...

"வாழ்க வளமுடன்"

16 செப்டம்பர், 2010

என் தளத்தை அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பரே!

நன்றி நண்பா ( மோகன் குமார் ).நன்றி மோகன் குமார். என் தளத்தை பற்றி உங்கள் தளத்தில் கூறி என்னையும் என் தளத்தையும் அனைவரும் அறியும் படி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பரே.

***


வலைச்சரம் ( http://blogintamil.blogspot.com/ ) என்ற தளத்தில் என் பதிவையும் தளத்தையும் அறிமுகம் செய்த நண்பாருக்கு என் உளமார்ந்த நன்றி.

*

வானவில்.. ஏழு ஸ்வரங்களுக்குள் எனற தலைப்பில் என்னுடைய தளத்தை அறிகம் செய்து உள்ளார்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

***


////மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

பிரபா என்பவர் எழுதும் ஆழ் கடல் களஞ்சியம் என்ற ப்ளாக் பல ஹெல்த் தகவல்கள் சொல்கிறது. இதோ குழந்தை பிறந்த உடன் செய்ய வேண்டியவை பற்றி சொல்லும் பதிவு..
//////


அதுவும் மருத்துவம்/ ஹெல்த் என்று கூறி அறிமுகம் செய்ததுக்கு மிக்க நன்றி நண்பா.

***

"வாழ்க வளமுடன்"

அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்...

சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இன்றைய இளைய தலைமுறையினரை பாகுபடுத்த முடியாது.பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில் வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.

*


அழகாக உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையினருக்கு குட்டித் தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது.

*

இது உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டதற்கான அடையாளம்.

*


இப்படி அடிவயிற்றில் கொழுப்பு படிந்த பிறகும்கூட 10-ல் 9 பேர் அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார் களாம். இதனால் பல விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.

***


வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது.

12 ஆயிரம் ஐரோப்பிய இளைஞர்களிடம் செய்யப்பட்ட சோதனையில் கிடைத்த முடிவுகள் வருமாறு:


1. இளைஞர்கள் 10க்கு 9 பேர் வரை அடிவயிற்றில் சேரும் கொழுப்பைப் பற்றி சட்டை செய்வதில்லை.

*

2. இதற்கு முக்கிய காரணம் அதன் விளைவுகளைப் பார்க்கவோ, உணரவோ முடியாததுதான்.

*

3. ஆனால் இந்த அடிவயிற்றுக் கொழுப்பு நாளடைவில் வேறு சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

*

4. உட்புறமாக நாளங்களைச் சுற்றிப் படியும் கொழுப்பானது உடல் உஷ்ணத்துக்கு வழிவகுக்கும்.

*

5. நாளடைவில் ரத்த நாளங்களைப் பாதிக்கும். அதன் வழியாக கல்லீரலையும் தாக்கும் அபாயம் உள்ளது.

*

6. இதனால் உற்சாகக் குறைவு, உடற்பாதிப்புகள், சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.

*

7. இந்த பாதிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிட்டால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதயவியாதி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

*

8. இளைஞர்கள் சீரான இடையளவு பராமரிப்பு:

பெண்கள் 31.5 அங்குலம் (80 சென்டிமீட்டர்),

ஆண்கள் 35 அங்குலம் (90 சென்டிமீட்டர்)

*

9. இந்த சராசரி அளவை கடந்தவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.

*

10. நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதும்,

எண்ணெயில் பொறித்த உணவுகளையும் இறைச்சி முட்டை போன்ற உணவுகளையும் குறைய்த்துக் கொண்டு,

உடற்ப்பயிற்ச்சி செய்வதும் உடற்கொழுப்பைக் குறைக்க உதவும் .

*

வயிற்றைக் கவனிக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.


***

நன்றி மாலை மலர்.

***

"வாழ்க வளமுடன்"

மாதவிடாய் டென்சன் - திர்வு !

பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு.ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome..

அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!

***

மாதவிடாயின் அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள்:


சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும்.

*

இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது.

*

முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது.

*

மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

*

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான்.

*

செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும்.

*

இளம் பெண்களின் ஒற்றைத் தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும்.

*

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும்.

*

காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்...

*

வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

*

பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.
மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும்.

*

இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும்.

*

திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம்.

*

மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும்.

*

கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

*


ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை.

*

கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து எண்டோமிட்ரியோஸிஸ் எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம்.

*

எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது.

*

எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!

*

பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார்.

*

இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது.

*

இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

*

அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஹைம்போதலாமஸ் எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்!

*

சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ஹைபோதலாமஸ் எனும் பகுதி தான்!

*

பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும்.

*

பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும்.

*

இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

*

மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்.

***

உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம்:

1. கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

*


2. உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.

*


3. PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்றுபடும்.

*

4. சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.

*


5. மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.

*


6. காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.

*


7. 7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.

*


8. இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

*


9. மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.

*


10. மனஅழுத்தம் நீங்க வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!

*


இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!

றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!

***

by- ஜனனி.
நன்றி - மருத்துவர் கீதா ஹரிப்பிரியா.
நன்றி - குமுதம் ஹெல்த்

***

"வாழ்க வளமுடன்"

காலை கவனிப்பதுண்டா?

காலை கவனிப்பதுண்டா? எல்லா பாரத்தையும் தாங்குதே:

உடலின் மொத்த பாரத்தையும் தாங்குவது கால் தான். ஆனால், இதனை பராமரிப்பதில் எத்தனை பேர் அக்கறை காட்டுகின்றனர் என்பது கேள்விக்குறி தான்.

தினமும் காலை, மாலை வேளையில் குளிக்கும் போது, காலை சுத்தமாக கழுவிக்கொள்வதில் இருந்து, வெளியில் போய் விட்டு வீடு திரும்பினால், காலை சுத்தம் செய்வது வரை மிக முக்கியமானது.


ஆனால், காலை சரியாக கூட கழுவத்தெரியாதவர்கள் இல்லாமல் இல்லை. கால் வழியாக பாக்டீரியா கிருமிகள், உடலில் புகுவதற்கு இடமுண்டு;

அதுபோல, பூச்சி கடித்து, அதன் மூலம் நோய் வரும் ஆபத்தும் உண்டு. அதனால் , கால் மீது அதிக கவனம் தேவை.

***


புறக்கணிப்பதா? :

உடலில் மற்ற பாகங்களை போல கால் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், அதை அவ்வப்போது பராமரித்து வர வேண்டும். எங்காவது இடித்துக்கொண்டாலும், புண் ஏற்பட்டாலும், அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

காலில் ஏதாவது அலர்ஜி ஏற்பட்டால், தோல் தடித்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடக்கூடாது. தோல் சிகிச்சை நிபுணரிடம் காட்டி சிகிச்சை பெற வேண்டும்.

***


வறண்டு போவதேன்? :

கால்களில் தான் அதிகமான வியர்வை சுரப்பிகள் உள்ளன. அவற்றில் சில எண்ணெய் சுரப்பிகளும் அடங்கும். அதனால் தான் கால் எப்போதும் வறண்டதாகவே இருக்கிறது.

அதேசமயம், உள்ளங்கால்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், எண்ணெய் பசையுடன் வியர்வை வெளியேறுவதில்லை; வறண்டு போவதும் இல்லை.

பொதுவான பாதிப்பு பெரும்பாலும் கோடை காலத்தில் கால்களில் பாதிப்பு வராது; ஆனால், மழைக் காலத்தில் தான் பாதிப்பு அதிகம். பெண்களுக்கு சேற்றுப் புண் வருவதுண்டு.


கால் விரல்களில் இடுக்குகளில் வியர்வை தங்குவதாலோ, அதிக நீர் கோர்த்தாலோ தடித்துப்போய் காளான் குடை போல பாதிப்பு வரும்.

அதிக புழுக்கம், அதிக மழை நீர் படுவதால் இப்படி ஏற்படும். சிலருக்கு சொறி, சிரங்கு போன்றவை வரும். வழக்கமாக காலுறை அணிவதில் கவனம் செலுத்த வேண்டும்;

பெரும்பாலும் பருத்தியினாலான காலுறைகளை அணிய வேண்டும். வியர்வை தங்காமல் இருக்கும் வகையில் அணிய பருத்தி காலுறை தான் சிறந்தது. நைலான் காலுறை அணிந்தால், அவ்வப்போது சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.

***


காலாணி வருவதேன்? :

கால் எப்போதும் உராயக்கூடியதும், அழுத்தம் ஏற்படுத்திக் கொள்வதுமாகத் தான் இருக்கும். அதனால் தான், காலாணி ஏற்படுகிறது.

மூட்டு வலி இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு காணப்படும். காலின் வெளிப்பகுதியில் உள்ள தோல் அடர்த்தியாகிறது; அதனால், வலியும் ஏற்படுகிறது. சீரான வடிவத்தில் உள்ள காலில் காலாணி வராது;

அப்படியே வந்தாலும் வலி அதிகமாக இருக்காது. அப்படியில்லாதவர்களுக்கு தான் காலாணி பாதிப்பு அதிகமாக இருக்கும். வெறுங்காலுடன் நடப்பது, காலில் அதிக அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்வது, பொருத்தமில்லாத செருப்பை அணிவது போன்றவை தான் இதற்கு காரணம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் காலை சில நிமிடங்கள் வைத்து கொண்டால் வலி குறையும். காலாணியும் வராது.நாற்றமெடுப்பதேன்? :

சிலருக்கு அதிகமான வியர்வை சுரக்கும். அதனால் காலில் நாற்றம் எப்போதும் குடிகொண்டிருக்கும். காலை சுத்தம் செய்வதில் குறைபாடு, அடிக்கடி செருப்பு போடாமல் நடப்பது போன்றவற்றாலும் இது ஏற்படும்.

காலுறை மாற்றாமல் தொடர்ந்து நாலைந்து நாள் பயன்படுத்துவதாலும் கால் நாற்றம் அடிக்கும். பனியன் , ஜட்டி மாற்றுவது போல, காலுறையையும் தினமும் மாற்ற வேண்டும்.

ஆனால் இதை பலர் செய்வதில்லை. காலுறையையும், ஷூவையும் சுத்தம் செய்வதும் இல்லை.


வளைந்த நகங்கள் கைகளை போல, கால் விரல்களையும் சீராக வைத்திருக்க வேண்டும். அதற்காக அவ்வப்போது சீராக்கிக்கொள்ளவும், சுத்தம் செய்யவும் வேண்டும்.

அப்படியில்லாவிட்டால், காலில் உள்ள நகங்கள் வளைந்தும், உடைந்தும் இருக்கும். இப்படி இருந்தால் காலில் செருப்பு போட்டு நடக்க முடியாது;

நகங்கள் வளைந்து இருப்பதன் மூலம் இடுக்குகள் வழியாக கிருமிகள் நுழைந்து விடும் ஆபத்தும் ஏற்படும்.

***


எப்படிப்பட்ட காலணி? :

செருப்பு, ஷூ வாங்கி அணியும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இறுக்கமானதோ, மிகவும் பெரிதானதோ அணியக்கூடாது.

அப்படி அணிந்தால் காலுக்கு வசதியாக இல்லாதது மட்டுமின்றி, பாதிப்பையும் ஏற்படுத்தும். காலில் மிகவும் இறுக்கமான காலணியை போடக்கூடாது.

அதனால் தான் பல பிரச்னைகள் வரும். ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு சரும பாதிப்பும் வரும். காலணி போல, காலுறைகளையும் கவனமாக தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

பருத்தி காலுறையை தவிர, மற்ற வகையில் தயாரிக்கப்படும் காலுறைகளை பயன்படுத்தினாலும் தினமும் அதை மாற்ற வேண்டும்.

***


சுத்தம் முக்கியம் :

காலுக்கு எப்போதும் சுத்தம் தான் மிக முக்கியம். குளிக்கும் போதும், வெளியில் போய்விட்டு திரும்பும் போதும் முழுமையாக கால்களை அலம்ப வேண்டும்.

குதிகாலில் தண்ணீர் படாமல் சிலர் காலை கழுவுவர்; அது தவறு.

***

by: vayal.
நன்றி vayal.


***

"வாழ்க வளமுடன்"

எப்போதும் “ஏசி” அறையிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும்.

வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

***


ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.


* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.


* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.


* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.

* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

***

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.


* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.


* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

***


எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் – டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

***


சர்வே சொல்லுது:

இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் – டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது.

இதனால், வைட்டமின் – டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம்; ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு.

ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு; ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

***


புற்றுநோயும் வரும்:

வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம்.

காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் – டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது.

வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும்; அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.


***

by; vayal.
நன்றி vayal.

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "