...

"வாழ்க வளமுடன்"

08 டிசம்பர், 2010

இடுப்புப் பயிற்சி செய்தால் முழங்கால் வலி நீங்கும்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வாரத்தில் இரண்டு நாள்கள் இடுப்புப் பயிற்சி செய்வதால் முழங்கால் வலி முற்றிலும் நீங்கும் அல்லது குறையும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.





அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகம் மற்றும் பர்டூ பல்கலைக்கழகம் ஆகியவை சார்பில் வலுவான இடுப்புக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு டிரேசி டயர்க்ஸ் என்ற விஞ்ஞானி தலைமையில் நடத்தப்பட்டது.

*

பொதுவாக ஓட்டப் பந்தய வீரர்கள் முழங்கால் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு இந்த ஆய்வின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டப் பந்தய வீராங்கனைகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்கு முழங்கால் வலியின் அளவைப் பொறுத்து 0 முதல் 10 வரை புள்ளிகள் கொடுக்கப்பட்டன.

*

3 புள்ளிகள் வரை இருப்பவர்கள் வலியின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள். 7 புள்ளிகள் மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மிக அதிக வலி உடையவர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டது.

*

இதில் முழங்கால் வலி அதிகம் இருந்த 11 வீராங்கனைகள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வாரத்தில் இரண்டு நாள்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 6 வாரங்கள் அவர்களுக்கு டிரட் மில் மூலம் இடுப்பை வலுவாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

*

பயிற்சி முடிந்த பின்னர் அவர்களுக்கு வலியின் அளவு 2 புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது.

*

சிலருக்கு வலி அறவே இல்லாமல் காணப்பட்டது. இதன் மூலம் இடுப்பு வலுவாக இருந்தால் முழங்கால் வலி குணமாகும் என்பது தெரியவந்திருப்பதாகவும் இந்த ஆய்வை இன்னும் அதிகம் பேரிடம் செய்து பார்க்கப் போவதாவும் டிரேசி டயர்க்ஸ் தெரிவித்தார்


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "