...

"வாழ்க வளமுடன்"

19 ஏப்ரல், 2011

உணவில் இதுதான் அளவு :)


ஒருவரது உடல் அமைப்பு, எடை, வயது, உடல் உழைப்பு ஆகியவற்றை பொறுத்து அவர் தனது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.


பருமனானவர்கள் எடையைக் குறைபதற்காக உணவுக்கட்டுபாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவின் அளவைக் குறைக்க வேண்டும். அதற்காக பட்டினி கிடக்கக் கூடாது. சிலர் அடிக்கடி காபி, டீ குடிப்பார்கள். அவற்றில் சர்க்கரை இருப்பதால் கூடுதலான கலோரி உடலில் சேர்ந்து அவர்களது உடல் எடை கூடி விடும். எடை குறைவானவர்கள் மருத்துவரது ஆலோசனையின் படி, உடல் எடையை சீராகக் கூட்டி பராமரிக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

*

அதிகமாக சாப்பிட விரும்புபவர்கள் காய்கறி வகைகள், கீரை வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அவர்கள் பசியைக் கட்டுபடுத்தும்.

*

நெய், வெண்ணை, பாலாடை, ஐஸ்கிரீம், முட்டையின் மஞ்சள் கரு, பிஸ்தா, முந்திரிபருப்பு, பாதாம்பருப்பு, கொழுப்பு நிறைந்த இறைச்சி, தேங்காய், தேங்காய் எண்ணை, வனஸ்பதி போன்றவற்றில் கொழுப்பு பொருட்கள் அதிகளவில் இருப்பதால் அவற்றைத் தவிர்பது நல்லது. மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இளமையில் இருந்தே கண்டிப்பாக இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

*

தக்காளி, வெள்ளரிக்காய், பப்பாளி, கத்திரிக்காய், பாகற்காய், பீன்ஸ், அவரைக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், முருங் கைக்காய், கோவக்காய், பூசணிக்காய், சுரை க்காய், சவ்சவ், நூக்கோல், பீர்க்கங்காய், முள்ளங்கி, வாழைபூ, வாழைத்தண்டு, காரா மணி, குடைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, காய்கறி மற்றும் கீரைவகைகளை உணவில் தாராளமாக சேர்க்கலாம். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை கூழாக உண்ணக்கூடாது. ஏனெனில், அவை உடனடியாக செரிமானமாகி சிறுகுடல் மூலம் உறிஞ்சபட்டு, ரத்தத்தில் கலந்து குளுக்கோசின் அளவைக் கூட்டி விடும்.

*

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறைகள் ஒழுங்கான ஒரு கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும். அப்போது தான் நமது உடல் வளர்ச்சி ஒரே சீராக நடைபெறும். அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்கள் மற்றும் கிழங்கு வகைகளில் இருந்து தயாரிக்கபடும் மாவு வகைகள் நமது உணவில் 40 சதவீதம் இருக்க வேண்டும்.


*

நார்த்தன்மையை அதிகரிக்கும் கலோரி சக்தியற்ற காய், கனிகள் மற்றும் கீரை வகைகளையும், கலோரி சக்தி குறைவாக உள்ள பழங்களையும் 40 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகை புரதங்கள், எண்ணை மற்றும் கொழுப்பு வகை உணவுகள் 20 சதவீதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக் !!!பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்…

“அஹா…. இது என் முகம் தானா?” என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.


தோலுடன் முழு பச்சை பயறு 2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை 1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை 1. துளசி 4. பூலான் கிழங்கு 1. ரோஜா மொட்டு 2. கசகசா அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன். கஸ்தூரி மஞ்சள் தூள் 1 சிட்டிகை கலந்து கொள்ளலாம்.குளிப்பதற்கு முன்பு முகத்துக்கு இந்த பேக் போட்டு. பத்து நிமிடம் கழித்து அலம்புங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வாருங்கள். கண்ணாடி பார்க்கும் போது அசந்து போவீர்கள்.இதில் சேர்க்கப்பட்டுள்ள எலுமிச்சை இலை முகத்தை “ப்ளீச்” ஆக்கும். துளசி, தோலை மிருதுவாக்கும். ரோஜா மொட்டு “பளபளப்பு” தரும். வேப்பிலை பருக்களை ஒழிக்கும். பூலான்கிழங்கு வாசனையை வழங்கும் கஸ்தூரி மஞ்சள் மினுமினுப்பு தரும்.இன்றைய காலகட்டத்தில் பத்து வயதிலேயே பெண் குழந்தைகள் அபார வளர்ச்சி அடைகின்றனர். இதனால், உடலில் அநாவசிய ரோமங்கள் அதிகமாகி விடலாம். இந்த ரோமங்களை நீக்குவதோடு, மேலும் வளரவிடாமல் தடுக்க,


***

விசேஷமான ஒரு குளியல் பவுடர்….

பயத்தம் பருப்பு அரை கிலோ, சம்பங்கி விதை 50 கிராம், செண்பகப்பூ 50 கிராம், பொன் ஆவாரம் பூ 50 கிராம், கோரைக்கிழங்கு 100 கிராம். இவற்றை பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.தினமும், குளிக்கும் போது இந்தப் பவுடரை குழைத்துப் பூசுங்கள். மெழுகு போல் சருமம் மிளிரும்.முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் “திட்டுகள்” தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த “கருப்புக் கவலைகளை” போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற.


**


“ப்ளீச்” பவுடர்…

பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம். பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்… இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள்.“எங்கே போச்சு கருமை?” என்று திகைத்து நிற்பீர்கள்.

தலையில் மட்டுமல்லாமல் சிலருக்கு உடல் முழுக்கவேகூட சருமம் வறண்டு வருத்தம் வாட்டியெடுக்கும் அவர்களின் வருத்தத்தை விரட்டவே இந்த டிப்ஸ்…பயத்தம் பருப்பைத் தனியாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். ஐந்து டீஸ்பூன் நல்லெண்ணையைச் சிறிது சூடாக்கி, அதில் தேவையான அளவு பவுடரைக் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள். குளிக்கும் போது தலை முதல் கால் வரை பூசி, சூடான நீரினால் அலம்புங்கள்.இந்தப் பயத்தம் குளியலை வாரம் இருமுறை மேற்கொண்டாலே, மேனி புத்துணர்ச்சியுடன் பளபளக்கும்.பலருக்கும் முகம் பளிச்சென்று இருக்கும். ஆனால் கை, கால்களில் மட்டும் சுருக்கம் தோன்றி, முதிய தோற்றம் காட்டும்.


***

இந்தச் சுருக்கங்களை துரத்தியடிக்க ஒரு பேஸ்ட்…..

ஒரு டீஸ்பூன் பயத்தம் மாவுடன் 5 துளி எலுமிச்சை சாறு கலந்துகொள்ளுங்கள். அதனுடன் சிறிது தயிர் சேர்த்து பேஸ்டாக்கி, சுருக்கம் விழுந்த பகுதிகளில் இந்த பேஸ்ட்டைச் சில நிமிடங்கள் தடவிக்கொண்டே இருந்துவிட்டு, சூடான நீரில் கழுவி விடுங்கள். ஊற விடக் கூடாது. விரைவிலேயே சுருக்கங்கள் மறைந்து. தோல் மிருதுவாகும்.

முக அழகைக் கெடுக்கும் பருக்கள், தேமல், தழும்பு, மாசு, மரு போன்றவற்றைப் போக்கி, முகத்தைக் கண்ணாடி போல மினுமினுக்க செய்கிற ஸ்பெஷல் பவுடர் இது….

பயத்தம் மாவு 1 டீஸ்பூன், வெட்டிவேர் பவுடர் அரை டீஸ்பூன், தயிர் 1 டீஸ்பூன். இவற்றைக் கலந்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள், தேமல், தழும்பு பகுதிகளின் மீது இந்தப் பேஸ்ட்டை லேசாக அழுத்திப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து அலச தடம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!

பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கிற பாதங்களால் படுகிற இம்சை சொல்லி மாளாது. வெடிப்புகளால் மனம் வெடிப்பவர்களுக்கான மகிழ்ச்சி பேஸ்ட் இது!

தே. எண்ணெய் 1 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன், பசுநெய் 4 துளி, மஞ்சள்தூள் 2 சிட்டிகை. இவற்றுடன் 1 டீஸ்பூன் பயத்தம் மாவைச் கலந்து கொள்ளுங்கள். தினமும் தூங்கப்போகும் போது வெடிப்பு இருக்கும் பகுதியில் ஐந்து நிமிடங்கள் தடவியபடி இருந்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள்.

விரைவிலேயே வெடிப்பு, கருமை நீங்கி பாதம் மெத்தென்று ஆகிவிடும்.***
thanks net
***
"வாழ்க வளமுடன்"

எக்ஸெல் – மறைக்கவும் காட்டவும்எக்ஸெல் தொகுப்பில் சில நேரங்களில் ஒரு சில செல்கள் அல்லது வரிசைகளை மறைக்க வேண்டியதிருக்கும். என்ன செய்கிறோம்? பார்மட் மெனு சென்று பின் ரோ / காலம் சப் மெனு பெற்று அதன் பின் ஹைட்/ அன்ஹைட் கிளிக் செய்து நிறைவேற்றுகிறோம்.

தேவையான டேட்டாவை மறைத்திட இவைதான் சரியான வழியாக இருக்கும். இதன் மூலம் நாம் நம்முடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் எப்படி தோற்றமளிக்க வேண்டும் என எண்ணுகிறோமோ அது போல அமைக்க முடிகிறது. எந்த டேட்டாவைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை மட்டும் காட்ட முடிகிறது. ஆனால் மவுஸால் ஒவ்வொரு மெனுவாகத் தேர்ந்தெடுத்து செயலாற்றுகையில் தான் இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா என்று தோன்றுகிறது.இதற்கான சில கீகளை அழுத்தினால் போதும்; இந்த கீகள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம். இதற்கு முதலில் எந்த செல், ரோ, காலம் மறைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கூட மவுஸ் பயன்படுத்த வேண்டாம். ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு ஆரோ கீகளை அழுத்தினால் போதும். தேர்ந்தெடுத்த பின்னர் கீழ்க்காணும் வழிகளில் கீகளைப் பயன்படுத்துங்கள்.

**

Ctrl + 0 (zero) : அழுத்தினால் நெட்டு வரிசை மறைக்கப்படும்.


Ctrl + 9 : அழுத்தினால் படுக்கை வரிசை மறைக்கப்படும்.

**


அடுத்து மறைக்கப்பட்ட வரிசைகளை மீண்டும் காட்ட என்ன செய்யலாம்?

மறைக்கப்பட்ட செல்களை அடுத்து இருபுறமும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுங்கள். பின்னர்
Ctrl + Shift + ) : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட நெட்டு வரிசை காட்டப்படும்.
Ctrl + Shift + ( : கீகளை அழுத்தினால் தேர்ந்தெடுத்த இரு செல்களுக்கிடையே உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசை காட்டப்படும்.


*


எப்படி! மவுஸ் இல்லாமல் கீ போர்டு வழியாகவே இந்த மறைக்கும் மற்றும் காட்டும் வேலை நடைபெற்றுவிட்டதா!


***
thanks google
***
"வாழ்க வளமுடன்"

சிக்கன் பால்ஸ்சிக்கனை அசைவப் பகோடா போல பொரித்தெடுத்து சிக்கன் பால்ஸ் செய்யலாம். இதில் மசாலா சேர்க்கப்படாமல் ரொட்டியும், முட்டையும் சேர்க்கப்படுவதால் அதிக சத்து நிறைந்தது.

தேவையான பொருட்கள்
சிக்கன் கொத்தியது – 1/4 கிலோ

வெங்காயம் – 200 கிராம்

பச்சை மிளகாய் – 4

முட்டை – 1

ரொட்டித் துண்டு – 4

உப்பு – தேவையான அளவு

எண்ணை – பொரிப்பதற்கு

*

செய்முறை
* கொத்திய கோழி இறைச்சியை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

* பிறகு மிக்சியில் போட்டு சுற்றிக் கொள்ளவும்.

* வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும்.

* இதனுடன் சிக்கன் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி போதுமான அளவு உப்பு சேர்த்து நன்கு இறுக்கமாக பிசையவும்.

* இந்தக் கலவையை கோலியளவு எடுத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

* ரொட்டியைச் சதுரமாக சிறிய க்யூபாக வெட்டிக் கொள்ளவும்.

* சிக்கன் உருண்டைகளை ரொட்டித் துண்டில் வைத்து ரோல் செய்யவும்.

* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் சிக்கன் பால்சை பொரித்தெடுக்கவும்.***
thanks `செப்’ தாமு
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைக்கு வயிர்ருப்போக்கும் சிகிச்சைகளும் !!!

தினமும் திட நிலையில் வெளியேறும் மலம் திடீரென்று நீர்த்த நிலையிலோ, தண்ணீராகவோ ஒருநாளைக்கு மூன்று முறைக்கு மேல் வெளியானால் அதை பேதி என்று சொல்வார்கள். அந்தச் சமயத்தில், மலம் எத்தனை தடவை வெளியேறுகிறது என்பதைவிட, மலத்தின் தன்மை மாறி ஏன் தண்ணீராகப் போகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். பதினான்கு நாள்களுக்கு மேல் பேதி தொடர்ந்து இருந்தால் அதற்கு தொடர் பேதி (Persistant Diarrhea) என்று சொல்வார்கள். பேதியோடு, மலத்தில் ரத்தமும் சீழும் கலந்து வெளியேறுதல், காய்ச்சல், வயிற்று வலி போன்றவை இருந்தால் அதை அக்யூட் டிசென்டரி என்று சொல்வார்கள். *** பேதிக்கான காரணம் * ரோட்டா வைரஸ் * ஈ கோலி பேக்டீரியா * காலரா * சிகெல்லா * சால்மோனல்லா * காம்பெல்லோ பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் பேதி ஏற்படலாம். *** அறிகுறிகளும், பாதிப்புகளும் * உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன. * சத்துக் குறைபாடு ஏற்படும். * உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும். * புரோட்டின் சத்தும் வீணாகும். * பசி எடுக்காது. * ரத்த அளவு குறையும். * நாடித் துடிப்பும் குறையும். * ரத்த அழுத்தம் குறையும். * கை, கால்கள் சில்லிட்டுப் போகும். * வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும். * சிறுநீரகம் பாதிக்கப்படும். *ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும். * பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும். *** பரிசோதிக்கும் முறைகள் 1. பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக் குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம். * 2. குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம். * சிகிச்சைகள் பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது) திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம். வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல் கொடுக்கவேண்டும். இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி. *** தாய்மார்களுக்கான அறிவுரை 1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும். 2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும். 3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும். சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது) ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். கொடுக்க வேண்டிய அளவு * பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி. * 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி * ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி. * இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி. நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். சிகிச்சை முறை (மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது) குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும். மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். * எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும். * கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும். * திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது. * சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது. * பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது. * டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது. *** நன்றி-தினகரன் *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "