...
"வாழ்க வளமுடன்"
17 செப்டம்பர், 2010
தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?
நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு .
அப்போது என்ன செய்யவேண்டும் ...
moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .
தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?
1. முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும்.
2. பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும்.
3. அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது. நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .
4. வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு .
5. இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு.
6. எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...
***
by Kathirvel.
Thanks:http://kathirpositive.blogspot.com/
http://saidapet2009.blogspot.com/2009/10/mobile.html
***
"வாழ்க வளமுடன்"
உங்கள் இனிய நண்பன் லேப்டாப் ( மடி கணிணீ )
குறைவான விலையில், அதிக திறனோடு, கூடுதல் வசதிகளோடு லேப் டாப் கம்ப்யூட்டர்கள் வருவதால், நீங்கள் நிச்சயமாய் ஒன்றை வாங்கியிருப்பீர்கள்.
1. முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப்படுத்தும்.
2. உங்கள் கீழாக உள்ள உங்கள் டாஸ்க் பாரில் கடிகார நேரத்திற்கு அருகே உள்ள ஐகான்களைக் கவனியுங்கள்.
4. இந்த புரோகிராம்களை நீக்குவதால் உங்கள் ராம் மெமரியில் மற்ற புரோகிராம்கள் தாராளமாகவும் விரைவாகவும் இயங்க இடம் கிடைக்கும். ஆனால் மெமரியின் அளவு கூடாது.
5. இது மிகவும் எளிதான வேலைதான். உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ள ராம் மெமரி சிப்கள் மற்றும் அவற்றினை ஏற்றுக்கொள்ளும் போர்ட்களின் தன்மை குறித்து அறிந்து கொண்டு அதற்கான கூடுதல் மெமரி சிப்களை வாங்கி பொருத்த வேண்டியதுதான்.
11. நீங்கள் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், பேட்டரியின் திறனை அதிகப்படுத்த ஒரு இலவச புரோகிராம் ஒன்றை டவுண்லோட் செய்து இயக்கலாம்.
இன்னொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையினையும் நாம் மேற்கொள்ளலாம்.
3. புத்திய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் தரப்படும் சில கூடுதல் வசதிகள் பழைய மாடல் லேப்டாப்களில் இல்லை என்பது பலரின் குறை.
5. இதே போல வீடியோ சேட்டிங் செய்திடப் பயன்படும் வெப் கேமரா, வேகமான இணையத் தேடலுக்கு மொபைல் பிராட்பேண்ட் சாதனம் ஆகியவற்றை, லேப்டாப்பின் இயக்கத்தினை நிறுத்தாமலேயே, இணைத்துப் பயன்படுத்தலாம்.
யு.எஸ்.பி.போர்ட் தவிர, இன்றைய லேப்டாப் கம்ப்யூட்டர்களில் வேறு வகை இணைப்பு முகங்கள் உள்ளன. உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரின் பக்கவாட்டில் பாருங்கள்.
6. எவ்வலவுக் கெவ்வளவு கூடுதலான நேரம் உங்கள் லேப்டாப்பினைப் பயன்படுத்து கிறீர்களோ, அந்த அளவிற்கு அது வெப்பத்தை வெளியிடும். இது போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
7. லேப்டாப் வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கினாலும் அது மற்றவர்களால் தவறான வழிகளில் பயன்படுத்தப்படக் கூடாது; மேலும் அது திருடப்படக் கூடாது என்ற இரண்டு பயம் நம்மிடம் எப்போதும் உண்டு. ஏனென்றால் எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் உள்ளதால், இது திருடு போகும் வாய்ப்பு அதிகம்.
9. உங்கள் லேப்டாப்பினை உங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். பலர் லேப்டாப்பினைச் சாதாரண லெதர் பேக்குகளில் வைத்து எடுத்துச் செல்லும் பழக்கம் கொண்டுள்ளனர். அல்லது சூட்கேஸ்களில் மற்ற பொருள்களுடன் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
10. இறுதியாக இன்னொன்றையும் கூற வேண்டும். லேப்டாப்பினை அப்படியே மின் சாரம் தரும் ப்ளக் ஹோலில் இணைத்துப் பயன்படுத்தலாம் என்றாலும், ஒரு சிறிய சர்ஜ் புரடக்டர் ஒன்றில் இணைத்துப் பயன்படுத்துவது நல்லது.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***
உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வலைப்பக்கம் -”twofoods”
உணவுப் பொருட்களை ஒப்பிட்டுப் பார்க்க மக்கள் எல்லாரும் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டனர்.
எந்த உணவுப் பொருளில் எத்தனை கலோரி சக்தி உள்ளது; கொழுப்புச் சத்து எவ்வளவு, புரோட்டீன் எவ்வளவு என்று அறிய ஆசைப்படுகின்றனர்.
அதற்கேற்ற வகையில் தங்கள் உணவுப் பழக்கங்களை வரையறை செய்திடவும் செய்கின்றனர். சில வேளைகளில் தாங்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு உணவுப் பண்டங்களில் இந்த சத்துப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்று அறிய விரும்புகின்றனர்.
அப்படி ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ஒரு உணவினைத் தேர்ந்தெடுத்து தங்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ள முடிவு செய்கின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காகவே “twofoods” என்ற இணையதளம் இயங்குகிறது.
இதில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்துக் காண விரும்பும் இரண்டு உணவுப் பொருட்களை அருகருகே அமைத்து என்டர் செய்தால், அந்த உணவுப் பொருட்களின் சத்து விகிதம் தனித்தனியே காட்டப்பட்டு ஒப்பீடு
அட்டவணை கிடைக்கிறது. குறிப்பிட்ட அளவில் எவ்வளவு கலோரிகள், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் சத்து உள்ளதாகக் காட்டப்படுகிறது.
இதனைக் கொண்டு நாம் நம் உடல்நிலைக்கேற்ப, அல்லது டாக்டரின் ஆலோசனைக்கேற்ப உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆப்பிள்/ஆரஞ்சு,
வெள்ளை / பிரவுண் அரிசி,
கோதுமை/அரிசி,
கேழ்வரகு /அரிசி
என எந்த வகை ஒப்பீட்டிற்கும் பதில் கிடைக்கிறது.
இதனைக் காண http://www.twofoods.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***
"வாழ்க வளமுடன்"
மண்ணீரல் & மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்
மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனிதன் நோயின்றி வாழமுடியும்.
இந்த உறுப்புகளில் மனித இயக்கத்திற்கு பிரதானமான சில உறுப்புகள் உள்ளன. அவற்றில் மண்ணீரலும் ஒன்று.
மண்ணீரலானது கல்லீரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும். நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.
இது ரெட்டிக்குலர் செல்கள் (Reticular cells) மற்றும் அவற்றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.
***
மண்ணீரலின் பணிகள்:
மண்ணீரல் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடியது. மூளையின் செயல் பாடுகளையும், நரம்புகளின் தூண்டுதலையும் சீராக்குகிறது.
எண்ணங்களையும் செயல்களையும், உருவாக்குவதும், ஊக்குவிப்பதும் மண்ணீரல்தான்.
முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிக்கும் செயலே மண்ணீரலுக்கு முக்கிய வேலையாகும்.
இரத்த சிவப்பணுக்களின் செயல்பாடுகளை சீர்படுத்துவதும், இதயத்தின் செயல்பாடுகளைத் தூண்டுவதும், சீராக்குவதும் மண்ணீரலின் முக்கிய பணியாகும்.
மண்ணீரல் பாதித்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உருவாகும். சில சமயங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் கொடுத்து மாரடைப்பைக்கூட (Heart attack) ஏற்படுத்துகிறது.
நுரையீரலின் செயல் பாடுகளிலும் மண்ணீரலுக்கு பங்குண்டு.
இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண் கிருமிகளை அழித்து சிறுநீரகத்தின் செயல் பாடுகளை தூண்டுகிறது.
அதுபோல் இரத்த ஓட்டப் பாதையில் கிருமிகள் போன்ற வெளிப் பொருட்களை வடிகட்டி வெளியேற்றும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல்படுகிறது.
இரத்தம் வழியாக வரும் நோய்க்கு எதிரான தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வியர்வை சுரப்பிகளைத் தூண்டுகிறது.
மன வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
மண்ணீரல் பாதிப்பால் ஏற்படும் அறிகுறிகள்:
உடம்பின் எடை அதிகரித்தல், அடிவயிற்றில் பயங்கர வலி உண்டாதல், நாக்கு வறண்டு விறைப்புத் தன்மையடைதல், வாயுக்களால் உடலெங்கும் வலி உண்டாதல்,
வாந்தி, உடல் பலவீனமடைதல், உடல் பாரமாக தெரிதல், கால் பகுதிகளில் வீக்கம், வலி, சாப்பிட்டவுடன் தூக்கம், எப்போதும் சோர்வு, இடுப்பு பக்கவாட்டு மடிப்புகளுடன் சதை உண்டாதல், மஞ்சள் காமாலை ஏற்படுதல், இரத்த அழுத்தம் அதிகரித்தல், சிறுநீர் சரியாக பிரியாதிருத்தல்.
***
மண்ணீரல் பாதிப்பு ஏற்படக் காரணம்:
1. மன அழுத்தம், கோபம், எரிச்சல் அடிக்கடி ஏற்படுவோர்க்கு மண்ணீரல் பாதிப்படையும்.
2· மதுப்பழக்கம், புகைப்பழக்கம், போன்ற வற்றாலும் இந்நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
3· கல்லீரல், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல் பகுதியில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டாலும் மண்ணீரல் பாதிப்படையும்.
4· இரத்தத்தில் பித்த நீர் அதிகரிப்பு காரணமாக மண்ணீரலில் பாதிப்பு உண்டாகும்.
5· இதயத்திற்கு இரத்தம் செல்வதுபோல் மண்ணீரலும் இரத்தத்தை உள்வாங்குகிறது.
6· கல்லீரல் வீக்கம், குடல்புண், வயிற்றுப்புண் இவைகளால் மண்ணீரல் பாதிக்கப்படலாம்.
***
மண்ணீரலைப் பலப்படுத்தும் உணவுகள்:
கீரைகள், காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், முள்ளங்கி, புதினா, பூண்டு, தேங்காய், முளைத்த பயிறு, சின்ன வெங்காயம்.
கொய்யாப்பழம், திராட்சை, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, மாதுளை, அத்திப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ்.
இவற்றில் உள்ள மெத்தியோனின் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும், மண்ணீரல், பித்தநீர் சுரப்பிகளின் இயக்கத்திற்கும் முக்கிய பங்காற்றுகிறது.
***
நன்றி நக்கீரன்.
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=6679
***
"வாழ்க வளமுடன்"
படுக்கையை நனைப்பது குட்டீஸ் மட்டுமா? ......
படுக்கையை நனைக்கும் கோளாறுக்கு மருத்துவப் பெயர் இது. பெரும்பாலும், குழந்தைகள் தான் படுக்கையை நனைப்பதுண்டு. ஐந்து, ஆறு வயதில் தானாகவே இந்த பழக்கம் நின்று விடும்!
அதற்கு பின், பத்து வயது வரை கூட சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் நீடிக்கும். இன்னும் சிலருக்கோ, பெரியவனாக வளர்ந்த பின்பும் கூட, ஏன் திருமணம் ஆன பின்னும் கூட படுக்கையை நனைக்கும் பிரச்னை ஏற்படும்.
இதற்கு நோய் பாதிப்பு மற்றும் மரபு வழி தான் காரணம். பரம்பரையாக இருந்தால், அந்த வம்சத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பத்து வயது வரை கூட படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படும்.
***
படுக்கையை நனைப்பதில் எத்தனை வகை? :
படுக்கையை நனைப்பதில் இரு வகை உண்டு.
1, ஆரம்ப நிலை.
2,இடையில் ஏற்படும் கோளாறு.
*
ஆரம்ப நிலை பாதிப்பு:
பிறந்ததில் இருந்தே ஏற்படும்.
*
இரண்டாவது வகை பாதிப்பு:
இரண்டு வயதில் கூட ஆரம் பிக்கும்; எப்போது நிற்கும் என்று சொல்ல முடியாது. வயதான பின், பெரும் பாலோருக்கு இந்த பாதிப்பு இல்லை.
ஒரு சதவீதம் பேருக்கு , பரம்பரையாக தொடர்வதால் இந்த பிரச்னை இருக்கக்கூடும். சிறுநீரக கோளாறு, சர்க்கரை நோய், உடல் ரீதியான மாறுபாடுகள் போன்றவற்றால் கூட வயதான பின் படுக்கையை நனைக்கும் கோளாறு ஏற்படும்.
***
அறிகுறி என்ன? :
இதற்கு தனியாக அறிகுறி கிடையாது. படுக்கையை நனைப்பது ஆரம்பமானால் அது தான் அறிகுறி. சில குழந்தைகளுக்கு காலையில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
இப்படிப்பட்ட குழந்தைகள் இரவில் எப்போதாவது தான் படுக்கையை நனைப்பர்.
அடிக்கடி ஜீரணம் ஆகாமல் மலச்சிக்கல் ஏற்படும் குழந்தைகளுக்கு இரவில் படுக்கையை நனைப்பது அடிக்கடி நேரும்.
***
எப்படி கண்டுபிடிப்பது? :
அடிக்கடி படுக்கையை நனைப்பதற்கு காரணம், பரம்பரையாக தொடர்வதா, வேறு கோளாறினாலா? என்பது பற்றி டாக்டர் கண்டுபிடித்து விட முடியும்.
சிறுநீர் பரிசோதனை செய்தாலே, இது தெரிந்துவிடும். ஸ்கேன் எடுத்துப்பார்த்தால் சிறுநீரக பகுதி மற்றும் உடலியலில் மாறுபாடுகள் இருப்பது பற்றி கண்டுபிடிக்கலாம். இதில் எல்லாம் கண்டுபிடிக்க முடியாவிட்டால்,
“இன்ட்ராவெனிஸ் பைலோகிராபி’ என்ற விசேஷ எக்ஸ்ரே பரிசோதனையை செய்ய வேண்டும். சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தத்தை இது கண்டுபிடித்துவிடும். அதன் மூலம், கோளாறுக்கான காரணத்தை டாக்டர்களால் அறிய முடியும்.
சிகிச்சை என்ன? :
குழந்தைப்பருவத்தில் படுக்கையை நனைப்பதெல்லாம் அதிகபட்சம் ஆறு வயதில் நின்றுவிடும். ஆனால்,வேறு கோளாறு காரணமாக ஏற்படும் இந்த பழக்கத்தை நிறுத்த சில நடைமுறைகளை தான் கடைபிடிக்க வேண்டும்.
குழந்தையின் குணத்தை அறிந்து, அதற்கு ஆறுதலாக பெற்றோர் இருந்தால் போகப்போக படுக்கையை நனைப்பது குறைந்து விடும். அதுபோல, குழந்தைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
படுக்கையை நனைக்காவிட்டால் பரிசு தருவதாக கூறலாம். இப்படி செய்யாமல், தண்டித்தால் குழந்தை நிலைமை இன்னும் மோசமாகும்; படுக்கையை நனைப்பது அதிகமாகும்.
***
தடுப்பு முறை என்ன? :
மாலையில் இருந்தே திரவ உணவு அளிப்பதை நிறுத்த வேண்டும். அதிக தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அப்போது குழந்தைக்கு சிறுநீர் போவது குறையும்.
இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அலாரம் வைத்துக் கொண்டு குழந்தையை எழுப்பி சிறுநீர் கழிக்க பழக்கப்படுத்தலாம். உணர்வு பூர்வமாக, தனிப்பட்ட காரணங்களால் கூட குழந்தைகள் இரவில் படுக்கையை நனைப்பது ஏற்படும்.
அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங்குக்கு அழைத்துச் செல்லலாம். படுக்கையை நனைப்பதை தடுக்க மருந்துகளும் உள்ளன. அவற்றை குழந்தைகளுக்கு டாக்டர் ஆலோசனைப்படி பெற்று வழங்கலாம்.
***
எச்சரிக்கை எங்கே? :
படுக்கையை நனைப்பதை தடுப்பதற்காக மருந்துகளை வாங்கித் தருவதை கடைசி நிலையாக வைத்துக்கொள்ள வேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இல்லாமல் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது.
இப்போது ஸ்ப்ரே வகையிலும் மருந்துகள் வந்துவிட்டன. மூக்கில் ஸ்ப்ரே செய்வது போல இதை ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். ஆனால்,பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் உஷாராக இருக்க வேண்டும்.
***
பெரியவர்கள் எப்படி? :
மனதில் பதட்டம், கவலை, சோர்வு போன்ற காரணங்களால், பெரியவர்கள் சிலருக்கு படுக்கையை நனைக்கும் பழக்கம் ஏற்படுகிறது. ஆனால், அடிக்கடி இப்படி நேராது.
சரியான நேரத்தில் எழுந்து சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை கடைபிடிக்காதவர்களுக்கு இப்படி பிரச்னைகள் வரலாம். இது போன்ற சமயத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்வது நல்லது.
டாக்டரிடம் காட்டி உரிய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும்; அலட்சியமாக இருக்கக்கூடாது.
***
“பேட்’ பயன்படுமா? :
குழந்தைகளுக்கு இப்போது பல வகையில் “பேட்’ (சிறிய பொதி போன்றது)கள் வந்துள்ளன. இவற்றை பிஞ்சுக்குழந்தைகளுக்கு பயன் படுத்தலாம்.
பெரியவர்களுக்கும் கூட இப்படி “பேட்’கள் விற்கப் படுகின்றன. இவற்றை தொடர்ந்து பயன் படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதுவே பழக்கமாகி விடும்.
***
by: vayal.
நன்றி உங்களுக்காக.
***