...

"வாழ்க வளமுடன்"

21 ஜூலை, 2011

முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை.


கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள். கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது.அந்த வகையில் முருங்கைக் கீரையின் பயன்களைப் பார்ப்போம்.


முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.


சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. அதுபற்றி சற்று விரிவாக காண்போம்.


இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும்.


முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.


முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.


முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர் களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும்.


தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.


முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.


வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.


முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.


முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் நல்ல டானிக்குகள் செய்ய பயன்படுகிறது. பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.


இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.


மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான் என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.


முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்தசுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம்,அயம்,வைட்டமின் உள்ளது.


கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம்,தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சுப் நல்லது.


முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும்,விந்து விருத்திக்கும் சிறந்தது.


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும்.


முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை,குடலில்ஏற்படு ம் திருகுவலு,வயிற்றுப்போக்க கட்டுபடும். விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் செர்த்துப பருகிவர காசநோய்,கீழ்வாயு,முதுகுவலி குணப்படும்.


வைட்டமின்கள் :

இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயம்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி
வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்


***
thanks நக்கீரன்
***
"வாழ்க வளமுடன்"

வாழை இலை விருந்து ...வாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம். வாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது. அந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை மரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை
இலையிலதான் சாப்பிடுவாங்க.வாழை இலையில சாப்பிட்டாகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு இலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை இலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச் சாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும் முக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே வாழை இலைதான்! ஆனால் இப்போ நம்ம ஊர்களிலயே
ஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப் போனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.
எங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி ஒரு கதை சொல்லியிருக்காங்க. " ஒரு முறை பரத்வாஜ முனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில்
சாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி, வாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன் இலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால் போட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில்
மனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும், எதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும் பரிமாறப்படுவதற்கு இதுதான் காரணமாம்." அதேபோல, வாழை இலையில எப்படி உணவு பரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. " இலையின் நுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி வலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக சேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு, காய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும் பரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர்
இலைதான் நல்லது.இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக இருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான சூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய் விடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும். உணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு உள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும். கடைசியா ருசிக்குப் பாயசம்" இப்படி ஒரு முறையே இருக்கு.
ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை இலை பெரிதும் பயன்படுது. "அல்சர், குடல் நோய்கள் வராமல் தடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து சாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில்
இருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு நிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை பதினெட்டு வகைகள் இருக்கு. அவை
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவகுணங்கள் உண்டாம்".வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு வருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற, வாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய பாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர
வாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக அழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு சருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்
பயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி இருக்குறதில்லை.
இவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை, இன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள், 10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன
பொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில, என் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு இலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார். அதுவும் ஐந்து ரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு இலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு
விற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு? என்னைக்காவது இலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது. டெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில் இருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு ஆசையே பட முடியாது போல!***

படித்ததில் பிடித்தது


***
"வாழ்க வளமுடன்"

அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்…வயசுல பெரியவங்களா இருப்பாங்க…. சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.அதென்ன அல்சர்?

நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு… இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?

முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது….
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பி-காம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை.டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், ‘சத்து மாத்திரை வேணாம்’னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க… காரணம் இதுதான்.அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்… இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி… இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க…? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு – ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்…


நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும்.


குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.


கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம்.


ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம்.


அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி- இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம்.***
thanks pz
***

"வாழ்க வளமுடன்"

தக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.***
thanks tamilbirdsz
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "