து மலக்குடலில் உள்ள தேவையற்ற அசடுகளை வெளியேற்றும். மூலநோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாகும்.

· புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

· கண் நரம்புகளில் உள்ள வறட்சியைப் போக்கி கண்ணை பலமடையச் செய்யும் கண் சூடு குறையும்.

· சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளைப் போக்கும். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் நீங்கும்.

· உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும்.


· நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். மன அமைதியைக் கொடுக்கும்.

· உடலுக்கு வலுவைக் கொடுக்கும். விந்துவைப் பெருக்கும் குணம் இதற்குண்டு.

· நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் மயக்கம், தலைச்சுற்றல் போன்றவற்றை நீக்கும். இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையைக் குறைக்கும். இரத்த அழுத்த நோயாளிகளும் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


· வாய் நாற்றத்தைப் போக்கும். பல்வலி, ஈறுவீக்கம் குறையும்.
சிறுநீர், வியர்வையைப் பெருக்கும்.

கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
சின்ன வெங்காயம் - 5
மிளகு - 10
சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 5 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு

எடுத்து நீர் விட்டு சூப் செய்து காலை, மாலை, டீ, காபிக்கு பதிலாக இதனை அருந்தி வந்தால் உடல் களைப்பு நீங்கி மேற்கண்ட பாதிப்புகள் குறையும்.

கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடு தணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.

5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

கொத்தமல்லி சூரணம்
கொத்தமல்லி - 300 கிராம்
சீரகம் - 50 கிராம்
அதிமதுரம் - 50 கிராம்
கிராம்பு - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
சன்னலவங்கப்பட்டை 50 கிராம்
சதகுப்பை - 50 கிராம்

இவை அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து சலித்து 600 கிராம் வெள்ளை கற்கண்டு பொடியுடன் கலந்து வைக்கவும். இந்த சூரணத்தை காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டால் உடல் சூடு, செரியாமை, வாந்தி, விக்கல், நாவறட்சி, ஏப்பம், தாது இழப்பு, நெஞ்செரிப்பு போன்றவை குணமாகும்.
கொத்தமல்லி கீரைக்கும், விதைக்கும் கண்பார்வையைத் தூண்டும் குணம் உண்டு.

காய்ச்சலாலும், குடல் அலர்ஜியாலும் பித்தம் அதிகரித்து வயிற்றில் சளி ஏற்பட்டு அதனால் நாவில் சுவையின்மை ஏற்படும். இது பொதுவாக பித்த அதிகரிப்பினால் வருவது.
இதற்கு, கொத்தமல்லி இலை, சீரகம், சேர்த்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்த கிறு கிறுப்பு நீங்கும்.


***
thanks அசோக்.S
***

"வாழ்க வளமுடன்"

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid)


தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


“தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.


அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.


தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.


சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.


தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.


*

தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல:

மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.*


தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :

ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?

புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

*

தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.


வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.


மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.


தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

*

தைலங்கள்:

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

*

எளிதில் ஜீரணமாகும் :

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

*

வயிற்றுப்புண்கள் :

தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.


தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

*

வைரஸ் எதிர்ப்பு:

தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

*

ஆண்மைப் பெருக்கி :

முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.

குழந்தை சிவப்பு நிறமாக..... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

*

இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?

மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.


இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்***
thanks அசோக்.S
***
"வாழ்க வளமுடன்"

25 மே, 2011

உடலுக்கு ஏற்ற நவதானியங்கள் -- 1000வது பதிவு :)

நெல்:-


உமியுடன் கூடிய அரிசி, நெல் எனப்படுகிறது. உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகிறோம். அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என்பவை குறிப்பிடத்தக்கவை. பச்சரிசி என்பது நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அப்படியே பயன்படுத்துவதாகும். நெல்லை முறையாக அவித்து குத்தி பெறுவது புழுங்கலரிசி.

பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகமாக்கும். இதனால் உடல் பருமனாகும். உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.

சம்பா அரிசி வகையில் சீரகச்சம்பா ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும்.ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம்கூடும்.குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.
**சோளம்:-

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.


**
கம்பு:-கிராமங்களில் கம்பங்கஞ்சியும், கம்பஞ் சோளம் சாப்பிட்டவர்கள் மிக அதிகம். இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். உடல் வலிமையை அதிகமாக்கும்.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. அரிசியைவிட பல மடங்கு சத்து மிகுந்த உணவு, ஜீரண சக்தி அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.


**சாமை:-சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.**


வரகு:-

நவதானிய வகைகளில் வரகும் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.


**

கேழ்வரகு:-


தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் சொல்வர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.**

கோதுமை:-அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன. வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர். எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது. உடல் நலனுக்கு உகந்ததாகும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் உண்டாகாது.
**

பார்லி:-
குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது.
நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும். வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும்.
***
thanks vayal
thanks wikipedia ( படங்கள் )
***


"வாழ்க வளமுடன்"
இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "