...

"வாழ்க வளமுடன்"

07 ஜூலை, 2011

சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்


இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .


சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை. குமரி
தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.

சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.


இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும்.

முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.

சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .


***
thanks mayil
***
"வாழ்க வளமுடன்"

கூந்தலின் ஜிவானுக்கு சில டிப்ஸ்....குழாயில் தண்ணீர் வராதது, டீன் ஏஜ் பையன் சொன்ன பேச்சு கேட்காதது போல முடி கொட்டுவதும் நிரந்தரக் கவலையாகி விட்டது. ‘அந்தக் காலத்துலயெல்லாம் இப்போ இருக்கிற மாதிரி ரெண்டு மடங்கு முடி ஒரு சடைக்கு மட்டும் இருக்கும்‘ என்று வருந்துகிற பலரும் ‘ஏன் இப்படியாச்சு?’ என்று யோசிக்கிறோமா?

‘‘யோசிப்பது மட்டுமல்ல.. கொட்டுவதற்குத் தடை போடுவதும் அவசியம்‘‘ என்கிறார் ரம்யா’ஸ் பியூட்டி பார்லர் வைத்திருக்கிற சந்தியா செல்வி. அவர் தருகிற கூந்தல் டிப்ஸ்களைப் பார்க்கலாமா?

‘பொடுகு, பேன், செம்பட்டை, முடி உதிர்தல், வறண்ட கூந்தல்’ என்று ஒவ்வொன்றுக்குமான ஸ்பெஷலிஸ்ட் கூந்தல் பராமரிப்புப் பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. மருத்துவர் அல்லது தகுந்த அழகுக் கலை நிபுணரின் அறிவுரையில் இவற்றை உபயோகிக்கலாம்தான். ஆனால், விளம்பரத்தில் மயங்கி மாற்றிக் கொண்டே இருந்தாலோ, உங்கள் கூந்தலுக்குப் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்து விட்டாலோ பிரச்னைதான். எனவே, தரமான ஷாம்புவுக்கு முதலில் மாறுங்கள்.

உணவில் தொடங்குகிறது கூந்தல் ஆரோக்கிய ரகசியம். கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், புரதச் சத்துள்ள பொருட்கள் இவற்றைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதோடுகூட, வீட்டில் இருக்கிற பொருள்களை வைத்து கூந்தலைப் பராமரிப்பது பற்றிப் பார்க்கலாம்.

சாதாரணமானது, எண்ணெய்ப் பசை கொண்டது, வறண்டது, இரண்டும் கலந்தது என்று தலைமுடி நான்கு வகைப்படும்.

வேர்க்காலில் தொடங்கி அடிமுடிவரை பளபளவென்று ஆரோக்கியமாக இருப்பதுதான் சாதாரண கூந்தல். மற்றவர்கள் பொறாமைப்படும்படியான கூந்தல் கொண்ட நீங்கள் வாரம் ஒருமுறை அதற்கு எண்ணெய் மசாஜ் செய்யவேண்டும். பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவு டன் ஒரு எலுமிச்சை பிழிந்து வேர்க்கால் தொடங்கி அடி முடி வரை தடவி அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளித்து வந்தாலே விளம்பரக் கூந்தலாய் மின்னும்.

தலைக்குக் குளித்த அன்று புஸ்புஸ்ஸென்று அழகாக இருக்கும். மறுநாளே ஒரு லிட்டர் எண்ணெயைத் தலையில் கவிழ்த்தியதுபோல பிசுக்பிசுக்காகிவிடும். இதுதான் எண்ணெய்ப்பசை கூந்தல்.

சீயக்காய் அரை கிலோ, புங்கங்காய் 100 கிராம், பச்சைப் பயறு 100 கிராம், வெந்தயம் கைப்பிடி அளவு, பச்சரிசி 2 கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து ஷாம்புவுக்குப் பதிலாக உபயோகித்து வந்தால் கூந்தல் அலை மாதிரி அசைந்தாடும்.

ஜீவனே இல்லாமல் வறண்டுபோய் வெடிப்பு வெடிப் பாக இருப்பதுதான் வறண்ட கூந்தல். இயல்பாகவே தலைப்பகுதியில் எண்ணெய்ச் சுரப்பு குறைவாக இருக்கும் உங்களுக்கு. பராமரிக் காமலும் விட்டால் அவ்வளவுதான். நீங்கள் வாரம் ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்ய வேண்டும். முந்தின நாள் இரவே வேர்க்கால் முதல் அடிமுடி வரை எண்ணெய் தடவி மசாஜ் செய்யுங் கள். அடிமுடியில் அதிக எண்ணெய் தடவுங்கள். மறுநாள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக் கருவைக் கலந்து மசாஜ் செய்து, பிறகு குளியுங்கள் (முட்டையின் மஞ்சள் கரு உங்கள் கூந்தலுக்கு அற்புதமான மருந்து. கூந்தலை அலசிய பிறகும் முட்டை வாசனை வருவது பற்றிக் கவலை இல்லையெனில், மஞ்சள் கரு உபயோகிக்கலாம்.).

தலைப் பகுதியில் எண்ணெய்ப் பசையுடனும் கீழே செல்லச்செல்ல வறண்டும் இருப்பது இரண்டும் கலந்த கூந்தல். கூந்தலின் அடிப்பகுதிக்கு மட்டும் நிறைய எண்ணெய் தடவி, ஒரு மணி நேரம் கழித்துக் குளியுங்கள். தலையை நன்றாக அலசிய பிறகு, கடைசி மக் தண்ணீரில் ஒரு எலுமிச்சை அல்லது கொஞ்சம் வினிகர் சேர்த்து அந்தத் தண்ணீரை அப்படியே தலையில் ஊற்றி விட்டு வெளியே வாருங்கள். தலைக்குக் குளிக்கும்போதெல்லாம் இதை மறக்காமல் செய்வதுதான் உங்களுக்கான பராமரிப்பு.


மசாஜ் எப்படிச் செய்வது என்று பார்க்கலாமா?

பஞ்சில் எண்ணெயை நனைத்து, கூந்தலை வகிர்ந்து தடவுங்கள். இதை தலை முழுக்கச் செய்யுங்கள்

விரல் நுனிகளில் எண்ணெய் தொட்டு தலை முழுக்கவும் வட்ட வட்டமாக கடிகாரச் சுற்றிலும், எதிர்த்திசையிலும் லேசாக அழுத்தம் கொடுத்தபடி தடவுங்கள், கோதுங்கள்.

இரு கைகளாலும், தலை முழுக்க மென்மையாகக் குத்துங்கள்.

தலை முழுக்க எண்ணெய் தேய்த்த பிறகு, முறுக்கிக் கொண்டையாகப் போடுங்கள். மசாஜ் ஓவர்.***
thanks google
***
"வாழ்க வளமுடன்"

குளிர்காலத்தில் `புளிப்பு' வேண்டாம்!குளிர்காலம் என்றாலே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த நடவடிக்கைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சட்டென்று வந்து ஒட்டிக்கொண்டு விடுகின்றன.


பொதுவாக, கோடைகாலத்தில் குளிர்பானங்களுக்கு எல்லோருமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காரணம், அப்போது வெயில் காரணமாக உடலில் அதிக அளவில் வியர்வை வெளியாகும், சக்தி இழப்பு உடனே ஏற்படும். இதுதவிர, `அல்கலைன் சிட்ரைட்' என்ற அமிலமும் அதிக அளவில் வெளியாகிறது.புளிப்பு சுவை கொண்ட மோர், பானகம் உள்ளிட்ட பானங்களை அப்போது அருந்துவதன் மூலம், அந்த அமில இழப்பை சரி செய்து கொள்ளலாம். இதே புளிப்பு சுவை கொண்ட குளிர்பானங்களை குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது.மீறி எடுத்துக்கொண்டால், உடலில் உள்ள `அக்கலைன் சிட்ரைட்' அமிலத்தின் அளவு அதிகரித்து சைனஸ், மார்புச்சளி, ஜலதோஷம் போன்ற பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். அதனால், குளிர் காலத்தில் `கூல் டிரிங்ஸ்' மட்டுமின்றி புளிப்பு சுவை கொண்ட பானங்களும் வேண்டவே வேண்டாம். ஏன்... புளிப்பு சுவை கொண்ட வைட்டமின்-சி பழங்களைக்கூட அளவோடுதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.***
thanks படித்ததில் பிடித்தது
***

"வாழ்க வளமுடன்"

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில வழிகள் !!!ஆரோக்கியமே ஆனந்தம். உடல் ஆரோக்கியம் இல்லாது எந்தப் புறவசதிகள் இருந்தாலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. ஆரோக்கியம் காக்க வேண்டும் என்றதுமே உங்களுக்குக் கடுமையான பயிற்சிகள், முயற்சிகள்தான் ஞாபகத்துக்கு வரும்.ஆனால் சில எளிய பயிற்சிகள், சில எளிய முயற்சிகள் போதும்.


இதோ... அந்த வழிகள்...

ஒன்றியிருங்கள்

ஒவ்வொரு கணமும் நாம் அந்தக் கணத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். உதாரணத்துக்கு, சாப்பிடுகிறீர்கள் என்றால் அதன் சுவை, அது சமைக்கப்பட்டிருக்கும் விதத்திலேயே மூழ்கிப் போங்கள். அதேபோல ஒவ்வொருமுறை நீங்கள் அமரும்போதும் சரியாக அமர்ந்திருக்கிறோமா என்று யோசித்துச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள். படிப்படியாக இந்த ஒழுங்குகள் உங்களின் மற்ற செயல்பாடுகளிலும் வந்துவிடும்.


மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி என்பது நீங்கள் `தற்போதைய கணத்தில்' ஒன்றியிருப்பதற்குச் சிறந்த வழியாகும். மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுங்கள். சற்று அப்படியே இருங்கள். நுரையீரலுக்குள் காற்று நிரம்புவதை உணர்ந்து பின்னர் மெதுவாக மூச்சை வெளிவிடுங்கள். ஒருநாளைக்கு இம்மாதிரி ஐந்து முறை செய்யுங்கள்.


இதயப் பயிற்சி

உங்களின் இதயத்துக்குப் பலமூட்டுவதற்கான எளிய பயிற்சி, அதிகாலை நடையாகும். அது உங்களின் கொழுப்பைக் காணாமல் போக்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும். தினசரி `ஜிம்'முக்கு செல்வதற்குச் சோம்பேறித்தனமாக இருக்கிறதா? ஒரு ஜோடி ஷூக்களுக்கு செலவழியுங்கள். நடக்கும் ஆர்வம் தன்னாலே வந்துவிடும்.


நடனம் ஆடுங்கள்

நமது கலாச்சாரத்தில் நடனம் ஆடுவது என்பது இயல்பான விஷயமில்லை. நீங்கள் கூச்சமானவர் என்றால், முதலில் உங்களுக்கு மிக நெருங்கியவர்களுடன் சேர்ந்து ஆடுங்கள். அல்லது உங்கள் துணையுடன் ஒரு நடனப் பயிற்சியில் சேருங்கள். அது இரண்டு வழிகளில் உதவும். அதாவது, உங்கள் இருவரின் ஆரோக்கியம் மேம்படும், உறவு இறுகும்.


சுயகவுரவம்

நீங்கள் உங்களை மதிக்காவிட்டால், பிறரிடம் இருந்தும் மதிப்பை எதிர்பார்க்க முடியாது. சுயகவுரவத்தை வளர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழி, நேர்மறையான உறுதியான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதாகும். திரும்பத் திரும்ப நீங்கள் நல்லவர், திறமையானவர் என்ற எண்ணங்களை மனதில் பதித்துக்கொண்டே இருந்தால் அது நன்மை பயக்கும். கெட்ட பழக்கங்களிலிருந்து நீங்கள் விடுபடவும் உதவும்.


பொழுதுபோக்கு

விளையாட்டு, இசை, வாசிப்பு... நீங்கள் வெகுவாக விரும்புவது எதை? முழுக்க முழுக்க அதற்கென்று வாரத்துக்குக் குறைந்தபட்சம் சில மணிநேரங்களை ஒதுக்குங்கள். உங்களின் மகிழ்ச்சியளவு தடாலடியாகக் கூடும்.


தண்ணீர் பருகுங்கள்

உடம்பின் தண்ணீர் அளவுக்கும் மனஅழுத்தத்துக்கும் தொடர்புண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? உடம்பில் தண்ணீர் குறைந்த நிலையில் நீங்கள் எளிதாக எரிச்சலுக்குள்ளாகவும் செய்வீர்கள். தாகம் எடுத்தால்தான் தண்ணீர் பருகுவது என்றில்லாமல் அவ்வப்போது தண்ணீரை உள்ளுக்குள் ஊற்றிக்கொள்ளுங்கள்.


வேலையில் மகிழ்ச்சி

நீங்கள் பார்க்கும் வேலையைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் பணி நீங்கள் மனப்பூர்வமாக விரும்பாததாகக் கூட இருக்கலாம.ë ஆனாலும் அந்தப் பணியில் நீங்கள் ரசிக்கும் சில அம்சங்கள் இருக்கக்கூடும். அவற்றில் கவனம் செலுத்தி உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.


சிரியுங்கள்

சிரிப்பதற்கான எந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள். சின்னச் சின்ன தொந்தரவான விஷயங்களையும் ஒரு `கார்ட்டூனிஸ்ட்'டின் பார்வையில் பாருங்கள். முக்கியமாக, சூழ்நிலையை உங்களால் மாற்ற முடியாதபோது, எடுத்துக்காட்டாக, நீங்கள் போக்குவரத்தில் மாட்டிக் கொண்டால் எரிச்சலடைவதற்குப் பதிலாக, சக வாகன ஓட்டிகள், போக்குவரத்துக் காவலர்களின் வெளிப்பாடுகளைப் பாருங்கள். அவற்றை ரசிக்க முயலுங்கள்.***
thanks luxinfonew
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகள் டீன் ஏஜ் வயதை அடையும் போது, கவனிக்க வேண்டியது !!!


டீன் ஏஜ் வயதை அடையும் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் பழக்க வழக்கங்கள் பற்றி ஸ்பெயினில் அமைந்துள்ள பேஸ்க் கன்ட்ரி பல்கலைகழகத்தில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த ஆரராய்ச்சியில் சிறுவயதினர் 13 வயது அடைவதற்கு முன்பாக தங்களது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி பெற்றோர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிய வந்துள்ளது.

இது பற்றி மார்தா அர்ரூ மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 2,018 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில் 13 முதல் 17 வயதினர் மற்றும் 18 முதல் 26 வயதினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் வயது மற்றும் பாலினம் அடிப்படையில் ஆராயப்பட்ட அந்த ஆய்வில் ஆல்கஹால் உட்கொள்ளல், புகையிலை பயன்பாடு, தவறான பாலியல் தொடர்புகள், போதை பொருள் உபயோகம், போதிய ஆகாரமின்மை மற்றும் தேவையான உறக்கமின்மை ஆகியவை அவர்களின் சுகாதாரத்தை பாதித்த விசயங்களாக கண்டறியப்பட்டன.

அவற்றுள், இளம் வயதினர் 16 வயதை அடையும்போது தங்களது செயல்களில் மாற்றம் அடைகின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. அவர்களின் மன நலம் பற்றி அறிந்து கொண்டு செயல்படுவதோடு அவர்களுக்கு தேவையான பணம் தொடர்பான விசயங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தல் அத்தியாவசியமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் நல்ல பண்பட்ட வாழ்க்கை முறையினை மேற்கொள்வோர் அதிக சுய கவுரவத்தோடும், மனநலம் சார்ந்த செயல்பாடுகள் நன்றாகவும், மிக மகிழ்ச்சியாகவும் மற்றும் உடல் சார்ந்த விசயங்களில் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.***
thanks luxinfonew
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "