...
"வாழ்க வளமுடன்"
31 மார்ச், 2011
தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் :)
கண்களை மூடுங்க; வெயிட் குறையும்!
கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...
30 மார்ச், 2011
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள 10 வழிகள்
பாம்பு பால் குடிக்குமா குடிக்காதா ?
ஹரிக்கேன் விளக்கு உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கா?
தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.
பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர். பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.
இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது. ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...
இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.
இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...
மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.
கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி ( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....
அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.
நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.
இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.
ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில் அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....
மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.
அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.
ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.
ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.
என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும், இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.
தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி.... *** thanks ஜாக்கிசேகர். *** "வாழ்க வளமுடன்"
மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை :)
உங்களுக்கான அட்டவணையை இணைத்துள்ளேன். பார்த்து கணக்கை தெரிந்துகொள்ளுங்கள். அடுத்த முறை கணக்கீட்டாளர்கள் வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா என சோதனை செய்து கொள்ளுங்கள் உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.
இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே. மற்ற மின் உபயோகத்திற்கான அட்டவணையை தங்கள் மேலான ஆதரவு கண்டு வெளியிடுகின்றேன்.
*** thanks vealan *** வாழ்க வளமுடன்"
குளிர்பானக் குட்டிச் சாத்தான் !
29 மார்ச், 2011
வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது அந்தரங்க விஷயங்களையும் பேசாதீர்கள் :(
28 மார்ச், 2011
புதிதாக மணம் முடித்த பெண்களே இப்படி சமாளியுங்க...!
வீட்டில் உள்ள தரை பளிச்சிட :)
சத்தான உணவு... சரியான நேரம்!
25 மார்ச், 2011
அவரைக்கையின் மருத்துவ குணங்கள் :)
இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.
அதன்படி வீட்டைச் சுற்றி மனிதனுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தரும் கீரைகள், மரங்களை நட்டு வளர்த்தனர். ஆனால் இன்று வீடுகளைச் சுற்றி காங்கிரீட் தளங்கள், குரோட்டன்ஸ் என்று சொல்லப்படும் எதற்கும் உதவாத நச்சுச் செடிகள், அல்லது பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள்தான் உள்ளன.
இதனால் வீட்டுத் தோட்டக் காய்கள் எதுவென்று நம் எதிர்கால சந்ததியினர்களுக்குத் தெரியாமல் போகும் நிலை உள்ளது. இன்று காய்கறிகள், கனிகள் கீரைகள் எல்லாம் இரசாயன உரமிட்டு வளர்க்கப்பட்டு சந்தைகளில் விற்கப்படுகிறது. அவை சில நேரங்களில் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது.
ஆனால் இவைகளை நம் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுக் கழிவுகளை உரமாக இட்டு வளர்த்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் வீடுகளில் எளிதாக வளர்க்கப்படும் அவரைக்காய் பற்றி தெரிந்து கொள்வோம்.
அவரை கொடி வகையைச் சேர்ந்தது. குறிப்பாக தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் செடியாகும். இன்றும் கிராமப்புறங்களில் வீட்டின் கொல்லைப் புறத்தில் அவரை பயிரிடப் படுவதைக் காணலாம். ஆடி மாதம் விதை விதைத்தால் அதன் பயன் தை மாதத்தில்தான் கிடைக்கும். இது கொடியாக வளர்ந்து காய் காய்ப்பதற்கு ஆறு-மாத காலமாகும். இந்த அவரைக் கொடிக்கு அழகான பந்தல் போடுவார்கள். அந்த பந்தலின் மேல் இந்த கொடி படர்ந்து காணப்படும். அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது.
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும். இதில் சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.
காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.
சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி
-தேரையர் குணபாடம்.
பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் பிஞ்சு வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.
அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை மட்டுப்படும்.
· மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும்.
· மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
· சிறுநீரைப் பெருக்கும்
· சளி, இருமலைப் போக்கும்
· உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்
· சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்
· இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.
முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும்.
ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.
முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.
***
thanks நக்கீரன்
***
"வாழ்க வளமுடன்"
நம் உடல் எப்படி இயங்குகிறது என்று உங்களுக்கு தெரியுமா? ( + 15 )
ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நுரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மாதியாகவே உள்ளது. இவர்களுக்கிடையே உள்ள ஒரே வித்தியாசம் இவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்திக்கான உடலுறுப்புகள் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளதுதான்.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உருவாக்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்களின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது.
பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான். குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப்புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்புகள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படுகிறது.
நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ளமுடியும். பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் பிரச்சினை யின் காரணத்தை அறிந்து, எது சிறந்த சிகிச்சை என முடிவெடுக்க முடியும். நம்மை பற்றி மேலும் மேலும் அறியும் பொழுது மற்றவர்களின் அறிவுரை (நல்லதோ, கெட்டதோ எதுவாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மால் சொந்த முடிவு எடுக்க முடியும்.
ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அல்லது இனவிருத்திக்கான உறுப்புகள் என அழைக்கப் படுகின்றன. வெளிப்பாகத்தை உல்வா என்றழைப்பர். இந்த பாகம் முழுவதையும் சிலர் யோனி என்றழைப்பதுண்டு. ஆனால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே கர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சில நேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பதுண்டு.
கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ளது. அதன் பல்வேறு பாகங்களின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்படும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படும். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும்.
*
மார்பகங்கள்
மார்பகங்கள் எல்லா வடிவிலும் எல்லா அளவிலும் காணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கிறது. அதாவது சிறுமியாயிருந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. கருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத்தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண்ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது.
*
மார்பகத்தின் உள்பாகம்
சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது.
சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது.
திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கும் வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகிறது.
மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெளிவருகிறது. சில நேரம் இது விரைத்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும்.
ஏரியோலா (Areola) : மார்புக் காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உள்ள மேடுகள் எண்ணெய் பசையை உற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
*
பருவமாற்றங்களும் ஹார்மோன்களும்
ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்களாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடைகிறாள்.
பருவமடைந்த பின் மாதவிடாய் நிற்கும் வரை, ஹார்மோன்கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந்த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியிடுகின்றன. ஒரு பெண் கருத்தரிக்க இந்த ஹார்மோன்கள் முக்கிய காரணமாய் விளங்குகின்றன.
பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைகள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும்போது மாதவிடாய் வருவதில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப்பதும் இந்த ஹார்மோன்கள்தான்.
ஒரு பெண் இன விருத்திக்கான கட்டத்தை கடக்கும்பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியாக குறையும். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்த லுக்கான நிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெயர் தான் “மாதவிடாய் நின்றுவிடுதல்” (Menopause)
அதைத் தொடர்ந்து பெண்ணின் உட்லில் சுரக்கும் ஹார்மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவளின் மனநிலை, காம உணர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலும்பின் சக்தி ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்படும்.
*
மாதவிடாய்
ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அவளின் கர்ப்பப் பையிலிருந்து இரத்தம் யோனிக் குழாய் வழியாக உடலை விட்டு வெளியேறுகிறது. இதற்கு பெயர்தான் மாதவிடாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம்.
இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு தயாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்களில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற்படுகிறது என்றெல்லாம் தெரிவதில்லை.
*
மாதாந்திர சுற்று (மாதவிடாய் சுற்று)
மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒருமுறைதான் இது நிகழும். மாதவிடாய் சுற்றின்போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக் கொண்டேயிருக்கும்.
மாதச்சுற்றின் முதல் பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக்கும். இதனால் கருப்பையின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உருவாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவான கூட்டில் சுகமாக இருக்கும்.
மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறும். இம்முட்டைஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அப்போது பெண் உடலுறவுக் கொண்டாள், ஆணின் உயிரணு முட்டையோடு சேர வாய்ப்புண்டு.
இதற்கு கருத்தரித்தல் எனப்பெயர். அது கர்ப்ப காலத்தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங்கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது.
பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது. எனவே கருப்பையின் சுவர்ப்படலத்துக்கு தேவையிருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கருப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும்.
இதனோடு கூடவே முட்டையும் வெளியேறும். இது புதியமாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிடாய் நின்ற உடன் சினைப்பைகள் சுவர்ப்படலம் உருவாகும். பெண்களுக்கு வயதாகி, மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முன்பு இரத்தப்போக்கு அடிக்கடி ஏற்படலாம். இரத்தப்போக்கின் அளவும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிகமாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம்.
*
பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங்கள்
உல்வா : உங்கள் இரு தொடைகளுக்கு இடையே காணப்படும் இனவிருத்தி உறுப்புகள்
வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக்கிறது.
உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல்பகுதி. இதில் முடி இருக்காது. தொட்ட உடனே உணர்ச்சி வரும். உடலுறவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும்.
யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயில்
ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையாட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவடையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரும். முதன்முறையாக உடலுறவின் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன்னே இருக்காது.
மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வாவின் தடித்த மேல் பகுதி.
கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்களிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியுள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலியல் வேட்கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள்.
சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வாயில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்பட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியேதான் உள்ளிருந்து வெளியே வருகிறது.
ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியேறும்
*
பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள்
சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்கு கிறது. ஒரு பெண்ணுக்கு இரு சினைப்பைகள் இருக்கும் கருப்பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கும். ஒவ்வொரு சினைப்பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும்.
கர்ப்பப்பைவாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல்கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக்குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழியே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண்குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இது தடுக்கிறது. குழந்தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது.
.ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிறது. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கருப்பையை அடைகிறது.
கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாதவிடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறுகிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது.
யோனிக் குழாய் அல்லது பிறப்புவழி : உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பைக்கு செல்லும் பாதைதான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேசமானது. உடலுறவின் போதும் குழந்தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோனிக்குழாயை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், கிருமிகள் தாக்காமலும் பாதுகாக்கிறது.
*
பெண்களின் பாலியல் பிரச்சனைகள்
வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுகள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையாவது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நினைப்பது சாதாரண விஷயம்தான்.
பெண்கள் உடலுறவில் ஈடுபட பல காரணங்கள் உண்டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தேவைப்படுகிறது என்பதனால் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சிலர், அதில் விருப்பம் உண்டோ, இல்லையோ, மனைவி என்ற அடிப்படையில், கடமை போல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர் பணத்திற்காக அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வாங்குவதற்காக அல்லது தங்க இடம் வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
மற்ற பெண்கள் தன்னுடைய துணைவன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்பனோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாதபோது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண்டும் என வலியுறுத்தி அவளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறான்.
தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உடலுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண்ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் அதில் பயமோ, வெட்கமோ இருக்கும் பட்சத்தில் அந்த மகிழ்ச்சி கிடைப்பது கடினம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்தரித்தல் மற்றும் பால்வினை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந்தம்
உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண்களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் காதலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள். சில இடங் களில் இதை ‘காதலனின் பலாத்காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உடல் ரீதியானது மட்டுமல்ல. உணர்வுகளாலும், வார்த்தைகளாலும் கூட அவர்கள் நிர்ப்பந்திப்பார்கள். விருப்பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது.
உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்க ளோடு உடலுறவு வைத்துக்கொள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு)
நீங்கள் விரும்பவில்லையெனில் உங்கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது. அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடும்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத்தையோ, காம உணர்வோடு தொடக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாடவேண்டும்.
வெளியே சொன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறுத்தினால் கூட, நீங்கள் நம்பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்லவேண்டும். இந்த விபரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.
***
நன்றி : டாக்டர் இல்லாத பெண்களுக்கு
***
"வாழ்க வளமுடன்"
ஆண், பெண் இருபாலருக்கும் அழகுக் குறிப்புகள் !
கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.
* வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் பாடாய்ப்படுத்தும். கரும் புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
* கோடை வெயிலில் நாக்கு மட்டுமல்ல தோல் வறட்சியும் ஏற்படும். இதற்கு பழச்சாறு, காய்கறிச் சாறு, சூப் மற்றும் மினரல் வாட்டரை அடிக்கடி சாப்பிடவும். இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு தோல் பளபளப்பாகவும் மாறும். கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை விட மோராக சாப்பிடுவது நல்லது.
* கோடை காலத்தில் பாத வெடிப்பு அதிகமாக ஏற்படும். இதற்கு வெங்காயத்தை வதக்கி, பின்னர் அதை விழுதுவாக அரைத்து பாதங்களில் தடவி வந்தால் பாத வெடிப்பு படிப்படியாக மறையும். பெரும்பாலும் உடம்பில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலைக்கு குடையும், கண்ணுக்கு கண்ணாடியும், காலுக்கு செருப்பும் அவசியமாகும்.
* உடம்பில் இருந்து அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுத்தால் வேர்க்குருவைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக வியர்க்கும்போது குளித்தால் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும். அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.
* கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.
* வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும். உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகம் குடிக்கலாம்.
* வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் புரோட்டீன் இறுதியில் யூரியாவாக மாறிவிடும் என்பதால் அதை தவிர்க்கவும். எரிச்சல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத் தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எக்காரணம் கொண்டும் சிறுநீரை அடக்க வேண்டாம்.
* ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும். குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
* வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள் வெயில் காலத்தை எண்ணி அதிகம் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் கோடை காலத்தில் அதிகம் வியர்க்கும். இதனால் வறண்ட சருமத்தைக் கொண்டவர்களுக்கு நன்மையே தவிர, தீமை இல்லை. ஆனால் வியர்க்கும்போது உடலில் அசுத்தமான துகள்கள் ஒட்டினால் தோல் அலர்ஜி ஏற்படும். அதனால் அடிக்கடி உடம்பை கழுவவும்.
* கோடை காலத்தில் எல்லோருக்குமே உடலில் வியர்வை நாற்றம் ஏற்படவே செய்யும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும். கீரைகள், ஆரஞ்சுப் பழம், அன்னாசிப் பழம் ஆகியவற்றை நிறைய சாப்பிடுங்கள். இவற்றிலுள்ள நார்ச்சத்து திரவ உற்பத்தியைக் குறைக்கும். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்பை உடலில் தேய்த்துக் குளிக்கவேண்டும்.
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"
வயிற்றைப் பாதுகாக்க :)
வயிற்றைப் பாதுகாக்க நமக்கு வழவழப்பான திரை அமைப்பு வயிற்றுக்குள் இருக்கு :
வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
**
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும்.
லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
**
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது.... சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு.
இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும். ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம்.
டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை.
டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்! மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர்.
மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடிஉணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.
**
வராம இருக்க...?
சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.
கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.
மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!
***
thanks இணையம்
***
வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி ?
வாஸ்துபுருஷன் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் முழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பிறுகு மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே அவர் உணவு சாப்பிட ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரத்துக்குள் மனை முகூர்த்தம் செய்ய வேண்டும்.
வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
வாஸ்துபுருஷன் படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில் வீடுகட்டு கிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலை வாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்துபுருஷன் அந் தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து ஏழாவது ராசியில் தலையை வைத்தும் இட கையை தலையிலும் வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டு படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் அதனால் அம்மாதங்களிள் மேற்கே வாசல் வைக்கக் கூடாது. வாஸ்துபுருஷன் கிழக்கே கால் நீட்டி இருக்கும் சமயங்களில் கிழக்கில் வாசல் கூடாது. இவ்வாறே தெற்குப் புறமும் வாசல் இருப்பது கூடாது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் திசையான வடக்குப் புறத்தில் மட்டும்தான் தலைவாசல் வைக்க வேண்டும்.
வாஸ்துபுருஷன் சயனத்தில இருக்கும் பொழுது, அவரது தலை இருக்கும் பகுதியில் வாசல் வைத்தால் கணவருக்கு பாதிப்புகளும், கெடுதிகளும் நேரும். அவரவர் ராசிக்கேற்ற திசையை அறிந்து அதன்படி தலைவாசல் வைக்கலாம்.
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசையும், ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு தெற்கும், துலாத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாத் திசை களும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கும் ஏற்றதாகும்
இபபொழுது நிறையபோ் நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைக்கிறார்கள் இதனால்.நமது வீட்டுக்குள் நன்மை தரும் ஆற்றல் வராமல் திரும்ப வெளியே போய்விடும் இதனால் வீட்டில் நன்மைகள் ஏற்படாது
வீட்டிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லது இல்லை. நமது குடும்பத்தில் கண்டை சச்சரவுகளும் வீண் செலவுகளும் ஏற்படும். சிலரது வீடுகளில் அதிர்ஷ்ட மீன் தொட்டியை வைத்திருப்பார்கள். மீன் தொட்டியை வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் வைக்கக் கூடாது படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் வைக்கக் கூடாது.
**
வீட்டை எப்படி அமைக்கலாம்
1. தென்கிழக்கு திசையில் சமையல் அறை வைக்க வேண்டும்
2. கிழக்கு திசையில் படிக்கும் அறை நுழை வாயில் குடிநீர் குழாய் குளியல் அறை வைக்க வேண்டும்
3.தெற்கு திசையில் சாப்பிடும் அறை படுக்கை அறை வைக்கலாம்
4.தென்மேற்கு திசையில் புத்தக அறையை வைக்கலாம்
5.மேற்கு திசையில் நமது பிள்ளைகளின் படுக்கை அறை வைக்கலாம்
6.வடக்கு திசையில் பண்ம் பீரோ பொருள் சேமிக்கும் அறை வைக்கலாம்
7. வடமேற்கு .திசையில். க்க்கூஸ் கழிவு நீர் அலுவலக அறை வைக்கலாம்
8.மேற்கு வடகிழக்குத் திசையில் பூஜை அறைகள் வைக்கலாம்
***
வீட்டின் வாசல்களை அமைக்கும் முறைகள்
தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும் அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் வைக்க வேண்டும்
நாம வீடு கட்டும்போது கல், மண், சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது.
***
thanks kpn
***
"வாழ்க வளமுடன்"
24 மார்ச், 2011
விமான விபத்திலிருந்து எப்படி தப்பலாம்..?
உலக உயிர்கள் எதனால் வாழ்கிறதோ தோன்றியதோ ,ஆனால் அனைத்தும் தக்கென பிழைத்தல் எனும் அடிப்படை தியரியை வைத்து தான் தோன்றின . தம்மை பாதுகாத்துக்கொள்ள , எச்சரிக்கையாக இருக்க தெரிந்த உயிர்கள் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகம் .
அண்மையில் நடந்த மேன்களூர் விமான விபத்தில் பல உயிர்களை தீ விழுங்கியது . அதில் அந்த விமானத்தை தவறவிட்டவர்களுடன் மொத்தம் 15 பேர் உயிர் தப்பினர் . உயிர்களின் பெறுமதி மதிப்பில்லை . அதில் ஒரு அறுபது பேராவது தப்பியிருந்தாலும் மகிழ்ச்சி தான் . நம் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் நோக்கம் முழுக்க யார் மீது யார் பழியை போட்டு பிழைக்கலாம் என்பதே .அது தான் இப்போதும் நடக்கிறது . அதனால் பயன் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை . இனி எவ்வாறு இவ்வாறான விபத்துகளை எதிர் கொள்கிறோம் என்பதே முக்கியம் .
இது குறித்து எவராலும் விழிப்புணர்வு நடவடிக்கை கொண்டு செல்லப்பட்டதாக காணவில்லை . விமானப்பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். 1 .2 மிலியன் விமானங்களுக்கு ஒன்று என விபத்து நடந்தாலும் எச்சரிக்கை மிகவும் முக்கியம் .
a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7UIZIOxJpcC6KWKX6DSvsyRcsatEcSngatar84exvd42Aic0Z14IcjKqJ8DYn4L2u9lS_E-zy2rrZZCPl0DcC0ywYeSnzrCQ_NPh_NI7zANNl7Yzj9fNkriAyeYl0OKclDZGAWWxqvd4/s1600/survive_airplane_crash_hd_2_xxlarge.jpg">
இதுவரை நடந்த அகோர விமான விமான விபத்துக்களில் இருந்து 56 % ஆன உயிர்கள் காப்பற்றப்பட்டிருக்கின்றன . சிலவை தவிர்க்கமுடியாதாயினும் உயிர் பிழைக்கும் விகிதத்தை எம் இறுதி நேர நடவடிக்கைகளால் அதிகரிக்கலாம்.
எவளவு பெரிய விபத்தானாலும் ஒரு விமானம் முழுமையாக தீப்பிடித்து வெடித்து எரிவதற்கு 90 செக்கன்கள் ( 1 1/2 நிமிடங்கள் ) ஆகும். இது சர்வதேச தீ விபத்து பாதுகாப்பு மையத்தின் ஆய்வு அறிக்கை கூறும் தகவல் . அந்த 90 செக்கன்களையும் நாம் பயனுள்ள விதத்தில் பாவிப்பதிலேயே உயிர் பிழைக்கும் சந்தர்ப்பம் உண்டு .
நடை பெற்ற விபத்தில் இருந்து பிழைத்த உமர் பாரூக் கூறிய கருத்தின் படி பார்த்தால் முடிவெடுக்கும் சந்தர்ப்பம் அதிகம் . சில உயிர்கள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஏன் மற்றயவர்களால் எழுந்து வரமுடியவில்லை ??
"திடீரென விமானம் தள்ளாடியது. விமானத்தின் இறக்கை ஒன்று மலை மீது உரசியதை பார்க்க முடிந்தது. நாங்கள் எல்லாரும் அலறினோம்.சிறிது நேரத்தில் மலை மீது பலத்த சத்தத்துடன் விமானம் மோதியது. விமானம் முழுக்க தீ பிடித்தது. எங்கும் புகையாக இருந்தது."தைரியத்தை வர வழைத்துக்கொண்டு எழுந்து வெளியில் ஓடிவந்தேன். அடுத்த சில நிமிடங்களில் நான் இருந்த இடம் உள்பட விமானத்தின் பெரும் பகுதி வெடித்து சிதறியது."
I got caught in some cables but managed to scramble out
தான் இடையில் மாட்டிக்கொண்டதாக கூறியிருந்தார் உமர் . விமானம் எரிந்து தீப்பற்ற முதலே சிலரது உயிர்கள் பதற்றத்தால் செல்லும் வாய்ப்பு அதிகம் . மற்றும் பொருள்கள் ஏதாவது எதிர்பாராத விதமாக அடிபடும் . முக்கியமாக தலைப்பகுதியே முதலில் தாக்கப்படும் .
தலைப்பகுதி அடிபடுவதால் சிலர் முதலே மயக்கமடைவர் . தலைப்பகுதியை முன்னாள் இருக்கும் இருக்கையில் வைத்து படுக்க வேண்டும் . இதனால் முதல் சந்தர்ப்பத்தில் இருந்து பிழைக்கலாம் .
என் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் மயங்கி, சரிந்து கிடந்தனர். ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
பலரால் எழுந்து ஓடி வந்திருக்க முடியும் ஆனால் நெருப்பு எரிந்ததால் வந்த புகை அவர்கள் மயக்கத்திற்கு காரணம் . வரும் நெருப்பு புகை மேலாக தான் கூடுதலாக செல்லும். குறைவாக சுவாசிப்பதன் மூலமும் கீழே குனிந்து கொண்டு வெளியேறுவதன் மூலமும் அந்த மயக்கத்தை தவிர்க்கலாம் .இல்லாவிட்டால் ஈரமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளவும்
இந்த செயன்முறை உயிர் பிழைக்கும் இரண்டாவது சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் .
"நான் இருந்த பகுதியில் விமானம் இரண்டாக பிளந்து கிடந்தது. இதனால் வெளியில் செல்ல வழி கிடைத்தது." ஏன் அவரால் விரைவாக வெளியேறும் பகுதியை திறக்கம் முடியவில்லை? அவர் இருந்த இருக்கைக்கு அருகாமையில் தான் வெளியேறும் பகுதி இருக்கிறது . தான் விமானத்தின் பின் பகுதியில் இருந்ததாக கூறினார் .
அனைவரும் கட்டாயமாக விரைவாக வெளியேறும் பகுதி திறக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும். சில வேளைகளில் விமானம் எரியும் போது அதில் பணி புரிபவர்கள் கூட இறந்திருக்கலாம் . ஆகவே எமக்கு அதை திறக்க தெரிந்திருக்க வேண்டும் . இதில் முக்கிய பங்கு வகிப்பது நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் .
நாம் தெரிவு செய்யும் இருக்கைகள் நமது பாதுகாப்பை மேலும் உறுதி செய்கின்றன .
கூடுதலாக விரைவாக வெளியேறும் கதவுக்கு அருகில் இருப்பவர்களுக்கு அதிகம் வாய்ப்புகள் மற்றும் விமானத்தில் பின்னால் இருப்பவர்கள் உயிர் பிழைக்கும் வீதம் 60 % ஆம்..
***
முக்கியமான தவறுகள்
விரைவான அதிர்ச்சி
அனைவரும் அதிர்ச்சியில் செய்வதறியாது தான் இருப்பார்கள். சிலர் கடவுளை வணங்குவர் . கண்களை மூடிக்கொண்டு இருந்து விடுவார்கள் . அடுத்த படியை யோசிப்பதில்லை . இது தான் உண்மை .
*
பொதிகளை கை விடாமல் இருத்தல்
முக்கியமாக எம்மவர்கள் பொதிகள் மீது கவனம் செலுத்தி அதை எடுத்துக்கொண்டு செல்ல முற்படுவர். பொதிகளை விட்டு விட்டு உடனடியாக வெளியேற மட்டுமே பார்க்க வேண்டும் . எந்த நேரத்தில் வெடிக்கும் என்பது கூற முடியாது . ஆனால் சிறிது நேரத்தில் வெடிக்கும் என்பது நிச்சயம் .
தயவு செய்து விமான பயணத்தில் குடிக்காதீர்கள் . அது உங்கள் செயல்ப்படும் திறனை இன்னும் குறைக்கும் .
விமான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கும் போது அலட்ச்சியம்
அனைத்திற்கும் காரணம் அலச்சியம். கூடுதலாக நாம் ஒருவரும் விமானம் புறப்படும் முன் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை கேட்பதில்லை . காரணம் எத்தனையோ தடவை கேட்டு விட்டோம் என்ற அலட்ச்சியம் . ஆனால் சில தகவல்கள் விமானத்துக்கு விமானம் வேறு படும் எனபதே உண்மை .
பாதுகாப்பு உறையை கூடுதலாக உடனே அணிய வேண்டும் ஆனால் விமானம் விழுந்தது நீர் பரப்பாக இருந்தால் விமானத்தை விட்டு உடனே குதிக்க தேவையில்லை .
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருந்து பார்த்தால் தான் தெரியும் என்பது சிலருடைய கருத்து . சிலருடைய கருத்து அந்த நேரம் என்ன செய்வதென்றே தெரியாது என்பதே . நாம் அதிர்ச்சியடைவதன் மூலம் உயிர் காப்பாற்றப்படப்போவதில்லை .உயிர் பிழைக்கும் விகிதம் மனதளவில் குறைக்கப்படும் . ஆனால் மன அழுத்தத்தை எதிர் கொண்டு விரைவாக செயல்ப்பட வேண்டும் . சில திடீர் வெடிப்புகள் தவிர்க்க முடியாது .
***
thanks உமா
***
23 மார்ச், 2011
மூச்சுப் பயிற்சி - நாடிசுத்தி : பாகம் - 10 :)
இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து கொண்டிருப்பதற்கும் ஆதாரமாக இருக்கின்ற சக்தி ஒன்று இருக்கின்றது. இந்தச் சக்தியைத்தான் பிராணசக்தி (Life Force) என்று கூறுகிறோம். மானுட தேகத்தின் இடையறாத இயக்கத்துக்கும் இதுவே காரணமாகிறது. இந்தப் பிராணசக்தி இரண்டு வகையான இயக்கங்களாக நமது உடம்பில் வினைப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓன்று உள்ளிழுக்கும் இயக்கம், மற்றது வெளித்தள்ளும் இயக்கம். இவ்விரண்டு இயக்கங்களும் ஆங்கிலத்தில் Assimilation என்றும் Elimination என்றும் சொல்லப்படுகின்றன.
நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் வளியைக் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை வளப்படுத்துவதற்காகவும், நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள்ளிளுக்கும் மற்றும் வெளித்தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காகவும் மானுடர் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது ஞானிகள் கண்டறிந்து போதித்தார்கள்.
இவை 1. நாடிசுத்தி 2. ஜிவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.
இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துவனவே என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும். இங்கே பிராணாயாமங்களைப் பற்றியோ, அவற்றின் அடிப்படை சுவாசப்பயிற்சிகளையோ நான் விபரிக்கவில்லை. என்றாலும் பொதுவான மனித உடல் நலத்தைக் கருத்தில்கொண்டு நாடிசுத்தி என்று மூச்சுப்பயிற்சியை மட்டும் விளக்கியிருக்கின்றேன்.
நாடிசுத்தி செய்யும் முறை:-
பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும். வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும். நுரையீரல் காற்றால் நிறைந்ததும்இ இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும். இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும். இது ஒருசுற்று நாடிசத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.
பயன்கள்:-
சுவாசித்தல் என்ற காரியத்தில் காற்று மூக்குவழியாக உள்ளேபோய் அங்கே காற்றிலுள்ள பிராணவாயு எடுத்துக்கொள்ளப்பட்டுக் கரியமிலவாயு வெளியேற்றப்படுகிறது. இதைத்தான் சுவாசித்தல் என்று கூறுகிறோம்.
காற்று மூக்கு வழியாக உள்ளே நுரையீரலுக்குப் போய் மூக்கு வழியாக வெளியே வரவேண்டும். இவ்வளவு தானே, இதற்கு மூக்கிலே இரண்டு துவாரங்கள் எதற்காக இருக்கவேண்டும்? ஒரே துவாரமாக இருந்தால் போதாதா? போன்ற இப்படியான கேள்விகளை எடுத்துக் கொண்டு விஞ்ஞானம் இதுவரை இதற்கு விடை சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. விஞ்ஞானம் இதனை விளங்கிக் கொள்ளாமலோ அல்லது விளக்கமளிக்காமலோ போனாலும் நமது ஞானிகள் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
*
இடை பிங்கலையும் சுவாசநடப்பும்:-
இடதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் இடைகலை, வலதுபக்க மூக்குத்துளை வழியே போகின்ற சுவாசம் பிங்கலை எனபப்படும். இடதுபக்க சுவாசம் உடலுக்கு சீதளத்தையும், வலதுபக்க சுவாசம் உடம்புக்கு உஷ்ணத்தையும் தருகின்றன. சாதாரணமாக நாம் நமது சுவாசத்தின் நடப்பைக் கவனித்தோமானால் யாருக்கும் எப்போதும் ஏதாவது ஒரு பக்கமாகத்தான் சுவாசம் நடந்துகொண்டிருக்கும். அப்பொழுது மற்ற மூக்குத்துளை அடைத்துக் கொண்டிருக்கும். இன்னும் சிறிதுநேரம் கழித்துப் பார்த்தால் ஏற்கனவே சுவாசம் ஓடிக்கொண்டிருந்த பக்கம் அடைத்துக்கொண்டு மறுபக்கம் சுவாசம் மாறி நடப்பதை அறியலாம். எப்போதாவது ஒரு சமயம் சுவாசம் இரண்டு நாசித்துளைகள் வழியாகவும் தடை இல்லாமல் போய்க்கொண்டு இருக்கும். இந்நிலை சுவாசம் ஏதோ ஒரு பக்கமாக மாறப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இவ்வாறு சுவாசம் ஒரு நாளில் சில தடவைகள் மாறிமாறி நடந்து நமது உடம்பின் உஷ்ண நிலையைச் சீராகவைத்துக்கொண்டு இருக்கிறது.
*
நுரையீரலும், சுவாசங்களும்:-
அறுபது கோடி காற்றறைகளால் ஆகி நூறு சதுரமீட்டர்கள் பரப்பளவையுடைய நுரையீரல்கள், சின்னச்சின்ன வாழைப்பூ வடிவத்தில் இரண்டுபக்க விலாஎலும்புகளுக்குள்ளே அமைந்து நமது சுவாசத்தை இரவும் பகலும் ஓயாது நடத்தி, நமது உடம்பிலுள்ள ஐயாயிரம் கோடி கலங்களுக்கும் பிராணவாயுவை விநியோகம் செய்துவருகிறது.
சாதாரணமாக நாம் சுவாசிக்கும் சுவாசங்களைக் கவனித்தால் இது சரியான சுவாசம் இல்லையென்பது விளங்கும். ஏதோ கொஞ்சம் காற்று உள்ளே போகிறது. உள்ளே வந்த காற்றிலுள்ள பிராணவாயுவை நுரையீரல்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டு இந்தக் கொஞ்ச நேரத்துக்குள் கரியமில வாயுவை வெளிளேற்றுகின்றன. உள்ளே போகும் காற்றில் தூசும், வாகனங்களின் கரிப்புகையும், தூய்மையற்ற சுற்றுப்புறத்தின் மாசுகளும் மண்டிக்கிடக்கின்றன. இந்தக் காற்றையாவது நுரையீரல் நிரம்புமளவுக்கு சுவாசிக்கிறோமா என்றால் அதுவுமில்லை.
மனிதன் சுவாசிக்கின்ற ஒவ்வொரு சுவாசத்திலும் ஆழ்ந்து காற்றை இழுத்து நுரையீரல்களை நிரப்ப முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் நடைமுறையில் இல்லை. எப்போதாவது அபூர்வமாகப் பெருமூச்சு விட்டால் அப்போது ஓரளவு நமது நுரையீரல்கள் காற்றால் நிரம்புகின்றன. இந்த நடைமுறையினை நாம் அறிவோம்.
நாடிசுத்தி செய்கின்றபோது நன்கு ஆழ்ந்து காற்றை இழுத்து நரையீரல்களை நிரப்புவதால், நமது நுரையீரல்களிலுள்ள அறுபது கோடிக் காற்றறைகளும் விரிந்து காற்றால் நிறைகின்றன. இதுவரை காற்றில்லாமல் சுருங்கிக்கிடந்த நுரையீரல்களில் காற்றுப் புகுந்து, நிறைந்து அங்கே தேங்கிக்கிடந்த சளி, மாசு போன்றவற்றை வெளியேற்றுகிறது. பெருமளவில் கிடைத்த பிராணவாயு முழுமையாக இரத்தத்தில் கலக்கும் பொழுது இரத்த அணுக்களெல்லாம் புதிய உற்சாகம் பெறுகின்றன.
இதனால் இரத்தம் அதிவேகமாகத் தூய்மையடைகிறது. நுரையீரல்கள் வளமும் வலிமையும் பெறுகின்றன. நாடிகள் சீர்ப்படுகின்றன. மூளைக்கு வேண்டிய ஆக்சிஜன் முழுமையாகக் கிடைக்கின்றது. நமது உடல் உறுப்புக்களிலேயே அதிகமான ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளும் பகுதி நமது மூளைதான். போதியளவு ஆக்சிஜன் இல்லாவிட்டால் மூளையின் கலங்கள் இறந்துபோய்விடும். இறந்துபோன மூளைக்கலங்களை உயிர்ப்பிக்க முடியாது. மூளைக்குப் போதிய ஆக்சிஜன் கிட்டுவதால் நல்ல சிந்தனைத் தௌpவு உண்டாகும். மனக்கட்டுப்பாடு வரும். மொத்தத்தில் நாடிசுத்தியால் மனித உடம்பிலும், மனதிலும் மிகப்பெரிய வேதிவினையே நடைபெறகின்றது. மனிதன் தானாக உயர்கிறான். ஒரு சிறு மூச்சுப்பயிற்சி உயர்வான பயன்களைத் தந்து உதவுகிறது.
உயர்வான இந்தப்பயன்களோடு, மனித உடல் ரீதியாக நல்ல ஆரோக்கியமான தூக்கம்வரும். தலைவலி சளித்தொல்லைகள், காய்ச்சல் போன்ற உபாதைகள் வரமாட்டா. முகம் பொலிவு பெற்று விளங்கும். மூக்கில் சதை வளருதல்இ சைனஸ் போன்ற நாசித் தொல்லைகள் அகலுகின்றன. காசநோய் வராது. காசநோய்க் கிருமிகளை நாடிசுத்தியினால் கிடைக்கும் ஆக்சிஜன் உடனடியாகக் கொன்று அழிக்கும். ஆஸ்த்மா என்ற கொடிய நோயை அழிக்கின்ற அரக்கன் என்று நாடிசுத்தியைக் குறிப்பிடலாம். அவ்வளவு அற்புதமான பயிற்சி இது.
இந்த நாடிசுத்தி எச்சரிக்கை வேண்டாதது. எவருக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை எவரும் செய்யலாம். செய்து பார்த்தால் இதன் பெருமை நமக்குப் புரியும். நமக்குள் நிகழுகின்ற உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களும் சீர்ப்படுகின்றன.
உள்ளிளுக்கும் இயக்கம் காரணமாக நமது உடம்புக்குள்ளே காற்று செல்கின்றது. இதயத்தினுள் இரத்தம் செல்லுகின்றது. நாம் உட்கொண்ட உணவு ஜீரணமாகி அதிலேயுள்ள சத்துக்கள் கிரகிக்கப்படுகின்றன. நாம் வலிமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.
வெளித்தள்ளும் இயக்கத்தின் காரணமாக, உள்ளேபோன காற்று கரியமிலவாயுவாக வெளியே வருகிறது. இரத்தம் உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்தப்படுகிறது. எஞ்சிய கழிவுகள் திடநிலை, திரவநிலை, வாயுநிலை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. இந்த இருவகை இயக்கங்களும் பிரபஞ்சத்தின் எல்லாப்பகுதிகளிலும்இ நமது உடம்பிலும் சீராக வினைப்பட்டுக்கொணடு இருப்பதால்தான் இங்கே எல்லா உயிர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களில் குழப்பங்கள் நேர்ந்தால் நாம் கருவிலேயே குன்றிப்போவோம். யோகாசனங்களாலும் நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாலும் இந்த இருவகை இயக்கங்களும் ஒழுங்குபடுகின்றன.
பெண்கள் கருவுற்று இருக்கின்ற காலத்தில் யோகாசனங்களைச் செய்யக்கூடாது என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன். முன்னரே ஆசனப்பழக்கமுள்ள பெண்களாக இருந்தால் நான்கு அல்லது ஐந்துமாத கர்ப்பகாலம்வரை தனக்குப் பழக்கமான ஆசனங்களைச் செய்துவரலாம். ஆதற்குமேல் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த நாடிசுத்தி என்ற மூச்சுப்பயிற்சியைப் பெண்கள் கர்ப்பகாலத்தில்கூட திடீரென்று ஆரம்பித்துச் செய்யலாம். கருவுற்ற பெண்ணுக்கு ஆசனப்பழக்கம் இல்லாதுபோனாலும், நாடிசுத்தியை ஆரம்பித்து பிரசவம் வரைக்கும் காலை மாலை இரண்டு வேளையும் செய்துவரலாம்.
இதனால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள்இ அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் எல்லாம் தாயின் கருவில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே அவ்வாறு பிறக்கின்றன. இவைகளையெல்லாம் நாடிசுத்தி சீர் செய்கின்றது. ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் அதற்கு மேலான தியானமும் எமது கைப்பழக்கத்திற்கு வந்துவிடுமானால் அப்போது இந்தப் பூலோகமே சுவர்க்கமாகிவிடும்.
தொகுப்பு:- பேரி.
*** முற்றும் ***
***
thanks sivasiva
***
"வாழ்க வளமுடன்"