...

"வாழ்க வளமுடன்"

10 செப்டம்பர், 2015

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ?







சில சந்தேகங்கள் நாம் அருந்தும் தண்ணீரைப் பற்றியது.

1.இரவில் தூங்க செல்லும் முன்னர் மிதமான சூட்டில் உள்ள சுடு தண்ணீர் அருந்திவிட்டு படுக்கச் செல்வது சரியா
2.அல்லது சுட வைத்த தண்ணீரை ஆற வைத்துதான் அருந்திவிட்டு தூங்க செல்லவேண்டுமா.
3.பகலில் அதிக முறை குறைந்த தண்ணீர் அருந்துவது சரியான முறையா
4.அல்லது சில முறை குடித்தாலும் அதிக அளவு தண்ணீர் அருந்துவது சரியான முறையா.
5.மேற்கண்ட எல்லா முறையிலும் தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவதுநல்லதா.
6.அல்லது சூடான தண்ணீரை ஆற வைத்துத்தான் அருந்த வேண்டுமா.

பதில்.

எமது உடலின் செயற்பாடுகளுக்கு ஒட்சிசனுக்கு அடுத்ததாக அத்தியவசியாமான பொருள் நீர் என்றால் மிகையில்லை.ஆனாலும் அநேகமானோர் உடலின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் போதியளவு நீரை அருந்துவதில்லை. ஒவ்வொருநாளும் நாம் பல்வேறு விதாமாக உடலில் இருந்து நீரை இழந்துகொண்டிருக்கிறோம்.

சிறுநீர், சுவாசம், வியர்வை, மலம் என பல்வேறு வழிகளினூடாக நாம் நீரை தினம்தோறும் இழக்கிறோம். இந்த நீர் மீண்டும் நமது உடலைச் சேருவது நாம் அருந்தும் நீர் மூலமாகவும், உணவில் உள்ள நீர் மூலமாகும்.

ஒருவருக்கு ஒருநாளைக்கு தேவையான அளவு நீர் அவர் மேலே சொன்ன வழிமுறைகள் மூலம் இழக்கும் நீராகும். அதுதான் வியர்வையான காலத்தில் அதிகம் நீர் வியர்வை மூலம் இழக்கப் படுவதால் அதிக நீர் உடலுக்குத் தேவை என்பதால் தாகம் அதிகரிக்கின்றது.

ஒருவர் ஒருநாளைக்கு எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது அவரின் உடல் நிறை, அவர் வசிக்கும் காலநிலை, அவர் செய்யும் வேலையின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கிறது.

அண்ணளவாக ஒருவருக்கு ஒருநாளைக்குத் தேவைப்படுவது அவரின் ஒரு கிலோ உடல் நிறைக்கு 35ml நீராகும்.

இருந்தாலும் மேலே சொன்னதுபோல இந்த அளவு காலநிலை மாற்றம், மற்றும் வேலையின் அளவு என்பவற்றைப் பொருத்தும் மாறுபடும்.

சரியாக கணிக்கப்படாவிட்டாலும் அண்ணளவாக ஒருநாளைக்கு குறைந்தது இரண்டரை லீட்டர் நீராவது குடிப்பது அவசியமாகும்.

நீங்கள் இன்னும் சரியாக உங்களுக்குத் தேவையான நீரின் அளவைக் கணித்துக் கொள்ள விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள கணிப்பானில் உங்கள் தரவுகளைக் கொடுப்பதன் மூலம் கணித்துக் கொள்ள முடியும்.

உங்களுக்குத் தேவையான இந்த நீரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அருந்தலாம்.
அதாவது சூடாகவோ, ஆறியதாகவோ அல்லது பழச் சாறாகவோ.

அதை உங்கள் விருப்பப் படி விரும்பிய அளவுகளில் குடித்துக் கொள்ளலாம்.(எத்தனை தடவையில் குடித்து முடிக்க வேண்டும் என்று கணக்கிடத் தேவையில்லை)

ஆனாலும் அளவுக்கதிகமாக ஒரேயடியாக நேரை குடிப்பதால் மற்றைய வேளைகளில் கவனம் குறையலாம்.
இரவிலே அதிகம் நீரை அருந்தினால் சிறுநீர் கழிப்பதற்காக நித்திரை குழம்ப வேண்டியும் ஏற்படலாம்.

மேலே சொன்னதெல்லாம் ஆரோக்கியமான ஒருவருக்குத் தேவையான நீரின் அளவாகும்.

வாந்தி, வயிற்றோட்டம், காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நீரிழப்பு அதிகரிப்பதால் இன்னும் அதிகமாக நீர் அருந்த வேண்டி ஏற்படலாம்.
***
நன்றி : தமிழ் மருத்துவம்
***


"வாழ்க வளமுடன்"
      

தேங்காயில்" கொட்டி கிடக்கும் மருத்துவ குணம்!!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.

தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் பயன்கள்:

1) புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. குறிப்பாக கொப்பரை தேங்காய் ஆண்மையைப் பெருக்கும் .

2) தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

3) மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

4) மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங் குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

5) தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

6) தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

7) தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

8) தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.

9) முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

10) இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.

இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.

இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
***
நன்றி : மாற்று மருத்துவம்
***


"வாழ்க வளமுடன்"
      

வெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்!!!





வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கெட்டு 7000 ரூபாய்.

வெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை உண்டு.

1) நுரையீரல் பலப்பட வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

2) வயிற்றுவலி நீங்க: 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

3) சர்க்கரையின் அளவு கட்டுப்பட: வெற்றிலை - 4, வேப்பிலை - ஒரு கைப்பிடி, அருகம் புல் - ஒரு கைப்பிடி சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

4) விஷக்கடி குணமாக: உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

5) இருமல் குறைய: வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

6) அஜீரணக் கோளாறு அகல: வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

7) தோல் வியாதிக்கு: 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

8) தலைவலி நீங்க: வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

9) தீப்புண் ஆற: தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

10) வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

11) வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

12) தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறை அருந்தியும், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும்.

13) இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

14) புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

15) வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

***
fb
***





"வாழ்க வளமுடன்"

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்!





பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான்.


 அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும்.


அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும்.


எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள்.


இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, உங்கள் குழந்தைகளை பின்பற்ற வைத்து, ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொடுங்கள்.


இருமுறை பல் துலக்குதல்
நிறைய குழந்தைகள் பல் தேய்க்கவே சோம்பேறித்தனப்படுவார்கள். எனவே புரியாத வயதுள்ள குழந்தைகளாக இருந்தால், அவர்களை அழைத்து பற்களை தேய்த்துவிடுங்கள்.

அதுவே புரிந்து கொள்ளும் வயதுள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு பற்களை தினமும் இரண்டு முறை தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளைச் சொன்னால், அவர்களே தினமும் பற்களை தேய்க்க வேண்டுமென்று உங்களை தேடி வருவார்கள்.


அடித்து எழுப்ப வேண்டாம்
நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கம் சொல்லி தருகிறேன் என்று அதிகாலையிலேயே குழந்தைகளது தூக்கம் கலைவதற்குள்ளேயே எழுப்பி விடுவார்கள்.


உண்மையில் அவ்வாறு எழுப்புவது நல்ல பழக்கமல்ல. சொல்லப்போனால் அது அவர்களது உடலுக்கு கெட்டதைத் தான் விளைவிக்கும். எப்படியெனில், சிறு குழந்தைகளுக்கு 8-9 மணிநேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது. ஆகவே அவர்களது தூக்கம் கலைவதற்கு முன்பே, அடித்து எழுப்ப வேண்டாம். அதற்காக அளவுக்கு அதிகமாகவும் தூங்க விடக் கூடாது. இல்லாவிட்டால், நாளடைவில் அதுவே கெட்ட பழக்கமாகிவிடும்.


சாப்பிடும் பழக்கம்
குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எப்படி உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.


சுத்தம் செய்தல்
குழந்தைகளை சிறு வயதிலேயே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, பால் குடிக்கும் போது பாலை கீழே சிந்திவிட்டால், அதனை அவர்களையே சுத்தம் செய்ய சொல்ல வேண்டும். மேலும் படிக்கும் அறையை வாரந்தோறும் சுத்தம் செய்யுமாறு பழக்கப்படுத்த வேண்டும்.


மரியாதை
குழந்தைகளுக்கு தவறாமல் கற்றுக் கொடுக்க வேண்டியவைகளில் முக்கியமானது ‘நன்றி’ மற்றும் ‘தயவு செய்து’ போன்ற மரியாதையான வார்த்தைகள் தான். எனவே இதனை மறக்காமல் சொல்லிக் கொடுக்க வேண்டும்.


பகிர்ந்து கொள்ளுதல்
பகிர்ந்து கொள்வது என்பது ஒருவிதமான சந்தோஷம். ஆனால் தற்போதுள்ள குழந்தைகள் இதனை செய்வதில்லை. மேலும் தற்போதைய பெற்றோர்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்வதால், குழந்தைகளால் அவர்களுக்குரிய பொருளை வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களை தொடக்கூட அனுமதிப்பதில்லை. எனவே இந்த பகிர்தல் பழக்கத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.



பொறுப்பு
சிறுவயதில் இருந்தே அவர்களுக்கு பொறுப்புக்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களுக்கு செலவிற்கு பணம் பொடுத்தால், அதை சேமித்து வைத்து, தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்லி பழக்க வேண்டும். இதனால் பிற்காலத்தில் அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரித்து, நல்ல பொறுப்புள்ள மனிதனாக இருப்பார்கள்.



ஆரோக்கிய உணவுகள்
தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிட்சா, பர்கர் போன்றவை தான் பிடிக்கிறது. ஆனால் அதனை சிறுவயதிலேயே வாங்கிக் கொடுத்து பழக்கிவிட்டால், பின் அவர்கள் அதற்கு அடிமையாகி, பிற்காலத்தில் ஆரோக்கியமற்ற உடலைப் பெற்றிருப்பார்கள். ஆகவே அவர்களுக்கு ஆரோக்கிய உணவுகளை வீட்டிலேயே சமைத்துக் கொடுத்து, வீட்டு உணவின் சுவைக்கு பழக்கப்படுத்த வேண்டும்.



அளவான டிவி, அதிகமான விளையாட்டு
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.



நல்ல பழக்கம்
பொது இடங்களில் அதுவும் நடக்கும் பாதைகளில் குப்பையைப் போடும் பொழுது கண்டித்து, அதனை குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும். இதனால் சிறு வயதிலேயே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக மாற்றலாம். மேலும் இந்த செயலை மற்றவர்கள் பார்க்கும் பொழுது, பெற்றோரின் வளர்ப்பை அனைவரும் பாராட்டுவார்கள்.


உதவி
சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், நீங்கள் வீட்டு வேலை செய்யும் போது, அவர்களை உடன் அழைத்து சிறு சிறு வேலைகளை செய்யுமாறு சொல்லலாம்.



சரியான படுக்கை நேரம்
குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வார்கள்.


***
tamilbay
***



"வாழ்க வளமுடன்"
      

காய்கறிகளும் அதன் பயன்களும்


Baskar Jayaraman's photo.




இன்றைய நிலையில், 10 நபரில் 4பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.


 உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் இது போன்ற நோய்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்.


 அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:


1) வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இர...த்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.


2) வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.


3) வாழைக்காய்: இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.


4) பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.


5) சேப்பங்கிழங்கு: கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.


6) பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.


7) வெண்டைக்காய்: போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.


8) கோவைக்காய்: வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.


9) முருங்கைக் காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.


10) சுண்டைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.


11) சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.


12) குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்

.
13) சௌசௌ: கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.


14) அவரைக்காய்: புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.


15) காரட்: உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.


16) கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.


17) கத்தரி பிஞ்சு: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

ஸ்மார்ட்ஃபோன் யூஸ் செய்ய இதோ சில டிப்ஸ்

சிநேகிதி இதழ்'s photo.
சிநேகிதி இதழ்'s photo.









இது மழைக்காலம். மழையில் நாம் தொப்பலாக நனைவது ஒரு பக்கம் இருந்தாலும், நம்முடைய ஸ்மார்ட்ஃபோன் நனையக்கூடாது என்ற எண்ணம் பல பேருக்கு உண்டு. அப்படியே நனைந்தாலும், அதை ஈஸியாக உலரவைத்து மீண்டும் யூஸ் செய்ய இதோ சில டிப்ஸ்.



 1. முதலில் பேட்டரியை அகற்றுங்கள். உங்கள் ஃபோனில் இருக்கும் பாதி அத்தியாவசிய சர்க்யூட்டுகளுக்கு பவரை தருவது பேட்டரி தான். ஈரமாக இருக்கும் ஃபோனில் பேட்டரியை உடனே அகற்றுவதால், உள்ளிருக்கும் சில நுண்ணிய பாகங்கள் பாதுக்காக்கப்படும். உலர்ந்த துவாலை அல்லது மெல்லிய டிஷ்யூக...்களில் உங்கள் ஃபோனை பிரித்து வையுங்கள்.


 

 2. சிம் கார்ட், மெமரி கார்ட் போன்ற சின்ன சிப்களையும் ரிமூவ் செய்யுங்கள். ஈரம் அதிக நேரம் இருக்கும்பட்ச்ஹத்தில் இந்த கார்டுகளின் மெட்டல் பகுதியை பாதிக்க வாய்ப்புகள் அதிகம்.

 

 3. டிஷ்யூ அல்லது உலர்ந்த காட்டன் துணியை கொண்டு உங்கள் ஃபோனின் பாகங்களை லேசாக காயவயுங்கள்.

 

 4. ஒரு பவுலில் அரிசியை வைத்து, அதில் உங்களுடைய ஃபோன், பேட்டரி போன்ற பாகங்களை அழுந்த வையுங்கள். இது எல்லா ஈரத்தையும் சட்டென்று உறிஞ்சிவிடும்.


 

 5. குறைந்தது நான்கு அல்லது ஐந்து மணிநேரத்திற்கு பின், நன்றாக காய்ந்த பின் மட்டுமே, ஃபோனை மீண்டும் அசெம்பிள் செய்து சார்ஜரில் போடவும். உடனே, சார்ஜில் போடுவதால், ஃபோனிற்கு பெரிய பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

***
#‎குமுதம்சிநேகிதி‬ ‪#
***




"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "