...

"வாழ்க வளமுடன்"

03 ஜூலை, 2012

கருவின் வளர்ச்சி


தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். மலடி, மலடி என்று இழிவாக பேசும் நிலை நீங்கி, ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின் கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்
.புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.


கருத்தரிக்கக்கூடிய காலம்

மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்து கரு உண்டாகும்.



சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்.

விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.


ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது.


ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது.

ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.



கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளருகின்றது.

கருவுற்ற 18 ஆம் நாள் தோன்றிய இருகுழாய்கள் ஒன்றினைந்து இதயம் இருக்க வேண்டிய பகுதிக்கு வந்த பின் 22 ஆம் நாள் தாயின் இரத்த நாளங்களிளிலிருந்து சுவாசக்காற்றை தொப்புள் கொடிவழியாகப் பெற்று முதன்முறையாக துடிக்கத் தொடங்குகின்றது. இதுவே கருவின் முதல் இதயத் துடிப்பாகும். பின்பு இந்தக் குழாய்கள் வளைந்து, நெளிந்து முழு இருதயமாக வளர்வதற்கு சில மாதங்களாகின்றன.

ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

கருவுற்ற 22 ஆம் நாள் கருவின் முகம் வளரத் துவங்குகின்றது.

கருவுற்ற 31 ஆம் நாள் கருவின் மூக்கு மற்றும் கண்கள் வளரத் துவங்குகின்றது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.

கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன

கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது.


கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன


கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது

கருவுற்ற 49 ஆம் நாள் வரை ஆண், பெண் சிசுக்களும் ஒரே மாதிரியாக இருக்கும்.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.

பிறப்புறுப்புக்கள் நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.

கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.


கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.

மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.


5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.


6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.


கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.

கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.



கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.

கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.


கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.

கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.


கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.
அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது


கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.


கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.


கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள்

கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.

கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன


கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.


கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.


கருவுற்ற 9-வது மாதம் அதாவது 266 அல்லது 294ம் நாள் தன் கருவளர்ச்சியை முழுவதுமாக அடைந்து குழந்தை இந்த உலகில் காலடி எடுத்துவைக்க தயாராகிவிடுகிறது.



***
thanks மங்கையர் உலகம்
***




"வாழ்க வளமுடன்"

.கர்ப்பிணிகளுக்கான உணவுக் குறிப்புகள்



ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்பம் என்பது மிகவும் சந்தோஷமான காலம் ஆகும். கர்ப்ப காலத்தில் நல்ல சமச்சீரான உணவை பராமரிப்பது உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மிகவும் முக்கியமாகும். நீங்கள் இவ்வாறு செய்ய உங்களுக்கு உதவ இங்கே சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு வேண்டிய அளவு சாப்பிடுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள், நோயாளி அல்ல என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இந்த ஒன்பது மாதங்களை அனுபவித்து மகிழுங்கள்.

நீங்கள் அசௌகரியமாக உணர்வதைத் தடுக்கும் வகையிலான லைட் ஆனால் ஊட்டச்சத்துகள் நிரம்பிய உண்வை சாப்பிடுங்கள். நீங்கள் பாலக் பன்னீர், மேத்தி ரோட்டி அல்லது பீன் சூப் சாப்பிட்டுப் பாருங்கள்.

அதிகமாகத் தாளித்துக் கொட்டிய மற்றும் அதிகமாக மசாலா உள்ள உண்வுகளை சாப்பிடாதீர்கள். அவை குமட்டலை அதிகரிக்கின்றன். வெள்ளரி மற்றும் தயிர் சோறு போன்ற மிதமான சுவையுள்ள உணவை சாப்பிடவும்.

கர்ப்ப காலத்தில் அதிக அளவு இரும்பு சத்து மிகவும் முக்கியமாகும். ராஜ்மா சாக்வாலா போன்ற பண்டம் ஆரோக்கியமான இரும்பு சத்து அளவை பராமரிக்க உதவும்.

கால்ஷியம் அதிகமாக சாப்பிடவும். இது தாய்ப்பாலுக்கு நன்மை அளிக்கக்கூடியது மற்றும் குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்குத் தேவையானது. ஈஸி சீஸ் பாஸ்தா போன்ற பண்டத்தை தயார் செய்ய மற்ற உணவு வகைகளுடன் கால்ஷியம் உள்ள உணவை சேர்க்க முடியும்.

உங்கள் உணவில் உள்ள நார்சத்து மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது. பழங்கள், கீரை வகைகள் மற்றும் முழு கோதுமை தயாரிப்புகள் போன்ற இயற்கையான அன்ப்ரோஸெஸ்ட் உணவை சாப்பிடவும். கொய்யாப் பழத்தில் நார்சத்து அதிக அளவில் உள்ளது. இது உங்கள் மலச்சிக்கலுக்கு உதவும் என்பதால், இதை நிச்சயமாக சாப்பிடவும்.

உங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு ஜிங்க் மிகவும் முக்கியமானது. தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் ப்ராக்கேலி மற்றும் கீரை போன்ற பச்சிலை வகைகளை தினமும் முறை தவறாமல் சாப்பிடுவதிலிருந்து தேவையான ஜிங்க் அளவை நீங்கள் பெற முடியும்.

திரவங்கள் குடித்துக் கொண்டிருக்கவும். உங்கள் உடலில் நீர் தேங்கம் பாதிப்பு இருந்தாலும் கூட நீங்கள் தினமும் குறைந்தபட்சம் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உங்கள் உண்வின் பிற்சேர்க்கையாக பழரசங்கள், சூப், மோர் மற்றும் இளநீர் பயன்படுத்துங்கள். இவற்றில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் உள்ளன மற்றும் உடனடியாக சக்தி அளிக்கின்றன.

உங்கள் கடைசி மூன்று மாதகாலத்தில், நிறைய பூண்டு, வெந்தயம், சப்ஜா, பால் மற்றும் பாதாம் கொட்டை சாப்பிடவும். இவை கலக்டோகாக் உணவு எனப்படுகின்றன. அதாவது இவை முலைப் பாலை ஊக்குவிக்கின்றன எனப் பொருள் ஆகும்.
 
***
thanks darulsafa
***


"வாழ்க வளமுடன்"
     

காய், பழ வகைகளும் தெரிஞ்சு சாப்பிடுவோம் :)




இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் காய், பழ வகைகளும் ஆகும்.

படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்!

தவறாமல் தினமும் சாப்பிடுகிறோம்தானே! நாம் சாப்பிடும் உணவில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து அப்போதைய நம் உடல்நிலைக்கு பருவநிலைக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து சாப்பிட உதவவே இந்த இணைப்பு. எதையுமே தெரிந்து அனுபவிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் அலாதிதான். தாஜ்மஹால் என்பதை எந்தப் பின்னணியும் அறியாமல் பார்க்கும்போது அது பிரமிக்க வைக்கிற கட்டடக்கலை மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள காதலறிந்து பார்க்கும்போது உங்களுக்குள்ளும் கவிதை அனுபவம் கிட்டும்.
அப்படித்தான் தினமும் சாப்பிடும் காய், பழங்களின் ருசியோடு அதிலுள்ள பயன்களையும் அறிந்து சாப்பிடுவதும். இவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளன? எது யாருக்கு ஏற்றது? யார் எதை விலக்கி வைக்க வேண்டும் என்பதை தெரிந்து உண்டு பயனும், பலமும் பெறவே இந்த இணைப்பு.



கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.


முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.


மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
 தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.


அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.



அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.


பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.


கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.


புடலங்காய்


என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.


பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.


சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.


பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.


***
thanks எம். முஹம்மது ஹுசைன் கனி
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "