...
"வாழ்க வளமுடன்"
08 ஜூலை, 2011
கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.....
முதலில் ஸ்கேன் என்பது என்ன?
ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன். இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.
ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.
ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?
முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
கண்டுபிடிக்க ஸ்கேன் அவசியமாகிறது.
ஒன்றுமே பிரச்சனை இல்லையென்றால், முதல் கேன்11-14 வாரங்களில் எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு வலி அல்லது சிறிது இரத்தபோக்கு ஏற்பட்டால் உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும் பரவாயில்லை.
முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.
சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.
11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும் ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS).
இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்.
DOWN’S SYNDROME என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.
அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?
20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
மேலும் தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும் பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று சொல்வார்கள்.
கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில் செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22 வாரங்களில்) செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும் அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம் படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.
இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?
பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
வரை பொறுத்திருக்கலாமா?
ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.
ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன் என்பது நிச்சயமாக ஒரு உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது.
பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.
***
thanks thaalamnews
***
"வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
பெண்கள் நலன்,
பொது அறிவு,
மருத்துவ ஆலோசனைகள்
கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!
உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன.
தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.
புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.
செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.
பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது.
எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.
எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். கஅக கூஞுண்t எனப்படும் செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.
கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்:
மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள்.
இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
***
thanks tn
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
பெண்கள் நலன்,
பொது அறிவு
கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய
1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.
3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.
4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.
5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.
ஆணின் பங்கு என்ன?ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
1. நல்ல ஆரோக்கியமான உணவு
2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
பெண்கள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
சாப்பிடுவதை ருசித்து சாப்பிடு
தினமும் நாம் சாப்பிடுகிறோம். வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சாப்பிடாமல் நாம் உயிர்வாழ முடியாது என்பது நமக்கு மறப்பதில்லை.
ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம்.
சிலர் மிக வேகமாக சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள். எப்படி சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக கடிக்கப்பட்டு மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும்.
அதுதான் முக்கியம். அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.
சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர். இன்னும் சிலர் ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.
சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவு சாப்பிடும்போது கொஞ்சம் லேட்டாகத்தான் செய்யும். குறைந்தது சுமார் 5 நிமிடங்களும், கூடுதலாக சுமார் பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்காக ஒதுக்குவது நல்லது.
ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக சாப்பிடுவதும் நல்லதல்ல. பதினைந்து நிமிடங்களுக்கு அதிகமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதும் நல்லதல்ல.
எந்த உணவை நாம் சாப்பிட்டாலும் கடித்து சுவைத்து அதன்பின்தான் விழுங்க வேண்டும். கோழி விழுங்குவதைப்போல வாயில் போடும் உணவை அப்படியே விழுங்கக்கூடாது. நிறையபேர் இப்படித்தான் சாப்பிடுகிறார்கள்.
ஒரு முழு நெல்லை கோழி அப்படியே விழுங்குகிறது. கோழிக்கு பற்கள் கிடையாது. அதனால் மெல்லுவது கிடையாது. அதற்கு அலகு அதாவது மூக்கும், நாக்கும்தான் உள்ளது.
கோழி உண்ணும் உணவு அதனுடைய அலகாலும், வயிற்றினாலும்தான் சிறுசிறு துண்டுகளாகவும் கூழாகவும் ஆக்கப்படுகிறது. அந்த பச்சை நெல்லை ஜீரணிக்க வைக்கக்கூடிய அளவுக்கு மிக சக்தியான என்சைம் மற்றும் உணவு மண்டல அமைப்பு கோழிக்கு இருக்கிறது. நமக்கு அப்படி இல்லை.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதற்கு வாயிலுள்ள உமிழ் நீர் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கின்றன.
அவையாவன. 1.பரோட்டிட் சுரப்பி, 2.சப்மேன்டிபுலார் சுரப்பி, 3.சப்லிங்குவல் சுரப்பி. இந்த மூன்று சுரப்பிகளிலிருந்தும் வரும் குழாய்கள் வாயினுள் வந்துதான் திறக்கின்றன.
பரோட்டிட் சுரப்பிதான் இந்த மூன்றில் மிகப்பெரியது. அடுத்ததாக உள்ள சப்மேன்டிபுலார் சுரப்பிதான் 70 சதவீத உமிழ்நீரை சுரக்கிறது. ஐந்து சதவீத உமிழ்நீர், மூன்றாவதாக உள்ள சப்லிங்குவல் சுரப்பியிலிருந்து சுரக்கின்றது.
உணவை பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்நீர் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூகஸ், புரோட்டின், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்சைம் ஆகியவை இருக்கின்றது. ஒரு நாளைக்கு சுமார் 1 முதல் 2 லிட்டர் உமிழ்நீர் வாயிலிருந்து வயிற்றுக்குள் தள்ளப்படுகிறது.
எல்லா நேரமும் நம்மை அறியாமலேயே நாம் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உள்ளே விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உமிழ்நீரிலுள்ள என்சைம் நாம் சாப்பிடும் உணவில் ரசாயன மாற்றங்களை வேகமாக ஏற்படுத்த உதவி செய்கிறது.
இந்த என்சைம் இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆக வாரக்கணக்கில் ஏன் மாசக் கணக்கில்கூட ஆகும். அப்படியானால் நம் உடலிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள் இவையெல்லாம் ஒழுங்காக வேலை செய்யாது. இவையெல்லாம் வேலை செய்யாவிட்டால் நம்மால் உயிர்வாழ முடியாது.
உமிழ்நீரிலுள்ள அமைலேஸ் என்கிற நொதி (என்சைம்) நாம் சாப்பிடும் உணவிலுள்ள ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட்டை மால்டோஸ் என்கிற சர்க்கரைப் பொருளாக மாற்று வதற்கு உதவி செய்கிறது. உணவு சிறுகுடலில் போய்ச் சேரும்போது இன்னும் அதிகமாக அமைலேஸ் என்சைம் கணையத்திலிருந்து சுரக்கப்பட்டு உணவில் மிச்சம் மீதியிருக்கும் ஸ்டார்ச்சையும், மால்டோசாக மாற்றிவிடுகிறது.
மால்டேஸ் என்கிற இன்னொரு என்சைம் எல்லா மால்டோசையும் குளுக்கோசாக மாற்றிவிடுகிறது. இந்த குளுகோஸ்தான் கடைசி யாக ரத்தத்தில் கலக்கிறது. என்னவென்று புரியவில்லையா? ஒன்றுமில்லை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சர்க்கரையை வாயிலுள்ள என்சைம் குளுகோசாக மாற்றி ரத்தத்தில் கலக்கச்செய்கிறது, அவ்வளவுதான்.
நமது உமிழ்நீரிலுள்ள மிïசின் என்கிற பொருள் வாய் எப்பொழுதும் ஈரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதேமாதிரி உமிழ் நீரிலுள்ள லைசோசைம் என்கிற பொருள் நாம் சாப்பிடும் உணவிலுள்ள கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழித்துவிடுகிறது.
வயிற்றுக்குள் போய் எல்லா உணவும் ஜீரணம் ஆகிவிடும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தவறு. உணவு வாயில் போடப்பட்டவுடன் உதடு, கன்னம், நாக்கு ஆகியவற்றிலுள்ள தசைகள் ஒன்று சேர்ந்து வாயினுள் போடப்பட்ட உணவை வாயினுள்ளேயே சிறிது நேரம் வைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.
அதே நேரத்தில் வாயிலுள்ள 3 உமிழ்நீர் சுரப்பிகள் சுரக்கும் திரவம் வாயில் போடப்பட்ட உணவுக் கவளத்தைச் சூழ்ந்து செரிமானத்திற்கு தயாராகிறது. பற்களுக்கிடையில் மாட்டிய உணவு துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின்பக்கத்திலுள்ள பற்களால் மிகச்சிறிய துண்டுகளாக ஆக்கப்பட்டு விழுங்குவதற்கு ஏதுவாக தயாராகிறது.
நாக்கிலுள்ள சுவை நரம்புகள் நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தேவையான சரியான என்சைம் களை சுரக்கச் செய்கிறது.
நாக்கு இப்படியும் அப்படியும் புரளும்போது நாக்குக்கு இடையில் உணவுத்துண்டுகள் பாதி நிலையில் ஜீரணமாகி ஒரு உருண்டையாக ஆக்கப்பட்டு நாக்கு மூலமாகவே அந்த உணவு உருண்டை தொண்டைக்குள் தள்ளப்படுகிறது.
தொண்டையிலிருந்து வயிற்றுக்குள் இறங்கிய உணவு அங்குள்ள 5 என்சைம்களுடன் சேர்ந்து மேற்கொண்டு ஜீரணமாகும் வேலையை ஆரம்பிக்கிறது.
வெற்றிலை, பாக்கு, புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றைத் தொடர்ந்து போடும் பழக்க முள்ளவர்களுக்கு வாயினுள் வந்து முடியும் உமிழ்நீர் சுரப்பிகளின் குழாய் பாதிக்கப்பட்டு அடைபடும் வாய்ப்பு அதிகம்.
எனவேதான் இத்தகைய பழக்கம் உள்ளவர்களுக்கு சரிவர உமிழ்நீர் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது.
இதேபோல் பற்களை இழந்த ஒருவருக்கு சரியான சத்தான உணவு கிடைக்காது. காரணம் அவரால் நன்றாக மெல்ல முடியாததால் அவர் சாப்பிடும் உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் உணவிலுள்ள சத்தான பொருட்கள் உடலுக்குப் போய்ச் சேருவதில்லை. எனவே இவர்களுக்கு தேக ஆரோக்கியமும் குறைந்துவிடும்.
ஆகவே சாப்பிடுங்கள். நன்றாக சாப்பிடுங்கள். உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்கு மட்டும்தான் வாய் உபயோகப்படுகிறது என்று தவறாக நினைத்து விடாதீர்கள்.
சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.
***
thanks படித்ததில் பிடித்தது
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
பொது அறிவு,
மருத்துவ ஆலோசனைகள்
ஆரோக்கியமான கர்ப்பகால வாழ்விற்கு 10 வழிகள்!!!
நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்ப காலத்திலும், மகப்பேற்றின் போதும் பிரச்னைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.
1. திட்டமிடுங்கள்
உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்காக ஆரம்பத்திலேயே திட்டமிடுங்கள்
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே திட்டமிடுவது என்பதன் அர்த்தம் உங்கள் டாக்டருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதுடன் குழந்தை பேற்றிற்கு தயராவதும் ஆகும்.
*
2. நன்றாக சாப்பிடுங்கள்
நல்ல ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். சத்தான உணவு வகைகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்பமாக இருக்கும் போது சில ஆகாரங்கள் உங்களுக்கு சாப்பிட பிடிக்காமல் போகலாம். அதைப் பற்றியும் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
*
3. நீங்கள் உண்ணும் உணவு சுத்தமாக இருக்க வேண்டும்
சில ஆகாரங்களை கர்ப்ப காலத்தின் போது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை வயிற்றில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு நல்லதல்ல.
உதாரணமாக:
• சீஸ் (பாஸ்ட்ரைஸ் செய்யப்படாத அதாவது நன்கு சுத்திகரிக்கப்படாத பால் பொருட்கள்)
• சரியாக வேகாத மாமிசம்
• நன்கு கழுவப்படாத காய்கறிகள்
• நன்கு வேகாத கோழிக்கறி மற்றும் வேகாத முட்டைகள்
கர்ப்பமாக இருக்கும் போது உண்பதற்கான நல்ல உணவுகள் பற்றி உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
4. போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் மீன் வகைகள் சாப்பிடுங்கள்
கர்ப்பத்தின் போது போலிக் ஆசிட் (போலேட் என்றும் இது அழைக்கப்படுகிறது) மிகவும் அவசியம். இது குழந்தைகளின் முதுகுத்தண்டு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாட்டையும் அதனால் உருவாகும் பிற ஊனங்களையும் தவிர்க்க உதவுகிறது.
கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களுக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போலிக் ஆசிட் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இது காய்கறிகளிலும், சில தானியங்களிலும் இருக்கிறது.
எண்ணை சத்து மிகுந்த மீன்கள் உங்கள் குழந்தைக்கு நல்லது. ஆனால் வாரத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் மீன் சாப்பிடக்க் கூடாது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
ஆனாலும் மற்ற வகை மீன்களை நீங்கள் விரும்பும் அளவிற்கு உண்ணலாம். உங்களுக்கு மீன் பிடிக்கவில்லை என்றால் மீன் எண்ணை மாத்திரைகள் கிடைக்கிறது. ஆனால் அது எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது மற்றும் அது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உகந்ததா என்பதை கவனித்து வாங்குங்கள்.
*
5. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
கர்ப்பமாக இருக்கும் போது உங்கள் எடை அதிகரிக்கும். அதை சமாளிக்கவும், பிரசவத்தின் போது ஏற்படும் வலியை சமாளிக்கவும் உடற்பயிற்சி செய்வது அவசியம். குழந்தை பிறந்த பிறகு உங்களது பழைய உடற்கட்டை மீண்டும் பெற இந்த உடற்பயிற்சி உதவும்.
உற்சாகமான மனநிலையுடன் இருக்கவும் கர்ப்பத்தின் போது ஏற்படும் மனத்தொய்வை தவிர்க்கவும் உடற்பயிற்சி உதவும். நடப்பது, நீச்சல் மற்றும் யோகா போன்ற எளிதான, மென்மையான உடற்பயிற்சிகளை செய்யவும்.
*
6. இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை செய்யத் தொடங்குங்கள்
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் தும்மும் போதோ, சிரிக்கும் போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும் போதோ சிறிய அளவில் சிறுநீர் கசிவு ஏற்படுவது சாதாரணமான ஒன்று.
இடுப்பிற்கான உடற்பயிற்சிகளை கர்ப்பமாகும் முன்பே செய்யத் துவங்கி கர்ப்ப காலத்தின் போதும் தொடர்ந்து செய்து வந்தால் இதை தடுக்கலாம். இதைப் பற்றி மேலும் அறிய உங்கள் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
*
7. மது அருந்துவதை குறையுங்கள்
நீங்கள் அருந்தும் மது உடனடியாக உங்கள் ரத்தத்தில் கலந்து உங்கள் குழந்தையைச் சென்றடையும். ஆகவே மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. மீறி அருந்த விரும்பினால் வாரம் ஒருமுறை அல்லது இருமுறை சிறிய அளவில் அருந்தலாம். அனுமதிக்கப்பட்ட அளவு தோராயமாக:
• அரை கிளாஸ் அளவு பீர்
• சிறிய கிளாஸ் அளவு ஒயின்
கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவு மது அருந்தும் பெண்களுக்கு (தினமும் ஆறு கிளாஸ்) பிறக்கும் குழந்தைகள் கல்வி கற்பதில் மிகவும் மந்தமாக இருப்பார்கள். மேலும் பலவிதமான உடற் குறைபாடுகளும் பிறப்பிலேயே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
*
8. கேஃபைன் அளவைக் குறையுங்கள்
காபி, டீ, கோலா போன்ற பானங்களில் கேஃபைன் என்ற பொருள் இருக்கிறது. இது உடலில் அதிகமானால் இரும்புச் சத்தை உடல் ஏற்பது குறையும். கேஃபைன் அளவு மிகவும் அதிகரிப்பது குழந்தையின் எடை குறைவிற்கும், கர்ப்பம் கலைவதற்கும் காரணமாகிறது.
ஆனால் நான்கு கப் காப்பி அல்லது ஆறு கப் டீ அருந்துவது உங்கள் குழந்தையை பாதிக்காது. ஆனாலும் இதை குறைத்துக் கொள்வது நல்லது. கேஃபைன் நீக்கப்பட்ட காபி, டீ அல்லது பழரசங்கள், சில துளி எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் ஆகியவற்றை குடியுங்கள்.
*
9. சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள்
புகைப் பழக்கம் உள்ள பெண்களுக்கு கர்ப்பம் கலைவதற்கான, குறைப்பிரசவம் நடப்பதற்கான, குழந்தை இறந்தே பிறப்பதற்கான ஆபத்துகள் அதிகம். சில சமயங்களில் இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது விவரிக்க முடியாத சில காரணங்களால் திடீரென இறந்துவிடுவதும் உண்டு.
கர்ப்பமாகும் முன்னரே புகைப்பதை நிறுத்துவது நல்லது. புகைப்பதை எவ்வளவிற்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் குழந்தைக்கு நல்லது.
*
10. ஓய்வெடுங்கள்
கர்ப்பத்தின் ஆரம்ப மற்றும் இறுதிக் காலங்களில் உங்களுக்கு ஏற்படும் களைப்பின் அர்த்தம் வேலை செய்வதை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதாகும்.
மதிய நேரத்தில் சிறிது தூங்குவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லது. தூக்கம் வரவில்லையென்றால் கால்களை சற்றே உயர்த்தி வைத்து அரை மணி நேரமாவது ஓய்வெடுங்கள்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
Labels:
குழந்தைகள் நலன்,
பெண்கள் நலன்,
மருத்துவ ஆலோசனைகள்
அல்சர் குணமாக விளாம் காய் :)
தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது.
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுவடையச் செய்கிறது.
தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும்.
வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.
விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல் நீங்கும்.
தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்து வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
விளாம் மர இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
விளாங்காயை அரைத்து மோரில் கலந்து குடிக்க, நாள்பட்ட பேதி சரியாகும்.
விளாம்பழ மரத்தின் பிசினை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
விளாம் மரப் பட்டையைப் பொடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை வடிகட்டிக் குடிக்க, வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
சர்க்கரையுடன் விளாம்பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
***
thanks thaalam
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
இயற்கை வைத்தியமும்,
பொது அறிவு
உங்கள் குழந்தைக்கு ரத்த சோகையா?
3 வயது குழந்தைப்பருவம் துள்ளி விளையாடக்கூடிய பருவம்.
ஆனால் இந்த வயதுக் குழந்தைகள் உற்சாகமாக விளையாடாமலும், காரணமின்றி சோர்ந்து போவதாகவும் நீங்கள் அறிந்தால் உங்கள் குழந்தைக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம்.
6 மாதம் முதல் 35 மாதம் வயதுடைய குழந்தைகளில் 75 சதவீதம் குழந்தைகளுக்கு ரத்த சோகை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்தக் குழந்தைகளே இயல்பான வேகம் இல்லாமல் உற்சாகமிழந்து காணப்படுவார்கள்.
உடல் இயல்பாக இயங்குவதற்கு இரும்புச்சத்து மிக மிக அவசியம். ஆரோக்கியமும், பலமும் தருவது இரும்புச்சத்து. வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. இரும்புச்சத்து குறைந்தால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் வரும்.
இரும்புச்சத்து குறைவான குழந்தைகள் குடும்பம், உறவுகளை விட்டு விலகி தனிமையில் இருக்க விரும்புவார்கள். பசி இல்லாமல் நீண்ட நேரம் திரிவார்கள். விளையாட்டில் ஆர்வம் குறைவாக இருக்கும். எந்த விஷயத்திலும் அலட்சியமாக நடந்துகொள்வார்கள். அவர்கள் சுவாசத்தில் தடை இருக்கும். தலைவலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகள் தெரியும்.
கண்ணின் கீழ்புறமும், உடலின் மற்ற பகுதிகளிலும் சருமம் வெளிர் நிறத்தில் காணப்பட்டால் ரத்தசோகை என்று அடையாளம் கண்டுகொள்ளலாம். இதற்கு இரும்புச்சத்து குறைவு காரணமாகும். அடிக்கடி காய்ச்சல் வரும். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதைக் காட்டும்.
ரத்தசோகை உள்ள குழந்தைகளுக்கு நிறைய கோபம் வரும்.
விளையாட்டு மற்ற செயல்பாடுகளில் சோர்ந்து காணப்படுவார்கள். உணவு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் மண்ணை எடுத்து ருசிப்பார்கள். சாதாரண நேரத்தில் அரிசி, சர்க்கரையை ஆவலுடன் தின்பார்கள்.
முழுமையான சுகப்பிரசவத்தில் முழு எடையுடன் (3 கிலோ) பிறக்கும் குழந்தைக்கு உடலில் போதிய அளவு இரும்புச்சத்து இருக்கும். அந்தக் குழந்தையின் தாயாரின் தாய்ப்பாலிலும் 100 சதவீத இரும்புச்சத்து இருக்கும். தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைக்கும் குறைவில்லாமல் இரும்புச்சத்து கிடைக்கும்.
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து இயல்பாகவே குறைவாக இருக்கும். அந்த குழந்தையின் தாய்க்கும் உடலில் சத்துக்குறைவு இருப்பதால் தாய்ப்பாலிலும் இரும்புச்சத்து குறைவாக இருக்கும். அவர் தாய்ப்பால் கொடுத்தாலும் குழந்தைக்கு இரும்புச்சத்து முழுதாக கிடைப்பதில்லை.
இரும்புச்சத்துக் குறைவை உணவு மூலம் பெருமளவு சரிப்படுத்திவிடலாம். அவல், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், முருங்கைக்கீரை மற்றும் கீரைகள், தவிடு, பேரீச்சம் பழம், முந்திரிப்பழம் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
பழச்சாறுகளிலும் 'அயர்ன்' இருக்கிறது. காபி, டீ போன்றவற்றை அதிகம் குடித்தால் இரும்புச்சத்தை உடலில் ஏற்கும் தன்மை குறையும். எனவே இவற்றை தவிர்த்து சூப், பழரசங்களைப் பருகத் தரலாம்.
குழந்தைகளுக்கு மதிய உணவுடன் நெல்லிக்காய் துவையல், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்த சாலட் செய்து தந்து சாப்பிட வைக்கலாம். கேழ்வரகு, பச்சைப் பயிறு, கடலைப்பருப்பு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவில் அடிக்கடி இடம்பெற செய்தால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்
***
thanks கூடல்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
குழந்தைகள் நலன்,
பெற்றோர்கள்
ஊட்டச்சத்துக்களை பாதுகாத்தல் & மேம்படுத்துதல்
சமைக்கும் போது சத்துக்களை சேமிப்பதே சத்துக்களை பாதுகாப்பாகும்.
சமையல் தயாரிப்பின் போது சத்துக்கள் வீணாகுவதை குறைப்பதற்கான வழிமுறைகள்:
புத்தம் புதிய உணவுகளை தேர்வு செய்தல்.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவ வேண்டும்.
காய்கறிகளை பெரிதாக நறுக்கி வைட்டமின் சத்துக்களை வேகவைக்கும் போது மீட்பதாகும்.
தோலுரிப்பு கருவிக் கொண்டு காய்கறிகளின் தோலை சீவுதல்.
குறைந்த அளவு நீரையே நமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.
காய்கறிகளை பிரஷர் குக்கரை கொண்டு வேக வைக்கவும்.
காய்கறிகளை வேகவைக்கும் போது மூடியிட வேண்டும்.
பரிமாறுவதற்கு சில மணி துளிகளுக்கு முன் காய்கறி கலவையை தயாரிக்க வேண்டும்.
lime juice அல்லது வினிகரை வேகவைக்கும் முன் சேர்த்தால், வைட்டமின் சி இழப்பு நேரிடாது.
உணவு பொருட்களை குளிர்ந்த நிலையில் சேமிக்கவும்.
காய்கறிகளை வேகவைப்பதற்கு சூடு நீரையே பயன்படுத்தவும்.
வேகவைத்தலும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு பயன்படுத்தப்படுத்தும் சமையல் வகை ஆகும்.
தேவைப்பட்டால் காய்கறிகளை சமைத்த நீரை குழம்பு செய்வதற்கு சாஸ் மற்றும் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
உணவு பாதுகாப்பை கருதி குறைந்த அளவு நீரையே சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்.
பேக்கிங் சோடா உப்பை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் வைட்டமின் சி இழப்பு அதிகம் ஏற்படும்.
செம்பு பாத்திரத்தை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது.
சமைப்பதற்கு முன் பருப்பு வகைகளை உரை வைக்க வேண்டும்.
பருப்பு தண்ணீரை ரசம் அல்லது சாம்பார் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்
***
செறிவூட்டுதல்:( மேம்படுத்துதல் )
உணவு சத்துக்களை சிறப்பான சமையலைக்கொண்டு செய்வதே உணவு செறிவூட்டுவதாகும்
உணவு சத்துக்களை மேம்படுத்தலின் முக்கியத்துவங்கள்:
உடலுக்கேற்ற உணவு சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்தல்.
சிறந்த உணவு வகை மற்றும் தயாரிப்பு மேற்கொள்ளுதல்.
சமச்சீரான உணவை நுகர்தல்.
உணவுகளின் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்துதல்.
விதவிதமான உணவு வகைகளை தயாரித்தல்.
தினசரி உணவு வகைகளை என்னவென்று திட்டமிடுதல்.
உடலில் உள்ள நோய் பற்றாக்குறையை அகற்றுதல்.
நல்ல உணவு பழக்கவழக்கங்களை உருவாக்குதல்.
ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தும் முறைகள்:
இணைத்தல்:
ஊட்டச்சத்துக்களின் தரத்தை மேம்படுத்த பலவகையான உணவுகளை ஒன்றாக்கும் செயல்கூறுகள் ஆகும்.
பலவகையான உணவு வகைகளை ஒன்றாக இணைப்பதே சத்துக்களை எளிய முறையில் உண்ணுவதாகும்.
(எ-டு) பருப்பரிசி.
தானிய வகைகளில் சில அமினோ அமிலங்கள் குறைந்து காணப்படும். ஆனால் பருப்பு வகைகளில் அதிகம் காணப்படும். அதே போல் பருப்பு வகைகளில் சிலவகை அமினோ அமிலங்கள் இருக்காது. அவை தானியங்களில் நிறைந்திருக்கும். எனவே இவை இரண்டையும் இணைத்து தயாரிக்கும் உணவுகள் ஊட்டச்சத்துக்கள் மேம்படுத்தும்.
நொதித்தல்:
நொதித்தல் என்பது உணவு வகைகளோடு சில பயன்தரும் நுண்ணுயிர்களை சேர்ப்பதாகும். அவை ஏற்கொனவே உள்ள சத்துக்களை எளிதாக மாற்றி உண்ணுவதற்கு ஏதுவாக்கும். நொதித்தல் இட்லி மாவு அரைத்த பின் பொங்க செய்து இரண்டு மடங்காக்கும்.
(எ-டு) ரொட்டி, தயிர், இட்லி
நன்மைகள்:
உணவு ஜீரணிக்கும் சக்தியை மேம்படுத்தும்.
சில வகை தானியங்கள் பயிறு வகைகளில, தாதுக்கள், கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு சத்துக்கள் மாற்றப்பட்டு உடலுக்கும் எளிதாக உட்கிரப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
நொதித்த உணவு வகைகள் மிகவும் பஞ்சு போல் மெருதுவாக இருக்கும். எனவே இவற்றை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்பர்.
முளைத்தல்:
பயிறு வகைகளை அல்லது தானியங்களை சிறிது தண்ணீரில் ஊர வைக்கும் போது சிறிய தண்டு வெளியில் காணப்படும். இவையே முளைத்தல் என்பதாகும்.
கோதுமை, பாஜ்ரா, ஜோவர் ஆகியவை முளைவிடும் தானியங்களாகும். பின்பு தானியங்களை நிழலில் உலர்த்தி தவாவில் வாட்ட வேண்டும். பின்பு அரைத்து பல வகை பதார்த்தங்கள் செய்ய உபயோகப்படுத்தலாம். பருப்பு வகைகள் முளைத்தபிறகு வேகவைத்து உண்ணலாம். பொதுவாக 8-16 மணி நேரம் உளறவைத்து சுமார் 12-24 மணிநேரம் கழித்து முறைவிடும்.
நொதித்த பிறகு முளைவிடும் அனைத்து வகை தானியங்களிலும் வைட்டமின் அதிகம் இருக்கும்.
நன்மைகள்:
உணவின் ஜீரண் சக்தியை அதிகரிக்கும்
ஊட்டச்சத்துக்களின் மதிப்பை அதிகரிக்கும்
மூலதனம்: http://www.textbooksonline.tn.nic.in/books/11/nutrition-EM/CHAPTER_2.pdj
***
thanks agritech.tnau.ac.in
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
சமையல்கள்,
பொது அறிவு,
வீட்டுக் குறிப்பு
சமைக்கும் பொழுது ஊட்டச்சத்துக்கள் இழப்பு
உணவு சமைக்கும் முறை குடும்ப சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள் சாப்பிடுவதற்கு நல்ல சுவையுடனும் மற்றும் நல்ல தோற்றம் உடையதாக இருக்க வேண்டும்.
உணவு வகையான பழங்கள் காய்கறிகள் மற்றும் கொட்டைகள் பச்சையாகவே அல்லது சடைத்தும் உட்கொள்ளலாம். உணவு பொருட்களை வேக வைப்பதே சமையல் எனப்படும்.
சமைப்பதன் குறிக்கோள்:
சமையல் செய்யும்போது உணவுகள் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது. 40 டிகிரி வெப்பத்திற்கு வேக வைப்பதால் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைய தொடங்கும். எனவே உணவுவன நுகர்வதற்காக பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட வேண்டும்.
தொடர்பு கொண்ட திசுக்கள் கொண்ட இறைச்சி மற்றும் தானிய பருப்பு மற்றும் காய்கறி நார்கள் சமைக்கும் போது மென்மையாக படுகிறது. ஆதலால் ஜீரணிக்கும் கால நேரம் குறைந்து, குடல் பகுதியில் சிறிது எரிச்சல்களே ஏற்படும்.
நுகரும் தன்மை மற்றும் உணவு தரம் சமைப்பதினால் மேம்படுத்தப்படுகின்றன.
(எ-டு) தோற்றம், சுவை, இழைநய, அமைப்பு மற்றும் நறுமணம்.
பல விதமான சமையல் வகைகளை ஒரே பொருளில் இருந்து தயாரிக்கலாம்.
(எ-டு) அரிசியைக் கொண்டு பிரியாணி மற்றும் கீர் தயாரிக்கலாம்.
உணவு நுகரும் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
சமைக்கும் முறைகள்:
__________________________________________________________
நீர்வெப்பம் - உலர் வெப்பம் - பிணைப்பு
__________________________________________________________
வேகவைத்தல் - வதக்குதல் - நெருப்புக்கலமிடுதல்
புழுங்க வைத்தல் - வறுத்தல் -
அவித்தல் - பொரித்தல் -
குக்கர் கொண்டு
சமைத்தல்
__________________________________________________________
சமைக்கும் பொழுது மின் கடத்தி கதிர்வீச்சு மற்றும் நுண்அலையின் மூலம், வெப்பம் உணவுக்கு பரிமாற்றப்படும்.
***
thanks textbooksonline
***
"வாழ்க வளமுடன்"
Labels:
இயற்க்கையின் வரம்,
சமையல்கள்,
பொது அறிவு,
வீட்டுக் குறிப்பு
இயற்கைஉணவு குறித்த பொன்மொழிகள்
1. வைகறையில் துயில் எழு. (அதிகாலையில் எழ வேண்டும்).
2. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
3. உண்பதற்காக வாழாதே. வாழ்வதற்காக உண்.
4. நீரை உண்; உணவை குடி(உணவை நன்கு மென்று கூழ் போலாக்கி குடிக்க வேண்டும். நீரை சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும்)
5. உணவும் மருந்தும் ஒன்றே.
6. அஜீரணமும், மலச்சிக்கலும் ஆதிநோய்கள் பின்னால் வருபவை மீதி நோய்கள்.
7. கடவுள் கனிகளை படைத்தார். சாத்தான் சமையலை படைத்தான்.
8. படுக்கை காப்பி படுக்கையில் தள்ளும்.
9. பசிக்காக சாப்பிடு; ருசிக்காக சாப்பிடாதே
10. சர்க்கரையும் உப்பும் விஷங்களாகும்.
11. சுத்தமான காற்று 100 அவுன்ஸ் மருந்துக்கு சமமாகும்.& ஜப்பானிய பொன்மொழி
12. சூரியன் இல்லாத இடத்திற்கு வைத்தியர் வருகிறார்.&ஸ்பெயின் பொன்மொழி
13. 5 மணிக்கு எழு 9 மணிக்கு உண் (காலை), 5 மணிக்கு உண் 9 மணிக்கு உறங்கு(மாலை)
14. வயிறு பெரிதாக உள்ள இடத்தில் மூளை சிறியதாக இருக்கும்&ஜெர்மன் பழமொழி.
15. பெருந்தீனியே பஞ்சத்தையும் போரையும் விட அதிக மக்களை கொல்கிறது.
16. சூரிய உதயத்திற்கு பின்பும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பும் உட்கொள்ளூம் உணவு ஆயுளை அதிகரிக்கிறது.
***
thanks Rathi loganathan
***
"வாழ்க வளமுடன்"
Labels:
படித்ததில் பிடித்தது,
பொது அறிவு,
பொன்மொழிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "