...

"வாழ்க வளமுடன்"

14 மார்ச், 2011

குழந்தைகள் குற்றவாளிகளாக வளருவார்களா? என்பதை கண்டறியும் ஆய்வு


அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வொன்றில், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவார்களா? என்பதை அவர்களுடைய மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்து அதன் வழியாக அறிய இயலும் என தெரிவித்து உள்ளார். அவரது ஆய்வின்படி, மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் மூளையின் பகுதிகளான அமிக்டலா மற்றும் ப்ரிப்ரென்டல் கார்டெக்ஸ் ஆகியவை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறியதாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இத்தகையோர்களுக்கு மூளையை வளப்படுத்தும் ஒமேகா 3 நிறைந்த உணவு கொடுப்பதனால் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் கொண்டு வர இயலும் என அவர் தெரிவிக்கிறார். மேலும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவது இல்லை என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்துவதில்லை. மாறாக, நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது தொட்டே கற்று கொடுத்து வருவதே அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதை காட்டிலும் மிக சிறந்தது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

*

கண்டிப்பு பிள்ளைகளிடத்தில் முதலில் பயத்தை ஏற்படுத்தி அதன்பின் வெறுப்பை ஏற்படுத்தும்..... இவர் யார் என்னை கட்டுப்படுத்த என்ற கோபம் பிறக்கும்.... அதிலிருந்து தான் எல்லா பிரச்சனைகளுக்கும் வழி காமிக்கும்...

அதனால் கண்டிப்புடன் இருப்பதை விட அன்புடன் அரவணைத்து நடத்தி சென்றால் எப்படிப்பட்ட குழந்தையும் அன்புக்கு கண்டிப்பாக கட்டுப்படும்..

by-மஞ்சு அக்கா

***
thanks ஈகரை
***



"வாழ்க வளமுடன்"


கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால்!



கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.


* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.


* சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.


* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.


* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.


* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.


* உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.


* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.


* மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.


* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.


* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.



* பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு


***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"

உங்களுக்கு முதல் பிரசவமா?



கர்ப்பகாலத்தின்போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாய் பிறக்கும் என்று சில வீடுகளில் சொல்வார்கள். எங்கே குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று பயந்தே பெரும்பாலான பெண்கள் இதனால் இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். இது ரொம்பவும் தவறு.

நம்மூர்ப் பெண்களுக்கு - அனீமியா - என்று அழைக்கப்படும் ரத்தசோகை நோய் மிகவும் பரவலாக இருக்கிறது. இது இரும்புச் சத்து குறைவால் ஏற்படுகிறது. வேறு பல வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. காரணம் அவர்கள் தங்கள் உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியே சத்துக் குறைவு இருந்தால் அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு அதை உடனடியாக சரி செய்து கொள்கின்றனர்.


எதனால் இந்த இரும்புச் சத்து தேவை என்பதைப் பார்ப்போம்.. நம் உடலில் இரும்புச் சத்து குறையும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற ஒரு பொருள் குறைந்துவிடுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் பிராணவாயுவை உடலில் எல்லா பகுதிகளுக்கும் சமமாக எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் அளவு ஒருவருக்கு குறையும்போது உடலின் பல்வேறு பாகங்களுக்கு பிராணவாயு சரிவர கிடைக்காமல் போகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் Heart failier கூட ஆகலாம்.


இரும்புச் சத்து குறைபாடு உள்ள சாதாரண பெண்களுக்கே இப்படியென்றால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ ஹீமோகுளோபின் அளவு குறைவதோடு உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து அவருடைய உடம்பு பலவீனமடைவதோடு உள்ளிருக்கும் குழந்தையும் பலவீனமடைகிறது. மேலும் மேற்சொன்ன மூச்சுத்திணறல் பிரச்னைகளும் ஏற்படும். அதனால் இரும்புச் சத்து குறைவாக உள்ள எல்லாப் பெண்களுமே உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


மருத்துவரின் ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்றால் ரத்தசோகை இருக்கிறதோ இல்லையோ.. அவர்கள் பேறு காலம் முழுவதுக்குமே இரும்புச் சத்து மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று இந்த விஷயத்தில் பயப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. குழந்தை எந்த நிறத்தில் பிறக்கும் என்பது மரபு வழியாக தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதால் எல்லாம் சிவப்பாகப் பிறக்கவேண்டிய குழந்தை தடாலடியாகக் கறுப்பாக மாறிவிடாது.

கர்ப்பகாலத்தின் போது மாம்பழம் போன்ற வேறு பல விஷயங்களை சாப்பிட்டாலும் குழந்தை கறுப்பாகிவிடும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை.

அதேபோல குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற நம்பிக்கையும் பொய்.


சிலர் இரும்புச் சத்து மாத்திரைகளைப் பேறு காலத்தின் ஆரம்பத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்து எட்டாவது மாதம் போல நிறுத்தி விடுகிறார்கள். கேட்டால் - இதுக்கு மேல மாத்திரை கொடுத்தா குழந்தையோட சைஸ் பெரிசாகி, சிசேரியன் பண்ணி எடுக்க வேண்டியதாகிவிடும்...- என்கிறார்கள். இந்த நம்பிக்கையும் தவறுதான்.


இவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் எடுத்துக் கொள்வது எந்த உணவாகவோ மாத்திரையாகவோ இருந்தாலும் அதில் தனக்குத் தேவையான சத்துக்களை மட்டுமே நம்முடைய உடல் உறிஞ்சுக் கொள்ளும். மீதமுள்ளவை வேறு பல வழிகளில் உடலிலிருந்து வெளியேற்றப் பட்டுவிடும். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.


பிரசவத்தின்போது பெண்களுக்கு ரத்த இழப்பு அதிகமாக ஏற்படும். நோர்மல் பிரசவத்தின் போது 500 மில்லி அளவு (அல்லது அதற்கு மேலும்) சிசேரியனின் போது 1000 மில்லி அளவு வரைக்கும் (அல்லது அதற்கு மேலும்) ஒரு பெண்ணுக்கு இரத்த இழப்பு ஏற்படலாம். இது நார்மலான ஒரு விஷயம். இந்த இழப்பை ஈடுசெய்யவும், குழந்தை பிறந்ததும் அதற்கு பாலூட்டவும் தாய்க்கு இரும்புச் சத்து அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பேறுகாலத்தின்போது தாய் தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரும்புச் சத்து மாத்திரைகள்தான் இந்த நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.


கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இரும்புச் சத்து எவ்வளவு அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

*

இனி பிரசவத்துக்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

36 வாரங்கள் ஆனதும் தாய் பிரசவத்துக்குத் தயாராகிவிடவேண்டும். முதலில் பிரசவத்துக்கு மனதளவில் தாய் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவருக்கு முக்கிய பங்குண்டு.


எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்..- என்று ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கைக் கொடுக்க இவர்கள் தவறக்கூடாது. இதுவே பாதி பிரச்னையைத் தீர்த்துவிடும்.


சிலர் வேலை காரணமாக தங்கள் குடும்பங்களைவிட்டு வெகுதூரத்தில் செட்டிலாகி இருப்பார்கள். இவர்களுடைய தாயோ அல்லது மாமியாரோ பிரசவத்தின் போதுதான் ஊருக்கே வரமுடியும் என்கிற நிலையில் இருக்கலாம். இப்படி அத்தனை உதவி இல்லாத பெண்களுக்கு உதவுவதற்காகவே சில மருத்துவர்கள் Prenatal வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

பிரசவம் பற்றிய பயத்தைப் போக்குவது தொடங்கி அதற்கு எப்படியெல்லாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்வது மற்றும் பிரசவத்தை சுலபமாக்க சில பிரத்தியேக பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பது என்று இந்த வகுப்புகள் மிக உபயோகமாக இருக்கும். இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

வீட்டில் பெரியவர்களின் உதவி இல்லாதவர்கள் இந்த Prenatal வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தால் பிரசவத்தை positive ஆக எதிர்கொள்ளலாம்.

மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் எப்போது என்பது மகேசனுக்கு மட்டுமே தெரியும் என்பார்கள்! உண்மைதான். தாய்க்கு எப்போது பிரசவ வலி ஏற்படும் என்று சொல்வது மிகக் கடினம்! அதனால் பிரசவத்துக்கு தேவையான மெட்டர்னிட்டி பையை கர்ப்பமான பெண்கள் முன்கூட்டியே ரெடி செய்து கொள்ளவேண்டும்.

அதில் தனக்கான நைட்டி, சோப்பு சீப்பு முதலிய அத்தனை விஷயங்களையும், குழந்தைக்கு ஏற்கனவே வாங்கி வைத்த நாப்கின்கள் முதலானவற்றையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பையைத் தாய் தயார் செய்வதற்கு முன்னரே ஒரு மினி ஷொப்பிங் சென்று வருவது நல்லது.


அப்போதுதான் குழந்தைக்கான சோப்பு, எண்ணெய், ஷாம்பு, சொக்ஸ், உடைகள், கொசுவலை ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வாங்க முடியும். பிரசவத்துக்குப் பிறகு சில மாதங்கள் வரைக்கும் தாய் வெளியே செல்ல முடியாது என்பதால்தான் முன்பாகவே இதுபோல ஷாப்பிங் சென்று வரவேண்டும் என்கிறேன்.


என்ன இருந்தாலும் தாய் தன் பட்டுக்குட்டிக்காக பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பொருள்களைப் போல மற்றவர்கள் (அது கணவராகவே இருந்தாலும்...) வாங்கி வரும் பொருட்கள் இருக்காதில்லையா..


36 வாரங்களானதும் மருத்துவர், தாய்க்கு பிரசவவலிக்கான அறிகுறிகள் என்னென்ன, எதுபோன்ற வலியெடுத்தால் உடனே தன்னைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுப்பார்.


முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு (ஏன் சில சமயங்களில் ஏற்கனவே பிரசவமானவர்களுக்கும் கூட) நிஜ பிரசவவலி எதுவென்று சரியாக சொல்லத்தெரியாது. பிரசவத்துக்கு முன் வரக்கூடிய சில இயல்பான வலிகளை (இதை ஆங்கிலத்தில் false Pain என்போம்) பிரசவ வலி என்று நினைத்துப் பதறிப்போய் மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க வந்துவிடுவார்கள். பிரசவவலி எது என்பது சரியாகத் தெரியாததால் அந்தப் பெண்களுக்கும் அவஸ்தை. அவருடன் வரும் பிறருக்கும், ஏன், மருத்துவருக்கும் அவஸ்தைதான்.


அப்போ நிஜ வலியை எப்படித்தான் கண்டு பிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பிரசவலி போலவே தெரியக்கூடிய வலிகள் - False Pain - பற்றி முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதில் இரண்டு வகையுண்டு.


பேறுகாலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் பின் தலை, தாயின் இடுப்பு எலும்பில் பொதியும். முதல் பிரசவத்தை எதிர் கொள்பவர்களுக்கு இது 34-35 வாரத்துக்குள் நிகழும். மற்றவர்களுக்கு பிரசவவலி எடுக்கும் சமயத்தில் இது பெரும்பாலும் நிகழலாம். இப்படி இடுப்பு எலும்பில் குழந்தையின் தலை பொதியும் போது வலி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Head fitting Pain என்போம். முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண், இதுதான் பிரசவ வலியோ என்று நினைத்து பயந்துவிடுவார். இது ஒரு வகை false Pain.


இரண்டாம் வகை வலி, பிரசவத்துக்கான நாள் நெருங்க நெருங்க வரலாம். இந்த வகை வலி இடைவெளி விட்டுவிட்டு வரும். இதில் சில நொடி வலிக்குப் பிறகு சாதரணமாகி விடுவார்கள். இதை Practice Contraction என்போம்.


அதாவது, பிரசவத்துக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள நம்முடைய கர்ப்பப்பை Practice செய்கிறது என்போம். பேறு காலம் நெருங்கத் தொடங்கியதுமே கர்ப்பமடைந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இப்படி அடிக்கடி சுருங்கி விரியத் தொடங்கும். அந்த சமயத்தில், பீரியட்ஸின்போது ஏற்படும் வலி போன்றதொரு வலி ஏற்படுவதாக சொல்வார்கள். ஆனால் இதுவும் false Pain தான்.


இதுபோன்ற வலி வரும்போது சம்பந்தப்பட்ட பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன்னைத்தானே 2-3 மணி நேரத்துக்குக் கண்காணித்துக் கொள்ளவேண்டும். எத்தனை நேர இடைவெளி விட்டு வலி வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். நிஜப் பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் இரண்டு வலிகளுக்கு இடையேயான நேர அளவு குறையத் தொடங்கும். அதேபோல நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போகும். கர்ப்பமுற்ற பெண் தன்னைத்தானே அமைதியாகக் கண்காணிக்கும்போதுதான் இது தெரியும்.


***
thanks டாக்டர்
***



"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "