...
"வாழ்க வளமுடன்"
29 ஜூலை, 2011
இந்தியாவின் சில Toll Free நம்பர்கள் !
அமெரிக்கா & மற்ற நாடுகளில் யோகா
நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய யோகா, இன்று அமெரிக்க கலாசாரத்தில் ஒர் அங்கமாக ஆகிவிட்டது. யோகா பயில்வது ஒரு ஃபேஷன் (திணீsலீவீஷீஸீ) ஆகிவிட்டது.
• டென்ஷன் நிறைந்த வேலைகளினால் அமெரிக்கர்கள் மன அமைதிக்கு யோகாவை நாடுகின்றனர்.
• 15 மில்லியன் அமெரிக்கர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பயிற்சிகளில் ஏதாவது ஒரு யோகாப்யாசத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
• அமெரிக்காவிலுள்ள தேகப்பயிற்சி சாலைகளில், 75%, யோகாவையும் ஒரு பயிற்சியாக கற்றுத் தருகின்றனர்.
• அமெரிக்கர்களுக்கு யோகா மீது இத்தகைய மோகம் ஏற்பட காரணம் புகழ் பெற்ற பாப்பிசை (றிஷீறி) கலைஞர்களான பீட்டில்ஸ், பிரபல ஹாலிவுட் நடிகை மியாஃபாரோவும், 1968 ல் இந்தியா வந்து, மகரிஷி மகேஷ் யோகியை அணுகி, யோகாவில் ஈடுபட்டது தான். யோகாவின் புகழை பெருக்கியவர்கள் பிரபல அமெரிக்க நடிகர், நடிகைகளும் ஆவர்.
• நியூ-யார்க்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் இதய நோய்களின் நிபுணரான டாக்டர் ஒருவர் கூறியது – உடற்பயிற்சிகள் நிணநீர் (லிஹ்னீஜீலீ) தங்கு தடையின்றி உடலெங்கும் பரவுவதை ஊக்குவிக்கிறது. ஆனால் யோகாசனங்கள் நிணநீர் சுரப்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அவை உடலெங்கும் பரவிய பின், வெளியே வடிகால்களாகவும் உதவுகின்றது.
• மற்றொரு அமெரிக்க நிபுணர் கூறுவது – யோகா அமைதிப்படுத்துகிறது. அதனால் நோய்களை குணப்படுத்துகிறது. பிராணாயாமம் மற்றும் யோகாசனங்கள் செய்யும் போது தசைகள் விரிந்து, சுருங்கி பயிற்சி பெறுவதால் தசைகள் சீராகின்றன. இதயத்துடிப்பு குறைகிறது, சுவாசம் குறைகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது, இதனால் உடல் குணமடைகின்றது.
• யோகாவை இதர உடற்பயிற்சிகளைப் போல், உடல் வருந்த, மெய்வருந்த செய்ய தேவையில்லை. உடலை துன்புறுத்தாமல் நிதானமாக யோகாசனங்களை செய்யலாம்.
• பல நோய்களின் காரணம் மனஅழுத்தம், மருந்துகளும் பதில் யோகாவே சிறந்தது. உடலுக்கு வலிமையை உண்டாக்கி மனச்சாந்தியை தரும் யோகா ஒரு இயற்கை சிகிச்சை முறை. யோகாவை எளிமையாக செலவின்றி வீட்டிலேயே செய்யலாம். எனவே யோகா ஒரு வரப்பிரசாதம். இதை சொல்லியிருப்பவர் டாக்டர் டிமோதி மெக்கால் (ஞிக்ஷீ. ஜிவீனீஷீtலீஹ் விநீநீணீறீறீ). இவர் பாஸ்டனில் உள்ள ஙி.ரி.ஷி. ஐயங்காரின் யோகப் பள்ளியில் யோகாவை கற்பிக்கிறார்.
யோகாசனங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உயர் ரத்த
அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வரும் பாதிப்புகளை குறைத்து ரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. யோகாசனங்கள் மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்ட பெண்மணிகளுக்கு உகந்தவை. அமெரிக்காவின் பாஸ்டனில் “மனம் – உடல் மன்றம் (விவீஸீபீ ஙிஷீபீஹ் மிஸீstவீtutமீ) ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் முன் குனிந்து செய்யும் பல யோகாசனங்களை “மெனோ – பாஸ்” ஆன பெண்களுக்கு கற்றுத்தருகிறது. இந்த ஆசனங்கள், நாளமில்லா சுரப்பிகள் அடங்கியுள்ள உடல் பாகங்களை மிருதுவாக அழுத்தி ‘மசாஜ்’ செய்யும் – ஹார்மோன் மருந்துடன் சேர்த்து இந்த ஆசனங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தீஷீஜ்
ஆன்மீகம் (குண்டலினி)
• அறிவும் ஆரோக்கியமும் மேம்பட ‘பிராண சக்தி’ தங்கு தடையின்றி உடலுள் பரவ வேண்டும்.
• எட்டு சக்கரங்களில் 7 சக்கரங்கள் சமநிலையில் சீராக இருக்க வேண்டும்.
• ஐந்து மேற்புர சக்கரங்கள் ஆன்மீக சிந்தனை பகுதிகள் கீழ் மூன்று சக்கரங்கள் சரீர சம்மந்த தேவைகளை கவனிக்கின்றன.
விஞ்ஞானம்
• மூச்சுப்பயிற்சிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை குறைக்கின்றன.
• உடலை “நீட்டுவிக்கும்” ஆசனங்கள் நிணநீர் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.
• யோகாசனங்கள் தசைகளை ஆரோக்கியமாக வைக்க, உடல் மூட்டுக்கள் பாதிக்கப்படாமல் வலிவுற உதவுகின்றன.
***
thanks எதிலோ படித்தது
***
சோரியாஸிஸ் ( வீட்டு வைத்தியம் )
சோரியாசிஸ் என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது. சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
சோரியாசிஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் தொழு நோயினர் என்றே கருதி வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 – ல் ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம் இது தொழு நோயிலிருந்து மாறுபட்ட ஒரு சரும நோய் என நிரூபித்துக் காட்டினார்.
ஏறக்குறைய உலக மக்கட் தொகையில் ஓரு சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சோரியாசிஸ்
நோயாளிகள் உள்ளனர்.
நிரந்தரமாகக் குணமாகாத இந்நோய் மறைவதும் பின்னர் தோன்றுவதும் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்று. டாக்டர் மாற்றி டாக்டர், மருந்து மாற்றி மருந்து என்று இவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. நெடு நாட்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இது எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளினாலும் இது தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மன இறுக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் போதும், சிலவகை மருந்துகள் உட்கொள்ளும் போதும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாற்று முறை மருத்துவர்கள் இதை வேரோடு அறிந்து விட முடியும் என்று கூறினாலும் அது போன்றதொரு மருந்து இது வரை வந்ததாகத் தெரியவில்லை. இதை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது போனாலும் சில வகை ஆங்கில மருந்துகள் இந்நோயின் தாக்கத்தையும் அது தரும் தொல்லையையும் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன.
சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும்.
கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்.
வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும். குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.
கீழ்க்கண்டவற்றை களிம்பாக செய்து பாதிக்கப்பட்ட மேனியில் தடவலாம் – பாதாம், மல்லிகை.
***
thanks ஆயுர்வேதம்
***