...

"வாழ்க வளமுடன்"

09 அக்டோபர், 2010

இயற்க்கை அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்

அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செய்யும் பொழுதல்லவா அது!



நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.
*
ஆமாம்…
காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.

*

`அதிகாலையில் எழுவது ஆரோக்கியமும், அறிவும் தரும்’ என்கிறார் பிராங்கிளின்.

*

1. சீக்கிரம் எழுந்தால் அதிகாலையை போன்ற அமைதி உங்களிடமும் ஒட்டிக் கொள்ளும். வாகன இயக்கம், ரேடியோ, டி.வி. இரைச்சல், பக்கத்து வீடுகளின் கூச்சல், குழந்தைகளின் அழுகுரல் என்று எதுவும் உங்களுக்குத் தொந்தரவு செய்யாது.

*

2. எங்கும் அமைதி நிலவ நீங்கள் நிம்மதியாக செயல்படலாம். அதிகாலையை போன்ற அருமையான பொழுதை வேறு எப்போதும் அனுபவிக்கவே முடியாது. அந்த வேளைதான் சிந்திக்க, செயல்பட, படிக்க, சுவாசிக்க என பலவற்றுக்கும் ஏற்றது.

*

3. காலையில் படுக்கையில் இருந்து துள்ளிக்குதித்து எழுந்திருங்கள். சோம்பேறித்தனமாக எழுந்தால் அன்றைய தினமே சோம்பலாகத்தான் இருக்கும். அவசரம் அவசரமாக வேலைகளை செய்ய வேண்டிவரும்.

*

4. பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படும். பிறகு அலுவலகத்திற்கு கிளம்ப தாமதம் ஆகும். இப்படி அடுக்கடுக்கான சிரமங்கள் தொடர, நிம்மதியே போய்விடும்.

*

5. சீக்கிரமாக எழுந்துவிட்டால் பாதி வேலையை சூரியன் உதிக்கும் முன்பே முடித்துவிட்டு நிதானமாக இருக்கலாம். இதனால் மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் நாள் இறுதிவரை இன்பமாகவே தொடரும்.

*

6. காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் காலை உணவை நிதானமாக சமைத்து ருசித்து சாப்பிடலாம். காலை உணவு, நலமான வாழ்வுக்கு தினமும் சாப்பிடும் உற்சாக டானிக் போன்றது. சுறுசுறுப்புக்கும் உதவும்.

*

7. சோம்பேறித்தனமாக படுத்திருந்து காலை உணவை சாப்பிடும் நேரத்திற்கு எழுந்திருந்தால், பணிக்குச் செல்லும் அவசரத்தில் உணவை தவிர்க்கும் சூழல் கூட வரும். இதனால் எரிச்சலும், சோம்பலும் ஒட்டிக் கொள்ளும்.

*

8. காலையில் எழுந்து `ஹாயாக’ அமர்ந்து டீ குடித்துக் கொண்டே பேப்பர் படித்துவிட்டு பரபரப்பில்லாமல் காலை உணவைச் சாப்பிட்டால் கிடைக்கும் சுகமே சுகம்.



9. தேகபயிற்சி செய்ய உகந்ததும் காலை பொழுதுதான். மற்ற நேரங்களைவிட அதிகாலை வேளை தான் உடற்பயிற்சிக்கு ஏற்ற வேளை. நலமாக வாழ்வதற்காக நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று உடற்பயிற்சி. அதனால் கிடைக்கும் பலன்களும் பலபல. காலையில் உடற்பயிற்சி செய்வதை எந்தக் காரணத்திற்காகவும் நிறுத்தாதீர்கள்.

*

10. காலை வேளையிலேயே எழுதுவது, மெயில் பார்பது போன்ற சின்னச் சின்ன வேலைகளை செய்து முடித்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் ஜாலியாகக் கழிக்கலாம்.

*

11. உங்கள் லட்சியத் திட்டங்கள் பற்றி அதிகாலையில் சிந்தியுங்கள். அப்போது குழப்பங்களுக்குக் கூட தெளிவான வழி கிடைக்கும். எழுந்தவுடன் அன்று முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுக் கொள்ளுங்கள். உடனே லட்சிய பயணத்தை தொடங்குங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

*

12.ஒவ்வொரு வேலையையும் சரியாகச் செய்து முடிக்க வேண்டுமானால் அதற்கு காலையில் எழுவது தான் சரியான செயல். ஒரு வேலையில் தாமதமானாலும் அடுத்தடுத்த தாமதங்கள் உங்கள் மதிப்பை குறைப்பதோடு, வேலைகளையும் முடக்கும்.


***

நீங்கள் சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. காலையில் எழுந்திருக்கத்தான் முடியவில்லை என்கிறீர்களா?


அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

*

1. முதலில் சில நாட்கள் அலாரம் வைத்து எழுந்திருக்கலாம்.

*

2. அலாரத்தை படுக்கையில் வைத்தால் மனம் அணைத்துவிட்டு தூங்கத்தான் சொல்லும். எனவே எழுந்து சென்று `ஆப்’ செய்யும் தொலைவில் அலாரத்தை வையுங்கள்.

*

3. இரவில் 2 டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு படுத்தால் காலையில் தானாகவே எழுந்திருப்பீர்கள். எழுந்தவுடன் மீண்டும் படுக்காமல் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சோம்பல் ஓடியே போகும்.



***

நன்றி z9tech.com

***



"வாழ்க வளமுடன்"

உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்

நவீன வாழ்க்கைச் சூழலில் மிகப்பெரும் சவாலாய், பூதாகரமான பிரச்சனையாய் எழுந்துள்ளது ‘உடல் பருமன்’.





இது எந்த வயதிலும் எவருக்கும் வரலாம். பருவமடைந்த பின் ஆண்களை விடப் பெண்களிடம் பரவலாக அதிகளவு உடல் பருமன் ஏற்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்குப் பின் அல்லது கர்ப்பத்திற்குபின் அல்லது மாத சுழற்சி முற்றுப்பெற்றபின் உடல் பருமன் உண்டாகிறது.

*

மனிதரைத் தவிர பிற உயிரினங்களில்.... எலி, பூனை, நாய், ஆடு, மாடு, செடி, கொடி, மரம்... அனைத்திலும் அவற்றின் இயற்கையான உடல் அமைப்பு மற்றும் எடையைக் கடந்து மிதமிஞ்சி உடல் கொழுத்து நடக்க இயலாமல், மூச்சுவிட இயலாமல் அவதிப்படுவதைப் பார்க்கமுடியாது. மனிதர்கள் மட்டுமே தம் அளவுக்கு மீறி யானைகள் போல, மாமிசக் குன்றுகள் போல மாறுகின்றனர்.

*

அதிக எடையும் உடல் பருமனும்:

‘அதிக எடை’ என்பதை எல்லா சந்தர்ப்பங்களிலும் ‘அதிக பருமன்’ என்று கூற முடியாது.

*

உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீஜ்ர்கள் சராசரி எடையைவிடச் சற்று அதிகமாக இருப்பார்கள். ஆனாலும் அவர்களிடம் அதிகக் கொழுப்புச்சத்தி இருப்பதில்லை.

*

அது சதை வளர்ச்சி. கொழுப்பின் அளவும் அதிகரித்து, உடலின் சராசரி எடையும் அதிகமிருந்தால் அது உடல் பருமனின்றி வேறில்லை.

***

மனித எடையை தோராயமாகக் கணக்கிடும் முறை:

ஒருவரின் உயரம் சென்டிமீட்டர் கணக்கில் எவ்வளவோ அதில் 100ஐக் கழிக்க வேண்டும்.

*

பின் அதிலிருந்து 90 சதவீத அளவை அறியவேண்டும். ஒருவர் 170 சென்டி மீட்டர் உயரமிருந்தால் 100ஐக் கழிக்கும்போது 70 வருகிறது.


*


அதில் 90 சதவீதம் கணக்கிட்டால் 63 வருகிறது. 170 செ.மீ. உயரமுள்ளவருக்கு 63 கிலோ எடைதான் ஏறத்தாழ சரியான எடையாக இருக்கும்.

*

இந்த எடையில் பத்து சதவீதம் அதிகரித்தால் கூட ‘உடல் பருமன்’ என்று கூற முடியாது.

*

மாறாக, அதற்கும் மேல் தொடர்ந்து எடை அதிகரிக்குமானால் உடல் பருமன் ஏற்பட்டே தீரும்.

*

சராசரி எடையில் 10 முதல் 15 சதம் அதிகரித்தால் அதனைச் சிறிதளவு பருமன் எனக் கருதலாம்.. 15 முதல் 20 சதம் அதிகரித்தால் நடுத்தர பருமன் எனக் கருதலாம். 20 சதவீதத்திற்கும் மேல் எடை அதிகரித்தால் அதிக பருமன் என அறியலாம்.

*

சிறிதளவு பருமனாக இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல் தொந்தரவுகள் இல்லாமலிருக்கலாம். இருப்பினும் தோற்றம் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்ற அழகுக் கோணத்திலிருந்து பார்ப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர்.

*

நடுத்தர பருமனாளிகளும் அதிக எடையுள்ள குண்டர்களும் உடல் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாலும், எடையைச் சுமக்க முடியாமலும், மூச்சு வாங்குவதாலும், இதர கடும் நோய்களாலும் அவதிக்கு ஆளாகின்றனர்.

****

உடல் பருமனுக்கு காரணங்கள் என்ன?

1. உடலில் அன்றாட இயக்கங்களுக்கு வேண்டிய சக்தியளிப்பதற்குத் தேவையான அளவைவிட அதிகளவு உணவு உண்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் கொழுப்பாகச் சேமிக்கப்படுகிறது.

*

2. தேவையைவிட ஒருவர் தினம் 50 கலோரி அதிகம் எடுத்தால் ஒரே ஆண்டுக்குள் 2 கிலோ எடை அதிகரித்துவிடும்.

*

3. கலோரி என்பது ஒன்றரை லிட்டர் நீரை 15 டிகிரி செண்டிகிரேடிலிருந்து 160 டிகிரி வரைச் சூடாக்கத் தேவையான உஷ்ணசக்தி. இக்கலோரியை (எரிசக்தியை) உணவுகள், காய்கறிகள், பழங்கள் மூலம் நாம் பெறுகிறோம். வெவ்வேறு உணவுப் பொருட்களில் வெவ்வேறு அளவு கலோரிகள் கிடைக்கின்றன.

*

4. வசதியாக, உட்கார்ந்தே பணிபுரியும் சொகுசுப் பேர்வழிகளுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 20 கலோரிகள் தேவைப்படலாம்.

*

5. ஓரளவு உடலுழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களின் உடல் எடைக்கு ஒரு கிலோவிற்கு 25 கலோரிகள் தேவைப்படலாம்.

*

6. அதிகம் உடற்பயிற்சி, உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அவர்களது எடையில் ஒரு கிலோவிற்கு 30 கலோரிகள் தேவைப்படலாம்.

***


நாம் உண்ணும் உணவின் அளவைவிட, தரத்தையும் கலோரிகளையும் சேர்த்து கொள்ளவேண்டும்:


100 கிராம் வெள்ளரியில் 16 கலோரி சத்தும்,

100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 600 கலோரி சத்தும்,

1 கிராம் புரதத்தில் 4 கலோரி சத்தும்,

1 கிராம் கார்போஹைட்ரேட்டில் 4 கலோரி சத்தும்,

1 கிராம் கொழுப்பில் 9 கலோரி சத்தும்,

1 சப்பாத்தியில் 100 கலோரிகளும்,

1 பிஸ்கட்டில் 40 கலோரிகளும்,

75 கிராம் சாதத்தில் 100 கலோரிகளும்,

1 அவுன்ஸ் ஆட்டுக்கறியில் 500 கலோரிகளும்,

1 அவுன்ஸ் மீனில் 360 கலோரிகளும் கிடைக்கின்றன.



*

வயது வந்த ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 1400 முதல் 1900 வரை கலோரிகள் தேவைப்படக்கூடும். இதில் குறைவு ஏற்பட்டாலும், அதிகம் ஏற்பட்டாலும் உடலின் அமைப்பு, செயல்பாடுகள் பாதிக்கப்படும்.


***

ஒழுங்கற்ற உணவுப் பழக்கம்:


1. ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும், அதிகக் கொழுப்பு உணவுகள் உண்பதும் குறிப்பாக எண்ணெய் பண்டங்கள், பால் பொருட்கள், அசைவ உணவுகள், சாக்லேட் இனிப்புகள், ஐஸ்கிரீம், மது, நெய், வெண்ணெய், முட்டை மஞ்சள் கரு போன்றவைகளால் உடல் எடை அதிகரிக்கிறது.

*

2. வாயுப் பண்டங்களாலும் (பருப்பு, உருளைகிழங்கு) எடை கூடுகிறது. இருவேளை உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகள் மெல்லும் பழக்கமும், டிவி பார்த்தபடி அல்லது வேறு வேலையின்போது நொறுக்குத்தீனிகள் தின்னும் பழக்கமும் உடல்எடையை அதிகரிக்கச் செய்கின்றன.

*

3. உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ இல்லாததால், பகலில் அதிகளவு சாப்பிட்டுவிட்டு அதிகம் நேரம் தூங்குவதால், பொதுவாக அதிக ஓய்வும் உறக்கமும் கொள்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பாரம்பரிய தன்மை காரணமாக பருமனான பெற்றோருக்கு பருமனான குழந்தைகள் பிறக்கின்றனர்.

*

4. ஹார்மோன் இயக்கக் கோளாறுகளாலும், அடிக்கடி பிரசவங்கள், கருச்சிதைவுகள், அறுவைச் சிகிச்சைகளைத் தொடர்ந்தும், NSAID போன்ற சில ஆங்கில மருந்துகள், உடலில் நீர் திரவத் தேக்கங்கள் உண்டாக்கும் ஸ்டீராய்டுகள், கருத்தடை மாத்திரைகள் போன்ற காரணங்களாலும் உடல் பருமன் ஏற்படுகின்றது.

*

5. மேலும், இவை உடல் பருமனை உண்டாக்குவதில் முக்கியக் குற்றவாளிகளாகவும் உள்ளன.

***

உடல் பருமனால் பல பிரச்சனைகள் :

1. உடல் பருமனால் ஒரு மனிதனுக்கு உடல்ரீதியாக மட்டுமின்றி உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். அதிக பருமனால் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய பல நோய்கள் தாக்குகின்றன.

*

2. மாரடைப்பு, உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை, இடுப்பு எலும்புகள், முதுகுத்தண்டு, முழங்கால் மூட்டுகள் தேய்மானம், குடலிறக்கம், அசுத்த ரத்த நாளப் புடைப்பு... போன்ற பல மோசமான நோய்கள் முற்றுகையிடுகின்றன.

*

3. மந்த இயக்கம், சோர்வு, பலவீனம் காரணமாக அடிக்கடி கீழே விழ நேரிடலாம் அல்லது விபத்து நேரிடலாம். வீட்டில், வயலில், தொழிற்சாலையில், இதரபணியிடங்களில் நிற்பது, நடப்பது, பணியாற்றுவதும், உடல் சுகாதாரம் பேணுவதும் மிகச்சிரமம்.

*

4. உடல் பருமன் ஒருவித நரம்பியல் நோயை ஏற்படுத்துகிறது. உளவியல் ரீதியாக மனச்சோர்வு, தன்னம்பிக்கை குறைவு, பயம், தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பாதிக்கின்றன.

*

5. தனது பருமன் தனக்கு மட்டுமின்றி குடும்பத் திற்கும், உலகத்திற்கும் சுமை எனும் உணர்வு ஏற்பட்டு விரக்தியும் மன அழுத்தமும் மேலோங்கும்.


***


என்ன செய்யவேண்டும்?

1. ஓரளவு மட்டுமே எடை அதிகமிருப்பவர்கள் அதிக மாவுப் பொருள், கொழுப்பு பொருள் உண்பதைக் குறைக்கவேண்டும். ஓரளவு உடற் பயிற்சி அல்லது யோகா மேற்கொள்ளவேண்டும்.

*

2. அதிக எடை எனில், உணவில் அதிகக் கட்டுப்பாடுகள் தேவை. உபவாசம், பழவகைள், வாரம் 1 நாள் திரவ உணவுகள் மட்டும் அருந்துதல் எனப் பழக்கப்படுத்தினால் பசியின் அளவு குறையும்.

*

3. குறைந்தது மாதம் 1 கிலோ எடையேனும் குறையும். கொழுப்பு மற்றும் மாவு உணவுகளுக்குப் பதிலாக கணிசமான அளவு பழங்கள் உண்ண வேண்டும்.

*

4. திறந்த வெளிக் காற்றில் அன்றாடம் உடற்பயிற்சி, யோகா, சுறுசுறுப்பான நடை போன்றவற்றை அவரவர் எடை, வயது, உடற்தகுதிக்கேற்ப எதுவாகவும் மேற்கொள்ளலாம்.

*

5. நிலையில் எடை குறையலாம். அடுத்தடுத்து பயன்படுத்தும்போது அவை பயனற்றவை என்று உறுதியாகும். அடிப்படையாக வாழ்க்கை முறையை, உணவு முறையை மாற்ற வேண்டும்.

***

உடல் பருமனைக் கட்டுப்படுத்த போருக்குத் தயாராக வேண்டும்:

1. உணவுப் பழக்கங்களை ஒழுங்குப் படுத்தவேண்டும்

*

2. வாழ்க்கை நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த வேண்டும்

*

3. பக்கவிளைவு இல்லாத உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கு ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக உதவுகின்றன.

***

உடல் பருமனுக்கு ஹோமியோபதி சிகிச்சை :

ஹோமியோபதியில் நோயாளியின் உடலமைப்பிற்கேற்ற மருந்து மிக முக்கியம். அதனுடன் பருமனைக் குறைக்க ஹோமியோ மேதைகள் சில மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

*

‘Prescriber’ நூலில் Dr. ஒ.ஏ. கிளார்க் ‘Phytoberry’ தினம் 3 வேளை வீதம் 1 மாதம் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கிறார். பலனளிக்காவிட்டால் Ammonium Brom 3x, Cal.carb30, Cal.ars30 ஒன்றன் பின் ஒன்றாய் முயற்சிக்குமாறு கூறுகிறார்.

*

போயரிக் அவர்கள் ‘Fucus ves Q அல்லது 1 x மருந்தினை (5 முதல் 60 சொட்டுகள் வரை) உணவிற்கு முன் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். அபானவாயு, அஜீரணம், பிடிவாதமான மலச்சிக்கல் குறிகளுடன் உள்ள உடல் பருமனுக்கு இம்மருந்து மிகவும் பொருந்தும் என்கிறார். போயரிக் சுட்டிக்காட்டும் பிற மருந்துகள் Am.brom, Antim crud, Capsicum, Graph, Thyroidene, Lodothyrene.

*

T.P. சாட்டர்ஜி அவர்கள் ‘Hight hights of Homeo Practice’ நூலில் J.H. கிளார்க் பரிந்துரை என்று கூறி Calotropis மருந்தினை 3 மாத காலம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். வயிறு பெருத்த ஆண்களுக்கு Nuxvomica 10m, வயிறு பெருத்த பெண்களுக்கு Nuxvmomica 200 மருந்தினை சாட்டர்ஜி பரிந்துரை செய்கிறார்.


***

by-டாக்டர். S. வெங்கடாசலம்
நன்றி : கீற்று.காம்
நன்றி டாக்டர்

***


"வாழ்க வளமுடன்"

பசியும் உணவுப் பழக்கங்களும், நமது உடலும்..

நம் உடல் நம் தாயின் வயிற்றில் கருவாக உருப்பெரும் முதல் மரணம் வரை இயங்கிக் கொண்டே உள்ளது.




உடல் இயக்கத்திற்குத் தேவையான சத்துக்கள் உணவின் மூலமே கிடைக்கின்றன. தாயின் வயிற்றில் கருவாக, உயிர்பெற்று, கரு வளர்ச்சிக்குக் காரணமான உணவு, கருப்பையில் குழந்தையோடு வளரும் ‘நஞ்சு’ (உண்மையில் அது நஞ்சல்ல, உணவுச் சேமிப்பு கிடங்கு) மூலம் தாய் உட்கொள்ளும் உணவு குழந்தைக்கும் செல்கிறது.

*

நஞ்சிலிருந்து வெளிப்படும் தொப்புள் கொடி மூலம் குழந்தைக்கு உணவு செல்கிறது. கரு உருவாகும் பொழுது ஏற்படும் உணவுத் தேவை மரணம் வரை நிகழும் ஒரு தேவையன்றோ!

*

நம் மூளையின் ஒரு பகுதியான கீழ்முகுளம் நம் உணவுத் தேவையை கட்டுப்படுத்தும் உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உறுப்பாகும். உடலிற்கு சத்துத்தேவை ஏற்படும்பொழுது இப் பகுதி அதை உணர்ந்து வயிற்றிற்குச் செல்லும் நரம்புகளை தூண்டிவிடுகின்றன.

*

உடனே நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. நாமும் உணவை நாடுகிறோம். எல்லா உயிரிகளுக்கும் பொதுவான ஒரு நிகழ்வாக உள்ளதே இந்த நிலைதான். பொதுவாக ‘பசி’ என்ற நிலை இல்லாவிடில் நாம் உண்ண வேண்டும் என்றே நினைக்க மாட்டோம்’.

*

‘பசித்தபின் புசி’ என்ற பழமொழியும் நாமறிவோம். பொதுவாக ‘பசி உணர்வு’ என்பது மகிழ்ச்சியான உணர்வல்ல.

*

கீழ்முகுளத்தால் உடல் சோர்வு உணரப்படும் பொழுது, மேல்வயிற்றிற்குச் செல்லும் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இந்த நரம்புகள் தூண்டுதல், மனச்சோர்வு, உடல் சோர்வு ஆகியவற்றை அதிகரிப்பதுடன், எரிச்சல், கோபம், ஆத்திரம் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

*

சில நேரங்களில் தலைவலி, குமட்டல் போன்றவையும் ஏற்படும். வயிறுபுரட்டல், மேல் வயிற்று வலி போன்றவையும் கூட சிலருக்கு உண்டாகும். இந்த நரம்புத் தூண்டுதலால் வயிறு சுருங்கி விரியும்.

*

இதனால் வயிற்றுப் பகுதி மட்டுமல்லாது, வயிற்று குடல் இணைப்புப் பகுதியும் சுருங்கி விரியும். இதை ‘பசி சுருங்கல்’ என்று அழைப்பர். இது நிகழும் போழுது பசி உணர்வு மேலும் அதிகப்படும்.

*

சற்று நேரத்தில் தானாகவே இந்த சுருங்கல்கள் அடங்கிவிடும். கான்சர் போன்ற நோய்களில் இந்த சுருங்கல்கள் முழுமையாக நிகழாது. இதனால் பசி உண்டாகாது.

*

சிலவகை நோய்களில் ‘பசியின்மை’ ஏற்படுவது மட்டுமன்றி உணவின் மீது வெறுப்பும் கூட உண்டாகும். இவ்வகை நோயாளிகள் உணவு எடுத்துக்கொள்ள மிகவும் தொல்லைப்படுவர். ஆக பசியுணர்வு நம் உடலின் ஓர் அவசியத் தேவையெனில் மிகையாகாது.

***


உண்ணும் விருப்பம்:


பசி உணர்வு ஒரு தொல்லையான உணர்வெனில் உண்ணும் விருப்பம் ஒரு மகிழ்ச்சியான உணர்வாகும். பசி உணர்வு வயிற்றில் ஏற்படும் என்றால் உண்ணும் விருப்ப உணர்வு வாயிலும், அன்னத்திலும் தூண்டப்படும் ஓர் உணர்வாகும்.

*

சில நேரங்களில் இந்த விருப்ப உணர்வு பசியை தூண்டும் ஓர் உணர்வாகவும் இருக்கும். “அந்த உணவை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது” என்பது நாம் அடிக்கடி நினைக்கும், கேட்கும் ஒரு வாக்கியமாகும்.

*

சில நேரங்களில் உணவு சமைக்கும் பொழுது உண்டாகும் மணம் கூட உணவு விருப்ப உணர்வை தூண்டக் கூடியதாக இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் உணர்வு உட்கொள்பவர்களுக்கு, குறிப்பிட்ட அந்த நேரத்தில் உணவு விருப்ப உணர்வையும், பசி உணர்வையும் தானாக வாயும், வயிறும் உண்டாக்கி விடுவதையும் நாமறிவோம்.

***

உணவுப் பழக்கங்கள்:


உணவுப் பழக்கங்களை பொருத்தளவில், இது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். சிலர் சைவ உணவுப் பிரியர்கள். சிலர் அசைவ உணவுப் பிரியர்கள். அதிலும் கூட சிலருக்குக் கீரைபிடிக்கும், சிலருக்கு காய்கள் பிடிக்கும்.

*

சிலருக்கு ஆட்டிறைச்சி பிடிக்கும், சிலருக்குக் கோழி இறைச்சி பிடிக்கும். தனிப்பட்ட உணவு விருப்பங்களுக்கு ஏற்ப, வயிறும் அவ்வகை உணவுகளுக்குப் பழகிவிடும். சமீபத்தில் தொலைக் காட்சிகளில் ஒரு காட்சி பார்த்திருப்பீர்கள்.

*

சென்னை பொது மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து ஏராளமான ஆணிகள், கத்தரி, இரும்புச் சாமான்களை எடுத்ததாக மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.

*

உணவுப் பழக்கம் என்பது நாம் எந்த உணவுகளை வயிற்றிற்குக் கொடுத்துப் பழகுகிறோமோ, அதைப் பொருத்தே வயிற்றின் தாங்கும், செரிக்கும் சக்தியும் உண்டாகும்.


*

“ஒருவேளை உணவை ஒழியென்றால் ஒழியாய்,
இருவேளை உணவை ஏளென்றால் ஏளாய்,
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது”


***

by-மரு.இரா.கவுதமன் எம்.டி.எஸ்.,
முக அறுவை மருத்துவர்

நன்றி டாக்டர்.


***

"வாழ்க வளமுடன்"

குடியை நிறுத்த சில தீர்வு!

மது (ஆல்கஹால்) என்றால் என்ன?



1. ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும்.

*

2. ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும்.

*

3. இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

***

குடிநோய் (ஆல்கஹாலிசம்) என்றால் என்ன...?

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

*

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

*

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

*

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

*

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.

***


குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...?


இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

*

இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள்.

*

இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.

***


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?


பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

*

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...?

*

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

*

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

*

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?

*

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.

***

மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?


சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

*

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.

***


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” எவை?

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

*

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

*

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

*

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

*

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

*

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

*

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

*

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

*

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

*

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

*

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

*

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

*

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

*

14. உடற்களைப்பைப் போக்கும்.

*

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

*

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

*

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

*

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.

***

ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் எவை...?

1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

*

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

*

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

*

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

*

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

*

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

*

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

*

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

*

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

*

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

*

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

*

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

*

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

*

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

*

15. கடைகளில் திருடுவது.


***


குடிநோயின் உச்சம்:


1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.



குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள் எவை.?


1. சோதித்துப் பார்க்கும் நிலை:

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

*

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை:

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

*

3. சார்பு நிலை:

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

*

4. தீவிரமடைந்த நிலை:

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.

***


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?


இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.

***

நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்

***



"வாழ்க வளமுடன்"

மூட்டு வலிக்கு சில தீர்வு!

மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?




1. வயதானவர்களைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது மூட்டுவலி. உடல் எடை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

*

2. கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமை, உடலில் தோன்றும் ரசாயன மாற்றங்கள், இளவயதில் உடற்பயிற்சி செய்யாமை போன்றவையும் மூட்டுவலிக்கு காரணமாக அமைகின்றன.

*

3. நன்கு நேராக நிமிர்ந்து, உட்கார, நிற்க பழக வேண்டும். நிற்கும்பொழுது பாதங்களை சற்று அகற்றி வைத்து நிற்பதால் உடல் எடை சமமாகப் பரவும். தோள்களை சரியான நிலையில் வைப்பதாலும், முதுகுத் தண்டை நிமிர்த்தியபடி உட்காருவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

*

4. `ஹைஹீல்ஸ்’ காலணிகளைத் தவிர்க்க வேண்டும். இது இடுப்பு மற்றும் கால் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

*

5. நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அதற்கென உள்ள காலணிகளைப் பயன்படுத்த வேண்டும். கண்டிப்பாக வருடத்திற்கு ஒருமுறை காலணி களை மாற்ற வேண்டும்.

*

6. எந்த வேலையையும் ஒரேடியாக செய்யாமல் சிறிது இடைவெளி விட்டு செய்யலாம். அலுப்பு தோன்றாமல் இருக்க தங்களுக்குப் பிடித்த பாடல்களை, இசையை கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம்.

*

7. வலியின் தன்மை, வலி கூடும், குறையும் நேரம், உடற்பயிற்சி செய்யும் அளவு, எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவரிடம் செல்லும்போது தெரிவிக்க வேண்டும்.

*

8. நிம்மதியான தூக்கம் உடலை அமைதியாகவும், தளர்வாகவும் ஆக்குகிறது. தூங்கும்போது மூட்டுகளும் தளர்வடைகின்றன. 7 முதல் 9 மணி நேர தூக்கம் கட்டாயம் தேவை. பகல் உணவுக்குப் பின் 10-20 நிமிடங்கள் ஓய்வெடுப்பது மூட்டு வலியை நன்கு குறைக்கும்.

*

9. அசைவ உணவைத் தவிர்த்து அதிக காய்கறி, பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து நிறைந்த பால் பொருட்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ளலாம். உப்பைக் குறைத்துக் கொள்வது நல்லது.

*

10. உடற்பயிற்சி தசைகளை வலிமைப்படுத்துகிறது. எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே நல்ல மாற்றத்தை உணர முடியும். வலியை மறப்பதற்கு மற்ற விஷயங்களில் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.

*

வலியைப் பற்றியே நினைக்கும் பொழுது நோயின் தீவிரம் அதிகமாகத் தெரியும்.


***
நன்றி z9tech.com
***

"வாழ்க வளமுடன்"

பல் அழகே முகத்தில் பாதி அழகு :)

பல் பராமரிப்பு குறித்து இதுவரை மருத்துவ உலகம் அவ்வப்போது புதிய கருத்துகளை வாரி வழங்கி கொண்டேயிருக்கின்றது.




நன்றாக பல் தேய்க்க வேண்டும் என்ற கருத்துக்கு மாற்றாக, அதிகமாக தேய்த்தால் பல் எனாமல் போய்விடும் என்ற கருத்து உருவானது.

*

இது தவிர விளம்பரங்களில் வர்ணிக்கப்படும் பற்பசை, பிரஷ் போன்றவற்றின் சிறப்பு பெருமைகளை பல் மருத்துவ நிபுணர்கள் உண்மைக்கு புறம்பானவை என்கின்றனர்.

*

அனைத்து தரப்பிலும் விரிவாக ஆராய்ந்து பல் மருத்துவ நிபுணர்கள் பல் பராமரிப்புக்கு தந்துள்ள பட்டியல்.

***

பல் பராமரிப்புக்கு:

1. 6 முதல் 12 மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்திக்க வேண்டும். பல் மருத்துவமனையில் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.

*

2. மென்மையான பிரஷ்ஷை கொண்டு பற்களை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும்.

*

3. புளோரைடு கலந்த பற்பசையை உபயோகித்து பற்குழி ஏற்படும் அபாயத்தை தவிர்க்க வேண்டும்.

*

4. நமக்கும், பல்லுக்கும் தேவைப்படும் ப்ளோரைடின் அளவை நிர்ணயிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பல் மருத்துவ நிபுணரை நாட வேண்டும்.

*

5. ஏனெனில் ப்ளோரைடு என்பது அதிகமானாலும் குறைந்தாலும் நோய் ஏற்படுத்தும் ஒரு வேதிப்பொருளாகும்.

*

6. பிரஷை 45 டிகிரி சாய்வாக பயன்படுத்த வேண்டும். எந்தவொரு உணவை சாப்பிட்டாலும் பானங்களை குடித்தாலும் வாயை நன்றாக கொப்பளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

*

7. சாதாரண டூத் பிரஷினால் வாயின் உட்பகுதிகளை சுத்தம் செய்ய இயலாத நிலை இருக்குமாயின், பல் மருத்துவ நிபுணர்களை கலந்து ஆலோசித்து அதற்கென மருந்து கடைகளில் உள்ள எளிய, சிறப்பு கருவிகளை வாங்கி உபயோகிக்க வேண்டும்.

*

8. நார்ச்சத்து மிகுந்துள்ள உணவு பொருட்களை சாப்பிடுவது பல்லிற்கு நலம் அளிக்கும்.

*

9. பல், ஈறு சம்பந்தமான எந்தவொரு இடையூறுக்கும் நேரடியாக மருந்து கடைகளுக்கு சென்று மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, பல் மருத்துவ நிபுணரிடம் சென்று மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.


*

10. பற்களை சரியாக துலக்குவது எப்படி என்பதை பல் மருத்துவரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

*

11. பற்களை துலக்கி முடித்த பிறகு, ஈறுகளை சுட்டு விரலால் மெதுவாக மூன்று நிமிஷம் "மசாஜ்' செய்யுங்கள். இது சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி வகுக்கும்.

*

12. மற்றவர்களை எளிதில் கவருவதற்கு நம் சிரிப்பு முக்கியப் பங்காற்றுகிறது. இதற்கு பற்கள் வரிசையாகவும் அழகாகவும் இருப்பது அவசியம். எனவே தினமும் காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்கத் தவறாதீர்கள்.

*

13. ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாகக் கொப்பளிப்பது நல்லது. இதனால் பற்களில் உணவுப் பொருள்கள் தேங்காமல் இருக்கும்.


*


14. குளிர் பானங்கள், இனிப்புகளை அதிகம் சாப்பிடாதீர்கள். பல் சொத்தைக்கு வழி வகுக்கும்.

*

15. ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் சென்று பல் நலனைக் காத்துக் கொள்ளுங்கள்.



***
நன்றி டாக்டர். ராஜசேகர்

***

"வாழ்க வளமுடன்"

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்...

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள்.



குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்:

1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.

*

2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.


*

3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள்.

*

4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும்.

*

5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை சாப்பிடவும்.

*

6. சாப்பிடும் போது கூடவே குளிர்பானங்கள் குடிப்பது, அடிக்கடி டீ, காபி குடிப்பது போன்றவற்றைத் தவிருங்கள்.


*

7. நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டால் இரண்டு மணி நேரம் கழித்து சாப்பாடு சாப்பிடுங்கள். அப்போது தான் பசி எடுக்கும். படுக்கச் செல்வதற்கு முன்பாக அவற்றை சாப்பிடுவது கட்டாயம் எடையைக் கூட்டும்.

*

8. நீங்கள் குறைவாகவே சாப்பிட்டுப் பழகியவரா? அப்படியானால் சாப்பிடும் இடைவெளிகளை மூன்று முறைகள் என்பதை மாற்றி ஆறு முறைகள் என்று பழக்கிக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் முழுச்சாப்பாடு சாப்பிடுவதற்குப் பதிலாக, அடிக்கடி குறைவாக சாப்பிடலாம்.

*

9. உடற்பயிற்சி செய்தால் உள்ள எடையும் போய் விடுமே என்று நினைத்துக் கொண்டு அதைத் தவிர்க்காதீர்கள். உடற்பயிற்சி தினமும் செய்ய வேண்டும். உடல் உறுதி பெற இது இன்றியமையாதது.


*

10. குண்டானவர்களுக்குத் தான் உடற்பயிற்சி என்றில்லை. ஒல்லியானவர்களும் செய்யலாம். அது அவர்களது உடல் சரியான ஷேப்பில் இருக்க உதவும்.

*

11. ஆனால் அளவுக் கதிகமாக, அதாவது உடல்களைப் படைகிற வரை உடற்பயிற்சி செய்ய வேண்டாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக வெதுவெதுப்பான பாலில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.

*

12. காலையிலும், மாலையிலும் ஐந்தைந்து பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, போரிச்சம் பழம், பிஸ்தா பருப்பு போன்றவற்றை சாப்பிடுவதை வழக்க மாக்கிக் கொள்ளுங்கள். முந்திரி, பாதாம் போன்ற பருப்புகள் சாப்பிட வேண்டும். அதே சமயம் வேண்டாத கொழுப்புகள் உடலில் தங்காமல் இருக்க உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

*

13. பத்து மணி நேரம் தூங்கவும். பகலில் நேரம் கிடைக்கிறபோது தூங்குவது இன்னும் நல்லது.

*

14. தசைகள் நன்கு வளர்ச்சி அடைந்தால் தான் உறுதியான உடல் கட்டைப் பெற முடியும். இதற்கு காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து ஆகியவை அடங்கிய உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

*

15. * பிட்சா, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் பலத்தைக் கூட்டாது. எனவே அவற்றைச் சாப்பிட வேண்டாம்.
* கார்போஹைடிரேட் மற்றும் புரோட்டீன் அடங்கிய உணவு வகைகள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

*

16. சிறிது சிறிதாகச் சாப்பிட வேண்டும். நிறைய உணவை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை விட, சிறிது சிறிதாகச் சாப்பிட்டு "ஹெவிநெஸ்' இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்

* .

17. சிக்கன், மீன், முட்டை, சோயா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

18. பச்சை வாழைப்பழம், வேக வைத்த உருளைக்கிழங்கு, ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

19. இரும்புச் சத்து அதிகம் உள்ள பழங்களையும் நிறைய சாப்பிட வேண்டும்.

*

20. மாதுளை, முழு நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

21. முளை கட்டிய ஏதாவது ஒரு பயறு வகையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

*

22. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.



மேலே சொன்னபடி உணவு வகைகளை முழு திருப்தியுடன் சாப்பிட்டால் உடல் எடையும் கூடும். சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.


***
நன்றி linoj
நன்றி றெனிநிமல்

***

"வாழ்க வளமுடன்"

தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம் பிலீஸ்...

ஒருவ‌ர் காத‌லி‌க்‌கிறா‌ர் எ‌ன்பதை அவரது காதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌ம் வை‌த்து‌ச் சொ‌ல்‌லி‌விடலா‌ம். எ‌ங்க அவ‌ர் காதை‌ப் பா‌ர்‌க்க முடி‌கிறது. எ‌ப்போது‌ம் கா‌தி‌ல் செ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறதே எ‌ன்று சொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌ம் காத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்.


இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது.

*

:)

பெரு‌ம்பாலான காதல‌ர்க‌ள் வெகு நேர‌ம் தொலைபே‌சி‌யி‌ல் அ‌ர‌ட்டை அடி‌ப்பதை வழ‌க்காமாக‌க் கொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌ம் போது, நட‌க்கு‌ம் போது பய‌ணி‌க்கு‌ம் போது என எ‌ப்போது‌ம் ஏதாவது ஒ‌ன்று இவ‌ர்க‌ள் வா‌யிலு‌ம், காத‌லு‌ம் போ‌ய்‌க்கொ‌ண்டே இரு‌க்கு‌ம்.

*

கூட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கா அ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌ன் பேசுவா‌ர்களோ எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு அ‌ப்படி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது வேறு கதை.

***


தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை:


இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை.

*

1. இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா? ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

*

2. காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 23.55 ‌நி‌மிட‌ங்களை செ‌ல்பே‌சி‌யி‌லேயே ‌க‌ழி‌த்த காதல‌ர்க‌ள் ‌சில மாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு வெ‌ளி உலக‌ம் ஒ‌ன்று இரு‌ப்பதை அ‌றிவா‌ர்க‌ள்.




3. ‌பிறகு இவ‌ர்களது பே‌ச்சு நேர‌‌ம் குறையு‌ம். ஒரு முறை, ஆசையாக போ‌ன் செ‌ய்யு‌ம்போது, ரொ‌ம்ப மு‌க்‌கியமான வேலை‌யி‌ல் இரு‌க்‌கிறே‌ன். இரவு பேசலா‌ம் எ‌ன்று ம‌ற்றவ‌ரி‌ன் ப‌திலு‌க்கு‌க் கூட காத‌்‌திராம‌ல் போனை க‌ட் செ‌ய்யு‌ம் ‌நிலையு‌ம் ஏ‌ற்படு‌ம்.

*

4. உ‌ண்மை‌யிலேயே ஒருவ‌ர் அதுபோ‌ன்ற இ‌க்க‌ட்டான சூ‌ழ்‌நிலை‌யி‌ல் இரு‌ந்தாலு‌ம், இது ஆர‌ம்ப‌த்‌தி‌ல் காதலரு‌க்கு எ‌ரி‌ச்சலை உ‌ண்டா‌க்கு‌ம்.

*

5. காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய பு‌தி‌தி‌ல் அலுவலக‌ம், கோ‌யி‌‌ல் எ‌ன்று எ‌தையு‌ம் பாராம‌ல் செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சியவ‌ர், இ‌ப்போது ந‌ம்மை உதா‌சீன‌ப்படு‌த்துதாக மன‌ம் குமுறு‌ம்.

*

6. எனவே இ‌ந்த ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌க்க, ஆர‌ம்ப‌த்‌திலேயே, அலுவலக/பயண நேர‌த்‌தி‌ல் போ‌ன் பேசுவதை‌த் த‌வி‌ர்‌ப்பது நல‌ம்.

*

7. ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌‌நிறைய‌ப் பே‌சி ‌பி‌ன்ன‌ர் பேசாம‌ல் இரு‌‌க்கு‌ம்போது காத‌ல் புய‌ல் வலுவ‌ற்று‌ப் போனதாகத‌் தெ‌ரியு‌ம்.

*

8. அதனா‌ல் எ‌த்தனை குறைவான நேர‌ம் பேச முடியுமோ, அ‌வ்வளவு குறைவான நேர‌த்தை ம‌ட்டு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு அதனை‌‌த் தொட‌ர்‌ந்து கடை‌பிடி‌த்தா‌ல் உ‌ங்க‌ள் காத‌லி‌ல் லேசான பூக‌ம்ப‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் த‌வி‌ர்‌க்கலா‌ம்.

*

இ‌ந்த ‌விஷய‌‌த்தை எ‌த்தனையோ காதல‌ர்க‌ள் உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாக உண‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள்..

***
நன்றி z9tech.com

***


"வாழ்க வளமுடன்"

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப்....

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.



கண்களை பாதுகாக்க:


1. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.

*

2. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

*

3. கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.


*

4. மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

*

5. சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.


*

6. பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

*

7. முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம்.

*

8. பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

*

9. அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

*

10. அ‌ப்படி செ‌ய்யு‌ம்போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம்.

*

11. மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

*

12. புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன.

*

13. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

*

14. பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

*

15. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

*

16. அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

*

17. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது.

*

18. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.


***
நன்றி z9tech.com

***

"வாழ்க வளமுடன்"

புற்று நோயாளிகளு‌க்கு உதவு‌ம் யோகாசனம்

உடலை ஆரோ‌க்‌கியமாகவு‌ம், பு‌த்துண‌ர்‌ச்‌சியாகவு‌ம் வை‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் யோகாசன‌த்‌தி‌ற்கு ஈடு இணையே ‌கிடையாது. அ‌ப்படி‌ப்ப‌ட்ட யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல் பு‌ற்று நோயா‌ளிக‌ள் ந‌ல்ல தூ‌க்க‌த்தை‌ப் பெற முடியு‌ம் எ‌ன்‌கி‌‌ன்‌றன‌ர் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள்.



புற்று நோயாளிகள் யோகாசனம் செய்தால் நன்றாக தூக்கம் வரும், உட‌ல் களை‌ப்பு மா‌றி அதிக சக்தி கிடைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

*

குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களுக்கு இந்த யோகாசனம் நல்ல பலனை அளித்ததாக கண்டறிய பட்டுள்ளது.

*

அமெரிக்காவில் உள்ள ரோச்செஸ்டர் மருத்துவ மையம் என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தினார்கள்.

*

குறிப்பாக மார்பக புற்று நோய்க்கு ஹீமோ தெரபி சிகிச்சை பெற்றவர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். ஒரு பிரிவினர் வாரம் 2 முறை வீதம் ஒரு மாதத்துக்கு யோகாசனம் செய்ய வைத்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு நன்கு தூக்கம் வந்ததாகவும், அதிக சக்தியும், புத்துணர்ச்சியும் பெற்றதாகவும் தெரிய வந்தது.

*

இதனால் அவர்கள் தூக்க மாத்திரை உட்கொள்வதை விட்டு விட்டதையு‌ம் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளன‌ர்.

*

யோகாசனம் செய்யாத புற்று நோயாளிகளுக்கு தூ‌க்க‌ம் வருவ‌தி‌ல் ‌பிர‌ச்‌சினையு‌ம் இரு‌ந்தது, பு‌த்துண‌ர்‌ச்‌சி இ‌ல்லாம‌ல் எ‌ப்போது‌ம் களை‌‌ப்பு‌ற்று‌ம் காண‌ப்ப‌ட்டன‌ர்.

*

யோகாசன‌ம் செ‌ய்வதா‌ல், பு‌ற்று நோ‌ய் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் தூ‌க்க‌ம் வருவத‌ற்கு தூ‌க்க மா‌த்‌திரை சா‌ப்‌பிட வே‌ண்டிய அவ‌சிய‌ம் வராது எ‌ன்று‌ம், த‌ங்களது நோ‌யினா‌ல் ஏ‌ற்ப‌ட்ட உட‌ல் களை‌ப்பு‌ம், மன அழு‌த்தமு‌ம் குறை‌கிறது எ‌ன்று‌ம் பெ‌ண் ஆரா‌ய்‌ச்‌சியாள‌ர் கரெ‌ன் முடியா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

***
http://linoj.do.am/publ/47-1-0-731
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "