...

"வாழ்க வளமுடன்"

26 ஆகஸ்ட், 2010

நோய் தீர்க்கும் பழச்சாறு மருந்து


உட்கார்ந்து ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்குக் கூட நேரமில்லாமல் மனிதன் ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. மாறிவரும் சுற்றுச்சூழலும் மனிதர்களிடம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அடர்த்தியான நலன்களை அள்ளித்தரும், புத்துணர்வு, சக்திïட்டும் பழ மற்றும் காய்கறிச் சாறுகள் நல்ல தேர்வு என்று சொல்லலாம்.

சத்துகள் செறிந்த பழ, காய்கறிச் சாறுகள், `வைட்டமின்- தாது உப்புகளின் காக்டெய்ல்' என்று அழைக்கப்படுகின்றன.

உடல் ஆரோக்கியத்துக்கு அதிகமாகப் பலனளிக்கும் அதேநேரம், உடம்பை எந்த வியாதியும் நெருங்காமல் தடுக்கும் பணியையும் பழச்சாறுகள் செய்கின்றன. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் பற்றாக்குறையை உடனே சரிசெய்ய பழச்சாறு பருகுவதே சிறந்த வழி.

மனித உடம்பில் பழ, காய்கறிச்சாறுகள் மூன்று முக்கியமான பணிகளை ஆற்றுகின்றன. அதாவது, சத்துகளை அளிப்பது, பாதுகாப்பாக இருப்பது, குணமாக்குவது.

பழங்களும் காய்கறிகளும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டைக் கொண்டுள்ளன. அது உயிர் வாழவும், செயல்களைச் செய்யவும் தேவையான சக்தியை அளிக்கிறது. அவற்றின் மூலம் கிடைக்கும் அதிகஅளவிலான வைட்டமின்கள் உடலின் வேதிமாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.


பழ, காய்கறிச் சாறுகளின் தாது உப்புகளும், நுண் மூலக்கூறுகளும் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டுக்கு முக்கியமானவை. அவை சில உடம்புத் திசுக்களின் கட்டுமானப் பொருட்களாகவும் உள்ளன.

பழங்கள், காய்கறிகளின் பாதுகாப்பு விளைவுகள் அதிகம். அவற்றில் பைட்டோகெமிக்கல்கள், கார்ட்டினாய்டுகள், பயோபிளேவனாய்டுகள், ஐகோபீன் போன்றவை அடங்கியுள்ளன. இவை, உடம்பை புற்றுநோய், இதயநோய்கள் போன்றவற்றிலிருந்து காக்கின்றன.


பழங்கள், காய்கறிகளில் `ஆன்டிஆக்சிடன்ட்களான' பீட்டாகரோட்டின், வைட்டமின் சி, ஈ போன்றவை உள்ளன. அவை செல் தடுப்புச் சுவர்கள் சேதமடைவதிலிருந்து தடுக்கின்றன.


பழைய, இறந்த செல்களை உடம்பிலிருந்து வெளியேற்றும் பணியையும் காய்கறி, பழச்சாறுகள் செய்கின்றன. உப்புப் படிவுகள், சிறுநீரகத்தில் கற்களைக் கரைக்கும் பணியையும் செய்கின்றன.

காய்கறி, பழச் சாறுகளின் மருத்துவக் குணங்களும் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்டு வந்துள்ளன.


உதாரணமாக பீட்ரூட், கேரட் சாறுகள் உடம்பின் அடிப்படைத் தற்காப்பு அமைப்பை வலுப்படுத்துகின்றன. பசலைக்கீரை, வெள்ளரிச் சாறுகள் நல்ல சருமம், முடி, நகங்களுக்கு உதவுகின்றன.

சில பாதிப்புகள், உடல்நலக்குறைவுகளுக்கு உதவும் பழ, காய்கறிச் சாறுகள் பற்றிய விவரம்:

அசிடிட்டி: திராட்சை, பப்பாளி, கொய்யா, கேரட், பசலைக்கீரை.

பரு: திராட்சை, பேரிக்காய், பிளம், தக்காளி, வெள்ளரி, கேரட், உருளைக் கிழங்கு, பசலைக்கீரை.

ஒவ்வாமைகள்: இலந்தை, திராட்சை, பீட்ரூட் மற்றும் பசலைக்கீரை.

ரத்தசோகை: இலந்தை, உலர்பழம், ஸ்ட்ராபெர்ரி, சிவப்பு திராட்சை, கேரட், பசலைக்கீரை.

மூட்டு பாதிப்பு: புளிப்பு செர்ரி, அன்னாசி, புளிப்பு ஆப்பிள், எலுமிச்சை, வெள்ளரி, பீட்ரூட், கேரட், லெட்டூஸ் மற்றும் பசலைக்கீரை.

ஆஸ்துமா: அனைத்து பழ மற்றும் காய்கறிச் சாறுகள்.

சிறுநீர்ப் பை குறைபாடுகள்: ஆப்பிள், இலந்தை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட்.

ஜலதோஷம்: எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி, கேரட், வெங்காயம் மற்றும் பசலைக்கீரை.

வாந்தி: ஆப்பிள், பேரி, திராட்சை, எலுமிச்சை, கேரட், பீட்ரூட், பசலைக்கீரை.

சர்க்கரை நோய்: புளிப்பு வகைப் பழங்கள், கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

வயிற்றுப்போக்கு: அனைத்து பழச் சாறுகளும்.

கண் குறைபாடுகள்: இலந்தை, தக்காளி, கேரட், பசலைக்கீரை.

தலைவலி: திராட்சை, எலுமிச்சை, கேரட், லெட்டூஸ், பசலைக்கீரை.

இதய நோய்கள்: சிவப்புத் திராட்சை, எலுமிச்சை, வெள்ளரி, கேரட், பீட்ரூட், பசலைக் கீரை.

உயர் ரத்தஅழுத்தம்: திராட்சை, ஆரஞ்சு, வெள்ளரி, கேரட், பீட்ரூட்.

`இன்புளூயன்சா' காய்ச்சல்: ஏப்ரிகாட், ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, கேரட், பசலைக் கீரை, பீட்ரூட், வெள்ளரி.

சிறுநீரகக் குறைபாடுகள்: ஆப்பிள், கொய்யா, அன்னாசி, வெள்ளரி, பீட்ரூட்.

கல்லீரல் பிரச்சினைகள்: எலுமிச்சை, பப்பாளி, திராட்சை, கேரட், தக்காளி, பீட்ரூட், வெள்ளரி.

மாதவிலக்குப் பிரச்சினைகள்: திராட்சை, உலர் பழங்கள், செர்ரி, பசலைக்கீரை, லெட்டூஸ், டர்னிப், பீட்ரூட்.

அதிக உடல் எடை: அனைத்து காய்கறி மற்றும் பழச் சாறுகள்.

வயிற்றுப் புண்: இலந்தை, திராட்சை, முட்டைக்கோஸ், கேரட்


***

நன்றி மாலை மலர்.

***


"வாழ்க வளமுடன்"

பற்கள் பராமரிப்பு

பல்லின் குறுக்கு வெட்டுத்தோற்றம்:


முதலில் பற்களின் பயன்பாடுகளை பார்ப்போம்.
பற்களின் அமைப்பு
1,2 வெட்டுப்பற்கள்.3- சிங்கப்பல்கள்


4- முதல் கடைவாய்ப்பல்


5- இரண்டாம் கடைவாய்ப்பல்.


20 - பால் பற்களும் 7 வயது முதல் 12 வயது வரை விழுந்து


அந்த இடத்தில் நிலையான பற்கள் முளைக்கின்றன.


நிலையான பற்கள்.

1,2 - வெட்டுப்பற்கள்.


3- சிங்கப்பல்


4- முதல் முன்கடைவாய்ப்பல்


5- இரண்டாம் முன் கடைவாய்ப்பல்.


6- முதல் கடைவாய் பல்.


7- இரண்டாம் கடைவாய் பல்.


8-மூன்றாம் கடைவாய் பல்.

பற்களை பார்த்தோம். இனி அதை பாதுகாப்பது பற்றி அறிந்துகொள்வோம்.

***


பற்களை பாதுகாக்கும் வழிகள்:


1.காலையில் ஒருமுறை இரவில் ஒருமுறை பல்துலக்குதல் வேண்டும்.2. நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.


3. உணவு உட்கொண்டு முடித்தவுடன் வாயை கொப்பளித்தல் வேண்டும்.


4. ஆரோக்கியமான பச்சை காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவு வகைகளை சாப்பிடுதல் வேண்டும்.


5. இனிப்பு - சாக்லேட் மற்றும் பல்லில் ஒட்டும் உணவுப் பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தல் வேண்டும்.


6. ப்ளுரைட் கலந்த தரமான பற்பசையை பயன்படுத்துதல் வேண்டும்.

7. ஆறு மாதத்திற்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பல்லை பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

பாராமரிப்பற்ற,நோய்கள் நிரம்பிய வாய் மற்றும் பற்கள்.


நன்கு பராமரிக்கப்பட்ட ஆரோக்கியமான வாய் மற்றும் பற்கள்

***


பற்களில் வரும் பொதுவான நோய்கள்.பற்களில் நோய் வரக்காரணங்கள் :


1. பற்களை முறையாக துலக்கி சுத்தமாக வைக்காமல் இருப்பது.


2. ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்கள். அதிகமான இனிப்பு உண்பது. சுத்தமில்லாத உணவு வகைகள்.3. தவறான வேலைகளுக்கு பற்களை பயன்படுத்துவது. (பல்லால் பாட்டில் திறப்பது உட்பட)


4. விபத்தால் பல்(முன் பற்கள்) உடைந்து போவது.


5. உடலில் வரும் மற்ற நோய்கள் மற்றும் நிலைகளினால் பல்லில் ஏற்படும் பாதிப்பு.


(உதாரணம்:- சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்குவரும் பல் பிரச்சனைகள்).


***


பல் மருத்துவரால் செய்யப்படும் முக்கிய சிகிச்சை:


பொதுவான ஆரம்ப நிலை சிகிச்சைகள்.


1. சொத்தை வருவதற்கு முன்பாகவே பற்களை சுத்தம் செய்து சொத்தை வராமல் அடைத்தல்.

2. பற்களை உறுதிப்படுத்த ப்ளுரைடு ஜெல்லை பற்களின் மேல் செலுத்துதல்.

3. ஆரம்ப நிலையில் உள்ள சொத்தையை சுத்தம் செய்து அடைத்தல்.

4. பற்களின் மேல் படிந்துள்ள காரைகளை சுத்தம் செய்தல் கரைகளை சுத்தம் செய்தல்.


***


நோய் முற்றிய நிலையில் செய்ய வேண்டிய சிகிச்சைகள்:


1. பல்லை எடுத்தல்.


2. செயற்கை பல்லை அந்த இடத்தில் பொறுத்துதல்.


3. வேர் சிகிச்சை.


4. வேர் அறுவை சிகிச்சை.


5. ஈறு அறுவை சிகிச்சை.


புகையிலை, குட்கா, பான் போன்றவற்றை பயன்படுததுவதால் " வாய்புற்றுநோய்" ஏற்படலாம்.

***

புகையிலையினால் வாயில் ஏற்படும் ஆரம்பநிலை மாற்றங்கள்.


1. வாயில் எரிச்சல்.

2. வாய் திறக்கும் அளவு குறைந்து போதல்.


3. வலி இல்லாத வெண்படலம்.


4. சிவந்த மேல் அன்னம்(புகைப்பதால் ஏற்படுவது)

***

பல் சொத்தை ஏற்படுவதற்கான அறிகுறிகள்:


1. பல் கறுப்பு நிறமாக மாறுவது.


2. பல்லில் குழி ஏற்பட்டு உணவு தங்குவது.


3. குளிர்ந்த மற்றும் சூடான உணவு உட்கொள்ளும் போது கூச்சம் மற்றும் வலி.4. பல்லில் வலி மற்றும் ஈறுகளில் வீக்கம்.


5. பல்லில் வலி வாயின் வெளிபுறத்திலும் வீக்கம் இருத்தல்.


***

குழந்தைகளின் பல் பராமரிப்பு:


1. பால் பற்களை அவை விழும் வரை பாதுகாப்பது முக்கியம்.


2.. நோய் ஏற்பட்டு பல்லை இழக்க நேரிட்டால் நிலையான பற்கள் சரியான இடத்தில் முளைப்பது
தடைபடலாம்.


3. இனிப்பு - மிட்டாய் - பிஸ்கேட் - இவற்றின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும்.


4. முதல் பல் முளைத்த நாள் முதல் பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.


5. விரலில் அணியக்கூடிய பிரஷ் கொண்டு குழந்தைகளின் பற்களை சுத்தம் செய்தல் வேண்டும்.


6. காய்கறி மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும்.


7. இரவில் படுக்கும் முன் குழந்தைக்கு புட்டிபால் (சர்க்கரை கலந்த பால்) கொடுக்க கூடாது. அப்படி
கொடுத்தால் எல்லா பால் பற்களுமே சொத்தையில் சிதையும் வாய்ப்பு உள்ளது.


8. உறக்கப் போகும் முன் குழந்தையின் பற்களை துலக்கிவிட வேண்டும்.


9. மூன்று மாதத்திற்கு ஒருமுறை குழந்தையை பல்டாக்டரிடம் காண்பித்து பல்லை பரிசோதனை
செய்து கொள்ளவேண்டும்.

***

சிறந்த முறையில் பற்களை துலக்குவது எப்படி?


வந்தபின்பு அவஸ்தைபடுவதைவிட வரும்முன் காப்பது சால சிறந்தது.


***


நன்றி வேலன்

***


http://amarkkalam.msnyou.com/

***

"வாழ்க வளமுடன்"

இயற்க்கையோடு கூடிய அழகு குறிப்பு.
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.ஆரஞ்சுப் பழத் தோலை காய வைத்து அதனுடன் பாசிப்பயிறையும் சேர்த்து அரைத்து தினமும் சொப்புக்குப் பதிலாக உபயோகித்து குளித்து வந்தால் சற்று
மாநிறமாக இருப்பவர்கள் கூட சிவப்பாக மாறுவார்கள்.சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிது நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் கலந்து உடலில் நன்கு தேய்த்தால் தோல் மிருதுவாகும்.
ஆரஞ்சுப் பழத் தோலை சுமார் ஒரு வாரம் வரை நீரில் ஊற வைத்து அந்த எசென்ஸை பிரிட்ஜில் வைத்து அதை தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை வாடையே வராது. தோலும் மென்மையாக மாறிவிடும்.
பாதாம் பவுடர், ஆலிவ் எண்ணெய், வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த பாலில் முகத்தை கழுவி தண்ணீரில் கழுவ வேண்டும். 10 நாட்கள் செய்தால் முகம் தனி அழகு பெறும்.
சிறிது வெண்ணெய், பாதாம் பருப்பு ஒன்று, சிறிது எலுமிச்சை சாறு காலந்து நன்கு அரைக்கவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 20 நிமிடம் ஊற விட வேண்டும். பின்னர் பஞ்சை பாலில் நனைத்து அதை முகத்தைச் சுற்றி தடவி, பின்னர் பன்னீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராகும்.

வெள்ளரிக்காயை இடித்து சாறு எடுத்து சிறிது பாலுடன் கலந்து பஞ்சால் நனைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் போய் முகம் ஒளி பெறும்.கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.
முகம் கழுவும் கிரீமை (பேஸ் வாஸ் கிரீம்-Face wash Cream) முகத்தில் வரும் அளவிற்கு தேய்த்து பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள வெண் புள்ளிகள் (வொயிட் ஹெட்ஸ்), கரும் புள்ளிகள் (பிளாக் ஹெட்ஸ்) எல்லாம்
நீங்கி விடும். அதோடு முகத்தில் இருக்கும் நுண் துவாரங்களில்
அடைத்திருக்கிற அழுக்கும் வெளியேறி முகம் புத்தொளி பெறும்.

***

தலைக்கு ஹென்னா :


நெல்லிக்காய் பொடி, மருதாணி, டீ டிக்காஷன் அனைத்தையும் தண்ணீர் சேர்த்து கலந்து இரும்பு கடாயில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும்.

மறுநாள் இந்த கலவையோடு முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். தயிர் கலப்பதினால் பொடுகு தொல்லை இல்லாமல் இருக்கும். ஹென்னா போடும் நாள்
மட்டும் முடிக்கு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் அலசினால் தான் அதன் சாரம் தலையில் தங்கும்.


***

இயற்கையான ஷாம்பு :எத்தனையோ ஷாம்பு பயன்படுத்தி பார்த்தாச்சு. ஒன்றும் பயன்படவில்லை என்று புலம்புபவர்களா நீங்கள்? அப்படியானால் இந்த இயற்கையான ஷாம்பு முறை உங்களுக்குத்தான்.

வெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங்கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றை காய வைத்து, ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள்.

அழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்.***

நன்றி அன்புடன் தளம்.
நன்றி வெதுபுனியா தளம்.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "