1. ஆறு “சின்ன’ சாப்பாடு:
உண்மையில், ஒரு நாளைக்கு ஆறு பிரிவாக பிரித்துத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து. நம் வசதிக்காக , எப்போது பார்த்தாலும் “புல் கட்டு’ கட்டி விடுகிறோம். டிபனில் இருந்து சாப்பாடு வரை ஆறு பிரிவாக பிரித்து சாப்பிட்டால், ஜீரணமும் எளிதாகும். இந்த ஆறில், ஜங்க் புட், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களுக்கு இடமில்லை.
*
2. வெள்ளை டேஞ்சர்:
நாற்பது வரை தான் அரிசி சாதம் போட்டு, கண்மண் தெரியாமல் சாப்பிடலாம்; அதற்கு பின் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதம் எவ்வளவு தான் சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்தில் பசிக்க ஆரம்பிக்கும்; ஆனால், சப்பாத்தி சாப்பிட்டுப் பாருங்க; மணிக்கணக்கில் பசிக்காது. சாதத்தில், கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது அதிகம் சேர்வது நல்லதல்ல; ஆனால், சாதம் இல்லாமலும் இருக்கக் கூடாது. அதில் உள்ள மாவுப்பொருளில் வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன.
*
3. புழுங்கல் நல்லதுங்க:
*
நகரங்களில் பெரும்பாலோர் கண்பசி கொண்டவர்கள். பார்க்க பிடித்தமாக இருந்தால் தான் சோற்றை ருசிப்பர்; புழுங்கல் அரிசி சாதம் என்றாலே இவர்களுக்கு அலர்ஜி; அதனால் தான், பச்சரிசியை கூட பாலிஷ் செய்து சமைக்கின்றனர். ஆனால், புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட்டு பழகினால், அவ்வளவு ௮. பச்சரிசி பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக்கொள்ளலாம்.
*
4. தண்ணி காட்டுங்க:
மாடு துவண்டு போனால் தண்ணி காட்டுங்க என்று சொல்கிறோம். மனிதனுக்கும் அப்படித்தான்; சாப்பிடுவதற்கு இடையே, உடலில் நீர்ச்சத்து தங்கியிருக்க தேவை கண்டிப்பாக தண்ணீர் தான். லேசான நாக்கு வறட்சியே இதை காட்டிக் கொடுக்கும். ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்துப்பாருங்க; உங்களுக்கு சோர்வு வரவே வராது; தலைவலி போயேபோச்சு.
*
5. ஓவரா கழுவாதீங்க:
அரிசியை களையும் போது, அதிகமாக கழுவி சுத்தம் செய்தால், அதில் உள்ள மாவுச்சத்துக்கள் நீங்கி விடும். அதனால், அதிகமாக கழுவ வேண்டாம். காய்கறிகளில், பழங்களில் உள்ள உரம், பூச்சி மருந்து துகள்கள் நீங்க வேண்டும் என்பதால், அவற்றை சுத்தமாக கழுவித்தான் ஆக வேண்டும். கழுவாமல் சாப்பிடக்கூடாது; சமைக்கக்கூடாது.
*
6. மலச்சிக்கலா:
மலச்சிக்கல் இருக்கிறதா? இரவு நேரத்தில் சாப்பிடும்போது, பப்பாளி பழத்தை சாப்பிட்டுவிட்டு, பால் குடித்து படுக்கைக்கு போங்கள்; காலையில் மலச்சிக்கல் நீங்கி விடும். பப்பாளியும், பாலும் சேர்ந்து சாப்பிட்டால்,பேதி ஏற்படும் என்பது தவறான தகவல் என்பது டாக்டர்கள் கருத்து.
*
7. சாலட் தெரியுமா?:
*
ஓட்டலில் வெஜிடபிள் சாலட் என்று 50 ரூபாய்க்கு வாங்கிச்சாப்பிட்டால் தான் சாலட் என்றால் என்ன என்று பலருக்கு தெரிகிறது. அதையே வீட்டில் செய்து சாப் பிட் டால் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று பார்ப்பதில்லை. சுத்தம் செய்த கேரட், வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி சாப் பிட்டால், உடலில் வைட்டமின், கனிம சத்துக்கள் சேருவது மட்டுமல்ல, பற்கள் சுத்தமாக இருக்கவும் உதவும்.
*
8. ஊறிய பாதாம்:
*
தீபாவளி, பொங்கல் தினங்களில் இனிப்பு வகைகளுடன் இப்போதெல்லாம் உலர்ந்த பழங்கள் பரிசாக கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதில், பாதாம் பருப்பு பற்றி பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.பாதாம் பருப்பு, சாதா கடைகளில் விற்கப்படுகிறது. பத்துபாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தோல் நீக்கி கடித்து சாப்பிட்டால் நல்லது. "பிபி' எட்டிப்பார்க்காது.
www.dinamalar.com
நன்றி தினமலர்.
***