...

"வாழ்க வளமுடன்"

02 பிப்ரவரி, 2010

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 5

Mastecting-க்குப் பிறகு உடல் உருவில் வந்த மாற்றத்தைச் சமாளித்தல்

1. மார்பக இழப்பு காலப் போக்கில் பின் சமாளிக்க முடியும்.

இந்தச் சிக்கல்களைச் சமாளிக்க உதவும் சில கருத்துரைகள் கீழே தரப்பட்டுள்ளன:

a. யாரோடாவது பேசுங்கள் உங்கள் உணர்ச்சி காலப்போக்கில் தணியும். உங்கள் உணர்ச்சிகளை உங்களுடைய கணவர், குடும்ப உறுப்பினர் அல்லது நெருங்கிய நண்பரிடம் பேசித் தீருங்கள்.

b. காயம் ஆறுதலில் கவனம் செலுத்துங்கள், உங்கள் ஆலோசகர் அறிவித்துள்ள உடற்பயிற்சிகளைத் தொடருங்கள்.


2. அறுவை நடந்த இடம் ஆற கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்

அறுக்கப்பட்ட இடத்தில் கட்டுபோட்டிருக்கும். அந்தக் கட்டு ஈரமாகாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஸ்பாஞ்ச் குளியல் எடுத்துக்கொண்டு அப்பகுதி ஈரமாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தையல் பிரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் வழக்கம்போலக் குளிக்கலாம்.

3. பந்து பிழிதல்


a. ஒரு ரப்பர் பந்தைக் கையில் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுங்கள்.

b. கைகளை மேலே நேராக உயர்த்தி பந்தை மாறி மாறி பிசைந்து விடவும்.

c. பரிந்துரைத்த முறையில் இந்தப் பயிற்சியைச் செய்யவும்.

4. இராட்டினம் சுழுற்றல்a. ஒரு நூற் கயிறின் இரு முனைகளில் முடிச்சுகளைப் போடவும். பாதிக்கப்படாத கையின் உதவியால் நூற் கயிற்றினை ஒரு கதவின் மீது வீசி கதவின் இருபுறங்களிலும் ஒவ்வொரு முடிச்சுடன் கூடி இருக்கும்படி செய்யவும்.

b. கதவினை இரு கால்களின் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு குதிகால்கள் நிலத்தில் நன்கு ஊன்றுமாறு அமரவும்.

c. நூற்கயிற்றின் முடிச்சுகளை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு மேலும் கீழமாக கைகள் மாற்றி இழுக்கவும்.
>

5. கைகளால் சுவற்றில் ஏறுதல்
a. சுவற்றிற்கு 6-12 அங்குல தூரத்தில் சுவற்றைப் பார்த்தபடி கால் விரல்களின்மேல் நிற்கவும்.

b. முழங்கைகளை மடக்கி, தோள் மட்டத்திற்கு உள்ளங்கைகளைச் சுவற்றில் பதிக்கவும். வடுவில் அழுத்தமோ வலியோ உண்டாகும் வரை மெல்லமெல்ல உள்ளங்கைகளைச் சுவற்றில் மேல் நோக்கி சீராக ஒரே அளவில் மெல்ல நகர்க்கவும். வலிஎடுக்கும் உயரத்தில் உள்ளங்கைகள் உள்ள உயரத்தை கோடிட்டுக் குறித்துக் கொள்ளவும்.

c. நாட்போக்கில் உங்களுடைய முன்புறைறத்தை நீங்களே கணக்கிட்டுக்கொள்ளலாம்.


6. பின்புற வருடல்


பாதிக்கப்பட்ட கையின் முழங்கையை மடித்து கைவிரல்களின் பின்புறம் முதுகின் மேல்புறத்தில் தொடுமாறு வைக்கவும்மெல்ல உங்கள் விரல்கள் முதுகின் மறுபுற விளிம்புக்குச் செல்லுமாறு மெல்ல நகர்த்தவும்.


7. முழங்கை மூட்டுக்களை ஒருங்கே இழுத்தல்


a. முழங்கைகளை மடித்து கழுத்தின் பின்புறம் கொண்டு வந்து கைவிரல்களைப் பிணைத்துக் கொள்ளவும்.


b. இரண்டு முழங்கை மூட்டுக்களையும் ஒன்றோடு ஒன்று தொடுமாறு பக்கமாக மெல்ல நகர்த்தவும்.


அடிக்கடி வினவப்படும் வினாக்கள்

1. மாஸ்டக்டமி செய்வதிலுள்ள இடர்பாடுகள் என்ன ?


எந்த அறுவை மருத்துவம் என்றாலும் அதில் வர வாய்ப்புள்ள சில இடர்பாடுகள் உள்ளன. அவையாவன:

1. தொற்றுநோய், இரத்தக்கசிவு போன்ற காயம் ஆறுதலில் உள்ள இடர்பாடுகள்.

2. தோள் விறைத்துப்போதல்.

3. மரத்துப் போதல். மாஸ்டக்டமி நடந்த பிறகு வழக்கமாக ஏற்படுவதைப்போல அறுவை நடந்த இடத்திலுள்ள தோலும் அக்குள் பகுதியும் சிறிது மரத்துப்போகும்.

4. செரோமா (Serome) :
அறுவை காயத்திலிருந்தும் அக்குளிலிருந்தும் வடியும் நிணநீரை, தனிச்சிறப்பு மருத்துவ மனையில் எளிதில் வடித்து எடுத்து விடுவார்கள்.

5. லிம்ப்டோம் (lymphedome) :
என்பது 10-20 சதவீத நோயாளிகளுக்கு ஏற்படும் நீண்டகால லேசான வீக்கம்.

6. தோல் அழுகல் - (Skin necrosis) :
சில சமயங்களில் தோல் முனையில் சில பகுதி நன்றாக ஆறாமல் அழுகுவதைப்போல ஈரமாக இருக்கும். எனினும் தினமும் சுத்தப்படுத்தி, மருந்திட்டு, கட்டுவதின் மூலம் அதைக் குணமாக்க முடியும்.


2. எனக்கு மாஸ்டெக்டமி நடைபெற்ற பிறகு அடுத்த மார்பகத்தில் புற்று நோய் வரும் வாய்ப்புள்ளதா ?
ஆமாம். அடுத்தடுத்த நீங்கள் மருத்துவரை சந்திக்கும் போது வழக்கமான பரிசோதனைகளும், மம்மோகிரம்களும் நடத்தப்படும். மாதந்தோறும் நீங்களே சுயமாக பரிசீலித்துப் பாரத்துக் கொள்ளுங்கள். இரு புறங்களையும் உற்றுப் பாருங்கள். மாதத்திற்கு மாதம் ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் கூறுங்கள்.


3. அறுவை நடைபெற்ற கை மரத்துப்போதலோ, வலியையோ வீக்கமோ இருப்பதை உணர்ந்தாலோ, மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்து இருந்தாலோ நானென்ன செய்ய வேண்டும் ?
இயன்ற விரைவில் உங்கள் மருத்துவரைச் சந்தித்துப் பேசுங்கள்.


4. நான் எங்கே செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்ள இயலும் ?
CGH ரீடைல் பார்மஸி (போன் எண் 6850 1889) மற்றும் சிணீஸீநீணீக்ஷீமீ ( எனக்கு இவை என்ன என்று புரியலை? தவறுக்கு மன்னிக்கவும். )
(போன் 6736 3168) இவ்விடங்களிலிருந்து செயற்கை மார்பகங்களைப் பெறலாம்.


5. மார்பகப் புற்று துணைக்குழு (Breast cancer support camp) - வில் நான் எங்கே சேரலாம் ?
Breast Cancer Support Groups:

a) CGH Breast Support குரூப்
b) Breast Cancer பௌண்டடின்
c) Singapore Cancer Society


இவை சிங்கப்பூர் சாங்கி தளத்தில் கிடைத்தது.


நன்றி சிங்கை சாங்கி மருத்துவ மனை.
http://www.cgh.com.sg/library/tamil_breast_allabout.asp

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 4

மருத்துவமனையில் என்ன நடக்கும்?

கீழ்க்கண்டவை, நீங்கள் மாஸ்டெக்டமி செய்து கொள்பவராக இருப்பின் நீங்கள் பெறப் போகும் குறிப்புகள் விவரம்

தனிச் சிறப்பு வல்லுநரின் மருத்துவ நடை தனி மருத்துவ மனையில்


1. உங்களுடைய மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிவார். அறுவை மருத்துவத்தின் தன்மையையும் அதிலுள்ள சிக்கல்களையும் உங்களுக்கு விளக்குவார்.

2. நீங்கள் அறுவை மருத்துவத்திற்குத் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய உங்களின் இரத்தம் சிறிது பரிசோதனைக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

3. நீங்கள் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருப்பின் கீழ்க்கண்ட பரிசோதனைகள் நடைபெறும். உங்கள் இதயத்துடிப்பைப் பரிசீலிக்க எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனையும், உங்களுடைய நுரையீரல், சரியாக உள்ளனவா என்பதை உறுதிப் படுத்த மார்புப்புற எக்ஸ்-ரேவும் எடுக்கப்படும்.

4. உங்கள் மருத்துவ தாதி மருத்துவமனையில் நீங்கள் எவ்வளவு காலம் தங்க வேண்டி வரும் என்பதையும், எவ்வளவு செலவாகும் என்பதையும் உங்களுக்குக் கூறுவாள்.

5. ஒரு மயக்க மருந்து வல்லுநர் மார்பக தாங்கு பிரிவிலிருந்து (breast support group) வந்து உங்களை மானசீகமாக அறுவை மருத்துவத்திற்கு ஆயத்தப் படுத்துவார்.


அனுமதி பெறும் நாளில்

1. நீங்கள் படுக்கைத் தொகுதிக்குள் (Ward) வந்ததும் வசதியாக தங்க மருத்துவ தாதி ஏற்பாடுகள் செய்து தருவாள். பின்னர் உங்களுடைய எடை, உடல் வெப்பநிலை, நாடித் துடிப்பு, சுவாசிக்கும் அளவு, இரத்த அழுத்தம் முதலியவற்றைப் பரிசீலிப்பாள்.

2. படுக்கைத் தொகுதியின் மருத்துவர் உங்கள் நோய் வரலாற்றைக் கேட்டறிந்து உங்களைப் பரிசோதிப்பார். அவர் உங்களுக்குச் செய்ய வேண்டிய சிகிச்சையின் தன்மை, சிக்கல்களை விளக்கி அறுவை செய்ய உங்கள் அனுமதியைப் பெறுவார்.

3. மயக்க மருந்து வல்லுநர் நீங்கள் அறுவை மருத்துவத்திற்கு தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்வார்.

4. ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவத்திற்கு நீங்கள் தகுதியானவர் என்று உறுதிப் படுத்தாது இருப்பின் பரிசோதிக்க உங்கள் இரத்தம் சிறிது எடுத்துக் கொள்ளப்படும்.

5. பொதுவாக இரவு 12 மணிக்குமேல் நீங்கள் எதையும் உண்ணவோ, குடிக்கவோ கூடாது என்று உங்கள் மருத்துவ தாதி கூறுவாள்.

6. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு கீழ்க்கண்ட விவரங்களை தருவாள் .

7. நீங்கள் அறுவை மருத்துவ அறையில் இருக்கும் போது என்ன எதிர் பார்க்கப்படும்? உங்கள் அறுவை மருத்துவத்திற்கு பிறகு நீங்கள் விழித்த பின்னர் என்ன எதிர் பார்க்கப்படும்?அறுவை நடைபெறும் நாள்

அறுவை மருத்துவத்திற்கு முன்னர்

1. நீங்கள் உணவோ, பானமோ எடுத்துக் கொள்ளக் கூடாதென்று நினைவுறுத்தப் படுவீர்கள்.

2. உங்களுடைய அறுவை மருத்துவத்திற்கு முன்னர் தலைக்கு ஊற்றிக் கொள்ளவும்.

3. அறுவைக்கு முன்னர் உங்களிடமுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை உங்கள் மருத்துவதாதியிடம் கொடுத்துப் பத்திரப்படுத்துமாறு கூறுவார்.

4. அறுவை மருத்துவ அறைக்குள் நீங்கள் போகுமுன்னர் அதற்குரிய கவுனை எடுத்து அணியுமாறு கேட்டுக் கொள்ளப் படுவீர்கள்.

5. மருத்துவ தாதி உங்களை உங்கள் படுக்கையிலிருந்து ஒரு தள்ளுவண்டியில் படுக்க வைத்து அறுவை மருத்துவ அறைக்குள் தள்ளிச்செல்வாள்.


அறுவை மருத்துவ அறையில்

உங்களுக்கு அதிகமாக குளிரெடுத்தால் மற்றொரு கம்பளியையும் தருமாறு கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.


அறுவை மருத்துவத்தின் பின்னால்

1. படுக்கைத் தொகுதியில் நீங்கள் கூர்ந்து கவனிக்கப் படுவீர்கள்.

2. அதிகமாக வடியும் இரத்தத்தை அல்லது நிணநீரை வடிக்க அறுவை நடக்கும் இடத்தில் ஒரு குழல் (Tube) உள்ளே வைக்கப்படும்.

3. மயக்க மருந்தின் பக்க விளைவாக நீங்கள் வாந்தியெடுக்கலாம் அல்லது அறுத்த இடத்தில் வலியை உணரலாம். அவற்றை உங்கள் மருத்துவ தாதியிடம் தெரிவியுங்கள். நீங்கள் மிகவும் அமைதியுடன் இருக்க அவர் மருத்துவ ஊசியைப் போடுவாள்.

4. மயக்க மருந்து தீருவதற்காக அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 6 மணி நேரம் வரை நீங்கள் படுக்கையில் படுத்திருக்க வேண்டும். எனினும் நீங்கள் நன்கு இருப்பதாக உணர்ந்தால் எழுந்து உட்காரவோ படுக்கையைச் சுற்றி மெல்ல நடக்கவோ ஊக்கிவிக்கப்படுவீர்கள்.

5. உங்கள் மருத்துவரின் குறிப்பின் படி உங்களுக்கு பானமோ, உணவோ தரப்படும்.அறுவை மருத்துவம் நடந்து முடிந்த 1-6 நாட்களில்


1. அறுவை மருத்துவம் நடந்த இடத்தில் அளவான இயக்கம் இருப்பதை உணர்வீர்கள்.

2. குப்பியில் 20 மி.லி க்கும் குறைவான அளவு வடிநீர் இருந்தால் அது அகற்றப்படும்.

3. அறுவை நடந்த பக்கத்தில் உள்ள தோளும், கையும் ஆற்றலைப் பெறவும், அசைவைப் பெறவும் மார்பக ஆலோசகரோ அல்லது பிசியோ தெரபிஸ்டோ உங்களுக்குச் சில எளிய பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பார்.

4. அறுவை நடந்த இடத்தில் வலியிருந்தால் உங்கள் மருத்துவ தாதிக்குச் சொல்லுங்கள். அந்த வலியைப் போக்க அவள் உங்களுக்கு ஒரு மருந்து ஊசி போடக் கூடும்.

5. புற்று அணுக்கள் பரவியுள்ளனவா எனப்பதைப் பரிசீலிக்க ஒரு எலும்பு ஸ்கேன் எடுக்கவும், ஈரலில் அதிரொலி பரிசோதனைக்கும் நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் நாள்

1. உங்கள் மருத்துவர் உங்களைப் பரிசீலித்து நீங்கள் நலமாக இருந்தால் வீட்டிற்கு அனுப்புவார்.

2. உங்களுக்குத் தேவையான மருந்துகளை மருத்துவர் எழுதித்தருவார். அம்மருந்துகளை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பதை மருத்துவக் கடைக்காரர் விளக்குவார்.

3. உங்கள் மருத்துவ தாதி உங்களுக்கு ஒரு விடுப்புக் கடிதமும், மருத்துவ சான்றிதழும், மறுமுறை மருத்துவரை எந்த நாளில் சந்திக்க வேண்டும் என்ற விவரத்தையும், மருத்துவ மனையிலிருந்து நீங்கள் போகுமுன்னர் தருவாள்.

4. நீங்கள் மருத்துவ மனையில் இருக்கும் போது செய்யப்படாதிருந்தால் தீஷீஸீமீ sநீணீஸீ ( இவை என்ன என்று புரியலை. தவறுக்கு மன்னிக்கவும். ) செய்யவும், ஈரலில் அதிர்வொலிப் பரிசோதனை செய்ய வேண்டிய நாளையும் பிற விவரங்களையும் உங்களுக்குத் தெரிவிப்பாள்.

5. மருத்துவரின் தனி சிறப்பு தனியார் மருத்துவமனையில் அறுவை மருத்துவ மருத்துவரை நீங்கள் காண வேண்டிய நாள் விவரமும் தரப்படும்.

குறிப்பு:

வடிகால் குப்பி விலக்கப் படுவதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்படும் நாள் தீர்மானிக்கப்படும். நீங்கள் நலமாக இருந்தால் நீங்கள் வடிகால் குப்பியுடனேயே வீட்டிற்குப் போகலாம். அதை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது குறித்து மருத்துவ தாதி உங்களுக்கு கற்றுக் கொடுப்பாள். மருத்துவரது தனிச் சிறப்பு மருத்துவ மனையின் மருத்துவர் அவற்றை நீக்கலாமா என்பதையும் நிர்ணயிப்பார்.

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 3

அறுவை மருத்துவத்தின் வகைகள்:-

அ. லம்பாக்டமி (Lumpectomy)

இந்த வகை அறுவை மருத்துவத்தில் மார்பகம் அப்படியே இருக்கும் மார்பகக் கட்டியும், அதைச் சுற்றியுள்ள சாதாரண இழைமங்கள் சிலவும் அறுத்து அகற்றப்படும்.

ஆ. மாஸ்டெக்டமி (Mastectomy)
இதில் பல வகைகள் உள்ளன.


சாதாரண மாஸ்டெக்டமி (Simple mastectomy)

இந்த முறையில் அக்குளிலுள்ள லிம்ப் நோட்களைச் சுத்தப்படுத்தி, பத்திரப்படுத்தி விட்டு மார்பகம் அறுத்து முழுதும் அகற்றப்படும்.
ரேடிகல் மாஸ்டெக்டமி:-

இந்த முறையில் மார்பகம் முழுவதும் அக்குளுக்குரிய லிம்ப் நோட்களும் சிறிது மார்பக சுற்று சதையும் அறுத்து அகற்றப்படும். புற்றுநோய் மார்பக சுற்றுச்சதையில் பரவியிருந்தால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சை நடத்தப்படும். பெரும்பாலான ஸ்டெக்டமி நோயாளிகளுக்கு அந்த அறுவை மருத்துவத்தின் போதோ அல்லது சில மாதங்களுக்குப் பிறகுச் செய்யப்படும் தனி அறுவை மருத்துவத்தின் போது மார்பக மீட்டுருவாக்கம் ( re construction) செய்யப்படும்.

மாடிபைட் ரேடிகல் மாஸ்டெக்டமி (Modified)
இந்த முறையில் மார்பகமும் கை அக்குளின் கீழுள்ள சில லிம்ப் நோட்களும் அறுத்து அகற்றப்படும். மார்பு சதைகளும், அப்படியே பத்திரமாக விட்டு வைக்கப் படுவதால் மார்பகச் சுற்று வெளித் தோற்றமும், கையின் ஆற்றலும் பாதிக்கப்படாது. எளிதில் சீராகி விடும். இதுதான் தரமான மாஸ்டெக்டமி முறையாகும். இதில் அக்குளின் கீழுள்ள லிம்ப் நோட்கள் அகற்றுவதுடன் கூடிய சாதாரண மாஸ்டெக்டமியும் ( மாஸ்எடக்டமியும் ) அடங்கும்.


கதிர்பாய்ச்சு மருத்துவ முறை (Radiation thoraphy)
ரேடியேஷன் தெரபியில் (இதை ரேடியோ தெரபி என்றும் கூறுவார்கள்) புற்றுநோய் அணுக்களை அழித்து அவை மேலும் வளராமல் தடுப்பதற்கு ஆற்றல் வாய்ந்த எக்ஸ்-ரேக்களைப் பயன் படுத்துவார்கள். இந்தக் கதிர்கள் சாதாரணமாக வெளியிலுள்ள ரேடியோ பொருட்களிலிருந்து வெளிவந்து இயந்திரத்தின் உதவியால் மார்பகத்தை நோக்கிப் பாய்ச்சப் படுவதால் வெளிப்புறக் கதிர்வீச்சு (External rerdiction) என்று கூறப்படும். கதிர் பாய்ச்சு மருத்துவ முறை இப்போது பெரும்பாலும் லிம்பெக்டமி உதவியுடன் இணைந்து தரப்படுகிறது. இது மெஸ்டெக்டமிக்குப் பிறகு பெரிதும் தேவைப் படுவதில்லை.
சிஸ்டமிக் டிரீட்மெண்ட்:-
உடலமைப்பு முழுதும் சார்ந்த இந்த மருத்துவத்தில் கீழ்க்கண்டவை அடங்கும்.
1. கீமோ தெரபி
புற்று அணுக்களை அழிக்க மருந்துகளைப் பயன்படுத்துவது இம்முறை மருத்துவமாகும். இது வழக்கமாக மருந்துகளின் கலவையாகும். இம்மருந்துகள் வாய் வழியாகவோ, ஊசியின் மூலமோ தரப்படும். கீமோ தெரபி உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாகும். ஏனென்றால் தரப்படும் மருந்துகள் இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுதும் பயணம் செய்யும். இது சுழற்சியாக தரப்படும். அதாவது மருத்துவ காலம், தேறும் காலம் மீண்டும் மருத்துவ காலம் என்று விட்டு விட்டு ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும்.
2. ஹர்மோனல் தெரபி
புற்றுநோய் அணுக்கள் வளரத் தேவையான ஹார்மோன்களிடமிருந்து தள்ளி வைக்கும் மருத்துவ முறையாகும். இந்த மருத்துவத்தில் ஹார்மோன்கள் பணி செய்யும் முறையை மாற்றும் மருந்துகள் பயன்படுத்தப்படும். இதில் பெண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவமும் அடங்கும். அது உடலமைப்பு முழுதும் சார்ந்த மருத்துவ முறையாதலால் உடல் முழுதுமுள்ள புற்று நோய் அணுக்களை பாதிக்கும்.

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 2

மார்பகப் புற்றுநோயின் படி நிலைகள் (stages)
மார்பகப் புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை:-முதல்படிநிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னமும் மார்பகத்தைத் தவிர வேறெங்கும் பரவில்லை என்றும், கட்டியின் சுற்றளவு 2.5 செ.மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.


2. இரண்டாம் படி நிலை:-அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை:-பொதுவாக மூன்றாம் படிநிலையை முதிர்ந்த புற்றுநோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பகச் சுவர் அல்லது மேல் தோலில் இதில் பரவி உள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

4. நான்காம் படி நிலை:-


இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்றுநோயாகும். புற்றுநோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட்கள் அனைத்திலும் பரவி விட்டது என்று பொருள்.


மீண்டும் வரும் புற்று நோய் (Recurrent Cancer)

மீண்டும் வரும் புற்றுநோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப் பட்ட பின்னரும் அல்லது அழிக்கப் பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்றுநோயணுக்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்றுநோய் பரவி விட்டிருந்தால் புற்றுநோய் மீண்டும் வரும்.

அறுவை மருத்துவம் என்றால் என்ன?

கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனைச் சாலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள், நோய் உள்ள படிநிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். இந்த மருத்துவம் லோகல் அல்லது சிங்டமிக் முறையாக இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவங்களை பெறுவார். உங்கள் மருத்துவர் மருத்துவ திட்டத்தை உங்களுடன் கலந்து பேசுவார்.

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது ?

மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயின் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்துவம் என்பது தனிப்பட்டது அல்லது முறைமையானது. ?? ஒன்றோ அல்லது பல இணைந்த மருத்துவத்தை ஒருவர் பெறலாம். உங்கள் மருத்துவ திட்டத்தைப்பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கிக் கூறுவார்.


லோகல் மருத்துவம்:-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழித்தலோ கட்டுப்படுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்சும் மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

அறுவை மருத்துவம்:-

அறுவை மருத்துவம் என்பது மார்பகக் புற்று நோய்க்கான மிகச் சாதாரணமான மருத்துவ முறையாகும். இந்த அறுவை மருத்துவத்தின் பயன்கள், சிக்கல்கள், எதிர்பார்க்கும் முடிவுகள் குறித்து உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்குவார்.

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் - 1

பெண்களுக்கு என்று ஏற்படும் சிலவகை நோய்களில், இந்த மார்பக புற்று நோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இவை நான் படித்தது. நல்ல விசயம் உங்கள் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கே இடுகிறேன்...

இவை சிங்கப்பூர் சாங்கி மருத்துவமனையின் தளத்தில் இடப்பட்ட பதிவு.

அது உங்களுக்காக.....

மார்பகம் என்றால் என்ன?ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ் (lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்புத் தொங்கு சதைகளானது. ஒவ்வொரு தொங்கு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் சிறு முனைப் பகுதி குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சிறு இதழ்கள், முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.

இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோல் (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்பகத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றது.


ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப் (lymph) எனப்படும் வர்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes) எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன.

இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குளின் மேலேயும் தோட்பட்டை எலும்புகளின் மேலும் மார்பகங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.


மார்பகப் புற்று நோய் என்றால் என்ன?

மார்பகப் புற்று நோய் என்றால், மார்பகத்தில் உள்ள சில அணுக்கள் அளவுக்கதிகமாக வளர்வதாகும். புற்று அணுக்கள் மற்ற அணுக்களைக் காட்டிலும் பல வகைகளில் வேறுபட்டிருக்கும். அவை வேகமாகப் பிரிந்து வளர்ந்து சுற்றிலுமுள்ள இழைமங்களை (tissues) ஆக்கிரமிக்கும் .


மார்பகப் புற்று நோயின் அறிகுறிகள் என்ன?

துவக்க நிலை மார்பகப் புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பகப் புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் அறிகுறியும் இருக்காது.


புற்றுநோய் வளர வளர கீழ்க்கண்ட அறிகுறிகள் ஏற்படும்.

1, வீக்கம் அல்லது மார்பகம் அல்லது அக்குள் பகுதி தடிக்கும்.

2. மார்பகத்தின் அளவும் வடிவும் மாறுபடும்.

3. முலைக் காம்பிலிருந்து இரத்தமோ வேறு திரவமோ கசியும்.

4. மார்பகத்தின் தோல், கருப்பு வளையம், முலைக்காம்பு முதலியவற்றின் வண்ணம் மாறும். (குழிவிழுதல், மடிப்பு விழுதல், சொரசொரத்தல்)

5. முலைக்காம்பு உள்ளிழுத்துக் கொள்ளும்.

மேற்கண்ட மாறுதல்களில் ஏதேனும் தென்பட்டால் உடனே உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
எவ்வாறு மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுகிறது?

மார்பகப் புற்றுநோயைக் கீழ்க்கண்ட முறைகளில் கண்டறியலாம்.
மருத்துவ வரலாறு:-
உங்களுக்கு மார்பக புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவ வரலாறு உதவும். உங்கள் மருத்துவர் குடும்பத்தில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்ததா, இருக்கிறதா என்று கேட்டறிவார். உங்களுடைய மாத விலக்கு விவரங்கள், உங்கள் மார்பகக் கட்டியின் புறத் தன்மைகள் குறித்து உங்களிடம் கேட்பார்.
மார்பகக் கட்டியைத் தொட்டுப் பார்த்தல்:-
உங்கள் மருத்துவர் உங்கள் மார்பகத்தைத் தொட்டுப் பரிசீலனை செய்து மார்பகக் கட்டியின் இருப்பிடம், அளவு, மார்பக லிம்ப் மற்றும் லிம்ப் நோட்ஸ்களின் பொதுத்தன்மையைக் கண்டறிவார்.

மம்மோ கிராம் (mammo gram)
உங்கள் மருத்துவர் மம்மோகிராம் சோதனையைச் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கூறலாம். மார்பகக் கட்டிகளை, அதிலும் மிகச் சிறியவற்றைக் கண்டு பிடிக்க உதவும் ஒருவகை பயன்மிக்க மார்பகத்தை எக்ஸ்ரே பிடிக்கும் தொழில் நுட்பமாகும் இது. ஒரு தட்டு போன்ற கருவியால் உங்கள் மார்பகத்தைத் தட்டையாக அழுத்தி மார்பகத்தின் தெள்ளிய வடிவத்தை அறிய முயலப்படும்.
உங்கள் மார்பகக் கட்டியின் முக்கிய விவரங்களை மம்மோகிராம் உங்கள் மருத்துவருக்கு அளிக்கும். மம்மோகிராமில் ஏதேனும் ஒரு பகுதி ஐயம் உண்டாக்கினாலும், தெளிவாக இல்லாவிட்டாலும் மற்றொரு எக்ஸ்-ரே எடுக்க வேண்டியிருக்கும்.
அதிரொலி (Ultra sound)
அதிரொலி என்பது அதிக அதிர்வுடன் கூடிய ஒலியலைகளை மார்பகத்தின் மீது செலுத்தி மார்பகத்தின் கட்டி கெட்டியாக (திடமாக) உள்ளதா அல்லது திரவம் நிறைந்துள்ளதா என்று கண்டறியலாம். மம்மோ கிராபியுடனும் இந்தப் பரிசீலனையைச் செய்யலாம்.
நீடில் பயோப்சி (Needle Biopsy)
உங்கள் மருத்துவர் ஒரு மெல்லிய ஊசியால் உங்கள் மார்பகக் கட்டியிலிருந்து ஒரு சில அணுக்களை எடுத்து நுண்ணோக்கியில் பரிசீலித்து மார்பக புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று கண்டறிவார். சில சமயங்களில் ஒரு பெரிய ஊசியை கெட்டியான கட்டியின் மைய இயைமத்தை எடுக்கப் பயன்படுத்துவார்.

மார்பகப் புற்று நோயின் வகைகள்:-
மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. மிகச் சாதாரண வகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும், மற்ற எல்லா லிம்ப் நோட்களிலும், எலும்பு, ஈரல், நுரையீரல் முதலிய அங்கங்களிலும் ஏற்கனவே பரவி விட்டது என்பதை தெறியலாம். அவ்வாறு மார்பகப் புற்றுநோய் எங்கும் பரவுகிறதோ என முற்றிலும் பரவிய புற்றுநோய் எனலாம்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "