...
"வாழ்க வளமுடன்"
10 மே, 2011
மாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு
அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.
ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.
அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.
தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.
அப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.
`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.
அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.
சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.
`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.
உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.
தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது.
நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.
அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.
இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது.
`தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.
மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.
***
பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.
தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.
நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க…’ என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.
பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.
***
இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?
முதலில் மாமியார்களுக்கு… மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.
`நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள்.
பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள்.
நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள்.
மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள்.
பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல.
அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள்.
நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.
***
இனி, மருமகள்களுக்கு…
டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.
எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.
எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.
`மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.
வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.
அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.
சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.
வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.
அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.
***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"
ஒளிமயமான எதிர்காலம்… அமைத்துக் கொள்ள வழி !!!
சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் முழுக்கவனத்தைம் செலுத்துபவனே அதிமேதையாகிறான். தான் அதிமேதை என்பதற்காக சிறிய விஷயங்களையும் கவனிக்காது அலட்சியம் செய்பவன் தோல்வியை அடைகிறான். வாழ்வின் நுட்பமான இத்தகைய சில வழிமுறைகளைத் தெரிந்து செயல்படும்போது ஒளிமயமான வாழ்வைபெறலாம்.
உண்மை ஒரு கூரிய கத்தி முனையை போன்றது. அதை உபயோகிக்கத் தெரியாமல் உபயோகித்தால் நம் கையையே பதம் பார்த்து விடும். உண்மையையும் சில இடங்களில் மறைத்தே ஆக வேண்டுமாயின் அதற்காகத் தயங்கக் கூடாது. அதனால், யாருக்கும் தீமை நேராவிட்டால் அவ்வாறு மறைப்பதில் தவறேதுமில்லை.
***
அறிவு வேறு, உத்தி வேறு
அறிவுக்கு எதைச் செய்வது என்பது மட்டுமே தெரிம். உத்திக்கு அதனை எவ்விதம் செய்தால் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியும். அதனால் தான், அறிவாளிகள் சிந்தனை மட்டும் செய்கிறார்கள். உத்தியைக் கையாள்பவர்களே வெற்றியும் பெறுகிறார்கள்.
அறிவானது நமக்கு சில விஷயங்களில் மட்டுமே நமது தேவையை பூர்த்தி செய்யும். ஆனால், உத்தியோ நமக்கு எல்லா விஷயங்களிலும் வெற்றியைத் தேடித் தரும். துன்பங்கள், தடங்கல்கள் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பது உத்தியே. இரண்டுக்கும் இடையே வெண்ணெய்க்கும், சுண்ணாம்புக்குமான வேறுபாடு உண்டு.
***
புதிய சிந்தனையுடன் செயலாற்றுங்கள்
நம் வாழ்வு வளமாக மாறுவதற்கு புதிதாக சிந்தித்த விஞ்ஞானிகள் தான் காரணம். இன்றைய நவீன வசதிகளான கப்பல்கள், விமானங்கள், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், நுல்நிலையங்கள், நகரங்கள், ரசாயனக் கண்டுபிடிப்புகள், கலைச்செல்வங்கள் என நாம் அனுபவிக்கும் அனைத்து வசதியான பொருட்களுக்கும் காரணம், அவர்களின் அன்றைய சிந்தனை நிறைந்த உழைப்பே.
***
இளமையை பயன்படுத்துங்கள்
மழைக்காலத்தில் ஆறுகள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலத்தில் வற்றி விடுகின்றன. அதுபோன்ற இடங்களில் உள்ளவர்கள் கோடைகாலத்தில் அணைக்கட்டுகள் முலம் தங்களுக்கு தேவையான நீரைத் தேக்கி வைக்கிறார்கள். இளமை என்னும் கிணறு எப்போதும் சுரந்து கொண்டிருக்கும் என்று எண்ணி, இளைஞர்கள் தங்கள் ஆற்றல்களை வீண்விரயம் செய்து விடக்கூடாது. அந்த கிணறு வறட்சியடைய ஆரம்பித்ததும் தான் அவர்களுக்கு தங்களது ஆற்றலின் மதிப்புத் தெரிய வரும். நம் உடல், முளை ஆகியவற்றின் ஆற்றல் என்ற ஆறானது முதுமைபருவத்தில் வற்ற ஆரம்பித்து விடுகிறது. ஆனால், இளமையில் அதைச் சீராக செலவிட்டு வருவோமாயின், கோடைக்காலத்திற்காக அணைக்கட்டுக்களில் நீரைத் தேக்கி பயன்படுத்துவது போல, முதுமையிலும் நாம் இளைஞர்கள் போன்று கம்பீர வலம் வரலாம்.
***
நல்ல புத்தகங்களே நல்ல நண்பன்
நண்பர்களின்றி தனித்து இருபவர்களுக்கு புத்தகமே நிஜமான நண்பன். உங்கள் ஆற்றலை தேவையான காரியங்களில் மட்டும் பயன்படுத்துங்கள். உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள். ஓய்வு நேரங்களில், வாழ்க்கையை மேம்படுத்த உதவும் பயனுள்ள பயிற்சி முறைகளை மேற்கொள்ளுங்கள். குறித்த நேரத்தில் குறித்த வேலையை செய்யுங்கள். நீங்கள் சொல்ல விரும்பும் கருத்தை, சுருங்கச் சொல்லி விளங்க வையுங்கள்.
ஒருவனுக்கு எப்போது கடமை உணர்ச்சி ஏற்படுகிறதோ, அப்போதே அவனது வாழ்க்கை பாதையும் மென்மையாக மாறுகிறது. கடமையிலிருந்து அணுவளவேனும் அடிபிறழாது நின்று அவன் தன்னுடைய துன்பங்களையெல்லாம் விரட்டுகிறான். அவனது நல்ல எண்ணங்களால் மேலான உரிமைகள் எல்லாம் தாமாகவே அவனை வந்தடைகின்றன.
***
thanks படித்ததில் பிடித்தது
***
"வாழ்க வளமுடன்"
Labels:
பொது அறிவு,
வாழ்வின் வெற்றிக்கு வழிகள்
நீங்கள் `அம்மா செல்லமா’..!
ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். பக்குவமான மனநிலையையும் இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.
தென்றல் வீசும்போதும், அரும்பு மலரும்போதும் அதை பற்றி யோசித்திருக்க மாட்டோம். அதை போல் தாயின் அரவணைப்பும் இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம் தான்.
ஒரு தாய் தன் பிள்ளைகள் என்னதான் தவறே செய்தாலும், அவர்களை அரவணைத்தே செல்வாள். பள்ளிக்குச் செல்லும் போது மகளை குளிப்பாட்டி, தலை முடித்து, சிங்காரித்து அனுப்புவாள்.
அவள் களைந்து போட்ட உடைகளை துவைப்பாள். அவளுக்கு தேவையான ருசியான உணவைத் தயார் செய்து கொடுப்பாள். அவளது முதுகைத் தட்டிக் கொடுத்து செல்லமாகத் தூங்க வைப்பாள்.
ஆனால், ஒருநாள் தாய் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட, தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மகள். அப்போது தான் அம்மாவின் பணிவிடைகள் மகளுக்குத் தெரியத் தொடங்கும்.
பருவ வயது பெண்களுக்கு அம்மா மேல் அவ்வளவாக பிரியம் வருவதில்லை. இதற்குக் காரணம், காலத்திற்கு ஏற்ற படி அம்மாக்கள் சிந்தித்து செயல்படாமல் இருப்பதுதான். மகள் வளர்ச்சியில் எந்த தாய்க்குத்தான் மகிழ்ச்சி இருக்காது?
அந்த மாதிரியான காலகட்டத்தில் அட்வைஸ் என்ற பெயரில் அள்ளிவிடும் அம்மாக்கள் இவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.
இன்னும் சில அம்மாக்கள் தங்கள் இளமைக்காலத்தில் தங்களால் முடியாமல் போன சாதனைகளை மகள் வழியாக நிறைவேற்றி பெருமைபட விரும்புவார்கள். இந்த திணிப்பு பிடிக்காத பிள்ளைகள் அம்மாவை எரிச்சலாய் நோக்கத் தொடங்குவது இந்த இடத்தில் இருந்து தான்.
ரசனைகள், விருப்பங்கள் தலைமுறைக்கு தலைமுறை மாறிக் கொண்டே இருக்கும் என்பதை அம்மா-பெண் இருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.
பிரபல பாடகி அவர். தன் மகளையும் தன்னைபோல் பாடவைக்க விரும்பினார். ஆனால் மகளுக்கு பாட்டில் ஆர்வம் இல்லை. பாட்டுக்கேற்ற குரல் வளமும் மகளுக்கு இல்லை. இதனால் தன் மகள் விரும்பிய நாட்டியத்துறையில் இணைத்தார். இந்தமாதிரி அம்மாக்கள்தான் இன்றைய இளம் பெண்களின் பிரியத்துக்குரியவர்கள்.
அம்மாவை நிறைவு பெற வைக்க அவள் கூட உட்கார்ந்து உங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டாலே போதும். உங்கள் சுமையில் பாதியை அவள் இதயத்தில் சுமக்கத் தொடங்கிவிடுவாள்.
பல குடும்பங்களில் சிக்கல்கள் உருவாக முக்கிய காரணமே, அம்மா-பெண்ணிடையே போதிய தகவல் தொடர்பு இல்லாதது தான்.
இதுவே நீடித்தால் ஒரு கட்டத்துக்கு பின் அம்மாவிடம் எதையுமே சொல்ல அவசியமில்லை என்கிற `பெரிய மனுஷித்தனம்’ பிள்ளைகளிடம் வந்து விடும். இது தேவையற்ற இடைவெளியை அம்மாவிடம் ஏற்படுத்தி விடும்.
`உனக்கு ஒண்ணும் தெரியாது… சும்மாயிரு’ என்று சொல்லும்போது அம்மா மனதளவில் புண்பட்டு விடுகிறாள். இதுவே பெரிய குறையாக நாளடைவில் அவளுக்குள் வளர்ந்து விடுகிறது. உணர்வு ரீதியாக எபோதும் அம்மாவை மனதளவில் பாதிக்கும்படி பேசிவிடக்கூடாது.
வலி காணும் மனதுக்கு மிகச்சிறந்த மருந்தாக இருப்பவள் தாய் தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நீங்கள் தப்பே செய்து விட்டு வந்தாலும் ஒருபோதும் அம்மா உங்களை விட்டுக் கொடுக்க மாட்டாள்.
அவள் தான் அம்மா. இந்த அம்மாவை புரிந்து கொண்டாலே இருவருக்கும் இடையில் ஒரு அழகான சிநேகம் பூத்துக்குலுங்கத் தொடங்கி விடும்.
***
தேங்க்ஸ் vayal
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
படித்ததில் பிடித்தது,
பெண்கள் நலன்
ஆனந்த வாழ்க்கைக்கு பயனுள்ள `20′ டிப்ஸ்
நல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும்.
அதற்கு என்ன செய்யலாம்?
பயனுள்ள 20 டிப்ஸ் :
1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.
2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.
3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.
4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!
5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.
6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.
7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.
8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.
9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.
10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.
11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.
12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…
13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.
14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.
15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.
16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.
17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.
18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.
19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.
20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.
***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"
பெண்களைத் தாக்கும் `நிரோடிக்!’
திருமணத்திற்கு பின்னர் பெண்களைத் தாக்கும் மனநோய்களில் முக்கியமானது நிரோடிக் அச்சம்! இந்த நோய் உள்ள பெண்கள் பார்ப்பதற்கு சாதாரணமாக இருப்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். ஆனால் மனதுக்குள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
தினசரி வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் அச்சப்படுவார்கள். குறிப்பாக விபத்து நடந்த இடத்தை பார்க்கவோ அல்லது விபத்தில் சிக்கியவர்களின் உடலைப் பார்த்தோ மிகவும் பயப்படுவார்கள்.
ரத்தத்தை கண்டால் வாந்தி, மயக்கம் வரும். இதனால் உடல்ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை எதிர்கொள்வார்கள். இதன் விளைவாக உடலில் வியர்வை, நடுக்கம், விரைவான இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். சிறுகுடல் பாதிக்கப்படும். கொந்தளிப்பான உணர்வால் மூர்ச்சை உண்டாகும்.
* இப்படி பயப்படும் பெண்கள் முதலில் வாழும் முறையை மாற்றவேண்டும். பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும்.
* பயப்பட வைக்கும் சூழ்நிலையை எதிர்த்து போராடும் மனநிலையை அவர்களுக்கு உருவாக்க வேண்டும். எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று அவர்கள் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
* தனிமையில் இருந்தால் பயமாக இருக்கிறது என்றால் அதை தவிர்ப்பது நல்லது. அச்சம் தரும் சந்தர்ப்பங்களை குறைத்துக் கொள்ளவேண்டும்.
* பள்ளிக்கு செல்லும் குழந்தை வீடு திரும்பும் வரை பயப்படுவது, கணவரை நினைத்து கவலைப்படுவது ஆகியவை தேவையில்லாத பயம் என்பதை உணர வேண்டும்.
* எது நடந்தாலும் நன்மைக்கே என்ற மனப்பான்மையை உருவாக்க வேண்டும். எதையும் பாஸிட்டிவ்வாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
* தினமும் யோகா, தியானம், இசை ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.
* மனதில் அச்சம் தோன்றும்போது ஏதாவது பாடலை பாடலாம். எப்போதும் நமக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் அச்சம் தரும் சிந்தனை குறையும்.
* இவை அனைத்தையும் விட, குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதனால் மனதில் அச்சம் குறையும்.
* அச்சத்தால் உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தால் உடனே மருத்துவரிடம் செல்லவும்.
***
thanks bing
***
"வாழ்க வளமுடன்"
Labels:
சுகமாக வாழ,
மருத்துவ ஆலோசனைகள்
உடல் அழகுக்கு தேவையான ரகசியம்
சிவப்பு அழகு வேண்டுமா? என்று கேட்டு, எத்தனையோ வகையான கிரீம்கள் விளம்பரம் செய்யப்படுகின்றன!
உடற்பயிற்சியே செய்யாமல், நொறுக்குத் தீனிகளையும் கைவிடாமல், உடல் எடை குறையும் என்றுகூறி விதவிதமான மாத்திரைகள் தைலங்கள் விற்பனை யாகின்றன!
எப்போதும் ஒலி ஒளிபரப்பாகும் அழகு குறிப்புகளைப் பார்த்து, அதை அரைகுறையாக கடைபிடித்து உலக அழகி ஐஸ்வர்யாராய் போல் ஆக வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள்.
அப்படி ஆசைப்படுகிறவர்களுக்கு தம் உடலில் இருக்கும் ஒரு பிரதான உறுப்பே அழகு, ஆரோக்கியத்தின் ஊற்று என்பது தெரியுமா?!
மனித உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. மனித உடலில் இருக்கும் பஞ்ச பூதங்கள் பிரபஞ்ச சக்தியிலிருந்து தனக்கு தேவையான பஞ்ச பூத சக்தியை வாங்கி உடலை புத்துணர்ச்சி யுடன் வைத்துக் கொள்கின்றன.
எப்படி யென்றால்ஞ் நம் தோலுக்கடியில் மிக துல்லியமான பாதை ஒன்று உள்ளது. இதை உயிர்ச்சக்தி பாதை என்று கூறுவார்கள். இதன் வழியேதான் பஞ்ச பூத சக்தி ஊடுருவி சென்று உறுப்புகளைச் சேரும். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு நேரத்தில் மட்டுமே இந்த உயிர் சக்தி பிரதான மாய் செல்லும்.
உதாரணமாக நுரையீரலுக்கு அதிகாலை 3 to5 மணி, மண்ணீரலுக்கு காலை 9.11 மணி. இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் குறிப்பிட்ட நேரம் வகைசெய்யப்பட்டிருக்கிறது. நாம் உண்ணும் உணவு ஜீரணம் ஆவதற்கான செரிமான செயலாக்கம் வயிற்றில் மட்டுமே நடைபெறுவதில்லை. செரிமான செயலாக்கம் ஆரம்பிக்கும் இடம் வாய். வாயில் உள்ள உமிழ்நீர்தான் செரிமானத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது. உமிழ்நீரில் இருக்கும் நுண்கிருமிகள் உணவில் கலந்து செரிமான வேலையை துவங்கும். மனிதனின் உடல் பஞ்சபூத கலவை என்பதுபோல நாக்கிலும் பஞ்சபூதங்கள் இருக்கின்றன.
இதனால் மிக நிதானமாக நாக்கின் எல்லா பகுதியிலும் உணவுபடும்படி முழுக்கவனம் செலுத்தி மென்று உண்ணுதல் வேண்டும். ஒவ்வொரு பஞ்சபூதமும் ஒரு சுவையோடு தொடர்பு உடையது. நெருப்பு கசப்பு சுவையுடனும், மண் இனிப்பு சுவையுடனும், காற்று – துவர்ப்பு மற்றும் காரச் சுவையுடனும், நீர் உப்பு சுவையுடனும், ஆகாயம் – புளிப்பு சுவையுடனும் தொடர்புடையது. இவைகளை நாம் புரிந்து கொண்டு சாப்பிட பழகிக் கொண்டால் குறைவாக சாப்பிட்டாலே நம் உடலுக்கு போதுமான சக்தி கிடைத்துவிடும். உதாரணமாக 4 இட்லி சாப்பிடுபவர்களுக்கு 2 இட்லியே போதுமானதாக இருக்கும்.
அழகையும், ஆரோக்கியத்தையும் விரும்புகிறவர்கள் காலை உணவை 7 7.30க்குள் மேலே சொன்ன முறைப்படி நிதானமாக, மென்று சாப்பிட வேண்டும். சமைக்காத உணவுகள், பழங்கள், காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய் மற்றும் ஊறவைத்த பருப்பு வகைகள் போன்றவைகளை காலை உணவில் சேர்க்கவேண்டும். பருப்பு வகைகளை நன்றாக அலசி முதல் நாள் இரவே மண் சட்டியில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் 7 மணிக்கு அந்த தண்ணீரை பருகிய பின்பு ஒவ்வொன்றாக கடித்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடலுக்கு என்ன பலன்? வயிறு பிரபஞ்சத்திலிருந்து சக்தியை காலை 7 முதல் 9 மணிவரை பெறுகிறது. அதனால் 7 மணிக்கு ஆரம்பித்து நிதானமாக 7.30க்குள் காலை உணவை மென்று முடிக்க வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்துதான் தண்ணீர் பருக வேண்டும். பின்பு 7.45லிருந்து காலை 11 மணி வரை தண்ணீர் கூட பருகக்கூடாது. ஏனென்றால் மண்ணீரல் சக்தியை உள்வாங்கும் நேரம் காலை 9.11 வரை. இது மிக அளப்பரிய சக்தியாகும். அந்த நேரத்தில் பிரபஞ்ச சக்தி அதற்கு முழுமையாக கிடைக்க, அந்த நேரத்தில் எந்த உணவும் உண்ணாமல் இருக்க வேண்டும். மண்ணீரல் பஞ்சபூதத்தில் மண்ணை சார்ந்தது. மண்ணீரல் சக்தியை பெற்று உடலில் சேமித்தால் அது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றும். அப்படி நச்சுக்கள் வெளியேறும்போது நம் தோல் அதற்குரிய மினுமினுப்பை பெறும்.
அழகு தானாக வரும். இதை பின்பற்றினால் 6 மாதத்திற்குள் உடலில் நல்ல மாற்றங்கள் நிகழும். மண்ணீரலின் சக்தி உடலுக்குள் பல விதங்களில் பயன்படும். ஒரு சில நேரங்கள் சாப்பிடாமல் இருந்தாலும் இந்த மண்ணீரல் உடலுக்கு தேவையான சக்தியை மாற்றி கொடுக்கும். இதைதான் சித்தர்களும், முனிவர்களும் பின்பற்றினார்கள். அவர்கள் முதலில் மண்ணீரலின் சக்தியை சேமித்து பின் வருடக்கணக்கில் தவத்தில் மூழ்கிவிடுவார்கள். அப்போது மண்ணீரல்தான் தேவையான சக்தியை உடலுக்கு அளித்துக்கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் நம் உடலில் பிற உறுப்புகள் தொய்வடையும்போது மண்ணீரல் தன் சக்தியை அதற்கு தேவையான சக்தியாக மாற்றிக் கொடுக்கும்.
உதாரணமாக சிறுநீரகம் பஞ்ச பூதங்களில் நீரை சார்ந்தது. சிறு நீரக செயல்பாடு குறையும்போது மண்ணீரல் அதற்கு தேவையான நீர் சக்தியாக மாறி உதவும். மதிய உணவை 12 மணிக்குள்ளும், இரவு உணவை 78 மணிக்கும் சாப்பிட வேண்டும். மென்று சாப்பிட்டு 15 நிமிடம் கழித்து தண்ணீர் பருக வேண்டும். குறைந்தது 3 மணி நேரம் கழித்துதான் தூங்க வேண்டும். சாதாரணமாக 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது நல்லது. இவ்வாறு செய் தால் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணலாம்.
***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"
Labels:
அழகு குறிப்பு,
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது
பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?
ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல… ஹாட்டான நம்ம ஊர் பருவநிலையில் நம் வியர்வை நாற்றம், உடனிருப்பவர்களுக்கு ஒருவித முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும். அதனாலேயே பெர்ஃப்யூம்கள் பயன்படுத்துவதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை.
சரி பெர்ஃப்யூமை வாங்குவதற்கு முன்பு எதை எதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்?
மின்னுவதெல்லாம் பொன்னல்ல! என்பதை முதலில் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.
பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமை செலக்ட் செய்யக் கூடாது.
பெர்ஃப்யூம் தயாரித்த கம்பெனி தரமான கம்பெனியா என்று முதலில் கவனிக்க வேண்டும்.
எக்ஸ்பயரி ஆகும் தேதியையும் முதலில் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை முகர்ந்து பார்க்கும் போது, பெர்ஃபியூம் பாட்டில் மூடியிலேயே சிறிது அடித்து பார்க்க வேண்டும்.
நிறைய பெர்ப்யூமை அடித்து ஸ்மெல் செய்து பார்க்கக் கூடாது.
தேவைப்பட்டால் 2 அல்லது 3 தடவை மட்டுமே பீய்ச்சியடித்து டெஸ்ட் ஸ்மெல் செய்து பிறகு தேர்ந்தெடுக்கலாம்.
***
பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள் இருக்கின்றன?
சாக்லெட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என்று எக்கச்சக்க நறுமணங்களில் பெர்ஃப்யூம்கள் கிடைக்கின்றன. ஆயில் ஸ்கின், ட்ரை ஸ்கின், நார்மல் ஸ்கின்னிற்கு ஏற்றவாறு செலக்ட் செய்யலாம்.
ஞாபகம் இருக்கட்டும், பாடி ஸ்பிரே வேறு… பெர்ஃப்யூம் வேறு!
பாடி ஸ்ப்ரே எனும் வாசனை திரவியத்தை நேரடியாக நம் உடலில்தான் அடித்துக் கொள்ள வேண்டும். உடைகளில் அடித்துக் கொள்வது சரிவராது.
அதே போல் பெர்ஃப்யூம் என்னும் வாசனை திரவியத்தை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால், பெர்ஃப்யூமில் இருக்கும் ஆசிட் கன்டெண்ட் நேரடியாக உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும்.
அதே போல் துணிகளிலும் அடிக்கக் கூடாது. துணிகளில் உள்ள வண்ணங்கள் அழிந்து வெளுத்துவிடும். இதற்கும் காரணம் இந்த ஆசிட் கன்டெண்ட்தான்.
***
வேறு எப்படித்தான் இந்த பெர்ஃப்யூமைப் பயன்படுத்துவது?
சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமை தெளித்து உடைகளில் தடவிக் கொள்ளலாம். தரமான இம்போர்ட்டட் பெர்ஃபியூம்களில் இந்த பாதிப்புகள் ஏதும் இல்லை.
பெர்ஃப்யூம் பாட்டில்களின் ஸ்டிக்கரிலேயே பயன்படுத்தும் முறை இருக்கும். அதைப் படித்து ஃபாலோ செய்தாலே போதும்.
***
கவனத்தில் வையுங்கள்:
சரிகை, ஜமிக்கி போன்ற வேலைப்பாடுடைய உடைகளில் கட்டாயம் பெர்ஃப்யூமை அடிக்கக் கூடாது. அவை கறுத்து விடும்.
சிலருக்கு அத்தர் வகை வாசனை திரவியங்கள் ஒத்துக் கொள்வதில்லை. அக்குள் பகுதியில் போடும் போது வேர்க்குரு போல் சிறு சிறு கட்டிகள் வரலாம். ஒத்துக் கொள்ளாத, அலர்ஜி ஏற்படுத்தும் பெர்ஃப்யூம்களை உபயோகிக்கக் கூடாது.
எந்தவொரு புது வகை பெர்ஃப்யூமையும் முதன் முதலாக உபயோகிக்கும் போது அதை மணிக்கட்டு பகுதியில் அடித்து இரண்டு நிமிடங்கள் விட்டுப் பாருங்கள்.
எரிச்சல், தோல் அலர்ஜி ஏதும் இல்லை என்றால் அந்த பெர்ஃப்யூமை நீங்கள் இனி உபயோகிக்கலாம்.
***
பெர்ஃப்யூமை எங்கெங்கே பயன்படுத்த வேண்டும்?
நம் உடம்பில் வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களான அக்குள், கழுத்தின் பின்புறம் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். ஆனால் கழுத்து முடியிலோ செயினிலோ, படாதவாறுதான் அடித்துக் கொள்ள வேண்டும்.
***
ஆண்களுக்கு மிகவும் பிடித்த பாடி ஸ்பிரே எது தெரியுமா?
Axe
*
பெண்களின் ஃபேவரைட்?
ஜோவன் வொய்ட் மஸ்க்
மேக்ஸி ப்ளூ லேடி
***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"
Labels:
அழகு குறிப்பு,
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "