...

"வாழ்க வளமுடன்"

22 ஜூலை, 2011

பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க



* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தாசித்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தாசித்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே.


எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.



* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் எனனதான் போஷகுக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சாசியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.



* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது. கர்ப்பத்திற்கு முன்பு வரை செக்ஸுக்குப் பயன்பட்ட உங்கள் அங்கங்கள் அதற்குப் பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பிற்கும், தாய்ப்பாலுடூட்டவுமே பிரதானமாகப் பயன்படுகின்றன.



இதனால் பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.




***
thankd maalaimalar
***







"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு வாந்தி, பேதி வராமல் தடுப்பூசி போடுங்க



வளரும் நாடுகளில், வாந்தி, பேதியால், குழந்தைகள் பெருமளவில் உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில், 26 சதவீதம் பேர், வாந்தி, பேதியால் இறக்கின்றனர். இவர்களில் இந்தியாவில் மட்டும், 1.87 மில்லியன் குழந்தைகள். இதுதவிர, வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்ட, 10 மில்லியன் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைவால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், பிற நோய்களை எதிர்கொள்ளும் சக்தி குறைந்து, மேலும், பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.




ரோட்டா வைரஸ் கிருமி:

வாந்தி, பேதி ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் (Rota virus) எனும் நுண்கிருமியே. சமீபத்திய ஆராய்ச்சி முடிவின்படி, “ரோட்டா வைரஸ்’ கிருமி, 40 சதவீத சமயங்களில், வாந்தி, பேதிக்கு காரணமாக இருக்கிறது. இதுதவிர, பல கிருமிகளும் பேதிக்கு காரணமாக இருந்தாலும், “ரோட்டா வைரஸ்’ கிருமியே, குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் மோசமான வாந்தி, பேதி மற்றும் நீண்ட நாட்கள் பாதிக்கக்கூடிய பேதிக்கு முக்கிய காரணம், “ரோட்டா வைரஸ்’ தான் என, ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.



எவ்வாறு பரவுகிறது:

ரோட்டா வைரஸ், மக்களின் சுகாதாரக் கேடுகளால் தான் பரவுகிறது. கழிவறை சென்று வந்த பின், சோப்பு போட்டு கை கழுவுதல், கையை சுத்தமாக கழுவிய பின், சாப்பாடு உட்கொள்ளுதல் மற்றும் உணவூட்டுதல் போன்ற, மிகவும் அடிப்படை சுகாதார வழிமுறைகளை மேற்கொண்டாலேயே போதும்; வாந்தி, பேதி பரவுவதை தடுத்துவிட முடியும்.



சிகிச்சை முறை:

வாந்தி, பேதியால் குழந்தை பாதிக்கப்பட்டால், உடம்பில் உள்ள நீர்ச்சத்து மிகவும் குறைந்து விடுகிறது. அதனால், குழந்தை மிகவும் சோர்ந்து காணப்படுகிறது. மேலும், தொடர்ந்து போகும் பேதியால், உடம்பில் உள்ள உப்பு மற்றும் நீரின் அளவு மிகவும் குறைவதால், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுகிறது. எனவே, சிகிச்சையின் முதற்படியே, உடம்பில் உள்ள நீரின் அளவை கூட்டுவது தான். ஆகையால், வாந்தி, பேதி உள்ள குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுக்காத குழந்தைக்கு (உதாரணமாக 2 வயதுக்கு மேல்) உப்புக் கரைசல் தண்ணீரை கொடுக்க வேண்டும்.




ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து:


நோய்கள் வந்த பின், சிகிச்சை அளிப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்தது. ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து (Rotarix), பிறந்த குழந்தைகளுக்கு, ஆறு வாரம் முதல் கொடுக்க வேண்டும். இதை இரண்டு முறை, ஒரு மாதம் இடைவெளியில் கொடுக்கலாம். தற்போது, இது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது. வரும் காலங்களில், அரசு மருத்துவமனைகளில், இந்த சொட்டு மருந்து கிடைக்கப் பெறும் போது, நம் நாட்டில், வாந்தி, பேதி தொல்லை பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.



- டாக்டர் கே.கே.ரவிசங்கர்
குழந்தை நல சிறப்பு மருத்துவர்




***
thanks டாக்டர்
***





"வாழ்க வளமுடன்"

நாம் உடலின் நரம்பு மண்டல அதிசயம்!




மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் அடக்கம்.

மூளையில் இருந்து 12 ஜோடி நரம்புகள் புறப்படுகின்றன. சுண்டுவிரல் அளவுக்குத் தடிமன் உள்ள தண்டுவடம் மூளையின் அடிப்பாகத்தில் இருந்து தலையின் துவாரம் வழியாகச் செல்லும் வடமாகும். முதுகு எலும்புகள் நடுவில் துவாரம் உள்ளவை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டவை. அவற்றின் வழியாக சுமார் 18 அங்குல நீளமுள்ள தண்டுவடம், முதுகின் அடிப்பாகம் வரை நீண்டிருக்கிறது. இதில் இருநëது 31 ஜோடி நரம்புகள் கிளம்புகின்றன.

காட்சி, கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் மூளை நரம்புகள் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன. தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் ஆகியவை உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. மூளையில் இருந்து வரும் 12 ஜோடி நரம்புகளும், தண்டுவடத்தில் இருந்து புறப்படும் 31 ஜோடி நரம்புகளும் மேற்பரப்பு (Peripheral nervous system) நரம்பு மண்டலம் ஆகும்.

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது, தன்னியக்க நரம்பு மண்டலம் (Autonomic nervous system). இதை மேற்பரப்பு மண்டலத்தின் சிறப்புப் பகுதி எனலாம். மூளையின் கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும் சுவாசம், செரிமானம் முதலியவற்றை முறைப்படுத்துவது தன்னியக்க மண்டலம்.

அதன்மூலம் நிலையான உட்புறச் சூழல், உடலைக் காப்பதற்கு வசதி ஏற்படுகிறது. தன்னியக்க மண்டலம் என்று கூறினாலும் இது மைய நரம்பு மண்டலத்துடன் உறவில்லாமல் தனியாட்சி நடத்தவில்லை. தன்னியக்க மண்டலச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நரம்பு மையங்கள் மைய நரம்பு மண்டலத்திலேயே உள்ளன.

தன்னியக்க நரம்பு மண்டலம் இரு பிரிவுகளை உடையது. 1.பிரிவு அமைப்பு 2. துணைப் பிரிவு அமைப்பு. உடலின் செயல் அதிகரிக்கும்போதும், வேகம் கூடும்போதும், நெருக்கடி நிலைகளிலும், உடலின் தேவைகளுக்கு உகந்தவாறும் செயல்படுவது பிரிவு நரம்பு. தசைகளுக்குக் கூடுதலாக ரத்தத்தை அனுப்புவது, குறைவான ஒளி உள்ளபோது கண்களின் பாவைகளை விரிவாக்குவது போன்றவை பிரிவு நரம்பு அமைப்பின் செயல் களில் அடங்கும்.

பொதுவாக, பிரிவு நரம்புச் செயல்பாடுகளுக்கு எதிராக வினைபுரிவது துணைப் பிரிவு நரம்பு மண்டலம்.

இதயத் துடிப்பை மெதுவாக்குவதும், ரத்தத்தைத் தசைகளில் இருந்து இரைப்பைக்கும், குடல்களுக்கும் திருப்பி விடுவதும், கண்களின் பாவைகளைச் சுருங்கச் செய்வதும் துணைப் பிரிவு நரம்பு மண்டலச் செயல்களில் அடங்கும். உறங்கும்போது துணைப் பிரிவு மண்டலம் உடலின் செயல் வேகத்தைத் தணிக்கிறது. இரண்டு மண்டலங்களின் செயல்களைச் செம்மையாக ஒத்திசைவு காணச் செய்வது மைய நரம்பு மண்டலம்.

நரம்பு மண்டலம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உடலின் சகல பாகங்களில் இருந்தும், தண்டுவடத்துக்கும், மூளைக்கும் செய்தி சென்று கொண்டிருக்கிறது. அதைப் போலவே மூளையில் இருந்தும், தண்டுவடத்தில் இருந்தும் செய்திகள் உடலின் பல பாகங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

நரம்பு மண்டலம் இருவகை நரம்புகளால் அமைந்தது. ஒருவகையான உணர்வு (sensory) நரம்புகள், செய்தியை மூளைக்கோ, தண்டுவடத்துக்கோ கொண்டு செல்வதால் உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும். இன்னொரு வகை நரம்புகள் மூளை அல்லது தண்டுவடத்தில் இருந்து உடல் உறுப்புகளுக்கு செய்திகளைக் கொண்டு செல்வதால் அவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். அவற்றை செயல் (motor) நரம்புகள் என்றும் கூறுவர்.

இந்த இருவகை நரம்புகளும் சேர்ந்தாற்போல் அமைந்துள்ளன. இவற்றின் போக்குப் பாதையும், வரத்துப் பாதையும் இரண்டு இருப்புப் பாதைகள் அடுத்தடுத்து இருப்பதைப் போல உள்ளன. இந்த நரம்பு மண்டலங்கள் எல்லாம் இணைந்துதான் நம் உடம்பை இயக்குகின்றன.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "