...

"வாழ்க வளமுடன்"

24 செப்டம்பர், 2010

குழந்தைகளுக்கு வரும் மன அழுத்தங்கள்....

மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்:


குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்.

*

சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள்.

*

சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

*

அவையாவன;

1. குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள்.


2. பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் குழந்தைக்கு உறவில் ஏற்படும் விரிசல்.


3. நட்பில் உண்டாகும் மனவருத்தம்

4. குடும்பங்கள் பிரிந்து விடுதல்


5. மிக நெருக்கமானவர்களின் பிரிவு அல்லது செல்லப்பிராணிகளின் இறப்பு


6. பெரிதாக ஏற்படும் இழப்புக்கள் , அல்லது அதிர்ச்சி ஏற்படுத்திய நிகழ்ச்சிகள்


7. அடிக்கடி ஏற்படும் உடல்நோய்கள், தொற்றுநோய்கள்


8. குழந்தைகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துதல்


9. மற்ற குழந்தைகளின் முரட்டுத்தனம், பிடிவாதம்


10. பள்ளியில் அல்லது வெளிவட்டாரத்தில் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள்


11. பெற்றோரைப் பாதிக்கும் மனஉணர்வுகள் சில நேரங்களில் குழந்தையையும் பாதிக்கும்.


12. உட்கொண்ட மருந்துகளினால் ஏற்படும் பக்க விளைவுகள்.


- இது போன்ற காரணங்களினால் குழந்தைகள் மனஅழுத்த நோய்க்கு ஆளாகி அவதிப்படுவார்கள்.

*

சில குழந்தைகளுக்கு இது பரம்பரையாகவும் வரலாம். அத்தகைய குழந்தைகள் மேலே காட்டப்பட்ட காரணங்களுள் ஏதேனும் ஒன்று ஏற்பட்டால் கூட அதை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சமாளிக்கவோ முடியாமல் அதிகம் திணறிப் போய்விடுவார்கள்.

*

வெகுவிரைவில் மனஅழுத்த நோய்க்கும் ஆளாகி விடுவார்கள்.

***

நீங்கள் செய்ய வேண்டியவை:



1. மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள்.

*

2, இருந்த போதிலும், அவர்களுடன் நேரடியாகவோ அல்லது அவர்கள் மிகவும் விரும்புகின்ற நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலமாகவோ பேசுவது நன்மைகளை ஏற்படுத்தும்.

*

3, இவ்வாறு பேசுவதன் மூலமாக அவர்களுக்கு மனஅழுத்தத்தை உண்டாக்கியது எது என்பதை அறிவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

*

அவர்களுடன் உரையாடலில் ஈடுபடும் நேரத்தில் சில விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.
*
அவையாவன;

1. அவர்கள் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்க வேண்டும். இது சொல்வதற்கு மிகவும் எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம்.


2. அவர்கள் மனத்தில் இருப்பதைப் பேசிக்கொண்டு இருக்கும் போது நடுவே குறுக்கிடுவது, எனக்கு அப்பவே தெரியும் என்பது, அது தான் நீ எப்போதும் செய்யும் தப்பு என்பது, சரியான முட்டாள் நீ என்று அதட்டுவது போன்ற வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.


3. அவர்கள் நினைப்பதை அவர்களது சொந்த வார்த்தைகளின் மூலமாகவே வெளிப்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அவர்கள் சொல்லி முடிக்கும் வரையில் பொறுமையாக காத்திருக்க வேண்டும். அவர்கள் பேசுவதைக் கொண்டு எப்படியெல்லாம் கற்பனை செய்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


4. குழந்தைகள் சொல்லும் விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள அவ்வப்போது சிறு கேள்விகள் கேட்கலாம். ஆனால் அது அவர்கள் பேசுவதை தடுப்பதாகவோ, எண்ணத்தை திசை திருப்புவதாகவோ இருக்கக் கூடாது.


5. ஆதரவு வார்த்தைகள், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.


6. நான் உன்னை ஒரு வாரமாகக் கவனித்து வருகிறேன். நீ மிகவும் கவலையோடு இருக்கிறாய் என்று சொல்லவேண்டும். இவ்வாறு சொல்வதன் மூலமாக பெற்றோர் தன்னை கவனித்து வருகிறார்கள், தனது நலனில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். இந்த எண்ணம் அவர்கள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும் உதவும்.


- இவ்வாறு அவர்களுடன் கலந்துரையாடி மனஅழுத்தத்திற்கான காரணத்தை அறிந்து கொண்ட பிறகு நீங்கள் அதை போக்குவதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை.


***

மன அழுத்தம் போக்கும் வழிமுறைகள்:




1. மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் செயல்படுவதை அவர்களுக்கு முதலில் உணர்த்துங்கள்.


2. இதன் மூலமாக அவர்களுடைய சரியான ஓத்துழைப்பை நீங்கள் பெறமுடியும்.


3. குழந்தைகள் அடிக்கடி தங்களை குறைகூறிக் கொண்டால், அவ்வாறு நினைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.


4. தேவைப்பட்ட மாறுதல்களை உண்டாக்குங்கள். உதாரணமாக தொல்லை கொடுக்கும் நண்பர்களை மாற்றுவது. வகுப்பறையில் வம்பு செய்யும் மாணவனை விலக்க, உங்கள் மகனை வேறு இடம் மாற்றி உட்கார வைப்பது. புதிய நண்பர்களை அறிமுகம் செய்து வைப்பது, புதிய இடங்களுக்கு அழைத்துச் செல்வது, புதிய விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது, வளர்ப்புப் பிராணிகளைப் பரிசளிப்பது போன்றவை.


5. தங்களுக்குத் தேவையான பாதுகாப்பும், உதவியும் கிடைப்பதை உணர்ந்ததும் குழந்தைகள் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள்.


6. பெற்றோரின் மரணம், விவாகரத்து, எதிர்பாராத அதிர்ச்சி போன்றவைகளினால் மனஅழுத்த நோய்க்கு ஆளான குழந்தைகள் நீண்ட கால சிகிச்சைக்குப் பிறகே நோயிலிருந்து விடுபடுவார்கள்.


7. குழந்தைகளுக்கு எந்த உணர்வு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது, எந்த உணர்வு மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது என்பதைத் தெளிவாகக் கற்றுக் கொடுங்கள்.


8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். பெண் குழந்தைகள் அழுவதன் மூலமாக தங்கள் மனதை லேசாக்கிக் கொள்வார்கள். ஆண் குழந்தைகளுக்கு இதை நாம் சொல்லித் தருவது அவசியம்.


9. தோல்விகளும், துயரங்களும் எல்லோருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே இது ஏதோ விபரீதமானதோ, அல்லது நடக்கக் கூடாததோ அல்ல என்பதை குழந்தைகளுக்குப் புரியும் படியாக எடுத்துச் சொல்லுங்கள்.


10. அவர்களுக்கு மனமகிழ்ச்சி அளிக்கின்ற செயல்களை செய்வதற்கு அனுமதி அளியுங்கள். அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுங்கள்.


11. மனஅழுத்தத்திற்கு ஆளான குழந்தை மற்ற பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா செல்ல விரும்பினால் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி அதைத் தடுக்காதீர்கள். இந்த மாறுதல் அந்த குழந்தைக்கு மிகவும் அவசியமான சிகிச்சை போன்றது என்பதை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.


12. குழந்தைகளுக்குப் பிடித்த விஷயங்களை அவர்கள் செய்யும் போது, சரியாகச் செய்கிறார்களா என்பதை கவனியுங்கள். சரியான முறையில் செய்யும் போது தவறாமல் பாராட்டுங்கள்.


13. தேவைப்பட்ட போது மருத்துவரிடம் அழைத்துச் சென்று இரத்தம், சிறுநீர், ஆகியவற்றை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.


14. குழந்தைகள் நன்றாக உண்ணும் படியாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளை கொடுத்து வயிறார சாப்பிடச் செய்யுங்கள்.


15. சில சாதாரண உடற்பயிற்சிகளை வேகமாக நடப்பது, ஓடுவது, போன்றவற்றை செய்யச் சொல்லி குழந்தையின் மனஉளைச்சலைக் குறையுங்கள்.


16. மேற்கண்ட முறைகளை கடைப்பிடித்த பிறகும், மன அழுத்தத்திற்கான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ அல்லது குழந்தையின் மனஅழுத்தம் குறையவில்லை என்றாலோ குழந்தை மனநல மருத்துவரின் உதவியை தயக்கம் இல்லாமலும், காலதாமதம் செய்யாமலும் நாடுங்கள்.


17. மற்றவர்கள் குழந்தையைக் கேலி செய்வார்களோ அல்லது பைத்தியம் என்று முத்திரை குத்தி விடுவார்களோ என்று பயந்து கொண்டு, விஷயத்தை வெளியே தெரியாமல் மூடி வைக்காதீர்கள்.


18. மருத்துவ உதவியை சரியான நேரத்தில் சரியான மருத்துவரிடம் செய்யாமல் போனால் மற்றவர்களை வேண்டுமானால் நீங்கள் திருப்திப் படுத்தலாம், ஆனால் உங்கள் செல்லக் குழந்தையின் எதிர்காலம் பாழாகி விடக்கூடும். எனவே இதை மனதில் கொண்டு உறுதியோடு செயல்படுங்கள்.


19. குழந்தையின் உடல்நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மற்றவர்களின் வீண்பேச்சை அலட்சியம் செய்வதே, குழந்தையின் மனநலம் சீர்படுவதற்கு விரைவாக உதவி செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


20. உண்மையில் உங்களது நண்பர்களும், உங்கள் குழந்தை மீது அக்கறை கொண்டவர்களும் நீங்கள் மருத்துவரின் உதவியை நாடுவதை ஆதரிப்பார்கள். நீங்கள் செய்வது சரியானது தான் என்று பாராட்டுவார்கள்.


***
by -- வேணு சீனிவாசன்.
நன்றி முத்துக்கமலம்.

***


"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்கு கட்டாயம் தேவையான 10 சூப்பர் உணவுகள்

காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.


*

1.வெள்ளைப் பூண்டு:


தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.

***

2.வெங்காயம்:



1. வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது.
2. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது.
3. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
4. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன.
5. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.

***

3.காரட்:


நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.


***

4.ஆரஞ்சு :


1. வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி.
2. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன.
3. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.

***

5.பருப்பு வகைகள் :


பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.


***

6.கோதுமை ரொட்டி :


1. நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
2. தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது.
3. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

***

7.இறால் மீன் மற்றும் நண்டு :



அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

***

8.தேநீர் :


தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.


***


9.பாலாடைக்கட்டி :


சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

***

10.முட்டைக்கோஸ் :


1. குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது.
௨, உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன.
3. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.


*

மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.


***

நன்றி இதயபூமி.

***

"வாழ்க வளமுடன்"

கருத்தரிப்பதில் சிக்கலா...?

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.




முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்.... தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...


*


பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.

*


இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate.

*

ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

*


இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம்.

*

மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.

*


இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள்.

*

இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

*


மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

*

இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

*


அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள்.

*

அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.

*


இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை.

*

மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

*


சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.

*


பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.

*


Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.


***
நன்றி - குமுதம் சினேகிதி
***

"வாழ்க வளமுடன்"

இடுப்பைப் பாருங்க... சர்க்கரை நோய் வராது!

ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே...




1. உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

*

2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி'தான்.


*

3. வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியைப் பாதிக்கிறது.


*

4. நீங்கள் உணவுண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுப்பதற்காக கணையம் `இன்சுலினை' சுரக்க வேண்டும்.

இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிர்ப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது.


*

5. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்' என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


*

6. அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

*

7. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்' கொழுப்பு அபாயமë அதிகம்.


*

8. அடிவயிற்றுப் பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்' கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டியுள்ள `சப்குட்டேனியஸ்' கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும்.


*

9. `விசரால்' கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது. பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி.


*

10. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள்.


*

11. `விசரால்' கொழுப்பிலிருந்து நீங்க, நீங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை' எடுத்துக்கொள்ளலாம்.


*

12. தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்துப் பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம்.


*

13. இதயப் பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள்.


*

14. நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும்.


*

15. தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் மூலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.


***

நன்றி மாலைமலர்.

***

"வாழ்க வளமுடன்"

பிரசவத்துக்குப் பின்னர்...

குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நிச்சயம் அதை குறைக்க முடியும்?




அது போல் முதுகு மற்றும் கால் வலி, வயிறு விரிதல் என்று பல பிரச்சனைகளும் ஏற்படும்.

*


குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து அது வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள் மற்றும் இடுப்பு எலும்புகள் விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்?

*

இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வருவது இயல்பு தான். அதை தடுக்க முடியாது.


***

குறைக்க சில வழிகள்:


1. அதற்கு குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்கவும்.

*

2. சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி குளிக்கவும். (மருத்துவரின் ஆலோசனையின் படி இதை செய்ய வேண்டும்.)




3. இதோடு குழந்தை பிறந்த பின்பும் அப்படியே மூன்று மாதம் தொடர்ந்து செய்யுங்கள்.

*

4. தண்ணீர் ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக இருப்பது நல்லது.

*

5. தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும்.

*

6. இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும். இதன் மூலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும்.


*

7. தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும்.

***

நன்றி மாலை மலர்.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "