...

"வாழ்க வளமுடன்"

10 நவம்பர், 2010

ரோஜாவின் மருத்துவக் குணம்!

ரோஜா (Rose) பூ,ரோசா மரபின் ரோசசி குடும்பத்தை சேர்ந்த ஆண்டு முழுவதும் விளையக்கூடிய புதர் அல்லது படர்கொடி வகையை சேர்ந்தது. இதில் நூறு வகைகளும் பலவித வண்ணங்களும் உண்டு.
இந்த தாவரம் மேலே ஏறுகிற அல்லது இறங்குகிற செங்குத்தான புதர்காடாக அமைந்து இதன் தண்டு பகுதி பெரும்பாலும் கூரிய முட்கள் கொண்டதாக இருக்கும். ரோஜாவில் முட்கள் உண்டு என்பது ஒரு பொதுவாக நிலவுகிற பிழையான கருத்தாகும். முட்கள் என்பவை திருத்தி அமைக்கப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள், ஆனால் ரோஜாவில் காணப்படும் இந்தக் கூரிய நீண்ட அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்ட மேல் தோல் போன்ற திசுக்களாகும் (கூர்முனைகள்).

*

இந்த தாவர வகையில் பெரும்பாலானவை ஆசிய கண்டத்தை சேர்ந்தவை. சில வகைகள் ஐரோப்பா, வட அமெரிக்கா, வடமேற்கு ஆபிரிக்காவை சேர்ந்தவை. பூர்விக வகைகள், பயிரிடு வகைகள் மற்றும் கலப்பின வகைகள் இவை அனைத்தும் இவற்றின் அழகு மற்றும் நறு மணத்திற்காக பரவலாக வளர்க்கப்படுகின்றன.

*

இதன் இலைகள் ஒன்று விட்டு ஒன்றாக இறகு போன்ற அமைப்புடனும் கூரிய முனைகளுடன் நீள்வட்ட வடிவத்தில் சிறுசிறு இலைக்கொத்துக்களாகவும் இருக்கும். இந்தத் தாவரத்தின் உட்கொள்ளக்கூடிய சதைப்பிடிப்பான பழம் "ரோஜாவின் இடுப்பு" என்று அழைக்கப்படுகிறது. மெலிந்த, மிகச்சிறிய ரோஜா மலர் வகையிலிருந்து 20 மீட்டர் உயரம் ஏறக்கூடிய வகை வரை ரோஜா தாவரம் வடிவத்தில் பலவகைப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்த தாவர வகைகளை எளிதாக கலப்பியலுக்கு உட்படுத்த முடிவதால், பல விதமான தோட்ட ரோஜாக்களைக் காண முடிகிறது.


*

ரோஜா என்பது கிரேக்க தேசத்தின் காலனி ஆதிக்கத்திலிருந்த தெற்கு இத்தாலியின் ஆஸ்கன் மொழியிலிருந்து பெறப்பட்ட லத்தீன வார்த்தை ரோசா விலிருந்து வருவது. ரோடான் (யலிக் வடிவம் : வ்ரோடான் ), ஆரமைக்லிருந்து வர்ரதா, அஸீரியன் இலிருந்து உர்டினு , பழங்கால ஈரானியநிலிருந்து வார்தா (மேலும் பார்க்க : ஆர்மேனியன் வர்த், அவெஸ்தான் வார்தா, சொக்டியான் வர்த் - மேலும் ஹீப்ருவின் வெரட் இவை மேற்கூறிய கிரீக்க வார்த்தைக்கும் முற்பட்டவை.

*

ரோஜாவின் இத்தர் எனப்படும் ரோஜா மலர்களிலிருந்து நீராவி முறையில் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் பல நூற்றாண்டுகளாக நறுமணப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா நீர் ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளின் சமையல் முறையில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரோஜா இதழ்களின் சாறிலிருந்து தயாரிக்கப்படும் ரோஜா பானகம் பிரெஞ்சு மக்களிடையே பிரசித்தம். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், ரோஜா ஸ்கோன் எனப்படும் கேக் தயாரிக்க இந்த பிரென்ச் ரோஜா பானகம் பயன்படுத்தப்படுகிறது.


*

ரோஜாவின் இடுப்பு அரிதாக பழக்கூழ், பழக்கூழ்பாகு, பழப்பாகாக மாற்றப்படுகிறது அல்லது முதன்மையாக அதில் அதிக அளவில் அடங்கியிருக்கும் விட்டமின் சிக்காக தேநீர் தயாரிக்கக் காய்ச்சப்படுகிறது. அவை பிழியப்பட்டு வடிகட்டப்பட்டு ரோஜா இடுப்பு பானகம் தயாரிக்கப்படுகிறது. ரோஜாவின் இடுப்புகள், சருமப் பொருட்கள் மற்றும் சில அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரோஜா இடுப்பு விதை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.

***

ரோஜாவின் மருத்துவக் குணம்:

பிறந்தகம் அந்நிய பூமியாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

*

இதனை சம எடையாக சீனக் கற்கண்டுடன் தேன் சேர்த்து அன்றாடச் சூரிய வெயிலில் வைத்து எடுத்துக் கொண்டு காலை,மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். இதனால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு உல்லாசத்தையும் சிறப்பாகத்தந்து மகிழ்விக்கும்.

*

குழந்தைகளின் சீதபேதிக்கு இதனிடம் இருக்கும் துவர்ப்புச்சத்து மருந்தாகி குணமாக்குகிறது. அஜீரணமா? வயிற்று வலியா? வேக்காளமா? அனைத்தும் இதனைத் தொகையலாக்கி உண்டாலே பறந்தோடும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

*

மலம் இறுகிய குழந்தைகட்கு இது சிறிது மலமிளக்கியாகவும் வேலை செய்கிறது.

*

அன்பிற்குரியோருக்கு தந்தது ஆரத் தழுவ வைக்கும் இந்த ரோஜாவிலிருந்துதான் பன்னீர் தயாரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மணக்க வைக்கிறது. பூவையர்க்கு ஏற்படும் கருப்பை தொடர்பான வியாதிகளுக்கு நன்கு வேலை செய்து அவர்களைப் புன்னகை பூக்க வைகப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது ரோஜா.


***
by- சிவா
நன்றி சித்த மருத்தவம்
நன்றி விக்கிபீடியா
***
"வாழ்க வளமுடன்"

மீன் சாப்பிட்டால் எந்த கவலையும் வேணாம்!

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது.
ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லிவிட்டனர்.

*

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்த ஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்கு அவர்கள் அறியாமலேயே, "ஒமேகா 3' கிடைக்கிறது.


அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

***

எந்த நோய் வராது?

1. ஆஸ்துமா:

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

*

2. கண் பாதிப்பு:

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

*

3. கேன்சர்:

பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

*

4. இருதய நோய்:

கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

***


எப்படி சாப்பிடணும்?


1. மீன் உணவை, எந்த வகையில் சாப்பிட்டாலும், அதன் சத்துக்கள் போகாது. ரொட்டி போல சுட்டு தயாரிக்கும் போது நன்றாக சமைக்க வேண்டும். எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில் மூலம் தயாரித்தால் நல்லது.

*

2. வாணலியில், சிறிய அளவு வெண்ணெய் போட்டும் பொரித்து சமைக்கலாம். "ஓவன்' சாதனத்தில் வைத்தும் சமைக்கலாம்.

*

3. உறைய வைக்கப்பட்ட மீனாக இருந்தால் அதற்கேற்ப, நேரம் விட்டு சமைக்க வேண்டும். சில வகை மீன்களில் பாதரசம் அதிகம். அதனால், அவற்றை சமைக்கும் போது, மிகுந்த கவனம் தேவை.

*

4. பாதரசம் அதிகமுள்ள மீன் வகையாக இருந்தால், கருத்தரிக்க இருக்கும் பெண்களும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் தவிர்த்துவிட வேண்டும்.

*

5. மோசமாக உள்ள குளங்கள், குட்டைகளில் பிடித்த மீன்களை சமைத்துச் சாப்பிடக் கூடாது. அதனால், வேறு பாதிப்புகள் வரலாம்.


***
நன்றி தினமலர்
December 2007
***


"வாழ்க வளமுடன்"

உணவகம் செல்லும் போது கவனிக்க வேண்டிய 10 விடயங்கள்

உறவுகளின் நெருக்கம் அதிகரிக்க அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ணும் வாய்ப்பு நகர்ப்புற வாசிகளுக்கு வாய்ப்பதில்லை. அவசரகதியில் இயங்கும் வாழ்க்கை விடியலில் புறப்பட்டு, நள்ளிரவுக்கு சில மணி நேரம் மட்டுமே இருக்கும் போது வீடு வந்து சேரும் மனிதர்களையே தயாரித்திருக்கிறது.விலைவாசியின் உயர்வும், தாரளமயமாக்கலால் அதிகரித்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளும் இன்றைக்கு மனிதனின் உழைக்கும் நேரத்தை அதிகப்படுத்தியிருப்பதுடன், கணவன் மனைவி இருவரும் உழைத்தால் மட்டுமே ‘சமாளிக்க’ முடியும் எனுமளவுக்கு சூழலை இறுக்கப்படுத்தியும் இருக்கிறது.

*

குடும்பத்தினருடன் செலவிடக் கிடைக்கும் ஒரு சில மணி நேரங்களைக் கூட ஊடகங்களின் மலினமான நிகழ்ச்சிகள் வலுக்கட்டாயமாய் பிடுங்கிக் கொள்வதால் குடும்பத்தினருடனான அன்னியோன்னியம் அகன்று கொண்டே வருகிறது.

*

இந்த வெற்றிடத்தை சிறிதளவேனும் நிரப்ப வேண்டும் எனும் ஆவலில் வார இறுதிகளிலோ, மாதம் ஒருமுறையோ ஏதேனும் ஒரு உணவகத்தில் சென்று உணவருந்தும் பழக்கம் இன்று நகர்ப்புற வாசிகளிடையே வெகுவாகப் பரவி வருகிறது.

*

வீடுகளில் பார்த்துப் பார்த்து சமைத்து, ஆரோக்கியமானதை மட்டுமே உண்டு வரும் பலரும் உணவகங்களுக்குச் சென்றால் ஒரு பிடி பிடித்து உபாதைகளை உபரியாகப் பெற்று வந்து விடுகின்றனர்.

*

உணவகங்களுக்குச் செல்லும் போது கீழ்க்கண்ட பத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டால், உறவு பலப்படுவதுடன் ஆரோக்கியமும் சிதையாமல் காத்துக் கொள்ள முடியும்.

*

1. பரபரப்பான உணவகம் எனில் முன் கூட்டியே முன் பதிவு செய்து கொள்ளுங்கள். நேரம், நபர்களின் எண்ணிக்கையை தெளிவாய் சொல்லுங்கள். முன்பதிவு செய்யும்போதே ஏதேனும் கூப்பன் உள்ளதா போன்ற செய்திகளையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்துவிட்டால் தாமதம் ஏற்படுத்தாமல் குறித்த நேரத்தில் கண்டிப்பாக செல்லுங்கள். ஒருவேளை முன்பதிவு இல்லாமல் இருந்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒரு மெனு அட்டையை வாங்கி என்ன உண்ணலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

*

2. உணவுக்கு முன் சூப், ஸ்டார்டர் சாப்பிடும் போது அதிக அடர்த்தியான சூப் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக அடர்த்தியான சூப் பொதுவாக அதிக கொழுப்பு உடையதாக இருக்கும். ஸ்டார்டர் உண்ணும் போது பொரித்த வகையறாக்களை விடுத்து அவித்த பொருட்களைத் தேர்வு செய்து உண்ண வேண்டும். உதாரணமாக நன்றாக பொரித்த கோழியை விட தந்தூரி வகையறாக்கள் நல்லது.

*

3. ஏதேனும் ஒரு சாலட் தருவியுங்கள். அதிக கிரீம்கள் பூசப்படாத, ஒரு சாலட் உண்பது பின்பு உண்ணப்போகும் உணவின் அளவை ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்தும்.

*

4. பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை அறவே தவிருங்கள். அவை உடலுக்கு எந்த விதத்திலும் நன்மை செய்வதில்லை. தண்ணீர் தவிர்த்து ஏதேனும் பானம் அருந்த வேண்டுமென்று விரும்பினால் எலுமிச்சை சாறு குடிக்கலாம், அல்லது ஒரு தேனீர் அருந்தலாம்.

*

5. உணவு குறித்தோ, அதன் தயாரிப்புப் பொருட்கள், தயாரிக்கும் விதம் குறித்தோ ஏதேனும் தெரியவேண்டுமெனில் தயங்காமல் கேளுங்கள். முழு திருப்தி தராத உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை உண்டெனில் அதற்குத் தக்க உணவுகளை கவனமாய் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

*

6. அசைவப் பிரியர்கள் லிவர், சிறுநீரகம் போன்றவற்றை உண்பதை அளவுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். தோலில் அதிக கொழுப்பு இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். வறுத்த ‘கொழுப்பு’ போன்றவற்றின் பக்கம் சாயவே சாயாதீர்கள். முட்டை உண்ணும்போது அவித்த முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உண்ண முடிந்தால் அற்புதம்!உங்களுக்குப் பிடித்தமான உணவு வகைகள் அதிகக் கொழுப்புள்ளவையாக இருந்தால் அதை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. உண்ணும் அளவையேனும் குறைத்துக் கொள்ளுங்கள்.

*

7. பீட்ஸா சாப்பிடக் கிளம்புகிறீர்கள் எனில் ‘மெல்லிய’ (திந்cருச்ட்) பீட்சாவை தேர்ந்தெடுங்கள். கூடவே அசைவப் பீட்சாவையும், அதிக சீஸ் (பாலாடை) உள்ள பீட்சாவையும் தவிர்க்க வேண்டுமென்று முடிவெடுங்கள். வாங்கிய எல்லாவற்றையும் தின்று முடிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. போதும் எனுமளவுக்கு உண்ணுங்கள், மிச்சத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள்.

*

8. உண்டு முடித்தபின் ஐஸ்கிரீமை ஒரு கட்டு கட்டுவது எல்லாவற்றுக்கும் பிரச்சனையாய் முடியும். எனவே கடையில் உண்ண பழங்களையே தேர்ந்தெடுங்கள். ஐஸ்கிரீமை தவிர்க்கவே முடியாது என உங்கள் மனம் உங்களை நச்சரித்தால் பழங்களுடன் கலந்து சிறிதளவு உண்ணுங்கள்

*

9. உங்களுக்கு உணவு பரிமாறுபவர் மீது உங்கள் எரிச்சல்களைக் காட்டாதீர்கள். அன்புடன் பேசுங்கள். நன்றாக உங்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கு தயங்காமல் நிறைய டிப்ஸ் கொடுங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 முதல் 25 விழுக்காடு வரை டிப்ஸ் வைப்பது மேஜை நாகரீகமாகக் கருதப்படுகிறது.

*

10. அவசரப்பட்டு உண்ணாதீர்கள். கைப்பேசிகளை அணைத்து வையுங்கள். மெதுவாக, சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே உண்ணுங்கள். நன்றாக மெல்லவேண்டும் என்பதை நினைத்துக் கொண்டே உண்ணத் துவங்குங்கள். உணவு அருந்த அதிக நேரம் செலவிடுவது உங்கள் ஆரோக்கியம் பலப்படவும், உறவு பலப்படவும் பேருதவியாய் இருக்கும்.


*

அடிக்கடி அனைவரும் கூடி ஒன்றாய் நேரத்தைச் செலவிடும் நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகில் உறவுகள் தரும் மன நிறைவையும் அர்த்தத்தையும் வேறேதும் தந்துவிடாது என்பதை மனதில் ஆழப் பதியுங்கள்


***
thanks xavi

***


"வாழ்க வளமுடன்"

பெற்றோரிடம் இருந்து குழந்தைக்கு தாவும் மனஅழுத்தம்

மனஅழுத்தம் ஒரு தொற்றுநோய். வாழ்க்கையின் சூழல் பலருக்கும் மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மூலம் பரவுகிறது என்கிறது புதிய ஆய்வு.பின்லாந்து கல்வி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 500 பேரை பரிசோதித்தது. அதில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தொற்றுவது தெரியவந்துள்ளது.

*

குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்களின் அனுபவமே அவர்களின் குழந்தைக்கு மன அழுத்தம் தொற்ற அடிப்படையாக உள்ளது. ஒருவர் தனது அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் ஊழியர்களுடன் மனக்கசப்பான அனுபவங்களைப் பெறலாம்.

*

அதனால் ஏற்படும் மனச்சோர்வுடன் அவர் வீட்டை அடைகிறார். அந்தச் சோர்வு குறையும் முன்பே வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்ய ஆத்திரம் தலைக்கேறி கோபத்தைவெளிப்படுத்துகிறார்கள் பெற்றோர்கள். இதனால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது.

*

அது அத்துடன் நிற்காமல் மறுநாள் பள்ளியிலும்எதிரொலிக்கிறது. வீட்டுப்பாடம் முடிக்காவிட்டால் அல்லது தவறு செய்திருந்தால் ஆசிரியர்களிடம் அவமானப்பட வேண்டி இருக்கிறது.

*

அதே மனநிலையுடன் செயல்படுவதால் நண்பர்களுடனும் சரியாக ஒத்துழைக்க முடிவதில்லை. நாளடைவில் இது மனஅழுத்த வியாதியாக பரிணமித்துவிடுகிறது.

*

பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.

*

சண்டை கூட வேண்டாம், ஏதோ வெறுப்பில் பேசினால்கூட குழந்தைகளை மனஅழுத்தம் தொற்றிக் கொள்கிறது என்பது பெற்றோர்கள் அறிய வேண்டிய செய்தி.


***
நன்றி - தினத்தந்தி.
***"வாழ்க வளமுடன்"

ஆறுவகை 'ஹார்ட் அட்டாக்!' 2010ன் புதிய கண்டுபடிப்புகள்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.
உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

*

கோல்டன் ஹவர்


முதல் 2 மணி நேரம் "கோல் டன் ஹவர்' என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும்.

*

இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும்.

*

அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

***

ஆறு வகை மாரடைப்பு

மாரடைப்புகள் மொத்தம் ஆறு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது; இவற்றில், ஐந்து, ஆறாவது வகை மாரடைப்புகளுக்கு காரணம், ஸ்டென்ட்டையும், பைபாஸ் கிரங்குகளையும் சரியாக பாதுகாக்காததால் தான்.

*

பெரும்பாலான சர்ஜன்களும், மருத்துவர்களும் வேறு மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுவோர் தான்; இவர்களுக்கு மொழி சரியாக தெரியாது, நோயாளிகளிடம் பேசும் நேரம் குறைவு, நிறைய நோயாளிகளை ஸ்டென்ட், பைபாஸ் செய்து நிறைய எண்ணிக்கையைக் கட்டி பெரும் பணம் பார்க்கும் நோக்கமாகிவிட்டது.

*

அமெரிக்கா, ஐரோப்பியா போன்ற நாடுகளை போல மருத்துவர், நோயாளி இவர்களின் ஆலோசனை பல மணி நேரம் ஆகிறது. இதனால், நோயாளிகள் எது எப்போது, என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்கின்றனர்.


***

முதல் வகை மாரடைப்பு


முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்டக்கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது; இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது.

*

இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர்; இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும்.

*
மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.


***

இரண்டாவது வகை

இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது; இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும்.

*

ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும்; ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.


***

மூன்றாவது வகை


நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.


***

நான்காவது வகை

மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும் இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம். கேத்லேப்பில் நல்ல உயிர்காக்கும் வசதிகளும் உள்ளன.


***

ஐந்தாவது வகை

ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும்.

*

அதாவது ஸ்டென்ட் வைத்த டாக்டர் அல்லது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகவும் தெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை. அதில், கொழுப்பு படிந்துள்ளது என்ற விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

*


ஸ்டென்ட் மூடி மாரடைப்பு வராமல் தடுக்க நிபுணரின் கண்காணிப்பில் பரிசோதனைகள் செய்து காத்துக் கொள்ள வேண்டும்.

*

ஸ்டென்ட் சிகிச்சை செய்து, இருபது ஆண்டுகள் என்னிடம் மருத்துவம் பார்த்து நலமாக உள்ளவரும் உண்டு. இரண்டு ஆண்டுகளில் ஸ்டென்ட் மூடி மாரடைப்புடன் வந்தவரும் உண்டு. முதலாமவர் நல்ல வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்; இரண்டாமவர், தான் தோன்றிய முறையில் வாழ்பவர்; ஸ்டென்ட் முழுவதும் மூடினால்

*

மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.


****

ஆறாவது வகை


மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது.

*

இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும்.

*

இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.


***


என்ன செய்யணும்?


ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

*

தனி மனித ஒழுக்கம், மது மங்கை, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்கநெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

***

"பளீச்' அறிகுறிகள்


1. மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும்; அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.


2. வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.


3. திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும்; திணறலும் இருக்கும். புழுக்கம் தெரியும்.


4. உடலில் வியர்வை பெருக்கெடுக்கும்; அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.


***


தவிர்க்கலாம் நிச்சயம்


என்ன தான் அறிகுறிகள் இருந்தாலும், அதை நோயாளியால் தான் கண்டுபிடிக்க முடியும். சில சமயம் இந்த அறிகுறிகள் இல்லாமல் கூட பிரச்னை வரலாம்.


அதை தவிர்க்க முடியும்... அதற்கு...


1. சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.

*

2. உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.

*

3. சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

*

4. கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.


*

5. டென்ஷன் "நோ' டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போயேபோச்சு தான்.

*

6. தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சியும் மிகவும் நல்லது; கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.***

நன்றி தினமலர்!
February 2010

***

"வாழ்க வளமுடன்"

உங்கள் குழந்தை புத்திசாலியாகப் பிறக்க வேண்டுமா?

இதுபுத்திசாலிகளுக்கான காலம்! பிறக்கிற குழந்தை புத்திசாலியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெற்றோர்களின் கனவு!கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தாய் உணவு எடுத்துக்கொள்வது சரி; ஆனால், அது எந்த அளவுக்குக் குழந்தையின் புத்திசாலித்தனத்தைத் தீர்மானிக்கும்?

*

‘‘கரு உருவான 20&வது நாளில் வளர ஆரம்பிக்கும் மூளை, 28 &வது நாளுக்குள்ளேயே அந்தக் குழந்தை அதன் வாழ்நாள் முழு வதும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடித்தள வேலைகள் மொத்தத்தையும் முடித்துவிடுகிறது.

*

இதனால், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே பெண் ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்வது அவசியம் என்று இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். கொஞ்சம் மெனக்கெட்டால் குழந்தை எப்படிப் பிறக்க வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கலாம்’’ என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.

*

‘‘குழந்தை புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது, முதல் ஒரு மாத காலத்தில் கிடைக்கிற ஆரோக்கியத்தைப் பொறுத்துதான் அமைகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற நீரிழிவு நோய், தைராய்டு சுரப்பியில் உண்டாகிற ஏற்ற இறக்கம், சரியான ஊட்டச்சத்து இல்லாமை... இவை எல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தடை செய்யக்கூடியவை.

*

ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15&வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய 15&வது வயதில் மீண்டும் அதே தடுப்பு ஊசி போட வேண்டும்.

*

இது அந்தக் குழந்தையின் உடலில் ருபெல்லாவை எதிர்ப்பதற்கான சக்தியைக் கொடுக்கும். பின்னாளில் அவள் பெரியவளாகி கர்ப்பம் தரிக்கும்போது, அந்தக் கருவின் மூளை வளர்ச்சி நல்லபடியாக இருப்பதற்குத்தான் இத்தனை முன்னேற்பாடு!

*

இந்தியாவில் இன்னும் இந்த ருபெல்லா தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்படவில்லை. இப்படிப் பெண் குழந்தைகளுக்காக ஒரு ஸ்பெஷல் தடுப்பூசி இருப்பதே நம்மில் பலருக்குத் தெரியாது.

*

ருபெல்லா வைரஸால் பாதிக்கப்படுகிற குழந்தையின் தலை சின்னதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். கண் பார்வை குறையலாம். மூளை நரம்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்புச் செயல்பாடு குறைவாக இருக்கும்.

*

இருபது நாள் கருவில் வளர ஆரம்பிக்கும் மூளை, ஏழு வயது ஆகும்போது கிட்டத்தட்ட 95 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. குழந்தை பிறந்ததும் தாய்ப் பால் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துவதற்குக் காரணம், அதில் இருக்கும் புரதம் உள்ளிட்ட சத்துக்கள், மூளை வேகமாக இயங்கத் தூண்டுதலாக இருக்கும் என்ப தால்தான்.

*

இசையைக் கேட்டுக்கொண்டே இருக்கும் தாய்க்கு பிறக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருப்பதோடு, மூளையின் கிரகிக்கும் திறனும் அதிகமாக இருக்கும் என்று ஹங்கேரியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் கீதா ஹரிப்ரியா.

*

பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால், ஆணோ, பெண்ணோ... அந்தக் குழந்தை புத்திசாலியாகப் பிறப்பதற்கான சூழலை நம்மால் நிச்சயம் உருவாக்க முடியும்!


***
by டாக்டர் கீதா ஹரிப்ரியா.
நன்றி விகடன்
***


"வாழ்க வளமுடன்"

பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உன்மைகளும்

பால் குடிங்க ஆனால் அதை பற்றி சில விஷயம் தெரிந்து குடிங்க !பாலில், புரதச்சத்து, கால்சியம், மாக்னீசியம் மற்றும் வைட்டமின் பி உட்பட பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த பாலில், யூரியா, தரம் குறைந்த கொழுப்பு, சோப்புகள், ஸ்டார்ச், பேக்கிங் சோடா போன்ற சிலவற்றை கலப்படம் செய்வதால், இது, பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

*

அதுமட்டுமல்லாமல், கலப்படமற்ற பாலை பற்றியும் மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.

*

அவை பற்றி சில உண்மைகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.


*

கட்டுக்கதை: காய்ச்சிய பாலை விட, காய்ச்சாத பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

*

உண்மை:

பாலை காய்ச்சும் போது, அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எதுவும் குறைவதில்லை. பாலில் காணப்படும் சில நுண்ணுயிர்களை கொல்வதற்காக, 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது.

எனவே, காய்ச்சிய பாலை குடிப்பதால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவை மிகவும் பாதுகாப்பானது.

***

கட்டுக்கதை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதில் காணப்படும் கொழுப்புத் தன்மை குறைக்கப்படுகிறது.


உண்மை:

பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நீர்க்கின்றன. இதனால், ஊட்டச்சத்து அடர்த்தியும் குறைகிறது.

***

கட்டுக்கதை: கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஊட்டச்சத்து இல்லை.


உண்மை:

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த கலோரிகளுடன், சிறப்பு ஊட்டச்சத்துகள் நிறைந்த தாக உள்ளது.


***


கட்டுக்கதை: பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் பொருட்கள் தீங்கு விளைவிக்கும்.


உண்மை:

பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால், வெண்ணெய், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

***

கட்டுக்கதை: பிற பொருட்களிலும், கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பால் பொருட்களை கைவிடலாமா?


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதை தவிர, புரதச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய முக்கிய சத்துக்களும் காணப்படுகின்றன.


தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கீரைகளில் காணப்படும் கால்சியம் சத்தை விட பாலில் இருக்கும் கால்சியம் சத்து சிறப்பாக கிரகிக்கப்படுகிறது.கட்டுக்கதை: பால் ஒரு முழுமையான உணவு.

உண்மை:

பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி,டி,இ மற்றும் கே ஆகிய சத்துக்கள் பற்றாக்குறை நிலவுவதால், பாலை முழுமையான உணவாக கூற முடியாது.


***

கட்டுக்கதை: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பாலை விட, பசும்பால் சிறந்தது.


உண்மை:

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலே சிறந்தது. ஏனென்றால், பசும்பாலில் காணப்படும் கொழுப்பு சத்து, சரியாக ஜீரணம் ஆகாது.


மேலும், பசும்பாலில், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் சில முக்கிய கொழுப்புச் சத்துகள் பற்றாக்குறை உள்ளது.

***

கட்டுக்கதை: பால் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவை. பெரியவர்களானதும் தேவையில்லை.


உண்மை:

வாழ்நாள் முழுவதும், கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய பால் உதவுகிறது. எனவே, குழந்தைகள் மட்டுமல்லாது, அனைத்து பருவத்தினரும் பால் குடிப்பது நல்லது.


பால், குடிப்பதால், வயது காரணமாக ஏற்படும் பிரச்னைகளான எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு போன்றவை தவிர்க்கப்படுகிறது.

***

கட்டுக்கதை: பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் காணப்படும் சில புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றுக்கு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் தன்மை உண்டு.


***

கட்டுக்கதை: பால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து காணப்படுகிறது. இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.


எனவே, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு, முக்கிய உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது.***

நன்றி தினமலர்!
February 2010

***


"வாழ்க வளமுடன்"

தொப்பை கரைய அருகம்புல் ஜூஸ் குடிச்சா போதுமா?

எதைத்தின்னா பித்தம் தெளியும் நிலை கூடாது
1. "நீங்க 8 மணி நேரம் தூங்கறதே இல்லையா...அந்த "டிவி' பேட்டில சொன்னாரே கேட்கலையா, முதல்ல அதை செய்யுங்க!'

*

2. "நான் அந்த பாரின் மேகசின்லே படிச்சேன்; சூப்பரா போட்டிருக்காங்க, அதை பாலோ பண்ணா ஒபிசிட்டி வரவே வராதாம்!'

*

3. "காய்கறி, பழங்களை தான் சாப்பிடறேன்; அப்படியும் குண்டு கரைய மாட்டேங்குதே; என்னத்த செய்ய...'

*

4. "காலைல எழுந்து ஒரு மணி நேரம் நடக்கிறேன்; போதாக்குறைக்கு அருகம் புல் ஜூஸ் குடிக்கிறேன்; ஆனா தொப்பை கரைய மாட்டேங்குதே...!'இப்படி எல்லாம் பேசுவதும், புலம்புவதும் இப்போதெல்லாம் வாடிக்கை தான்.

*

5. அதற்கேற்ப, ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்களின் அதிரடி ஆய்வு முடிவுகள், நூற்றுக்கணக்கான வெப்சைட் தகவல்கள், "டிவி' பேட்டிகள் , பத்திரிகை தகவல்கள்.


***

அருகம்புல் ஜூஸ் குடிச்சா போதுமா:

நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைப் பட்டதை மட்டும் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடைபிடிக்கும் விஷயங்களை நாம் கடைபிடித்தால் எக்குத்தப்பாக தான் இருக்கும்.

*

அதுபோல, யார் சொன்னாலும், அதை அப்படியே பின்பற்றி, உணவில், பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. பாட்டி வைத்தியத்தை இப்போது பலரும் வாய்க்கு வந்தபடி சொல்லி மக்களை குழப்பியும் வருகின்றனர் என்பதும் வேதனையான விஷயம்.


***

எது முழு ஆரோக்கியம்


தினமும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதா?

அதிக காய்கறி , பழங்களை சேர்த்துக் கொள்வதா?

8 மணி நேரம் தூங்குவதா?

ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதா?

*

"ஆம், ஆனால் இல்லை' என்கிறார் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ நிபுணர் சூசன்லவ்; "எல்லாம் சரி தான்;

*

ஆனால், முழு ஆரோக்கியம் என்று ஆளாளுக்கு ஏதாவது செய்வதும், கடைபிடிப்பதும் தான் தவறாக இருக்கிறது. ஒவ்வொருவரும் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றனர்;

*

அவர்கள் உணவு, பழக்க வழக்கத்தில் தடம் மாறுவதை திருத்திக்கொண்டால் போதும்; மற்றபடி, அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை தான் வாழ்கின்றனர்.

*

அதனால், ஆபீஸ் வேலை போல, உடற்பயிற்சி செய்வதும், காய்கறி, பழங்களை நேரம் தவறாமல் சாப்பிடுவதும் மட்டும் ஆரோக்கியத்தை தராது' என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


***

ஆறில் மட்டும் உஷார்


தூக்கம், மன அழுத்தம், தவிர்ப்பு, சத்தான உணவு, உடற்பயிற்சி, நல்ல உறவு ஆகிய ஆறு மட்டும் சேர்ந்தது தான் முழு ஆரோக்கியமான வாழ்க்கை என்கிறார், அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் அலிஸ் டோமர்.

*


"இந்த ஆறு விஷயங்களை அதிகபட்சமாக கடைபிடிக்க முயற்சிக்க வேண்டாம்; குறைந்த அளவிலும் பின்பற்ற வேண்டாம்; ஆனால், கூடாமல், குறையாமல் சீரான முறையில் கடைபிடித்தாலே போதும்; ஒருவரின் வாழ்க்கை சூப்பர்' தான் என்பது இவரின் கருத்து.


****


இழுக்குதே உறக்கம்


உதாரணமாக, தூக்கத்தை எடுத்துக்கொண்டால், 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதையே அமெரிக்க நிபுணர்கள் இன்னும் ஏற்கவில்லை. "ஒருவர் 5 மணி நேரத்துக்கு குறைவாக தூங்கினாலோ, 7 மணி நேரத்துக்கு அதிகமாக தூங்கினாலோ தான் சிக்கல்;

*

ஒவ்வொருவரின் உறக்க முறையும் வித்தியாசமானது; ஆனால், போதுமான அளவுக்கு தூக்கம் இருந்தாலே போதும்; வலுக்கட்டாயமாக திணிக்கவோ, உறக்கத்தை குறைக்கவோ கூடாது' என்று சொல்கின்றனர் நிபுணர்கள்.


***

பாத்திரம் கழுவுங்க


நீங்க வீட்டை சுத்தம் செய்ய மனைவிக்கு உதவுவீர்களா? பாத்திரம் கழுவி தருவீர்களா? தோட்டத்தையாவது சுத்தம் செய்வீரா? சரி, இதை விடுங்க, கார், பைக்கையாவது விடுமுறையில் சுத்தம் செய்வீங்களா?


*

இப்படி வீட்டு வேலையில் ஒத்துழைப்பதே உடற்பயிற்சி தான். அதை விட்டு "ஜிம்'முக்கு சென்று உடல் குண்டு குறைய வேண்டும் என்று வியர்வை சிந்துவது சரியா? என்று கூட பலருக்கு தோன்றலாம்.

*

"ஆம், இதெல்லாம் கூட பயிற்சி தான்; இதனால் தான் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; நன்றாக தூக்கம் வரும்; நல்லா சாப்பிட தோன்றும். இதெல்லாம் தெரியாமல் காசு கொடுத்தால் தான் உடற்பயிற்சி என்று நினைப்பது வேடிக்கையாக உள்ளது' என்று சொல்கின்றனர்;

*

யார் தெரியுமா? கலிபோர்னியா பல்கலைக்கழக வாழ்வியல் நிபுணர் பெர்ரட் கூனர். ஹூம், அவங்களுக்கு தெரியுது; நமக்கு புரிய மாட்டேங்குதே.


***

ஆரோக்கிய வாழ்வுக்கு "டிப்ஸ்'


1. நமது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது மிக அவசியம். தண்ணீர் குடிப்பது குறித்த சில புதுமையான தகவல்கள்...

*

2. தூங்கி எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யும்.

*

3. குளித்த பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

*

4. சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தால் ஜீரணத்திற்கு நல்லது.

*

5. தூங்க செல்வதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது, நள்ளிரவில் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க உதவும்.


***
நன்றி தினமலர்!
***

"வாழ்க வளமுடன்"

நாம் தூங்கும் போதுநமக்குள் என்ன நடக்கிறது!1 .தூங்கும் போது நடப்பது என்ன

மூளை தன்னை Recharge செய்கிறது
கலங்கள் தம்மை Repair செய்கின்றன
உடல் முக்கிய Hormones ஐ சுரக்கிறது

*

2 .வயதும் தேவையான தூக்கமும்

00 -02 ------- 16 மணித்தியாலம்
03 -12 -------- 10 மணித்தியாலம்
13 -18 -------- 08 மணித்தியாலம்
19 -55 -------- 08 மணித்தியாலம்
56 -85 -------- 06 மணித்தியாலம்

*

3 .யாரை பற்றி கனவு

ஆண்களின் 70 % ஆன கனவு ஒரு ஆணை பற்றி இருக்கும்
பெண்களின் 50 % ஆன கனவு ஒரு பெண்ணை பற்றி இருக்கும்
ஏற்கனவே பார்த்த முகங்களையே கனவில் காண முடியும்

*

4 .தூக்க நோய்

Parasomnia என்பது தூக்கத்தில் உள்ள போது செயற்படல்
இதன் போது புரியப்படும் குற்றங்கள்
கொலை,கற்பழிப்பு,வாகனம் ஓட்டல்

*

5.கனவின் தன்மை

12 % ஆன கனவு கருப்பு வெள்ளை
கனவு காணாதவர்கள் மன நோய் உடையவர்கள்

*

6.கணவன் மனைவி

நான்கில் ஒரு தம்பதியினர் தனி தனி கட்டிலில் தூங்குகின்றனர்

*

7 .உச்சா போதல்

50 பேரில் இல் ஒரு டீன்ஏஜ் கட்டிலில் சிறுநீர் கழித்து விடுகிறார்

*

8.கனவை மறத்தல்

முழித்து 5 நிமிடத்தில் 50 % கனவு மறந்து விடும்
முழித்து 10 நிமிடத்தில் 90 % கனவு மறந்து விடும்

*

9 .முக்கியம்

உண்ணாமல் 2 வாரம் இருக்கலாம்
தூங்காமல் 10 நாள் இருந்தால் மரணம் தான்

*

10 .கண்பார்வை அற்றோர்

இவர்கள் கனவில் பார்க்கமுடியும்
Born Blind பார்க்க முடியாது
அனால் தொடுகை,மணம் என்பவற்றை உணர்வார்கள்

*

11 .தூங்கும் விதம் - குணம்

சரிந்து உடலை முற்றாக வளைத்து (41 %) - இளகிய திறந்த மணம்

*
சரிந்து சற்று உடலை வளைத்து (13 %) - சந்தேகபடுபவர்கள்

*

சரிந்து படுத்து முழுஉடலும் நேராக தூங்குவோர் (15 %) - சமூக பறவைகள்

*

நீட்டு நிமிந்து மல்லாக்க(8 %) - Reserved type

*

நேராக குப்புற படுத்து (7 %) - ஜாலி யான பேர்வழிகள்

*

மல்லாக்க படுத்து சற்று உடலை வளைத்து (5 %) - மறவர்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர்


***
by nis on Friday
thanks nis on
***"வாழ்க வளமுடன்"


நீச்சல் குளத்திர்ற்கு போறிங்களா ஒரு நிமிஷம் !சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நீச்சல் அடிக்க விருப்பம். பல்கலைகளகங்களிலே இணைந்த ஆரம்பத்தில் தண்ணீர் இல்லாத வெறும் தரையிலே உங்களிள் Seniors இன் வேண்டுதலால் நீச்சல் அடித்திருப்பீர்கள்.

*

பலர் நீச்சல் குளங்களில் (Swimming Pools) நீச்சல் மட்டுமல்லாது வேறு சில நல்ல விடயங்களையும் சத்தமில்லாது செய்து வருகிறார்கள்.இவற்றால் பல நோய் கிருமிகள் பரவி கால போக்கிலே பல உயிர் கொல்லி நோய்களை உண்டாக்கின்றது.

*

ஐந்து பேரில் ஒருவராவது நீச்சல் குளங்களில் சிறுநீர் (Urine) அடிக்கிறாங்க.இது ஒன்றே நோய் பரப்ப முக்கிய காரணியாகிறது.

*

20% மக்கள் பொது நீச்சல் குளங்களின் பராமரிப்பையோ,சுத்தத்தையோ கருத்தில் கொள்வதில்லை.30% மக்கள் குளிக்காமலே நீச்சல் குளங்களிற்குள் இறங்குகிறார்கள்.

*

இவையெல்லாம் தோல் சம்பந்தமான நோய்களையும்,காதுடன் தொடர்புடைய நோய்களையும் ஏற்படுத்துகின்றது.

*

நீரில் தோன்றும் பக்ரீரியாக்களால் பிறப்பு உறுப்புகளை பாதிக்க செய்வதோடு மட்டுமல்லாது மிகவும் விரைவாகவே வயது முதிர்ந்த தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

*

chlorine ஐ சேர்ப்பதற்கு முதல் புதிய நீரை மாற்றுவதற்கு நீச்சல் குளங்களை பாராமரிப்பவர்களிற்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இவர்கள் நீரை மாற்றுவதாக தெரியவில்லை.

*

சில நீச்சல் குளங்களிற்கு சூரிய ஒளி பட்டு பல வருடங்கள் ஆகியிருக்கும்.இவற்றை தான் கூடிய கவனம் எடுத்து பாராமரிக்க வேண்டி உள்ளது.

*

சிறுபிள்ளைகளுடன் நீச்சல் குளங்களிற்கு செல்வதாயின் நீச்சல் குளங்களின் தரத்தை அறிந்த பின் செல்வதே நல்லது.

*

சிலவற்றில் இருந்து 10 அடி தூரத்தில் நின்றாலே ஒருவிதமான மணமும்,நீர் தெளிவற்ற நிலையிலும் இருந்தால் தவிர்து கொள்வதே நல்லது.


***
by nis on Tuesday
thanks nis on Tuesday
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "