...

"வாழ்க வளமுடன்"

25 ஜனவரி, 2011

இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்!


தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.


பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.


பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.


இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல்துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள் வருமாறு:


மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.


இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.


இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.


தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.


இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.


பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

லிப்ஸ்டிக்கால் அதிகரிக்கும் மார்பகங்கள் அளவு!


லண்டன்:

அதிக அளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்களின் அளவு அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும் குடிப் பழக்கமும் மார்பகத்தின் அளவை அதிகமாக்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளில் பிரிட்டன் பெண்களின் சராசரி மார்பக அளவு அதிகரித்துவிட்டதாகவும் இதற்கு குடியும் லிப்ஸ்டிக்கும் வேறு சில சுற்றுச்சூழல் விஷயங்களுமே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மார்பக அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆஸ்ட்ரோஜென்.

வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஆஸ்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


ஆஸ்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரந்தால் மார்பக புற்று நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாலுட்டுவதால் ஆஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது. ஆனால், குறைந்த அளவில் குழந்தை பெறுவோருக்கு தாய்ப்பால் மூலம் ஆஸ்ட்ரோஜென் வெளியேறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அவர்களுக்கே மார்பக அளவு அதிகமாகிறது. அதிக அளவில் புற்று நோயும் தாக்குகிறது.


இது தவிர செயற்கையான ஆஸ்ட்டோரஜனாலும் மார்பக அளவு அதிகரித்து வருகிறது. ஜெனோ-ஆஸ்ட்ரோஜன்கள் எனப்படும் செயற்கையான இந்த ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் (பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில்) காணப்படுகிறது. மேலும் லிப்ஸ்டிக்களிலும் இந்த ரசாயனம் உள்ளது.


இவையும் மார்பக அளவை பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தோடு குடிப்பழக்கமும் சேர்ந்துவிட்டால் அளவு மேலும் பெரிதாகிவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.


ஆஸ்ட்ரோஜன் ஹார்மோனை சிதைத்து உடலில் இருந்து வெளியேற்றும் முக்கிய வேலையை செய்வது கல்லீரல் தான். ஆனால், குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோனின் அளவு உடலில் குறைவது பாதிக்கப்படுகிறதாம்.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"


காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க சில "டிப்ஸ்"


உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

*

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?

நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

*

காரட்:

தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


*

முட்டைக்கோசு:

மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
*

பீட்ரூட்:

ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

*

இஞ்சி:

கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

*

வெங்காயம்:

வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

*

ஆப்பிள்:

இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

*

அன்னாசி:

இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

*

எலுமிச்சம்பழம்:

உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

*

பூண்டு:

இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

*

தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.


*

சுரைக்காய்:

இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

*

வெள்ளரிக்காய்:

இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

*

தர்ப்பூசணி:

இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

*

முள்ளங்கி, வெண்டைக்காய்:

இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.


***

நல வாழ்வுக்குச் சில "டிப்ஸ்" :

காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும், பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது; நாற்பதை கடந்தால், சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும்.

*

முளைக்கீரை

இந்த கீரையை தினமும் சாப்பிடலாம். எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய கீரையும் இதுவே. பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், சாப்பாடு கொடு என்று அடம் பிடிப்பார்கள்!

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை தழைகள் என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.

*

முள்ளங்கி தழையும்....

முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது
முதல் பித்தநீர்ப்பை கல் வரை நீக்குகிறது.

முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன.வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை.

இதை உணவாக சமைத்து சாப்பிடலாம்; அப்படியே கேரட் போல சாப்பிடலாம்; ஜுஸ் செய்து குடிக்கலாம். எதிலும் சத்துக்கள் உள்ளன.

முள்ளங்கியில், கால்சியம், வைட்டமின் சி, சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி தழையை பலர் உணவாக சாப்பிடுவதில்லை.

அதில்தான் சத்துக்கள், முள்ளங்கி தண்டைவிட அதிகமாக உள்ளன. ஜூஸ், சூப்பில், முள்ளங்கி துண்டுகளுடன் இதை பயன்படுத்தி சாப்பிடலாம்; நன்றாக சுவையாக இருக்கும்.

*

ஒரு நாளுக்கு ஒரு முட்டை

கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டைவிட அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ் கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது.

ஒரு வேறுபாடு காய்கறி உணவைவிட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக் கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல்.

ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம்.

கொலஸ்ட்ரால், ட்ரை கிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது.

கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!

*

கிரீன் டீ சாப்பிடறீங்களா!

காலம் காலமாக காபி, டீ சாப்பிட்டு வந்தால் அதை மாற்றவே கூடாது; தேவையும் இல்லை. ஆனால், உடல் பாதிப்பு என்று வந்துவிட்டால், டாக்டர் சொல்படி தான் பின்பற்ற வேண்டும்.

அதுபோல, வாழ்க்கை முறை மாறியுள்ள இளைய தலைமுறையினருக்கு எவ்வளவோ சக்தில்லா பாக்கெட் உணவுகள் விற்பனையில் இருந்தாலும், சத்தான சில பொருட்கள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் கிரீன் டீ. இப்போது கிரீன் டீ, பிளாக் டீ சாப்பிடுவது பேஷன் என்பது போய், சத்தான உணவாகி விட்டது. டாக்டர்களே இதை பரிந்துரைக்கின்றனர்.

மூளை சுறுசுறுப்பு, மறதி நோய் வராமல் இருப்பதற்கு இது மிகப் பயனுள்ளது. ஜப்பானியர் இதைத்தான் பல ஆண்டாக பயன் படுத்துகின்றனர்.

அதனால்தான், சுறுசுறுப்பாகவும், அல்சீமர் நோய் வராமலும் உள்ளனர் என்பது நிபுணர்கள் கருத்து, கிரீன் டீக்கு எங்கும் அலைய வேண்டாம்; கடைகளில் விற்கிறது;

தரமான பிராண்ட் வாங்கி பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால், மூளை சூப்பர்தான்.

*

ஏதாவது ஒரு ஜுஸ்?

தினசரி தண்ணீர், ஜுஸ், சூப் குடிப்பது நல்லது. முன்பெல்லாம் காலையில் எழுந்தது, முதல் இரவு படுக்கப் போகும் வரை உணவு முறை சீராக இருக்கும். இப்போது அப்படியல்ல; தலைகீழாய் மாறிவிட்டது.

*

மீன் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்

மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.

கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு
சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.

அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்..



***
thanks VIDUTHALAI
***



"வாழ்க வளமுடன்"

இஞ்சி மருந்தா? இல்லையா ? தெரிந்துக் கொள்ள இதை படிங்கள் !


இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.


சமிபாடின்மை என்றால் "இஞ்சிச் சோடா கொண்டுவா" என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.


உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.


கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு.


இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.


சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.


யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.


ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.


சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.


பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.

*

பின்குறிப்பு :

இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும்.


மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


***
நன்றி:- தினக்குரல் 17.09.2007
***


"வாழ்க வளமுடன்"

வ‌ட‌மொழி யின் - த‌மிழ் விளக்கம் :)



தாய்த் த‌மிழைத் தூய்மை செய்வோம் :)

க‌ம்பார் க‌னிமொழி குப்புசாமி-

*

வ‌ட‌மொழி - த‌மிழ்

அத‌ம்செய்த‌து யானை – அழிவுசெய்த‌து யானை
அத‌ர்ம‌ம் செய்ய‌ற்க‌! – தீமை செய்ய‌ற்க‌!


அதிச‌ய‌மாய் இருக்கிற‌து – விய‌ப்பாய் இருக்கிற‌து
அதிப‌தியானான் – பெருந்த‌லைவ‌னானான்


அதிப‌ர் வ‌ந்தார் – த‌லைவ‌ர் வ‌ந்தார்
அதிர்ஷ்ட‌மாக‌க் கிடைத்த‌து – ந‌ல்வாய்ப்பாக‌க் கிடைத்த‌து
அதிர‌ச‌ம் வேண்டுமா? – ப‌ண்ணியார‌ம் வேண்டுமா?


அதிருப்தி த‌ந்த‌து – ம‌ன‌க்குறை த‌ந்த‌து
அதோக‌தி அடைந்தான் – கீழ்நிலை அடைந்தான்
அந்த‌ர‌ங்க‌மாக‌ப் பேசினான் – ச‌முக்க‌மாக‌ப் பேசினான்



அந்த‌மில்லாத‌து அறிவு – முடிவில்லாத‌து அறிவு
அந்த‌ஸ்தைப் பார்ப்ப‌தில்லை – த‌ர‌த்தை பார்ப்ப‌தில்லை
அந்தாதிப் பாடல்க‌ள் – க‌டைமுத‌ல் பாட‌ல்க‌ள்
அந்திம‌க் கால‌ம்வ‌ரையில் – இறுதிக் கால‌ம்வ‌ரை


அந்நிய‌னாக‌ எண்ணாதே – வேற்றாளாக‌ எண்ணாதே
அநாதையாய்த் திரிகிறான் – எதிலியாய்த் திரிகிறான்
அநாம‌தேய‌ அறிக்கை – பெயர‌ற்ற‌ அறிக்கை
அநியாய‌மாக‌ப் பேசாதே! – நேர்மையின்றிப் பேசாதே!

அநீதி இழைக்காதே! – தீங்கு இழைக்காதே!


அப்பாவி ம‌க்க‌ள் – குற்ற‌ம‌ற்ற‌ ம‌க்க‌ள்
அப்பாவி அவ‌ன் – வெள்ளைம‌ன‌த்தான் அவ‌ன்
அப்பியாச‌ம் செய்தான் – ப‌யிற்சி செய்தான்
அப்பிராய‌ம் உண்டு – எண்ண‌ம் உண்டு
அப்பிராய‌ம் கூறினான் – க‌ருத்துக் கூறினான்



அப்பிராணி இவ‌ன் – அறியாத‌வ‌ன் இவ‌ன்
அப‌க‌ரிக்காதே பொருளை – ப‌றிக்காதே, பொருளை
அப‌ச்சார‌மான‌ செய‌ல் – ம‌திப்ப‌ற்ற‌ செய‌ல‌து
அப‌த்த‌மாய்ப் பேசாதே – பொய்மொழி பேசாதே


அப‌ய‌ம் அளித்தான் – த‌ஞ்ச‌ம‌ளித்தான்
அப‌ராத‌ம் க‌ட்டினான் – த‌ண்ட‌ம் க‌ட்டினான்
அப‌ரிமித‌ விளைச்ச‌ல் – அள‌வில்லா விளைச்ச‌ல்
அப‌லைப் பெண்ண‌வ‌ள் – பேதைப் பெண்ண‌வ‌ள்
அபாய‌த்திற்குரிய‌ இட‌ம் – பேரிட‌ர்க்குரிய‌ இட‌ம்



அபாய‌ம் வ‌ர‌லாம் – கேடு வ‌ர‌லாம்
அபாய‌த்திற்கு வ‌ழியாகும் – ஏத‌த்திற்கு வ‌ழியாகும்
அபாய‌ம் வ‌ருமா? – இட‌ர் வ‌ருமா?


அபார‌ வெற்றி – பெரு (நிலை) வெற்றி
அபார‌மான‌ விளையாட்டு – மிக‌ச்சிற‌ப்பான‌ விளையாட்டு
அபிந‌ய‌த்தோடு ஆடினாள் – ந‌ளிந‌ய‌த்தோடு ஆடினாள்
அபிப்பிராய‌ம் என்ன‌? – க‌ருத்து என்ன‌?


அபிப்பிராய‌ப்ப‌ட்டான் – விருப்ப‌ப்ப‌ட்டான்
அபிப்பிராய‌ம் கேட்டாயா? – க‌ருத்துக் கேட்டாயா?


அபிமான‌முண்டு உன்னிட‌ம் – ம‌திப்புண்டு உன்னிட‌ம்
அபிமான‌ம் உண்டு – ந‌ன்ம‌திப்புண்டு
அபிமானியான‌வ‌ன் – ப‌ற்றாள‌னான‌வ‌ன்
அபிவிருத்தி க‌ண்ட‌து – வ‌ள‌ர்ச்சி க‌ண்ட‌து


*

ஓலை சுவடியை சமர்ப்பித்தவர்; சதீஷ் குமார்



***
thanks சதீஷ் குமார்
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "