...

"வாழ்க வளமுடன்"

01 பிப்ரவரி, 2011

வெண்டைக் காயின் மருத்துவக் குணங்கள்


காய்கள், கனிகள் அனைத்தும் இயற்கையின் கொடையே. இதில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நிறைந்துள்ளன. மனிதர்களின் அன்றாட உணவுத் தேவைகளில் காய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொழுப்புச் சத்து குறைந்த வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் நிறைந்தவைதான் காய்கறிகள்.இவைகளை சமைத்து உண்பதால் உடலுக்கு வலு கிடைக்கும். இவை எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கி நீண்ட ஆயுளைக் கொடுக்கும். இந்த இதழில் அனைவருக்கும் பரிச்சயமான வெண்டைக் காயின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம். வெண்டையை ஏழைகளின் நண்பன் என்று கூட சொல்லலாம். சைவ உணவு உண்பவர்கள் அதிகம் சேர்க்கும் காயாகும்.எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. வீட்டின் கொல்லைப் புறத்தில் வளர்க்கலாம். இது இந்தியாவின் வெப்பமான பாகங்களில் பயிராகும். சிறு செடியாக காணப்படும். இதன் காய் சமையலுக்கு பயன்படுகிறது. இலை, விதை, மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.இதன் காயால், நாள்பட்ட கழிச்சல், பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் போகும். நல்ல சுவையைக் கொடுக்கும்.

*

ஞாபக சக்தி

மனிதனுக்கு நினைவாற்றல் அவசியத் தேவையாகும். ஞாபக சக்தியை இழப்பது மனிதனுக்கு நோய் போன்றது. ஞாபக சக்தியை தூண்ட வெண்டைக்காயை சமையல் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும். இது மூளை நரம்புகளைக் தூண்டி அங்கு சுரக்கும் நாளமில்லாச் சுரப்பியை நன்கு சுரக்கச் செய்யும். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெண்டைக் காயை எண்ணெயில் வதக்கி கொடுப்பது நல்லது. அவர்களின் வளர்ச்சியில் வெண்டைக் காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

*

இரத்தம் சுத்தமடைய

இரத்தத்தை சுத்தமடையச் செய்து அதனைச் சீராக செயல்படச் செய்கிறது. இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களைக் கரைக்கிறது. இரத்த அழுத்தத்தைப் போக்கி இதய அடைப்புகளைத் தடுக்கிறது. சிறுநீரக கோளாறுகளைப் போக்குகிறது. வயிற்றுக் கடுப்புடன் இரத்தம் வெளியேறுவதை தடுக்குகிறது.

*

மலச்சிக்கலைப் போக்கும்

மலச்சிக்கல் தான் நோய்க்கு மூலகாரணம். மலச்சிக்கலைப் போக்க வெண்டைக்காய் சிறந்த மருந்தாகும். இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இவை உடலின் செரிமான சக்தியைத் தூண்டி மலச்சிக்கலைப் போக்கும்.

*

வயிற்றுப்புண் ஆற

வயிற்றில் உண்டான புண்கள் ஆற வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் வயிற்றுப் புண் எளிதில் குணமாகும். அசீரணக் கோளாறு நீங்கி நன்கு பசியைத் தூண்டும்.

*

சரும பாதிப்பு நீங்க

புறச் சூழ்நிலைகளால் பாதிக்கப்படும் சருமத்திற்கு வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதால் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுத்து பாதிப்புகளை நீக்குகிறது.

*

குழந்தை நன்கு வளர

தினமும் பிஞ்சு வெண்டைக் காயை நன்கு கழுவி குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம். இது குழந்தைகளை அறிவு ஜீவியாக எதிர்காலத்தில் மாற்றும்.

*

நீரிழிவு நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். அதிக சர்க்கரை உடம்பில் கூடிவிட்டால் வெண்டைக் காயை மூன்று துண்டாக நறுக்கி அதை குறுக்காக நறுக்கி இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து காலையில் நன்கு கலக்கி காயை எடுத்துவிட்டு, வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் அப்படியே குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். தேவைப்படும்போது இதை பயன்படுத்தலாம்.

*

உடல் வலுப்பெற

உடல் சோர்வு, மனச்சோர்வு இருந்தால் மனிதன் நிரந்தர நோயாளிதான். இதைப் போக்க வெண்டைக்காயை சமைத்து உண்டு வந்தால் உடல் வலுப்பெறும். வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நன்கு முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து அருந்தி வந்தால் உடல் வலு கிடைக்கும். மயக்கம் தலைசுற்றல் நீங்கும். சமைத்து உண்பதற்கு பிஞ்சு வெண்டைக்காய் சிறந்தது.

*

100 கிராம் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள்

சக்தி – 31 கலோரி
கார்போஹைட்ரேட் – 7.03 கிராம்
சர்க்கரை – 1.20 கிராம்
– 3.2 கிராம்
கொழுப்பு – 0.10 கிராம்
புரதம் – 2.00 கிராம்
நீர்ச்சத்து – 90.17 கிராம்


***
thanks google
***"வாழ்க வளமுடன்"


முதுமையில் ஒரு முக்கிய பிரச்னை “பறங்கிக்காய்’தலையில் நரையும், தோலில் சுருக்கமும், பார்க்கும் பார்வையில் முதிர்ச்சியும் முதுமையின் அறிகுறிகளாக எண்ணிவிட வேண்டாம். அவை அனுபவத்தின் அடையாளங்கள். பார்வை குறைந்தவர்களுக்கு கண்களாகவும், காது கேட்கும் திறன் குறைந்தவர்களுக்கு காதுகளாகவும், நடக்க இயலாதவர்களுக்கு ஊன்றுகோலாகவும் சொந்தங்களும், பந்தங்களும் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூட்டு குடும்பம் நடைமுறை இருந்து வந்தது.


ஆனால் முதுமையில் தோன்றும் பல உடல் உபாதைகள் பிறர் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாறுதல்களே முதியவர்கள் தனித்து விடப்பட்டமைக்கு முதன்மையான காரணங்களாம். “அறுநீர்’ என்று தினமும் ஆறு முறை சிறுநீர் கழித்தலின் அவசியத்தை சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது. ஆனால், உடல் உபாதையால் முதுமையின் காரணமாக தினமும் 60 முறை சிறுநீர் கழித்து அவதிப்படும் முதியவர்கள் இன்றும் நம்மிடையே தடுமாற்றத்துடன் நடைபோடுகின்றனர்.சிறுநீர் பையின் அடிப்பாகத்தில் வெளிப்புறமாக சிறுநீர் பாதையை சூழ்ந்து காணப்படும் பரஸ்தகோளம் என்னும் புராஸ்டேட் கோளத்தின் வீக்கமே முதுமையில் தோன்றும் சிறுநீர் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது. புராஸ்டேட் திரவத்தை தாங்கி, விந்து திரவத்துடன் இணைந்து, உறவின் போது சீராக வெளிப்படுவதற்கு உதவியாக இருக்கும் இந்த கோளங்கள் முதுமையின் காரணமாக சற்று பெருக்கின்றன. அத்துடன் இதன் சுருங்கி விரியும் தன்மை குறைந்து, கல் போல இறுகி, ஆண்களின் சிறுநீர் வெளியேறும் பாதையை இறுக்கி பிடிக்கின்றன.இதனால், சிறுநீர் பையில் நிறையும் சிறுநீரானது வெளியேற இயலாமல் சிறுநீர் பையின் உள்ளேயும், சிறுநீர் பாதையை நோக்கியும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்துவதால் முதியவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால், புராஸ்டேட் வீக்கத்தினால் சிறுநீர் பாதை சுருங்கி சிறுநீர் பையில் முழு சிறுநீரும் வெளியேறாமல் தங்கிவிடுவதால், சில மணி நேரங்களில் பல முறை எழுகின்றனர். இதனால், அவர்கள் தூக்கம் கெடுவதுடன் சுற்றியுள்ளவர்களும் எரிச்சலடையும் சூழ்நிலை ஏற்படுகிறது.முதுமையில் தோன்றும் இதுபோன்ற உபாதைகளை நீக்கி, புராஸ்டேட் வீக்கத்தை கட்டுப்படுத்தும் எளிய, வீட்டு மருந்து தான் “பறங்கிக்காய்!’ “குக்கூர்பிட்டோ மேக்சிமா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கூர்பிட்டேசியே’ குடும்பத்தைச் சார்ந்த பறங்கி விதையிலுள்ள துத்தநாகம் புரஸ்டேட் வளர்ச்சிக்கு காரணமான மைட்டாசிஸ் செல் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புரஸ்டேட் வீக்கத்தை குறைக்கின்றன.மேலும் இவற்றிலுள்ள ஏ, பி வைட்டமின்கள், லினோலிக் அமிலம், ஸ்டீரால் கிளைக்கோசைடுகள், ஸ்டீரால் கொழுப்பு அமில எஸ்டர்கள், டிரைடெர்பினாய்டுகள் கட்டிகளையும், வீக்கத்தையும் கரைத்து, சிறுநீர் பாதை அழுத்தத்தை நீக்கி, சிறுநீர் கழித்தலை சுலபமாக்குகின்றன. பறங்கி விதை, வெள்ளரி விதை, நெருஞ்சில் முள், வில்வ வேர்ப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து, இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து வைத்து கொள்ள வேண்டும்.20 கிராம் பொடியை 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 125 மி.லி.,யாக சுண்டிய பின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்து வர சதையடைப்பு, சிறுநீர் எரிச்சல் மற்றும் வலி நீங்கும். பறங்கி விதைகளை இளவறுப்பாக வறுத்து பொடித்து வைத்து கொண்டு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவு சூடான நீரில் போட்ட 30 நிமிடம் ஊற வைத்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தினமும் குடித்துவர புராஸ்டேட் வீக்கம் குறையும்.

***

இளவரசி, திருநெல்வேலி:

எனக்கு வயிற்றில் பூச்சி அதிகமுள்ளதால் பாகற்காயை அடிக்கடி உட்கொள்வேன். இந்த காயை தொடர்ந்து சாப்பிடலாமா? பாகற்காய் மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுப்பொருள். சர்க்கரை நோய், தோல் நோய், வயிற்றுப்புழுக்கள் ஆகியவற்றிற்கு அருமையான மருந்து. ஆனால், வாதம் என்னும் வாயுவைப் பெருக்குவதால் உடல் வலியுடையவர்கள், செரிமான கோளாறு உடையவர்கள் அடிக்கடி பாகற்காய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.அளவுக்கு அதிகமான கசப்பு சுவையை தொடர்ந்து உட்கொள்வதால் இனப்பெருக்க அணுக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே உணவாக உட்கொள்ளும் பொழுது வாரம் ஒருமுறை எடுத்து கொள்வது நல்லது. அதிலும் பிஞ்சு பாகல் அனைத்து விதத்திலும் உடலுக்கு ஏற்றதாகும்.


- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.


***
thanks டாக்டர்
***


"வாழ்க வளமுடன்"


மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்!


பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி எல்லா சித்தர்களும் கூறியுள்ளனர்.பழங்காலத்தில் மனிதர்கள் பழங்களையே உணவாக உண்டு வந்தனர். அதனால் நோய்களின் தாக்கம் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்தனர். நாம் ஒவ்வொரு இதழிலும் ஓவ்வொரு பழங்களின் மருத்துவக் குணங்களை அறிந்து வருகிறோம். கடந்த இதழில் துரியன் பழத்தின் மகிமையை தெரிந்து கொண்டோம். இந்த இதழில் மங்குஸ்தான் பழத்தின் மருத்துவப் பயன்களை அறிந்து கொள்வோம்.இவை மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். இப்பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.சுளைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக இதனை வளர்க்கின்றனர். இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு.

Tamil – Mangosthan

English – Mangosteen

Malayalam – Mangusta

Telugu – Maugusta

Botanical Name – Garcinia mangostana


சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.


உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கண் எரிச்சலைப் போக்க கம்பியூட்டரில் வேலை செய்யும் இளைய தலைமுறையினருக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.


இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.


வாய் துர்நாற்றம் நீங்க வயிற்றில் புண் இருந்தால் வாயில் புண் ஏற்படும். இதனால் வாய் துர்நாற்றம் வீசும், மேலும் உண்ணும் உணவுப் பொருட்கள் பல் இடுக்குகளில் தங்கி விடுகின்றன. இதனால் உண்டாகும் கிருமிகளால் வாய் துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.


மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். மூலநோயை குணப்படுத்த நாம் உண்ணும் உணவானது செரிமானம் ஆகாமல் அசீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றமாகி கீழ் நோக்கி மூலப் பகுதியை பாதிக்கிறது.


இதனால் மூலத்தில் புண் ஏற்படுகிறது. மூலநோய் விரைவில் குணமாக எளிதில் சீரணமாகக் கூடிய உணவுகளை உண்பது நல்லது.


அதோடு மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.


கிடைக்கும் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும். சிறுநீரைப் பெருக்க சிறுநீர் நன்கு வெளியேறினால் தான் உடலில் தங்கியுள்ள தேவையற்ற அசுத்த நீர் வெளியேறும். சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.


* இருமலை தடுக்கும்

* சூதக வலியை குணமாக்கும்

* தலைவலியை போக்கும்

* நாவறட்சியை தணிக்கும்.மங்குஸ்தான் பழத்தில் நீர் (ஈரப்பதம்) – 83.9 கிராம்கொழுப்பு – 0.1 கிராம்புரதம் – 0.4 கிராம்மாவுப் பொருள் – 14.8 கிராம்பாஸ்பரஸ் – 15 மி.கி.இரும்புச் சத்து – 0.2 மி.கிஉடலுக்குத்தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட இப்பழத்தை உண்டு பயனடைவோம்.


***
thanks google
***"வாழ்க வளமுடன்"

மருத்துவ கண்டுபிடிப்புக்களும் ( கண்டுபிடிக்கப்பட்ட) ஆண்டுகளும்


நோய்கள் பக்டீரியாக்கள்,வைரஸ் மூலமே பரவுகிறது என்பதை முதன்முதலில் நிரூபித்தவர்- ஹிப்போகிரட்டீஸ்- கிரேக்கம்- கி. மு. 460 முதல் கி. மு. 370.


*

இரத்த சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் - வில்லியம் ஹார்வே- பிரித்தானியா-1628.

*

புற்று நோயைக் கண்டுபிடித்தவர் - ரொபர்ட வெய்ன பெரி- அமெரிக்கா-1682.


*

உடற்கூற்றியல் முறையினை அறிமுகப்படுத்தியவர் -அலபர் சர்வானஹாலர்-சுவிஸ்சிலாந்து-1757.

*

அம்மை குத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் - எட்வேர்ட் nஐன்னர்-அமெரிக்கா -1796.

*

ஸ்ரெதஸ் கோப்பை கண்டுபிடித்தவர் - ரேனோலானக்-பிரான்ஸ்-1819.

*

மயக்க மருந்தைக் கண்டுபிடித்தவர் - Nஐம்ஸ் சிம்பஸன்-பிரித்தானியா-1847.

*

போலியோ முக்கூட்டு வக்ஸீ;சனைக் கண்டுபிடித்தவர் - அல்பெர்ட் சேபின்- அமெரிக்கா-1854.

*

வெறி நாய்க்கடி சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - லூயி பாஸ்டர்- பிரான்ஸ்-1860.

*

குஷ்டரேக கிருமியை கண்டுபிடித்தவர் - ஹான்ஸன்-நோர்வே-1873.

*

கோலரா காசநோய்க் கிருமியை கண்டுபிடித்தவர் - றொபர்ட்கோச்- Nஐர்மனி-1877.

*

இரத்தம் உறைதலைக் கண்டுபிடித்தவர் - பால்எர்ல்ச்-Nஐர்மனி-1884.

*

தொடுகை வில்லையைக் கண்டுபிடித்தவர்- அடோல்ஃப் ஃபிக்- ஐர்மனி-1887.

*

மனோதத்துவ சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சிக்மண்ட்பிராய்ட்-அவுஸ்ரேலியா-1895.

*

புகைப்பட சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் - சே பின்சன-டென்மார்க்-1903.

*

இதயமின் அலைப்படத்தைக் கண்டுபிடித்தவர் - என்தோவன்-நெதர்லாந்து-1906.


*

நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தவர் - பெண்டிக் கெஸட்- கனடா-1921.


*

திறந்த இருதய அறுவைச் சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்- சோல்ரன் வில்லிஹெஸ்- அமெரிக்கா-1953.

**

இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும்


***
நன்றி தமிழ்
***


"வாழ்க வளமுடன்"

எந்த பிளான் தேர்ந்தெடுக்கலாம்…( கைப்பேசி )


சட்டைப் பையில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று தேவையாய் உள்ளது.


அதுவே நமக்கு பணம் தரும் கிரெடிட் கார்டாகவும் இப்போது உருவாகி வருகிறது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை.


இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தரப்படுகின்றன. இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு முதல் ஏழு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.ஒவ்வொரு நிறுவனமும் பத்து முதல் பன்னிரண்டு வகையான சேவைத் திட்டங்களை வழங்குகின்றன. சென்னையில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன. முதல் நான்கு நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் அடுத்த இரண்டு நிறுவனங்கள் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையும் தருகின்றன.


சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் ஏர்செல், வோடபோன், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா நிறுவனங்கள் இயங்குகின்றன. ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இங்கும் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பினையே தருகின்றன.முதலில் உங்களுக்கு எந்த வகை இணைப்பு வேண்டும் என்பதனை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம (GSM – Global System for Mobile Communications) மற்றும் சி.டி.எம்.ஏ (CDMA – Code Division Multiple Access) என்ற இரண்டு வகையான தொழில் நுட்பத்தில் தான் உலக அளவில் போட்டி உள்ளது. இந்த இரண்டின் அம்சங்களையும் வேறுபாடுகளையும் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்களுக்கான தொழில் நுட்பத்தினைத் தேர்ந்து எடுக்கலாம்.ஜி.எஸ்.எம். வகையைப் பொறுத்த வகையில் நிறைய மாடல் போன்கள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்த வரை எகுM 900/1800 என்ற இரண்டு பேண்ட் அளவில் இயங்கும் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இவ்வகையில் எக்கச் சக்கமாய் போன் மாடல்கள் உள்ளன. அதன்பின் இதற்கான சிம் கார்டை ஏதேனும் ஒரு சர்வீஸ்புரவைடரிடம் வாங்கி இதில் இணைத்து தொடர்பினை மேற்கொள்ளலாம். இந்த கார்டை எந்த ஜி.எஸ்.எம். வகை போனிலும் பயன்படுத்தலாம்.இணைப்பு சேவை வழங்குபவர் நீங்கள் எந்த போனைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கவலைப்பட மாட்டார். அதே போல ஒரே போனில் பல சர்வீஸ் புரவைடர் தந்த சிம் கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். நீங்கள் நான்கு பேண்ட் ஜி.எஸ்.எம். மொபைல் வைத்திருந்தால் அதனையே எந்த நாட்டிலும் ஜி.எஸ்.எம்.இணைப்பு தரும் நிறுவனத்தின் சிம் இணைத்து பயன்படுத்தலாம். சி.டி.எம்.ஏ. வகையில் இப்போது சிம் கார்டு தரப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட போன் வகையுடன் இணைந்தே தரப்படுகிறது. ரிலையன்ஸ் அல்லது டாட்டா இண்டிகாம் நிறுவனங்களிடம் இவை கிடைக்கின்றன. முன்பு ஒரு போனுக்கு ஒரு எண் என்று இருந்தது. இப்போது போன் செட்டை மாற்றிக் கொள்ளலாம். எனவே போன் மாடல்கள் மிகவும் குறைவு.வாங்கிய போனை அதனை வாங்கிய சர்வீஸ் புரவைடர் தரும் இணைப்புடன் மட்டுமே பயன்படுத்த முடியும். எந்த வகை என முடிவு செய்த பின்னர் உங்கள் ஏரியாவில் மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் எந்த சர்வீஸ் புரவைடர்கள் இயங்கு கிறார்கள் என்று பார்க்கவும்.நீங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது அலுவல் ரீதியாகவோ அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் செல்பவராக இருந்தால் நீங்கள் செல்லும் இடங்களில் இங்கு சேவை வழங்கும் நிறுவனம் மொபைல் சேவையினை வழங்குகிறதா என்று பார்த்துத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இங்குள்ள நிறுவனம் நீங்கள் செல்லக் கூடிய இடங்களில் ரோமிங் வசதியினைத் தருகிறதா என்று கேட்டு அறியவும்.அடுத்தது உங்கள் மொபைல் போனின் விலை. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் பல மாடல் போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. எனவே உங்களுக்கான விலையில் உள்ள போன்கள் அனைத்தையும் பட்டியலிட்டு பின் ஒப்பிட்டு வாங்கவும். அடுத்து போன் பேசுவதற்கான செலவு.


மாதம் இவ்வளவு தான் போனுக்கு செலவழிக்க வேண்டும் என முடிவு செய்தால் பிரீ பெய்டு எனப்படும் முன் கூட்டியே பணம் செலுத்தும் கார்டினை வாங்கவும். ஒவ்வொரு முறை பேசி முடித்தவுடன் எவ்வளவு செலவழிந்துள்ளது. கார்டில் எவ்வளவு மிச்சம் உள்ளது என அறியலாம். அதற்கேற்றார் போல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளலாம்.


அவ்வப்போது சர்வீஸ் புரவைடர்கள் தரும் திட்டங்களுக்கேற்பவும் சலுகைகளுக்கேற்பவும் புதிய இணைப்புகளை வாங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் வசிக்கும் ஏரியாவில் எந்த நிறுவனத்தின் சேவை நல்ல முறையில் உள்ளது எனக் கேட்டு அறியலாம்.நீங்களும் சோதித்துப் பார்க்கலாம். போஸ்ட் பெய்ட் என்பதில் மாதந்தோறும் அதனைப் பயன்படுத்த லேண்ட் லைன் போல மாதம் ஒரு குறிப்பிட்ட வாடகை கட்டணமும் பயன்படுத்துவற்கான கட்டணமும் கட்ட வேண்டும். இதிலும் உங்களுடைய பயன்பாடு முறைதான் எத்தகையது வேண்டும் என்பதனை முடிவு செய்கிறது.


குறைந்த மாதக் கட்டணத்தில் உள்ள ஒரு இணைப்பினை வாங்கி பின் எவ்வளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதனைக் கணக்கிட்டால் போஸ்ட் பெய்ட் இணைப்பினைச் சிக்கனமாகப் பயன்படுத்தலாம்.


பிரீ பெய்ட் கார்டில் குறிப்பிட்ட அளவிற்கான பணத்திற்கு பேசலாம் என்றாலும் இதற்கான கால அளவு இருக்கும். அதற்குள் பேசாவிட்டால் மீதமுள்ள பணம் கேள்விக் குறியாகிவிடும். நீங்கள் உடனே ரீசார்ஜ் கார்ட் மூலம் புதுப்பித்தால் ஏற்கனவே மீதம் உள்ள பணம் இதில் சேர்ந்துவிடும். இல்லை என்றால் பணம் வீண். ரீசார்ஜ் கூப்பன்களிலும் வேறுபாடு உண்டு.


ஒரு சில நிறுவனங்கள் சில வேளைகளில் கார்ட் வேல்யூ முழுவதும் அல்லது சற்று கூடுதலான அளவிற்கு மதிப்பு வழங்குவார்கள். சிலர் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டுமே வழங்குவார்கள். எடுத்துக் காட்டாக ரூ.2,000 க்கு வாங்கி ரீ சார்ஜ் செய்தால் ரூ.2,250க்கு பேசும் திட்டம் உள்ளது. ரூ.300க்கு வாங்கினால் ரூ.185 மட்டுமே பேச முடியும் என்ற திட்டமும் உள்ளது. இரண்டின் கால அளவு வேறுபடலாம்.சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் மற்ற போன்களுக்கான அழைப்புகளுக்கு மிகக் குறைந்த கட்டணம் விதித்திருப்பார்கள். எனவே நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்பவர்கள் எந்த இணைப்பு வைத்திருக்கிறார்கள் என்று பார்த்து அதே நிறுவன இணைப்பு வாங்க முடிவுசெய்திடுங்கள். வாங்கியவுடன் உங்கள் போன் இணைப்பிற்கான இந்த சலுகைகளுக்கான ஏற்பாடுகளை உங்கள் போனில் செட் செய்திடுங்கள்.
இவ்வளவு விஷயங்களையும் ஆய்வு செய்து ஒப்பிட்டுப் பார்த்து வாங்க வேண்டும். இணைப்பு வாங்கச் செல்கையில் உங்கள் முகவரி, போட்டோ அடையாள அட்டை கேட்பார்கள். போட்டோ ஒன்றும் விண்ணப்பத்துடன் இணைக்கச் சொல்வார்கள். உண்மையான முகவரி, உங்கள் போட்டோ கொடுத்து கார்டை வாங்கிச் சரியான நோக்கத்திற்குப் பயன்படுத்தி தொழில் நுட்பத்தை உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் அடுத்தவருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துங்கள்.

***

சென்னையும் தமிழ்நாடும்

மொபைல் போன் சேவை உரிமத்தினை தமிழ் நாட் டில் இரண்டு வகையாகத் தந்துள்ளனர். சென்னை ஒரு மண்டலம். இதில் ஏர்செல் செல்லுலர், ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றனர். சென்னை அல்லாத மற்ற தமிழகம் ஒரு மண்டலம்.


இங்கே வோடபோன் எஸ்ஸார், ஏர்செல், பி.எஸ்.என்.எல்., ரிலையன்ஸ் மற்றும் டாட்டா ஆகிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இரண்டு மண்டலங்களிலும் டாட்டா மற்றும் ரிலையன்ஸ் சி.டி.எம்.ஏ. வகை இணைப்பி னையும் மற்றவை ஜி.எஸ்.எம். வகை இணைப்பினையும் தருகின்றனர்.

**

டிப்ஸ்…

பஸ்களில் ட்ரெயின்களில் செல்கையில் மொபைல் போனில் பேசுவதைத் தவிருங்கள். பேஸ் மேக்கர் என்னும் இதயத் துடிப்பை இயக்கும் கருவி வைத்திருப்பவர்கள் மொபைல் போனுக்கு வரும் ரேடியோ அலைகளினால் பாதிப்படைந்து உயிருக்கு ஆபத்து வரலாம். மேலும் பக்கத்தில் இருப்பவர்கள் உங்கள் மொபைல் பேச்சினால் எரிச்சல் அடையலாம்.***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "