...
"வாழ்க வளமுடன்"
31 ஜனவரி, 2011
உண்மையாகவே அனகொண்டா என்ற பாம்பு உண்டா? காணொளி ( only PG )
இலக்கிய மனம் படைத்தவர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டு கொள்ளுகிறேன் :(
***
பல கதைகளிலும், திரைப்படங்களிலும் காண்பித்தது போல அனகொண்டா என்று அழைக்கப்படும் ராட்சச பாம்பு இனம் பூமியில் இருக்கிறா என்ற கேள்விகள் இன்னும் இருந்துவரும் நிலையில், அப் பாம்புகளைத் தேடி சதுப்பு நில காடுகளுக்குள் செல்லும் குழுவினர் எடுத்திருக்கும் படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 30 அடி நீளமான அனகொண்டா பாம்பை அவர்கள் நேரடியாகப் பார்த்து காணொளிகளையும் எடுத்துள்ளனர். நிலத்திலும் தரையிலும் ஏற்படும் சிறு அதிர்வுகளைக் கூட அதன் தோல் உணர்ந்துகொள்ளும் ஆற்றல் உடையது.
அத்தோடு உயிரினத்தில் இருந்து வெளியாகும் வெப்பத்தை புற ஊதாக் கதிர்களைக் கொண்டு துல்லியமாகக் கண்டறிந்து அவற்றை தாக்கி தனது இரையாக்கிக்கொள்கிறது. இது மனிதர்களையும் விழுங்கும் ஆற்றல் உடையது எனக்கூறப்படுகிறது.
பல வகையான அனகொண்டாக்களை ஆராட்சியாளர்கள் படம்பிடித்துள்ளபோதும் அவை சிறிய வகையாகவே இருந்தன. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இதுவே முதல் முறையாக பெரிய ராட்சத அனகொண்டாக்களை தேடிக் கண்டுபிடித்து காணொளிகளை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
***
thanks pream
***
"வாழ்க வளமுடன்"
டைனோசரை வேட்டையாடிய அனகோண்டா !
அனகோண்டா பாம்புகளும், டைனோசர்களும் பிரம்மாண்ட தோற்றம் உடையவை. டைனோசர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் வேட்டையாடும் திறன் உடையவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் அனகோண்டா பாம்புகள், குட்டி டைனோசர்களையே வேட்டையாடி உள்ளன என்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் தனஞ்ஜெய் மொகாபே, 1980 முதல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து வந்தார். இவருக்கு 1987-ம் ஆண்டு ஒரு மர்மமான புதைபடிமம் கிடைத்தது. முட்டை ஓடுகளும், சில எலும்புத் துண்டுகளுமாக அந்த படிமம் இருந்தது. நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு அதன் மர்மங்கள் சற்று விலகியது. 2001-ம் ஆண்டில் அயல்நாட்டு விஞ்ஞானிகள் இதைப் பார்வையிட்டு சில முடிவுகளை தெரிவித்து சென்றனர். மேற்கு இந்தியப் பகுதியான குஜராத் மாநிலத்தில் கிடைத்த இந்த புதைபடிமத்தின் மர்மம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகியது.
அதாவது அந்த புதைபடிமம் அனகோண்டா பாம்பால் வேட்டையாடப்பட்ட டைனோசர் குட்டி என்று தெளிவாகி இருக்கிறது. அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக நிபுணர் குழு ஒன்று, இந்தியா வந்து சில புள்ளி விவரங்களை சேகரித்தது. அப்போது இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது நமக்கு கிடைத்த மிக அரிய புதைபடிவம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். ஆய்வில் தெரியவந்த சில சுவாரசியமான தகவல்கள் வருமாறு:- டைனோசர் குட்டிகளை வேட்டையாடும் இந்த பாம்பு இனத்துக்கு சனாஜே இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
இவை சாரோபாட் இன டைனோசர் குட்டிகளை வேட்டையாடி உணவாக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முட்டையில் இருந்து வெளிவரும் டைனோசர் குட்டிகளை பிடித்து தின்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி இருக்கின்றன. இதற்காக சில நேரங்களில் டைனோசர் முட்டை களையே கடத்தி விடுகின்றன இந்த பாம்பு இனங்கள்.
மேலும் டைனோசர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள குகைகளில் அல்லது நீர்நிலைகளில் இந்த பாம்புகள் பதுங்கி வாழ்ந்திருக்கின்றன. அரை மீட்டர் வளர்ச்சி உள்ள டைனோசர் குட்டிகளைக்கூட, பாம்புகள் தமது வலிமையால் சுற்றி வளைத்து வேட்டையாடி உள்ளன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த புதைபடிமம் சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது.
***
thanks pream
***
"வாழ்க வளமுடன்"
தாயின் குரல் மூலம் செயற்படுத்தப்படும் குழந்தையின் மூளை!
குழந்தையின் மொழியை கற்றுக்கொள்ளும் மூளையின் பாகம் தாயின் குரல் மூலமே செயற்படுத்தப்படுகின்றது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மொன்ட்ரியல் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இவ்வாய்வினை மேற்கொண்டிருந்தனர்.
இவர்களின் ஆய்வின்படி குழந்தைகளின் மூளையின் மொழியை கற்கும் பகுதியானது தாயின் குரலுக்கு மட்டுமே துலங்களைக் காட்டுவதாகவும் மற்றையவர்களின் குரலுக்கு அவ்வாறு காட்டுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாய்விற்கு பல குழந்தைகளை உட்படுத்தியதாகவும் அவை உறங்கும்போது அவற்றின் தலைகளுக்கு இலக்ட்ரோட் வழங்கியுள்ளனர்.
இதன் போது குழந்தைகளின் தாய்க்கு அவர்களை ‘ ஹலோ ‘ என மெதுவாக அழைக்கும் படி கூறியுள்ளன.
இதனைத்தொடர்ந்து வேறு பெண்களுக்கும் குழந்தைகளை அவ்வாறு அழைக்கும் படி கூறியுள்ளனர்.
குழந்தையின் தாய் அழைத்த போது குழந்தையின் மூளையின் இடதுபகுதி அதாவது மொழியினை செயற்படுத்தும் பகுதியின் மாற்றங்களை அவதானித்ததாகவும்.
மற்றையவர்கள் அழைத்தபோது குரல்களை அடையாளங்கண்டு கொள்ளும் மூளையின் வலது பகுதியிலேயே மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
***
thanks pream
***
"வாழ்க வளமுடன்"
புற்றுநோயை தூண்டுகிறது; சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்; ஆய்வில் தகவல்
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணு வில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.
இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக் கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது.
எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்
***
thanks pream
***
கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்!
துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
எனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.
***
by pream
thanks pream
***
"வாழ்க வளமுடன்"
29 ஜனவரி, 2011
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
**
சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது. பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும். எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும். நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது. தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.
**
பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.
***
ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு... பெர்ஃப்யூம் வேறு!
பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது. அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.
**
வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை. பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
***
கவனத்தில் வையுங்கள்:
சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள். எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.
**
பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.
**
ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?
Axe
**
பெண்களின் ஃபேவரைட்?
ஜோவன் வொய்ட் மஸ்க்
மேக்ஸி ப்ளூ லேடி
***
நன்றி : தினகரன்
***
புளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும் :)
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாவகம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காம லேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன.
முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆகவோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன.
இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப் படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம்.
*
புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்:
அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும்.
பாடல்களை மட்டுமல்ல, போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம். பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனையும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும்.
கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம்.
இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனும் இணைக்கலாம்.
*
புளுடூத் செக்யூரிட்டி:
எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும். உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது? ஏற்றுக் கொள்கிறாயா? என்ற கேள்வி இருக்கும்.
உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை “bluejacking,” “bluebugging” மற்றும் “Car Whisperer” என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது
***
thanks google
***
தவிர்க்க வேண்டிய தவறுகள்-கம்ப்யூட்டர்!
வாரம் இரு நாட்களில் நல்ல உடற்பயிற்சி, தினந்தோறும் இறைவணக்கம், அலுவலகத்தில் சீரான பணி, சட்டம் மதித்து நடத்தல் என நாம் நம் அன்றாட வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் பலவற்றை மேற்கொள்கிறோம். ஆனால் தொழில் நுட்பம் என்று வருகையில் நாம் பல தவறுகளை ஏற்படுத்துகிறோம். இன்று நம் வாழ்க்கையில் சில தவறுகளைத் திருத்திக் கொள்கிறோமோ இல்லையோ, கம்ப்யூட்டர் பயன்படுத்தும் வழக்கத்தில் உள்ள தவறுகளை நாம் கட்டாயம் மாற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல், வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட்டு விடும். அந்த அளவிற்கு கம்ப்யூட்டர் நம் வாழ்வுடன் கலந்து விட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டில் நாம் ஏற்படுத்தும், சில சாதாரண தவறுகளை இங்கு காணலாம்.
**
1. டெஸ்க்டாப்பில் அதிக ஐகான்கள்:
பலரின் விண்டோஸ் டெஸ்க்டாப், எதனையும் ஏற்றுக் கொள்ளும் நம் மேஜை டிராயர் மாதிரி, குப்பையாய் காட்சி அளிக்கிறது. நாம் அதில் வைத்த பைலையே தேடி உடனே எடுக்க முடிவதில்லை. இப்போதுதானே, டெஸ்க்டாப்பில் சேவ் செய்தேன், காணலையே? என்று சொல்லிவிட்டு, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, அதே டெஸ்க்டாப் ட்ரைவில் தேடிக் கண்டுபிடிப்போர் உள்ளனர். இந்த தவறுக்குக் காரணம், அளவுக்கு அதிகமான ஐகான்களைக் குவிப்பதுதான். இதனாலேயே விண்டோஸ் இயக்கம், “பல ஐகான்கள் வெகுநாட்களாகப் பயன்படுத்தப் படாமல் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்திடலாமா?’ என்று பிழைச் செய்தி காட்டுகிறது. இதனை எப்படி சரி செய்திடலாம்? அவ்வப்போது பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஐகான்களுக்குரிய பைல்களை, சார்ந்த ட்ரைவ்களுக்குக் கொண்டு சென்று வைக்க வேண்டும். பைல்களை இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்கையில், பெரும்பாலும் டெஸ்க் டாப்பிலேயே டவுண்லோட் செய்து வைக்கிறோம். அவசர வழிக்கு இது சரிதான். ஆனால் அடுத்து, அந்த பைலின் தன்மை, பொருள் சார்ந்து அதனை, அதற்கான ட்ரைவிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.
*
2. ஷட் டவுண் செய்திட பவர் பட்டன்:
இது லேப்டாப் கம்ப்யூட்டர் சார்ந்த செய்தி. பலர் லேப்டாப் கம்ப்யூட்டரின் பணி முடிந்தவுடன், அதனை முறையாக ஷட் டவுண் செய்திடுவதில்லை. பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டர் இயக்கத்தினை முடிவிற்குக் கொண்டு வருகிறோம். அல்லது கொண்டு வருவதாக நினைக்கிறோம். பல லேப்டாப்களில் இந்த பவர் பட்டன், லேப்டாப் கம்ப்யூட்டரை ஸ்லீப் மோட் என்னும் செயலற்ற நிலைக்குத்தான் கொண்டு செல்லும். இது ஒன்றும் மோசமான தவறு அல்ல. இது போலத் தூங்கும் லேப்டாப், சில நொடிகளில் இயக்கத்திற்கு வந்துவிடும். ஆனாலும் இவ்வாறு செய்வது தவறு. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, ஸ்லீப் மோட் என்பது முற்றிலும் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலை அல்ல. பேட்டரியின் பவர் அப்போதும் செலவழிந்து கொண்டு தான் இருக்கும். எனவே, தொடர்ந்து அது மின்சார சாக்கெட் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தாலே, பாதுகாப்பாக இருக்கும். இல்லையேல், அதன் பேட்டரி பவர் தீர்ந்து போய்,மொத்தமும் சக்தி அற்ற பேட்டரி கொண்ட லேப்டாப் தான் உங்களுக்குக் கிடைக்கும். இரண்டாவதாக, நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரை நிறுத்தி வைக்க, ஸ்லீப் மோடினை விரும்புவதாக இருந்தால், அது கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடும் வாய்ப்பினையே இழக்கிறது. விண்டோஸ் சுமுகமாக இயங்க வேண்டும் என்றால், அது முற்றிலும் நிறுத்தப்பட்டு, பின்னர் ரீ பூட் செய்யப்பட வேண்டும்.
பவர் பட்டன் அழுத்தி, லேப்டாப் கம்ப்யூட்டரின் இயக்கத்தினை நிறுத்தச் செய்வது, கம்ப்யூட்டர் கிராஷ் ஆகும்போது மேற்கொள்ள வேண்டிய செயலாகும். ஏனென்றால் அப்போது வேறு வழி கிடைக்காது.
*
3. வலுவான பாஸ்வேர்ட்களை நோட்பேடில் எழுதுதல்:
எது வலுவான பாஸ்வேர்ட்? பிறர் எந்த வகையிலும் கண்டறிய இயலாத பாஸ்வேர்ட்களை வலுவான பாஸ்வேர்ட்கள் என்று சொல்கிறோம். ஆனால், இத்தகைய பாஸ்வேர்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தும் பலரில், ஒரு சிலர், அவற்றை தங்கள் கம்ப்யூட்டரிலேயே நோட்பேடில், ஒரு டெக்ஸ்ட் பைலில் எழுதி வைப்பார்கள். இதனால் வலுவான பாஸ்வேர்ட் உருவாக்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. நமக்கு பாஸ்வேர்ட்களை உருவாக்கித் தரவும், அவற்றை பாதுகாப்பான பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் பாதுகாக்கவும், பல புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. விலை கொடுத்தும் சிலவற்றைப் பெறலாம். அவற்றைப் பயன்படுத்தி, நம் பாஸ்வேர்ட்களை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.
*
4.மவுஸ் பயன்படுத்தி புரோகிராம் இயக்கம்:
ஒரு புரோகிராமினை இயக்க ஒவ்வொரு முறையும், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராமின் இயக்க பைல் பார்த்து கிளிக் செய்வது; அல்லது அதன் ஐகான் மீது டபுள் கிளிக் செய்வது போன்ற பழைய பழக்கங்களை விட்டுவிடுங்கள். அல்லது குயிக் லாஞ்ச் ஏரியாவில், புரோகிராம் ஐகான்களை வைத்து, அதில் ஒரே ஒரு முறை கிளிக் செய்வதன் மூலம் அவற்றை இயக்கலாம். இப்போது இன்னும் வேகமான முறை ஒன்று உள்ளது. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்புகளில், ஸ்டார்ட் பட்டனை அடுத்துள்ள இடத்தில் உள்ள புரோகிராம்களில் வரிசைப்படி, அதற்கான எண்ணை விண்டோஸ் கீயுடன் அழுத்தினால், அந்த புரோகிராம் இயக்கப்படும். எடுத்துக் காட்டாக, ஸ்டார்ட் பட்டனை அடுத்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பெயிண்ட், குவார்க் எக்ஸ்பிரஸ் என வைத்திருந்தால், விண்+1, விண்+2 என அழுத்தினால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அடுத்ததாக பெயிண்ட் எனத் திறக்கப்படும்.
*
5. பாதுகாப்பற்ற பிளாஷ் ட்ரைவ் :
டேட்டாவினை எடுத்துச் செல்ல, பிளாஷ் ட்ரைவ்கள் மிகவும் வசதியானவை தான். ஆனால் இதில் உள்ள டேட்டாவினை, மற்றவர் அறியாதபடி என்கிரிப்ட் செய்து நாம் வைப்பதில்லை. இதனால், அது தொலைந்திடும் பட்சத்தில், நம் தனிப்பட்ட தகவல்கள் மற்றவருக்குக் கிடைத்திடும் சூழ்நிலைகள் உருவாகிவிடும். இதில் டேட்டாவினை எளிதாக என்கிரிப்ட் செய்திட, இணையத்தில் கிடைக்கும் ட்ரூகிரிப்ட் (TrueCrypt) போன்ற புரோகிராம்களைப் பதிந்து இயக்குவது நல்லது.
*
6.கண்ணை மூடிக் கொண்டு நெக்ஸ்ட் அழுத்துவது:
திடீரென நம் டெஸ்க்டாப்பில் ஏதேதோ படங்களுடன் ஐகான்கள் தோன்றி நம்மை ஆச்சரியப்படுத்தும். நாம் பயன்படுத்தும் வெப் பிரவுசரிலும் இதே போல் சில தோற்றமளிக்கும். இவை தோன்றுவதற்கு நாம் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியுமா? சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்திடுகையில், என்ன ஏது எனப் படிக்காமலேயே, அடுத்தடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்துகிறோம். இதன் மூலம் அந்த புரோகிராம்களைத் தயாரித்த நிறுவனங்களின் சோதனை டூல்கள், புரோகிராம்களை நம் கம்ப்யூட்டரில் நிறுவ நாம் சம்மதம் அளிக்கிறோம். மேலும் நமக்குத் தேவைப்படாத சில இயக்கத்திற்கும் இசைகிறோம். இது போல நாம் நம்மை அறியாமல் அளிக்கும் சலுகைகள், நம் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களை நிறுவி, நம்மை சிக்க வைக்கின்றன. எனவே, ஒரு புரோகிராமினை இன்ஸ்டலேஷன் செய்கையில், இணையப் பக்கம் வழியாக ஒன்றை டவுண்லோட் செய்கையில், நம்மிடம் எதற்கு இசைவு கேட்கப்படுகிறது என்று சரியாகப் படித்துப் பார்த்து இயங்க வேண்டும்.
*
7. ஒரே ஒரு பேக் அப் அபாயம்:
பலர் தங்கள் பைல்களுக்குப் பேக் அப் எடுப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறு. சிலர் ஒரே ஒரு பேக் அப் பைலுடன் நிறுத்தி விடுகின்றனர். இதுவும் தவறுதான். எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் ஒன்றைப் பயன்படுத்தி, முழுமையான பேக் அப் காப்பி ஒன்றை உருவாக்குவதும், அதற்கான சாப்ட்வேர் ஒன்றை இயக்கி, குறிப்பிட்ட கால கட்டத்தில் பேக் அப் காப்பி அமைப்பதுவும் மட்டுமே சரியான வழியாகும்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
27 ஜனவரி, 2011
சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு தமிழில் :)
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, ஜனவரி 12, 1863 – ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.
இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா . இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது. வாழ்க்கை பிறப்பும் இளமையும் விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம்.
சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார்.
இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.
இராமகிருஷ்ணருடன் இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
துறவறம் 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர்.
அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. மேலைநாடுகளில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார். இந்தியா திரும்புதல் 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது.
பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார். மறைவு 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.
விவேகானந்தரின் கருத்துக்கள் மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார்.
வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். விவேகானந்தரின் பொன்மொழிகள் கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று.
பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல். உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம். உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சுஎண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.
“நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!” நூல்கள் விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன.
இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.
***
சுவாமி விவேகானந்தரின் `வலிமை’:
ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர இரண்டு வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.
ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.
இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.
`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.
அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.
அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.
துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.
***
பொன்மொழிகள் :
அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.
* உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ, அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
* எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனத்தை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள், நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்விகளைப் பொருட்படுத்தாதீர்கள்.
***
படித்ததில் பிடித்தது
***
கண் பார்வை குறைபாட்டை நீக்கவழி :)
கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுவது, மாத்திரைகள், காய்கறிகள் சாப்பிடுவது என்று எல்லோரும் பல முறைகளை கையாள்வார்கள். பொதுவாக கண்களில் ஏற்படும் சிறிய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.
ஏனோ தானோ வென்று விட்டுவிட்டால்தான் கண் பார்வைக்கே பிரச்சினையாகிவிடுகிறது. கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள், ஜாதிக்காயை பசும்பாலில் இழைத்து இரவில் கண்ணை சுற்றி பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.
இதனுடன் திரிபலா சூரணத்தை தேனில் கலந்து உட்கொண்டு வர கண்பார்வை விரைவில் தெளிவடையும். கண் பார்வை சீராக இருக்க ஜாதிக்காய் பெருமளவு பயன்படுகிறது.மேலும், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நீக்க இது போன்று ஜாதிக்காயைப் பயன்படுத்தலாம்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
நாம் ( ஆண், பெண் ) அழகுக்காக சின்ன..சின்ன டிப்ஸ்….
உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?
சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். ”வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.
**
உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக அடங்காப் பிடாரியாக உள்ளதா?
இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.
**
சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?
ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள்.
**
உங்கள் சருமத்தில் சுருக்கம் விழுந்து விட்டதா?
டோன்ட் வொர்ரி…. முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சரி செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.
**
டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா?
கெமிக்கல் ஃபேஷ’யலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.
**
உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?
கவலையை விடுங்கள். விட்டமின் ”ஈ” ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.
**
உங்களது சருமம் மென்மையாக மாற வேண்டுமா ?
பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை ”நற நற”வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.
**
”ட்ரை ஸ்கின்” உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத ”வெஜிடபிள் ஃபேஸ்பேக்” இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?
பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்
***
ஆண்களுக்காண அழகு குறிப்புகள்:
ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. ஆண்களின் வெளிபுற தோற்றம் மிகவும் முக்கியம் அணியும் ஆடை, இனிமையான பேச்சு, சிரித்த முகம் இவை உங்களை மற்றவர்களுடன் வேறுபடுத்தி உங்களை கம்பீரமாக காட்டும்.
*
முதலில் உங்கள் முக அழகை பற்றிய சில குறிப்புகள்:
சில ஆண்களுக்கு டீன் ஏஜில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்னை முகப்பரு சில நாட்கள் இருந்தாலும் அதன் வடு மாறாது. இதற்க்கு சரியான தீர்வு சாதிக்காய், சந்தனம், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
பாசிபயிறு மாவு, கடலைமாவு சிறிது தயிர் சேர்த்து குளிக்கும் போது அல்லது முகம் அலசும் போதும் இந்த போஸ்டை பயன்படுத்தவும்.
*
முகம் வறட்சியினை போக்க:
கொத்துமல்லி மற்றும் புதினா இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்து, முகத்தில் வாரம் ஒருமுறை பூசி வரலாம்.
ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தாலும் முக வறட்சி மாறும்.
வெயிலில் செல்லும்போது, சன் ஸ்கிரீன் அடங்கிய ஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்தலாம். இதைக் கை கால்களுக்கும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்.
உதட்டுக்கு வேசலீன் அடங்கிய லிப் ஜெல்களைப் பயன்படுத்தவும்.
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி நீட்டாக வைத்திருப்பதே ஆண்களுக்கு அழகு.
*
ஆடைகளை பற்றி பார்ப்போம்:
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆண்கள் ஆடைகளைத் தேர்வு செய்யும்போது, நீங்கள் போகவிருக்கும் நிகழ்ச்சியைப் பற்றி மனதில் கொள்ள வேண்டும்.
நண்பர்களுடம் போவதாக இருந்தால் நார்மல் உடையே போதுமானது
நெருங்கிய உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு போகும் போது சேர்வானி டிரேஸ் நன்றாக இருக்கும்
சின்ன நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் அணிந்துகொண்டு அதற்குப் பொருத்தமாக வெள்ளை குர்தா அணிந்தால்,கேஷுவலாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும்.
இன்னும் தென்னிந்திய அழகு கிடைக்க, பட்டுவேட்டியும் ஜிப்பாவும் நல்ல காம்பினேஷன். அழகக இருக்கும்
ஆடைகள் வாங்கும் போழுது வெள்ளை, கறுப்பு, க்ரே, லைட்பிங்க், லைட்ப்ளூ லைட் எல்லோ, போன்ற நிறங்கள் ஷர்ட்களுக்கு நல்ல இருக்கும்
*
கல்லுரிக்கு போகும் ஆனா நீங்கள்:
டீ_ஷர்ட் போட்டு (காலர் இல்லாதது) அதற்குக் கான்ட்ராஸ்ட்டான கலரில் வெளியே ஒரு ஷர்ட் போட்டுக் கொள்ளலாம். இதுதான் இப்ப ஃபேஷன்.
உடைக்குப் பொருத்தமாக ஜீன்ஸ் மெட்டீரியலில் வரக்கூடிய காலணிகள் மற்றும் ஜூட் காலணிகள் போட்டஅல், அசத்தலாக இருக்கும்.
வெளி அழகு 50% உள் அழகு 50% இருக்கனும், அப்பதான் நீங்கள் அழகாக மற்றவர்களுக்கு தெரிவிங்க .
,மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு.
ஆகையால் இனிமையான பேச்சுங்க, சிரித்தமுகத்துடன் இருங்க நீங்க அழ்கா இருப்பிங்க.
***
thanks இணையம்
***
26 ஜனவரி, 2011
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
நண்பர்கள் அனைவருக்கும், இனிய குடியரசு தின(இந்திய)க் வாழ்த்துகள்!
I LOVE INDIA :)
BY
DAMU & PRABHADAMU
***
நோய்களை உணர்த்தும் நகங்கள்
நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற் காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு.
மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்து கிறோம்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.
நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..
நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
பொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண் மையாக இருக்கும்..
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந் தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழி யாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந் தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு கார ணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற் பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.
நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..
இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக் கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.
அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.
நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரி களால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
ATM & மற்றதில் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகம் :(
ATM இயந்திரம்:
ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று. பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.
*
கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு
நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது.
**
பொதுக்கழிவறை:
பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது,
வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .
*
இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில்,
‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM
இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’என்றார்.
**
பொதுத் தொலைபேசி :
இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத்
தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை.
**
சினிமா தியேட்டரின் இருக்கைகளையும், பேருந்தின் கைப்பிடிகள், கூட்டமான கடைகள் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்!
25 ஜனவரி, 2011
இதய நோய்களை தடுக்கும் பல்சுத்தம்!
தினமும் பற்களையும், ஈறுகளையும் சுத்தம் செய்து வந்தால் இருதய நோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
பற்களின் சுத்தத்திற்கும் இருதய நோய்க்கும் தொடர்பு உண்டு என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.
பற்களையும் ஈறுகளையும் சுத்தமாக வைத்திருந்தால் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.
இதுதொடர்பான ஆய்வுகளில் இத்தாலி நாட்டின் மிலன் பல் கலைக்கழக நோய் எதிர்ப்பு இயல்துறை தலைவர் டாக்டர் மரியோ கிளரிக் தலைமையிலான குழு ஈடுபட்டது. இதில் வெளியான தகவல்கள் வருமாறு:
மனிதனின் வாய்ப்பகுதியில் ஏராளமான பேக்டீரியாக்கள் எனப்படும் நுண்ணுயிர்கள் உள்ளன. இதில் நன்மை தரும் நுண்ணுயிர்களும் உண்டு, தீமை தரும் நுண்ணுயிரிகளும் இருக்கின்றன.
இவற்றில் தீமை தரும் நுண்ணுயிரிகள் வாய்ப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இருதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகளில் தெரியவந்தது.
இவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது பார்பிரோமோனஸ் ஜிங்வலிஸ் (Porphyromonas Gingivalis) நுண்ணுயிரி ஆகும்.
தினமும் சுத்தமாக பல்துலக்குவதன் மூலமும், ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலமும் இந்த நுண்ணுயிரி அழிக்கப்பட்டு விடுகிறது.
இது வாய்ப்பகுதியில் அதிகமாக இருந்தால்,அது ரத்தத்தில் கலந்து இருதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது ரத்தக்குழாயில் கொழுப்பு சேர்ந்து அடைப்பு ஏற்படுத்துவதை இந்த நுண்ணுயிரி தடுக்கவில்லை.
பல்வேறு வயது பிரிவு மற்றும் ஆரோக்கியமானவர்கள், இருதய நோய் உள்ளவர்கள் போன்றவர்களைக் கொண்டு இந்த மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆய்வு ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றும் தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகளின் மூலம் பல புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
***
thanks google
***
லிப்ஸ்டிக்கால் அதிகரிக்கும் மார்பகங்கள் அளவு!
லண்டன்:
அதிக அளவில் லிப்ஸ்டிக் பயன்படுத்தும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்களின் அளவு அதிகரித்து வருவதாக பிரிட்டிஷ் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் குடிப் பழக்கமும் மார்பகத்தின் அளவை அதிகமாக்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த இரு நூற்றாண்டுகளில் பிரிட்டன் பெண்களின் சராசரி மார்பக அளவு அதிகரித்துவிட்டதாகவும் இதற்கு குடியும் லிப்ஸ்டிக்கும் வேறு சில சுற்றுச்சூழல் விஷயங்களுமே காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மார்பக அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆஸ்ட்ரோஜென்.
வாழ்க்கை முறையிலும் உணவு முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களால் ஆஸ்ட்ரோஜென் சுரப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆஸ்ட்ரோஜென் அளவுக்கு அதிகமாக சுரந்தால் மார்பக புற்று நோய் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு பாலுட்டுவதால் ஆஸ்ட்ரோஜென் அளவு குறைகிறது. ஆனால், குறைந்த அளவில் குழந்தை பெறுவோருக்கு தாய்ப்பால் மூலம் ஆஸ்ட்ரோஜென் வெளியேறுவதற்கான சாத்தியம் குறைவு என்பதால் அவர்களுக்கே மார்பக அளவு அதிகமாகிறது. அதிக அளவில் புற்று நோயும் தாக்குகிறது.
இது தவிர செயற்கையான ஆஸ்ட்டோரஜனாலும் மார்பக அளவு அதிகரித்து வருகிறது. ஜெனோ-ஆஸ்ட்ரோஜன்கள் எனப்படும் செயற்கையான இந்த ரசாயனம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் (பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில்) காணப்படுகிறது. மேலும் லிப்ஸ்டிக்களிலும் இந்த ரசாயனம் உள்ளது.
இவையும் மார்பக அளவை பெரிதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தோடு குடிப்பழக்கமும் சேர்ந்துவிட்டால் அளவு மேலும் பெரிதாகிவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.
ஆஸ்ட்ரோஜன் ஹார்மோனை சிதைத்து உடலில் இருந்து வெளியேற்றும் முக்கிய வேலையை செய்வது கல்லீரல் தான். ஆனால், குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்படுவதால் ஹார்மோனின் அளவு உடலில் குறைவது பாதிக்கப்படுகிறதாம்.
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க சில "டிப்ஸ்"
உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
*
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா?
நிச்சயம் முடியும். இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
*
காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
*
முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
*
பீட்ரூட்:
ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
*
இஞ்சி:
கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
*
வெங்காயம்:
வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
*
ஆப்பிள்:
இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
*
அன்னாசி:
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
*
எலுமிச்சம்பழம்:
உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
*
பூண்டு:
இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
*
தாமரைப்பூவிலும் இச்சத்து உண்டு.
*
சுரைக்காய்:
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
*
வெள்ளரிக்காய்:
இயற்கை அன்னை நமக்கு நல்கிய அற்புதமான காய். இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
*
தர்ப்பூசணி:
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
*
முள்ளங்கி, வெண்டைக்காய்:
இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
***
நல வாழ்வுக்குச் சில "டிப்ஸ்" :
காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும், பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது; நாற்பதை கடந்தால், சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும்.
*
முளைக்கீரை
இந்த கீரையை தினமும் சாப்பிடலாம். எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய கீரையும் இதுவே. பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், சாப்பாடு கொடு என்று அடம் பிடிப்பார்கள்!
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.
நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை தழைகள் என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.
*
முள்ளங்கி தழையும்....
முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது
முதல் பித்தநீர்ப்பை கல் வரை நீக்குகிறது.
முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன.வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை.
இதை உணவாக சமைத்து சாப்பிடலாம்; அப்படியே கேரட் போல சாப்பிடலாம்; ஜுஸ் செய்து குடிக்கலாம். எதிலும் சத்துக்கள் உள்ளன.
முள்ளங்கியில், கால்சியம், வைட்டமின் சி, சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி தழையை பலர் உணவாக சாப்பிடுவதில்லை.
அதில்தான் சத்துக்கள், முள்ளங்கி தண்டைவிட அதிகமாக உள்ளன. ஜூஸ், சூப்பில், முள்ளங்கி துண்டுகளுடன் இதை பயன்படுத்தி சாப்பிடலாம்; நன்றாக சுவையாக இருக்கும்.
*
ஒரு நாளுக்கு ஒரு முட்டை
கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டைவிட அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.
கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ் கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது.
ஒரு வேறுபாடு காய்கறி உணவைவிட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக் கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல்.
ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம்.
கொலஸ்ட்ரால், ட்ரை கிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது.
கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!
*
கிரீன் டீ சாப்பிடறீங்களா!
காலம் காலமாக காபி, டீ சாப்பிட்டு வந்தால் அதை மாற்றவே கூடாது; தேவையும் இல்லை. ஆனால், உடல் பாதிப்பு என்று வந்துவிட்டால், டாக்டர் சொல்படி தான் பின்பற்ற வேண்டும்.
அதுபோல, வாழ்க்கை முறை மாறியுள்ள இளைய தலைமுறையினருக்கு எவ்வளவோ சக்தில்லா பாக்கெட் உணவுகள் விற்பனையில் இருந்தாலும், சத்தான சில பொருட்கள் இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் கிரீன் டீ. இப்போது கிரீன் டீ, பிளாக் டீ சாப்பிடுவது பேஷன் என்பது போய், சத்தான உணவாகி விட்டது. டாக்டர்களே இதை பரிந்துரைக்கின்றனர்.
மூளை சுறுசுறுப்பு, மறதி நோய் வராமல் இருப்பதற்கு இது மிகப் பயனுள்ளது. ஜப்பானியர் இதைத்தான் பல ஆண்டாக பயன் படுத்துகின்றனர்.
அதனால்தான், சுறுசுறுப்பாகவும், அல்சீமர் நோய் வராமலும் உள்ளனர் என்பது நிபுணர்கள் கருத்து, கிரீன் டீக்கு எங்கும் அலைய வேண்டாம்; கடைகளில் விற்கிறது;
தரமான பிராண்ட் வாங்கி பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால், மூளை சூப்பர்தான்.
*
ஏதாவது ஒரு ஜுஸ்?
தினசரி தண்ணீர், ஜுஸ், சூப் குடிப்பது நல்லது. முன்பெல்லாம் காலையில் எழுந்தது, முதல் இரவு படுக்கப் போகும் வரை உணவு முறை சீராக இருக்கும். இப்போது அப்படியல்ல; தலைகீழாய் மாறிவிட்டது.
*
மீன் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்
மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.
சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.
கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு
சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.
இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்..
***
thanks VIDUTHALAI
***
"வாழ்க வளமுடன்"
இஞ்சி மருந்தா? இல்லையா ? தெரிந்துக் கொள்ள இதை படிங்கள் !
இஞ்சிச் சம்பல், இஞ்சி தேநீர் போன்றவை நாக்கைச் சப்புக் கொட்டிச் சாப்பிடுபவர்கள் பலரின் தேர்வாக இருக்கிறது. பிட்ஸா ஹட்டின் ஹார்லிக் பிரட்டின் (GARLIC BREAD) சுவை பிரசித்தம் அல்லவா? இஞ்சி போடாத இறைச்சிக் கறி சுவைக்கு உதவாது என்பார்கள் பலர்.
சமிபாடின்மை என்றால் "இஞ்சிச் சோடா கொண்டுவா" என்பார்கள். எமது நாளாந்த பாவனைகள் இவ்வாறிருக்க, சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளில் இஞ்சியின் பயன்பாடு அதிகம். தடிமன், காய்ச்சல், பசியின்மை, சமிபாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு இஞ்சி தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில் இஞ்சிக்கு மருத்துவக் குணங்கள் உள்ளனவா? இருப்பின் அவை விஞ்ஞான பூர்வமாக ஏற்கப்பட்ட கருத்துகளா? அமெரிக்கன் AMERICAN FAMILY PHYSICIAN 2007; 75: 1689-91 இதழில் இஞ்சியின் மருத்துவப் பயன்பாடு பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்ப்ப கால மசக்கையின் போது சத்தி, ஓங்காளம் போன்றவை பெருந்தொல்லை கொடுப்பதுண்டு. இந் நேரத்தில் கருவில் வளரும் குழந்தைக்கு மருந்துகளால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் தேவையற்ற மருந்துகள் கொடுப்பதற்கு மருத்துவர்கள் தயங்குவதுண்டு.
இத்தகையவர்களுக்கு எந்த மருந்தும் கொடுக்காமல் இருப்பதை விட இஞ்சி கொடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என 675 பேரைக் கொண்டு செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில் நான்கு ஆய்வுகள் தெளிவாகக் கூறுகின்றன. அவர்களுக்கு விற்றமின் ஆ6 கொடுக்கும் அதே அளவு பலனை இஞ்சியும் கொடுக்கும் என வேறு ஓர் ஆய்வு கூறுகின்றது.
சத்திர சிகிச்சைகளுக்குப் பின்னர் பலருக்கும் ஓங்காளமும் வாந்தியும் ஏற்படுவதுண்டு. மருந்தற்ற மாத்திரைகளை ( placbo)விட இஞ்சியானது அவர்களது அறிகுறிகளைக் குறைக்கும் என மற்றுமொரு ஆய்வு கூறுகிறது.
யாழ்.- திருமலை கப்பல் பிரயாணிகள் பலர் கப்பலில் வாந்தி வருவதை நினைத்துப் பயந்தே பிரயாணம் வேண்டாம் என அலறி ஓடுகிறார்கள். பிரயாணங்களின் போது கப்பல் அடங்கலாக வாந்தி வருவதை ஆங்கிலத்தில் motion sickness என்பார்கள். அத்தகைய வாந்திக்கு dimenhydrinate என்ற மருந்தும் பாவனையில் உள்ளது. இஞ்சியானது அந்த மருந்தை விட மேலான ஆற்றல் உள்ளது என மற்றொரு ஆய்வு கூறுகிறது.
ரூமற்வொயிட் மூட்டு வாதம் (Rheumatoid arthiritis) மற்றும் முழங்கால் எலும்புத் தேய்வு வாதம் (Osteoarthiritis of knee) ஆகியவற்றுக்கு இஞ்சி நல்ல பலன் கொடுக்கும் எனத் தெரிகிறது.
சரி எவ்வளவு இஞ்சி சாப்பிட்டால் பலன் கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? பெரும்பாலான ஆய்வுகள் 250 மி.கி. முதல் 1 கிராம் அளவிலான காய வைத்து தூள் செய்யப்பட்ட இஞ்சியை கூட்டுக் குளிசையையாக தினமும் ஒன்று முதல் நான்கு தடவைகள் கொடுத்தே செய்யப்பட்டன. ஆழ் கடலில் கப்பலில் செல்லும் மாலுமிகளுக்கு வாந்தியைத் தடுக்க 1 கிராம் தினமும் நான்கு தடவைகள் கொடுக்கப்பட்டன.
பக்கவிளைவுகள் கிடையாதா என்பது சிலரது சந்தேகமாக இருக்கும். நெஞ்செரிவு, வாய் எரிவு, வயிற்றோட்டம் போன்ற பக்க விளைவுகள் சிலருக்கு ஏற்படலாம். ஆயினும் குருதி உறைதல் தொடர்பான பக்க விளைவு வோபெரின் ( Warfarin) உபயோகிக்கும் நோயாளர்களுக்கு பிரச்சினை ஆகலாம். அத்தகையவர்கள் அதிகமாக இஞ்சி உட்கொண்டால் INR இரத்தப் பரிசோதனை செய்து பார்ப்பது உசிதமானது.
*
பின்குறிப்பு :
இஞ்சிக் கிழங்கு என்று சொல்கிறோம் . உண்மையில் இது சரிந்த பாட்டில் கிடக்கும் தண்டாகும். இதிலிருந்து வேர் கீழ் நோக்கி வளர்கிறது. இது ஆசியா போன்ற உலர் வலய நாடுகளில் வளரும் தாவரமாகும்.
மருத்துவக் குணங்கள் உள்ள போதும் அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துகளுக்கான திணைக்களம் இஞ்சியை உணவுத் தயாரிப்பில் உபயோகப்படுத்தும் பொருளாகவே வகைப்படுத்துகிறதே அன்றி மருந்தாக அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
***
நன்றி:- தினக்குரல் 17.09.2007
***
"வாழ்க வளமுடன்"
வடமொழி யின் - தமிழ் விளக்கம் :)
தாய்த் தமிழைத் தூய்மை செய்வோம் :)
கம்பார் கனிமொழி குப்புசாமி-
*
வடமொழி - தமிழ்
அதம்செய்தது யானை – அழிவுசெய்தது யானை
அதர்மம் செய்யற்க! – தீமை செய்யற்க!
அதிசயமாய் இருக்கிறது – வியப்பாய் இருக்கிறது
அதிபதியானான் – பெருந்தலைவனானான்
அதிபர் வந்தார் – தலைவர் வந்தார்
அதிர்ஷ்டமாகக் கிடைத்தது – நல்வாய்ப்பாகக் கிடைத்தது
அதிரசம் வேண்டுமா? – பண்ணியாரம் வேண்டுமா?
அதிருப்தி தந்தது – மனக்குறை தந்தது
அதோகதி அடைந்தான் – கீழ்நிலை அடைந்தான்
அந்தரங்கமாகப் பேசினான் – சமுக்கமாகப் பேசினான்
அந்தமில்லாதது அறிவு – முடிவில்லாதது அறிவு
அந்தஸ்தைப் பார்ப்பதில்லை – தரத்தை பார்ப்பதில்லை
அந்தாதிப் பாடல்கள் – கடைமுதல் பாடல்கள்
அந்திமக் காலம்வரையில் – இறுதிக் காலம்வரை
அந்நியனாக எண்ணாதே – வேற்றாளாக எண்ணாதே
அநாதையாய்த் திரிகிறான் – எதிலியாய்த் திரிகிறான்
அநாமதேய அறிக்கை – பெயரற்ற அறிக்கை
அநியாயமாகப் பேசாதே! – நேர்மையின்றிப் பேசாதே!
அநீதி இழைக்காதே! – தீங்கு இழைக்காதே!
அப்பாவி மக்கள் – குற்றமற்ற மக்கள்
அப்பாவி அவன் – வெள்ளைமனத்தான் அவன்
அப்பியாசம் செய்தான் – பயிற்சி செய்தான்
அப்பிராயம் உண்டு – எண்ணம் உண்டு
அப்பிராயம் கூறினான் – கருத்துக் கூறினான்
அப்பிராணி இவன் – அறியாதவன் இவன்
அபகரிக்காதே பொருளை – பறிக்காதே, பொருளை
அபச்சாரமான செயல் – மதிப்பற்ற செயலது
அபத்தமாய்ப் பேசாதே – பொய்மொழி பேசாதே
அபயம் அளித்தான் – தஞ்சமளித்தான்
அபராதம் கட்டினான் – தண்டம் கட்டினான்
அபரிமித விளைச்சல் – அளவில்லா விளைச்சல்
அபலைப் பெண்ணவள் – பேதைப் பெண்ணவள்
அபாயத்திற்குரிய இடம் – பேரிடர்க்குரிய இடம்
அபாயம் வரலாம் – கேடு வரலாம்
அபாயத்திற்கு வழியாகும் – ஏதத்திற்கு வழியாகும்
அபாயம் வருமா? – இடர் வருமா?
அபார வெற்றி – பெரு (நிலை) வெற்றி
அபாரமான விளையாட்டு – மிகச்சிறப்பான விளையாட்டு
அபிநயத்தோடு ஆடினாள் – நளிநயத்தோடு ஆடினாள்
அபிப்பிராயம் என்ன? – கருத்து என்ன?
அபிப்பிராயப்பட்டான் – விருப்பப்பட்டான்
அபிப்பிராயம் கேட்டாயா? – கருத்துக் கேட்டாயா?
அபிமானமுண்டு உன்னிடம் – மதிப்புண்டு உன்னிடம்
அபிமானம் உண்டு – நன்மதிப்புண்டு
அபிமானியானவன் – பற்றாளனானவன்
அபிவிருத்தி கண்டது – வளர்ச்சி கண்டது
*
ஓலை சுவடியை சமர்ப்பித்தவர்; சதீஷ் குமார்
***
thanks சதீஷ் குமார்
***
24 ஜனவரி, 2011
செதில் உதிர் நோய் - Psoriasis
மீன் செதில்கள் போல உடலில் அங்காங்கே தோன்றும். சொறிந்தால், உதிரும். தானேயும் உதிர்வது உண்டு. இதற்கு செதில் உதிர் நோய் என்று பெயர். ஆங்கிலத்தில் சொரியாஸ் (Psoriasis) என்பார்கள்.
இது தொல்லை தரும் நோய். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அரிப்பு எடுக்கும். சொறிந்தால், இரத்தம் கசிந்து புண்ணாகும். உரிய நேரத்தில் மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால், மூட்டுவலி ஏற்படும். எலும்புகள் பலவீனம் அடையும்.
*
செதில் உதிர் நோய் எப்படி ஏற்படுகிறது?
மனக் கவலை
மனக் கவலையால் ஏற்படும் நோய்களில் இந்த செதில் உதிர் நோயும் ஒன்று. மனதில் எந்நேரமும் கவலை. ஏதாவது சிந்தனை. நெருக்கடி. இதனால் சரியான தூக்கமின்மை. இதைத் தொடர்ந்து செதில் உதிர் நோய் வரும்.
உடலில் புரதச்சத்து குறைந்தாலும் இந்நோய் வரும். ஊக்கிகள் (ஆர்மோன்) சரியாக வேலை செய்யாத போதும் இந்த நோய் வரும்.
ஊக்கிகள் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்காக இருக்காது. இப்படிபபட்ட பெண்களையும் இந்த நோய் பற்றிக் கொள்ளும்.
*
பரவக்கூடியது
இது தொற்று நோய் அல்ல. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவாது. ஆனால், கட்டிலில் படுத்திருக்கும்போது செதில் உதிரும்.
நம் உடம்பிலேயே இது பரவக்கூடியது. முதலில் முழங்கையில், கை அக்குளில், கை நகத்துள், உச்சந்தலையில் ஒரு பொட்டுப் போல வரும். அந்த இடத்தைச் சுற்றிப் பரவும். பிறகு அங்கங்கே வரும். இந்நோயின் ஒரு தனித்தன்மை என்றால், வலக்காலில் வந்தால் இடக்காலிலும் அதே இடத்தில் வரும். இடக்கையில் வந்தால், வலக்கையிலும் வரும். உடலில் எந்த இடமாக இருந்தாலும் சரி, வலம் - இடம் இருபுறமும் வரும்.
ஆண், பெண் குறிகளில் வரக்கூடும். பெண்களுக்கு தொடை அக்குள், கை அக்குள்களில் வந்து வெளியே சொல்ல முடியாமல் செய்துவிடும்.
*
பால் குடியுங்கள்
உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்துதான் செதிலாக உதிர்கிறது. இதனால் எலும்பு, பற்கள் பலவீனம் ஆகும். மூட்டுவலியும் ஏற்படும். இதைத் தடுக்க காலை மாலை இருவேளையும் பால் குடிக்க வேண்டும்.
சாப்பாட்டில் புரதச்சத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கொட்டை, விதைகளில் இந்தச் சத்து இருக்கிறது. நிலக்கடலை, பொரிகடலை, முந்திரி சாப்பிடலாம். பச்சைத் தக்காளி, எலுமிச்சை சாறு, ஆரஞ்சுப் பழங்களை ஒதுக்க வேண்டும். எந்த குளிர்பானமும் குறிப்பாக கோலாக்கள் குடிக்கக்கூடாது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
செதில்கள் மீது இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும். காலையில் அரப்புத்தூள் தேய்த்துக் கழுவவும்.
தமிழ், ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுங்கள்.
***
thanks iநியம்
***
"வாழ்க வளமுடன்"