...

"வாழ்க வளமுடன்"

29 ஆகஸ்ட், 2010

உங்கள் அனைவருக்கும் ஆழ்கடல் களஞ்சியத்தின் நன்றிகள்!

ஆழ்கடலுக்கு வந்த பார்வையாளர்கள் 10,050:-)இதுவரை ஆழ்கடல் களஞ்சியத்திற்க்கு வந்த பாற்வையாளர்கள் 10,050தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.


இந்த தளமான, ஆழ்கடலின் முத்துகளை எடுத்து, அதனை கோர்த்து மாலையாகவும், மற்ற அணிகளன்களாகவும் அணிவித்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றிகள்.

***


தேனீ தனக்கு தேவையான தேனை எந்த மலரில் இருந்தும் தேடி எடுத்து விடும்.அதுப்போல் நீங்கள் அனைவரும் நல்ல ஆரோகியமான தகவல்களை படிப்பதற்க்காக, தேடி ஆழ்கடலுக்கு வந்த உங்கள் அனைவரின் வருகைக்கும், உங்கள் ஆதரவுக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!


***

இந்த ஆழ்கடலில் முத்து எடுத்தது மட்டும் அல்லாமல் எங்களுக்கு ஊக்கம் தந்து சில ஜடியாக்களையும் ( ஆழ்கடலின் மாற்றங்களை மாற்றுவதர்க்கும் ), உங்கள் ஆரோகியமான, நல்ல கருத்துகளை தந்தற்க்கும்,

இன்னும் நல்ல தகவல்களை உங்கள் அனைவருக்கும் அளிக்க எண்ணம் வளுபெற செய்த்ததுக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!


***


அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

Total Posts :265
Total Comments :550இந்த தளத்திற்க்கு இதுபோல் பெயரை சூட்டிய என் அன்பு கணவருக்கு முதற்க்கண் நன்றிகள்.


இதுப்போல் ஒரு தளத்தை ஊக்குவித்த இமா அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என் தளம் இந்த அளவுக்கு அனைவரும் அறிய உதவிய தமிழிஷ் வெப் த‌ள‌த்துக்கு என் மனமாற்ந்த நன்றிகள்.

இந்த தளத்தை மேலும் மெறுகேற்ற உதவிய அதேகண்கள் டவுசர் பண்டிக்கும்,

அதே போல் வந்தேமாதரம் சசிக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


மேலும் எனக்கு ( இந்த தளத்தில் ) பலவற்றை சொல்லி தந்த இமா அம்மாவுக்கும், ஜலீலா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.மேலும் அதிகமான கருத்துரைகள் அளித்த அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.


இமா அம்மா.
ஜலீலா அக்கா.
கீதாச்சல் ( Geetha Achal )அக்கா.
ஸாதிகா அக்கா.
ஆசியா உமர் அக்கா.
வாணி.
ஜெய்லானி.
மேனகா அக்கா.
செல்வி (செந்தமிழ் செல்வி )அம்மா.
மனோ ( மனோ சாமிநாதன் ) அம்மா.
காஞ்சனா ( Kanchana Radhakrishnan ).
அம்மு (Ammu Madhu ).
அன்புடன் மலிக்கா.
அனாமிகா துவாரகன்.
மோனி.
விஜய் கிச்சன்.
அமுதா.
மயில் ( myl ).
சிநேகிதி.
ஹர்ஷினி அம்மா.
மாதேவி.
SASHIGA
♥ தூயா ♥ Thooya ♥
mathisundaresan

*

அண்ணாமலையான்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
சசிக்குமார்.
கவிதை காதலன்.
தமிழன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
டாக்டர் ஸ்ரீஜீத் (Dr. Srjith. )
DREAMER ( ஹரீஷ் நாராயண்0
ஸ்ரீ.கிருஷ்ணா.
பிரியமுடன்...வசந்த்.
விடிவெள்ளி.
அமைதி அப்பா.
இக்பால்.
விஜய் ஆனந்து.
கார்த்திக்.
சிவா.
டாக்டர் ராஜ்மேகன் (THE PEDIATRICIAN )
பலனியப்பன் கந்தசுவி PHD ஜயா.
யாதவன்.
வெறும்பய.
ராமு.
FOOD சகோதரர்.
விவேகநந்தா.
Ramjee Nagarajan
BONIFACE
கமலேஷ்.
தமிழ்தோட்டம்
Sathik Ali
செல்வமுரளி
vjvrk
venkat
Vijay Anand
vidivelli
thalaivan
பட்டாபட்டி..
அஹமது இர்ஷாத்
LK
விஜய்
Anbu ( கான் ).
VANJOOR
A.சிவசங்கர்
மதுரை சரவணன்
கலாநேசன்

*

உலவு.காம்மற்றும் கருத்துகள் போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


வேறு யாராவது பெயர் விட்டு இருந்தால் ( எனக்கு நினைவு இருந்த வரை இதில் பெயரை பதித்து உள்ளேன் ) என்னை மன்னிக்கவும்.

நல்ல பல தகவல்களை அவர்கள் தளத்தில் இருந்து எடுத்து போட அனுமதித்த தளத்திற்க்கும், மற்ற தளத்திற்க்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்.


***

அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்ற வாழ, வாழ்த்த வயது இல்லை என்றாலும் இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்.
***
"வாழ்க வளமுடன்"

பிரபா.
என் கண் அவர் தாமு.

பல் ஈறுகளிலிருந்து குருதி கசிவு


வாய்ப் பகுதியில் உண்டாகக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாகும். கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன் சீன நாட்டவர் இதற்கு யா-கோன் என்று தமது மொழியில் பெயரிட்டு அழைத்தார்கள். இதன் அர்த்தம், பற்களைச் சுற்றியிருக்கும் மென்மையான தசைப் பகுதியில் உருவாகும் நோய் என்பதாகும்.


தற்காலத்தில் விஞ்ஞானமும் மருத்துவமும் மிகவும் முன்னேறியிருக்கும் நிலையிலும் கூட, ஈறுகளிலிருந்து குருதி வடிதல் வாய்ப்பகுதியைப் பாதிக்கின்றது.


ஈறுப் பகுதியில் நோய் உண்டாவதற்கான அறிகுறியே இரத்தம் வடிதலாகும். சரியாக சொல்லப் போனால் ஈறிலிருந்து குருதி வடிதல், பல்லெயிற்று வீக்கம் என்ற நோயிற்கான அறிகுறியாகவே கூடுதலாக தோன்றும். இதைச் சரியாக கவனிக்காவிட்டால்; பின்பு இந் நோய் முற்றி, ஆபத்தான பற்குழி நோயை உண்டாக்கிவிடும். இவற்றிற்கும் சிகிச்சை செய்யாவிடில் பின்பு பற்கள் தானாகவே கழன்று விளத்தொடங்கும்.


கூடுதலானோருக்கு ஈறிலிருந்து குருதி வடிதல் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உருவாவதுண்டு. இது பொதுவாக இனிப்பு கூடிய மேற்கத்திய நாட்டு உணவுகளை கூடுதலாக உட்கொள்ளும் போது அவ் உணவிலுள்ள இனிப்பு, பற்களிலுள்ள பற்றீரியா கிருமிகளின் விருத்திக்குக் காரணமாகி, இக்கிருமிகள் ஈறுப் பகுதியை பாதிக்கத் தொடங்கும்.இந் நோய் உருவாகாமலிருக்க ஒரு நாளிற்கு இரு முறையாவது பல் துலக்குங்கள். அத்துடன் இனிப்புப் பண்டங்கள் உண்பதை குறைப்பதுடன், ஒழுங்கான இடைவெளியில், பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று உங்கள்பற்களைப்பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
நோய் உண்டாவதற்கான காரணங்கள்:


பற்களின் கழுத்துப் பகுதியை சுற்றியுள்ள மென்மையான தசைப்பகுதியில், பல்லெயிற்று வீக்கம் ஏற்பட்டு இதன் காரணமாக பற்களை தசையுடன் பிடித்து வைத்திருக்கும் வேர்கள் நலிவடைந்து போகும்.இனிப்பு பண்டங்களையோ அல்லது பானங்களையோ அருந்தியதன் பின்பு பல் துலக்காமல் விடும் போது இந் நேரங்களில் பற்றீரியாக் கிருமிகளின் விருத்தி அதிகரிக்கும். ஆகவே ஒழுங்கான முறையில் பல் துலக்குவதன் மூலமும், உணவை உட்கொண்ட பின்பு நன்றாக வாயை கொப்பளிப்பதன் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கலாம்.


பெண்கள் கர்ப்பமுற்றிருக்கும் போது ஈறுப்பகுதி கூடுதலாக மென்மையடைவதால், அதன் மூலம் குருதி வடிதல் அதிகரிக்கும். இந் நிலையில் கூடுதலாக பற்சிகிச்சை நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
விற்றமின் ஊ குறைவு, குருதி உறையாக் கேடு, வெண்புற்று நோய் போன்றன ஏற்பட்டாலும் ஈறிலிருந்து குருதி உண்டாக வாய்ப்புண்டு.நோயின் அறிகுறிகள்:


1. சில வேளைகளிரல் குருதி வடியும் போது சாதுவான நோவு ஏற்படும்.


2. பற்களை துலக்கும் போதோ, வாயைக் கொப்புளிக்கும் போதோ, உமிழ் நீரிலோ இரத்தம் காணப்படும்.


3. மொறுமொறுவான உணவுப் பண்டங்களை உட்கொள்ளும் போது குருதி வடிதல் உண்டாகும்.


ஈறிலிருந்து தான் குருதி வடிகிறதென்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்?


பற் சிகிச்சை நிபுணர் பற்களிற்கும் அதன் தசைக்கும் இடையில் நீண்ட கூரான இரண சிகிச்சை ஆயுதத்தை செலுத்தி பார்ப்பதன் மூலம் குருதி எங்கிருந்து வடிகிறதென்பதை கண்டு கொள்வார்.
இரத்தப் பரிசோதனை மூலம் குருதி உறையாக் கேடு நோய் உண்டாகியிருக்கிறதா என்பதை கண்டு பிடிக்கலாம்.


இந் நோயிற்கான சிகிச்சை முறைகள் என்ன?


பற்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் பற்றீரியாக் கிருமிகள் உண்டாதற்கான மூல காரணத்தை கண்டு பிடித்து அகற்றுதல் வேண்டும்.


விற்றமின் குறைவால் உண்டாகியிருந்தால் அதற்கான விற்றமின் மாத்திரைகளை எடுத்தல் வேண்டும்.
சிற்றிரஸ் பானங்கள், மொறுமொறுவான உணவுகள், கார உணவுகள், மதுபானங்கள், சிகரெட்டு போன்றவை குருதி வடிதலை மிகைப்படுத்தும்.


செயற்கையான பற்கள், குருதி வடிதலை மிகைப்படுத்தும். ஆகவே இவற்றை உணவை உட்கொள்ளும் போது மட்டும் போட்டுக் கொள்ளுங்கள்.


நீரில் தோய்ந்த பஞ்சையோ, அல்லது மெல்லிய துணியையோ குருதி வடியும் ஈறில் சிறிது நேரத்திற்கு வைப்பதன் மூலம் குருதி கசிவதை நிற்பாட்டலாம்.


மென்மையான பற் தூரிகை கொண்டு பற்களை துலக்கலாம். உப்புத் தண்ணீர், அல்லது அல்ககோல் சேர்ந்த வாய் கொப்புளிக்கும் திரவம் கொண்டு வாயை கொப்புளிக்குமாறு உங்கள் பற்சிகிச்சை நிபுணர் அறிவுறை வழங்கக் கூடும்.
ஈறிலிருந்து குருதி வடிதலை தடுப்பதற்கு வீட்டில் கையாளக் கூடிய முறைகள்.


காலையும், மாலையும், உப்புக் கலந்த இளஞ் சுட்டு நீர் கொண்டு, வாயை கொப்பளிப்பதன் மூலம் சவ்விலுள்ள வீக்கத்தை குறைத்து சுற்றோட்டத்தை ஒழுங்காக்கலாம்.

பற்களை ஒழுங்காக துலக்குவதன் மூலமும், பற்களிற்கும் மென்சவ்விற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் அகப்பட்டிருக்கும் உணவை பல்குத்தி கொண்டு துப்பரவு செய்தல் மூலமும் வாய்ப்பகுதியை சுத்தமாக பேணலாம்.


***


http://tamilvilihal.blogspot.com


***

"வாழ்க வளமுடன்"

வலிமிகுந்த குதிக்கால் அழற்சி

குதிவாதம் என்றால் என்ன?

பிளான்ரர் பசிரிஸ் என்பது உள்ளங் காலின் தசை நார்களில் ஏற்படும் அழற்சியாகும். உள்ளங்காலின் தசைநார் இழையங்கள் ஒன்று சேர்ந்த பலமான தசைப்பட்டை குதியிலிருந்து பாதத்தின் நடு எலும்பு வரை நீண்டு செல்லும். இதனை உள்ளங்கால் தசைப்பட்டை என்பர். அது பாதத்தின் வில் போன்ற வளைவினை தாங்கி உறுதியளிக்கிறது. தசைநார் பட்டையில் ஏற்படும் சிறிய காயங்கள் அழற்சியை மற்றும் ஏனைய நோய்க்குறிகளை ஏற்படுத்தவல்லவை. இக்காயங்கள் வழமையில் குதிக்கால் எலும்புக்கு அருகிலேயே ஏற்படுகின்றன.குதிக்கால் அழற்சியின் அறிகுறிகள் எவை?

பிரதான நோய்க்குறி வலியாகும். இது குதிக்கால் அடியில் எவ்விடத்திலும் வரலாம். பொதுவாக வலிக்குரிய பிரதான காரணமாக ஒரு குறித்த இடம் இனங்காணப்படலாம். இது அநேகமாக குதியிலிருந்து 4 சென்றிமீற்றர் முன்னோக்கி தொட முடியாத அளவுக்கு வலி இருக்கலாம். வழமையில் காலை நிலத்தில் வைக்கும் போது நோவு சிறிது குறையும். இருப்பினும் காலை எழுந்தவுடன் முதன் முதலில் கால் நிலத்தில் ஊன்றி நடக்கும் போது வலி மிக அதிகமாக இருக்கும். தொடர்ந்து நடக்கும் போது வலி அவ்வளவு இருக்காது. ஆனால் நீண்டதூர நடைப்பயணம் வலியை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும். திடீரென காலை கடின அசைவுகளுக்கு உட்படுத்தும் போது உதாரணமாக படிக்கட்டுகளில் நடக்கும் போது அல்லது பெருவிரல் நுனியால் நடக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் வலி அதிகரிக்கும்.குதிக்கால் அழற்சி எவர் எவர்க்கு ஏற்படலாம்?

இது மிகவும் பொதுவானது. பிரதானமாக 40வயதிற்கு மேற்பட்டவர்களை அதிலும் பெண்களை அதிகம் பீடிக்கிறது. விளையாட்டு வீரர்களிடையேயும் இது பொதுவாக காணப்படுகிறது. அத்துடன் பின்வரும் நிலைமைகள் இந்நோயை ஏற்படுத்தவல்லவை.


1) வழமையை விட அதிகமான நடத்தல், ஓடுதல், நீண்ட நேரம் நிற்றல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல்.


2) மிருதுத்தன்மை அதிகமற்ற காலணிகளை அணிதல்.


3) திடீர் நிறை அதிகரிப்பு, அளவுக்கதிகமான நிறை என்பன குதிப்பகுதிக்கு மேலதிக சிரமத்தை தோற்றுவிக்கும்.


4) உள்ளங்காலினை மிதமிஞ்சி பயன்படுத்தல் அல்லது அளவுக்கதிகமாக நீட்டல் உதாரணமாக விளையாட்டு வீரர்கள் அதிக தூரம் ஓடுதல் அல்லது அளவுக்கு மீறிய ஓட்டம்.


5) குதிக்கால் தசைநார் இறுக்கமடைதல்(குதிக்காலின் மேலாக பின்காலில் தசைப் பகுதியின் அடிப்பாகத்தில்) வயது முதிர்ந்தவர்கள் விடயத்தில் உடனடி காரணம் ஒன்றிருக்கும். குதிக்கால் எலும்பில் வளர்ச்சி ஏற்பட்டதாக (இச்டூஞுச்ணஞுதட்) நம்புவர். பலர் விடயத்தில் ஒரு குதிமுள் இருப்பதுண்டு. ஆனால் நோவுக்கு அது வழமையில் காரணமல்ல.


குதிக்கால் அழற்சிக்கான சிகிச்சைகள் எவை?


வழமையில் வீக்கம், வலி காலப் போக்கில் குறைவடைந்து விடும்.

உள்ளங்கால் தசை இழையங்கள் எலும்பை சூழவுள்ள இழையங்களைப் போல் மெதுவாகவே குணமடையும். இதற்கு பல மாதங்கள் அல்லது அதற்கு மேலும் செல்லலாம். இருப்பினும் பின்வரும் முறைகளில் விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இம்முறைகளில் மிக துரிதமாக ஒரு சில வாரங்களிலே குணமடையலாம்.


1) பாதத்தினை கூடியவரை ஓய்வில் வைத்திருக்கவும், அளவுக்கு மீறிய நடத்தல், நிற்றல், ஓடுதல் செயற்பாடுகளை, பாதத்தினை நீட்டுதல் போன்றவற்றை தவிர்க்கவும். மெதுவான நடை மற்றும் பயிற்சிகள் நன்மையளிக்கும்.

அவை கீழே தரப்பட்டுள்ளன.

2) பாதணிகள் வெறும் காலுடனோ அல்லது கரடுமுரடான தரையிலோ நடக்க வேண்டாம். மிருதுத் தன்மையான குதிப்பகுதியுடைய சப்பாத்துகளை சிறந்த வில் போன்ற வளைவுடைய பாதணிகளை தெரிவு செய்யவும். திறந்த பாதணிகளை விட லேஸினால் தைக்கப்பட்ட பாதணிகள் விளையாட்டுக்கு உகந்தவை. பழைய அல்லது கிழிந்த சப்பாத்துகளை தவிர்க்கவும். அவை மிருதுத்தன்மையை அளிக்க மாட்டாது.

3) குதி உயர்ந்த பாதணிகள் குதிக்காலிற்கு பஞ்சு போன்று மிருதுத் தன்மையான பாதணிகளை எங்கும் வாங்கலாம் அல்லது இது போன்றவற்றை சப்பாத்துக்களில் இடுவதும் நன்மையளிக்கும். மென்மையான துணி வகைகளை பயன்படுத்தவும் இதன் நோக்கம் குதிப் பகுதியை ஒரு செ.மீற்றரினால் உயர்த்துவதாகும். குதி மிகவும் மென்மையானதாக இருக்குமானால் அப்பகுதி பதியக் கூடிய நைவுகாப்பு உறையில் ஒரு பள்ளத்தை ஏற்படுத்தி விடலாம். இதனால் மிருதுவான குதியின் பகுதி சப்பாத்தின் உட்புறத்தில் பதியமாட்டாது.

4) பரசிற்றமோல் போன்ற நோவாற்றிகள் நோவை குறைப்பன. சிலவேளைகளில் வீக்கத்தடுப்பு மருந்துகள் (ஐஞதணீணூணிஞூஞுண போன்ற) பயன்தருவன இவையும் நோவாற்றிகள் தாம். ஆயினும் வீக்கத்தை தடுப்பதுடன் சாதாரண நோவாற்றிகளிலும் சிறந்தவை. சிலர் வீக்கத்தடுப்பு மருந்து கலந்துள்ளவையான கிறீம் வகைகளை பூசி நோவை ஆற்றுவதும் உண்டு.

5) பயிற்சிகள் : மெதுவாகவும் ஒழுங்கு தவறாமலும் குதிக்கால் தசை நார்ப் பகுதியை நிமிர்த்துதல் வேண்டும். இதன்போது உள்ளங்கால் தசைநார் ஆழ் தசைப்பட்டை நோவை தளர்த்தும். காரணம் உள்ளங்கால் பஸ்சிரிஸ் உள்ள சிலருக்கு குதிக்கால் தசைநார் இறுக்கமடைந்திருக்கிறது. இதனால் குதிக்காலின் பின்பகுதி இழுப்பது போலிருக்கும். அத்துடன் உள்ளங்கால் தசை நார் சூழ் தசைப்பட்டையை இறுக்கமடையவும் செய்து விடும். அத்துடன் நீங்கள் இரவு முழுவதும் உறங்கும் வேளைகளில் உள்ளங்கால் தசை நார்ப்பட்டை தானாக இறுக்கமடைந்து விடுகிறது. (இதனாலேயே காலையில் நோவு அதிகமாகிறது)பின்வரும் பயிற்சிகள் நிவாரணம் தருவன:

1. ஒரு சுவரிலிருந்து 2 3 அடி விலகி நிற்கவும், பாதங்கள் குதிக்கால் நிலத்தில் ஊன்றியபடி முழங்கால்களை நிமிர்த்தி வைத்துக் கொண்டு சுவருடன் சாயவும். பின் காலின் தசைப் பகுதியும், குதிக்கால் தசை நாரும் இறுக்கமாக இருக்கும். சில வினாடிகளுக்கு இவ்வாறு நிற்கவும். 10 தடவைகள் இவ்வாறு செய்யவும். நாளொன்றுக்கு 5, 6 தடவைகள் இவ்வாறு செய்யலாம்.


2. முழங்கால் 90 பாகையில் மடிந்திருக்கும், பாதங்களும், குதிக்கால்களும் நிலத்தில் நன்றாக பதியும்படியும் ஒரு இருக்கையில் அமரவும். இப்பொழுது குதிக்கால்கள் அப்படியே இருக்க பாதங்களை மேல்நோக்கி உயர்த்தவும். இப்பொழுதும் குதிக்கால் தசை நார்களும் பின் கால் தசைப் பகுதியும் இறுக்கமாக இருப்பதை உணர்வீர்கள்.இதனால் சற்று வேறுபட்ட தசை நார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது. மீண்டும் பழைய நிலைக்கு வந்து சில வினாடிகள் அமர்ந்திருங்கள். இவ்வாறு 10 தடவைகளும் நாளொன்றுக்கு 5, 6 தடவைகளும் செய்தல் வேண்டும்.


இப்பயிற்சியின் நோக்கம் தசை நார்களையும், தசை நார் சூழ் தசைப்பட்டையையும் குதிக்காலிலிருந்து மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மெதுவாக தளரச் செய்வதாகும். ஒரு ஆய்வின்படி நீட்டி நிமிர்த்தும் பயிற்சிகள் பெரும் பயனை அளித்துள்ளன.

3. ஊக்கமருந்துகள் மேற்படி பயிற்சிகளுக்கு குணப்படாத நோவுகளுக்கு ஸ்ரீரொய்ட் ஊசி மருந்துகளை கொடுக்கலாம். இதனால் பல வாரங்களுக்கு நோவிலிருந்து நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை பிரச்சினை தீர்ந்தும் விடலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும் இது வெற்றியளிப்பதில்லை. ஸ்ரீரொய்ட்ஸ் வீக்கத்தை தடுத்து நிறுத்தும். சில வேளைகளில் முதலாவது ஊசிக்கு குணமேற்படாத நிலையில் மேலும் சில ஊசிகள் ஏற்றப்படலாம்.பிற சிகிச்சைகள்:


சிலர் இரவில் பன்டேஜ் போட்டுக் கொண்டு நன்மையடைகிறார்கள். இதனால் உள்ளங்கால் தசைப்பட்டை இறுக்கமடைவது தடைப்படலாம். (பென்டேஜ் கட்டுவதால் பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்கள் கிட்டுகின்றன) சிக்கலான நிலைமைகளில் காலின் கீழ்ப்பகுதிக்கு ஒரு பிளாஸ்ரர் போடப்படுகிறது. இது ஓய்வு, பாதுகாப்பு, பஞ்சணைப்பது போன்ற நிலை, சிறிதளவு நீட்டுவது, நிமிர்த்துவது போன்ற நிலையை உள்ளங்கால் தசைப்பட்டைக்கு குதிக்கால் தசை நார்களுக்கு ஏற்படுத்துகிறது. விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் முன்ரும் பின்னரும் ஐஸ் மசாஜ் ஏற்பாடு செய்கின்றனர்.அறுவைச் சிகிச்சை:


மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படலாம். மேலே கூறப்பட்ட சிகிச்சை முறைகளால் 12 மாதங்களுக்கு மேலாக குணப்படாத நிலையிலேயே அறுவைச் சிகிச்சை சிபார்சு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை எப்போதும் வெற்றியளிப்பதில்லை. சிலருக்கு இது சிக்கலை ஏற்படுத்தி விடும் என்பதால் இதனை இறுதித் தீர்வாகவே கருதலாம்.


***


நன்றி தமிழ்விழிகள் தளம்.

***


"வாழ்க வளமுடன்"


உள்நாட்டு மூலிகைப் பயன்கள்...


பற்பசையும் சோப்பும் தயாரிக்கும் சில பன்னாட்டு நிறுவனங்கள் தம் அண்மைத் தயாரிப்புகளில், மூலிகைகளைச் சேர்த்துப் புதுமை படைத்துள்ளன. பல உள்நாட்டு மூலிகைகளின் பட்டியலைச் சொல்லித் தங்கள் தயாரிப்புகளின் விஷேசத்தை ஊடகங்களில் உரத்துக் கூறுகின்றன. இதன் அர்த்தம் யாது?

உள்நாட்டு மூலிகைப் பயன்களை இப்போது தான் அவை கண்டுபிடித்தனவா என்ன? இல்லை. உண்மையில், ஒரு நாட்டின் தட்ப வெப்பங்களில் விளையும் மூலிகைகளே, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் வைத்தியர்கள் பொறுப்பை ஏற்கின்றன. இயற்கையின், பரவலாக்கும் விசேஷ குணம் இது. ஆங்கில ஆதிக்கம், அழித்த பல சுதேசிப் பயன்பாடுகளில் மருத்துவமும் ஒன்று. நகரில், ஆங்கிலப் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக முளைத்திருக்கும் தீமைகளில் ஒன்றான அலோபதி மருந்துக்கடைகள், இந்த உண்மைக்குச் சாட்சியம். எனினும், ஒரு ஆங்கில ஆதிக்கம் இருந்த பூமியில் பன்னாட்டு ஆதிக்கம் நேர, அவற்றில் ஒன்றான இந்த வியாபார நிறுவனங்கள், திடுமென தமிழ்நாட்டு மூலிகைகளைப் பயன்படுத்தும் காரணங்கள் என்ன? இரண்டு. ஒன்று, வித்தியாசம் எதையேனும் செய்து, வியாபாரத்தை விருத்தி செய்வது, மற்றது, இயல்பாகவே தமிழர்களின் பார்வை தம் மண்ணை நோக்கித் திரும்பி இருப்பது.

இது ஒரு சாதகமான நல்ல அம்சம். வேப்ப எண்ணெயைக் கொண்டும், துளசியைக்கொண்டும் சோப்புகள், பல மருந்துகளால் ஆன முகப்பூச்சிகள் எல்லாம் கடைவிரித்திருக்கின்றன. அண்மையில் கல்லூரி மாணவிகள், கைத்தறி புடவையில் ஈடுபாடு காட்டியது போல, இருபாலரும், சித்த ஆயுர்வேத மருந்துப் பொடிகளில் ஆர்வம் கொள்கின்றனர். கல்வி தொடர்பாகத் தமிழ் மொழிக்கு நியாயமாக முதல் இடம் அளிக்கக் கோரும் இயக்கம் கனிந்து கொண்டிருக்கிறது. சுதேசிக்கலர், பவன்டோ போன்ற பானங்களின் இடத்தைப் பன்னாட்டு நிறுவனங்கள் பெரும் முயற்சியில் கைப்பற்றி இருக்கின்றன. தமிழர் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில், வாழ்க்கை முறையில், "தமிழம்" இல்லை. தமிழ் மண்ணோடு, தமிழ்ப்பண்பாட்டோடு இணைந்த சாரம், தமிழர் வாழ்க்கையில் இல்லை. தமிழ்ப்பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழக்கங்கள், தமிழர் வாழ்வில் இல்லை.

சேர சோழ பாண்டிய மற்றும் வேளிர்களாடு, அவர்களின் குழப் பெயர்களோடு இணைந்த சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்பன போன்ற பெயர்களாலும், தம் ஊர், தம் சாதிகளாலுமே, தமிழர் சிந்தனை குறுகி இருந்தது. தமிழ் அறிஞர்களான புலவர்களே அன்று, இவற்றை இணைத்துத் "தமிழகம்" என்றார்கள். தமிழ் என்பது மொழியோடு இணைந்த வெறும் சொல்லாக அர்த்தப்படவில்லை. மாறாக, தமிழ், தமிழ் பேசும் இனமான தமிழர், அவர் வாழ்ந்த இடமான தமிழ் மண் என்பதாகவே தமிழ் என்னும் சொல், பொருள் கொண்டது. தமிழ் என்னும் சொல் இலக்கண, இலக்கியத்தையும், அகப்பெருள் பண்பாட்டையும் குறித்தது. பண்பு அடிப்படையில் தமிழ், இனிமை, வீரம் என்று பல பொருளைக் கொண்டது. சங்க காலம் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரை, தமிழை முன்வைத்து, தமிழனைத் தமிழக மனிதனாக உருவகித்த செயற்பாடு, பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் சரிந்தது. ஆரிய, சமஸ்கிருத ஊடுருவல், தமிழர் வாழ்வை, அதன் சத்தான பல பகுதிகளை மாற்றிப் போட்டது- தமிழர்கள் தமிழை தொடங்கி 700 ஆண்டுகள் நடந்து, 10-ஆம் நூற்றாண்டில் வெற்றியைக் கண்டது.

தமிழர் வாழ்க்கையில் மிக முக்கியமான, தமிழர் கண்டுபிடிப்பான, தாம் வாழும் வாழிடங்களுக்குச் சுற்றுப்புறத் தாவரங்களின் பெயரையே சூட்டிக் கொள்ளும் அசலான தமிழ்ப் பண்பாடு குலைக்கப்பட்டது. தில்லை மரங்கள் சூழ்ந்த ஊரைத் தில்லை என்றே அழைத்தனர். தமிழர். அது சிதம்பரம் ஆயிற்று. மயிலாடுதுறை மாயவரம் ஆயிற்று, பழைய மலை அல்லது பழமலை விருத்தாச்சலம் ஆயிற்று, குளம், தீர்த்தம் ஆயிற்று. இயற்கையோடு இரண்டறக் கலந்திருந்த தமிழ் வாழ்வு, பிடுங்கப்பட்டு மதங்களோடு சேர்த்துக் கட்டப்பட்டது. தங்கள் நிலத்தோடு, மரங்களோடு, பூக்களோடு வாழ்ந்த தமிழ் வாழ்க்கை, கோயிலோடு பிணைக்கப்பட்டது. ஒரு இன மக்களின் மண் சார்ந்த மனோபாவங்கள் அழிக்கப்படுகிறபோது, தமிழர்களின் மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமும் அபகரிக்கப்பட்டு அவர்களின் வெற்றிடத்தில் மதம் திணிக்கப்பட்டது- அருண்மொழித்தேவன், ராஜராஜன் ஆன பிறகு, அவன் ராஜரீகம் எத்தன்மைத்தாய் இருக்கும் என்பதில் வியப்படைய வேண்டியதில்லை.

வாழும் நிலம், தட்ப வெப்பம், நீர், உணவு ஆதாரங்களே, பண்பாட்டைத் தகவமைக்கும் காரணங்கள். தமிழர்களின் இசை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை நிலங்களை?, சூழலை ஆதாரமாகக் கொண்டவை. அந்த நிலங்களின் பெயர்களிலேயே பண்கள், இசைச்கருவிகள் இருந்தன. தமிழர் இழந்த ஆகப் பெரும் செல்வம், இசை, இன்றைய கர்நாடக சங்கீதத்தின் தோற்ற மூலமாக இருந்தது. பழந்தமிழர் இசையின் ஆதி இசை, இது வைதிகம் வளர்ந்த காலத்துச் சமஸ்கிருத வடிவம் ஏற்றுப் பின்னர், தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கு பேசி வளர்ந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டியது. கீர்த்தனைகளின் மொழி மாறியதேயன்றியும், இந்துஸ்தானி இசை கர்நாடக இசையோடு கொண்டும் கொடுத்தும் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டது. இந்துஸ்தானியே, கர்நாடக சங்கீதத்தின் குட்டி எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் வைதிகத்தை எதிர்த்து கடுமையாக ஐந்து, ஆறு நூற்றாண்டுகள் போர் செய்து தமிழ் மண்ணில் வேரூன்றிய பௌத்தம் மற்றும் சமணம் ஆகிய மதங்கள், சங்கீதத்தை, நாட்டியத்தை, கூத்தைத் தத்தம், தத்துவ வழியில் நின்று புறக்கணித்தன. கடுமையான "ஒழுக்க"மும், துறவும், உணவு முறையும் கொண்டிருந்த சமணம், ஓரளவு நெகிழ்வுற்ற பௌத்தம், இசையையும் கூத்தையும் தம் கையில் எடுத்திருக்குமேயானால், தமிழக வரலாறு மாறி இருக்கும். ஏழாம் நூற்றாண்டு தொடங்கி நடந்த பக்தி இயக்கமும் தோன்ற வழியற்றுப் போயிருக்கும். மற்றும் ஒரு முக்கிய சமூக நிகழ்வும் உண்டு. இசையைத் தம் வாழ்வாகக் கொண்டிருந்த பறையர், துடியர், பாணர்கள், பாடினிகள் சமூக வாழ்விலிருந்துமே விலக்கி வைக்கப்பட்டமை, தமிழர் பண்டை இசையையும், விலக்கி வைக்கப்பட்டதாக ஆயிற்று. கோயில்கள் கலாச்சாரப் பிரதேசமாக ஆக்கப்பட்டுவிட்டபின், கோயிலுக்குள் பிரவேசம் மறுக்கப்பட்ட ஆதி தமிழர்களின் இசை எங்ஙனம் வளர்ச்சியுற முடியும்? இந்த விபரீதத்தின் இன்னெரு பக்கமே. தமிழ்க் கோயில்களில் தமிழ் வழிபாடு, தமிழ்க் குடமுழுக்கு இல்லாமையும்.

தமிழர்களின் மண்ணும் இசையும் நிறம் மாறியபின், அவர்களின் இறைவர்கள் மாறினர். குன்றின் தலைவனாம் குறிஞ்சித் தலைவன், அழகையுடைய முருகன், ஸ்கந்தன் ஆக்கப்பட்டான். ஏற்கனவே அவனுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது. அவன் காதல் மனைவியின் பெயர் வள்ளி. வைதிகம், தங்கள் பங்களிப்பாகத் தேவயானையைத் திருமணம் செய்வித்தது அவனுக்கு. சிவப்பானவன் என்ற பொருளில் சிவன் என்றழைக்கப்பட்ட இறைவன், முருகனுக்குத் தந்தையானான். பார்வதி என்பவள் மனைவியானாள். "கதையல்ல நிஜம்" நிகழ்ச்சியில் பிரிந்தவர் கூடுவது போல, அன்றைக்கும் இந்தக் கதை நிஜமாயிற்று போலும். பாலைக்கடவுள், கொற்றவை, இரு உருவம் எடுத்தாள். காளி என்றும், சிவன் மனைவி என்றும் ஆனாள். இப்படியாகத் தமிழர்கள் அறியாத கடவுளர்கள் பெருகி, ஏறக்குறைய பாரதி காலத்து (1921) இந்திய ஜனத்தொகை அளவுக்குப் பல்கினர் - முப்பத்து முக்கோடி.

வடவேங்கடமும், தென்குமரியும், இருபக்கக்கடல்களும், தமிழ்நாட்டின் எல்லைகளாக ஒரு காலத்தில் இருந்தன. இன்றைய மலையாளமும் (மலைஞாலம்) கன்னடப் பெரும் பகுதியும், ஆந்திரப்பகுதியும் தமிழ்நாடேயாகும். எருமை நாடு மகிஷாசுர நாடு ஆகி, மைசூர் ஆனது. காவிரி, தென் தமிழ்க்குமரி, காவிரியை இழந்தோம். பவானியை இழக்கப் போகிறோம். பவானியில் கேரளாவில் அணை கட்டுகிறார்கள் என்று செய்தி வருகிறது. மலைவளம், வீரப்ப அரசால் ஆளப்பட்டுத் தனித்தீவாகியிருக்கிறது. உதகையை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பல பறவை இனங்கள். மர இனங்கள் அழிந்தே போயின. இன்றைய சென்னை நகரில் மட்டும் 19-ஆம் நூற்றாண்டில், சுமார் நூறு ஏரிகள் இருந்தன. வள்ளுவர் கோட்டம் இருக்கும் பகுதிக்கு ஏரிக்கரை என்பதே பழைய பெயர். ஏரி அப்பால் ஏறிப்போன இடத்தை முப்பால் அறிஞரும் அறியார். தேவி குளம், பீர்மேடு தமிழகத்துக்கு வேண்டும் என்று சிலர் சொன்னபோது, "மேடாவது, குளமாவது" என்ற காமராசர், இப்போதிருந்தால் வருத்தப்படுவார்.

தமிழர், அகம், புறம் என்று வகுக்கப்பட்ட வாழ்வில் திளைத்தனர் என்பார்கள். அகம், புறம் என்பது காதலும் வீரமும் ஆம். 24 மணி நேரமும் காதலிப்பது என்பது சாத்தியம் இல்லை. (சிட்டுக்குருவி மற்றும் அஸ்வகந்தி லேகியம் சாப்பிட்டாலும் கூட) அதே போல் 24 மணி நேரச் சண்டையும் ஆகாது. இடைப்பட்ட நேரத்தில் தமிழர் என்ன தான் செய்தனர்? அரசர்கள், காலை நேரங்களில் தங்கள் அரியாசனத்தில் அமர்ந்து மக்களுக்குத் தரிசனம் தந்தார்கள். வழக்குத் தீர்த்தார்கள். நெய்யோடு புலால் கலந்த அரிசிச்சாதம் சாப்பிட்டார்கள். பாணர்களுக்குப் பணம் தந்தார்கள். பின்னர், தம் மார்பால் தம் உரிமை மகளிரைத் தழுவிக்கொண்டு ஓய்வு கொண்டார்கள். தீயோரைத் தண்டித்தார்கள். வீரர்களுக்குச் சௌகர்யம் செய்து கொடுத்தார்கள். சுற்றத்தை வறுமை இன்றி வாழ வைத்தார்கள் (உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாட்டு-புறநானூறு).

அரச வாழ்க்கை இப்படியானது. புலவர்கள் குடும்பத்தில் வறுமை மிஞ்சியது. தொழிலாளர்கள், உழைத்தார்கள், இயற்கையாகவே சுரண்டப்பட்டார்கள். சங்க இலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைச் சித்திரங்கள். புனைவும், யதார்த்தமும் கூடியவை. கடும் யதார்த்தமும், மிகையும் உண்டு. பொதுவாக, அவை மேட்டுக்குடி வாழ்க்கையைச் சித்தரித்தன. வாழ்வின் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் இலக்கியத்தகுதி பெறாமல் தான் இருந்தார்கள்.

ஒன்று நிச்சயம்.

தமிழனின் வீரம், புறம் கொடாத்தன்மை, மானத்துக்காகப் போரிடல் இவை இன்றும் நீடிக்கும் தமிழ்ப் பண்புகள், தன்னிடம் இருப்பதைப் பங்கிட்டுக் கொடுத்தல் இன்னும் நீடிக்கும் தமிழ்க்குணம்.

பழந்தமிழர்கள், அரசர்கள், அந்தணர்கள் என்கிற பிராமணர்கள், போர் வீரர்கள், சேவகர்கள், அரசு சார்ந்த மேல் கீழ் உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள், நெசவு மற்றும் குயவர்கள், கிராம அதிகாரிகள், ஏவலர்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள் என்று பிரிக்கப்பட்டு வாழ்ந்தார்கள். சோழச்சமுதாயம் இடங்கை, வலங்கை என்ற சாதிப்பிரிவினையைக் கொண்டது. அரசனைச் சார்ந்தோர் மட்டுமே (இன்னைய ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மேல் அதிகாரிகள், கார்பரேட் தலைவர்கள்) நல்ல, சுகமான வாழ்க்கை நடத்தினர். கல்வி பொது வாய்ப்பாகச் சங்க காலத்துக்குப்பின் இல்லை. பெண்கள், எக்காலத்திலும் உயர்தரத்தில், மனித மரியாதைகளுடன் இருந்ததாகச் செய்தி இல்லை. பழைய தமிழ்ச் சமுதாயம் ஆண் சமுதாயமே, பரத்தையர், விலை மகளிர் உண்டு என்பதால் விபசாரத்தைப் பேணிய சமுதாயம் உயர் சமுதாயமாக இருக்க முடியுமா என்ன?

நிலத்தை ஐவகையாகப் பிரிந்த தமிழர்கள், காலத்தையும் மிக நுட்பமாகப் பிரித்தார்கள். பெரும்பொழுது என்ற பகுப்பில், கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில் முதுவேனில் அடங்குவன. காட்டை அழித்து, நீர் நிலைகளையும் அழித்த பின் காலங்கள் குழம்பின. இன்றைய தமிழனுக்குப் பெரும்பொழுது இல்லை. காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் வைகறை என்ற சிறுபொழுதின் வகை 10-15 உத்தியோக வாழ்வில் குழம்பித்தான் போகும். இல்லறம் நல்லறம். "பிரேமானந்த" வாழ்க்கை விலக்கு. விதி விலக்கிற்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. "ஐயப்போ" மற்றும் ஆதிபராசக்திச் சிவப்பு இல்லை. அன்றைய திருமணம், இன்றைய சிர்திருத்த மணம் மாதிரிதான் இருந்தது. மாமுது பார்ப்பான் மறைவழி காட்டும் நிலமை சிலம்பு காலத்தில் வந்தது. பெண்கள் கற்பு வலியுறுத்தப்படடது. கவனிக்கவும், பெண்கள் கற்பு மட்டும்தான். கணவன் பிரிந்து தாசி வீட்டுக்குப் போனால் பெண்களுக்குக் கோபம் வராது. ஊடல்தான் வரலாம்.

கணவனை இழந்த பெண், உடன்கட்டை ஏறினாள். பல சமயம், கைம்மை நோன்பு நோற்றாள். தலையை மழிக்கும் பழக்கம் தமிழருடையது.

வரி, கொஞ்சம் கூடுதல்தான். மன்னர்களின் அந்தப்புர ஜனத்தொகை கூடினால் வரியும் கூடியது.

பொதுவாக மக்கள் அரிசிச் சோறு (புழுங்கல் அரிசி) உண்டனர். வரகும், சாமையும் உண்டதுண்டு. கடுகுதாளித்து, மிளகு, புளி உப்பு சேர்த்து சமைத்தார்கள். பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மிளகாய் பஜ்ஜி தெரியாது. மிளகாய் அன்று இல்லை. புளிப்புக்கு மாங்காய், நாவல்பழம் பயன்பட்டது. ஊறுகாய் இருந்தது. வாழை, பலா, மாங்காய், நுங்கு, இளநீர், சோம்பு, வள்ளிக்கிழங்கு போன்றவையும் இருந்தன. எல்லாச் சாதியாரும் பார்ப்பாரும் இறைச்சி உண்டனர். கள் குடிக்கும் நல்ல பழக்கம் (பிராந்தி, விஸ்கி கிடைப்பதில்லை) தமிழரின் சுகப்பழக்கம், தேள் மற்றும் பாம்பு விஷம் போல் போதை ஏறவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆண்கள் (உயர்குடி) வேட்டியும் மேலாடையும் அணிந்தார்கள். பெண்கள், கீழே புடவை மட்டும் கட்டினர். மார்புகளை மறைக்கும் பழக்கம் இல்லை. நகரங்களில் மாடி வீடுகள் இருந்தன. கிராமங்களில் பெரும்பாலும் குடிசைகள்தான். பெண்கள் பந்து விளையாட்டிலும், பல்லாங்குழியிலும் நேரம் போக்கினர். (அக்காலத்தில் டி.வி. இல்லை அழவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது) எனவே, விளையாட நேரம் இருந்தது. கூத்துக்கள் நடந்தன. ராஜாக்கள், மேட்டுக் குடிகள் கலைகள் வேறு, மக்கள் கலை வேறு.

திரும்பிப் பார்த்தது போதும், கொஞ்சம் முன்னால் பார்க்கலாம். தமிழன் என்ற அடையாளம் அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையிலும், மேலும் அது முற்றும் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட்டாக வேண்டும். சில கேள்விகள் நமக்கு உதவ முடியும். தமிழனை இனம் காட்டுவது எது? இரண்டாயிர ஆண்டுகாலத் தொடர்ச்சியாக வரும் தமிழ்ப் பண்பாட்டின் இன்னும் இருக்கும் மிச்சம் எது? அது இன்னும் செழிப்பாகப் போஷிக்கப்பட மேற்கொள்ளப்படவேண்டிய குறைந்த பட்ச செயல்திட்டம் என்ன? சிறப்புற உருவாகி வரும் தலித். பெண்கள் இயக்கங்களை இந்த மீள் செப்பத்தில் இணைத்துக் கொள்வது எப்படி?

வைதிகத்திலிருந்தும் முற்றாகத் துண்டுபடுத்திக் கொள்ளும் தமிழ் முயற்சிகள் ஊக்குவிடப்பட வேண்டும். ஓரளவு சமய, சாதி சாராத பொது இலக்கியமாகத் தமிழ்ச் சமூகம் ஏற்றுக் கொண்ட திருக்குறளுக்கு இந்த முன் நகர்த்தலில் இருக்கும் பங்கு என்ன? சிலப்பதிகாரக் கண்ணகியிடம் இந்தவிதச் சிந்தனைக்குத் தர ஏதும் இருக்குமா? "பீடன்று" என்ற சொல்லும், கவுந்திக்கு அவள் அருளிய பொதுச் சொற்களும் அவையில் அவள் நிகழ்த்திய உரையும் இக் கண்ணோட்டத்தில் என்ன பயன் தரும்? சங்க இலக்கியங்களின் ஊடாகப் பெறக்கூடிய தமிழ்ப் பொதுப்பண்புகள் என்ன? இருபதாம் நூற்றாண்டு தொடங்கி பின்னோக்கி எழுதப்படவேண்டிய தமிழ் தமிழின மக்கள் வரலாற்று நூல்களின் தேவை யோசிக்கப்பட வேண்டும். பிராந்திய மாவட்ட வரலாறுகள் எழுதப்பட்டவை. தொகுக்கப்படவேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளில், வைதிகம், சாதி, வர்க்கம் ஆகியவைகள் மேல் எடுக்கப்பட்ட போராட்டங்களின், எழுச்சிகள் வராறுகள் தொகுக்கப்பட வேண்டும். வாய்மொழி வரலாறுகள், நாட்டுப்புறக்கதைகள், பாடல்கள் இந்த வராற்றில் பெரும் பங்கு எடுக்க முடியும் என்பது உணரப்பட வேண்டும்.

தமிழ் இசைத்துறையில், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், தமிழிசை மூவர்கள் முதலான மாற்றுச் சிந்தனைகள் தொகுக்கப்பட வேண்டும். தமிழ் நாடக கூத்துக்களின் அசல் வடிவம் கண்டு தேர வேண்டும். உலகத்தின் சகல அறிவுத்துறைகளின், கலை இலக்கியங்களின் உச்சங்கள் தமிழுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். தமிழின் அற்புதப் பங்களிப்புகள் மேலை மொழிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, உடனடியாகச் செய்யத்தக்கது. தொடக்கக்கல்வி, மேல்நிலைக்கல்வி ஆய்வுக் கல்வி, அறிவியல் தொழில் நுட்பக்கல்வி ஆகியவற்றில் தமிழ் முழுப் பங்கு வகிக்குமாறு செய்யப்பட வேண்டும். கல்வி, மத்திய அரசின் பட்டியலில் இருந்து முழுமையாகத் தமிழ்நாட்டு அதிகாரத்துக்கு உட்பட வேண்டும். தமிழகத்துக்குத் தமிழ் அரசிடம் இருந்து எந்த அரசுத்துறையிலிருந்தும் வரும் அறிக்கைகள், தமிழில் இருந்தாக வேண்டும். தமிழக நீதிமன்றத்தில், தமிழ் வழக்கறிஞர்கள், தமிழ் நீதிபதிகள், தமிழ் வாதி பிரதிவாதிகளிடம் தமிழில் பேச ஆணையிடும் வழிவகை காணப்படவேண்டும்.

இவை அனைத்துமே பல்வேறு காலமாகத் தனிமனிதர்களாலும் அமைப்புகளாலும் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எனினும் இவை தொகுக்கப்படவில்லை. இவை சரியாக விமர்சிக்கப்பட்டு ஆவணப் படுத்தப்படவில்லை.

வைதிகம், உயர்சாதி, மேல்வர்க்கக் குணாம்சங்கள் கொண்டவர்களே தமிழுக்கும், தமிழ் இனத்துக்கும் விரோதிகளாக இருக்கிறார்கள். பதவி அரசியல், தமிழனைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பன்னாட்டு மூலதனங்களின் தரகர்களுக்குத் தமிழ் அடையாளம் பிடிக்காது. தமிழ், தமிழின விரோதிகள் தமிழகத்துக்கு வெளியில் மட்டும்அல்ல. தமிழ் நாட்டுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர், தமிழ், தமிழ்நாட்டு அரசியல் பண்பாட்டுத் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் சிலர் மடங்களின் தலைவர்கள்.


***


நன்றி: திறனாய்வு சில புதிய தேடல்கள்
நன்றி:http://www.koodal.com/

***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "