*
தாயின் வயிற்றில் இருக்கும்போதே கருக்குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டினால் குழந்தைப் பேறின்மை என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறது சித்த மருத்துவம்.
நூற்றுக் கணக்கில் செலவழித்து டானிக், ஹெல்த் டிரிங்க்ஸ் எல்லாம் குடிக்கத் தேவையில்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பண்டங்களை (தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள்) உரிய காலத்தில், உரிய வழி முறைகளில் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பே இல்லை. ஆனால் வாழ்க்கை முறை மாற்றத்தால் எல்லாம் தலைகீழ் ஆகிவிட்டதன் விளைவுதான், இன்று குழந்தைப் பேறின்மை அதிகரிக்கக் காரணம். இனி குழந்தைப் பேறின்மையை நீக்க சித்த மருத்துவம் உதவுவது எப்படி என்பது குறித்து விரிவான அலசல்:-
குழந்தைப்பேறு ஏற்படாமைக்குக் காரணங்கள் என்ன?
"பாரப்பா பெண்மலடாங் கற்பக் கோளின்
பக்குவத்தைச் சொல்கிறேன் பக்குவமாய்க் கேளு
ஆரப்பா ஆண் மலடே யாகுல்லாமல்
அப்பனே பெண் மலடு யாருமில்லை"
- அகத்தியர் கர்ப்பக் கோள்
என்ற பாடலின்படி கருப்பை சினைப்பை, கருக்குழல், கருவாய் இருந்தால் பெண் மலடு என்ற பேச்சுக்கே சித்த மருத்துவத்தில் இடமில்லை. சித்த வைத்தியம் முடிந்த முடிவான மருந்து. சித்தர்கள் சொன்ன மூலப்பொருளைக் கொண்டு சொல்லிய முறையில் தயாரித்தால் நோய் நீக்குவது மட்டும் அன்றி நோய் வராமலும் தடுக்கலாம்.
பெண்ணை பூமாதேவி என்று அழைக்கிறார்கள். பூமியில் எந்த மண்ணிலும் விதை போட்டு தாவரங்களை வளர்க்கலாம். அதனால் பெண் மலடு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனென்றால் கடலும் கடல் சார்ந்த இடத்திலும் மலையும் மலைசார்ந்த இடத்திலும் வயலும் வயல் சார்ந்த இடத்திலும் காடும் காடு சார்ந்த இடத்திலும் பாலையும் பாலை சார்ந்த இடத்திலும் செடி, கொடிகளை வளர்க்கலாம். இந்த வகையில் பெண்களுக்கு மலடு என்ற சொல்லே இல்லை.
"இசைந்ததொரு பெண்மலடு எங்குமில்லை
எதனாலே மலடான சேதி கேளு
அசைந்திருக்கும் பேயாலும் பித்தத்தாலும்
அடிவயிறு நொந்துவரும் வாயுவாலும்
பிசைந்த கர்ப்பப் புழுவாலும் கிரகத்தாலும்
பிணியாலும் மேகி வைசூரியாலும்
துசங்கெட்ட கலவியினால்
துலங்காமல் பிள்ளையில்லை சொல்லிக்கேளே"
பேயாலும் என்பது மனநிலை குன்றிக் காணப்படுவதைக் குறிப்பிடுகின்றனர். சாதாரணமாக (Psychosomatic Disorder, Hysteria) மனநலம் பாதிக்கப்படுவதால் குழந்தை பேறடைய முடிவதில்லை.
பித்தத்தாலும் என்பது நம் உடலில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் மாறுபாடுகளினால் தாய்மை அடைவது தடுக்கப்படுகிறது.
வாயுவாலும் அடிவயிறு நொந்து வரும் வாயுவாலும் என்பது மாதவிடாய், வயிற்று வலி, குதக வாயு, சூதகக்கட்டு மற்றும் அடிவயிற்றில் காணப்படும் உள்உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பையும் குறிப்பிடுவதாகும்.
கர்ப்பப் புழுவாலும்- கர்ப்பப் புழு என்பது கருப்பையில் காணப்படுகின்ற கர்ப்பப் புழுவைக் குறிக்கும். இவை கருப்பையை வந்தடையும் விந்துவை அழித்துவிடுவதால் கருத்தரிப்பதில்லை (Vaginal acidity).
கிரகத்தாலும் பிணியாலும் என்பது சிலருக்கு அடிவயிறு உறுப்புகளில் தொற்றுக் கிருமிகளால் (Infection) ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஏற்படும் விளைவைக் குறிக்கும். அதாவது (Peritonitis Salphingitis) போன்றவையும் ஒரு காரணமாகிறது. இதனால் கருப்பைக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் கருப்பையில் காசநோய்க் கிருமிகள் (Tuberculosis) பாதித்தாலும், கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.
கருத்தரிப்பதற்குத் தடையாக இருக்கும் நோய்கள் எவை?
மேக நோய்: மேக நோயினைத் தொடர்ந்து (Venereal Disease) கிருமிகள் தாக்குதலுக்கு கர்ப்பப் பை ஆளாவதால் நாள்பட்ட நிலையில் (Chronic Pelvic Inflammatory Disease) இது சரியாகக் குணப்படுத்தப்படாமல் இருந்தாலும் குழந்தைப் பேறு பாக்கியம் அடைவதில் தடை ஏற்படுகிறது.
வைசூரி: அம்மை நோய்கள் போன்று வைரஸ் கிருமிகள் உடலில் ஏற்படுத்துகின்ற பாதிப்பு பெண்ணுக்கு குழந்தைப் பேறின்மையை உண்டாக்குகிறது.
அறியாத கலவியினால்...: இது மிக முக்கியமான கவனிக்கப்பட வேண்டியதாகும். சில தம்பதியர்க்கு தாம்பத்திய உறவு பற்றி தெளிவான அறிவு காணப்படுவதில்லை. தாம்பத்திய உறவைப் பற்றி போதிய அளவுகூடத் தெரியாமல் சிலர் இருக்கின்றனர். குறிப்பிட்ட நாள்கள் முக்கியமானது என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இதுவும் குழந்தைப் பேறின்மைக்கு ஒரு காரணமாகின்றது.
இவ்வகைக் காரணங்களால் ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைக்குத் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் மருந்துகளும் தெளிவாகத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். இதனை நுட்பமாகப் புரிந்து கொண்டு சிகிச்சையளித்தால் பெண்களுக்கு ஏற்படக் கூடிய குழந்தைப் பேறின்மைத் தன்மையை முற்றிலும் குணப்படுத்த முடியும்.
மேலும் சித்த மருத்துவத்தில் கருக்குழாய் அடைப்பு, (Fallopian tube block), சினைப்பை கட்டிகள் (PCOS) கருப்பை சவ்வு அழற்சி (Endometriosis), ஒழுங்கற்ற மாத விலக்கு (Irregular Menstruation), கருப்பைக் கழலை (Fibroid Uterus), பெரும்பாடு (அதிகமாக கட்டி கட்டியான உதிரப்போக்கு), தைராய்டு சுரப்பி கோளாறு (Thyroid Dysfunction), சினை முட்டை சரிவர வளராமை போன்ற காரணங்களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கர்ப்பப்பை கோளாறுகளின் அறிகுறிகள் என்ன?
கருப்பை கோளாறுகள் பெண்கள் பூப்பு எய்திய நாள் முதல் தோன்ற ஆரம்பித்தாலும் பொதுவாக இந்நோய்கள் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போது கணைச் சூடு என்ற விதமாய்த் தொடங்குகின்றன. பழங்கால பாட்டிகள் கணைச்சூட்டுக்கு கற்றாழைச் சாறு கலந்த எண்ணெய்யை வாரம் இருமுறை சாப்பிடக் கொடுப்பார்கள். இந்த முறையில் தற்போது சித்த மருத்துவத்தில் குமரி எண்ணெய் என்ற மருந்தை தயார் செய்து கொடுக்கப்படுகிறது.
இந்த கணைச் சூடு பூப்பு எய்திய காலத்தில் கர்ப்பச் சூடாக மாறும். இதனால் ரத்த சோகை ஏற்படும். இதன் காரணமாக மாதவிலக்கு மாறுபாடு ஏற்படும். இதனால் கருப்பை சூடு ஏற்பட்டு வெள்ளை ஏற்படுகிறது. நம் சமூகத்தில் இருந்த நல்ல பழக்கங்களை நாம் கடைப்பிடிக்க மறந்து ஒவ்வொரு மருத்துவமனையாக ஒவ்வொரு நோயிற்காக தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்.
கர்ப்பப் பை வளர்ச்சியில் எப்போது அக்கறை செலுத்த வேண்டும்?
நம் சமுதாயத்தில் பெண் பூப்பு எய்தவுடன் நாள்தோறும் ஒரு முட்டையை உடைத்து வாயில் ஊற்றி பின்னர் முட்டை ஓட்டில் உள்ள அளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி குடிக்க வைப்பார்கள். இன்னும் சில பேர் உளுத்த மாவில் செய்த உணவுப் பண்டங்களை நாள்தோறும் சாப்பிடச் செய்வார்கள். உளுத்தம் கஞ்சி, புழுங்கல் அரிசி கஞ்சி, கேழ்வரகு அடை, முருங்கைக் கீரை பிசைந்த சாதம் போன்றவற்றைச் சாப்பிட்ட நமது முன்னோர்களின் பேரக் குழந்தைகள், இப்போதைய நாகரீக வாழ்க்கையில் "பாஸ்ட் புட்" கலாசார உணவுகளைச் சாப்பிட்டு உடலாகிய கோயிலை அழித்துக் கொண்டு வருகிறோம். நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் கருப்பையைச் சுத்தமாகவும், இடுப்பு எலும்புகள் வலுப் பெறவும், சினை முட்டை உருவாகவும், சினைப்பை, கருப்பைக் கழலைகள் உண்டாகாமல் தடுக்கவும் செய்தன; இதுபோன்ற உணவு முறைகளை பூப்பெய்த காலத்தில் பயன்படுத்தி வந்தால் குழந்தை பேற்றை ஒரு இயல்பான காரியமாகச் செய்ய முடியும்.
முளை கட்டிய பயறு வகை, கொண்டைக் கடலை சாப்பிட்டு வந்தால் ஆண் பெண் மலட்டுத்தன்மை நீங்கும். கால் கிலோ உளுந்தை நெய்யில் வறுத்து மாவாக்கி பனங்கற்கண்டு, ஏலக்காய் நெய் சேர்த்து உருண்டை பிடித்து நாள்தோறும் ஒரு உருண்டை வீதம் மாதத்தில் 10 நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் கருப்பை பூரண வளர்ச்சி பெறும்.தேனும் தினைமாவும் சேர்த்து உருண்டை செய்து சாப்பிட கருப்பை பலம் உண்டாகும்.
நாள்தோறும் ஒரு முட்டை சேர்த்துக் கொண்டால் இடுப்பு எலும்பு, சினைப்பைகள் வலுப்பெறும். நல்ல நாள், விருந்து விழாக்கள் போன்றவற்றுக்கு மாதவிடாயைத் தள்ளிப் போடுவதற்குச் சாப்பிடும் மருந்துகள் சினைப்பைக் கட்டி, கருப்பைக் கட்டி போன்றவைகள் உருவாகி மாதவிடாயின்போது அதிக ரத்தப் போக்கு ஏற்படும். இதனால் கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தில் நோய் தீர்க்கும் வழிமுறையும் நோய் வராமல் தடுக்கும் முறையும்...: எஸ்.கே.எம். சித்த மருத்துவமனையில் தேரையர் சித்தர் அருளிய நோய் அணுகா விதிகளை பின்பற்றி வருகிறோம். முதலில் உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். வாரத்துக்கு இருமுறை (செவ்வாய்-வெள்ளி இரு தினங்கள் மருந்து சாப்பிடும் முன்பு) எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இதனால் நம் உடல் சூடு, கண் எரிச்சல், உடலில் ஏற்படும் அசதி நீங்கி உற்சாகம் ஏற்படும்.
பிறகு ஆண்டுக்கு 2 முறை பேதி மருந்து எடுக்க வேண்டும்.பருவ கால மாற்றத்தால் வரும் நோய்களை வராமல் தடுப்பதற்கு நாங்கள் 3 நாள் பேதி மருந்து கொடுக்கிறோம். நோய்க்குத் தக்கவாறு கலிங்காதி தைலம், மலை வேம்பாதி தைலம், லவணகுணாதி எண்ணெய், சித்தாதி எண்ணெய், அகத்தியர் குழம்பு போன்றவற்றை உடல் நிலைக்கு, நோய்களுக்கு, காலத்துக்குத் தக்கவாறு மருந்துகளை வழங்குகிறோம்.
45 நாள்களுக்கு ஒரு முறை நசியம் (மூக்கில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை) செய்கிறோம். மூக்கிற்கும், மூலாதாரத்திற்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் கருவாய், எருவாய், மலவாய் சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. கட்டி, கழலை ஹார்மோன் சுரப்பில் மாறுபாடு, செக்ஸ் உறவு பற்றிய போதிய விவரம் தெரியாமை போன்ற காரணங்களினால் அதிக உதிரப்போக்கு, 6 மாதத்துக்கு ஒரு முறை உதிரப்போக்கு,
ஒரு நாள் மட்டும் தீட்டு படுதல், சிறுநீர் கழிக்கும்போது தீட்டு படுதல் போன்ற காரணங்களுக்கு ரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை செய்து எல்லாம் இயல்பாக இருந்த பெண்களுக்கு நசியம் செய்து கொடுத்து மகப்பேறு அடைந்துள்ளனர்.
மாதவிலக்கு உண்டான 3 நாள்கள் மூலிகை கற்கங்களை காலையில் 6 மணிக்கு நீராகாரம் (அல்லது) மோரில் அரைத்துக் கொடுத்து அநேகம் பேர் மகப்பேறு அடைந்துள்ளனர்.
கலிக்கம் (கண்ணில் மருத்துவம் மேற்கொள்ளும் முறை): ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கலிக்கம் செய்கிறோம்.
உடலை நோய் வராமல் இருக்கச் செய்யும் மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உடலே Ovulation-I உணரும் வகையில் செய்யலாம்.
இனப்பெருக்க உறுப்புகள் பலமடைய ஆசனங்கள் உதவுமா?
இதைப் பின்பற்றிப் பலருக்கு குழந்தைச் செல்வம் உண்டாக்கி இருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும்.
காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும். அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்; பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம்.
உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் உள்ள மருந்து என்னென்ன?
குழந்தைப் பேற்றுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் உள்ளன. என்ன காரணத்தில் மகப்பேறின்மை உள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மருந்துகள் கொடுக்கப்படும். வெண் பூசணி லேகியம், கரிசாலைக் கற்ப மாத்திரை, வான்குமரி லேகியம், நரசிங்க லேகியம், குன்ம குடோரி மெழுகு, கர்ப்ப சஞ்சீவி எண்ணய், லவண குணாதி எண்ணெய், அஸ்வகந்தி லேகியம், நிலக்கடம்பு சூரணம், சதாவரி லேகியம், நந்தி மெழுகு, குன்ம உப்பு சூரணம், கர்ப்பப் பை சஞ்சீவி சூரணம், அகத்தியர் குழம்பு, அசோகப்பட்டை சூரணம், அமுக்கரா சூரணம், சித்தாதி எண்ணெய், கலிங்காதி தைலம், மேக ரா- எண்ணெய், பஞ்ச மூலிகை சூரணம், குமரி எண்ணெய், அதிமதுர சூரணம், திரிபலாக்கற்ப சூரணம், கடுக்காய் சூரணம், மலைவேம்பாதி தைலம், சண்டமாருத செந்தூரம், புங்கம்பட்டை தைலம், திரிகடுகு ஆறுமுக செந்தூரம் ஆகிய மருந்துகள் உள்ளன.
by - டாக்டர் பி. பாரதி பரமசிவன், 2008.
***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"
...
"வாழ்க வளமுடன்"
20 செப்டம்பர், 2011
பெண்களே! தாய்மை அடைய 6 விஷயங்கள் அவசியம்!
*
ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 விஷயங்கள்...
1. ஆரோக்கியமாக இருங்கள்
முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.
2. சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.
3. தீய பழக்கங்கள் கூடாது
புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும்உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
4. சரியான நேரம்
ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டை வெள்ளை நிறத்தில் இருக்கும்.
5. பாலியல் அறிவு அவசியம்
படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.
6. உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்
கர்ப்பம் தரிக்கும் பெண் உடல்ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.
***
நன்றி: தமிழ்சோர்ஸ்

Labels:
கர்ப்பிணிகள்,
பெண்கள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "