...

"வாழ்க வளமுடன்"

16 மார்ச், 2010

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா?

ஒரு குழந்தை ஆரோகியமாகவும், சுறுசுறுப்பாவகவும் இருந்தால் போதும். குண்டாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

*


இதுவே பின் நாளில் ( 25 அல்லது 30 வயதில் ) அவர்கலுக்கு நீரிழிவு, உடல் பருமன், கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் என்று நீண்டுக் கொண்டே போகும்.

*

கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு.


***

இதுனால் வரும் விளைவுகளை தடுக்க:


*


அதனால் நம் குழந்தையின் ஆரோகியத்துக்கு முக்கியத்துவம் குடுத்து வளர்ப்பது சாளச்சிறந்தது!
***


1. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து என்பது பெரியவர்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போன்று வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு அவசியம்.

*

2. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் ஒரே வித்தியாசம், பல்வேறு வயதுகளில் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவு மாறுபடும் என்பதுதான். ஆனால் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. குழந்தைகள் `நன்றாக' சாப்பிட்டால் போதும் என்று பெற்றோர் நினைக்க, குழந்தைகள் குண்டாகவும், ஆரோக்கியக்குறைவாகவும் ஆகி வருகிறார்கள்.

*

3. குழந்தைகளின் தினசரி வழக்கத்தில் மெதுவான மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை நீண்டகாலப் பழக்கமாக்கலாம். உதாரணத்துக்கு, சாப்பிடும்போது டிவியை அணைப்பது, குளிர்பானங்களுக்குப் பதிலாக பால் அல்லது தண்ணீர் குடிக்கப் பழக்குவது, `டின்னருக்கு' பிறகு குடும்பத்தோடு ஒரு `வாக்கிங்' போவது போன்றவை.

*

4. அதிக உப்பு சேர்த்த `துரித உணவுகளை' குழந்தைகள் அதிகம் சாப்பிட விடாதீர்கள். எந்த அளவு உணவு சரியாக இருக்கும் என்றும், அதிக `கலோரி' நொறுக்குத்தீனிகளை முக்கியமான விசேஷங்களின்போதுதான் சாப்பிட வேண்டும் என்றும் குழந்தைகளைப் பழக்குங்கள்.

*

5. குழந்தைகளுக்கு முழுத் தானிய நொறுக்குத்தீனிகள், தானிய வகைகளைக் கொடுங்கள். முழுத் தானியங்களின் நார்ச்சத்து திருப்தியான உணர்வையும், தானியங்கள் உங்கள் குழந்தைக்குச் சக்தியையும் அளிக்கும்.

*

6. இளம் கேரட், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கொழுப்பில்லாத `யோகர்ட்' போன்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களும் நல்லது. ஊட்டச்சத்துகள் செறிந்த நிலக்கடலை, வெண்ணை `சான்ட்விச்'களும் நல்ல நொறுக்குத்தீனியாக அமையும்.


*

7. இனிப்பை விரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு கொழுப்பில்லாத இனிப்பு வகைகள், உறைந்த யோகர்ட், கொழுப்பில்லாத யோகர்ட்டுடன் பழங்கள் கொடுக்கலாம்.


*


8. ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் தயாரிப்பதற்கு உங்கள் குழந்தையையே பழக்குங்கள். குறைந்த கொழுப்பு பாலாடைக்கட்டியை வெட்டி கோதுமை நொறுக்குத்தீனிகளை அலங்கரிப்பதற்குப் பழக்குங்கள். குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் வெவ்வேறு வடிவில் வெட்டும் `கட்டர்களை' கொண்டு முழுத்தானிய `பிரெட்'டை வெட்டி குழந்தைகளுக்கு அளிக்கலாம். பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு வேடிக்கையான முகங்களை உருவாக்கி அளியுங்கள். `புரூட் கெபாப்'பும் அவர்களுக்குப் பிடிக்கும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.


*


9. பச்சையாக உண்ணுவதற்கு ஏற்ற காய்கறிகளை குழந்தைகள் எடுத்து உண்ணும் வகையில் எப்போதும் பிரிஜ்ஜில் வைத்திருங்கள்.* வெளியே செல்லும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு யோகர்ட், சுவையான காய்கறிகள், பழங்கள், தானிய கேக்குகளை கொடுத்து விடுங்கள்.


*


10. குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். அவர்களை விளையாட்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது அவர்களுக்குப் பிடித்தமான செயலில் ஈடுபடுத்துங்கள்.


***

இந்த மாதிரி நல் ஒழுக்கங்களை ( நாம் கற்று தரும் நல்ல விஷயம் தான் நாளை அவர்களுக்கு, இதனை யாரும் மறுக்க முடியாது ) நம் குழந்தைக்கும் சொல்லிக் கற்றுக் கொடுபப்தால், குழந்தைக‌ள் பிற்க் காலத்தில் ஆரோக்கியமாக இருப்பார்கள்.இந்த படத்தில் உள்ளது போல் உங்கள் குழந்தை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

***

நன்றி ஈகரை.
www.eegarai.net

***

செயற்கை இனிப்பூட்டிகள் அளவுக்கு மீறினால், ஆபத்து!
சர்க்கரை நோயாளிகள் உட்பட சிலர் செயற்கை சுவீட்னர் சாப்பிடுகின்றனர். இந்த ‘செயற்கை சர்க்கரை நல்லதா? ஆபத்து உள்ளதா? என்ற சர்ச்சை கிளம்பிவிட்டது. அளவுக்கு மீறினால், ஆபத்து உள்ளது என்று ஐரோப்பிய ஆய்வு எச்சரிக்கிறது.

நம் விவசாய உற்பத்தியில் தயாராகும் சர்க்கரை எந்த பாதிப்பையும் தராது. அது இயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் ரசாயன கலவை கொடுத்து தயாரிக்கப்படும் செயற்கை சுவீட்னர் பொருட்கள் உள்ளன. மாத்திரை வடிவில் வருகின்றன. சிறிய சாஷே வடிவிலும் வருகிறது.

*

இப்போது இந்த செயற்கை சுவீட்னர் தான் சந்தையில் கொடி கட்டிப் பறக்கிறது. சர்க்கரை நோய் உட்பட சிலர் டாக்டர் ஆலோசனைப்படியும் இல்லாமலும் வாங்கி பயன் படுத்துகின்றனர். காபி, டீ போன்ற பானங்களில் கலந்து சர்க்கரைக்கு ஈடாக உபயோகிக்கின்றனர். இந்த செயற்கை சர்க்கரை மாத்திரை பல மடங்கு தித்திப்பு கொண்டது. அதனால் சிறிதளவு சேர்த்தாலே போதும். நல்ல இனிப்பு கிடைக்கும். சர்க்கரை நோயாளிக்கு இந்த செயற்கை சர்க்கரை, வரப்பிரசாதம் தான் என்பதில் சந்தேகம் இல்லை.

*

ஆனால், இந்த செயற்கை சுவீட்னர் பற்றி சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. செயற்கையாக தயாரிக்கப்படும். இந்த சுவீட்னரில் கண்டிப்பாக ரசாயன கலவை இருக்கத்தானே செய்யும். அந்த வகையில் இதில் கலக்கப்படும் அஸ்பார்ட்டேம் என்ற கலவை, உடலுக்கு கெடுதல் தான் என்று மருத்துவ உலகில் கூறப்படுகிறது. ஏற்கனவே லுக்கீமியா, லிம்போமா போன்ற பாதிப்பு களுக்கு இந்த அஸ்பார்டேம் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனாலும் உலக அளவில் இதை சில நாட்டு மருத்துவ நிபுணர்கள் மறுத்தனர். இப்போது இது புற்று நோய்க்கு காரணமாக உள்ளது என்று இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மருத்துவ ஆய்வு கூறுகிறது.


*

இத்தாலியைச் சேர்ந்த ஐரோப்பிய மலாஸ்ஸினி பவுண்டேஷன் என்ற மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு சிறுநீரகத்தில் புற்று நோய் ஏற்படுவதற்கு இந்த அஸ்பார்ட்டேம் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது. இது எந்த அளவு உண்மை என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

*

அமெரிக்க உணவு நிர்வாக அமைப்பும், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையமும் இது தொடர்பாக சில கருத்துக்களை சொல்லியுள்ளன. செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதனால், பெரிய அளவில் பாதிப்பு வராது, ஆனால் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் போது தான் ஆபத்து வருகிறது என்று கூறியுள்ளனர்.

***


இவ்வளவு ஆபத்து இருக்கும் செயற்க்கை இனிப்பூட்டிகள் எப்படி நாம் நம் உடலுக்கு எடுத்துக் கொள்வது என்று அவர்கள் கூறி இருக்கும் கருத்தையும் இனி பார்ப்போம்!

***

இந்த ஆபத்தை தவிர்க்க:

*


1. செயற்கை சுவீட்னரை பொறுத்த வரை, சாதாரண சர்க்கரையில் உள்ள இனிப்பைவிட 200 மடங்கு இனிப்பு அதிகம். அதற்கு இந்த அஸ்பார்டேம் என்ற ரசாயன கலவை தான் காரணம்.

*

2. சாதாரண சர்க்கரையில் ஒரு கிராமில் நான்கு கலோரி உள்ளது. ஆனால், செயற்கை சுவீட்னரில் அந்த அளவுக்கு கலோரியே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*

3. செயற்கை சுவீட்னர் அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் எத்தனை எடை உள்ளாரோ, அவர் எடையில் கிலோவுக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு செயற்கை சுவீட்னர் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவும் சரியான அளவா என்பதை எந்த மருத்துவ அமைப்பும் உறுதி செய்யவில்லை.

*

4. பொதுவாக 60 கிலோ எடை உள்ள ஒருவர் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஆறுமுதல் எட்டு செயற்கை சுவீட்னர் பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளன.

*

5. “குறைந்த அளவில் செயற்கை சுவீட்னரை எடுத்துக்கொள்வோருக்கு பல பலன்கள் உண்டு. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பெரிதும் உதவுகிறது. அதற்காக அதிகம் சாப்பிடும்போது பிரச்னையே” என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்தியாவை பொறுத்தவரை ஒரு கோடிப்பேர், செயற்கை இனிப்பூட்டிகள் பயன்படுத்துகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

***

நன்றி.
dinaithal.com


***

குழந்தைக்கான இயற்கை டானிக்..


தினமும் வாழைப்பழம், இரவு உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை, ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த கஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால் இவையெல்லாம் உடலின் எடையைச் சீராகப் பராமரிக்கும். குழந்தைக்கு நல்ல போஷாக்கையும் தரும்.


*


இதை தொடர்ந்து கொடுத்து வந்தாலே மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. 


***

வெள்ளை சர்க்கரை வேண்டுமா?

சர்க்கரை தற்ப்போது அத்தியாவசியமான ஒன்றாக‌ ஆகிவிட்டது. ஆனால் அவை நம் உடலுக்கு ஆரோகியம் தான?
வெள்ளை சர்க்கரை வேண்டுமா?

*

ஆரோக்கியம் வேண்டுபவர்கள் சர்க்கரையை அறவே தவிர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள்.

*

இதற்கு பதிலாக கலோரிகள் குறைவாக கொண்ட மாற்று சர்க்கரையை பயன்படுத்தலாம் என்கிறார்கள் அவர்கள்.


*

மாற்று சர்க்கரை இனிப்பை வழங்கினாலும், சர்க்கரை அளவுக்கு கலோரியைத் தராது.

*

‘சுக்ரலோஸ்’ போன்ற மாற்று சர்க்கரைப் பொருள்கள் சர்க்கரையை விட 600 மடங்கு இனிப்பு உள்ளதாகும்.

*

சுத்திகரிக்கப்பட்ட, நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு ஸ்பூன் சர்க்கரையில் (3 கிராம்) 16 கலோரிகள் உள்ளது.


*

ஒரு நாளைக்கு மூன்று முறை சர்க்கரைக்கு பதிலாக ‘சுக்ரலோஸ்’ மாற்றுச் சர்க்கரையை உபயோகித்தால் 96 கலோரிகள் நம் உடம்பில் சேருவதை தவிர்க்கலாம்.

*

ஒரு வருடத்திற்கு 35040 கலோரிகள் (5 கிலோ) நம் உடம்பில் சேருவதை தவிர்க்க முடியும்.


*

இந்த கலோரிகள் தான் உடல் எடைக்கு முக்கியக் காரணம். இந்திய ஊட்டச்சத்து நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வின்படி, இந்திய ஆண்களில் 32% பேர் அதிக எடையுடனும், பெண்களில் 50 % பேர் அதிக எடையுடனும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.


***

சர்க்கரையால் ஏற்ப்படும் பின் விளைவுகள்:

*

சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் உடற்பருமன், நீரிழிவு நோய், மாரடைப்பு போன்றவற்றை தவிர்க்கலாம்.

*

உங்கள் கால் முட்டியை மடக்காமல் குனிந்து, கையால் உங்கள் காலைத் தொட முயற்சியுங்கள். முடியவில்லையா, உங்கள் சர்க்கரைப் பழக்கத்தை மாற்ற இதுவே சரியான தருணம்.

***
நன்றி.
dinaithal.com

***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "