...
"வாழ்க வளமுடன்"
04 ஜூலை, 2011
கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை சில விஷயங்கள் !!!
கர்ப்பிணிகள் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும், இதை செய் இதை செய்யாதே என்ற பெரியவர்கள் பலரும் அறிவுரை கூறுவார்கள்.
அதில் சில மிகவும் குறிப்பிடத்தக்கவைகளாக அமையும். அதாவது அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கக் கூடாது, மல்லாக்காக படுக்கக் கூடாது, உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை உண்ணக் கூடாது போன்றவை.
இதை எல்லாம் பெரும்பாலும் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது.
முதலில் உணவு வகைகளில் சாப்பிடக் கூடாதவைப் பற்றிப் பார்ப்போம்.
அதாவது வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை.
மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.
இதேப்போல் அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.
மிகவும் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.
உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நடப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.
உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.
முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும்.
அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.
ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.
மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம்.
அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.
நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.
சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.
மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.
***
thanks webdunia
***
"வாழ்க வளமுடன்"
Labels:
தம்பதிகள் நலன்,
பெண்கள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
கிராம்பு மருத்துவ குணங்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
• கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
•உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
• ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
•கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
•* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
• சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
•முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
•* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
•* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
• தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
• கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
• கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
•சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.
***
thanks Anitha
***
"வாழ்க வளமுடன்"
வெள்ளெருக்குவின் மருத்துவப் பயன்கள்
தரிசு நிலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் காணப்படும் வெள்ளெருக்கு புதர்செடி வகையைச் சேர்ந்தது.
கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிற மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. இந்த செடியின் இலைகள், மலர்கள், லேடக்ஸ்பால், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல்வியாதிகள், படை, கொப்புளங்களுக்கு பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுக்களின் மேல் வைத்து கட்டப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
எருக்கின் மருத்துவ குணங்களின் அடிப்படையாக உள்ள சைகுளோ சேடால், புரோசெஸ்டிரால், கலோடிரோஃபின், கைகேன்சியோல் சைரியோ ஜெனின் போன்ற பல வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
பால்வினை நோய்கள் தீரும்
இலைகளின் கலவை காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. வெள்ளைநிறப் பால்போன்ற லேடக்ஸ் கருச்சிதைவினை தூண்டக்கூடியது. சிறுகுச்சியினை லேடக்ஸ் பாலில் தேய்த்து கருப்பை வாயில் தடவினால் கருப்பை சுருக்கம் அடைந்து கருச்சிதைவு ஏற்படுகிறது.
மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலியினை போக்கக் கூடியவை. பசியின்மை, ஆஸ்துமா, சளி, இருமல் ஆகியவற்றினை போக்கும் திறன்கொண்டவை. உலர்த்தப்பட்ட மலர்கள் சர்க்கரையுடன் சேர்க்கப்பட்டு தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படுகிறது.
வேர்ப்பட்டை
வேர்ப்பட்டை உடலின் சுரப்பிகளை ஊக்கப்படுத்தும். தோல்வியாதிகள், யானைக்கால் வியாதி, அடிவயிறு வீக்கம், வயிற்றுப் புழுக்கள், தோலடி நீர்கோர்வை ஆகியவற்றிர்க்கும் மருந்தாகிறது. வேர்ப்பட்டையின் மேல் உள்ள கார்க் போன்ற பகுதியைப் பிரித்தெடுத்துவிட்டு பட்டையினை அரைத்து பழைய கஞ்சியுடன் பசையாக்கி யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்ட கால் மற்றும் விரைப் பகுதிகளின் மீது தடவப்படுகிறது.
வேர்ப்பட்டையினால் தயாரிக்கப்பட்ட மருந்துகள் தொழுநோய், பால்வினை நோய், பால்வினை நோயின் புண்கள், வயிற்றுப்போக்கு, நாள்பட்ட மூட்டுவலி ஆகியவற்றை குணப்படுத்தும். பால்போன்ற சாறு தலையின் படை மற்றும் மூல வியாதியினை போக்கும். தேனுடன் கலந்து வாய்ப்புண்ணுக்கும், பஞ்சில் தோய்த்து சொத்தை பல் வலிக்கும் மருந்தாகப் பயன்படு்ததப்படுகிறது.
மஞ்சள் காமாலை குணமாகும்
வேர்ப்பட்டையின் பொடி வாந்தியினைத் தூண்டக்கூடியது. நாள்பட்ட மூட்டுவலிக்கு, மஞ்சள் காமாலைக்கு மிளகுடன் சேர்த்து இருவேளை கொடுக்கப்படுகிறது. பால் திரிந்தபின் மேலே காணப்படும் நீருடன் சோடியம் கார்பனேட் கலந்து கொடுக்கப்பட்டால் ஒரே வாரத்தில் மஞ்சள் காமாலை குணமாகும்.
மருந்து தயாரிப்பதற்கு மிக வயதான தாவரத்தின் வேரினை வெப்பமான அல்லது உலர் காலத்தில் பிரித்தெடுக்க வேண்டும். வேரினை தோண்டியதும் பட்டையினை பிரித்தெடுக்காமல் ஒரு நாள் கழித்தே எடுக்க வேண்டும். வேர்ப்பட்டை தூளினை தயாரிப்பதற்கு முன் பட்டையின் மேல் புறத்தில் உள்ள தடித்த கார்க் போன்ற பகுதியினை சுரண்டி எடுத்துவிட வேண்டும்.
***
thanks gnanamuthu
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
இயற்கை வைத்தியமும்,
உடல்நலம்
நீர்க்குடம் உடைதல் -ஒவ்வொரு பெண்ணும் அறிந்து வைத்திருக்க வேண்டியது
கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் (Amniotic fluid)இருக்கிறது.இது குழந்தையை பல விதங்களில் பாது காக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது.
இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு(amniotic membrane) உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும். ஆனாலும் சில வேளைகளில் அதற்கு முன்னமே அது உடையலாம். அது .. Pre labour rupture of membrane எனப்படும்.அதனால் குழந்தையைச் சுற்றியுள்ள திரவ நீர் வெளியேறுவதோடு கருப்பையின் உள்ளே கிருமிகள் உட்சென்று கேழந்தைக்கு மட்டும் அல்லாமல் தாய்க்கும் பாதிய பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
இதன் அறிகுறிகள்
திடீரென பிறப்பு உறுப்பு வழியே நிறையத் திரவம்(நீர் வெளியேறுதல்) இவ்வாறு ஒரு கர்ப்பிணிக்கு திடிரென நீர் வெளியேறினால் உடனடியாக வைத்திய சாலைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவ முறை
34 வார கர்ப்ப காலத்திற்கு முன் இது நடை பெற்றால் வைத்திய சாலையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு 34 வாரம் வரை கண்காணிக்கப்பட்டு அதன் பிறகு குழந்தை பிறப்பு தூண்டப்படும். ஆனாலும் அதற்கு முன் கருப்பையினுள் தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றினாலோ அல்லது தொப்புள் கோடி கீழிறங்குவது உறுதி செய்யப்பட்டாலோ உடனடியாக பிறப்பு தூண்டப்படும். இது யாருக்கு ஏற்படும் என்று எதிர்வு கூறப் பட முடியாது. ஆனாலும் ஏற்கனவே குறை மாதத்தில் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
தம்பதிகள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
சில சந்தேகங்கள்... சில தீர்வுகள்... ( மருத்துவ ஆலோசனைகள் )
என் குழந்தைக்கு பால் ஒவ்வாமை உண்டு. எனவே, சோயா பால் கொடுக்கிறேன். என் உறவினர், ஆட்டுப் பால் கொடுக்குமாறு கூறுகிறார். நான் இருதய நோயாளி. நானும் அந்தப் பாலை குடிக்கலாமா?
பால் ஒவ்வாமை என்பது, பாலில் உள்ள "லாக்டோஸ்' என்ற பொருளை, உடல் ஏற்றுக் கொள்ளாமையால் ஏற்படுவது.
ஆட்டுப் பால், மாட்டுப் பால் ஆகிய இரண்டிலுமே, "லாக்டோஸ்' உண்டு. ஒரு சில குழந்தைகளின் உடல், மாட்டுப் பாலை விட, ஆட்டுப் பாலை ஏற்றுக் கொள்ளும். ஆட்டுப் பாலில், கொழுப்புச் சத்து குறைவு.
ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகளும், இந்த பாலில் குறைவு. எனவே, 2 - 3 நாட்களுக்கு, ஆட்டுப் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை. வயிற்றுப்போக்கு ஏற்படாதவரை தொடரலாம். உபாதை ஏற்பட்டால், சோயா பாலே கொடுக்கலாம்.
***
என் மகனின் காதிலிருந்து பழுப்பு நிற ரத்தம் வெளியேறுகிறது. இதனால் வலியோ, காய்ச்சலோ ஏற்படுவதில்லை. இரவு நேரத்தில் தலையணை எல்லாம் ரத்தமாகிறது...
முதலில் அது ரத்தம் தானா என்பதை பரிசோதிக்க வேண்டும். காதிலிருந்து பழுப்பு நிறத்தில் மெழுகு போன்ற பொருள் சுரக்கும். அது காதில் நிறைந்து விட்டால், நீர்த்து போய், காதிலிருந்து வெளியேறும். எனவே, அதை கவனிக்கவும்.
காதிலிருந்து ரத்தம் வெளியேறினால், அது ஆபத்தின் அறிகுறி. காதில் தொற்றோ அல்லது காயமோ ஏற்பட்டிருக்கலாம். சிறு பையனாக இருப்பதால், காதில் ஏதாவது பொருளை போட்டு கொண்டிருக்கலாம்.
சுத்தம் செய்யும் போது, காயம் ஏற்பட்டிருக்கலாம். எந்த கசிவும் கவனிக்க வேண்டியதே. எனவே, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணரிடம், உடனடியாக காண்பியுங்கள்
***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
குழந்தைகள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "