...

"வாழ்க வளமுடன்"

12 அக்டோபர், 2010

உணவில் உள்ள கலோரி & உடலில் கலோரியைக் குறைக்க

அதென்ன கலோரி... ஏதோ புதுசா எல்லாம் சொல்றாரே டாக்டர் என்று பலரும் எண்ணலாம். உடல் எடை கூடிவிட்டால், சில கிலோ எடையை குறைக்க வேண்டுமானால், முதலில் அதற்கு கலோரியை குறைக்க வேண்டும்.




அதுக்காகத்தான், நம்மில் சிலர், உடற்பயிற்சி, ட்ரெட்மில், வாக்கிங் என்று என்னவெல்லாமோ செய்கின்றனர். அப்படி கலோரிக்களை "எரிக்க எரிக்க"த்தான் உடலில் எடை குறையும். நீங்களும் "ஸ்லிம்"மாக இருக்க முடியும்.


*


சரி, கலோரி (Calorie) என்றால் என்ன தெரியுமா? கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், "சீட்"டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

*


"டீன் ஏஜ்" வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், "அடடா, கொழுப்பு கூடிவிட்டதே" என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

*


கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

*


கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.



ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை "ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா"படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

*

உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

1. உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

*

2. புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

*

3. நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

*

4. ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை "எரிக்க" வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் "கொழுப்பாக தேங்கிய" கலோரியை எரிக்க முடியும்.

*

5. ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

*

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

*

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.

***

எந்த ஜூசில் அதிக கலோரி?





காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ் - 55

திராட்சை ஜூஸ் - 55

மாம்பழ ஜூஸ் - 58

ஆரஞ்சு ஜூஸ் - 44

பைனாப்பிள் ஜூஸ் - 52

கரும்பு ஜூஸ் - 36

தக்காளி ஜூஸ் - 17

தேங்காய் பால் - 76

இளநீர் - 24

காபி (ஒரு கப்) - 98

டீ (ஒரு கப்) - 79

கோக்கோ (ஒரு கப்) - 213

பசும்பால் - 65

ஸ்கிம் மில்க் - 35

தயிர் - 51

"ப்ரைடு" உணவுகளா? "டீன்" பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி "ப்ரைடு" அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் "வேலையை" காட்டிவிடுமாம்.

*

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

***

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

1. சில "ப்ரைடு" உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

*

2. இதை "டிரான்ஸ் ஃபேட்" என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

*

3. கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த "ப்ரைடு" உணவுகளால் ஏற்படும் "டிரான்ஸ் பேட்" எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

*

4. வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

***
நன்றி கூடல் .
***



"வாழ்க வளமுடன்"

உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI ) - PART- 3

உடல் பருமனைக் கண்டு கொள்ள சில குறுக்கு வழிகள்:



1. அந்த குண்டா இருப்பாரே அவரா என்று சிலர் அடையாளம் காட்டும்போது

*

2. இதுவரை இரண்டாவது மாடியில் இருந்த நீங்கள் க்ரவுண்ட்ப்ளோருக்கு மாறி விடலாமா என்று யோசிக்கும் போது.

*


3. அப்பா தொப்பையில குத்து என்று உங்கள் சின்ன மகள் சிரித்து விளையாடும் போது

*

4. லிப்ட்டில் நீங்கள் சுகமாக நிற்க, கூட வருகிறவர்கள் நசுங்கி கசங்கும் போது

*

5. இரவு நிகழ்ச்சிகளில் தேவைக்கும் அதிகமாக மூச்சு வாங்கும்போது

*

6. பாத்ரூமுக்கு போகக் கூட ஏதாவது பஸ் கிடைக்குமா என்று யோசிக்கும்போது

*

7. நேராக நிற்கும் போது உங்கள் பாதங்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும் போது

*

8. உங்கள் டாக்டர் 'எதுக்கு கொலஸ்டிரால் ஒரு தடவை பாத்துடுங்க' என்று சொல்லும்போது
*

9. 'சார்... ரெண்டு பொங்கல்... மூணு ஸ்பெஷல் சாதா சொல்லிரவா...' என்று நீங்கள் யோசிக்கும்போதே சர்வர் அசால்டாக கேட்கும்போது
*

10. வழக்கமாக உங்களை ஏற்றிக் கொண்டு பெரம்பூருக்குப் போகிற ஷேர் ஆட்டோ 'இல்ல சார். வண்டி புரசைவாக்கத்தோட சரி...' என்று சொல்லும்போது
*

11. இரயில் பயணங்களில் நீங்கள் மேல் பார்த்ததில் நிம்மதியாகத் துவங்க, கீழ் பார்த்ததில் இருக்கிறவர் எதற்கு வம்பு என்று பயத்தில் தூங்காமல் எதிர்பக்கமாக மாறி உட்கார்ந்து கொண்டு வரும்போது.


***


மற்ற நாடுகளில் பருமன் நபர்கள் எவ்வளவு இருக்கிறார்கள்:

அமெரிக்கா 30.6%
மெக்ஸிகோ 24.2%
இங்கிலாந்து 23%
செக்கோஸ்லோவாக்கியோ 22.4%
கிரீஸ் 21.9%
ஆஸ்திரேலியா 21.7%
நியுசிலாந்து 20.9%
கனடா 14.3%
ஜெர்மனி 12.8%
ஸ்வீடன் 9.7%
பிரான்ஸ் 9.4%
ஸ்விட்சர்லாந்து 1.7%
ஜப்பான் 3.2%


***

1200 கலோரிகள் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உடல் எடையை குறைப்பதற்கான உணவுப் பட்டியல்:



காலை 6.30:


காபி, டீ, பால் _ 100 மில்லி (ஆடை நீக்கியது)

*

காலை 8.30:

இட்லி (3)/தோசை (2)/ சப்பாத்தி (3) / இடியாப்பம்
அல்லது உப்புமா, சாம்பார் ஒரு கப், சட்னி ஒரு கப்.

*

காலை 10.30 :

காய்கறி சூப்/தக்காளி சூப்/ மோர்/இளநீர்.

*

மாலை 12.30 :

சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், மோர், கீரை, .

*
மாலை 3.30 : காபி/டீ/பால் 100 மில்லி (ஆடை நீக்கியது) மற்றும் மாரி பிஸ்கட்/தோசை (2)/சுண்டல்.

*

மாலை 7.30 மணி: இட்லி, (3)/தோசை (2)/சப்பாத்தி (3) அல்லது சாதம் ஒரு கப், சப்பாத்தி (1), சாம்பார், ரசம், காய்கறிகள்.

*

மாலை 9.00 மணி : பால் 100 மில்லி (ஆடை நீக்கியது).

சேர்த்துக் கொள்ள வேண்டியது:

1. காய்கறி, சாலட், கீரை, முளைகட்டிய பயறு நார்ச்சத்து மிக்க உணவுகள் (வாழைத்தண்டு, முழு கோதுமை மாவு, சீரகம்,
முருங்கை, காலிஃபிளவர்)

2. மீன் (75 கிராம்) _ வாரம் இருமுறை

3. தவிர்க்க வேண்டியவை:ஐ ஸ்கிரீம், கிரீம் கேக், பிஸ்கட்ஸ் மற்றும் பேக்கரி உணவுகள் பழச்சாறுகள், ஜுஸ் குளிர்பானங்கள் பூஸ்ட் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் எண்ணெய், வெண்ணெய், சீஸ், டால்டா வறுத்த மற்றும் பொதித்த உணவு வகைகள் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எண்ணெய் வித்துக்கள் (வால்நட் பிஸ்தா, முந்திரி, வேர்க்கடலை) பழங்கள் (மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா) கிழக்கு வகைகள் (உருளை, கருணை, சேப்பங்கிழங்கு)


***


உலகம் முழுக்க அதிக எடையுடன் _ இருப்பவர்கள் 12 மில்லியன் இதில் 300 மில்லியன் நபர்கள் 'உடல் பருமன்' நிலையில் பாதிக்கப்பட்டவர்கள். ஒரு நாளைக்கு ஒரு மைல் நடந்தால் ஒரு
வருஷத்திற்கு பத்து பவுண்ட் கொழுப்பு குறைக்கப்படுகிறது. டியூக்
பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிற ஆய்வில் உடல் பருமன் உடையவர்களின் செக்ஸ் வாழ்வு கடும் பிரச்னைகளைச் சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. செக்ஸ் வாழ்விற்கான ஆர்வக் குறைவு, மெல்ல மெல்ல செக்ஸை தவிர்க்க முயல்வது என பருமன்கள் மற்றவர்களைவிட இருபத்தி ஐந்துக்கும் அதிகமான சதவிகிதத்தினர் செக்ஸ் தவிர்க்க முயல்வது .

***


சராசரியாக 150 பவுண்ட் எடை கொண்ட ஒருவர், ஒருமணிநேரம் கீழ்க்கண்ட வேலைகளை _ உடற்பயிற்சிகளைச் செய்தால் குறைக்கப்படுகிற கலோரி எவ்வளவு என்று கவனியுங்கள்.




டென்னிஸ் 425 கலோரி
சைக்கிள் ஓட்டுவது 415 கலோரி
ஏரோபிக் 350
நடனம் 350
ட்ரெட்பில்நடை (4னீஜீலீ) 345
கோல்ப் 270
வேக நடை 185
ஓடுவது 700
ஜாகிங் 655
நீச்சல் 540* *லைப்போ சக்ஷன்.


1. உடலில் சில குறிப்பிட்ட இடங்களில் தேவையில்லாமல்
தேங்கி விடுகிற கொழுப்பை குறைக்க இந்த அறுவை சிகிச்சை பயன்படுகிறது. யாருக்கு செய்யலாம்? இயல்பான எடையுடன் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கிறவர்கள். எங்கு எங்கு எடுக்க முடியும்?

வயிறு, இடுப்பு, பின்பக்கம், தொடை மேல்கை, கன்னம்,
கழுத்து .உங்கள் மருத்துவர் இதை சரியாக முடிவு செய்வார்.

*

2. உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இன்சூரன்ஸ் உதவி செய்யுமா? அல்லது உடல் பருமனால் ஏற்படுகிற நோய்களுக்கு இன்சூரன்ஸ் வழி சிகிச்சை
எடுத்துக் கொள்ள முடியுமா?

தற்சமயம் இருக்கிற கம்பெனிகளின் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி_களின்படி உடல் பருமனுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள அவற்றை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே இருக்கிற நோய் அல்லது நிலை என்கிற வகையில் உடல் பருமன் வருவதால் இன்சூரன்ஸ் வழி சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது. தற்சமயம் ஐசிஐசிஐ நீரிழிவு _ டயாபடிஸ் நோய்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரை எந்த மருத்துவ இன்சூரன்ஸ் அரவணைப்பிலும் உடல் பருமன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

*

3. உடல் பருமன் பற்றிய ஆய்வில் நிபுணர்கள் மேலும்
ஒரு புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்கள். கொழுப்பு உற்பத்தி என்பது செல்களில் இருக்கிற ஒரு புரோட்டீனால் நடைபெறுகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு பெயர் கீஸீt. ஆய்வில் இந்த புரோட்டீன் அதிகமாக இருந்தால் அது செல்லில்
இருக்கிற கொழுப்பை தட்டி வெட்டி குறைக்க வைக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இது குறைவாக இருக்கிற செல்கள் பருத்துவிடுகின்றன. ஒரு வரியில் சொன்னால் கொழுப்பு செல்கள் உருவாக்கத்தைத் தடுக்கிறது. இந்த கண்டுபிடிப்பு மேலும் சில
வழிகளை உடல் பருமனை எதிர்த்துப் போராடாமல் உருவாக்கும் என்று நம்புகிறார்கள்.




***

நன்றி குமுதம் ஹெல்த்
http://groups.google.co.in/group/panbudan/msg/ef3f38d0874ab7be

***



"வாழ்க வளமுடன்"

உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI ) - PART- 2

வெளிநாடுகளில் இப்படி கிடைக்கும் சில டயட்களின் கண்ணோட்டம் இது.




1. அட்கிஸன் டயட்:

'நிறைய புரோட்டீன், குறைவான கொழுப்பு, குறைவான கார்ப்போ
ஹைட்ரேட் ''இதுதான் இந்த உணவின் அடிப்படை.

*


2. *வெயிட் வாட்ச்சர்ஸ்:


அமெரிக்காவில் 40 வருடமாக இந்த உணவு மில்லியின்
கணக்கில் எடை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதிலும் அதிக புரோட்டீன்கள் தான் சூட்சுமம்.


*


3. ஸோன் டயட் மற்ற வகை டயட்களை விட இது அதிகம். பயனுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், டாக்டர்கள் மற்றும் துறைகள்
சார்ந்த நிபுணர்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பில் செயல்படும் சக்தியை அதிகரிப்பதுதான் இதன் சூட்சுமம்.


*


4. ஸ்கார்ஸ்டேல் டயட்:

இதில் குறிப்பிட்ட அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும்
அதிகபட்ச புரோட்டீன் அனுமதிக்கப்படுகிறது. கூடவே பசியைக் குறைக்கும் ஹெர்பல் பொருட்களும் இருக்கும்.

*


5. ஆனி கோலின்ஸ் டயட் இதை உருவாக்கியவர் ஆனி கோலின்ஸ் என்கிற ஜரிஷ் பெண்மணி வெயிட் லாஸ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்ட் 25 வருடஙகளாக மார்க்கெட்டிங்கில் இருக்கும் இந்த டயட்தான் இருப்பதிலேயே விலை குறைவானது. இவர் நிறைய டயட் பிரான்சுகளைக் கொடுத்து தேவையானதை தேர்ந்து எடுக்க வழி சொல்கிறார்.


*


6. இடியட் ப்ரீப்டயட் :


இது இப்பொழுது பரபரப்பாக பேசப்படுகிறது இதற்கு
அடிப்படையாக இவர்கள் 'Shifting theory' என்ற ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள்.


***


நம்முடைய வளர்சிதை மாற்றம் என்கிற மெட்டா பாலிக்க்டிவிட்டி நாம் சாப்பிடும் உணவு பழக்கத்தைச் சார்ந்தது. இதுவரை நாம் எப்படிச் சாப்பிடுகிறோம். என்பதைப்
பொறுத்து அதற்கு ஒரு கருத்து இருக்கும். ஆனால்எதிர்காலத்தில் எப்படி சாப்பிடுவோம் என்று அதற்கு தெரியாது. அதற்கு தாயாராகவும் இருக்காது. ஒரு புதிய டயட் நம் உடலுக்கு அனுப்பும்போது அதற்கு எப்படி செயல்படுவது என்று புரியாது.



திடீரென்று கலோரிகளை ஷிப்ட்_மாற்றம் செய்வதின் மூலம் சேமிக்கிற நிலை குறைந்து அதிக சக்தி செலவழிக்கப்பட்டு உடல் எடை குறைய ஆரம்பிக்கும். ஒவ்வொரு சில நாட்களும் டயம் மெனுவை மாற்றி மாற்றி உடலுக்கு அறிமுகப்படுத்துவதுதான் இதன் சூட்சுமம். நம் உடல் மெட்டபாலிசம் இந்த உணவை சுலபத்தில் எரிக்க வசதியாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எரித்து முடித்த உடனேயே இருக்கிற கொழுப்புகளின்
பக்கம் மெட்டா பாலிஸத்தின் கவனம் திரும்பி அவைகளை எரிக்கத் தொடங்கும்.


*


இவற்றை எல்லாம் தாண்டி இப்போது உலகம் முழுக்க உடல் பருமனைக் குறைக்கும் ஒரு தேநீர் பரபரப்பாக விற்பனையாகிறது. அந்தத் தேநீரின் பெயர் WULong. இதை சீனா, ஜப்பானில்மேஜிக்கல் ஸ்ம்மிங் டீ என்று சொல்கிறார்கள். இருப்பதிலேயே இது சிறந்தது என்பதற்கு ஆய்வு முடிவுகள் (Japan University of Tokushima School of Medicine) கீழே சொல்லப்பட்ட 8 விஷங்களை வரிசைப்படுத்துகிறது.


*


1. நீங்கள் சாப்பிட்டு முயற்சிக்கும் க்ரீன் டீயை விட அதிகமாக (2.5 சதவிகிதம்) கலோரிகளை செலவழிக்கிறது.

*

2. நம்மைப் போல அரிசி உணவு அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு உடல் எடை கூட காரணம். இதனால் அதிகரிக்கிற இன்சுலின் ஹார்மோன். சாப்பிடும் முன் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாக இந்த தேநீரை சாப்பிட்டால், சாப்பாட்டிற்கு பிறகு
உயருகிற இன்சுலினை கட்டுப்படுத்தும்.


*

3. ஒரு மாதத்தில் உங்கள் தோலை அழகாக மாற்றி விடுகிறது.


*

4. வயதாகிற தோற்றத்தைக் கட்டுப்படுத்தி இளமையை திரும்ப வரவழைக்கிறது. ஒரு ஆண்டி ஆக்ஸிடென்ட் போல செயல்பட்டு உடலில் தங்கும். ''ப்ரீ ராடிகல்' என்ற நச்சுகளைக் குறைக்கிறது.

*

5. உறுதியான பற்கள் உருவாகின்றன. பற்குழிகள் உருவாவது தடை செய்யப்படுகிறது.

*

6. உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

*

7. மன அமைதி தருகிறது.

*

8. நூறு சதவிகிதம் இயற்கையான உடல் எடை குறைக்கும் பொருள்.


***


உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கூடவே இத்தனை நல்ல விஷயங்களும் நடப்பதால் இப்போது இந்த 'டீ' சீனா, ஜப்பானில் விற்பனையில் பறக்கிறது.


உடற் பயிற்சி:

உடல் பருமனைக் குறைப்பதில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. உணவு மாற்றத்துடன் உடற்பயிற்சிகளும் சேரம்போது உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகமாகிறது. உடற்பயிற்சிகள் மூலம் 1 முதல் 4 கிலோ வரை எடை குறைக்கலாம் என்று
நிரூபிக்கப்பட்டிருக்கிறது.



உடற்பயிற்சி கூடங்களுக்குச் சென்று ஒரு பயிற்சியாளரின் உதவியுடன் உங்களுக்கு ஏற்ற பயிற்சிகளை செய்வது சிறந்த வழி. முடியாதவர்கள் நடப்பது ஜாகிங். நீந்துவது போன்ற விஷயங்களை முயற்சி செய்யலாம். ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை இம்மாதிரி விஷயங்களில் ஈடுபடத்
தொடங்குவது நல்லது. விருப்பம் இருக்கிறவர்கள் டான்ஸ் கூட ஆடலாம். நடனம் ஆடுவதின் மலம் 350 கலோரிகள் ஒரு மணிநேரத்திற்கு செலவாகின்றன.

*

உடற்பயிற்சிகளின் நோக்கம் இரண்டு விஷயங்கள்தான் ஒன்று உடல் எடை குறைப்பது, இரண்டாவது பிட்னெஸ் உடற்பயிற்சி செய்வதால் உடலின் மெட்டபாலிஸத்தின் வேகம் கூட்டப்படுகிறது. நிறைய கலோரிகள் எரிக்கப்படுகின்றன. மனதுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. மன அழுத்தம்குறைகிறது.டயட்பில்ஸ்.


*

இந்த மாத்திரைகள் உலகம் முழுக்க நிறைய மருந்து
கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எந்த பத்திரிகையைத் திறந்ததும் ஏதாவது ஒரு டயட் பில்ஸ் வசீகரமாக கன்னடித்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம் என அழைக்கிறது.


*


இவைகள் எவ்வளவு தூரம் பாதுகாப்பானவை?


இப்படி ஒரு ஆய்வை அமெரிக்காவின் வெயிட் லாஸ் இன்ஸ்டிடியூட் நடத்தி கீழ்க்கண்ட டயட் பில்ஸ்களைப் பரிந்துரைக்கிறது. கடையில் கிடைக்கிற இவைகள் அப்படியே வாங்கி பயன்படுத்துவது நல்லது. அல்ல உங்கள் டாக்டர்தான் இதை முடிவு செய்ய முடியும்.


*


1. xerisan asa: இப்போது அமெரிக்காவில் விற்பனையில் இருக்கிற டயட் மாத்திரைகளில் இதுதான் பெஸ்ட் என்றுகணிக்கப்படுகிறது. இதில் இருக்கிற முக்கியமான பொருள் பாஸீல்ஸ் வல்காரீஸ் இது கார்ப்போஹைட்ரேட் மெட்டபாலிஸத்திற்கு உதவும் என்ஸைமை தடை செய்கிறது. பக்க விளைவுகள் ஏது இல்லை.


*

2. Solidax adx: இது பசியை கட்டுப்படுத்துகிறது குறுகிய காலத்தில் 9 கிலோ வரை குறைக்கிறது. தவிர கொலஸ்டிரால் அளவையும் குறைக்கிறது. பக்க விளைவுகள் இதில் நிறைய உண்டு படபடப்பு. தூக்கமின்மை, வாய் உலர்ந்து போதல் போன்ற சிலவும் வரும்.

*

3. kavaherbal: இது ஹெர்பல் என்று சொன்னாலும் பயன்படுத்தியதில் நிறைய நபர்களுக்கு கல்பீரல் பாதிப்பு வந்திருக்கிறது.

*

4. fat absorber tdsl: அதிக கொழுப்பு, குறைவான கார்ப்போஹைட்ரேட் டயட்டில் இருக்கிறவர்களுக்கு இது உதவும் பக்க விளைவுகள் இல்லை.

*

5. xenical: இது ஆர்லிஸ்டேட் என்கிற மருந்தை அடிப்படையாகக் கொண்டது. இது கொழுப்பு சேமிக்கும் வழியைத் தடை செய்யும். இது உடல் பருமனான கூடவே டயாபடீஸ். இரத்த அழுத்தம். இருதயம் பிரச்னை போன்றவைகள் இருக்கும் நபர்களுக்கு உதவும். நிறைய பக்கவிளைவுகள் உண்டு ஜாக்கிரதை.

*


6. bontril: பசியைக் கட்டுப்படுத்துகிறது. நிறைய பக்க விளைவுகள் உண்டு.

*

7. meridia: இதுவும் பசியைக் கட்டுப்படுத்துகிறது. நிறைய பக்க விளைவுகள் உண்டு.


மேற்சொல்லப்பட்ட மருந்துகள். ஜஸ்ட் உங்கள் கவனத்திற்குத்தான் எந்த எடை குறைப்பு மருந்துகளைப் பயன்படுத்தவும் உங்களுக்கு உங்கள் டாக்டரின் உதவி தேவை.
ஆலோசனை இல்லாமல் நேரடியாக பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாழடித்துக் கொள்ளாதீர்கள். எதிர்காலத்தில் வரப்போகும் உடல் எடை குறைப்பு மருந்துகள் கண்டுபிடிப்புகள்


***


1. rimonabant: பாரிஸில் இருக்கிள கனேஃபி என்கிற மருந்து கம்பெனி இந்தமாத்திரை தயாரிப்பில் இருக்கிறது. வயிற்றில் சாப்பிட்ட உணர்வை உருவாக்கும். சமீபத்தில் மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த மாத்திரை ஒரு வருடத்தில்
இருபது பவுண்ட் எடையைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளன. கெட்ட கொலாஸ்டிரால் அளவையும் கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது தொப்பை பெருத்த ஆண்களுக்கு
அந்த வயிற்றுக் கொழுப்பை குறைப்பதில் இது மிகுந்த பலன் அளிக்கிறது. எப்போது வரும்? இன்று இரண்டு வருடங்களில்.


*


2. axokine: இது மூளையில் செயல்பட்டு உடலின் கொழுப்பு செல்கள் எல்லாம் நிறைய சக்திகளை சேமித்து வைத்திருக்கின்றன என தகவல் சொல்லி பசியை
கட்டுப்படுத்தும். ஆய்வில் எடை ஒரு வருடத்திற்கு 34 பவுண்டுகள் குறைவது கண்டறியப்பட்டது. ஜீன் பிரச்னைகளால் உடல் பருமன் அடைகிறவர்களுக்கு இந்த மருந்து சிறந்த அளவில் உபயோகப்படும் என்கிறார்கள். நியுயார்க் ரீஜெனிரான் இதை கொண்டு வரப்போகிறது. எப்போது வரும்? இன்னும் 10 வருடங்கள்.

*


3. pyy செலுத்தல் ஸ்பிரே: வாஷிங்டங்ளில் இருக்கிற நாஸ்டெக் என்கிற மருந்து கம்பெனி இதை அறிமுகப்படுத்தப் போகிறது. ஆஸ்மாவிற்கு பயன்படுத்துவது போல ஸ்பிரேயை மூக்கில் அடித்துக் கொள்ள வேண்டும். இதில் இருக்கிற pyy என்கிற
புரோட்டீன் பசியைக் குறைக்கும் 15 சதவிகித கலோரி குறைப்பை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். ஒரு மாதத்தில் 6 பவுண்ட் எடையைக் குறைக்கும் என்கிறார்கள். ஒரே பிரச்னை லேசாக வாந்தி வருவது போல சீட் இருக்கும் என்பதுதான். இன்னும் 3 வருடத்தில்

*


4. gastric pacer: இது ஒரு மிகச்சிறிய பாட்டரியில் செயல்படும்
எலக்சட்ரானிக் பொருள். நம் இந்திய டாக்டர் ஒருவர்தான் இதைக் கண்டுபிடித்தவர். ஒரு சிகரெட் லைட்டர்சைஸில் இருக்கும். இதை வயிற்றின் மேல் இருக்கும். தோலின் கீழ் ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்து வைத்து விட வேண்டும். அது தன்னிடம்
இருக்கிற இரண்டு ஒயர் வழியாக சில சிக்னல்கள் வயிற்றுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் வயிறு எப்போதும் Full ஆக இருக்கிற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மிக மோசமாக பருத்து இருக்கும் நபர்கள் கேஸ்ட்ரிக் பை பாஸ் அறுவை சிகிச்சைக்கு பதில் இந்த மெஷினைப் பயன்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. எப்போது வரும்?

*


5. fat blasters: ஹாஸ்வஜ் கேன்ஸர் ஆய்வுக் கூட நிபுணர்களால் இந்த கொழுப்பை சாகடிக்கும் லிஸ்தடிக் பெப்டைட்_ஐ கண்டு பிடித்திருக்கிறார்கள். இது கொழுப்பு செல்களுக்கு செல்லும் இரத்தக் குழாய்களைத் துண்டித்து அவற்றைப் பசிலால் இறக்க
விடுகிறது. விலங்குகளின் பரிசோதனையில் ஒரு வாரத்தில் 30 சதவிகித எடை குறைந்து கூடவே, அதிகமாக இருந்த க்ளுகோஸ் அளவு, கொலஸ்டிரால் அளவும் குறைந்தது. எப்போது
வரும்? சென்ற மாதத்தில் தன் மனிதர்களிடம் ஆய்வு தொடங்கப்பட்டிருக்கிறது. வெளியில் விற்பனைக்கு வர பல வருடங்கள் ஆகலாம்.


***


உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சைகள்:


1. உடல் பருமணாக இருக்கிற ஒருவர் எப்போது அறுவை சிகிச்சையை நாட வேண்டும்? உடல் பருமனை அளவிடும் BMI 40_க்கும் மேல் இருக்கும் போது BMI 35_க்கும் இருந்து,
உடன் டயாபடீஸ், ஹைப்பர் டென்ஷன், இருதயப் பிரச்னைகள், ஆஸ்துமா, ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்னைகள் இருக்கும் போது மற்ற உடல் எடை குறைப்பு முயற்சிகள் பலன் அளிக்காத போது எதிர்காலப் பிரச்னைகளை மனதில் கொண்டு உங்கள் டாக்டர்
அறிவுறுத்தும் போது.


*


2. என்ன விதமான அறுவை சிகிச்சைகள் தற்போது இருக்கின்றன? Gastric by pass, Gastric Banding

*

3. எந்த அறுவை சிகிச்சையை எப்படி தேர்ந்தெடுப்பது? தெரிந்து கொள்வதற்காக சில அடிப்படைத் தகவல்களை கவனியுங்கள். gastric band surgery BMI 45_க்கு கீழே இருக்கிறவர்களுக்கு உதவும். மருத்துவமனையில் இரண்டு நாட்கள் தங்க வேண்டி
வரும். ஓய்வு இரண்டு வாருங்கள். மறுபடியும் செய்யக்கூடிய அறுவை சிகிச்சை முறை. வயிற்றில் பொருத்தப்படும் அந்த பாண்டை அட்ஜஸ்ட் செய்வதற்காக தேவைப்படும் போது
மருத்துவமனைக்கு வரவேண்டி இருக்கும் 50 சதவிகித எடை குறைய வாய்ப்பு (2 வருடங்களில்).

gastric by pass surgery: நிரந்தரமாக எடை குறைக்கும்
சிகிச்சை: மேஜர் அறுவை சிகிச்சை என்பதால் பின் விளைவுகளும் அதிகம் இருக்கும். 6 நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டும். வாழ்நாள் முழுக்க சில உணவு தோழமைகள்
தேவைப்படும் (Nutrient Suppliment), 70 சதவிகித எடை குறைய வாய்ப்பு (1 வருடத்தில்)

*

4. என்ன விதமான பின் விளைவுகள் வரலாம்?பெரும்பாலான நபர்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிற்சில பிரச்னைகளைத் தான் சந்திக்கிறார்கள். சில நேரங்களில் பெரிய பிரச்னைகள் வரலாம். அப்படி வரக்கூடியவை. ''நுரையீரல் பிரச்னை.
மண்ணீரல் காயம் _உள்ளே பொருத்தப்படுகிற ''பார்ட் நழுவ விடுதல் _இரத்த இழப்பு _கிருமி தொற்று _இரத்தம் உறைதல்.


*


உடல் பருமனுக்கு சித்த மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?


1. கொள்ளும் மிளகும் சேர்ந்து உருவாக்கப்படுகிற கசாயம், குடம்புளி என்கிற மருந்து.

*

2. உருக்கும் செந்தூரம் போன்றவைகள் பொதுவாக உடல் எடை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

*

3. கூடவே, பச்சரிசி பயன்படுத்துவதைத் தவிர்க்கச்
சொல்லப்படுகிறது.

*

4. வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் குளியல்.

*

5. கூடவே, உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மேற்சொன்னவற்றை முயற்சி செய்து பார்க்க தேர்ந்த சித்த மருத்துவர்களை நாடுவது நலம்.


***


உடல் பருமன் 3 முக்கிய காரணங்கள்:


1. தவறான உணவு
2. தவறான கலோரி
3. தவறான வழிகள்


சரியான உணவை, சரியான கலோரிகளுடன் சரியான இடைவெளிகளில் சாப்பிடும் போது ஒல்லி ஒல்லி.

***


உடல் பருமன் சிசிச்சையில் பயன்படுத்தப்படும் ஹெர்பல் மருந்துகள்:


1. ஆலுவேரா: இது ஜீரணத்தை அதிகரிப்பதன் மூலம் உணவு மண்டலத்தை சரி செய்கிறது.

*


2. அஸ்ட்ராகாலஸ்: சக்தியை கூட்டி உணவின் நுண்ணிய பொருட்களை ஜீரணிக்க உதவுகிறது.

*


3. ஸ்டெல்லாரி மீடியா: சாதாரணமாக காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுவது போல சாப்பிடலாம். எடை குறைப்பில் புகழ்பெற்ற ஹெர்பல் இது.

*


4. டாண்டிலியான்: வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்துகிறது.

*


5. ஈவினிங் ப்ரைம்ரோஸ்: இதில் இருக்கிற டிரிப்டோபேன் எடை குறைக்கிறது

*


6. பெனல்: இயற்கையான பசி குறைப்புத்தன்மை கொண்டது.

*


7. ஃபெனுக்ரீக்: கொழுப்புகளை கரைக்க உதவுகிறது

*


8. க்ரீன் டீ: உடல், கொழுப்பை எரிக்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது.

*


9. குகுள்: ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடை குறைப்பிற்காக பெரிதும் பயன்படுத்தப்படும் ஹெல்பல் இது கூடவே கொலஸ்டிரால் அளவையும் குறைக்கிறது.

*


10. சிவப்பு மிளகு: வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.


***


உடல் பருமனுக்கு ஹோமியோபதி மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது?


ஹோமியோபதியில் உடல் பருமனைக் குறைக்க ஏறக்குறைய 150 மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன

*

பருவத்தின் அடிப்படையில்:

உடல் பருமனின் நுண்ணிய நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மருந்துகள் தெரிவு
செய்யப்படுகின்றன. உதாரணமாக, உடல் பருமன் அதிகம் கொண்ட குழந்தைகள், இளம் பருவத்தினர், வயது முதிர்ந்தவர்கள் என்று ஒவ்வொரு பருவத்தினருக்கும் மருந்துகள்
வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தனித்தனியாகவும் மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

*

உடல் பருமன் வியாபித்துள்ள அங்கங்களின் அடிப்படையில் உடல் பருமன் அதிகமுள்ள உடல் அவயங்களின் அடிப்படையில் மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன

உதாரணத்திற்கு:

உடல் பகுதி அதிக பருமன் கொண்டு, கை கால்கள் மெலிந்து இருந்தன. வயிறு மட்டும் பருத்திருந்து உடலின் மற்ற பகுதிகள்
மெலிந்தோ சராசரியாகவோ இருப்பது.

உடல் பருத்து கழுத்து மெலிந்து நீண்டு இருப்பது.

கர்ப்ப காலத்தில் அளவுக்கதிகமான எடை பிரசவத்திற்குப் பின் பருமனாதல், மாத விலக்கு வரும் முன் ஏற்படும் உடல் பருமன், மாத விலக்கு நின்றபின் மெனோபாஸ் பருவத்தில் அளவுக்கதிகமான பருமனாதல், கர்ப்பப்பை பிரச்னைகளால் எடை அதிகரிப்பு இடுப்புப் பகுதி அல்லது வயிற்றுப் பகுதியில் மட்டும் பருமனாதல், இடுப்பின் பின் பாகத்தில், தொடையில் மட்டும் அதிக பருமனாதல், மார்பகங்கள் அளவுக்கதிகமாக
பருமனாதல் இப்படி ஒவ்வொரு நுன்னிய பண்புகளின் அடிப்படையில் மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


*


நோயினால் பருமனாதல்:

மேலும் மன அழுத்தத்தினால் பருமனாதல், செரிமானக் கோளாறுகளால் எடை அதிகரித்தல் இவற்றின் அடிப்படையிலும்
ஹோமியோபதி மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஹார்மோன் கோளாறுகளால் ஏற்படும் எடை அதிகரிப்புக்கும் விஞ்ஞான ரீதியாக மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு தைராய்டு சுரப்புப் பிரச்னைகளால் ஏற்படும் உடற் பருமனைக் குறைக்க ஹோமியோபதியில் மிகச் சிறந்த மருந்துகள் உள்ளன.

*

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்.

உடலின் உணவுத் தேவையை உணர்த்தும் பசி மிக அதிகமாவதும் பிரச்னைதானே?

குண்டோதரனைப் போன்ற பெரும் பசிக்காரர்களுக்கும் ஹோமியோபதி மருந்துகள் பசியை சீர்படுத்தி, செரிமானத்தை செழுமைப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
இதனால் அளவுக்கதிகமான உணவு உண்ணுதலை சீர்படுத்தி, அளவான உணவு, அளவான அழகான உடலை, ஆரோக்கியத்தை அளிக்கும் அருமருந்தாய் உள்ளது.மேலும் இயற்கையாகவே உடல் பருமன் அதிகரிக்கும் தன்மை கொண்டவர்களுக்கு அத்தன்மையை சீர்படுத்தும் வகையிலான மிகச் சிறந்த மருந்துகளும் ஹோமியோபதி மருத்துவ முறையில் உள்ளன.


***


உடல் பருமனுக்கு அக்கு பஞ்சர் மருத்துவத்தில் என்ன சொல்லப்படுகிறது:


இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தேவைப்படும். சைனீஸ் அக்கு_பஞ்சர் மருத்துவம் உடல் பருமனை பற்றாக்குறை, அதிகம் என்கிற இரண்டு
வழிகளில் பார்க்கிறது. அதிக உணவு, அதிக குடிப்பழக்கம் Excess என்கிற பிரிவில் வரும் பற்றாக்குறையில் சிறுநீரகம், மண்ணீரல் சக்திகள் வரும். இந்த பற்றாக்குறை சக்தியால், 'யின்' அதிகமாகும். இது தான் உடல் அளவை அதிகப்படுத்தி விடுகிறது.
கூடவே வயிற்றில் ஏற்படுகிற பற்றாக்குறை சக்தியும் உடல் பருமனுக்கு ஒரு காரணம்.


இவற்றை அக்குபஞ்சர் Regulate மூலம் ஒழுங்குக்கு கொண்டு வர முடியும். கூடவே கல்லீரலைத் தூண்டுவதன் மூலம் உடலில் இருக்கிற நச்சுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன. இந்த எடை குறைப்பு சிகிச்சை மூன்று முதல் ஆறு மாதங்கள்
வரை தேவைப்படும். கூடவே, உணவு மாற்றங்கள்'' உடற்பயிற்சிகள் அவசியம்.


***
மீதி அடுத்த பதிவில் ( part - 3 )
***

"வாழ்க வளமுடன்"

உடல் பருமனும், அதனால் நோயும், அதனை எப்படி குறைப்பது? - ( BMI )

நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய வயது, உயரம் இவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட எடைதான் இருக்க வேண்டும் என மருத்துவ உலகம் சிபாரிசு செய்கிறது. அந்த குறிப்பிட்ட எடையைத் தாண்டி விடுகிறபோது இரண்டு நிலைகள் ஏற்படும்.




முதல் நிலை அதிக எடை ஒருவருக்கு இருக்க வேண்டிய எடையை விட சற்று அதிகம். இவர்கள் தேவைப்படும் அளவு எடையை விட அதிகமாக இருப்பார்கள். இதையும் தாண்டுகிறபோதுதான் Obesity உடல் பருமன் என்கிற இரண்டாவது நிலை ஏற்படுகிறது.

*

சரி அதிக எடை அல்லது உடல் பருமன் ஏற்பட்டால் என்ன? விட்டு விட்டுப் போக வேண்டியதுதானே என்றால் அப்படி விட முடியாத நிலையில் மருத்துவ உலகமும், ஆய்வாளர்களும் இருக்கிறார்கள் காரணம். உடல் பருமன் என்பது பல்வேறு நோய்களுக்கு அதிக காரணமாக இருக்கிறது குண்டாக இருப்பதினால் எந்த பிரச்னையும் இல்லை. அதன் காரணமாக எந்த நோய்களும் வருவதில்லை என்றால் மருத்துவ உலகம் 'பருமர்களை' திரும்பக் கூட பார்க்காது.


* ஏன் இவ்வளவு கவலை? எதற்கு இத்தனை எடை குறைக்கும் உணவுகளுக்கான விளம்பரங்கள்? எதற்கு இத்தனை Weight loss programmes?

ஒரே ஒரு காரணம்தான்.


குண்டாக இருப்பதால், உடல் எடை தேவைக்கும் அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான நோய்கள் எளிதில் வந்து விடுகின்றன. இந்த உடல் எடை கூடி பருமன் அதிகரிப்பது
எங்கோ, யாருக்கோ நடப்பது அல்ல. மெல்ல மெல்ல மக்கள், தேவைக்கும் அதிகமான எடை கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் நூற்றுக்கு,
முப்பத்தொன்பது பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.


*

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் எல்லாம் பெரும்பாலான மக்கள் செய்கிற முக்கியமான வேலை உடல் எடையைக் குறைக்கிற முயற்சியில் ஈடுபடுவதால் மெல்ல இந்த நிலை இந்தியாவிற்கும் வந்து விடும் என்று நினைக்கிறார்கள்.


*


உடல் பருமன் என்றால் என்ன? அதில் என்ன அறிவியல் மாற்றம் நடக்கிறது? ஏன் சிலருக்கு மட்டும் உடல் பருமனாகிக் கொண்டே போகிறது? உடல் பருமனைத் தவிர்க்க வழிகள் இருக்கிறதா? உடல்எடையைக் குறைக்க மாத்திரைகள் இருக்கிறதா? என்ன விதமான உணவுகள் சாப்பிடுவது? எதிர்காலத்தில் ஏதாவது மருந்துகள் வருமா? உடல் பருமனை சர்ஜரி மூலம் குறைத்துக் கொள்ளலாமா?* *விரிவாகக் கவனிப்போம்.* *Obesity என்றால் என்ன?

*


நம் உடலில் மில்லியன் கணக்கில் செல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் ஒரே மாதிரியானவை அல்ல. வடிவிலும் செயலிலும் அவை பல்வேறு வகைகளாக இருக்கின்றன.

அதில் ஒரு வகை செல்கள்தான் Fat cells என்கிற கொழுப்பு செல்கள். இந்த செல்கள் பெரிதானால் உடல் எடை அதிகரித்து பருமன் வந்து விடும். இந்த செல்களின் அதிகரிப்பு இரண்டு விதங்களில் நடக்கலாம்.

*

ஒன்று இருக்கிற செல்கள் அளவில் பெரிதாவது அல்லது இருக்கிற செல்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பது இந்த அடிப்படை மாற்றம்தான் மருத்துவர்களால் Obesity - உடல் பருமன் என்று சொல்லப்படுகிறது. இன்னும் புரிகிறபடி சொன்னால் உடலில் தேவைக்கும் அதிகமாக கொழுப்பு சேர்வது. இந்த செல்களில்தான் சக்தி சேமிக்கப்பட்டு செலவழிக்கப்படுகிறது. உடல் பருமனில் சேமிக்கிற சக்தி அதிகமாகி, செலவழிக்கிற சக்தி குறைந்து விடும். இதனால் கொழுப்பு செல்கள் பெரிதாக ஆரம்பித்து விடுகின்றன. உடல் எடை செலவழிக்கப்படுகிற சக்தி கலோரிகளைப் பொறுத்தது. குறைவான செலவு அதிக எடையை உருவாக்கி விடும். அதிக செலவு குறைந்த எடையை உருவாக்கும்.


***


எந்த எந்த காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது:


1. வயது:

உடல் பருமன் எந்த வயதிலும் ஏற்படலாம். பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் பருமன் ஏற்படுகிற வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதிக பருமர்கள் 40 வயதுக்கு மேற்பட்ட பிரிவில்தான் இருக்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம்
இந்த வயதுகளில் உடலில் சேமிக்கப்படுகிற சக்தியை செலவழிக்கிற திறன் செல்களுக்கு குறைந்து விடுகிறது. கூடவே வயதாகும் போது குறைகிற உடல் சார்ந்த வேலைகளும்
பருமனை நோக்கி நகர வைக்கிறது.

*


2. குறையும் உடல் சார்ந்த வேலைகள்:

வயதிலோ அல்லது வயது அதிகமோ உடல் சார்ந்த வேலைகள் (நடப்பது, ஓடுவது உடற்பயிற்சி, மாடிப்படி ஏறுவது) குறையும் போது செலவழிக்கப்பட வேண்டிய கலோரிகள் அளவு குறைந்து தேவையின்றி உடலில் சேமிக்கப்படுகின்றன. பலன் உடல் பருமன்.

*


3. ஜீன் வழி வருகிற மரபு குறிப்புகள்:


சில குடும்பங்களில் வழி வழியாக வருகிற பிள்ளைகள் எல்லோருமே குண்டாக இருப்பார்கள். அவர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ உடல் பெரிதாகிக் கொண்டே இருக்கும். அதிக கலோரிகளை எரித்து செலவழித்து உடல் எடை கூடுவதை தவிர்க்க முடியாத அளவிற்கு அவர்கள் ஜீன்கள் இயல்பிலேயே சக்தி குறைந்தவையாக இருக்கும்.


*


4. குடும்பத்தின் அமைப்பு:


சில உயர் குடும்பங்களில் இயல்பாகவே அடிக்கடி ரெஸ்டாரண்டுகளில் சாப்பிடுவது, பிட்ஸா போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது ஒரு ஸ்டேட்டஸ் சார்ந்த விஷயமாக இருக்கும். பணக்காரர்களுக்கு என்றே இருக்கிற விஷயங்களை எல்லாம் முடித்து விட்டு பெற்றோர்கள் பிள்ளை வளர்ந்திருக்கிறானா என்று பார்க்கும்போது பிள்ளை கண்டபடி வளர்ந்திருப்பான்.


*


5. சாப்பிடும் பழக்கம்:


சிலர் சாப்பிடுவதை மட்டுமே ஒரே பொழுது போக்காக வைத்திருப்பார்கள். சில வீடுகளில் விலங்குகளுக்கும், மனிதர்களைப்போல உடல் எடை கூடுமா? என்ற கேள்வி இருந்தது. கூடும் என்று நியூயார்க்கின் ராக் பைல்லர் பல்கலைக்கழகம் நிரூபித்திருக்கிறது.

*

இதற்கு காரணமாக அவர்கள் கண்டுபிடித்திருப்பது 'பாஸ்ட்' என்கிற ஒரு வைரஸ் தொற்று. இந்த வைரஸ் விலங்குகளின் மூளையில் தொற்றுவது அவற்றின் உடல் எடை கூட முக்கியமான காரணம் என்கிறார்கள். டி.வி. பார்த்துக் கொண்டே கொறிப்பது பழக்கமாக இருக்கும். ஒரு எபிசோட் தருகிற திகிலில் இரண்டு தட்டு நொறுக்குகள் காலியாகி இருக்கும்.

*

பார்க்கிற சுவாரஸ்யத்தில் சிலர் நொறுக்குகளோடு சேர்ந்து கைவிரல்களையும் கொறித்துக் கொள்வதும் கூட உண்டு. சில வீடுகளில் பெண்கள் எல்லோரும் சாப்பிடும் வரை அமைதியாக இருப்பார்கள் முடிந்ததும் மிச்சம் மீதி இருக்கிறஎல்லாவற்றையும் பேசிக் கொண்டே சாப்பிட்டு விடுவார்கள். திடீரென்று ஒருநாள் கீழே உட்கார்ந்திருந்து எழுந்திருக்க முடியாமல் யாராவது கை பிடித்து தூக்கி விடும்போதுதான் உடல் எடை கூடி குண்டாகி இருப்பது கவனத்துக்கு வரும்.


*


6. வாழ்க்கை முறை பழக்கம்:


சிலருக்கு அதிக எண்ணெய் போல கொழுப்பு இருக்கிற உணவுகள்தான் பிடிக்கும் எதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமோ அதுதான் சுவையாக இருப்பதாகத் தோன்றும். விளைவு பெரிய எடையுடன் கூடிய உடல்.


*


7. மணம் சார்ந்த பிரச்னைகள்:

கோபம், வருத்தம், கவலை போன்ற உணர்வுகளுக்கு சுலபமாக சாப்பிடும் பழக்கத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் சக்தி உண்டு. பல குண்டான பெண்களின் எடை கூடிய காரணம் மன அழுத்தம் இருக்கும் போதெல்லாம் சாப்பிடுவது.

*


8. பசித்த வாய்:


சிலருக்கு வயிற்றில் பசி இருக்காது. ஆனால் எதையாவது பார்த்தால் வாய் மட்டும் பரபரக்கும். சாப்பிடுவார்கள். முடிவு பருமன்.


*


9. ஹார்மோன் குறைகள்:

தைராய்டு பிரச்னைகள் ஸ்டீராய்ட் மருந்துகள் கர்ப்பத் தடை மாத்திரைகள். மன அழுத்தக் குறைபாட்டிற்குச் சாப்பிடும் மருந்துகள் போன்றவை உடல் எடையைக் கூட்டி பருமனை உருவாக்கக் கூடியவை.



*


உடல் பருமனை எப்படி கணக்கிடுவது?


அதிக உடல் எடை உடல் பருமன் இவற்றைக் கணக்கிடும் முன், நம்முடைய இயல்பான உடல் எடையை பிரதிபலிக்க உடல் நான்கு விதமான சேர்க்கையை வைத்திருக்கிறது. இந்த நான்கும் சேருதலை Body Composition என்று சொல்லலாம். இந்த நான்கு விஷயங்களும் சேர்ந்துதான் உடல் எடையைத் தீர்மானிக்கிறது.


1. தசை, கல்லீரல், இருதயம் போன்ற மொத்தமான உறுப்புகள் சேர்ந்து உருவாக்குகிற எடை.

*

2. கொழுப்பு உருவாக்குகிற எடை.

*

3. செல்களுக்கு வெளியே இருக்கிற திரவ பொருட்கள் உருவாக்குகிற எடை (உ_ம்)
இரத்தம் நிணநீர்.

*

4. தோல், எலும்புகள் போன்ற இணைக்கும் சமாச்சாரங்கள் சேர்ந்து உருவாக்குகிற.


இதில் Obesity உடல் பருமன் என்பது இரண்டாவதாக வருகிற கொழுப்புகளின் எடை கூடுவதால்தான் வருகிறது.

*

பார்த்தாலே தெரிகிறது ஒருவர் எடை அதிகமாக இருக்கிறார் அல்லது பயங்கரமாக குண்டாகி விட்டார் என்பது நம் பார்வை வழி செய்கிற கணக்கு. ஆனால் மருத்துவ அறிவியலின்படி உடல் பருமனைக் கணக்கிட ஐந்து வழிகள் இருக்கின்றன.

அதில் முக்கியமானது பிஎம்ஐ என்கிற பாடி மாஸ் இன்டெக்ஸ் பெயர்தான் ஏதோ சிக்கலான விஷயம் மாதிரி இருக்கும். ஆனால் ரொம்பவும் எளிமையான கணக்கு இது. இதன் மூலம் உயரத்திற்கும் உங்கள் வயதுக்கும் ஏற்ற சரியான எடையில் நீங்கள் இருக்கிறீர்களா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்.

***


எடை (KG), உயரம் X உயரம் (M)


உதாரணமாக உங்கள் உயரம் 160 செ.மீ. எடை 60 கிலோ என்று வைத்துக் கொள்ளுங்கள்.


உங்கள் பிஎம்ஐ எப்படி கணக்கிடப்படுகிறது என்று பாருங்கள்.


60 / (1.6 X 1.6) = 60 / 2.56 = 23.5

இந்த பிஎம்ஐ அளவை வைத்துக் கொண்டு எப்படி ஒருவர் அதிக எடையில் இருக்கிறார்? சரியான எடையில் இருக்கிறார்? அல்லது உடல் பருமனியல் இருக்கிறார்? என்று சொல்ல முடியும்.


*


இந்த விஷயமும் படு சிம்பிள் ஏற்கனவே மருத்துவர்கள் கணக்கிட்டு நமக்கு வாழைப்பழத்தை உரித்து வைத்திருக்கிறார்கள். எந்த சிரமமுமின்றி அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


*


1. மேற்சொன்ன எளிமையான கணக்கின் முடிவில் வருகிற பிஎம்ஐ 20-க்கும் கீழே இருந்தால் நீங்கள் தேவைப்படுகிற எடையை விட குறைவாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

*

2. பிஎம்ஐ 25-29,9க்குள் வருகிறது என்றால் நீங்கள் தேவைப்படும் உடல் எடையை விட அதிகமானஎடையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம் இது ஒரு வேளை.


*



3. உங்கள் பிஎம்ஐ 30_க்கும் அதிகமாக இருக்கிறது என்றால் நீங்கள் Obesity உடல் பருமன் என்ற நிலையை அடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். இது கண்டிப்பாக ரெட் சிக்னல்.


*


4. இது தவிர சிலருக்கு தலை, கை கால், மார்புப் பகுதி என எல்லாம் ஓகேவாக இருக்கும் வயிறு மட்டும் பெரிதாகி பாடாய் படுத்தும் அங்கு மட்டும் தேவைக்கும் அதிகமான கொழுப்பு சேர்ந்திருக்கும் இதை வயிற்றின் பருமன் Abdominal Chesity என்று ஒரு பெயர் கொடுத்துச் சொல்கிறார்கள்.


*


5. இந்த அளவை Waist/Hip ration என்கிற வழியில் கணக்கிடுகிறார்கள். எளிமையாகச் சொன்னால் இடுப்பின் சுற்றளவு என்று சொல்லலாம்.


*


6. இந்த அளவு 1_க்கும் அதிகமாகப் போனால் ஆண்களுக்கு வயிற்றின் பருமன் ஏற்பட்டு
விட்டது என்று அர்த்தம்.


0.8க்கு அதிகமாகப் போனால் பெண்களுக்கு தொப்பை வந்து விட்டது என்று அர்த்தம்.


***

உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் என்ன?


அதிகப்படியான சோர்வு, ஆஸ்துமா, மன இறுக்கம், குறட்டை, ஹைப்பர் டென்ஷன், இருதய இரத்தக்குழாய் கோளாறுகள், வெரிகோஸ் வெயின்ஸ் என்கிற இரத்தக் குழாய்கள் சுருண்டு கொள்ளும் நிலை, இடுப்பு எலும்பு, முட்டி எலும்புகள் தேய்ந்து ஆர்த்ரைடிஸ், கீழ்முதுகு எலும்பில் வலி, தேவையற்ற பிரச்னைகள், செக்ஸ் குறைபாடுகள், மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஸ்ட்ரோக், கல்லீரல் பிரச்னைகள்.


*


உடல்பருமனைக் குறைப்பது எப்படி? அதற்கான வழி சிகிச்சைகள் என்ன?


உடல் பருமனைக் குறைக்க முற்படும்போது ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். டயாபடீஸ், இரத்த அழுத்தம் போல் உடல் பருமன் என்பதும் ஒரு நீண்டநாள் பிரச்னை எப்படி உடல் எடை ஒவ்வொரு நாளாகக் கூடுகிறதோ அப்படியே உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பதுதான் நல்லது. உடனடியாக பத்து கிலோ, பதினைந்து கிலோ என உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்தீர்கள்.


*


உடல் பருமனுக்கான சிகிச்சையை மூன்று விதமாகப் பிரித்துக் கொள்ளலாம்.


1. முதல் வழி: மருந்து மாத்திரைகள் இல்லாமல் உடல் எடையைக் குறைப்பது.


2. இரண்டாவது வழி: மாத்திரைகளின் வழி உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பது


3. மூன்றாவது வழி : அறுவை சிகிச்சை.


***



யாருக்கு எந்த வழி சிறந்தது. பிஎம்ஐ 30க்கும் அதிகமாக இருக்கிறவர்கள் பிஎம்ஐ 27 உடலில் டயாபடீஸ் அல்லது ரத்த அழுத்த நோய் இருக்கிறவர்கள் உணவு உடற்பயிற்சிகளுடன் மருந்துகளின் சிகிச்சையும் எடுத்துக் கொள்வது நல்லது.


*


இயல்பான எடையை விட அதிகம் எடைகூடி இருக்கிறவர்கள் உணவு, உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றலாம். உடல் எடையைக் குறைக்கத் தொடங்க ஆரம்பிக்கும் போதே உங்கள் வாழ்க்கை முறையில் மெல்ல 3 முதல் 6 மாதங்களுக்கு மாற்றங்களைக் கொண்டுவரும்.


உணவில் மாற்றங்கள், இதுவரை செய்ததை விட அதிக உடல் உழைப்பு போல சில விஷயங்களை தொடர்ந்து மாற்றிக் கொள்வது நல்லது. உடல் எடையைக் குறைப்பதற்கான முதல் வழி. மருந்து மாத்திரைகள் இல்லாத வழி உணவில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி இரண்டையும் சற்று விரிவாகத் தெரிந்து கொள்வோம்.


***


உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்:


உணவின் மூலம் கிடைக்கக் கூடிய கலோரி அளவைக் குறைப்பது. பொதுவாக உடல் பருமனைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறவர்களிடம் உலகம் முழுவதும் முதன்
முதலில் சொல்லப்படுகிற அட்வைஸ் இதுதான். ஒரு நாளைக்கு சராசரியாக 500 கலோரிகளைக் குறைக்க வேண்டும். கண்டபடி சாப்பிடாமல் இருப்பது உடலில் எலக்ரோலைட் இம்பேலன்ஸ் உருவாக்கும் ஜாக்கிரதை கூடவே பித்தப்பை கற்கள்.

*

கலோரி குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பில் 50 சதவிகிதம் மாறுபடியும் இரண்டு வருடங்களில் திரும்ப வந்து விடுகிறது. நம் மூளையில் இருக்கிற, 'லெப்டின்' என்கிற பொருள் ஏற்கனவே இருந்த எடைதான் சரியான எடை என்று தவறாக நினைத்துக் கொண்டு திரும்ப எடையை பழையபடி கூட்டிவிடுகிறதாம்.

*

கலோரி குறைந்த உணவுகளால் ஏன் பயம் இல்லை?

1. ஒரு நாளைக்கு 2500 கலோரி சாப்பிடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு சமமான அளவில் சக்தி செலவழிக்க நம் உடல் டியூன் செய்யப்படுகிறது. திடீரென்று 1000 கலோரியாக குறைக்கும் போது உடலும் தனது வளர்சிதை மாற்றத்தை 1000 கலோரி செலவழிப்பிலேயே நடத்திக் கொள்கிறது. இந்த ''அட்ஜஸ்ட்'' சமாச்சாரம்தான் பருமர்களின் எதிரி. ஆக கலோரி குறைந்த உணவு எடை குறைக்காமல் இருப்பதற்கும், கலோரி அதிகமான உணவு எடை கூட்டாமல் இருப்பதற்கும் இதுதான் காரணம்.


**


2. உணவில் கொழுப்பு சத்தைக் குறைப்பது:


உடல் எடை கூடுவதில் கொழுப்புதானே அதிக பங்கு வகிக்கிறது. அதனால் கொழுப்பைக் குறைத்தால் உடல் எடை குறையும் என்கிற நோக்கத்தில் இந்த அட்வைஸ் கொடுக்கப்படுகிறது. ஆய்வின்படி உணவில் கொழுப்பு பொருட்களைக் குறைப்பதால் ஏற்படுகிற எடை இழப்பு 3 - 4 கிலோ தான். இதுவும் ஒவ்வொருவருக்கும் சரியாக உதவுவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

*

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட ஆய்வில் இரண்டு நாடுகளிலும் மக்கள் குறைவான அளவுதான் கொழுப்பை சாப்பிடுகிறார்கள். ஆனால் எடை குறைவதில்லை. காரணம் கொழுப்பைக் குறைக்கிற அவர்கள் கலோரியை அதிகரித்து விடுகிறார்கள்.

*

ஆஸ்திரேலிய ஆய்வு வேறொரு கருத்தை முன் வைக்கிறது. கொழுப்பில் சாச்சுரேட் மற்றும் அன் சாச்சுரேடட் என்று இரண்டு வகை இருக்கிறது. இதில் சாச்சுரேடட் நமக்கு நல்லது செய்வதில்லை துரதிஷ்டவசமாக அதில்தான் நமக்கு பெரும்பாலான உணவு கிடைக்கிறது. இந்த கொழும்பு கொலஸ்டிராவை உயர்த்தி இருதய அடைப்புகளை உருவாக்கும்.

*

ஆனால், அடுத்த வகையில் வருகிற கொழுப்புகள் மிக நல்லவை. உடலுக்கு பெரும் நன்மைகளைச் செய்கின்றன. மீன் சன், பிளவர், ஆயில், சனோவா ஆயில் இவற்றிலெல்லாம் இந்த கொழுப்பு கிடைக்கிறது. இது நமது இருதயத்தின் தோழர்கள்
நல்லதே செய்யும் நண்பன். எடையைக் குறைக்கிறேன் என்று உணவின் மூலம் வருகிற நல்ல கொழுப்புகளை துரத்தி விடுவது நல்லது அல்ல. அதே சமயம் எடை குறைக்க கொழுப்பை குறைப்பது உதவாது என்று நினைப்பதும் தவறானது. கொழுப்பை குறைப்பதன் மூலம் மூளையில் இருக்கிற லெப்டின் வயிற்றுக்கு சிக்னல் தந்து பசியைக் குறைக்கும். எடுத்துக் கொள்கிற அளவு குறைவு. இருக்கிற சக்தி செலவழிப்பு மூலம் உடல் எடை
குறைய கொழுப்பும் கொஞ்சம் உதவும்.


**


3. கார்போஹைட்ரேட் உணவு வகைகளில் மாற்றம்:


நாம் அதிகமாகச் சாப்பிடுகிற அரிசி வகை உணவுகள் இந்த லிஸ்டில் வரும் இவற்றைக் குறைப்பதன் மூலம் உடல் எடை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடை குறைப்பில் கார்போஹைட்ரேட் உணவுகளின் பங்கு பற்றித்தான் இன்னும் குழப்பங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பழைய உடல் எடை குறைப்பு பார்முலாக்கள் கார்போஹைட்ரேட்டை அதிகப்படுத்தச் சொல்லியிருந்தன.


*

ஆனால், இப்போது ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டிருக்கிறது. கிட்னி பல்கலைக் கழகத்தின் நியுட்ரிஷன் துறை _ பேராசிரியர் ப்ரான்ட் மில்லர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். சாதம் வெள்ளை பிரட், கேக்குகள் காலை உணவுகளில்
சேர்க்கப்படுகிற சமாச்சாரங்கள் எல்லாம் கொழுப்புக்கு மாற்றமான உணவாக நினைக்கப்பட்டிருந்தன. ஆனால் இவை அதிக அளவில் உடலில் க்ளுகோஸ் உருவாக வைப்பதால் இருதயத்திற்கும் முக்கியமான எதிரியாக மாறி விட்டன. இப்போது ஆய்வாளர்கள் கார்ப்போ ஹைட்ரேட் உணவுகளை இரண்டு வகையாகப் பிடித்து பார்க்கிறார்கள். இதில் குறைவான ஜிஐ உடையவைகளை உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்த வலியுறுத்துகிறார்கள்.


**


4. புரோட்டீன் வகை உணவுகளில் மாற்றம்:


நிறைய புரோட்டீன் வகை உணவுகளை எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. பொதுவாக ஒரு நாளின் உணவில் 10-15% கலோரி கொடுக்கும் புரோட்டீன்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளச் சொல்லி நிறைய மருத்துவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். காரணம் அதிக புரோட்டீனை அதிக நாட்களுக்கு எடுத்துக் கொள்ளும் போது குடல் புற்றுநோய்கள், எலும்பு நோய்கள் மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.


**


5. நார்ச்சத்து மிகுந்த உணவுகள்:


அதிகம் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் 2 கிலோ எடை குறைப்பில் உதவுகின்றன. சிலருக்கு உணவில் மாற்றம் செய்ய விருப்பம் இருக்கும். ஆனால் எப்படி அவற்றைக் கணக்கிடுவது எப்படி ஒரு நிபுணரின் உதவியை கேட்டுப் பெறுவது என்பதை யோசிக்காமல் காலம் கடத்துவார்கள். சிலருக்கு சோம்பேறித்தனம் யாராவது ரெடிமேடாக கொடுத்தால் சாப்பிட்டுப் பார்க்கலாம் என்ற நினைப்பு இருக்கும். இவர்களைப் பிடித்து பணம் பெற்று கையில் வெயிட் லாஸ் டயட்டைத் திணித்து விடுகிற கம்பெனிகள் நிறைய இருக்கின்றன. இவை சிலருக்கு உதவும்சிலருக்கு உதவாது.


***

மீது அடுத்த பதிவில்.....

***


"வாழ்க வளமுடன்"

இதயத்துக்கு எந்த எண்ணைய் பிடிக்கும்?

இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து சேருவதே பெரும்பாலான இதய நோயாளிகளின் பிரச்னையாக உள்ளது.





ரத்தத்தில் அதிக அளவு கொழுப்புச் சத்து சேரும் நிலையில், அது ரத்தக் குழாய் பாதைகளை குறுகலாக்கி ("அதீரோஸ்குளோரோசிஸ்'), அடைப்பை ஏற்படுத்துகிறது.

*

இதனால் நெஞ்சு வலி, மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அறிகுறிகள் ஏற்படுகின்றன. எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து சேருவதற்கும் பாதிக்கப்படுபவரின் உணவு முறைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.

*

எண்ணெய், நெய், டால்டா, தேங்காய் எண்ணெய், பன்றிக் கறி, மூளைக் கறி, நண்டு, ஈரல் முதலிய அசைவ உணவு வகைகள், ஊறுகாய், பாலாடை -பால் கட்டி-பால் கோவா, முந்திரி, தேங்காய், வேர்க்கடலை உள்ளிட்டவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்.

*

எனவே ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ள இதய நோயாளிகள், உணவு முறையை கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்துக் கொள்வது அவசியம்.


***


எந்த எண்ணெய் நல்லது?


1. வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலைஎண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள்.

*

2. கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய்' போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள்.

*

ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெய்யிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

*

3. பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.

*

4. எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்ûஸடு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. ரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து உள்ள இதய நோயாளிகளுக்கென்றே, கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

*

5. அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் கொலஸ்டிரால் உள்ளது. இதனால் இவற்றில் கொழுப்புச் சத்து அதிகம். முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம். இதய நோயாளிகள் கோழிக்கறி, மீன் சாப்பிடலாம்; ஆனால் அவற்றை பொரிக்கவோ அல்லது வறுக்கவோ கூடாது. குழம்பில் போட்ட மீன் அல்லது குழம்பில் போட்ட கோழிக்கறி சாப்பிடலாம். வாரத்துக்கு இரு முறை மட்டுமே இவற்றைச் சாப்பிடலாம்.

*

6. அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

*

7. கொட்டை வகைகள்:

முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும். பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.

*

8. நார்ச்சத்து காய்கறிகள்:

நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


***


தேவை கலோரி மதிப்பீடு:


மேற்சொன்ன உணவு முறைகள், நோயாளிகளுக்கு பொதுவான உணவுத் திட்ட முறைகள். ஒவ்வொரு இதய நோயாளியின் உயரம், எடை, "பாடி மாஸ் இண்டக்ஸ்' (பி.எம்.ஐ. அட்டவணை), அன்றாட அவரது வேலை ஆகியவற்றைப் பொருத்து, ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு உணவு மூலம் எவ்வளவு கலோரிச் சத்து தேவைப்படும் என்பதை உணவு ஆலோசனை நிபுணர் மதிப்பிடுவார்.

*

இத்தகைய கலோரிச் சத்து மதிப்பிட்டைக் கொண்டு ஒவ்வொரு நோயாளிக்கும் குறிப்பிட்ட உணவு முறைத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. எனவே பக்கத்து வீட்டு நோயாளி அல்லது நண்பராக இருக்கும் நோயாளியின் உணவு முறையைக் கேட்டு, உணவு நிபுணரின் ஆலோசனை கலக்காமல் உணவுத் திட்டத்தை மேற்கொள்வது தவறானது.

***

நன்றி தினமணி

***

"வாழ்க வளமுடன்"



***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "