...

"வாழ்க வளமுடன்"

14 மே, 2011

நமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி?


நாம் உண்ணும் உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன.


குழந்தைகள் (2-6 வயது)------------------1200-1800 கலோரி
(7-12 வயது)------------------1800-2000


இளம்பருவத்தினர் –ஆண்கள்---------------2500
பெண்கள்---------------2200


வயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400
இல்லாதவர்கள்)


உடல் உழைப்பு உள்ளவர்கள்-------2800


-பெண்கள்---2400



இப்போது உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படும் என்று தெரிந்து விட்ட்து.எந்தெந்த பொருளில் எத்தனை கலோரி இருக்கிறது என்று தெரியவேண்டும்.கடையில் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது அதிலேயே குறித்திருப்பார்கள்.அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சில பொருட்களுக்கு மட்டும் மதிப்பு தருகிறேன்.


இட்லி 1 -85 கலோரி
அரிசிசாதம்-100கிராம்- 120 கலோரி
சப்பாத்தி 1 - 85 கலோரி
பால் 1 கப் -65 கலோரி
முட்டை 1 -85 கலோரி
பருப்பு வகை அரைகப்-85 கலோரி
சிக்கன் 100 கிராம் -150 கலோரி
மட்டன் 100 கிராம் -340 கலோரி
வாழைப்பழம் 100 கி -80 கலோரி
ஆப்பிள் 100 கிராம் -45 கலோரி
காய்கறிகள்(தோராயமாக,100கி - 10-20 கலோரி
உருளைக்கிழங்கு 100 கிராம் – 80 கலோரி



உதாரணமாக அதிக உடல் உழைப்பில்லாதவராக இருந்தால் 2400 கலோரி தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிட்ட உணவை கணக்கிட்டு பார்த்து போதுமான அளவை தெரிந்து கொள்ளலாம்.குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தில் கேடு உண்டாகும்.



செரிமானம் ஆகி விட்ட்தை அறிந்து சாப்பிடச் சொல்கிறார் வள்ளுவர்.இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.காய்கறி,பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அதில் உள்ள தாதுக்கள் உயிர்ச்சத்துகளுக்காக அதிகம் உண்ண வேண்டும்.சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும்.


***
thanks shanmugavel
***



"வாழ்க வளமுடன்"

உஷார்!! ரசாயன அழகிகள் அல்லது இயற்கை அழகிகள் !!!



திருமண வரன் விளம்பரங்களில் மணமகன் குறித்தத் தகவல்களுடன் எதிர்பார்க்கும் சாதி, மதம் ஆகிய விபரங்களுடன் சிவந்த நிறமுள்ள பெண் தேவை! என்றும் பார்த்திருப்பீர்கள். அதேபோல் மணப்பெண் வீட்டாரின் விளம்பரத்தில் ஜாதகம், சாதி, மதம், படிப்பு போன்றவற்றோடு மாநிறம், சிவப்பு நிறம் என்று மணப்பெண்ணின் சரும நிறமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும்?! பெண்களில் கருத்த சருமம் உடைய மாடல் அழகியைக் காண்பது அரிது. பாட்டியைக் காட்டினால்கூட சிவந்தசருமத்தையுடைய பாட்டியைக் காட்டுமளவுக்கு மக்கள் மனதில் சிவந்த அல்லது வெளீர் நிறம் அழகின் நிறமாக விதைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்தியா போன்ற வெள்ளையரல்லாத பெருமக்கள் தேசத்தில்தான் இப்படியான விளம்பரங்களால் வெள்ளையும் சிவந்த நிறமும் அழகின் அடையாளங்களாக விதைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா அல்லது ஐரோப்பிய தேசங்களில் வெள்ளையருக்கு இணையாக கருப்பினத்தவரையும் மாடல்களாக, நடிகைகளாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உள்ளது. ஆனால் நம்நாட்டில் வெளியிடப்படும் அரசன் சோப்பு விளம்பரத்திற்குக்கூட வெளீர்நிறச் சரும மாடல் மங்கையர் அவசியமாகிறது. லைஃப்பாய் சோப்பு தவிர அனேகமாக எல்லா சோப்புகளுக்கும் பெண்கள்தான் மாடல்கள். அவர்களும் வெளீர்நிறச் சரும அழகிகளாக இருந்தால்தான் அவர்களைப்போல் அழகைப் பெறும் ஆசையில் அல்லது நம்பிக்கையில் குறிப்பிட்ட சோப்புகளை விற்க முடியும் என்ற நிலை.

பழைய படங்களில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல்களில் மஞ்சள் முகமே வருக என்றும் உலகப் பிரசித்திப் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்ஸன் துரைக்கு வரிசெலுத்த மறுக்கும் கட்டபொம்மன் "மாவரைத்தாயா...எம்வீட்டுப் பெண்களுக்கு மஞ்சளரைத்தாயா.." என்று பெண்களின் அன்றாட அழகுசாதனபொருளாக மஞ்சள் இருந்துள்ளது. இயற்கையிலேயே கிருமி நாசினியாகவும் விளங்கும் மஞ்சளின் மகிமையை அறிந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மஞ்சளுக்குக் காப்புரிமை பெற்றதையும் இந்திய மஞ்சளின் பாரம்பர்யத்தைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மறந்திருக்க முடியாது.


பெண்களின் அழகுசாதனமாக இருந்த மஞ்சள் மலையேறி அவ்விடத்தை ஃபேர்னஸ் கிரீம்கள் பிடித்துக் கொண்டன. மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட ஃபேர்னஸ் கிரீம்கள் உலக அழகிகளின் சாய்ஸாகக் காட்டப்படும் கிரீம்களுடன் போட்டிபோட முடியாமல் ஏறத்தாழ சந்தையிலிருந்து விலகுமளவுக்கு அழகு சாதனப்பொருட்களின் படையெடுப்பு இந்தியப் பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் அடிமையாக்கி விட்டது. சமீபத்தில் பெண்களின் சிவப்பழகு கிரீமைப் பயன்படுத்தும் ஆணழகனை நண்பர்கள் கிண்டலடிப்பதுபோல் ஒரு விளம்பரம் காட்டப்பட்டது.


அழகுக்கு நிறத்தை அடிப்படையாகக் கருதும் இந்தியர்களின் மனப்பான்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட மேற்கத்திய முதலாளிகள் உலக அழகிப்போட்டி போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தி சிவப்பாக இருந்தால்தான் அழகு என்ற எண்ணத்தை நிரந்தரமாக விதைத்து விட்டது ஒருபக்கமென்றால் எதைப் போட்டாவது முகச்சருமத்தைச் சிவப்பாக்க வேண்டுமென்ற 'நிறவெறி' தலைக்கேறி அழகு சாதன கிரீம்களுடன் சரும நோய்களுக்கான மருந்துக்களையும் பயன்படுத்தி சிவப்பாக்கும் கொடுமை பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. பெட்னோவேட் (Betnovate) போன்ற கீரிம்கள் பல்வேறு வகையான சரும நோய்களுக்கான கலிம்பாக சருமநோய் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்துடன் சருமம் சுருங்காமல், கருக்காமல் இருக்கச் செய்யும் ரசாயனப் பொருட்களும் கலந்துள்ளன. தேமல், முகப்பரு போன்ற சருமநோய்களுக்காப் பரிந்துரைக்கப்படும் இத்தகைய மருந்துகளையும் அழகு சாதனப்பொருளாகப் பயன்படுத்தி வருவதாக பெரும்பாலான மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஹரியானா கிராம பள்ளியாசிரியை தேவிகுமார் பெட்னோவேட் கிரீமை கடந்த எட்டுவருடங்களாக உபயோகித்து வருவதாகச் சொல்கிறார். வலது தாடையில் கட்டியால் அவதிப்பட்ட பிறகே அதற்கான காரணத்தைக் கண்டுள்ளார். சருமத்தில் நெடுநாட்களாக இத்தகையக் கிரீம்களைப் பயன்படுத்தி வருவதால் தோல் கேன்சர் பாதிப்பு ஏற்படும் அபாயமிருப்பதாக சருமநோய் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்திய மருத்துவக் கழகத்தின் கெளரவ பொதுச்செயலாளார் டாக்டர் ராஜிவ் சர்மா கூற்றுப்படி, "அதிகம் துர்ப்பிரயோகம் செய்யப்படும் மருந்தாக பெட்னோவேட் உள்ளது"என்கிறார். பாமர மக்களே இத்தகைய கிரீம்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விளம்பரப் படுத்துகிறார்கள் என்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக பெட்னோவேட்டை அழகுசாதனக் கிரீமாகப் பயன்படுத்தி வந்த பெண்மணிக்கு முகத்தில் ரோமம் மற்றும் நிரந்தர தழும்பு ஏற்பட்டதோடு தோலின் மேற்பரப்பிலுள்ள மெல்லிய நரம்புகளும் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

சருமப்பாதுகாப்பு மருந்துகளின் சந்தையில் ஏறத்தாழ 318 மில்லியன் டாலர் சந்தையை அழகு சாதன கிரீம்கள் பிடித்துள்ளன. பத்து இருபது ரூயாயில் உலகத்தரமுள்ள அழகுகிரீம் வாங்குமளவுக்கு அழகு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. அகம் அழகாக இருந்தால் புறமும் அழகாகும் என்ற நம்பிக்கை நம்முன்னோர்களிடம் இருந்தது. அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள்.ஆனால் நம் மக்களோ பிற்பாதியை மட்டும் பிடித்துக் கொண்டு அழகுசாதனக் கிரீம்களுக்கு அடிமையாகி விட்டார்கள்.



*

சாரதா முருகேஷ் -அருப்புக்கோட்டை


***
thanks inneram
***



"வாழ்க வளமுடன்"

''வயிற்றுக்கு கட்டுப்பாடு... வைத்தியத்துக்கு தடா!''



வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.

''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.






மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும். மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும்.




மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன. இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.



அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்...

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது. இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம். சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...



''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''



***
thanks டாக்டர் விகடன்
***




"வாழ்க வளமுடன்"



அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

ஒருவரையொருவர் விஞ்சும் விதத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் தற்காலம் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity), நீரிழிவு(சர்க்கரை நோய்) ஆகியவற்றுக்கு குழந்தைகள் எளிய இலக்காகிறார்கள்.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு முதல் தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் பிரிக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அதிரடி உணவு ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவதும் அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.


அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா?


நமது இந்தியத் திருநாட்டிலும் இந்த அவசர உணவுகளால் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகளின் மூலம் அறிய முடிகிறது


மும்பையில் வசிக்கும் அந்த இல்லத்தரசியின் பெயர் சுஜாதா. இரு பிள்ளைகளுக்குத் தாயான அவருக்கு மருத்துவர்கள் ஓர் அதிர்ச்சி செய்தியினைச் சொன்னார்கள். அவருடைய இரு பிள்ளைகளுக்கும் (Type 2) இரண்டாம் ரக நீரிழிவு முற்றி வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி. “நமக்கெல்லாம் இந்த வெளிநாட்டுக்கார நோய்கள் வராது என்றல்லவா நினைத்திருந்தேன்” என்கிறார் இந்தத் தாய்.

சத்தான உணவுகள் பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்று ஒருபக்கம் துயருறும் இந்தியாவில்தான் அதிஉணவு, உடல்பருமன் போன்ற பிரச்னைகளும் வளர்ந்து வருகின்றன என்பது கசப்பான முரண்பாடு.

“உடற்பயிற்சி, பாரம்பரியமான கள விளையாட்டுகள் யாவும் குறைந்துபோய், மாறிவரும் நாகரீகத்துக்கேற்ப, தொலைக்காட்சி, கணினியில் விளையாடி, கடைத்தெருவில் சுற்றி ஓடி, கடைசியில் ஜங்க்ஃபுட் எனப்படும் அவசர உணவுகளை அள்ளிக் கொறித்துவிட்டு உறங்கச் செல்கிறார்கள் இன்றைய சிறுவர்கள்” என்று வருத்தப்படுகிறார் டாக்டர் பவுலா கோயல். மும்பையின் ஃபெய்த் கிளினிக் மருத்துவர் இவர்.

இந்த அவசர உணவுகளால் நீரிழிவு நோயும் எளிதாகத் தாக்குகிறதாம். உலகளவில் மக்கள்தொகையில் 1.2 பில்லியன் என்றிருந்து சைனாவை முந்தாவிட்டாலும் கூட, அவர்களுள் 51 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகள் என்ற புள்ளிவிவரத்தின் மூலம் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.

இப்படியே போனால், இன்னும் இருபதே வருடங்களில் இந்த நோயால் தாக்கப்படுபவர்களின் தொகை 150 சத வளர்ச்சியைப் பெறும் என்பதில் தான் இன்னும் திகைப்பு.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், நாலாயிரம் குழந்தைகளிடம் 15 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஐந்திலிருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட நகரக் குழந்தைகளில் 23 சதமானம் பேருக்கு அதிக உடல் எடை உள்ளதாம். அதனால் உடல் பரும வியாதிக்கு எளிதில் ஆளாகும் சாத்தியதை உண்டாம்.

ஆக, ஆபத்தைத் தவிர்க்க, அவசர உணவை அறவே தவிர்ப்போம் என்பதே அறிய வேண்டிய செய்தி.


***
thanks inneram
***





"வாழ்க வளமுடன்"

மருத்துவ கேள்வி - பதில்கள் !!!



இருதய நோய் வராமல் இருக்க உணவில் எவற்றை தவிர்க்க வேண்டும்?
எஸ்.சீதாராமன், மதுரை:

மாரடைப்பு என்பது ரத்தக்குழாய் நோய். உடலில் உள்ள ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருந்தாலே, கொடூர ரத்தக் குழாய் நோய்களான பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு போன்றவற்றை தடுக்கலாம். தற்போதுள்ள நவீன மருத்துவத்தில், உங்கள் உண்மையான வயதைவிட, ரத்தக் குழாயின் வயதே (வாஸ்குலர் ஏஜ்) முக்கியத்துவம் பெறுகிறது.


ரத்தக்குழாய் நோய்க்கு வாழ்க்கை முறை மாற்றமே அத்தியாவசியமானது. குறிப்பாக மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது, தினமும் நடைப் பயிற்சி, சரியான அளவு ஓய்வு ஆகியவை முக்கியமானவை.


உணவுப் பழக்கத்தை பொறுத்தவரை, எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது அவசியம். உப்பு, சர்க்கரையை நன்கு குறைக்க வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் உண்பது, அரிசி உணவை குறைப்பது, நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்ப்பது ஆகியவை முக்கியம். இந்த பழக்கங்களை கடைபிடித்தால் பெருமளவு ரத்தக்குழாய் நோய்களை தடுக்கலாம்.

***

எனக்கு மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது ரத்தக் கொதிப்பும் வந்துவிட்டது. இது சர்க்கரை நோயைவிட மோசமான வியாதியா? வி.சீனிவாசன், நத்தம்:

சர்க்கரை நோயும், ரத்தக் கொதிப்பும் மிகக் கொடூரமான வியாதிகள். உடல் உறுப்புகளை, பல வகைகளில் பாதிக்கும் தன்மை படைத்தவை. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, ரத்தக் கொதிப்பு ஏற்பட்டால், அதை சரியாக கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். இதற்கு தற்போது, நவீன மருந்து வகைகள் உள்ளன.


சர்க்கரை நோயுடன், ரத்தக்கொதிப்பும் சேர்ந்துவிட்டால், ஒன்றும், ஒன்றும் இரண்டு என்பதற்கு பதில், ஒன்றும், ஒன்றும் 11 என்றாகி விடும். அதாவது நம் உடலை அது பல வழிகளில் பாதிக்கச் செய்கிறது. ஆகவே, சர்க்கரையையும், ரத்தக் கொதிப்பையும் கட்டுப்பாட்டில் வைத்து, வாழ்க்கை முறை மாற்றத்துடன், சரியான மருந்தையும் எடுத்தால், இந்நோய்களின் பாதிப்பை தடுக்க முடியும்.


***

கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்ற மருந்து இருதய நோய்க்கு நல்லதா? சி.ராமலிங்கம், திண்டுக்கல்:

கூணூடிட்ஞுtச்த்டிஞீடிணஞு என்பது பல ஆண்டுகளாக இருதய மருத்துவத்தில் உபயோகப்படுத்தும் மருந்தாகும். இருதய செல்களுக்கு, பல வகைகளில் பயன் தருகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது.


இருதயத்தின் பம்பிங் திறனை அதிகரிக்கச் செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள இருதயத்திற்கு, இது ஒரு நல்ல டானிக் ஆக உள்ளது. நெஞ்சு வலி உள்ளவர்களுக்கும், இம்மருந்து நல்ல பலனளிக்கிறது.

***

எனக்கு நான்கு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. நான் எந்த மாதிரியான பழங்களை தவிர்ப்பது நல்லது? பி.பார்த்தசாரதி, விருதுநகர்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யா போன்றவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் முக்கனிகளான மா, பலா, வாழைப் பழங்களை அவசியம் தவிர்த்தாக வேண்டும். சத்தான காய்கறிகளையும் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை குறைப்பது மிக நல்லது.

***

திவ்யா, திருப்போரூர்: நான் நன்றாக தான் தூங்குகிறேன். ஆனால், எனக்கு எப்பொழுது பார்த்தாலும் கண்கள் எரிச்சலுடன், கண்ணீர் வடிந்துகொண்டே இருக்கிறது. இதற்கு என்ன செய்வது?

நீலாஞ்சன மை என்னும் மருந்து அல்லது இளநீர் குழம்பு என்னும் கண் மருந்தை தொடர்ந்து மூன்று நாட்கள் கண்களில் விட்டு, குளிர்ந்த நீரால் கண்களை கழுவலாம். அசுககந்தா பலாலாட்சாதி தைலம் அல்லது சீரகத்தைலம் அல்லது பொன்னாங்கண்ணி தைலத்தால் தலை முழுகி வர, கண்ணீர்ப்பை பலமடையும். கண்களின் ஒவ்வாமை நீங்கும்.

***

ஒற்றடம் கொடுப்பது பலன் தருமா?

சித்த மருத்துவத்திற்கே உள்ள சிறப்பான சிகிச்சை முறை ஒற்றடமாகும். சூடான மண் ஓட்டை கையிலும், தலையிலும் வைத்து, பாண்டி விளையாடுவது பெண்களின் வழக்கம். சூடான ஓட்டால் உள்ளங்கை மற்றும் உச்சந்தலையில் ஒற்றடமிட மாதவிலக்கு சீராகும். அதுமட்டுமின்றி, கால்களை பிடித்து இழுக்கும் தசைப்பிடிப்பும் நீங்கும்.


ஆகவே, பெண்கள் "டிவி' முன் அமராமல் மாலை நேரத்தில் இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுவது நல்லது. மண்சட்டியை நெருப்பிலிட்டும், முட்டை ஓட்டை சுட்டும், தவிடு, உப்பு, கருங்கல் தூள் போன்றவற்றை வறுத்தும் ஒற்றடமிடுவது வழக்கம்.


கட்டிகள் பழுக்க கம்பளி துணியை லேசாக சூடு செய்தோ அல்லது சூடான நீரில் முக்கியோ ஒற்றடமிடலாம். மார்பு சளியை வெளியேற்ற கோதுமை தவிட்டால் மார்பில் ஒற்றடமிடலாம். ஆமணக்கு விதையால் ஒற்றடமிட, பெண்களுக்கு மாதவிலக்கின் போது தோன்றும் வயிற்றுவலி நீங்கும்.


நல்லெண்ணெய் ஊறிய மண்விளக்கு சட்டியை சூட்டுடன் கன்னம், தாடைபோன்ற பகுதிகளில் ஒற்றடமிட, பல்வலி நீங்கும். எளிய பக்க விளைவுகள் இல்லாத இதுபோன்ற ஒற்றட முறைகளை பயன்படுத்துவதால், வீரியமிக்க மருந்துகளிலிருந்து தப்பிக்கலாம்.


***

- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை
- டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை

***
thanks தினமலர்
ஹலோ டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "