...

"வாழ்க வளமுடன்"

20 மே, 2011

அறியா தகவல்களையும் அறிவோம் !!!!கொடைக்கானல் பகுதிகளில் காணப்படும் குறிஞ்சிப் பூ, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும். அதுபோல, Phyllos- tachys bambusoides என்னும் மூங்கில் வகை, 120 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்குமாம்.

*

உலகின் மிகச்சிறிய பசு, இங்கிலாந்தில் ‘மார்டின் ரைடகர்’ என்பவர் வீட்டில் வளர்கிறது. ‘டெக்ஸ்டா’ இனத்தைச் சேர்ந்த இந்தப் பசுவின் உயரம் 84 செ.மீ.தான். கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது இந்தப் பசு.

*

‘மூடன், மட்டி, மடையன்...’ ஆகிய சீடர்களைக் கொண்ட பரமார்த்த குரு கதை, அனைவருக்கும் தெரியும். இதை எழுதியவர் - இத்தாலியில் இருந்து வந்து, தமிழ் பயின்ற வீரமாமுனிவர்.

*

ஜப்பான் நாட்டில் குழந்தைகளுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.

*

சுவையான பழங்களைத் தரும் மரம் என்றாலும், இலந்தை மரத்தில் பறவைகள் எதுவும் கூடு கட்டுவதில்லை.

*

திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய துதிகளை தமிழ்நாட்டில் மட்டும் பாடுவதில்லை. தாய்லாந்து நாட்டில் மன்னர் முடிசூடும் போதும் பாடுகிறார்கள்.

*

உலகின் முதலாவது சுரங்க ரயில் பாதை, 1863ஆம் ஆண்டு லண்டனில் அமைந்தது. இந்தியாவில் - 1984ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைந்தது.

*

உலகம் முழுவதும் 3000 மொழிகள் பேசப்படுகின்றன. என்றாலும் 31 மொழிகள்தான் ஐந்துகோடிக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுவதாக தெரிவிக்கிறது ஓர் ஆராய்ச்சி.

*

கேள்விக்குறியை இப்போது நாம் வாக்கியங்களில் பயன்படு த்துகிறோம். முதன்முதலாக இலத்தீன் மொழியில்தான் இது பயன்படுத்தப்பட்டது.

*

பசுமைப்புரட்சி என்றால் விவசாயப் பெருக்கம்: வெண்மைப்புரட்சி என்றால், பால் உற்பத்தி; மஞ்சள் புரட்சி என்றால் எண்ணெய் வித்துக்களில் உற்பத்தி; நீலப்புரட்சி என்றால், மின் உற்பத்தி. இளஞ்சிவப்பு புரட்சி என்றால் என்ன தெரியுமா? மருத்து வகை உற்பத்திப் பெருக்கம்!

*

உலகின் அதிக எடை கொண்ட பெரிய மரம், கலிஃபோர்னியாவில் உள்ள ‘ஜெனரல் ஷெர்மன்’ என்ற மரம் என்கிறார்கள். ஒரே நேரத்தில் 2.5 லட்சம் பேர், இதன் நிழலில் இருக்கலாம் என்றால், அதன் பிரம்மாண்டம் எப்படியிருக்கும்?!

*

காய்ந்த நிலத்தில் மழை பொழிந்த உடன் ஒரு மணம் வெளிப்படுகின்றது. இதனை மண் வாசனை என்பர். இது எப்படி ஏற்படுகின்றது?

நிலத்தில் ஸ்ட்ராப்டோமைசிஸ் (Stretomyces),, ஆக்டினோமைசிஸ் (Actinomyces) போன்ற எண்ணற்ற பாக்டீரியாக்களும், பிற நுண்ணுயிர்களும் உள்ளன. இவை வறண்ட நிலத்தில் அதிக அளவு உள்ளன. ஒரு கிராம் நிலத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.


வறண்ட நிலத்தில் மழை பொழிந்தவுடன் இந்த நுண்ணுயிர்கள் ஜியோஸ்மின் (Geosmine) மற்றும் டை - மிதைல் ப்ரோமியால் போன்ற எளிதில் ஆவியாகக் கூடிய வேதியல் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த வேதியல் பொருட்கள் காரணமாகவே, காய்ந்த நிலத்தில் மழை பொழிந்தவுடன் மணம் கிளம்புகின்றது.


*

தண்ணீர் மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்கின்றது. அதேபோன்று, மேல்நோக்கி எறியப்படும் பொருட்களும் கீழ்நோக்கியே விழுகின்றன. ஆனால் தீப்பிழம்பு மேல் நோக்கி எரிகின்றது. ஏன் இந்த வேறுபாடு?

உலகில் உள்ள அனைத்துப் பொருட்களுமே, புவி ஈர்ப்பின் காரணமாக பூமியின் மையம் நோக்கி இழுக்கப்படுகின்றன. மேலும் நீரின் அடர்த்தி காற்றின் அடர்த்தியைவிட மிக அதிகம். இதன் காரணமாக, தண்ணீர் மேல் நிலையிலிருந்து கீழ் நோக்கிப் பாய்கின்றது.


ஆனால், தீப்பிழம்பு என்பது ஒளிவீசுகின்ற சூடாக்கப்பட்ட வாயுக்களால் ஆனது. சூடாக்கப்பட்ட வாயுக்களின் அடர்த்தி, சாதாரண காற்றின் அடர்த்தியைவிட மிகக் குறைவு. இதன் காரணமாகவே தீப்பிழம்பு மேல்நோக்கி எரிகின்றது.

*

நாய், உட்கார அல்லது படுக்கும் முன் அந்த இடத்தை இரண்டு அல்லது மூன்றுமுறை சுற்றி வந்த பிறகே, அவ்விடத்தில் அமர்கின்றது. இந்த வினோதமான நிகழ்ச்சியின் காரணம் என்ன?

நாய் ஒரு இடத்தைச் சுற்றும்போதே காற்று எந்த திசையிலிருந்து வீசுகிறது என்பதை உணர்கிறது. அதைத் தொடர்ந்து காற்று வீசும் திசைக்கு எதிராக உட்கார்கிறது; அல்லது படுக்கிறது.

இச்செயல் மூலம், நாய் தன் அற்புதமான முகரும் திறன் காரணமாக தன் எதிரிகளின் நடமாட்டத்தை விரைவில் உணர்ந்து கொள்கிறது. அதனால் எதிரியின் தாக்குதலில் இருந்து எளிதில் தப்பிக்கவும் முடிகிறது.

*

நண்பனா?எதிரியா?

உயிர் வாழ தண்ணீர் அவசியம். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. தாகத்தை தண்ணீரால் மட்டும்தான் தீர்க்க முடியும்.

தண்ணீரைப்போல, மின்சாரமும் இன்றைய உலகில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றுதான். மின்சாரத்தை நம்மால் பார்க்க முடியாவிட்டாலும், அதன் பயன்பாடு நம்முடன் கலந்திருக்கிறது.

*

ஆனால், தண்ணீரும் மின்சாரமும் ஒன்றாகக் கலந்தால்? அது ஆபத்தோ ஆபத்து.

வேடிக்கை என்னவென்றால், தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒருபுறம் அணைக்கட்டுகளிலிருந்து; மறுபுறம் கடலிலிருந்து. ஆனாலும் தண்ணீரும், மின்சாரமும் எதிரிகள்தான். மின்சாரம் பாய்ந்து இருவர் பலி என்பதுபோன்ற செய்திகளை நாம் அவ்வப்போது படிக்கிறோம்.

மழைக் காலங்களில், அறுந்து தொங்கும் மின்சாரக் கம்பிகளைத் தவறுதலாகத் தொடும்போது, மின்சாரம் பாய்ந்து இறப்பு ஏற்பட்டு விடுகிறது.

மின்சாரத்தைக் கடத்துவதில் தண்ணீர் ரொம்ப வேகம். தண்ணீர்த் தொட்டிளில், ஷவர் பாத்தில், குளியல் அறையில் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் அநேகம். அதிலிருந்து காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.


அமெரிக்காவில் விற்கப்படும் HAIR DRYERகளில், பெரிய எச்சரிக்கை வாசகங்கள் - ‘தண்ணீர் அருகில் இதைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று.

*

எல்லாவிதமான தண்ணீரிலும் மின்சாரம் பாயுமா?

தண்ணீரில் மின்சாரம் பாயத்தான் செய்யும். அதற்காக கடலில், ஒரு சிறிய மின் ஒயரைப் போட்டால், கடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து, அதில் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த அளவிலான தண்ணீரில் மின்சாரம் பாயும்போது, மின்சாரத்தை அந்தத் தண்ணீர் கடத்தும். குறைந்த சக்தியிலான மின்சாரம், ஒரு கடலளவு தண்ணீரில் பாயாது.

தவிர, மிகவும் சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது. அதாவது, பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரைப் போல, பலமடங்கு சுத்தமான தண்ணீரில் மின்சாரம் பாயாது.

*

ஏன் தெரியுமா?


இரு மடங்கு ஹைட்ரஜனும் ஒரு மடங்கு ஆக்சிஜனும் என்ற விகிதத்தில் உள்ளது தண்ணீர். சாதாரண தண்ணீரில், அயனிகள் எனப்படும் மின்காந்தத் துகள்கள் இருக்கும். மேலும், அதில் எலக்ட்ரான்களும் இருக்கும். அணுத்துகள்களில் உள்ள எலக்ட்ரான்கள், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பாயும்போது, மின்சாரம் ஏற்படும்.


மிகவும் சுத்தப்படுத்தப்பட்ட தண்ணீரில், எலக்ட்ரான்கள் இருப்பதில்லை என்பதால், அவை மின்சாரத்தைக் கடத்துவதில்லை. அத்தகைய சுத்தமான தண்ணீரில் சிறுதுளி உப்பைக் கலந்தால் அது மின்சாரத்தைக் கடத்தும்.


எனவே தண்ணீர் படும் இடங்களில், மின்சாதனப் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். தவறுதலாக, மின்சாரம் தண்ணீரில் பாய்ந்தால், மின் ஒயரையோ, பிளக்கையோ, அந்தத் தண்ணீரையோ தொடக்கூடாது. வேகமாகச் சென்று, மெயின் ஃப்யூஸ் கேரியரை பிடுங்கிவிட வேண்டும்.

*

சாப்பிடாமல் ஒரு மாதம் வரை கூட உயிர் வாழலாம். ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரம் தாண்டி உயிர்வாழ முடியாது.

*

உறைந்த நீர் சாதாரண நீரை விட ஒன்பது சதவிகிதம் குறைவான எடை கொண்டது. அதனால்தான் தண்ணீரில் ஐஸ் கட்டி மிதக்கிறது.

*

மனித மூளையில் 75 சத விகிதம் தண்ணீர்தான். எலும்புகளில் உள்ள நீரின் அளவு 25 சதவிகிதம்.

*

ஒரு லிட்டர் தண்ணீரின் எடை 1.01 கிலோ கிராம்.

*

உலகம் தொடக்கத்தில் எவ்வளவு தண்ணீரைக் கொண்டிருந்ததோ அதே அளவு தண்ணீரைத்தான் இப்போதும் கொண்டிருக்கிறது.***
thanks malaikakitham
***

"வாழ்க வளமுடன்"

பெண்கள் மூக்கு குத்திக்கொள்வது ஏன் தெரியுமா?மூக்கு மற்றும் காது குத்திக்கொள்வது ஏன் என உங்களுக்கு தெரியுமா? அதாவது ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதாவது பவர் அதிகம்.


இதனால் பெண்கள் மத்தியில் நிற்பவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும் இதனால் பெண்கள் மூக்கு குத்தி கொள்ளும் வழங்கம் உருவானது. மூக்கு குத்துவதினாலும், காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.


மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.


சிறுமியர் மூக்குத்தி அணிவதில்லை. பருவப் பெண்களே அணிகிறார்கள். ஏனெனில் பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப் படுகிறது.


மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப் படுகிறார்கள். அந்தக்காலத்தில் ஆண்களும் காது குத்திக்கொள்வது இதனால்தான் ம்ம்ம்……


இந்தக்காலத்திலும் ஆண்கள் காது குத்தும் வழங்கம் வந்துவிட்டது ஆனால் கவரிங் எந்த பிரயோசனமும் இல்லை வெறும் அழகுக்கு மட்டுமே தவிர ஆரோக்கியத்துக்கு சரிவராது.***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"

மயிலுக்கு ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம்..?மயில்கள், பசியானிடே குடும்பத்தின், பேவோ இனத்திலுள்ள இரண்டுவகைகளைக் குறிக்கும். மயில்கள், ஆண்மயிலின் ஆடம்பரமான தோகைக்காகப் பெயர் பெற்றது.


ஆண்மயில் பெண்ணைக் கவர்வதற்காக தோகையை விரித்து ஆடும். ஆண் மயில்கள் அழகிய, பளபளப்பான, நீலம் கலந்த பச்சை நிறமுடையவை. தோகையில் வரிசையாகக் ‘கண்’ வடிவங்கள் உள்ளன.


தோகையை விரிக்கும் போது இவை மிகவும் அழகாகத் தோற்றமளிக்கின்றன. பெண் மயில்களின் உடல் மங்கலான பச்சையும், பளபளப்புக் கொண்ட நீலமும், பச்சை கலந்த சாம்பல் நிறமும் கலந்தது. நீண்ட தோகை பெண் மயில்களுக்குக் கிடையாது.


மயில் இந்தியாவின் தேசியப்பறவை ஆகும்.

ஆங்கிலத்தில் Peacock எனப்பெயர் வரக் காரணம் :

தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து மயில் தோகையை இறக்குமதி செய்து வந்தனர் அரேபியர். தமிழ் தோகை, அரபிய மொழியில் tawus ஆகியது.


அங்கிருந்து கிரேக்கத்திற்கு சென்ற மயில் தோகை, அங்கு pfau ஆக மாறியது. அது லத்தீன் மொழியில் பேவோ ஆக மாறியது.


அதிலிருந்து ஆங்கிலத்தில் பேவ் எனவும், பின்னர் Peacock எனவும் மருவியது.


***
thanks pu.u
***"வாழ்க வளமுடன்"

பயணம் செய்பவரின் கனிவான கவனத்திற்கு


விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா!

பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் “மூத்த குடிமக்கள்’ இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும்.


நீண்ட நாள் டூர் என்றால், நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்து விட வேண்டும். குறைந்த நாள் போனமா வந்தமா டைப் டூர் என்றால் தினப்படி வந்து செல்லும் பால்/ பேப்பர்க்காரர்கள், வீட்டு பணி செய்பவர்களுக்கு கூட தெரிவிக்காமல், அக்கம் பக்கத்து ஒரு வீட்டில் பார்த்துக்க சொல்லிவிட்டு, சுருக்க போய் உடனே வந்துவிடலாம்.


நகை, வாட்ச், உடை, காலணி…

வீட்டில் இருக்கும் நகை எல்லாவற்றையும் போட்டு கொண்டு “வா திருடா, திருட வா’ன்று நாமே இன்விடேலின் கொடுக்க கூடாது.


மிக மெல்லிய, சிறிய,குறைந்த நகைகள் அணியலாம். பிளாட்டினம், பிளாஸ்டிக் ஐயிட்டங்கள் ஸ்மார்ட்டாய் காட்டும். ஒரு நாளிலேயே பல அணிகளை அணிய முடியும். விலை உயர்ந்த வாட்ச்கள் வேண்டாம்; வாட்ச்சே வேண்டாம்.


“செல்’லில்தான் டையம் இருக்கே. குட்டீஸ் கையில் பொம்மை வாட்ச்களை பார்த்து கொள்ளலாம். எவ்வளவுக்கெவ்வளவு விலையுயர்ந்த பொருட்கள் இல்லாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு டூரை மகிழ்ச்சியால் அனுபவிக்கலாம். அதிக எடையில்லாத, காட்டன் உடைகளை எடுத்து செல்லலாம்.
பெண் குழந்தைகள் என்ன வயது என்றாலும் உடலின் பெரும்பகுதி துணியால் மூடப்பட்டு இருக்கட்டும். மிடி, பிராக், எல்லாம் போடும்போது முட்டி வரை கூட உள்ளாடை போடலாம். வீணாய் தீயவர்களை தூண்ட வேண்டாமே.காலணிகளை லகுவானதாய் இருக்கட்டும்.


முக்கியமாய் ஆளுக்கொரு “செல்’ கண்டிப்பாய் இருக்கணும். அவரவர் அதை பொறுப்பாக வைத்து கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டு நண்பரிடம் வீட்டின் வெளிசாவியின் டூப்ளிகேட்டையும், குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.


வீட்டு கதவை பூட்டும் முன் காஸ் சிலிண்டரையும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா… என்பதை சரி பாருங்கள். ஒருவருக்கு இருவராய் செக் செய்தா, சந்தேகம் தோன்றாது. வெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது நல்லது.


ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள் டாக்டரை சந்தித்து உங்கள் பயண விவரங்களை சொல்லி அவரின் ஆலோசனையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கி கொள்ளுங்கள். எல்லா மருந்துகளும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்துகளையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்து செல்ல மறக்காதீர்கள்.


முதலுதவி விஷயங்கள்:

தைலம், குளூக்கோஸ் எடுத்து செல்ல வேண்டும். வலி நிவாரணம் களிப்பு, பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவற்றையும் உங்கள் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டும்.


மற்ற பொருட்கள்!

எண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப், பவுடர், ஷாம்பு, கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, கோப்பை, “செல்’ சார்ஜர் ஆகியவற்றையும் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
சோப் எடுத்து செல்ல வேண்டாம். கொழகொழப்பாய் இருக்கும். அதற்கு பதில் லிக்விட் சோப் எடுத்து செல்லலாம். அனைவரும் பயன்படுத்தலாம்.பரிசு!

தங்கப் போகிற உறவினர் வீடுகளுக்கு பயனுள்ள பரிசுகளுடன் செல்லுங்கள். குழந்தைகள் இருந்தால் அந்த வீட்டிற்கு போகும்போது விளையாட்டு பொருட்கள்… வேலைக்கு செல்கிறவர்களுக்கு, அவர்கள் தயாரிக்க நேரமில்லாமல் சிரமப்படும் தோசை மிளகாய் பொடி, வத்தல், வடகம்… வயதானவர்களுக்கு பூஜையறை பொருட்கள், சுவாமி படங்கள் என்று கொடுத்து அன்பை தெரிவியுங்கள்.


முகவரி!

போகும் இடத்து உறவினரின் முகவரியை தெளிவாய் எழுதி பாத்திரமா வைத்துக் கொள்ளுங்கள். பஸ், டாக்ஸி, ஆட்டோ, நடை எப்படி வர வேண்டும் என, கேட்டு கொள்ளுங்கள். அவர்களிடையே ஆட்டோ அல்லது சொந்த வண்டி எடுத்து வந்து பிக்-அப் செய்ய சொல்வது மிகவும் சிறப்பான வழியாகும்.


உணவு!

உணவு விஷயத்தில் இவனுக்கு இந்த காய் பிடிக்காது. அவளுக்கு இந்த பானம் பிடிக்காது என்றெல்லாம் அடம் பிடிக்காமல் அட்ஜஸ்ட் செய்து போங்கள். உங்கள் உணவு முறையே இதுவரை பழகி இருப்பீர்கள். மாறுதலுக்கு பாதி நாட்கள் அவர்கள் உணவு முறையை ஏற்று உண்ணுங்கள். அதேபோல உங்கள் உணவு முறையை பாதி நாட்கள் கடைபிடியுங்கள். இரு குடும்பத்திற்கும் இன்ப மாறுதாய் இருக்கும். அதோடு சமையல் வேலைகளில் பங்கு கொள்ளுங்கள். விரைவாய் சமையல் வேலை முடியும். ஆண்கள், காய்கறிகள் பர்சேஸ் செய்யலாம். ஒருநாள் மாறுதலாய் ஓட்டலில் சாப்பிடலாம். நீங்கள் போன ஊரின் சிறப்பு உணவு பொருட்களை ருசித்து மகிழுங்கள்.


பணிபார்வை!

அவர்கள் வீட்டில் வேலைக்கு ஆள் இருந்தால், அதை உங்களின் ஏகபோக உரிமையாக கருதி, உங்கள் வேலைகளை ஏவாதீர்கள். உங்கள் வரவு யாருக்கும் தொந்தரவாய் இருக்க கூடாது.


டிவி!

ஊருக்கு போய் இந்த பெட்டி முன் டேரா போட்டு விடாதீர்கள். எல்லாரும் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து விட்டு, வீட்டில் இரவு வேளையில் ரிலாக்ஸாக இருக்கும்போது குழு விளையாட்டு விளையாடலாம்.வாங்கி வாருங்கள்!

காய்கறி, பேப்பர், பால், வாட்டர் கேன், இப்படி அத்தியாவசிய பொருட்கள், குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என நிறைய வாங்கி தாருங்கள்.மறக்காதீங்க!

நாம டூர் அடிக்கும்போது நம்ம வீட்டை பார்த்து கொள்கிற வேலையை செய்யும் நண்பர் வீட்டுக்கும் கண்டிப்பாய் பரிசு பொருட்கள் வாங்க வேண்டும்.


கேமரா!

கண்டிப்பாய் இது வேண்டும். ஒவ்வொரு கணமாய் பதிவு செய்யுங்கள். ஊருக்கு போனபின் பிரிண்ட் போட்டு, ஆல்பமாக்கி உங்கள் உறவினருக்கு அனுப்புங்கள்.கடிதம்!

என்னதான் வாயாற நன்றி சொல்லி, பெரியவர்களை நமஸ்கரித்து விடை பெற்றிருந்தாலும், விருந்துண்ட வீடுகளுக்கு எழுத்து மூலம் ஒரு நன்றி கடிதம் அனுப்புங்கள். அதில் அவர்களை அவசியம் உங்கள் வீட்டுக்கு வருமாறு அழையுங்கள்.


கோவில்!

நீங்கள் செல்லும் கோவில்களின் வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். உதாரணமாக, கேரளா கோவில்களில் ஆண்கள் வேட்டியும், பெண்கள் புடவையும் அணிய வேண்டும் என்பது கட்டாயம். சுடிதாரோ, பேண்ட்டோ அணிந்து சென்றால் அனுமதி கிடையாது. அதோடு, வழிபாட்டு நேரம் சிறப்பு வழிபாட்டு தினங்கள் பற்றியும் அறிந்து போக வேண்டும். தரகர்களிடம் மாட்டி கொள்ளாதீர்கள்.


வலை!

சுற்றுலாவிற்கென அரசாங்கம் முதல் தனியார் வரை ஏகப்பட்ட வெப்சைட் உண்டு. சிறப்பான சைட்களை விசிட் அடித்து, ஒரு அழகான பிளானை போட்டு போகலாம். இன்டர்நெட்டின் மூலம் எல்லா விவரமும், உதவியும், ஆலோசனையும் பெறலாம்.


போர்டு!

தீயில் கை வைக்காதே; ரெயிலில் ஓரமாக நிற்காதே எங்களோடே இரு, தூரப்போகாதே; இப்படிப்பட்ட வாசகங்கள் டூரின்போது நிச்சயமாய் பெற்றோர்களால் சொல்லப்படும். வாண்டுகளோ சொன்னபடி நடக்காமல் வாலை அவிழ்க்கும். எச்சரிக்கை, ஆபத்து போன்ற போர்டு உள்ள இடத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். என்ன தவறு செய்தாலும் குட்டீஸை அடிப்பது பப்ளிக்காக திட்டுவது என அநாகரிகம் வேண்டாம். தனியே, மிக இனிமையாக நிலைமையை விளக்கவும்.


பணம்!

பயணத்துக்கு தேவையான பணத்தை மொத்தமாக எடுத்து செல்லாமல், டிராவல் செக் ஆகவோ பண அட்டையாகவோ வைத்து கொள்ளவும். 1000 ரூபாய்க்கு 100,50,20,10 மற்றும் சில்லறை காசுகளையும் வைத்து கொள்ளவும். அவசர தேவைகளுக்கும், சிறிய தேவைகளுக்கும் இவை உதவும்.


சில முக்கிய ஆலோசனைகள்!

உங்கள் பயணம் பற்றிய தெளிவான குறிப்பை, நம்பிக்கையான அண்டை வீட்டாரிடம் சொல்லி விட்டு செல்லவும். கோபம், குற்றம் கண்டுப்பிடித்தல், மட்டம் தட்டுதல், மனதை நோகடித்தல் போன்ற குணங்களை தவிர்த்து அனைவரிடமும் இனிமையாக பேசி பயணத்தை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். அரை வயிறு நிரப்பினாலே போதும். செல்லும் இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப எளிய உடைகளை எடுத்து செல்லவும். நிறைய நகைகள் வேண்டாம். புதிய மனிதர்களிடம் மிக கவனமாய் பழகவும். புதியவர் கொடுக்கும் திண்பண்டத்தை குழந்தைகளை உண்ண வேண்டாம் என அறிவுறுத்துங்கள்.

காசு இல்லை என்று சொல்லாமல், குழந்தைகளை மிக சந்தோஷமாய் வைத்துக் கொள்ளுங்கள். டூரின் சந்தோஷத்தில் அவர்கள் 10 மாதங்கள் சந்தோஷமாக கல்வி கற்க வேண்டும். ஓகே!


***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"

பால் அப்பம்1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்

1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்

1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்

குவித்து ஒரு தேக்கரண்டி சீனி

பெரிய பாதித் தேங்காய்

1 தே.க. உப்புத்தூள்

1/3 தே.க. அப்பச்சோடா

*

பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்சூடாகவுள்ள நீரினுள் வைத்து, 12 மணி நேரம் புளிக்கவிடவும். இளஞ்சூடு சற்று நேரமாகிலும் பிடிக்காவிட்டால் மா புளிக்கவேமாட்டாது.

மா புளித்தவுடன், தேங்காயைத் துருவி, சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இரண்டு தரம் பாலைப் பிழிந்து, தடித்த பாலாக 1/3 சுண்டுவரை எடுத்து வேறாக வைத்துக் கொள்க. மறுபடியும் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு 2-3 தரம் பிழிந்து, 3/4 சுண்டு வரையிலான பால் எடுத்து, மாவில் விட்டு, உப்பு, அப்பச்சோடா என்பவற்றையும் போட்டு, நன்றாகக் கரைத்துக்கொள்க.

பின்னர் ஒரு பழகிய அப்பத்தாச்சியை (seasoned pan) மிதமாக எரியும் அடுப்பின்மீது வைத்து, காய்ந்தவுடன், ஒரு துணிப் பொட்டணத்தை நல்லெண்ணையில் தொட்டு, தாச்சியின் உட்புறம் முழுவதிலும் இலேசாகத் தேய்த்துப் பூசி, 4 மேசைக்கரண்டியளவு மாவை ஒரு கரண்டியினால் அள்ளி வார்க்கவும். வார்த்தவுடன் தாச்சியைத் தூக்கி, சற்றுச் சரித்து, ஒருமுறை வட்டமாகச் சிலாவி விட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, வேறாக வைத்த தடித்த தேங்காய்ப்பாலில் 2 தேக்கரண்டியளவை நடுவில் பரவலாக விட்டு, ஒரு இறுக்கமான மூடியினால் மூடி வேகவிடவும். "சிலுசிலு" என்று மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்து பார்த்து, வெந்த அப்பத்தை ஒரு தட்டகப்பையினால் எடுத்து. ஒரு பெரிய தாம்பாளத்தில் சுற்றிவர அடுக்கி வரவும். பால் அப்பிக்கொள்ளாதபடி, ஒன்றினது ஓரம் மரத்தின்மீது படியும்படி வைத்து, இன்னொரு தாம்பாளத்தினால்மூடி விடவும்.

குறிப்பு: ஒரு அப்பம் வேகுவதற்கு 2 ½-3 நிமிடங்கள் வரை செல்லும். செம்மையாகச் சுடப்பட்ட அப்பம் வாசனையாகவும், அழகாகவும் இருக்கும். இதன் ஓரம் மொறமொறப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்; நடுவில் துவாரங்கள் விழுந்து, துவாரங்கள் தடித்த பாலில் தோய்ந்திருக்கும்.

கரைத்த மா அதிக தடிப்பாக இருந்தால், அப்பத்தின் ஓரம் மட்டை போலவும், நடுப்பாகம் கனமாகவும் இருக்கும். தண்ணீர் கூடிவிட்டால், ஓரம் உடைந்து மாவாகி விடுவதுடன், நடுப்பாகமும் களிபோல இருக்கும். எனவே, அப்பத்திற்கான மாவை அவதானமாகக் கரைத்தல் வேண்டும்.

அப்பச்சோடாவைக் கட்டுமட்டாகப் பாவித்தல் வேண்டும். கூடினால், அப்பம் மஞ்சள் நிரமடைவதுடன், ஒருவித வாடையும் வீசும். முதலில் இதனைக் கொஞ்சமாக போட்டுக் கரைத்து, ஒரு அப்பத்தைச் சுட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தேவைப்படி போட்டுக்கொள்க.

அப்பத்தை இளஞ்சூடாக, வெறுமனே, அல்லது கட்டைச்சம்பல், சீனிசம்பல், சம்பலுடன் பரிமாறலாம்.


***
thanks panippulam
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "