...

"வாழ்க வளமுடன்"

மருத்துவ ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 செப்டம்பர், 2015

குழந்தைகளின் உயரம் & எடை




                             
          AGE (years) MALE (HT) FEMALE (HT) MALE(WT) FEMALE(WT)
***
ts  doctorrajmohan
***


"வாழ்க வளமுடன்"

09 ஜூலை, 2015

பித்தம் தீர்க்கும் வில்வம்






பித்தம் தீர்க்கும் வில்வம்
சித்த மருத்துவத்தில் பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கிய மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. வில்வம் பித்தத்துக்கு அருமருந்து. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணமுடையது.
வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரை நோய், பேதி, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிற்று உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து. நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy) மற்றும் மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டுவந்தால், படிப்படியாய் நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் துவங்கும்.
ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர் விட்டுவைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் இரைப்பு நீங்கும். 50 கிராம் வில்வ இலைத்தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபீலியா என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும் என நவீன அறிவியலால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய முறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும். சித்த மருத்துவத்தில் வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்குக் கொடுக்கலாம் (பெப்டிக் அல்சர்). இதனை நாமே வீட்டில் செய்து கொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்தில் காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக்கொண்டு செய்யும், வில்வாதி லேகியம் நல்மருந்து.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை. வில்வ இலை வில்வம் பழம் இரண்டும், குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து. வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறுபயறு, நெற்பொறி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கசாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும். வில்வ இலையை நல்லெண்ணையில் காய்ச்சி காது நோய்களுக்கு, காதில் விடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
இன்று பெருகிவரும் தொற்றாத வாழ்வியல் நோய்கள், உளவியல் நோய்கள், பத்தில் மூன்று நபருக்கு வருவதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உளவியல் நோய்களில் முதலாவதாக மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்பு கூறியதுபோல் ஊறவைத்தோ கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தில் தற்போது ‘சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்திவரலாம்.



***
thanks dr
***



"வாழ்க வளமுடன்"
      

உங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா?





டி.வி, ஏ.சி, மொபைல் போன், லேப்டாப் என வீட்டுக்குத் தேவையானவற்றை அதிக விலை கொடுத்து வாங்கும் வீடுகளில்கூட, சில நூறு ரூபாயில் கிடைக்கும் முதலுதவிப் பெட்டிகள் இருப்பது இல்லை. நமக்கு ஏதும் ஆகாது எனும் அலட்சியம் அல்லது என்றைக்கோ நடக்கும் விஷயத்துக்கு எதுக்கு எனும் மெத்தனம்தான் இதற்குக் காரணம். ஆபத்து, எந்த நொடியிலும் ஏற்படலாம். முதலில், அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருளே முதலுதவிப் பெட்டிதான்.
கிருமிநாசினி
டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் அவசியம் இருக்க வேண்டும். உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க, சிறிதளவு கிருமிநாசினியால் அடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வீடுகளில் ரத்தம் சிந்தியிருந்தாலோ, அசுத்தங்கள் நிறைந்திருந்தாலோ, தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து, நன்றாகத் துடைத்தால் வீட்டுக்குள் கிருமிகள் அண்டாது.
பஞ்சு
காயங்கள் ஏற்பட்டாலோ, தோல் அரிப்பு, சிரங்கு, சீழ் வடிதல் போன்ற பிரச்னை ஏற்பட்டாலோ, பழைய துணிகளால் கட்டுப்போடுவது, அடிபட்ட இடத்தைத் பழைய துணியால் துடைப்பது கூடாது. பஞ்சை வைத்துதான் துடைக்க வேண்டும். பஞ்சைப் பயன்படுத்தியவுடன் உடனடியாகத் குப்பைத் தொட்டியில் எரிந்துவிட வேண்டும். பயன்படுத்திய பஞ்சுகளை, வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது. சிறிதளவு கெட்டித்தன்மை கொண்ட தரமான பஞ்சாகப் பார்த்து வாங்கவும்.
பேண்டேஜ்
எதிர்பாராதவிதமாக ஏற்படும் சின்னச்சின்னக் காயங்களுக்கு பேண்டேஜ் போட வேண்டியிருக்கும். சின்னக் காயங்களை நன்றாகக் கிருமிநாசினி வைத்துத் துடைத்த பிறகு, பேண்டேஜ் போடவும். நன்றாகப் புண் ஆறிய பிறகு, முதலுதவி செய்வதில் தேர்ந்தவர்கள் அல்லது மருத்துவர்கள் மூலமாக, பேண்டேஜை அகற்றலாம். வட்ட வடிவிலும், நீள வடிவிலும், சதுர வடிவிலும் பேண்டேஜ்கள் கிடைக்கின்றன. பெரிய காயங்களுக்கு மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகுதான் பேண்டேஜ் அணிய வேண்டும்.
பாராசிட்டமால்
சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு எப்போதாவது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஓரிரண்டு மாத்திரைக்குள் நிவாரணம் கிடைக்காவிடில் மறுபடியும் பாரசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும்.
ஐசார்டில்
மாரடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைக்கு ரத்தம் செல்வது தடைப்படும். மாரடைப்பு வரும் என உணரும் நொடியில் அல்லது மாரடைப்பு வந்த சில நொடிகளுக்குள் ஐசோசார்பைடு டை நைட்ரேட் (Isosorbide dinitrate)) இருக்கக்கூடிய ஐசார்டில் (Isordil) மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, மிக விரைவாக மருத்துவமனையை நாடினால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது, ரத்தக்குழாய் அடைப்பைச் சற்று தளர்த்தும். எனவே, உடல் எடை அதிகம் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில் கட்டாயம் ஐசார்டில் மாத்திரை இருக்க வேண்டும். இதயநோய் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையின்பேரில் இந்த மாத்திரையை மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் சாப்பிடலாம்.
தீக்காய மருந்து
தீக்காயம் ஏற்படும்போது, உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, முதலில் குழாய் நீரில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். சில்வர் சல்ஃபாடையாசின் நிறைந்த களிம்புகளைத் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும்போது, களிம்புகள் தடவக் கூடாது. மிக விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
வலி நிவாரணிகள்
வயிற்று வலி வந்தால், தற்காலிக நிவாரணம் கிடைக்க டைசைக்லமின் (Dicyclomine), டிரோட்டோவெரின் (Drotoverine) உள்ள மாத்திரைகள் (உதாரணம்: பஸ்கோபான்) வாங்கி வைத்துக்கொள்ளவும். திடீர் காது வலி, பல் வலி, மூட்டுவலி ஏற்படும் சமயங்களில் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படும்.
கையுறை
மருந்துகளைக் கையாளும்போதும், முதலுதவி செய்யும்போதும், தரமான கையுறை அணிந்துகொள்வது நல்லது. கையுறை அணிவதால் கையில் இருக்கும் அழுக்குகள் வழியாகக் கிருமிகள் மற்றவருக்குப் பரவாது. கையுறையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
கத்திரிக்கோல்
காயம்பட்ட இடத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்்டேஜைக் கத்திரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்திரிக்கோல் தேவையாக இருக்கும். அவ்வப்போது துடைத்து, துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிட்பிட்ஸ்:
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து, அன்றைய தேதியில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தள்ளி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வலி நிவாரணி, பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை வாங்கும்போது, 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக வாங்க வேண்டும். அப்போது
தான், காலாவதித் தேதியைச் சுலபமாக சோதனை செய்ய முடியும்.
இருமல் மருந்துகள் போன்றவற்றை, முதலுதவிப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
ஒன்று அல்லது இரண்டு வேளை தலா ஒரு மாத்திரை சாப்பிட்டும் பயனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து சுயமாக மாத்திரை சாப்பிடக் கூடாது.
முதலுதவிப் பெட்டிகளை, குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றை அவசர நேரத்தில் எப்படிப் பயன்படுத்துவது என, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோர் ் சொல்லித்தர வேண்டும்.
வலிப்பு, ஆஸ்துமா, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

***
thanks
***



"வாழ்க வளமுடன்"
      

30 ஜூன், 2015

காலை எழுந்தவுடன்...டாக்டர்.வேலாயுதம்



 
 
காலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச்செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது?


உடலின் பல நோய்கள் நம் வயிற்றுப் பகுதியில்தான் ஆரம்பிக்கின்றன. மலச்சிக்கல், வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் எனச் சாதாரணமாகத் தொடங்கும் பிரச்னைகள்கூட பல மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொதுவாக, முந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும்.


மேலும் 'ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்னை ஏற்படும். முறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப் பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


 தண்ணீர்
 
ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.


தண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். மேலும், இதனால் உடலின் ஒரு நாளைய வளர்சிதை மாற்றத்தில் 24 சதவிகிதம் அதிகரிக்கிறது. முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.
 
 
 வெந்தயத் தண்ணீர்
 
 
சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.


வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.


 அருகம்புல் சாறு  
 
அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது.

அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.


 வெள்ளைப்பூசணி சாறு
 
 
வெறும் வயிற்றில் வெள்ளைப்பூசணி சாறு குடித்து வந்தால் தொப்பை, ஊளைச்சதை விரைவில் குறையும். கூடவே, இதனுடன் சிறிது மிளகுத்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதன் மூலம் குடிப்பதற்கான முழுப் பலனும் கிடைக்கும். ஆனால், இது மிகவும் குளிர்ச்சி என்பதால் 7 மாதத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தவிர்க்கவேண்டியது அவசியம்.
 
 
 இஞ்சிச் சாறு
 
இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.


நீராகாரம்
 
 
காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது. மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் (றீணீநீtஷீதீணீநீவீறீறீus) என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.


 நெல்லிக்காய்ச் சாறு
 
 
தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், 'ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.
 
 
 
இளநீர்

இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.


மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.


 எலுமிச்சைச் சாறு
 
 
பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர்் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும்.


ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்!
 பச்சை முட்டை
 
 
ஒல்லியாக இருப்பவர்கள், 'ஜிம்’ பாடியாக மாற ஈஸியான வழியைத் தேர்ந்தெடுப்பது, விடிகாலை வெறும் வயிற்றில் பச்சை முட்டைதான். உண்மையில் இது மிகப் பெரிய தவறு. பச்சை முட்டை செரிமானமாகக் குறைந்தது 8 மணி நேரமாவது ஆகும். இதனால், நம் வயிற்றில் உள்ள உள்ளுறு குடலுறிஞ்சிகளால், செலீனியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற நுண்சத்துகளை உறிஞ்ச முடிவது இல்லை.


இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் முட்டையில் உள்ள புரதமும் (வெள்ளைப்பகுதி) மஞ்சள் கருவும், காலையில் வயிற்றில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேரும்போது வாயுத்தொல்லை ஏற்பட்டு, நாள் முழுவதும் மந்தமான உணர்வு ஏற்படுத்திவிடும். எனவே, வேகவைத்த முட்டையாக இருந்தாலும் காலை மற்றும் மதிய உணவின்போது மட்டுமே சாப்பிட வேண்டும்.


***
நன்றி டக்டர்
***

"வாழ்க வளமுடன்"

      

20 ஆகஸ்ட், 2012

தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா?



அந்த 3 நாட்களை தள்ளிப்போட மாத்திரை சாப்பிடலாமா? டாக்டர் ஆலோசனை அவள் விகடன் 
மாதவிலக்கை தள்ளிப்போட மாத்திரைகள் தேவையா ?


தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிரஹப்பிரவேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும்போது எல்லாம், ‘அந்த நாளில் மாதவிலக்கு வந்துவிட்டால்…’ என்னாவது என்கிற பதற்றமும் பெண்களுக்குப் பற்றிக்கொள்வது அந்தக் காலம்.


இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போடக்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட்டுக் கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களை யும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண்களின் காலம்!
இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன்படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெல்லாம் தெரிந்தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத்தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான் உண்மை.


‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பயன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’ என்றபடி மகப்பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.


”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாதுகாப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது.


அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள்ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செயலுமே தவறானதுதான்” என்ற டாக்டர்,
”விசேஷமான நாட்களில் மாதவிலக்கு ஏற்பட்டால், சங்கோஜமாகத்தான் இருக்கும். ஆனால், அதைத் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரைகளைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொன்னவர், மாத்திரைகளைப் பயன்படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.


”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.


இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ளவேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம்.
அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வருத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.


இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும்போது… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்கவேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண்டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!” என விளக்கமாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,
”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்திரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டார்கள். டாக்டரின் சிபாரிசு இருந்தால் மட்டுமே வாங்க முடியும்.


ஆனால், இங்கே மாதவிலக்கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெயரைச் சொல்லி மெடிக்கல் ஸ்டோரில் வாங்கிச் செல்கிறார். தான் செய்வது எவ்வளவு அபாயமானது என்பது பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை” என்று கவலையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-



”மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்ககூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெண்ணின் உடல் பூவுக்குச் சமமானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற்றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவதிக்கு உள்ளாகும் என்பதை உணரவேண்டும்.


முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் உரிய அறிவுரையைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!’

***
நன்றி:அவள் விகடன்

***



"வாழ்க வளமுடன்"
 

11 மே, 2012

கர்ப்ப காலம்-துணுக்குகள் ( tips )

கர்ப்ப காலம்


1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.




2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வழக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.



3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.



4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.



5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா? என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.

***

ஆணின் பங்கு என்ன?

ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.



1. நல்ல ஆரோக்கியமான உணவு

2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.

3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்

4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.



***

கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய வழிகள்



1. சமவீத உணவை உட்கொள்ளல்:
பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

*

2. போலிக் அமிலம் மாத்திரைகள்:
நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல்
உட்கொள்ள வேண்டும்.

முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள்.


கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

*

3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:
மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை
தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம்.


விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

*

4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:
சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும்.


தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும்.


தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

*

5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:
கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால
மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம்.

போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.


***


மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:
உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.
*

டோக்சோ பிளாஸ்மோசிஸ்
இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

*

 பரிசோதனை நேரம்:
கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.
*

 மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.
*

 புகை பிடித்தலை தவிர்த்தல்:
எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.


***
thanks dkaran
***



"வாழ்க வளமுடன்"

கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு


 

கர்பிணி பெண்களுக்கு எடை குறைவு மற்றும் இரத்ததின் அளவு கம்மியாகி
விட்டால்


1.இரவு இரண்டு வேலையும் அத்தி பழம் இரண்டு பேரிட்சை இரண்டும், காய்ந்த‌ திராட்சை ஸ்வீட்டுக்கு ப‌ய‌ன் ப‌டுத்துவ‌து இது முன்றையும் தினம் காலையில் சாப்பிட‌வேண்டும்.இது முன்றையும் சேர்த்து ஹ‌ல்வாவாக‌வும் செய்து சாப்பிட‌லாம்.


2.புரோகோலி சூப், பொரிய‌ல்,புரோகோலி பீஃப் போன்ற‌வை சாப்பிட‌லாம்.இந்த புரோகோலியில் அதிக இரும்பு சத்து உள்ளது.


3.ஏதாவ‌து ஒரு கீரை சிறு ப‌ருப்பு சேர்த்து கூட்டு வைத்து (அ) பிர‌ட்டியோ க‌றியுட‌ன் சேர்த்தோ சாப்பிட‌லாம்.


4.ம‌ண்ணீர‌ல் சுட்டு அல்ல‌து பொரித்தோ சாப்பிட‌லாம். இது வார‌ம் முன்று முறை சாப்பிடாலே ஹிமோகுளோபின் அள‌வு கூடும்.


5.சால‌ட் நிறைய‌ செய்து சாப்பிட‌லாம்.


6.கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலை அரைத்து ,துவையலாக‌ (அ) ர‌ச‌ம் வைத்து சாப்பிட‌லாம்.


7.ப‌யிறு வ‌கைக‌ளை ஊற‌வைத்து அடையாக‌ சுட்டு சாப்பிட‌லாம்.


8. கேழ்வ‌ர‌கில் பான‌ம், புட்டு,இனிப்பு அடை போன்ற‌வை சாப்பிட‌லாம்.


9.பீட்ரூட் ஜூஸ், ஹல்வா, பொரியல், சாலட், பீட்ரூட் வித் கீமா கடலைபருப்பு சேர்த்து கறி பண்ணி சாப்பிடலாம்.


10. இரவில் மட்டும் லேசான ஆகாரங்கள் உண்பது நல்லது அதுவும் 7 லிருந்து 8 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து கொள்ளவும்.

**


ஏன் உட‌ல் எடை குறைகிற‌து என்றால் ம‌ச‌க்கை கார‌ண‌மாக‌ இர‌வில் லைட்டாக‌ ச‌ப்பாத்தி சாப்பிட்டு வ‌ருவ‌தால் நாள‌ட‌டைவில் பிள்ளை பெறும் நேர‌த்தில் எடை குறைந்து விடுகிற‌து. ஒரு நாளைக்கு முன்று ட‌ம்ள‌ர் பால் அருந்துவ‌து ந‌ல்ல‌து. இது குழ‌ந்தை வ‌ள‌ரும் ச‌மைய‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு தேவையான கால்சிய‌ம் ச‌த்து கிடைத்து விடும்.


அதே போல் தாய்மார்கள் சாப்பிடும் ஓவ்வொரு உணவும் குழந்தையை போய் தான் அடைகிறது என்பதை மனதில் கொண்டு நேரம் தவராமல் சாப்பிடவேண்டும்.


இரண்டு மாததிலிருந்து ஐந்து மாதம் வரை எவ்வளவுக்கு எவ்வளவு சத்தான ஆகரம் சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு ந‌ல்ல‌து.

***
thanks dinakaran
***


"வாழ்க வளமுடன்"
      

27 மார்ச், 2012

எக்ஸாம் டிப்ஸ் !


வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம்.




அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?


“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க.

சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும்.

முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும்.


 பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும்.


நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது.


ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.



படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது.



 நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது.


எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும்.


முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது.


மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும்.


சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும்.


மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது.

வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும்.


புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம்.


கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.


களம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா!

***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

13 மார்ச், 2012

முதுமையை விரட்டும் ஓட்ஸ்!



உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

***
thanks tbs
***




"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2012

உங்கள் பி.எம்.ஜ (உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் ) ?



ஆரோக்கியமாக இருப்பவர்கள் உடல் பருமனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில பொது மருத்துவ மற்றும் பல் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உடல் பருமன் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.



இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஆதர்ஷ் குப்தா தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 454 பேரின் மருத்துவ குறிப்புகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர்களிடமும் பரிசோதனைகள் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வு சொல்லும் தகவல்கள் வருமாறு: உடல் எடையை உயரத்தின் இரு மடங்கால் வகுத்து கிடைக்கும் தொகை பி.எம்.ஐ(பாடி மாஸ் இண்டக்ஸ்) எனப்படுகிறது. இது 18.5 முதல் 25 வரை இருப்பது நார்மல் என கருதப்படுகிறது. குறைந்தால் ஒல்லி என்றும் அதிகரித்தால் குண்டு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.


25-30 இருப்பது அதிக எடை என்றும், 30-35 இருப்பது சுமார் குண்டு, 35-40 என்பது அதிக குண்டு, 40-க்கு மேல் இருந்தால் அதிகபட்ச குண்டு என்றும் கூறப்படுகிறது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 454 பேரில் 135 பேரின் பி.எம்.ஐ அதிகமாக இருந்தது. பருமனாக இருந்தாலும் அவர்கள் ஆரோக்கியமாகவே இருந்தனர்.







***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

17 பிப்ரவரி, 2012

குழந்தைகளுக்கு அலர்ஜி’



குழந்தைகளை எடுத்துக்கொண்டு பொதுநிகழ்ச்சிகளுக்கு செல்கிறவர்கள், பெரும்பாலும் குழந்தைகளுக்கு `டயப்பர்’ அணிவிக்கிறார்கள். எப்போதாவது அதை பயன்படுத்தினால், தொந்தரவு ஏற்படுவதில்லை. தொடர்ந்து அதனை பயன்படுத்தும்போது குழந்தைகளின் மென்மையான சருமத்தில் அலர்ஜி ஏற்படலாம்.



சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாத அளவிற்கு டயப்பர் அணிவிப்பது எப்படி?

டயப்பர் கட்டுவதற்கு முன்பு, துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் உடலை துடைக்கவேண்டும். கால் பகுதிகள், முன் பகுதி, பின் பகுதி எல்லாம் துடையுங்கள். அடுத்து உலர்ந்த துணியால் ஈரப்பதத்தை துடைத்து சுத்தமாக்குங்கள்.


டயப்பர் கட்டும்போது பசைத்தன்மை கொண்ட பின்பாகம், தொப்புளின் சம அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.


குறிப்பிட்ட நேரத்தில் டயப்பரை மாற்றவேண்டும். சிறுநீர், மலம் கழித்திருந்தால் அதிக நேரம் டயப்பரை மாற்றாமல் இருக்கக்கூடாது.
சிலவகை டயப்பர்கள் குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதை கட்டியிருக்கும் சருமப் பகுதியில் சிவப்பு திட்டுக்கள் போல் ஏற்பட்டால் அந்த பிராண்டை பயன்படுத்த வேண்டாம்.


டயப்பர் இறுகக்கூடாது. இறுக்கமாக இருந்தால், குழந்தையை அது அவஸ்தைக்குள்ளாக்கும். கால், இடுப்பு பகுதியில் இறுக்கத்தால் ஏற்படும் பாதிப்பு தென்பட்டால் அதைவிட சற்று பெரிய அளவிலான டயப்பரை பயன்படுத்துங்கள்.



சருமத்தில் சிவப்பு திட்டுகள் தென்பட்டால் `ஸிங்க் ஆக்சைடு’ கொண்ட ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். நாள் முழுக்க டயப்பர் பயன்படுத்தக்கூடாது. தினமும் சிறிது நேரமாவது சாதாரண ஆடையுடன் குழந்தையை வைத்திருங்கள்.


வெளியே குழந்தையை தூக்கி செல்லும்போது காட்டன் துணியை மடக்கி, குழந்தைக்காக பயன்படுத்துவது நல்லது.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"
      

07 பிப்ரவரி, 2012

கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?



கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு உடல் எடை அதிகரிக்க

வேண்டுமென டாக்டர்கள் கூறுவர். அதற்காக அதிகளவிலான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதில்லை.

அதிக கலோரிகள் தேவை என்பதால் நல்ல சத்தான உணவை சாப்பிடுவதே மிக முக்கியம். அப்போது தான் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ச்சியடையும். கர்ப்பமடைவதற்கு முன் எடுத்து கொண்ட கலோரி அளவிலிருந்து, 100 முதல் 300 கலோரி வரையே கர்ப்பமடைந்த பின் பெண்களுக்கு தேவைப்படும். பொதுவாக கர்ப்ப காலத்தில் சாதாரண எடையுள்ள, ஒரு பெண்ணின் எடை 12 முதல் 16 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும்.

குறைந்த உடல் எடை கொண்ட பெண்களின் எடை, கர்ப்ப காலத்தில் 13 முதல் 18 கி.கி., வரை அதிகரிக்க வேண்டும். அதிக உடல் எடை கொண்ட பெண்கள் கர்ப்ப காலத்தில் 7 முதல் 11 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். கர்ப்பமடைந்த முதல் மூன்று மாதங்களுக்கு 1 முதல் 2 கி.கி., வரை உடல் அதிகரிக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்து கொண்டே வர வேண்டும். அதுவே இரட்டை குழந்தையாக இருந்தால் கர்ப்ப காலத்தில் 16 முதல் 20 கி.கி., வரை உடல் எடை அதிகரிக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு பின் ஒவ்வொரு மாதமும் 1 கி.கி., குறைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதா…

கர்ப்ப காலத்தில் உடல் எடை குறைவது நல்லதல்ல. அது கர்ப்பிணிகளையும் அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். ஏனென்றால் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், அவர்கள் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற் கும், சத்துக்கள் மிக அவசியம்.

கர்ப்ப காலத்தில் அதிக உடல் எடை காணப்பட்டால் என்ன செய்வது…

கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடை காணப்பட்டால், அதை குறைக்க முயற்சி செய்ய கூடாது. பல வகையான சத்துள்ள உணவுகளையும் சாப்பிடலாம். டாக்டரின் ஆலோசனை பெற்று, நடைபயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னரே இவற்றை செய்ய வேண்டும்.

உப்புக்கு தடை…
கர்ப்ப காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் தங்களது சாப்பாட்டில் குறைந்த அளவு உப்பு சேர்த்து கொள்வதே நல்லது. உப்புக்கள் தூவப்பட்ட நொறுக்கு தீனிகளையும் தவிர்க்க வேண்டும். டாக்டர் கீதா மத்தாய், வேலூர்.


கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் உடல் எடை எப்படி மாறுகிறது?
குழந்தை 3.5 கி.கி., நஞ்சுக்கொடி 1 முதல் 1.5 கி.கி., வரை ஆம்னியாட்டிக் திரவம் 1 முதல் 1.5 கி.கி., வரை மார்பக திசுக்கள் 1 முதல் 1.5 கி.கி., வரை ரத்த ஓட்டம் 2 கி.கி., பிரசவ காலத்திற்கான கொழுப்பு சேமிப்பு மற்றும் 2.5 முதல் 4 கி.கி., வரை தாய்ப்பால் கொடுத்தல், கர்ப்பப்பை விரிவு 1 முதல் 2 கி.கி., வரை .


***
thanks jimdo
***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "