...

"வாழ்க வளமுடன்"

24 ஆகஸ்ட், 2010

காயும் கனியும் (100 கிராம் அளவு)


வாழைத்தண்டு:
கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் பி, சி, ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும்.

வாழைப்பூ :
கால்ஷியம் 32 மி.கிராம், பாஸ்பரஸ் 42 மி.கி., புரதச்சத்து 1.7 மி.கி., நார்ச்சத்து 1.3 கிராம், இரும்புச் சத்து, வைட்டமின்கள் பி, சி உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

வாழைக்காய் :
இரும்புச் சத்து 6.3 மி.கி. ·போலிக் அமிலம் 16.4 மைக்ரோ கிராம், வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. ·போலிக் அமிலப் பற்றாக்குறையால் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ரத்த சோகை ஏற்படும்.

பீட்ரூட் :
துத்தநாகம் 910 மி.கி., கால்ஷியம், சோடியம், பொட்டாஷியம் ஆகிய தாதுப் பொருட்கள் உள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும். துத்தநாகப் பற்றாக்குறையினால் உடல்வளர்ச்சி தடைபடும்.

உருளைக்கிழங்கு :
இதில் மாவுச் சத்து 22.6 கிராம் உள்ளது. வைட்டமின்கள் ஏ.சி. ஆகியவற்றுடன் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்கள் சிறிதளவு உள்ளன.

பாகற்காய்:
வைட்டமின் சி 88 மி.கி., வைட்டமின் ஏ 126 மைக்ரோ கிராம், இரும்புச்சத்து 1.8 மி.கி. பாஸ்பரஸ், கால்ஷியம் ஆகியவற்றுடன் வைட்டமின் பி, சிறிதளவு உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைப் போக்கும். பசியைத் தூண்டும். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும்.

சேப்பங்கிழங்கு:
கால்சியம் 40 மி.கிராம், பாஸ்பரஸ் 140 மி.கி., இரும்புச் சத்து 0.42 மி.கிராம் உள்ளன. எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும்.

வெண்டைக்காய்:
·போலிக் அமிலம் 105 மைக்ரோ கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் வைட்டமின் பி, சி சிறிதளவு உள்ளன. மூளை வளர்ச்சிக்கு உதவும், பசியைத் தூண்டும், தசை, ரத்த விருத்திக்கு உதவும்.

கேரட் :
வைட்டமின் ஏ அதிக அளவு (1890 மைக்ரோ கிராம்) உள்ளது. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக்கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் ஏற்படும்.

கத்திரிக்காய்:
பாஸ்பரஸ் 47 மி.கிராம், ·போலிக் அமிலம் 34 மைக்ரோ கிராம், வைட்டமின் பி, சி, சிறிதளவு உள்ளன. பசியை உண்டாக்கும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

பீன்ஸ் :
புரதசத்து 3.2 மி.கிராம், கால்ஷியம் 130 மி.கி., பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி உள்ளன. நார்ச்சத்து 3.2 கிராம் உள்ளது.
புரதச்சத்து மற்றும் கால்ஷியம் குறைவினால் உடல் வளர்ச்சியும், எலும்பு வளர்ச்சியும் தடைப்படும்.

புடலங்காய் :
வைட்டமின் ஏ.பி. இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம் ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. மக்னீஷியம் 53 மி.கிராம் உள்ளது. எலும்புக்கு உறுதி தரும்.

அவரைக்காய் :
புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளன. அவரைக்காய் கொட்டையில் உள்ள சத்துக்கள் உடல் வளர்ச்சிக்கு உதவும். குறிப்பாக கொட்டையில் பாஸ்பரஸ், இரும்புச் சத்து அதிகம். புரதப் பற்றாக்குறையையும் போக்கும் மலச் சிக்கல் நீங்கும்.

கொத்தவரங்காய்:
இரும்புச் சத்து 4.5 மி.கிராம், கால்ஷியம் 130 மி.கி. பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ,பி, சி யும் உள்ளன. நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

கோவைக்காய் :
வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், ·போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.

செளசெள :
கால்ஷியம், பாஸ்பரஸ் வைட்டமின் பி, சி, உள்ளன. கால்ஷியம் குறைந்தால் எலும்பு மற்றும் பற்களின் உறுதி குறைந்துவிடும்.

முள்ளங்கி :
பொட்டாஷியம் 138 மி.கிராம் உள்ளது. வைட்டமின் சி 15 மி.கிராம், கால்ஷியம், இரும்பு, வைட்டமின் பி சிறிதளவு உள்ளன. பொட்டாஷியக் குறைவினால் உடல் சோர்வு ஏற்படும்.

தக்காளி :
வைட்டமின் சி 27 மி.கிராம், வைட்டமின் ஏ, பி மற்றும் இரும்பு, கால்ஷியம் ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. அமினோ அமிலங்கள் உள்ளன. இவை உடலுக்கு உறுதி அளிக்கும். ரத்த விருத்திக்கும் உதவும்.

பூசணிக்காய் :
வைட்டமின் ஏ 15 மைக்ரோ கிராம், வைட்டமின் பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. உடலின் நீர்ச் சத்தை அதிகா¢க்க உதவும். குளிர்ச்சி தரும். ரத்தத்தை விருத்தி செய்யும்.

கருணைக்கிழங்கு :
கால்ஷியம் 50 மி.கி., பாஸ்பரஸ் 34 மி.கி., இரும்புச் சத்து 6 மி.கிராம் மற்றும் வைட்டமின் பி உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும் எலும்பு வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது.

வெள்ளா¢க்காய் :
·போலிக் அமிலம் 14.7 மைக்ரோ கிராம், வைட்டமின்கள் பி, சி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் உள்ளன. வெள்ளா¢ப் பிஞ்சு தாகத்தைத் தணிக்கும், குளிர்ச்சியைத் தரும். உணவு எளிதில் ஜீரணிக்க உதவும்.

முருங்கைக்காய் :
வைட்டமின் சி 120 மி.கிராம், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன. பெண்களின் உதிரப்போக்கை கட்டுப்படுத்தும். விந்து இழத்தல் குறையைக் போக்கும்.

குடைமிளகாய் :
வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.

சுரைக்காய் :
பொட்டாஷியம்
8.7 மி.கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் பி ஆகியவை உள்ளன. பொட்டாஷியம் குறைவினால் உடல் சோர்வு ஏற்படும்.

சுண்டைக்காய் :
புரதம் 8.3 கிராம், இரும்பு 22.2 மி.கி. கால்ஷியம் 390 மி.கி. பாஸ்பரஸ் 180 மி.கி., வைட்டமின் ஏ 450 மைக்ரோ கிராம் உள்ளன. இவை உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் உறுதிபடவும், ரத்த சோகையைப் போக்கவும் உதவும்.

நூல்கோல் :
இதில் மாவுப் பொருள் 3.8 கிராம் உள்ளது. நார்ப்பொருள் 1.5 கிராம் உள்ளது. வைட்டமின் சி 85 மி.கி. வைட்டமின் பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்க நார்ச் சத்து உதவும்.

வெங்காயம் :
வெங்காயம் (பொ¢யது) இரும்புச் சத்து 0.6மி.கி, பாஸ்பரஸ் 50 மி.கி. கால்ஷியம் 46.9 மி.கி. உள்ளன. வெங்காயம் (சிறியது) இரும்புச் சத்து 1.2 மி.கி. பாஸ்பரஸ் 60 மி.கி. கால்ஷியம் 40 மி.கி. உள்ளன. இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவும்.


***

நன்றி மார்டன் தமிழ்வெல்டு.

***

"வாழ்க வளமுடன்"

வாழ வைக்கும் வைட்டமின்கள் - 2
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்ட மின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம்:

வைட்டமின் `ஏ' :
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.


வைட்டமின் `பி' :
இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.


வைட்டமின் `சி' :
இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.


வைட்டமின் `டி' :
வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலு விழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.


வைட்டமின் `ஈ' :
இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்தன்மையையும் உண்டாக்கும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

***
நன்றி மாலை மலர்.
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு வைட்டமின்கள்,,,
குழந்தைகள் நோய்நொடியின்றி நலமுடன் வளர உணவில் காணப்படும் அல்லது சேர்க்கப்படும் வைட்டமின்கள் பெரிதும் உதவுகின்றன. வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துகளும் தேவைக்கேற்ப உணவில் அடங்கியிறந்தால் அதை நாம் சமநிலை உணவு என அழைக்கின்றோம். நாம் அளிக்கும் உணவில் எல்லா வைட்டமின்களையுமே சேர்க்க வேண்டியுள்ளது. எந்த ஒரு வைட்டமினாவது குறைந்தால் குழந்தையின் வளர்ச்சி அதனால் தடைப்படுகின்றது.

வைட்டமின்களை இருவகைகளாகப் பிரிக்கலாம். 1, நீரில் கரைபவை உதாரணம் பி, சி, பி. 2, எண்ணெயில் கரைபவை, உதாரணம் ஏ. டி. இ. கே. இவற்றில் எண்ணெயில் கரைவது தண்ணீரில் களரவது இல்லை. நீரில் களரவது எண்ணெயில் களரவது இல்லை.

இனி குழந்தைகளுக்கு தேவைப்படும் சில வைட்டமின்கள் பற்றி பார்க்கலாம்.


வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைகளுக்கு மாலைக்கண், ஒளியிழந்த கண், கண்ணில் சதை வளருதல், கருவிழி பாதிப்பு மற்றும் உடலில் தோல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எல்லா வகை கீரை வகைகள் முருங்கைக்காய், காரட், பச்சை மிளகாய், பப்பாளி, செவ்வாழை, ஆரஞ்சு, பலாப்பழம், சப்போட்டா பழம், மாம்பழம், தக்காளிப் பழம், முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், நண்டு, மீன், தாய்ப்பால், வெண்ணெய், நெய், சிவப்பு பனை எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ உள்ளது.குழந்தை வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ மிகவும் தேவையானதாகும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் வைட்டமின் ஏ போதுமான அளவிற்கு கிடைக்கும். முதல் 3 திங்களுக்குப் பின் தாய்ப்பால் கொடுப்பது தடைப்பட்டால் வைட்டமின் ஏ கொண்ட சொட்டு மருந்துகளில் ஏதாவதொன்றை பசும்பாலுடன் கலந்து கொடுக்கலாம்.வைட்டமின் பி, வைட்டமின் பியில் சில பிரிவுகள் உண்டு. அவை அனைத்தும் ஒருந்கிணைந்தே உணவுப் பொருட்களில் காணப்படுகின்றன. தானிய வகைகள், ஈஸ்ட் பால் முட்டை பன்று இறைச்சி, மீன் வேர்க்கடலை, தீட்டப்படாத அரிசி போன்றவற்றில் இது அதிகம் உள்ளது. இனி வைட்டமின் பியின் வகைகள் பற்றியும் அவை குறைந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பார்க்கலாம்.

வைட்டநின் பி1, இதற்கு "தையமின்" என்று பெயர். இதன் மூலம் உண்ணும் உணவிலுள்ள மாவுச் சத்து செரிக்கப்பட்டு அது குளுக்கோளாசாக மாற்றப்பட்டு, உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் நரம்புகளுக்கும் அளிக்கப்படுகின்றது. இந்த வைட்டமினை உட்கொண்ட ஒரு சில நிமிடங்களிலேயே இதனை மூளை ஈரல் இதயம் போன்ற பகுதிகளில் காணமுடிகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வைட்டமின் பி 1 குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் குறை நோய்க்கு பெரிபெரி என்று பெயர். குழந்தைக்கு மூன்று திங்கள் காலத்திலிருந்து தாய்ப்பாலுடன் அல்லது மற்ற பாலுடன் தானிய உணவும் சேர்த்தளிக்க விட்டால் இக்குறை ஏற்படுகின்றது. இந்நோய் கண்டால் குழந்தையின் உடல் முழுதும் வீக்கம் ஏற்படும். தசைகள் வளர்ச்சியின்றி வலுவிழந்து காணப்படும். உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டு அவற்றின் வலுவின்மையால் காசநோய் போன்ற பல நோய்கள் வரக் கூடும்.

வைட்டமின் பி 2. இதற்கு "ரிபாப்ளேவின்" என்று பெயர். இந்த வைட்டமின் குறைந்தால் குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது. குழந்தையின் வாயின் இரு ஓரங்களிலும் வெடிப்புகளுடன் கூடிய காயங்கள் உருவாகும். நாக்கு சிவந்து வழுவழுப்புடன் வெடிப்புக்கள் தோன்றும். எனவே உணவுகளை உட்கொள்ள குழந்தை சிரமப்படும். நாக்கில் மட்டுமல்லாது இந்த வைட்டமின் குறைவால் குடலிலும் இவ்வாறான காயம் ஏற்பட்டு உணவு உட்கொள்ள இயலாமையும் வயிற்றுப் போக்கும் ஏற்படக் கூடும்.

வைட்டபின் பி 2 இதில் ரிபாப்பிளேவினுடன் நியாசின் என்ற மற்றொரு சத்தும் சேர்ந்து காணப்படுகின்றது. இதை நிக்கோடினிக் அமிலம் என்றும் எழைப்பதுண்டு. இந்த வைட்டமின் குறைவால் பெலாக்ரா என்ற நோய் உண்டாகின்றது. அதனால் சூரிய ஒளிபடுகின்ற இடங்களில் எல்லாம் தோல் கருமையுற்று உலர்ந்து பளபளப்பு மங்கிவிடும். குழந்தையின் நாக்கு தடித்து வீங்கி சிவந்து காணப்படும்.


***

நன்றி http://www.darulsafa.com

***

"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள்ஊட்டச்சத்துக்களில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன. ஒன்று, கொழுப்புச் சத்துக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்கள் அடங்கிய பெரிய பிரிவாகும். இரண்டாவது வைட்டமின்கள், கனிச்சத்துகள் அடங்கிய சிறிய பிரிவாகும்.

நம் உடலின் செல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு வைட்டமின்கள் மிக முக்கியமானதாகும். செல்கள் வளர்ச்சியிலும், பழுதை சரி செய்வதிலும் வைட்டமின்களுக்கு பங்கு உண்டு.

ஒரு குறிப்பிட்ட வைட்டமினை தினமும் நமக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம் ஆரோக்கியம் சீர்குலைகிறது. உடலின் வளர்ச்சிக்கு மற்றும் மாற்றங்களுக்கு வைட்டமின்கள் கட்டாயத் தேவையாகும்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாத வைட்டமின்கள் இருவகைப்படும்.


ஆவை:

கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் - 13,

நீரில் கரையும் வைட்டமின்கள் - 27.

வைட்டமின் -‘ஏ’, ‘டி’, ‘இ’ மற்றும் வைட்டமின் `கே' ஆகியவை நம் உடலின் ஜீரண சக்திக்கு தேவையான கொழுப்புச் சத்துக்களை கொழுப்பில் கரையும் வைட்டமின்களாக மாற்றுகிறது.

பி-காம்ப்ளெக்ஸும், வைட்டமின் - `சி' யும் நீரில் கரையும் வைட்டமின்களாகும்.

இந்த வைட்டமின் தன்னுடைய தூய்மையான வடிவத்தில் வெளிர் மஞ்சள் நிற கலவையாக இருக்கும்.

நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெரும் பகுதி `கெரோடின்' என்ற வைட்டமின் `ஏ' ஊட்டச்சத்துக்களை வைட்மின் `ஏ' வாக மாற்றும் சக்தி கொண்டது நம் உடல். இதனால் ‘கெரோடின்’ என்பது `ஞசடி எவையஅin ஹ' என்று அழைக்கப்படுகிறது.

நம் உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியமான ஒரு உறுப்பாக திகழும் இந்த வைட்டமின்கள் எதற்காக இவ்வளவு முக்கியமானது என்பதை கீழே காணலாம்: -

எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம்.

உடலின் சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இரவு நேரங்களிலும், மங்கலான வெளிச்சத்திலும், சாதாரணமாக பார்க்க வைட்டமின் உதவுகிறது.

என்று மேலும் பல குணங்களைக் கொண்டது இந்த வைட்டமின்கள்.

வைட்டமினின் வகைகள் மற்றும் அவற்றின் ஆற்றல்கள்:-

முட்டை, பால் - புரதச் சத்துக்கள், பச்சைக் காய்கறிகள், மஞ்சள் - ஆரஞ்சு நிறப்பழங்கள், மாம்பழம், கேரட் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' சத்து அதிகம் கிடைக்கும்.

`தியாமைன்' என்று அழைக்கப்படும் வைட்டமின்களின் மிகப்பெரும் பிரிவு வைட்டமின் ‘பி’-காம்ப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

வைட்டமின் ‘பி1’ என்பது வைட்டமின் `பி' பிரிவுகளிலேயே மிகவும் முக்கியமானது. சரியான அளவு வைட்டமின் ‘பி-1’ எடுத்துக் கொண்டால் நம் உடலின் அனைத்துப் பகுதிகளும் சரியாக இயங்கும். ரொட்டி உள்ளிட்ட அனைத்து கோதுமை உணவுகள், கோதுமை சாதம், மீன் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் வைட்டமின் `பி' சத்துக்கள் ஏராளம்.

‘பி-2’ என்ற `ரிபோஃப்ளேவின்' வாய், நாக்கு மற்றும் நம் உடல் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

நம் உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்க மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களிலிருந்து சக்தியை வெளியிட, பல்வேறு என்சைம்களுடன் கூட்டு சேர்ந்து, சக்தி உற்பத்தியில் செல்கள் ஆக்சிஜனை பயன்படுத்த, இந்த வைட்டமின் ‘பி’ பெரிதும் உதவுகிறது.

பால், வெண்ணை, முட்டை, பச்சைக்காய்கறிகள், கோதுமை, தானியத்திலிருந்து பெறப்பட்ட மாவு வகைகள், ஆகியவற்றில் இந்த ‘பி-2’ சத்து அதிகம்.

அடுத்ததாக வைட்டமின் ‘பி’ பிரிவில் முக்கியமானது `நியாசின்' என்ற `பி' வைட்டமின். இது ஜீரண மற்றும், நரம்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகிறது. ஆரோக்கியமான சருமப்பாதுகாப்பிற்கும் இந்த வைட்டமின் பயன்படுகிறது. மேலும் பெருங்குடல், சிறுகுடல், வாய், நாக்கு இவற்றின் `சளிச்சவ்வில்' ஏற்படும் வீக்கத்திலிருந்து இந்த வைட்டமின் `பி-நியாசின் பாதுகாப்பு அளிக்கிறது.

மீன், காய்ந்த பீன்ஸ்களில் `நியாசின்' அதிகமாகக் கிடைக்கிறது.

வைட்டமின் ‘பி-2’ செல்களின் மரபியல் சார்ந்த வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் வைட்டமின். எலும்பின் உள்ளே இருக்கும் மெல்லிய கொழுப்பில் சிவப்பணு செல்களின் வளர்ச்சியை ஏற்படுத்த இது பெரிதும் உதவும் வைட்டமினாகும்.

ரத்தத்தில் இருக்கும் வைட்டமின் `பி' ரத்த சோகையை தடுக்கிறது வைட்டமின் ‘பி-12’. இது இறைச்சி, மீன், முட்டை, யீஸ்ட் மற்றும் பால் புரதப் பொருட்களில் பெரிதும் காணப்படுகிறது.

வைட்டமின் ‘டி’ தவிர மற்றவை எல்லாமே தாவர உணவிலிருந்தே நமக்கு கிடைக்கும்.


***
நன்றி
***


"வாழ்க வளமுடன்"

பழங்களில் உள்ள சத்துகள்


மாம்பழம்
வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.

ஆரஞ்சுப் பழம்
வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

பப்பாளிப் பழம்
வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

நெல்லிக்கனி
வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

கொய்யாப்பழம்
வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.

சாத்துக்குடி
வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.

எலுமிச்சை
கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

கறுப்பு திராட்சை
வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

பச்சை திராட்சை
வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.

பேரீச்சம் பழம்
இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

சப்போட்டா
மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

வாழைப்பழம்
கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோரிகள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.

ஆப்பிள்
வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.

தர்பூசணி
இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.

புளி
இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.

சீத்தாப் பழம்
பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

அண்ணாசிப் பழம்
இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

மாதுளம் பழம்
பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.


***


நன்றி http://www.htn-news.com

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "