...

"வாழ்க வளமுடன்"

04 ஜூன், 2010

காலையில் உற்சாகம்... ஏன்?



ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்துவிடும். குறிப்பாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள்.

இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்... என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள்.



***


ஆராய்ச்சியாலர்கள் கூறுவது :



***


1. தினமும் காலையில் எழுந்தவுடன் அனை வருமே சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத் தின் காரணமாக கொஞ்சம் மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அதேபோல், மதியம் கொழுப்பு நிறைந்த பிரியாணி அல்லது தயிரோ அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங் களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவு நம் மனநிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.


***


2. உணவு ஜீரணமாகும்போது பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மன நிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு `நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்' என்று பெயர். நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை.


***




3. உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.



***



4. தக்காளி, சுரைக்காய், அன்னாசிப்பழம், சீதாப்பழம், முந்திரிப் பருப்பு, எறா, முட்டை போன்ற உணவுகள் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனால் மூக்கில் தண்ணீர் வடிதல், கண்ணில் நீர் வடிதல், உதடுகள் எரிச்சல், மூச்சு தடைப்படுதல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பாதிப்பால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு சோர்வடைவார்கள். ஒவ்வாமையில் சிலருக்கு தோலில் நமைச்சல் ஏற்படும்.



***



5. வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும்.



***


6. சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு. அதே காபி சூடு குறைந்தால் ருசி இருக்காது. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும்.




***




7. சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.




***



8. சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.



***



ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்!



***




இனி நாமும் காலையில் உற்ச்சாகமாக திகழலாமே!





***




நன்றி மாலைமலர். http://www.maalaimalar.com/2010/02/18102625/morning.html




***



"வாழ்க வளமுடன்"




***

ஆழ்கடலுக்கு 3வது விருது




***

என் தளத்துக்கு விருது வழங்கிய மனோ அம்மாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.



***


நான் பதிவு இடவில்லை எனினும் வந்து என் தளத்தில் பார்வை இட்டவருக்கும், படித்தவருக்கும் மிக்க நன்றி.







***
"வாழ்க வளமுடன்"



***


அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

ஹாய் நண்பர்களே!

அனைவரும் நலமா? அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன்! அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று எண்ணி மகிழ்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!






***



"வாழ்க வளமுடன்"




***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "