...

"வாழ்க வளமுடன்"

06 ஏப்ரல், 2011

கவரிமான் தற்கொலை செய்யுமா? – ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!

நான் புள்ளிமான். கவரிமான் அல்ல * கவரிமான் எங்கு வசிக்கிறது? முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா? எப்படி தற்கொலை செய்து கொள்ளும்? மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் ) கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்.. ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ? குழப்பமாக இருக்கிறது அல்லவா? அந்த குறளை கவனமாக பாருங்கள்.. அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல.. கவரி மா… ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.. அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்.. புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது.. இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன. முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா… இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்.. கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய் சொல் உருவானது.. * மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல். ( அரிமா அரிமா என்ற எந்திரன் பாடலை நினைவு படுத்தி கொள்ளலாம்.. அரிமா=சிங்கம் ) சரி.. இந்த குறளுக்கு அர்த்தம் என்ன? பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்.. அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்… கலைஞர் தன் உரையில் கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என சொல்லப்படுகிறது…அதே போல மானம் மிக்க மனிதர்களும், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்.. சரியான விளக்கம்.. கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையில் அவர் சிக்காதது ரசிக்கதக்கது…. * எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை.. பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை.. * ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு.. *** thanks pichaikaaran.wordpress. *** "வாழ்க வளமுடன்"

வேலூர் பிரியாணி சாப்பிடலாமா?

தேவையான பொருட்கள் ஆட்டிறைச்சி - 1 கிலோ வெங்காயம் - கால் கிலோ தக்காளி - 200 கிராம் இஞ்சி விழுது - 50 கிராம் பூண்டு விழுது - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி தயிர் - 200 மில்லி பட்டை - 1 துண்டு கிராம்பு - 4 ஏலக்காய் - 2 கொத்துமல்லித் தழை நறுக்கியது - 6 மேஜைக்கரண்டி புதினா - 4 தேக்கரண்டி எ லுமிச்சை - 1 பழத்தின் ஜூஸ் ரிஃபைண்டு கடலை எண்ணெய் - கால் லிட்டர் அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) - 1 கிலோ உப்பு - தேவையான அளவு * செய்முறை: ப்ரஷர் குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். இறைச்சியை அதில் சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும். இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும். மிளகாய்த்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும். தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு இவைகளைக் கலந்து, நீர் அரை டம்ளர் விட்டு, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை, மிதமான தீயில் ப்ரஷர் குக் செய்ய வேண்டும். அரிசியை ஒரு முறை அலசி விட்டு. அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும். அதில் அரிசியை சேர்த்து, கூடவே அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும். எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணையை மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் சன்னமாக கிளற வேண்டும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை 'வெய்ட்' போல் வைத்து சுமார் 20 நிமிடம் 'தம்' போட வேண்டும். தலைப்பாகை துணி இல்லாமலும் மூடி வைக்கலாம். 'தம்' முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் 'கம கம' வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும். அப்புறம் என்ன, வெட்ட வேண்டியதுதான்! * குறிப்பு: 'மைக்ரோவேவ் அவன்' உள்ளவர்கள் 'தம்' போடுவதற்கு பதிலாக, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையைப் போட்டு 5 நிமிடம் மைக்ரோவேவ் 'குக்' செய்தால் சுவையான, நறுமணம் கமழும் வேலூர் பிரியாணி தயாராகி விடும். *** thanks tamizharuvi *** "வாழ்க வளமுடன்"

எவரெஸ்ட் சிகரம் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் !

எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே புவியில் மிக உயர்ந்த சிகரமாகும். இது நேபாள மற்றும் திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது.இச்சிகரத்தை 1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டேன்சிங் நார்கே என்னும் நேபாளத்து செர்ப்பக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே சரித்திர சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கொடுதனையே மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது. மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெஸ்ட் உச்சியை எட்ட முடியும். என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர். எவரெஸ்டுக்கு பல பழம் பெயர்கள் வழக்கில் உள்ளன. தேவகிரி, தேவதுர்கப என்று வடமொழியில், திபெத்திய மொழியில் கோமோலுங்குமா(அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகின்றன. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பது பெரு வியப்பான செய்தி. உயர அளவீடும் பெயர் சூட்டும் இராதானாத் சிக்தார் (1813-1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ. தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை கொடுமுடி-15 என்று மட்டும்தான் குறித்திவைத்தருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந்த சியார்ச் எவரெஸ்ட் (george everest)என்பாரின் பெயரை இச்சிகரத்துக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு(andrew waugh) என்பார் சூட்டினார். *** தேங்க்ஸ் தமிழ் *** "வாழ்க வளமுடன்"

நீங்களும் பின்பற்றலாமே ( மணப்பெண் )

ஒவ்வொரு, பெண்களின் வாழ்க்கையிலும் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்துவது திருமணம்! அன்றைய நாளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அற்புதமான ஆலோசனைகள். திருமண நேரத்தில் எல்லோரின் பார்வையும் மணப்பெண்ணையே மையமாகக் கொண்டிருப்பதால் பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தலை குனிய வைத்து விடும். இது போன்ற சூழலில் மணப்பெண் தனது தன்னம்பிக்கையை ஒருபோதும் தளரவிட்டு விடக்கூடாது. சில பெண்கள் பயத்தில் மணமேடையிலேயே கண்ணீர் உதிர்த்தபடி இருக்கிறார்கள். மகிழ்ச்சியான நாளில் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பிரகாசம் தேவை. அப்போதுதான் அன்று எடுக்கப்படும் போட்டோ, வீடியோ காமிராவில் மிக அழகாக காட்சி அளிப்பீர்கள். அதுபோல திருமணத்தின் போது மணப்பெண்கள் புடவை கட்டுவதில் கவனமாக இருக்க வேண்டும். பட்டுப்புடவையானது அதிகம் தூக்கலாகவோ, தொங்கலாகவோ இருக்கக்கூடாது. மணமேடையை நோக்கி நடக்கும் போது மிகவும் மெதுவாக அடியெடுத்து வைக்க வேண்டும். குறிப்பாக படிக்கட்டில் ஏறும்போது கவனமாக இருப்பது நல்லது. வழக்கம் போல் அங்கும் இங்கும் பார்வையைச் சிதற விடாமல் கீழே கவனமாக பார்த்து அடியெடுத்து வைக்க வேண்டும். உங்கள் கவனத்தை திசை திருப்பும் வகையில் யாராவது குரல் கொடுத்தாலோ, சிரித்தாலோ அதை கண்டு கொள்ளாதீர்கள். உங்கள் பட்டுப் புடவையின் டிசைன் மற்றும் நகைகளின் தேர்வு ஒன்றுக்கொன்று தொந்தரவு செய்யாத வகையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக நகைகளில், மாலையில் சுற்றப்பட்டிருக்கும் நூல் சிக்கிக் கொள்வதுண்டு. நீங்கள் மண்டப வாசலில் இருந்து உள்ளே நுழையும் சமயத்தில் பாதையில் உறவினர்கள். பூக்கள் தூவாமல் இருக்க வீட்டாரிடம் சொல்லி வையுங்கள். மனமகளுக்கு பீடா, புகையிலை, பபுள்கம், அடிக்கடி சாக்லேட், ஐஸ்கிரீம் சாப்பிடுவது... போன்ற பழக்கம் இருந்தால் மணநாளின் போது அதை தவிர்ப்பது நல்லது. சில மணப்பெண்கள் அளவுக்கு அதிகமாக மேக்-அப் போட்டு வலம் வருகிறார்கள். இது நல்லதல்ல. ஒரிஜினல் முகம் தெரியாத அளவுக்கு ஒரு போதும் மேக்-அப் போடாதீர்கள். போட்டோ கிராபர் சொல்லாத வரை கண்களை அகல விரிக்க வேண்டாம். அதுபோல வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது கண்களை அங்கும் இங்கும் அலைய விடக்கூடாது. மணப்பெண் நடந்து வரும் போது அருகில் உள்ள தோழியுடன் அனாவசியமாகப் பேசவேண்டாம். பற்கள் தெரிய சிரிப்பதோ, கோபப்படுவதோ தவறு. மணமேடையில் அமர்ந்திருக்கும் போது யாருடைய பேச்சாவது உங்களுக்கு பிடிக்காமல் போனால், உங்கள் அதிருப்தி அல்லது கோபத்தை உடனே காட்டக்கூடாது. அப்போது நீங்கள் கோபப்பட்டால் மணமகன் வீட்டார் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடும். அதனால் அந்த ஒரு நாள் மட்டும் கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ளுங்கள். வாழ் நாள் முழுவதும் நினைவில் வைத்து பூஜிக்க வேண்டிய புனித நாள் அல்லவா? *** thanks ILaKKiYaN *** "வாழ்க வளமுடன்"

கிச்சன் டிப்ஸ் !!!


* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.


* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.


* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.



* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.


* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.



* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.



* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.



* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.



* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.



* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.



* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.



* அப்பளம், வடாம் போன்றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத்தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.



* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.



* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.



* கலந்த சாதம் செய்ய, சாதத் ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.



* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.


* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென்றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.


* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.



* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.



* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய்தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.



* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.




* முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.



* தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.



* மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.



* வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.



* வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.



* அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில் அதிகம்.



* ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.



* மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.



* ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்.. *** thanks google ***

"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "