...

"வாழ்க வளமுடன்"

08 நவம்பர், 2010

Fast Food கடைகளின் அந்தரங்கங்கள்

நாங்கள் எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.1 .வரலாறு


•1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.


•1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.


•1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.


•1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது

***


2 .சந்தை நிலவரம்


•McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion


•YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion

•Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion


•Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion

***


3.McDonald 's இன் சந்தை நிலவரம்


•126 நாடுகளில் இயங்குகிறது


•400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்


•அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன

•US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்

***

4 .Super Heavy users


•இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்

•75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது

•60 % sales Drive Through மூலம் நடக்கிறது

***

5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்


•61 % - கொங் Kong
•59% - மலேசியா
•54% - பிலிப்பைன்ஸ்
•50% - சிங்கபூர்
•44% - தாய்லாந்து
•41% - சீனா
•37% - இந்தியா
•35% - அமெரிக்கா
•14% - இங்கிலாந்த்து
•03% - சுவீடன்

***

6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு


45 - Jack In The Box


62 - Taco Bell


84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை

98 - Subway


98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்


102 - KFC - காலாவதியான இறைச்சி


111 - Burger King


115 - Arby 's


118 - Hardee 's


126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை

***

7 .பயங்கரம்


•ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்


•McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது


•Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்டஇரசாயனங்களை கொண்டது.


•Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது

•ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது

***


8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்


•Sodium Phosphate - Fast Food Coffee


•Titanium Diaoxcide - fat free ranch dressing


•Dimethylpolysiloxane - McNuggets

•Azodicarbonamide - Sub way bread


•Diacetyl - Milk Shake


***
thanks http://nishole.blogspot.com/2010/10/fast-food.html
***"வாழ்க வளமுடன்"

இருமலுக்கு மருந்துதேவையானவை:

சுக்கு - 10 கிராம்
மிளகு - 10 கிராம்
திப்பிலி - 10 கிராம்
கடுக்காய்த் தோல் - 10 கிராம்
நெல்லி வற்றல் - 10 கிராம்
தான்றிக்காய்த் தோல் - 10 கிராம்
அக்கிரகாரம் - 10 கிராம்
சிற்றரத்தை - 10 கிராம்
அமுக்கிராவேர் - 10 கிராம்
கண்டங்கத்திரி வேர் - 10 கிராம்
குப்பைமேனி வேர் - 10 கிராம்
ஆடாதொடை வேர் - 10 கிராம்
தூதுவளை வேர் - 10 கிராம்
துளசி வேர் - 10 கிராம்
பசும்பால் - 100 மி.லி.


செய்முறை

சுக்கைத் தோல் நீக்கவும். மிளகை இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும். திப்பிலியையும் ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து எடுக்கவும்.


கடுக்காய்த் தோலை வெய்யிலில் காய வைத்துக் கொள்ளவும். நெல்லி வற்றலில் உள்ள விதைகளை விலக்கவும். அதிமதுரத்தைத் தட்டி ஒரு மண் சட்டியில் போட்டு 100 மி.லி.பசும்பாலை ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்திக் கொள்ளவும். சிற்றரத்தையைத் தட்டிக் கொள்ளவும். அமுக்கிரா வேரைத் தட்டிக் கொள்ளவும்.


கண்டங்கத்திரி வேர், குப்பைமேனி வேர், ஆடா தொடை வேர், தூதுவளை வேர், துளசி வேர், இவைகளை நன்கு உலர்த்திக் கொள்ளவும்.


எல்லாச் சரக்குகளையும் ஒன்றாகப் போட்டு இடித்துச் சலித்துக் கொள்ளவும். சலித்த தூளை ஒரு மண் பானையில் போட்டு மண் தட்டால் மூடி காற்றுப் புகாமல் துணியால் கட்டி 3 நாட்கள் வைத்திருக்கவும். பின்பு மருந்தை எடுத்துக் கண்ணாடிப் புட்டியில் பத்திரப் படுத்தவும்.

***

மருந்துண்ணும் முறை

காலை உணவுக்கு 1 மணி முன் 1 தேக்கரண்டித் தூளை 1 தேக்கரண்டி பனை வெல்லத்துடன் கலந்து உட்கொள்ளவும்.


மாலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டித் தூளுடன் 1 தேக்கரண்டி பனை வெல்லத்தைக் கலந்து 7 நாட்கள் சாப்பிடவும்.

***

கண்டிப்பாக நீக்க வேண்டியவை

உருளைக் கிழங்கு, கடலை வகைகள், புளிக் குழம்பு, தயிர், இளநீர், குளிர்ந்த பானங்கள், மாமிச உணவு. மது வகைகளையும் நீக்கவும்.


***


சிறப்பு உணவு


மிளகுப் பொங்கல், மோர், தேன், நெய், இளங்காய்கள், இடியாப்பம், இட்லி, புழுங்கலரிசிச் சாதம், வெந்நீர்.

***


குறிப்பு

குழந்தைகளுக்கு இருமல் ஏற்பட்டால் 1 தேக்கரண்டித் தூளை 4 பங்காக்கி 1 பங்கை 1 தேக்கரண்டி தேனில் குழைத்துக் கொடுக்க வேண்டும்.


***
thanks iNaiyam
***


"வாழ்க வளமுடன்"

தினமும் காலையில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்:

1. நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

*

2. இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.

*

3. வயிற்றுப் புண் குணமாகும்.

*

4. இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.

*

5. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

*

6. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.

*

7. நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.

*

8. மலச்சிக்கல் நீங்கும்.

*

9. புற்று நோய்க்கு நல்ல மருந்து.

*

10. உடல் இளைக்க உதவும்

*

11. இரவில் நல்ல தூக்கம் வரும்.

*

12. பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.

*

13. மூட்டு வலி நீங்கும்.


*

14. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

*

15. நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

*

16. அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.

*

17. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.

*

18. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

*

அருகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.


***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"

அல்சர் - (குடல் புண் ) -- Dr.அம்புஜவல்லி

'அல்சர்' - சில உண்மைகள்


வயிற்றிலே ஒன்றும் இல்லை என்ற மாயத் தோற்றமும் பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றுகிறதா? மார்புப்ப பகுதியில் எரிவது போன்ற உணர்வு உள்ளதா? வயிற்றிலேருந்து புளிப்புச் சுவையான நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்குகுடல் புண் இருக்கலாம்.

***

குடல் புண் என்றால் என்ன?


இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயத்தை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன.

*

இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

***

புண் எதனால் ஏற்படுகிறது?


குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

*

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

*

செரிமான தொகுதியில் எங்கு புண் ஏற்படுள்ளது என்பதைப் பொருத்து குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .

2)சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

இரண்டு வகைகள் இருப்பினும் இரண்டுக்கும் உரிய நோய்க் குறிகள் பெரும்பாலும் ஒரே மாதரியானவை.குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

*

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது.

*
அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். சட்டத்துக்கு உட்பட்டதுபோல் இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

*

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை.

*
ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.

*

சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

*

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

*

குடல் புண்ணுக்க மருத்துவம் செய்யாவிட்டால்...
குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

*

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.

*

ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

*

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.
*
வயிற்றுத் தடையையும் அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
*
மருத்துவர் குடல்புண் இருப்பதைக் கண்டறிந்தால், சில மருந்துகளை சிபரிசு செய்வார். அப்போது எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்பதையும் கூறுவார்.

அவைகள் பின்வருமாறு.

செய்யக்கூடாதவை

1. புகைபிடிக்கக் கூடாது.

2. மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. அதிகமாகச் சாப்பிடக்கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

4. சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

5. சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

6. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

7. மனநிலையை தடுமாற விடக் கூடாது.

8. அவசரப்படக் கூடாது.

9. கவலைப்படக் கூடாது.

10. மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

*

செய்ய வேண்டியவை

1. குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

2. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

3. மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

4. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இருக்கமாக உடை அணியக் கூடாது.

5. மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்திதிக் கொள்ளலாம்.

6. யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

7. எப்போதும் சந்தோஷமான பேச்சுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடவேண்டும்.

8. அலுவலக வேலைகளை அலுவலகத் தோடேயே விட்டுவிட வேண்டும்.

9. முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.
10. சுகாதார முறைகளைப் பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

***

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.


தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், ·பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

***

குடல் புண் உள்ளவர்களுக்கு உ¡¢ய ஆகாரம் என்ன?

மென்மையான உணவு தேவை என்பது பற்றி சந்தேகம் எழுந்துள்ளது. பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. அனேக நோயாளிகள் இப்படிப்பட்ட உணவு வகைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

*
இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம்.

1. சத்தான சரிவிகித உணவு.

*

2. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

*

3. காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

*

4. வயிற்றில் கோளாறை உண்டுபண்ணும் உணவு எனத் தெரிந்தால் அவற்றை வெறுத்து ஒதுக்கிவிட வேண்டும். இவ்வுணவானது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். ஆகவே அவரவர் அனுபவத்தால் தீமை செய்பவை எவை எனத் தெரிந்து ஒதுக்கிவிட வேண்டும்.

*

5. சாப்பிடும் உணவின் சூடு கூட முக்கியமானதாகும். மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன மிகவும் நன்மை பயக்கும்.

*

6. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகவே அதிக அளவில் இவைகளைச் சாப்பிடலாம்.

*

7. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது. பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.


***
by- Dr.அம்புஜவல்லி , தஞ்சாவூர்
thanks Dr
***
"வாழ்க வளமுடன்"

உடலில் உள்ள வலிகளை அகற்றும் உணவு முறை

மூட்டு வலி நீங்க

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.


சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.


சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸியில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.


தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.


***


குறுக்கு வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.

*


சாப்பிடும் விதம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.

குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.
முழங்கால் வலி நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.

*

சாப்பிடும் விதம்

பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.

ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.

ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.

லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.


***


தலைவலி நீங்க

பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷீட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.

*

சாப்பிடும் விதம்

அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.


***காலில் வீக்கம் நீங்க

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

*

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.


***
thanks tamil.
***


"வாழ்க வளமுடன்"

வண்ணங்கள் மனிதனின் முக்கிய வரம்

வண்ணங்கள் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கம். வண்ணங்களில் இருந்து மனிதனை தனியாக பிரிக்க முடியாது. வண்ணங்களை நாம் பார்த்து ரசிக்க நமக்கு உதவி செய்வது சூரியன் தான். சூரியன் இல்லை என்றால் நாம் வண்ணங்களை பார்க்க முடியாது.
நிலவின் ஒளியில் நாம் பார்க்கும் எல்லாப் பொருளும் சாம்பல் நிறமாகவே தெரியும். போதுமான ஒளி இல்லை என்றாலும் பார்வை தெரியும். ஆனால் இயற்கையான நிறங்களை உணர முடியாது. சூரியன் தான் வண்ணங்களை ரசிக்க உதவுகிறது. முழு இருட்டில் நம்மால் எதையுமே பார்க்க முடியாது.

*

ஆந்தைக்கும் சில வன விலங்குகளுக்கும் நம்மை விட இருட்டில் நன்றாக பார்க்கும் திறன் உண்டு. ஆனால் நிறங்களை பிரித்துப் பார்க்கும் திறன் மனிதனுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும், ஒரு சில பறவைகளுக்கும் மட்டுமே உண்டு. மற்ற எல்லா உயிரினங்களுக்குமே அந்த காலத்து சினிமாப் படம் மாதிரி எல்லாமே கறுப்பு வெள்ளையில் தான் தெரியும்.

*

மனிதன் கொடுத்து வைத்தவன். அதனால் தான் அவனால் வண்ணங்களை உணர முடிகிறது. வண்ணங்கள் இல்லாத மனித வாழ்வு கொடுமையான ஒன்று. அந்த அளவுக்கு வண்ணங்கள் மனிதனோடு இணைந்து இருக்கின்றன.

*


நிறங்களை பிரித்து உணர உதவும் செல்கள் சரியாக செயல்படவில்லை என்றால், மனிதர்களாலும் கலர் பார்க்க முடியாது. இந்த செல்கள் ஓரளவு செயல் இழந்திருக்கும் போது சில வண்ணங்கள் மட்டும் தெரியாது. இதை நிறக்குருடு என்கிறார்கள்.

*

கண்ணின் அதிசயம் அதன் லென்சில் தான் இருக்கிறது. புரதம் நிரம்பிய ஓவல் வடிவில் இருக்கும் இந்த சின்ன உறையான லென்சை சுற்றி தசைகள் உள்ளன. மிகவும் உறுதியான இந்த தசைகள் மிகக்கடுமையான உழைப்பாளிகள்.

*

இவை கெட்டிபடும் போது லென்ஸ் பருத்து, தடிமனாகி பக்கத்தில் இருக்கும் பொருட்களைப் பார்க்க உதவுகிறது. தசைகள் ரிலாக்ஸ் ஆகும் போது தட்டையாகி லென்ஸ் மெலிதாகி விடும். இதனால் தூரத்தில் இருக்கும் பொருட்களை சுலபமாகப் பார்க்க முடிகிறது.

*

ஆதி மனிதனுக்கு விலங்குகளிடம் இருந்து தப்பிக்க, இரையை தேடி ஓட மட்டுமே பார்வை தேவைப்பட்டது. அதனால் குறைந்தபட்சம் 20 அடிக்கு அப்பால் உள்ள பொருட்களைச் சுலபமாக பார்க்க முடிந்தாலே போதும். இதனால் அக்கால மனிதனின் கண் தசைகள் ஓய்வாகவே இருந்தன. ஆனால் இன்றைய மனிதனின் நிலைமை வேறு.

*

இன்றைய சூழ்நிலையில் படிப்பது, டேபிளில் கணக்கு எழுதுவது, கம்ப்யூட்டர் பார்ப்பது என்று எப்போதுமே அருகில் இருக்கும் பொருட்களை உற்றுப்பார்ப்பதே வேலையாகிப் போய் விட்டது. தொடர்ந்து ‘குளோசப்‘ வேலைகளையே அதிகம் செய்ய வேண்டியிருப்பதால் கண்தசைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக்கின்றன. கண்கள் விரைவில் களைப்படைந்து சோர்வடைய இதுவே காரணம்.

*

லென்சின் முன்னும் பின்னும் திரவம் நிரம்பிய இரண்டு பகுதிகள் உள்ளன. முன்னால் இருக்கும் திரவம் தண்ணீர் போலவும், பின்னால் இருப்பது முட்டையின் வெள்ளைக்கரு போலவும் இருக்கும். ஒரு பொருளை நாம் பார்க்கும் போது இந்த இரு திரவப்பகுதிகளையும் நடுவில் இருக்கும் லென்சையும் கடந்து ரெடினா என்ற திரையில் பதியும் ஒளி தான் மூளைக்குப் போகிறது.

*

தலையின் பின்பக்கத்தில் பலமான அடிபட்டால் அங்கிருக்கும் மூளையின் பார்வை பகுதிகளை தாக்கும். அதனால் நிரந்தரமாக பார்வை பறிபோகும் வாய்ப்பும் நிறைய இருக்கிறது. அதனால் தான் டூவீலரில் போகும் போது ஹெல்மெட் அணிவது தலைக்காயத்தில் இருந்து மட்டுமல்ல பார்வையை காப்பாற்றும் கவசம் என்பதும் உண்மையாகிறது.


***
by- raja
thanks raja
***"வாழ்க வளமுடன்"

ஒரு வயது குழந்தைக்கு உணவுஒரு வயது குழந்தைக்கு என்ன உணவு?

தாய்ப்பாலோ அல்லது புட்டிப்பாலோ குழந்தையின் முதல் ஆண்டில் அவனுடைய சத்துணவின் பெரும் பகுதியாக அமையும். பிறகு இதோடுகூட திட உணவை கூட்டி நிறைவு செய்யவேண்டும்.

*

இதனால் குழந்தை ருசி மற்றும் மணம் அறிய ஒரு புதிய வழி பிறக்கிறது. முதலில் காரம் இல்லாத உணவு வகைகளைக் கொடுத்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக காரம் மற்றும் மசாலா சேர்ந்த் பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.

*

தனிப்பட்டவர்களின் முன்னரிமைக்கு ஏற்ப பலவிதமான திட உணவுகளின் ஆரம்பிக்கும் வரிசை மாறுபடும். பொதுவாக, ஒரே தான்ய உணவு பெரும்பாலும் அரிசிசோறு ஆரம்பிக்கலாம். மற்ற தானியங்களை பிறகு அறிமுகம் செய்யலாம்.

*

அல்லது இன்று கடைகளில் அறிமுகப்படுத்தி விற்பனையாகும் முன்னால் பக்குவப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம். பக்குவப்படுத்தப்பட்ட காய்கறிகளும், பழங்களும்கூட கொடுக்கலாம்.

*

குழந்தைகளால் சீக்கிரம் ஜீரணிக்கக்கூடியவைகளும், அவர்களால் விரும்பப்படுவதுமான பிசைந்த வாழைப்பழங்களும், கடைந்த ஆப்பிள்களும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் உணவு வகைகளில் எல்லோராலும் விரும்பப்படும் பொருள்களில் முதன்மை பெறும்.

*

உங்களிடம் மிக்சி இருந்தால் பெரும்பான்மையான எல்லா பழங்களையும், காய்கறிகளையும் அரைத்து குழந்தைகளுக்குக் கூழ் பதத்தில் கொடுக்கலாம். பருப்பு வகைகளையும் இதே முறையில் கொடுக்கலாம்.

*

உணவில் மிக அதிகமான சர்க்கரையையும், உப்பையும் சேர்க்காதீர்கள், அதிகப்படியான உப்பு உடம்பில் நீர் இல்லாமல் செய்துவிடும், அதிகப்படியான சர்க்கரை சொத்தைப் பல்லை உண்டாக்கும், பிற்காலத்தில் இதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகும்.

*

குழந்தையின் சுவை உறுப்பு, உங்கள் உறுப்பை விட நன்றாக வேலை செய்யக்கூடியது. ஆகவே, அதற்கு அதிகப்படியான உப்பும், சர்க்கரையும் தேவையில்லை. சில சமயங்களில் குழந்தை எல்லா வித உணவுகளையும் புறக்கணிக்கக்கூடும். இது அநேகமாக வழக்கத்தில் இருந்து மாறுபடுவதால் ஏற்படுவது.

*

குழந்தை திட உணவை புறக்கணித்தால் அதனை சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள். திட உணவின் அமைப்பும், ருசியும் பாலினின்றும் வெகுவாக வேறுபடுவதாலும், விழுங்கும் முறை வழக்கமான உறிஞ்சிக் குடிக்கும் முறையிலிருந்து வேறுபடுவதாலும் குழந்தை புறக்கணிக்ககூடும்.

*

குழந்தை உணவு உட்கொள்வதில் ஆவலாக இல்லாவிடினும் கவலைப்படாதீர்கள். அதனைக் கட்டாயப்படுத்தாதீர்கள். மாறாக வேறு ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள் வேறுபட்ட தானியம் அல்லது வேறு வகையான பழக்குழம்பு போன்றவை. அப்பொழுதும் குழந்தை அவைகளை புறக்கணித்தால் சில நாட்கள் சென்ற பிறகு மறுபடியும் முயற்சி செய்யுங்கள்.

*

ஒவ்வொரு புதிய உணவு வகைகளையும் குழந்தை ருசி பார்க்கட்டும். அதன் ருசியையும் அதன் கெட்டித்ததன்மை¨யும் பழக்கப்படுத்திக் கொள்ளட்டும். அவன் சிறிது அதிகமாக சாப்பிட்டால் அதை அவனுக்குக் கொடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகப்படுத்தி அவன் பசிக்கு ஏற்ப கொடுங்கள்.

*

குழந்தையைப் பெருக்ககு வைக்கும் எந்தவிதமான உணவையும் கொடுக்காதீர்கள் உதாரணமாக, அதிகப்படியான வெண்ணெய் அல்லது நெய், கிரீம் அல்லது தித்திப்பான முட்டையும், பாலும் சேர்ந்த தின்பண்ட வகை இவைகள் குழந்தையைப் பெருக்க வைக்கும், எவ்வளவு எலும்பும் தோலுமாக இருந்தாலும் அநேகமாக முடிவில் தடித்த குழந்தையாக ஆகி, பிற்காலத்தில் கொழுத்த மனிதனாவான்.


*

சிறுகச் சிறுக புதிய உணவு வகைகளில் குழந்தையின் அனுபவத்தை வளர்க்க வேண்டும். குழந்தை ஆறு மாதக் குழந்தையாகும்போது உணவில் சிறு பகுதி மாமிசம், மீன், கோழிக் குஞ்சின் இறைச்சி இவைகளைச் சேர்க்கலாம். ஆனால் இவை நன்றாகப் பக்ககுவப் படுத்தப்பட்டதாகவும், மிருதுவாக உள்ளதாயும் இருத்தல் அவசியம்.

*

குழந்தைக்கு நல்லது செய்யும் தயிரையும் தரலாம். கிச்சடி, உப்புமா, இட்லி, பருப்பு போன்ற பலவிதமான வீட்டு உணவு வகைகளையும் கொடுக்கலாம். பலவிதமான உணவு வகைகளையும், பலவிதமான காய்கறிகள், பலவிதமான பழங்கள் முதலியவற்றையும் சேர்த்து குழந்தைக்குப் பிடித்தமான உணவைத் தயா¡¢க்கலாம்.

*

சற்றேறக்குறைய இந்த வயதிலேயே குழந்தை தன்னுடைய வாயில் எல்லாப் பொருட்களையும் போட்டக் கொள்வதைக் காணலாம். இப்பொழுது அதன் கையினால் எடுத்த சப்பி சாப்பிடத்தக்க உணவு வகைகளை அறிமுகம் செய்விக்கலாம். தானே சாப்பிடும் குழந்தைக்கு எல்லாம் ருசியாக இருக்கும்.

*

இது குழந்தையை திறமையுள்ளவனாகவும் மாற்றும். எல்லாக் குழந்தைகளும் வீட்டில் பரம்பரையாகச் செய்யும் அப்பத்துண்டகளைச் சாப்பிடும். கையில் பிடிக்கும் வகையிலான பெரிய தண்டு ரொட்டி அல்லது ஆப்பிள், வாழைப்பழம், காரெட்டு போன்றவை கொடுக்கலாம். அதிகமான கடின உணவைக் கடித்துத் தின்பது குழந்தையின் ஈறுகளும், பற்களும் ஆரோக்கியமாக வளர உதவிபுரிகின்றது.

*

குழந்தைக்கு குறிப்பாக பல் முளைக்கும் சமயம் இது செளகரியமாக அமையும். விரல் போன்ற உருவில் இருக்கும் உணவுகள் இதே காலகட்டத்தில் குழந்தையின் உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், தானே உணவு உட்கொள்ளும்போது குழந்தையைக் கவனமாக கவனிக்க வேண்டும்.

*

அவன் ஒரு துண்டைக் கடித்து மென்று பின் அதை விழுங்குவதில் கஷ்டப்படலாம் எனவே, அவனுக்கு கொட்டைகள், முலாம்பழம், தானியங்கள், உருளைக்கிழங்கு வறுவல், சாக்கலேட்டகள் முதலியவைகளை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.

*

குழந்தைக்கு திட உணவு வகைகளை கொடுக்கும் போது அவன் 6 அடி உயரம் உள்ள ஹிமான் போன்ற பலமிக்க பெரிய ஆளாக வளரப் போவதை மனதில் வைத்துக்கொண்டு அதிக உணவு படைக்காதீர்கள். சத்துணவு பற்றிய அறிவு உங்களை உணவுகளை நிறுத்தும், அளந்தும் கொடுக்கச் செய்யும்.

*

இது உங்களையும், உங்கள் குழந்தையையும் கிறுக்காக்கும். குழந்தையும் தன்னுடைய தட்டில் மிக அதிகமான உணவைக் கண்டு சாப்பிடுவதைத் தவிர்க்கும். குழந்தைக்கு முதலில் கொஞ்சம் கொடுங்கள், அதைச் சாப்பிட்டு முடித்த பிறகு இன்னும் கொஞ்சம் கொடுங்கள்.

*

குழந்தை எல்லா உணவுகளையும் ஒரு குறிப்பிட்ட உணவை சீக்கிரமாக சாப்பிட கற்றுக் கொள்ளும். சில குழந்தைகள் தாமதாமாக உண்ணும். எவ்விதமாயினும் உங்கள் குழந்தைக்கு சில பொதுவான வழக்கங்களை கற்றுக்கொடுக்க இது சிறந்த காலமாகும்.


***
thanks Dr.நந்தினி முந்துகூர்,
பெங்களூர்
***
"வாழ்க வளமுடன்"

இதயத்துக்கு நல்லதா - பாஸ்டுபுட் & உணவு.....

1. நமது சாப்பாடு காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் இருக்க வேண்டும்.
2. பசிக்கு பின் சாப்பிட வேண்டும்.

*

3. சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் (salad) சாப்பிட வேண்டும்.

*

4. வயிற்றைப் பட்டினி போடுவது தவறு. அதிகமாக சாப்பிடுவதும் தவறு.

*

5. சமைப்பதற்கு முன் இறைச்சியில் உள்ள கொழுப்பையும், கோழிக்கறியில் உள்ள தோலையும் நீக்கி சாப்பிட வேண்டும்.

*

6. கோதுமை, கம்பு போன்ற தானியங்களை மாவாக்கி பின்னர் சல்லடையால் சலிக்கக் கூடாது. அப்படிச் செய்வதால் ஊட்டச் சத்துக்களும் நார்சத்தும் குறைந்துவிடும்.

*

7. சமையல் எண்ணைகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது.

*

8. உப்பு அதிகம் சேர்க்கக் கூடாது.

*

9. இரவு படுக்கைக்குப் போவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

*

10. பச்சைக் காய்கறிகள், பழங்கள் உங்கள் இதயத்தின் ஆயுளை அதிகாரிக்கும்.

*

11. வெப்பம், அதிக ஒளி, காற்று ஆகியவை அன்டி-ஆக்ஜிடென்ட் வைட்டமினுக்கு எதிரானவை, எனவே காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திரந்து வைப்பதில் பலன் இல்லை. குக்காரில் காய்கறிகளை அவிப்பதால் சத்துக்கள் வெளியேறாது.

*

12. "·பாஸ்ட் புட்" சாப்பாடு, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகிய இரண்டுமே உங்கள் பாக்கெட்டுக்கும் (பணம்) உங்கள் இதயத்துக்கும் நல்லதல்ல.

*

13. பொரித்த உணவை விட அவித்த உணவு மிகவும் நல்லது.

*

14. நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ சரியான நேரத்தில் சப்பிடவேண்டும், உணவில் காய்கறி, பழங்கள் அதிகமாகவும் கொழுப்புச்சத்து - உப்பு ஆகியவை குறைவாகவும் இருக்க வேண்டும்.

*

15. உயரத்திற்கு ஏற்ற எடை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


***

எடை கூடாமல் இருக்க:

1. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

*

2. கொழுப்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

3. காப்பி, டீ அதிகம் குடிக்க கூடாது.

*

4. பச்சைக் காய்கறிகள், கிரை, பழங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

*

5. இனிப்பு, புளிப்பு உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

*

6. தினமும் 30 முதல் 45 நிமுடம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

*

7. பாஸ்ட்புட், சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நொறுக்கு தீனி அதிகம் கூடாது.

***

உணவு உண்டவுடன் செய்ய கூடாதவை:


1. புகைப்பிடிக்காதீர்கள் - உணவு உண்டவுடன் புகைப்பிடிப்பது 10 மடங்கு புகைப்பிடிப்பதற்கு ஒப்பானது. (புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்)

*

2. உடனே பழங்களைச்சாப்பிடாதீர்கள் - பழங்களை உடனே சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். சாப்பிட்டு 1-2 மணி நேரம் கழித்து பழங்கள் சாப்பிடவேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

*

3. டீ குடிக்காதீர்கள் - சாப்பிடவுடன் டீ குடிக்காதீர்கள். டீயில் உள்ள அமிலத்தன்மை நாம் உண்ண உணவில் உள்ள புரத பொருளை கடின பொருளாக மாற்றிவிடும், அதனால் ஜீரணம் செய்வது கடினம்.

*

4. பெல்டை உடனே தளர்த்த வேண்டாம் - சாப்பிடவுடன் பெல்டை தளர்த்துவதால் சிறுங்குடல் அடைபடவோ அல்லது முறுக்கிக் கொள்ளவோ சந்தர்ப்பம் உள்ளது.

*

5. நடைப்பயிற்சி கூடாது - சாப்பிட்டவுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஜீரண உறுப்புக்களால் செரிமானம் செய்யப்பட்ட உணவுகளை கிரகித்துக் கொள்ள முடியாது.

*

6. குளிக்க வேண்டாம் - சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால், உடல் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சென்றுவிடுவதால் ஜீரண உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. நாளைடைவில் ஜீரண உறுப்புக்கள் வழுவிழந்துவிடும்.

*

7. தூங்க வேண்டாம் - உண்டவுடன் படுக்கைக்கு செல்ல வேண்டாம். நாம் உண்ட உணவு சரியானமுறையில் செரிமானமாகாது.

***
thanks தினமணி & இணையம் .
***

"வாழ்க வளமுடன்"

"இரத்த சோகை பற்றி அறிவோம்"

1.இரத்த சோகை என்றால் என்ன?நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் எனும் புரதசத்து உள்ளது. இது தான் நமக்கு தேவையான பிராண வாயுவை உடலிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் கொண்டு செல்லுகிறது. இந்த ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இரத்த சோகை நோய் ஏற்படுகிறது.

***

2. இரத்த சோகை நோயின் அறிகுறிகள் யாவை?

மயக்கம், கிறுகிறுப்பு, உடல் சோர்வு, தோல் மற்றும் நகங்கள் வெளுத்து விடுவது, முகம், கை, கால் வீங்கி விடுவது, மூச்சுவிடச் சிரமம்.

***

II. இரத்த சோகை நோய் வருவதற்கான காரணங்கள்:

1. சத்து குறைவான உணவினால் இரத்தச்சத்து மற்றும் ஃபோலிக்ஆசிட் எனும் சத்து நமது உணவில் குறைவதால்.

*

2. அணைத்து வித புற்று நோய்களுக்கும் தரப்படுகின்ற கீமோதெரப்பி, ரேடியம் தெரப்பி எனப்படும் மருத்துவ சிகிச்சையால்

*

3. நம் குடலில் உண்டாகும் குடல் புழுக்களால்

***

III. நமது உடலின் தலை முதல் பாதம் வரை உண்டாகும் பல்வேறு வியாதிகளால்:


1. மூளையில் ஏற்படும் புற்றுரநோய் கட்டியால் ஏற்படும் இரத்தக்கசிவுகளால் மூக்கில் இரத்தம் வருவதால்.

*

2. வாய் மற்றும் தொண்டை புண்களில் இருந்து இரத்து கசிவு ஏற்படுவதால்.

*

3. சுவாசப்பையில் நுரையீரல் புற்று நோய் மற்றும் டிபி நோய்களால் இரைப்பையில் அல்சர் ஏற்படும் புண்களில் இருந்து இரத்த கசிவு ஏற்படுவதால்.

*

4. மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் டைபாய்டு போன்ற காய்ச்சல்களால் கல்லீரல் மற்றும் கணையம் போன்றவகைகளில் வீக்கம் ஏற்பட்டு இரத்த வாந்தி வருவதால்.

*

5. குடல் புண்களால் குடல் இரத்தத்தை உறிஞ்சக்கூடிய தன்மை இழப்பதால்.

*

6. சிறுநீரகத்தில் புற்று நோய்கட்டிகளால் மேலும் டி.பி.நோய் போன்றவற்றின் பாதிப்புகளால் இரத்த கசிவு ஏற்படுவதால்.

*

7. கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டிகள் மற்றும் உதிரக்கட்டிகளால் உதிரப்போக்கு அதிகம் ஏற்படுவதால்.

*

8. நாளமில்லா சுரப்பிகளின் வேறுபாடுகளால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படுவதால்.

*

9. குடல் மற்றும் மலம் கழிக்கும் ஆசனவாய் போன்ற பகுதிகளில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதால்.

*

10. ஆசனவாயில் மூலம் மற்றும் பவுத்திரம் போன்றவைகளால் இரத்த கசிவு ஏற்படுதல்

***

IV. கர்பிணிப்பெண்கள் பேறுகாலத்திலும், குழந்தைகளுக்கு பாலுட்டும் காலத்திலும் சத்தான உணவை சாப்பிடாமல் இருத்தல்

*

V இரத்த சோகையைக் கண்டறிவது எப்படி ? இரத்த சோகை நோய் கண்டறியும் முறை:

மேற்கூறிய அறிகுறிகள் எது இருந்தாலும் மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்று, இரத்தத்தில் ஹீமோகுளோபின் (HB%) அளவு எவ்வளவு உள்ளது என்பதை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

*

மருத்துவரின் அலோசனைப் பெற்று 6 மாதங்களுக்கு ஒருமுறை குடல் புழுக்களை அழிக்கும் பூச்சி மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

*

இரத்த சோகை அதிகம் இருப்பின் இதற்கும் மருத்தவரின் ஆலோசனை பெற்று 3 மாதங்களுக்கு தொடர்ந்து இரத்தச்சத்து மாத்திரை மற்றும் Folic Acid மாத்திரையும் சாப்பிடவேண்டும்.

*

தினமும் ரத்தச்சத்து அதிகமுள்ள உணவு வகைகள், பழங்கள், பச்சைகாய்கறிகள், பசுமையான கீரைகள், தானிய வகைகள், காய்ந்த பழம் மற்றும் கொட்டை வகைகள், வெல்லம், மாமிச வகைகள், ஈரல், முட்டை, பால் ஆகியவைகளை உணவில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

***

நமது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த பட்சம் கீழ்கண்டவாறு இருத்தல் நலம்:

HB % அதிக பட்சம் - 14.08 gm %

ஆண்கள் - 13.00 gm %

பெண்கள் - 11.00 gm %

கர்ப்பிணி பெண்கள் - 10.00 gm %

குழந்தைகள் - 12.00 gm %

பள்ளி செல்லும் வயதினர் - 12.00 gm %

முதியோர்கள் - 10.00 gm %

*

"இரத்த சோகை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்"


:)

***
thanks ஆத்தூர்.
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "