...

"வாழ்க வளமுடன்"

26 அக்டோபர், 2010

நம் வாழ்நாளை உணர்ந்து, உயர்த்தும் பழக்கவழக்கங்கள்


1. காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். குறிப்பாக படுக்கை அறையில் பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

2. நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சி செய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.


*

3. கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரை இவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.


*

4. தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில்வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.


*

5. வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய் நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

*

6. அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.

*

7. உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள் அதாவது இயற்கை உணவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.

*

8. பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.

*

9. காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும்.( மெல்லோட்ட நேரம்: 30 நிமிடங்கள்)

*

10. உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள். தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.

*

11. மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின்போது தன்னம்பிக்கையுடன் மனம் விட்டுச் சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.

*

12. ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கவும். தினமும் தவறாமல் தியானம் செய்யவும்.

*

13. ஒரு போதும் புகை பிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை, வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.

*

14. அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பற்சி முதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மாரடைப்பைத் தவிருங்கள்.

*

15. இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத் தட்டி இடம்பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவு கள்.

*

16. ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்பு மண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.

*

17. மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும். எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.

*

18. நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே உங்கள் உடல் நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.

*

19. மதுபானங்கள் அருந்தாதீர்கள்.

*

20. மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால் அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

*

21. உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.

*

22. உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்சினைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும் உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத் தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே இது போன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.

*

23. உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்க வேண்டும்.

*

24. உடல் நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாது "பிறந்தோம் வாழ்ந்தோம் என்று ஒன்றுமே இல்லாத பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.

***

நன்றி: வுமன்ஸ்

***


"வாழ்க வளமுடன்"

குழந்தைகள் அதிக நேரம் டி.வி. பார்ப்பதால்..... ( மருத்துவ ஆலோசனை )

குழந்தைகளை அதிக நேரம் டி.வி. பார்க்க அனுமதிப்பது நல்லது இல்லை என்று அமெரிக்காவின் சீட்டர் நகரில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
1 முதல் 3 வயது வரையிலான குழந்தைகள் டி.வி. பார்ப்பதால் கவனக் குறைவு பிரச்சினை கடுமையாக தலை தூக்கும். அதை அவர்களின் 7-வது வயதில் காணலாம்.

*

இந்தக் குழந்தைகள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரச்சினையின் கடுமை அதிகரிக்கும். இதில் பாதுகாப்பான அளவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பெடரிக் சீமெர்மேன் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார்.

*

1 முதல் 3 வயது வரையிலான கால கட்டத்தில் மூளை வளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஆகையால் இதில் பாதுகாப்பான நேரம் என்று எதையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு மணி நேரமும் சிக்கலானதுதான் என்று அவர் தீர்க்கமாக தெரிவித்தார்.

*

இவரது தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் 1 முதல் 3 வயது வரையிலான 2,500 குழந்தைகளை வெகு நாட்கள் கண் காணித்தனர். அப்போது 1 வயது உடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 2.2 மணி நேரம் டி.வி. பார்ப்பதாகவும்.

*

3 வயதுடைய குழந்தைகள் ஒரு நாளைக்கு சராசரியாக 3.6 மணி நேரம் டி.வி. பார்ப்பதாகவும் தெரிய வந்தது. ஆனால் 12 மணி நேரத்துக்கும் மேலாக டி.வி. பார்க்கும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

*

அமெரிக்காவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 சதவீத குழந்தைகள் தங்களுடைய படுக்கையறையிலேயே டி.வி. பார்க்கிறார்களாம். சிறிய வயதிலேயே டி.வி. பார்ப்பதால் அங்கு 3 முதல் 5 சதவீத குழந்தைகளுக்கு கவனக் குறைவு பிரச்சினை இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

*

சின்னக் குழந்தைகளை டி.வி. பார்க்காமல் தடுப்பது பெரிய விஷயம். ஆனால் பெற்றோர்கள் கூடுமானவரை குழந்தைகளை டி.வி. பார்க்க விடாமல் தடுத்து அவர்களின் கவனத்தை விளையாட்டு உள்ளிட்ட வேறு விஷயங்களில் திருப்ப வேண்டும்.

*

கவனக் குறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிப்பில் சாதிக்க முடியாமல் போய்விடும் என்பதை பெற்றோர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*

இது தவிர டி.வி. பார்ப்பதால் குழந்தைகள் உடல் குண்டாகி விடும். மேலும் டி.வி.யில் தோன்றும் வன்முறைக் காட்சிகள் பிஞ்சு மனதில் நஞ்சு கலந்து விடுவதால் அவர்கள் வளரும் பருவத்தில் வன் முறையாளர்களாகவே உருவாகிறார்கள்.***
thanks thinakaran

***


"வாழ்க வளமுடன்"

நன்னாரி ( முலிகை )

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.
இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.

*

இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

*

நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).

*

நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.

***

சித்த மருத்துவத்தில்:

சலதொடம் பித்தமதி தாகம் உழலை
சலேமேறு சீதமின்னார் தஞ்ச்சூடு லகமதிற்
சொன்னமது மேகம் புண் சுரமிவை யெ லா மொழிக்கும்
மென்மதுர நன்னாரி வேர் (அகத்தியர் குணபாடம்)

அன்காரிகை மூலி யாச்சியாத்தோ டுண்ண நித்தி
யங்கா ரிகை மூலி யாளுமே-யன்காரி
பற்றாது (தேரையர் வெண்பா )

காமவல் லியனடிக் கரியுணப் பித்தமா
நேமமே கப்பிணி நிலை குலைந்தாலுமே (தேரையர் கா )

ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.


***


மருத்துவ குணங்கள்:

1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...

*

2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

*

3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

*

4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.


*

5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.


*


6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .


*


7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.


*

8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.


*

9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.


*


10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


*

11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.


*

12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.


*


13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.*

14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.


*


15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

*

16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.


*

17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.


***


18. குறிப்பு:

ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.


***
thanks விக்கிபீடியா.

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "