இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சாப்பாட்டு ராமனா நீங்க? அடிக்கடி குளிர்பானம் குடிப்பவரா? நொறுக்குத் தீனி தான் இஷ்டமா? எண்ணெய் சமாச்சாரங்கள் பிடிக் குமா? காய்கறி உணவு என்றாலே “ஙே…? நடக்கக்கூட யோசிப்பவரா?இந்த கேள்விகளுக்கு எல்லாம் ஆம்… என்று நீங்கள் சொன் னால், முதலில் டாக்டரை கவனியுங்கள்; முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; நாற்பது வயதானால் தான் எல்லா உடல் தொந்தரவும் தொடரும் என்பதில்லை; இப்போது முப்பது வயதில் கூட பி.பி., ஷுகர் ஆரம்பித்து விடுகின்றன!
*
நாம் எதற்காக உணவு சாப்பிடுகிறோம்? சாப்பாட்டுக்கு இடையே எதற் காக காபி, டீ, குளிர்பானம் சாப்பிடுகிறோம்? இதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
வாய்க்கு ருசியாக… :
ருசியாக இருக்கிறது என்று இனிப்புகளை “உள்ளே’ தள்ளுகிறோம்; வாய்க்கு காரம் தேவைப் படுகிறது என்று நொறுக்குத் தீனி, ஊறுகாய்களை ருசிக்கிறோம்; மசாலா, ப்ரை சமாச்சாரங்கள் என்றால், நாக்கில் நீர் வடிகிறது. ஆனால், இவை எல்லாம் உடலுக்கு சத்துக்களை அளிக்கின்றனவா என்று யாராவது யோசித்ததுண்டா?
*
கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டாக்டர்களும், உணவு நிபுணர்களும்,”டிவி’யிலும், மேடைகளிலும், பத்திரிகைகளிலும் சத்துணவு என்றால் என்ன என்று கத்தோகத்து என்று கத்தினாலும், பெரும்பாலானோர் சத்தான காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஏனோ புறக்கணித்து வருகின்றனர்.
***
கேட்டுக்கொள்ளுங்கள் :
* வாரத்துக்கு எத்தனை முறை கீரை வகைகளை சாப்பிடுகிறீர்கள்…?
* சத்தான காய்கறிகளை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…?
* பழங்களை வாங்கி சாப்பிடுகிறீர்கள்…?
* காலாற நடந்து செல்கிறீர்கள்…?
* அதிக நேரம்”டிவி’ பார்க்கிறீர்கள்…?
இவற்றை எல்லாம் கணக் கிட்டால், உங்கள் உடல் நிலையில் எந்த அளவுக்கு ஆரோக்கியம் குறைகிறது என்பதை கணக்கிட்டு விடலாம்.
*
இருபது வயதில் இருந்து சத்தான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால், முப்பதில் உடல் குண்டாகாது; நாற்பதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பாதிப்பு போன்றவை வராது.
**
கண்டபடி “உள்ளே’ :
ஆனால், சிலர் எதற்காக சாப்பிடுகின்றனர் என்றே தெரியாமல், எப்போது பார்த்தாலும் எதையாவது சாப்பிட்டபடி இருப்பர். இப்படிப்பட்ட சாப்பாட்டு ராமன்கள் பலர், இப்போது இருபது வயதிலேயே உள்ளனர்.
*
வாழ்க்கை முறை மாறிவிட்ட சூழ்நிலையில், உணவு முறையும் தலைகீழாக மாறிவிட்டது. அதனால், எப்போதும் ஓட்டல் சாப்பாடு, சாட் உணவு வகைகள், மசாலா கலந்த மொறுமொறுக்கள், ரசாயனம் கலந்த கோலாக்கள் ஆகியவை தான் இளம் தலைமுறையினரின் அன் றாட உணவாகிவிட்டது. இப்படி சாப்பிடுவதே பிரச்னை தரக் கூடியது தான். இத்துடன் மிக அதிகமாக சாப்பிடுவது என்பதும் ஆபத்தான விஷயம்.
*
அதிகமாக சாப்பிடுபவர்கள், உடனே பரிசோதித்துக் கொள்வது மிக முக்கியம். என்னவெல்லாம் வரும்? : அதிகமாக சாப்பிடுவோருக்கு உடலில், முதலில் அதிக கொழுப்பு சத்து சேரும்; அதனால், உடல் குண்டாகும்.
*
“ஒபிசிட்டி’ ஏற் பட்ட பின், ரத்த அழுத்தம், சர்க் கரை அளவு அதிகரித்து கடைசியில் இதய நோயில் விட்டு விடும்.பாக்டீரியா , வைரஸ் தாக்குதலை தடுத்துக்கொள்வது உட்பட, எந்த தாக்குதலையும் தாங்கக்கூடிய வகையில் உடலில் எதிர்ப்பு சக்தி உள்ளது.
*
சத்தான உணவு சாப் பிட்டால் தான் இந்த எதிர்ப்பு சக்தி நீடிக்கும். இல்லாவிட்டால், அது பலவீனம் அடைய ஆரம்பிக்கும். அப்போது தான் கோளாறுகள் ஆரம்பமாகின்றன. கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைகிறது; கல்லீரலில் கொழுப்பு சேர்கிறது.
*
அதிகம் சாப்பிடுவது ஏன்? : போதை மருந்துக்கு ஆட்பட்டவரை, அப்பழக்கத்திற்கு அடிமையாகி விட வைப்பது, அவர் மூளையில் இருந்து வரும் உத்தரவு தான். தன்னை அறியாமல், அவர் போதைக்கு அடிமையாகி விடுகிறார். அது போலத்தான், ஒருவர் அதிகமாக சாப்பிட காரணம், அவருக்கு மூளையில் இருந்து வரும் கட் டளை தான்.
*
சாப்பிட, சாப்பிட அவருக்கு திருப்தியையே தராமல் இன்னும் அதிகம் சாப்பிட மூளையில் இருந்து உத்தரவு வந்தபடி இருக்கும்.
*
இளம் வயதில் இருந்தே சாப்பிடுவதை கட்டுப்படுத்திவிட்டால் போதும். பின்னாளில் பிரச்னை வராமல் தவிர்த்து விடலாம். இளம் வயதினரே… : ஆரம்பத்தில் 180 மில்லி பாட்டில் கோலாக்கள் விற்பனை செய்யப்பட்டன.
*
இதில் 60 கலோரி உள்ளது; அடுத்து, 300 மில்லி பாட்டில் விற்பனைக்கு வந்தது; இதில் 80 கலோரி உள்ளது. இப்போது, சினிமா தியேட்டர் உட்பட பல பொது இடங்களில் 600 மில்லி பாட்டில் வந்து விட்டது. இதை ருசித்து சாப்பிட்டு முடிக்கும் போது, உடலில் 180 கலோரி சேர்ந்து இருக்கும்.
*
அப்படியானால், எந்த அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
*
என்ன தான் வழி? :
* அதிகம் சாப்பிடுவதை தடுக்க டாக்டரிடம் வழி கேளுங்கள்.
* மொறுமொறுக்கள், கோலாக்கள் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.
* கலர் கலராய் காய்கறி, பழங் களை அதிகம் சாப்பிடலாம்.
* பிரஷ் ஜூஸ் சாப்பிடலாம்; எண்ணெய், நெய், உப்பு குறைக்கலாம்.
* அவ்வப்போது உடல் பரிசோதனை முக்கியம்.
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக