...

"வாழ்க வளமுடன்"

18 ஜூலை, 2011

கர்ப்பப்பை புற்றுநோயும் அதன் தாக்கமும்
மனித சமுதாயத்தைப் பெரிதும் பாதித்து, பல லட்சக்கணக்கான மக்கள் இறப்பதற்குக் காரணமான கொடிய நோய்கள் இரண்டு எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்.மனித சமுதாயத்துக்குச் சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது சாத்தியமானது.
உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன.தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்:
மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களை யும் அறிந்துகொண்டால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும். புற்றுநோய் என்பது, உடலில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற, அபரிமிதமான வளர்ச்சி நிலையாகும். புற்றுநோய், கட்டியாகவும் இருக்கலாம். அல்லது ஆறாத புண்ணாகவும் இருக்கலாம்.

*

தலை முதல் கால் வரை

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம். இருப்பினும், தலை மற்றும் கழுத்துப் பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண், பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது. அபாய அறிகுறிகள் என்ன?


நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில் வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல் மாற்றம், உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர் அல்லது ரத்தக் கசிவு, சிறுநீர் அல்லது மலம் கழித்தல் போன்ற வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய அறிகுறிகளாகும்.


*

வயது வரம்பு உண்டா?

எந்த வயதினரையும் தாக்கக் கூடியது இது.புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல.பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்று நோய் ஏற்படக் காரணம்.உதாரணமாக, புகையிலை அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். புற்றுநோயின் தொடக்க நிலையில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் புற்று நோயாளி என்று சொல்ல முடியாது. நோய் முற்றிய நிலையில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மட்டுமே சொல்ல முடியும். எனவே, அவ்வப்போது முறையாகப் பரிசோதனை செய்துகொள்வது ஒன்றுதான், புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் வழியாகும்.


*

பச்சைக் காய்கறிகள் உதவும்:

புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட எந்த வகை உணவும் காரணம் என்று இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும், நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக் கொண்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.


நோயின் தொடக்க நிலையில் வலி இருக்காது. எலும்பு அல்லது நரம்புகளில் பரவும்போது மட்டுமே வலியிருக்கும்.


ரத்தப்போக்கு இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறிதான் என்றில்லை. ஆனாலும், ரத்தப் போக்கு இருந்தால் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது அவசியம். சரியான முறையில் உரிய சிகிச்சை செய்துகொண்டால், புற்றுநோயாளிகளும் மற்றவர்களைப்போல இயல்பாக வாழ முடியும்.ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டு, உரிய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவீதம் நோயாளிகளை முற்றிலும் குணப்படுத்த முடியும். பெண்களுக்கு "பேப் ஸ்மியர்' என்ற சோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அறுவைச் சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.


புற்றுநோய்க்கு ஒரு முறை சிகிச்சை பெற்று, குணமடைந்த ஒருவருக்கு ஐந்தாண்டுகள் வரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால், அவருக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனினும், சிலவகை புற்றுநோய்கள், 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டு வர சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, முற்றிலும் குணமடைந்தாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


*


மூன்று வகை சிகிச்சைகள்:

பொதுவாக புற்றுநோய்க்கு மூன்று வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன கதிரியக்க சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருத்துவ சிகிச்சை. புற்றுநோயாளிகளில் 80 சத நோயாளிகளுக்கு கதிரியக்கச் சிகிச்சை தேவைப்படுகிறது. இது முதன்மை சிகிச்சைகளுடன் (அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை) சேர்த்தோ அல்லது நோயின் தன்மைக்கும் அது பரவியிருக்கும் நிலைக்கும் ஏற்பவோ அளிக்கப்படுகிறது.


பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் நம் நாட்டில் அதிகமாகக் காணப்பட்டாலும், பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஆண், பெண் இருபாலரையும் அதிகமாகத் தாக்கக் கூடியது, வாய்ப் புற்றுநோய்.இந்த மூன்று புற்றுநோய்களுமே மிகக் கொடிய, உயிர்க்கொல்லிகள் என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் முற்றிலும் குணப்படுத்தக் கூடியவை ஆகும்.
***
thanks administrator
***
"வாழ்க வளமுடன்"

உணவைப் பதப்படுத்தி பாதுகாத்தல் good or ......?


உணவை பாதுகாக்கும் வழிமுறைகள் உணவை மனிதன்
சமைக்க ஆரம்பித்த போதே தொடங்கியிருக்க வேண்டும். உணவை அதிக நாள் கெடாமல் வைப்பது கப்பல் பயணங்கள் போது அவசியமானதால் அதைப்பற்றி பழங்காலத்தில் தொடங்கிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்த வண்ணம் இருக்கின்றன.


குளிர வைப்பது, ‘பாஸ்ட்சர்’ முறையில் கிருமிகளை அகற்றுவது, ஈரப்பசையை எடுத்து உணவை உலர வைப்பது, ஊறுகாய் போடுவது முதலிய முறைகள் உணவை பாதுகாக்க பயன்படுத்தப்படுகின்றன. ‘டெட்ரா பாக்கில்’ ‘பேக்’ செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. பழங்காலத்தில் உப்பும், சர்க்கரையும் பரவலாக பயன்படுத்தப்பட்ட உணவைப் பதப்படுத்தும் பொருட்களாகும்.இந்த காலத்தில் டின்களில் அடைக்கப்பட்ட பதனிடப்பட்ட உணவுகள், ‘ரெடிமேட்’ உணவுகள் ஏராளமாக கிடைக்கின்றன. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு போவதால், சமைப்பது குறைந்து, டின் – உணவுகள் உபயோகம் அதிகமாகி விட்டது.
உணவை பாதுகாக்கும் பொருட்களை இரு வகையாக சொல்லலாம்
நெடு நாள் கெடாமல் பாதுகாப்பவை,
உணவுக்கு நிறம், திடம், மனம், சுவை சேர்ப்பவை


*

உணவை பாதுகாக்கும் இயற்கை பொருட்கள்

உப்பு – பழங்களில் கப்பல் பிராயணங்களில் இறைச்சி, மீன் முதலியவற்றை பாதுகாக்க பயன்பட்ட உப்பு, இன்றும் உபயோகிக்கப்படுகிறது. பாக்டீரியா பெருகுவதை தடுக்கிறது.சர்க்கரை – சர்க்கரை பேக்டீரியா மற்றும் இதர நுண்ணுயிர்களிலிருந்து ஆஸ்மாசிஸ் முறையில் நீரை உறிஞ்சிவிடுகிறது. இதனால் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன. உணவுகளை சர்க்கரை ‘சிரப்பில்’ (பாகு) போட்டு வைக்கலாம். இல்லை சர்க்கரை சேர்த்து படிமங்கள் உருவாகும் வரை சமைத்து வைக்கலாம்.தேன் – இயற்கையாக கிடைக்கும் தேன் வெகுநாள் கெடாமல் இருக்கும் பொருள். இதனுடன் சேர்த்த பொருட்கள் கெடாமலிருக்கும்.உதாரணம் – தேனில் போட்ட நெல்லிக்காய்.


மேற்சொன்னவை தவிர ஆல்கஹால், வினிகர் முதலியவைகளும் உணவை பாதுகாக்க, பதனிட உதவுகின்றன. தவிர, சூடுபடுத்துவது, உறை வைப்பது, உப்பிட்டு பதனிடுவது, புகையில் வைப்பது முதலிய முறைகளும் உணவை பாதுகாக்க மேற்கொள்ளப்படுகின்றன.


*

உணவை பாதுகாப்பது மூன்று காரணங்களுக்காக
செய்யப்படுகின்றன


உணவின் இயற்கை குணங்களை பாதுகாக்க

உணவின் தோற்றத்தை காக்க

உணவின் ஆயுளை கூட்ட


*

இராசயன பாதுகாக்கும் பொருட்கள்

இவை தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உபயோகிக்க சுலபமாகவும் நல்ல பலனளிக்கும் வழியில் செயல்படுவதாலும், உணவு தயாரிப்பாளர்கள் இராசயன பதனிடும் பொருட்களையே நாடுகின்றனர். இவை ஆரோக்கியத்திற்கு நல்லதா இல்லையா என்பது வேறு விஷயம்.

*

உணவை பதப்படுத்த உதவும் சில ரசாயன பொருட்கள்

பென் ஜோயட்டுகள், சோடியம் பென்ஜோயட்
பென்சாயிக் அமிலம்
நைட்ரைட்டுகள் போன்றவை
சல்ஃபைட்டுகள் போன்றவை
சோர்பேட்டுகள் போன்றவை
உணவு சேர்க்கைப் பொருட்கள்
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கொல்லிகள் – வினிகர், உப்பு, கால்சியம் ப்ரோபியநேட், சோடியம் பென்சோயட், சோர்பேட்ஸ், நைட்ரைட்டுகள் – சல்ஃபர் டை ஆக்சைட் முதலியன.ஆன்டி – ஆக்ஸிடான்டுகள் இவை கொழுப்பு உணவுகள் ஆக்சிஜனால் ஊசிப் போவதை தடுக்கும் பொருட்கள். இவை – வைட்டமின்கள் ‘சி’ மற்றும் ‘இ’ சல்ஃபட்டுகள், திராட்சை விதை சாரம், ஆப்பிள் சாரம், தேநீர் சாரம் முதலியன. கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, மிளகாய் முதலியவை கூட ஆன்டி – ஆக்ஸிடன்டாகும். இவை பேக்டீரியாவை அழிப்பவை.செயற்கை நிறமூட்டிகள் – இதனால் உணவு, உண்பவரை கவர்ந்து ஈர்க்கிறது. இவை டார்ட்ராசைன், காப்பர் சல்ஃபேட், கி 100 டர்மெரிக் (மஞ்சள்) ஃபெரஸ்க்ளுகனேட், அல்லூரா ரெட் ஏசி, கேரமல்


சுவையூட்டிகள் – இதற்கு ஒரு உதாரணம் வெனிலா, இவை உணவின் சுவை, மணம் முதலியவற்றை அதிகமாகின்றன. உணவுக்கு ஒரு தனிச்சுவையை தடுக்கின்றன. பாதாம் சுவையை தடுக்கிறது. தீவிரமான சுவையூட்டிகள்.


“வெளுக்கும்” பொருட்கள் – சீஸ், கோதுமை மாவுகளை “வெளுத்து” வெண்மை நிறம் தருபவை. இதற்கு பெராக்சைடுகள் பயனாகின்றன.
உணவு நிறம் மாறுதல், சுவையை இழத்தல், தயாரிக்கும் போதே கெட்டுப்போதல் முதலியவற்றை தடுப்பவை – சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், டார்டாரிக் அமிலம் முதலியன.


சத்து சேர்ப்பவை – வைட்டமின், தாதுப்பொருட்களை உணவில் சேர்ப்பவை – பால் பவுடரில் விட்டமின் ‘டி’ சேர்ப்பது, அரிசியுடன் ‘பி’ பிரிவு வைட்டமின்களை சேர்ப்பது.


உணவை கெட்டியாக்க, உணவின் நயமான தன்மையை பாதுகாப்பவை உதாரணம் லெசிதின் “சலாடுகளில்” வினிகரையும், எண்ணெய்யையும் கலந்திருக்க உதவுவது.


தீமை தரும் உணவை பாதுகாக்கும் பொருட்கள்
உணவை பாதுகாப்பதில் பயன்படுத்தப்படும் பல இராசயனப் பொருட்கள் சர்ச்சைக்குரியவை. ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பவை.


பென்சோயட்ஸ் – இந்த வகை ரசாயனப் பொருள் ரஷ்யாவில், உணவில் சேர்க்க தடை செய்யப்படுகிறது. இவை ஒவ்வாமை, ஆஸ்த்துமா மற்றும் தோல், வியாதிகளை உண்டாக்கும். அமினோ அமிலம் க்ளைசின் அளவை உண்டாக்கும். ஆஸ்த்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய ரசாயனப் பொருள்.


புடிலேட்ஸ் – வெண்ணெய், எண்ணெய்களில் காணப்படும் இந்த வேதிப்பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். கொலஸ்ட்ரால் அளவை ஏற்றும். சிறுநீரகம், கல்லீரல்களை பாதிக்கும். பன்றி இறைச்சி, உருளை சிப்ஸ், உடனடி தேநீர் இலைகள், கேக் கலவைகள் முதலியவற்றை காக்க பயன்படுத்தப்படும். புற்றுநோயை உண்டாக்கலாம்.


உணவுக்கு வண்ணமூட்டும் டார்ட்ராசைன் ஒவ்வாமை, ஆஸ்த்துமாவை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு ‘அசிடிடி’ யை உண்டாக்கும். தற்போது மார்க்கெட்டில் புதிதாக அறிமுகமான நிறமூட்டி. அமெரிக்க விஞ்ஞானிகள் இது புற்று நோயை உண்டாக்கலாமென்கின்றனர். ஆஸ்த்துமா நோயாளிகளுக்கும் நல்லதல்ல, கேராமெல் நிறமூட்டி மிட்டாய்கள், ப்ரªட், குளிர வைத்த பிட்சா, முதலியவற்றில் சேர்க்கப்படுகிறது. இது வைட்டமின் பி 6 குறைபாடுகளை உண்டாக்கும். நிறமூட்டியும் ஆஸ்த்துமா பாதிப்பை அதிகப்படுத்தும்.


இவை தவிர இன்னும் பல உணவை பதப்படுத்தும் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இவை காஃபின், கோல்தார் (நிலக்கரி தார்), குளூடோமேட், சாக்ரின், டேனின், ஃபார்மல் டிஹைட் முதலியவை. செயற்கை சர்க்கரையான சாக்ரீன் புற்றுநோயை உண்டாக்கலாம் என்கிறது சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஸ்தாபனம்.


உணவுகளை பதப்படுத்த உதவும் சல்ஃபர் – டை – ஆக்ஸைட், நுரையீரலை பாதிக்கலாம். குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஒயின் மற்றும் உணவுகளை பதப்படுத்தும் “சோடியம் சல்ஃப¬ட்” ஆஸ்த்துமாவை தூண்டி விடும்.


பாலை பதப்படுத்த உபயோகிக்கப்படும் பொருட்கள் சில
பொட்டாசியம் டை குரோமேட் இது பாலை பதப்படுத்தும் மலிவான பொருள். பாலில் உள்ள கொழுப்பை கெடுக்கும் விஷப்பொருள்.
ப்ரோனோபோல் இதுவும் மலிவான பதப்படுத்தும் பொருள். இதன் நச்சுத்தன்மை குறைவாக இருக்கும்.


ஃபார்மல்டிஹைட் – இந்தப்பொருளும் நச்சுத்தன்மை உடையது.


ஹைடிரஜன் பெராக்ஸைட் – குறைந்த நச்சுத்தன்மை உடையது.


உணவுகளில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்களில் பல ஆரோக்கியத்திற்கு ஏற்றவையல்ல. கூடிய மட்டும் பதப்படுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு அறவே வேண்டாம்.***
thanks உ. ந.
***
"வாழ்க வளமுடன்"

உடல் எடை குறைக்க விரும்புவோர் என்ன அதிகம் சாப்பிடலாம்?வெந்தயக் கீரை, காய்கறிகள் சேர்த்த சப்பாத்தி, தோசை, பொங்கல், அடை, பயத்தம்பருப்பு போன்றவை சேர்த்த உணவுகள் சாப்பிடலாம்.இளைக்கணும்னா தோசை சாப்பிடுங்க!


நமது சமையல் முறைப்படி இட்லிக்கு பதில் எண்ணெய்விடாத தோசை சாபிட்டால் விரைவில் செரிக்காது, உடல் எடை குறைக்க விரும்புவோர் அளவாக தோசை சாப்பிடலாம்.பொங்கல், அடை போன்ற உணவுகளில் நிறைய புரதம், நார் சத்துக்கள் இருப்பதால் எளிதில் ஜீரணமாகாது. இவை உடனே சர்க்கரையாக மாறும் உணவுத்தன்மை இல்லாதது. எனவே பொங்கல், அடையையும் அளவோடு சாப்பிடலாம்.கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைப்பதற்கு நல்ல மாற்றாக மூன்று வேளை கிரீன் டீ அருந்தி உடல் எடையையும் குறைக்கலாம். இதன்மூலம் இதயநோய், பக்கவாதத்தையும் தடுக்கலாம். பால் சேர்க்காமல்தான் கிரீன் டீ அருந்த வேண்டும்.கொசுறு: கறுப்பு தேநீர் அருந்தினாலும் இந்த நன்மைகள் உண்டு.


***


இரண்டாவது எளிய வழி


இரவில் பால் அருந்தி விட்டுப் படுக்கிறவர்களும் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள்தூளைச் சேர்த்து அருந்தவும்.


***


மூன்றாவது வழி:


நமக்கு மிகவும் தெரிந்த வழி. இரண்டு வேளை 100 முதல் 200 மில்லி லிட்டர் அளவுள்ள தயிரை சாப்பிட்டு வருவதுதான். தயிரில் இனிப்பு, உப்புச் சேர்க்க வேண்டாம். தயிரில் உள்ள கால்சியம் உப்பு கொழுப்பு எங்கே சேமிப்பாக இருந்தாலும் கரைத்து விடுகிறது.


ஏற்கெனவே உள்ள கொழுப்பை கரைப்பதுடன் நாம் சாப்பிடும் உணவின் மூலம் கிடைக்கும் கொழுப்பையும் தயிர் கரைத்து விடுகிறது. குறைந்த அளவு சாதத்தில் தயிரை நன்கு சேர்த்தும் சாப்பிடலாம். தயிர் மூலம் தொடர்ந்து கால்சியம் கிடைப்பதே மிக முக்கியம்.மேற்கண்ட மூன்று அரிய உணவுகளும் எடையைக் குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் கிரீன் டீ இதய நோயையும், மஞ்சள் தூள் புற்றுநோயையும், பாலும் தயிரும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோயையும் முன் கூட்டியே தடுக்கின்றன.
***
thanks Mohamed Ali
***


"வாழ்க வளமுடன்"

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்குஎல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது.இதனால் நாம் மருத்துவரை அணுகி அதற்க்கான ஆலோசனைகளை கேட்டு அதன்படி கண்ணாடி அணிந்து கொள்கிறோம். நம்முடைய கண்களின் பார்வை திறன் எவ்வாறு உள்ளது என ஓன்லைனில் சுலபமாக மற்றும் இலவசமாகவும் பரிசோதிக்கலாம்.இதற்கு கீழே உள்ள வழிமுறைகளை கடைபிடிக்கவும்.


1. உங்கள் கணணி திரையின் அளவு 15" 17" 19" இவற்றில் ஏதேனும் ஒரு அளவில் இருக்க வேண்டும்.2. உங்கள் கணணியில் Flash Player நிறுவச் செய்திருக்க வேண்டும்.3. அடுத்து இந்த தளத்திற்கு Online Eye test (http://library.thinkquest.org/C005949/fun/eyechart.htm)செல்லுங்கள். அந்த தளத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.4. அந்த தளத்தின் கீழ பகுதிக்கு சென்றால் ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.5. அடுத்து உங்கள் கணணி திரையின் அளவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.6. உங்கள் கணணி திரைக்கும் உங்கள் கண்களுக்கும் 3 அடி இடைவெளி விட்டு அமர்ந்து கொள்ளவும்.7. அடுத்து உங்கள் சோதனை ரெடியாகும். உங்களுக்கு வரும் எழுத்துக்களை உங்களால் படிக்க முடிகிறதா என பார்த்து படிக்க முடிந்தால் Next கிளிக் செய்து அனைத்து நிலைகளையும் படித்து விடுங்கள்.8. ஒருவேளை உங்களால் ஏதேனும் நிலையில் உள்ள எழுத்துக்களை படிக்க முடியவில்லை என்றால் Stop என்பதை அழுத்தி விடவும். நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.இந்த சோதனை 100% துல்லியமானது அல்ல. கண்களில் திறனில் ஏதேனும் பிரச்சினை இருப்பது போல உணர்ந்தால் உடனே நீங்கள் மருத்துவரை அணுகுவதே மிகச் சிறந்தது.http://library.thinkquest.org/C005949/fun/eyechart.htm
***
thanks eegarai
***
"வாழ்க வளமுடன்"

கவலை தரும் காய்கறி எண்ணெய்காய்கறிகளின் விதைகள் மற்றும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் அவை இயற்கையான காய்கறி பொருட்களில் இருந்து கிடைப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஆரோக்கியத்திற்கு அபாயமானது.காய்கறி எண்ணெய்கள் துரித உணவுகள் போலவே ஆபத்தானது. ஏனெனில் `ஜங்புட்' உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறதோ அதுபோன்ற முறையிலேயே காய்கறி எண்ணெய்களும் தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளிலுள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெய் தயாரிக்கும் முறையில் நீக்கப்பட்டுவிடுகிறது. இறுதியாக எண்ணெயாக மிஞ்சி இருப்பது வெறும் கொழுப்புகள் மட்டுமே.இந்தக் கொழுப்புகள் கல்லீரலை தூண்டி உடலில் அதிகப்படியான கொலஸ்டிரால் உற்பத்தியாக காரணமாக அமைந்துவிடுகிறது. தொடர்ந்து அதிகப்படியாக காய்கறி எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் சீக்கிரமாகவே கல்லீர லானது உடலின் தேவைக்கு அதிகமான கொலஸ்டிராலை உற்பத்தி செய்துவிடுகிறது. இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.பெரும்பாலும் காய்கறி எண்ணெய்கள் மரபு வழி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல. சோயா எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவை அதிகமாக மரபு வழியில் தயாராகிறது. வேறு சில எண்ணெய்கள் அதிகமாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு தயாராகிறது.இப்படி தயாராகும் எண்ணெய்கள் அதிகமாக கொலஸ்டிரால் உருவாக காரணமாக இருப்பதுடன் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இந்த எண்ணெய்களால் உடலில் அதிகப்படியாக உருவாகும் பலபூரிதமாகாத கொழுப்புகள் இதய வியாதிகள், நீரிழிவு மற்றும் வேறுசில அபாயமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.அதேபோல சுவை தருவதற்காக மேற்கொள்ளப்படும் ரீபைன்ட் முறையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷத் தன்மையுள்ள ரசாயனங்கள் சுரப்பதை தூண்டுகிறது. இது ரத்த சுழற்சியை குறைக்கும். மூளை நரம்புகள் இயக்கத்தை பாதிக்கும். ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை குறைத்து ஜீரணத்தையும் தாமதப்படுத்தும். எனவே காய்கறி எண்ணெயையும் அளவுடன் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.***
thanks தினதந்தி
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "