...

"வாழ்க வளமுடன்"

12 ஏப்ரல், 2011

பீட்ரூட் & பாகற்காய் (பாகல்) மருத்துவ குணம் ....

* பீட்ரூட்:

இதில் கார்போஹைட்ரேஇதை ஆங்கிளத்தில்(Beta Vulgaris) இதனைசீமைசர்கரை வள்ளிகிழங்கு என்று சொல்வார்கள்.மத்திய ஐரோப்பாவும்,ஐக்கிய அமெரிக்காவும் பீட்ரூட்டின் பறப்பிடம். தற்பேது இந்தோசீனா,பிலிப்பைன்ஸ்,ஆப்பிரிக்கா,மற்றும் இந்தியாவிலுட்கள் சர்க்கரை வடிவில் இருக்கும்.சிறிதளவு புரதமும்,கொழுப்பும் உண்டு.





ஈரபதம்-87.7 கிராம் புரதம்-1.7 கிராம் கொழுப்பு -0.1 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-8.8 கிராம் கால்சியம்- 200 மி.கி மக்ளீசியம்- 9 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 55 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 59.8 மி.கி பொட்டாசியம்- 43 மி.கி செம்பு- 0.20 மி.கி சல்ஃபர்- 14 மி.கி தயமின்- 0.04 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.4 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி




100கிராமில் 43. கலோரி உள்ளது.


*



பித்தம் காரணமாக உண்டாகும் உமட்டல், வாந்தி,வயிற்றுபோக்கு,வயிற்றுக்கடுப்பு,மஞ்சட்காமாலை ஆகியவற்றுக்கு இதன் சாறு நல்லது. பீட்ரூட் இரத்தத்தை விருத்தி செய்யும்.இயற்கைக்குகொவ்வாத கால்சியப்படுவுகளை கரைக்கும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் பிரியும்.காலையில் உணவுக்கு முன் சாப்பிடலாம்.





சரும அழற்சி,கொப்புளங்கள்,பருக்களுக்கு பீட்ரூட் கிழங்கு,இலைகளை கொதிக்க வைத்த நீரைப் பிரயோகிக்கலாம். பீட்ரூட் கொதித்த நீர் மூன்று பங்குடன் ஒரு பங்கு வினிகர் கலந்து ஒற்ற சரும எரிச்சல் நீங்கும். *** பாகற்காய் (பாகல்):

தாவரவியல்ற் பெயர்;(Monordica Charantia) பாகற்காய் ருசியில் கசக்கும் என்றாலும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.இதனை வறுக்கலாம்,அவிக்கலாம்,ஸ்ஃப் செய்யலாம்.குழம்பு,பொரியல்,செய்யலாம்.வற்றல் செய்து சேமித்து வைக்க ஆண்டு முழுவதும் பயன்படுத்தலாம். ஈரபதம்-92.4 கிராம் புரதம்-1.6 கிராம் கொழுப்பு -0.2 கிராம் இழைப்பாண்டம்-0.8 கிராம் தாதுக்கள்-0.8 கிராம் கார்போஹைட்ரேட்கள்-4.2 கிராம் கால்சியம்- 20 மி.கி மக்ளீசியம்- 17 மி.கி ஆக்ஸாலிக் அமிலம்- 40 மி.கி பாஸ்பரஸ்- 70 மி.கிஅயம்- 0.4 மி.கி சோடியம்- 17.8 மி.கி பொட்டாசியம்- 152 மி.கி செம்பு- 0.18 மி.கி சல்ஃபர்- 15 மி.கி குளோரின்- 8 மி.கி வைட்டமின் ஏ- 210 ஐ.யூ தயமின்- 0.07 மி.கி ரைபோஃப்ளேவின்- 0.09 மி.கி நியாஸின்- 0.5 மி.கி வைட்டமின் சி- 88 மி.கி 100கிராமில் 5 கலோரி உள்ளது. * பாகற்காய் குளிர்ச்சியைத் தரும்.சிறந்த மலமிளிக்கி.பசியைத் தூண்டும்.பித்த உபாதைகள் நீக்கும். நீரழிவுக்கார்ர்களின் உணவில் பாகற்காய் அவசியம் இடம் பெற வேண்டும் என்று பரிந்துரைக்கும். பாகற்காய்யில் தாவர இன்சுலின(plant insulin)இருப்பதை பிரிட்டிஷ் மருத்துவ குழு ஆரிய்ச்சி செய்து தெரிவிக்கிறது. நீரழிவு நோயாளிகள் தினம் சாப்பிட்டு வந்தால்,வைட்டமின் ஏ,பி,பி2,சி மற்றும் அயச்சத்துக்ளை அவர்கள் பெறமுடியும். தொடர்த்து பயன்படுத்திவர உயர் இரத்த அழுத்தம்,கண் உபாதைகள்,நரம்புவீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கலாம். மூன்று தேக்கரண்டி பாகல் இலைச்சாறுடன் ஒர் கிளாஸ் மோர்கலந்து பருகிட மூலம் குணமாகும். ஒரு கோப்பை பாகல் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்த இரத்த கோளாறுகள் நீங்கும். குடுத்து குடித்து ஈரலைப் பாழாக்கிக் கொண்டவர்கள் தினமும் காலையில் 30 மி.லி அளவுபாகல் சாற்றை மோருடன் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். ஒரு தேக்கரண்டி பாகல் வேர்களை பசைபோல் அரைத்து அத்துடன் சம அளவு தேன் அல்லது அதே அளவு துளசிச்சாறு கலந்து இரவு தோறும் அருந்த ஆஸ்துமா,மார்ச்சளி கிணப்படும். *** "வாழ்க வளமுடன்"

உடல் பருமனை குறைக்க ......

1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும். * 2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும். * 3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. * 4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். * 5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. * 6. உப்பின் அளவையும் குறைக்கவும் * 7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம் * 8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம். * 9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும். * 10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும். * 11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது. * 12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும். *** thanks google *** "வாழ்க வளமுடன்"

உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம் !

* உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள் எனலாம்.



*



பழங்களில் இரும்புச் சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.



*



சில வகை பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.



*



குறிப்பிட்ட சில பழங்களின் மருத்துவத் தன்மை, அவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மை குறித்து இதில் பார்ப்போம்.



*



ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆப்பிள் சாறானது, குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணமாக்கும்.



*



எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப் பழம். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழம் மிகவும் நல்லது.



*



சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. ஒரு அவுன்ஸ் அளவு திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீர் தாரைகளில் உண்டாகும் கல் கரையும்.



*



இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் சிறந்தது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால், உடல் சோர்வை உடனடியாக போக்கும் தன்மை கொண்டது.



*



அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசிப் பழம் பயன்படுகிறது. உடல்சூடு உள்ளவர்களுக்கு அன்னாசிப் பழம் சாலச் சிறந்தது.



*



சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.



*



பப்பாளிப் பழத்தை துண்டுகளாக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்க பப்பாளிப் பழம் பயன்படுகிறது.



*



வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வர பயன்படுகிறது. எனவே அன்றாடம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுதல் சிறந்தது.



*** thanks news paper *** "வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "