...

"வாழ்க வளமுடன்"

13 ஜூலை, 2011

உடல் எடையை குறைக்கணும்னு விரதம் இருக்கீங்களா? இதப்படிங்க முதல்ல....கடவுளுக்காக விரதம் இருக்கிறவங்களும் உடல் எடையை குறைக்கணும்னு விரதம் இருக்கிறவங்களும் பட்டினி கிடந்தாலோ, குறைவா சாப்பிட்டாலோ அது சாத்தியமாகும்னு நினைக்கிறார்களே தவிர, கலோரி குறைவான உணவை சாப்பிடணும்னு தெரிஞ்சுக்கிறதில்லை.


சாப்பாடு மூலமா பாசத்தைக் காட்ட நினைக்கிற மக்கள் இந்தியாவில் அதிகம். கல்யாணம், காது குத்தல்னு எந்த விசேஷமானாலும் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். மகிழ்ச்சியை உணவு மூலம் காட்டற மாதிரியே சோகத்தையும் காட்டறோம். பரீட்சைல ஃபெயிலாயிட்டாலோ, அம்மா - அப்பா திட்டினாலோ சாப்பிடாம இருக்கிறோம்.


விரதங்கிறது வெறுமனே சாப்பாட்டைத் தவிர்க்கிற விஷயமில்லை. வயிரோடு சேர்த்து மன உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்கிறது தான் முறையான விரதம். ஒரு பக்கம் விரதம்னு சொல்லிக்கிட்டு வெளி வேலைகளை வச்சுக்கிட்டு, அலையறது.
டி.வி. பார்க்கிறது மாதிரி வேலைகளைச் செய்யறது ரொம்ப தப்பு. அது எதிர்மறையான பலன்களைத்தான் தரும் என்கிற டாக்டர் கவுசல்யா, விரதமிருக்க முடிவு செய்கிறவர்கள், முதலில் மருத்துவரைக் கலந்தாலோசித்து, உடல் நலத்தைப் பரிசோதித்த பிறகும், எப்படி விரதமிருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டும் ஆரம்பிப்பதே சரியானது என்கிறார்.


வாரத்துல 6 நாள் கண்டதையும் சாப்பிடறோம். ஒரு நாள் சாப்பிடாம, ஒட்டு மொத்த இயக்கத்துக்கும் ஓய்வு கொடுக்கிறதால விரதங்கிறது ரொம்ப நல்ல விஷயம். உடம்புல உள்ள கழிவுகள், நச்சுப் பொருள்கள் வெளியேற இது உதவும்.
ஹெச்.டி.எல்.னு நல்ல கொலஸ்ட்ராலோட உற்பத்தி அதிகமாகும். ஆனாலும் யார் விரதம் இருக்கலாம், யாருக்கு அது கூடாதுனு சில வரையறைகள் இருக்கு. அதன்படி கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கிறவங்க, ரத்த சோகையாலோ, ரத்த அழுத்தத்தாலயோ, நீரிழிவாலயோ பாதிக்கப்பட்டவங்களுக்கு விரதம் கூடவே கூடாது" என்கிறார் ஊட்டச்சத்து மற்றும் யோகா நிபுணரான சந்திரா."விரதம்னா காலைலேர்ந்து ராத்திரி வரைக்கும் ஒண்ணுமே சாப்பிடாம இருக்கிறதுனு அர்த்தமில்லை. ராத்திரி முழுக்க எதையுமே சாப்பிடாம இருக்கிறதால, காலைல எனர்ஜி அளவு கம்மியா இருக்கும்.காலைலயே எதுவும் சாப்பிடாம விரதத்தைத் தொடங்கறப்ப, அந்த எனர்ஜி இன்னும் குறையும். ஏற்கெனவே வேற ஏதாவது சத்துக்குறைபாடால பாதிக்கப்பட்டவங்களுக்கு இதனால இன்னும் பிரச்சினை அதிகமாகும். விரதமிருக்கிறதுனு முடிவு பண்றவங்க, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.ராத்திரி முழுக்க சாப்பிடாம இருந்து, மறுநாள் காலைல அதைத் தவிர்க்கிறதைத் தான் (பிரேக்கிங் தி ஃபாஸ்ட்) பிரேக்ஃபாஸ்ட்னு சொல்றோம். ஆனா காலைலயும், மதியமும் சாப்பிடாம இருக்கிறப்ப ராத்திரி வழக்கத்தைவிட அதிகம் சாப்பிடுவோம், நம்மையும் அறியாமலேயே.எடையைக் குறைக்கணும்னு விரதம் இருக்கிறவங்களுக்கு இது நேரெதிரா வேலை செய்து, உடல் எடையைக் கூட்டும். அதனால் உயரத்துக்கேத்த எடை, நல்ல ஆரோக்கியம், சரியான சமவிகித சாப்பாடு எடுத்துக்கிற, தினசரி உடற்பயிற்சியோ, யோகாவோ செய்யறவங்க மட்டுந்தான் தகுதியானவங்க.விரதத்தை முடிக்கிற போது, நாள் முழுக்க பட்டினி, இருந்ததுக்கெல்லாம் சேர்த்து, விருந்து மாதிரி ஒரு பிடி பிடிக்கிறதும் ரொம்ப தப்பு. முதல்ல கொஞ்சமா ஏதாவது உணவு, கூடவே கொஞ்சம் ஜூஸ் எடுத்துக்கிட்டு, அப்புறமா வழக்கம் போலச் சாப்பிடலாம்" என்கிறார் அவர்.தினசரி பயன்படுத்துகிற டூ வீலரோ, காரோ... மக்கர் பண்ணாமல் தொடர்ந்து இயங்க, குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை சர்வீஸ் செய்கிறோம். உடலும் அதன் இயக்கமும் கூட அப்படித்தான்.இயக்கத்தை சுத்தம் செய்து, அதற்கு ஓய்வும் கொடுக்கிற அற்புதமான விஷயமே விரதம். மேற்சொன்ன தகவல்களை நினைவில் கொண்டு அதைத் தொடங்குவதும், தொடர்வதும் பாதுகாப்பானது!

டாக்டர். கவுசல்யா, ஊட்டச்சத்து மற்றும் யோகா நிபுணர் சந்திரா.***
thanks டாக்டர்ஸ்
***

"வாழ்க வளமுடன்"

இயற்க்கை அழகு குறிப்புகள்அழகு குறிப்புகள் எவ்வளவோ சொன்னாலும் கேட்டுக் கொண்டேயிருப்பது நம் பெண்களின் குணம்.
ஆனால் செயல்முறைப் படுத்துவது ஒரு சிலரே. அதற்கு பல காரணங்கள் உண்டு.குடும்பம், சூழ்நிலை, பொருளாதாரம், நேரமின்மை.... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எளிய முறையில், சிக்கனமாக(நேரத்திலும்தான்) செய்ய கூடிய டிப்ஸ்தான் கீழே கொடுக்கப்பட்டவை. செய்து பாருங்கள்.. மற்றவர் உங்களைப் பார்க்கச் செய்யுங்கள்!* தினந்தோறும் குறைந்தது 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை தண்­ணீர் பருகுங்கள்.


* பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.* பன்னீரும், சந்தனத் தூளும் கலந்த கலவையில் 5 துளி பால் சேர்த்து முகத்திலும் உடம்பிலும் தேய்த்துகொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்க, முகமும் தேகமும் பளபளப்பாகும்.* எலுமிச்சை சாறுடன் சிறிது சூடான தேன் கலந்து முகத்தில் தடவி அது உலர்ந்தபின் முகம் கழுவுங்கள். முகம் வனப்பு பெறும்.


* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.* மஞ்சள்தூளும், சந்தனத்தூளும் ஆலிவ் எண்ணையில் கலந்து உடம்பில் தேய்த்து 10 நிமிடம் கழித்து குளிக்க, முகமும், தேகமும் மினுமினுக்கும்.* உங்கள் சருமம் உலராமல் பளபளப்புடன் திகழ, தினமும் சிறிதளவு பசும்பாலை உடல் முழுக்க தேய்த்து விட்டு பின்பு குளியுங்கள்.


* பணிபுரியும் இடம் குளிர்சாதன வசதியுடன் இருந்தால் சருமத்திற்கு நல்லது.


* வெந்நீரைவிட சாதாரண தண்ணீ­ரில் குளிப்பது நல்லது. குளித்தபின் துணியால் அழுத்தித் துடைக்காமல் மென்மையாக ஒற்றி துடைப்பது சருமத்திற்கு பாதுபாப்பு.


* தோல் பளபளப்பாக இருக்க வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ளுங்கள்.


* கொதிக்க வைத்த கேரட் சாறினை முகத்திலும், உடம்பிலும் தேய்த்துக் குளிக்க, முகமும், தேகமும் பளபளப்பாகும்.


* பாலில் எலுமிச்சை சாறு கலந்து உடம்பில் தேய்த்துக் குளிக்க, முகமும் தேகமும் பளிச்சிடும்.


* மஞ்சள்தூள் மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பொலிவுடன் பிரகாசிக்கும்.


* பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்த கலவையை உடம்பில் தேய்த்துக் குளிக்க, உடல் பளபளப்பாகும்.


* ரோஜா இதழ்களை கூழாக அரைத்து அத்துடன் பாலாடை சேர்த்து அந்தக் கலவையை கண், இமை, உதடு தவிர்த்து மற்ற இடங்களில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளிக்க உடம்பு புதுப்பொலிவு பெறும்.


* தயிரும், கோதுமை மாவும் சேர்ந்த கலவையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து குளிக்க தேகம் புத்துணர்ச்சி பெறும்.


* வெயிலில் நடப்பது மேனி அழகைக் கெடுக்கும். இதைத் தடுக்க வெள்ளரிச்சாறும், தக்காளிச்சாறும் சமஅளவில் கலந்து உடம்பில் தேய்த்துக் குளித்தால் தோல் நிறம் மங்காமல் மின்னிப் பிரகாசிக்கும்.


* கடுகு எண்ணையை உடம்பில் தேய்த்து 5 நிமிடம் கழித்து பச்சைப் பயிறு மாவு உடம்பில் தேய்த்துக் குளித்தால் உடல் பளபளப்பாகும்.


* புளோரின் சத்து நிறைந்த ஆட்டுப்பால், பாலாடைக்கட்டி, கேரட், வெள்ளரி, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளைச் சாப்பிடுவதால் சருமம் வனப்புடன் திகழும்.


* சோடியம் சத்துக் குறைந்தால் தோலில் சுருக்கம் ஏற்படும். வெயில்காலத்தில் சோடியம் சத்து மிகுந்த வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கம் விழாமல் பாதுகாக்கலாம். இது உடல் சூட்டையும் தணித்து குளுமையும் தரும்.


* சிலிகான் சத்து குறையும்போது உடலில் வேனற்கட்டி, வெடிப்பு, சிரங்கு போன்ற பாதிப்புகள் தோன்றும். இதைத் தவிர்க்க முளை கட்டிய தானியங்கள், தக்காளி, பார்லி மற்றும் ஸ்ட்ராபெர்ரி, அத்திப்பழ வகைகளைச் சாப்பிட்டுவர வேண்டும்.


* பச்சையம் சத்து நிறைந்த கோதுமைக் கஞ்சி, பச்சைக்கீரை, காய்கறி வகைகளைச் சாப்பிட்டு வர, தோல் வெடிப்புகள் ஏற்படாது. சருமம் நிறம் மங்காமல் செழுமையுடன் இருக்கும்.


***


கரு‌ப்பு‌ள்‌ளிக‌ள் மறைய...

ஒரு எலுமிச்சசம் பழம் வாங்கி சாறு பிழியுங்கள்.
அச்சாற்றினை ஒரு மெல்லிய துணியினாலோ, மிருதுவான பஞ்சினாலோ தொட்டுப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 5-6 நிமிடங்கள் அதனை அப்படியே காய விடுங்கள். அதன்பிறகு முகத்தை நன்றாகக் கழுவி விடுங்கள் முக‌‌‌த்‌தி‌ல் உ‌ள்ள கரு‌ம்பு‌ள்‌ளிக‌ள் ‌நீங்கும். தொடர்ந்து சில நாட்கள் இதைக் கடைபிடிக்க வேண்டும்.

முகப்பரு அகல...

புனுகு வாங்கி வந்து முகப்பரு எங்கெங்கு உள்ளதோ அங்கங்கே தடவி விட்டு சில மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பரு மறைந்து போகும்.


பப்பாளி மரத்திலிருந்து எதை உடைத்தாலும் பால் வரும். அதைச் சிறிதளவு சேகரித்து அத்துடன் கொஞ்சம் தண்ணீரையும் சேர்க்கவும். இந்தக் கலவையில் சிறிதளவு சீரகத்தை ஊறப் போடவும். இதை கால் மணி நேரம் வைத்திருக்கவும். பின் முகப்பரு எங்கே உள்ளதோ அங்கே இக்கலவையை நன்றாகத் தடவி விடவும்.


முகப்பருக்கள் மறைந்து, இருந்த சுவடு தெரியாமல் போய்விடும்.

அம்மைத் தழும்புகள் மறைய...


ஒரு எலுமிச்சம் பழத்தை குறுக்காக வெட்டவும். அதனை அம்மைத் தழும்புகள் உள்ள இடத்தில் பரவலாக அழுத்தமாகத் தேய்த்து விடவும். இப்படித் தினமும் தொடர்ந்து செய்துகொண்டே வந்தால் தழும்புகள் மறைந்துவிடும்.அம்மை வடுக்க‌ள் மறைய...

சிறிதளவு கசகசா, சின்னதாக மஞ்சள் துண்டு ஒன்று, கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து இம்மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.


இந்தக் கலவையை முகத்தில் எங்கே அம்மை வடுக்கள் காணப்படுகின்றனவோ அங்கே நன்றாகத் தடவுங்கள். 15-20 நிமிடங்கள் உலற விடுங்கள்.


பின்னர் பயத்த மாவினால் முகத்தைக் கழுவி விடுங்கள். இப்படியே 3 நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள். அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினு மினுக்கும்.***
thanks blogs
***

"வாழ்க வளமுடன்"

லிப்ஸ் ( உதடுக்கு ) டிப்ஸ் ?
மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில்
கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். இவை அன்பை முத்தமாக வெளிப்படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்.வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.


சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும்.
வைட்டமின் சத்துள்ள உணவுகள்

உடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் ற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.


கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன் மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.உதடு வெடிப்புகள் குணமடைய

அதிக குளிரோ, அதிகவெப்பமோ எதுவானாலும் ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளும் ஏற்படும். அவர்கள் பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.


வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.லிப்ஸ்டிக் போடும் கலை

கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப்ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என்பது தனி கலை.


சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமாகவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.


கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட் டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.


மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.


வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப் லைனர் உபயோகிக்கவும்

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.
லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.


உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும்.


பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.


உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.


இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.***

மேலும் சில அழகு குறிப்புகள் :பெண்கள் தங்களது அழகை பராமரிக்க எளிதான வழிமுறைகள் பல உள்ளன. அவற்றில் சில குறிப்புகளை உங்களுக்காக.


வெள்ளரித் துண்டுகளை தயிரில் ஊற வைத்து அதனை முகத்தின் மீது ஒட்டி 15 அல்லது 20 நிமிடங்கள் வைத்திருந்தால் தோல் குளிர்ச்சி அடையும்.முகத்தில் அதிகமாக படர்ந்திருக்கும் கரும்புள்ளிகளை நீக்க நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும் கற்பூரத் தைலத்தை தடவி ஊற வைத்து முகத்தைக் கழுவி வந்தால் நல்ல பலன் கிட்டும்.


கோடை காலத்தில் வெயிலில் சுற்றுவதால் கழுத்து, கால் பகுதிகள் கருப்பாகும். இதனைத் தவிர்க்க பீர்க்கங்காய் கூட்டை வாங்கி குளிக்கும்போது கருப்பான இடங்களில் மட்டும் பீர்க்கங்காய் கூட்டினை வைத்து சோப்பு போட்டு தேய்த்து குளிக்கலாம்.


தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்பட்டை நிறத்தில் முடி வளர்கிறது. மேலும் முடி உதிர்வதற்கும் காரணமாகிறது.


தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் அடையும். முகம் வட்ட நிலவாக மின்னும்.***
thanks google
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "