ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணிய கொடுத்து விட்டு, சுற்றி, ஒரு வைபவமாய் அதை கொண்டாடுவது தான் பாரம்பரியமாய் நம்மூர் கலாச்சாரமாக இருந்து வருகிறஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால், அவளுக்கு மஞ்சள் நீராட்டி, புது உடைகள் அணியது.
*
இப்படி ஒரு பெண் வயதிற்கு வரும் இந்த சம்பவத்தை நம்மூரில் பூப்பெய்தல், ருதுவாகுதல், வயதிற்கு வருதல் என்றெல்லாம் பல பெயர்களால் அழைக்கிறோம். மருத்துவத்திலும் இதற்கு ஒரு தனி பெயர் உண்டு. மெனார்கீ, (Menarche) பெண்ணின் மகபேற்று உருப்புக்கள் முதன்முதலாய் இயங்க ஆரம்பித்து விட்டன என்பதன் அறிகுறியாய், அப்பெண்ணின் ஜனன குழாயிலிருந்து உதிரப்போக்கு ஏற்பட ஆரம்பிப்பதை தான் மெனார்கீ என்கிறோம்.
*
இந்த உதிர போக்கு எங்கிருந்து எதற்காக வருகிறது தெரியுமா? ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே, அவள் அடி வயிற்றில் ஒரு பிஞ்சு கருப்பை + இரண்டு, சினைபைகளுடன் தான் ஜனிக்கிறாள்.
*
இந்த சினை பையினுள் அவளுடைய வாழ்நாளில் அவள் வெளியேற்ற வேண்டிய அத்தனை கருமுட்டைகளும் ஒதுங்கி இருக்கும். ஆனால் இவை எதுவுமே இயங்காமல் சிக்னலுக்காக காத்துக்கொண்டு, இருக்கும் இடமே தெரியாமல் கப் சிப் என்று அசைவற்று இருக்கும்.
*
இந்த பெண்ணின் மூளையில் பிட்யூட்டரி என்று ஒரு சுரபி உண்டு. இந்த சுரபி, அந்த பெண்ணின் உடலை நோட்டம் விட்டுக்கொண்டே இருக்கும். அவள் ரத்ததில் ஊரும் சத்து, அவள் உடம்பில் உள்ள கொழுப்பளவு, அவளது உயரம், மாதிரியான வளர்ச்சி குறிகளை இந்த பிட்யூட்டிரி பரிசோதித்துக்கொண்டே இருக்கும்.
*
அவள் போதுமான உயரத்தை எட்டி விட்டாள், அவள் ரத்தத்தில் போதுமான அளவு சத்துக்கள் ஊறத்தான் செய்கின்றன என்று பிட்யூட்டரிக்கு உரைத்தால் போதும், உடனே அது துரிதமாய், FSH, என்கின்ற சினைவளர்ப்பு ஹார்மோனை நேரடியாக ரத்தத்தினுள் சுரந்து விடுகிறது. இந்த ஹார்மோன் அந்த பெண்ணின் சினைபையினுள் போய் அங்குள்ள திசுவை தூண்டினால், உடனே அது, ஈஸ்டிரஜன், என்கின்ற இன்னொரு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
*
இந்த ஈஸ்டிரஜன் அந்த பெண்ணின் உடம்பு முழுக்க பரவி, அவளை மேலும் உயரமாக்கி, மார்பகங்களை வளர்விக்கிறது. அது வரை ஒடிசலாய் எலும்பும் தோலுமாய் இருக்கும் பெண், திடீரென்றூ பளிச்சென்றூ மின்ன ஆரம்பித்து, முக பருவெல்லாம் வர, உடம்பு பருமனாக, வளைவு, நெளிவுகளை பெற துவங்குகிறாள்.
*
இந்த மாற்றங்களை தூண்டும் அதே ஈஸ்டிரஜன் தான், அந்த பெண்ணின் சினைகளை முதிர்ச்சி அடைய செய்கிறது. இப்படி சினை முதிர்ச்சி அடைந்தால், அது டப் பென்று வெடித்து, சூல் கொள்ள தயாராகி விடும். சுலை சுமந்து போஷக்களிக்கவே கர்பப்பை என்கிற ஒரு பிரத்தியேக உருப்பிருக்கிறதே.
*
இந்த உருப்பின் வேலை, சினை பையிலிருது வெடித்து வெளியேறும், முட்டையை அப்படியே லாவகமாக கைபற்றி, தன்னுள் கொண்டு வந்து பதுக்கி பாதுகாப்பது தான். இப்படி பாதுகாக்கப்படும் முட்டையோடு ஆணின் விந்தணு கலந்துவிட்டால், கரு உருவாகி விடும். இப்படி உருவாகும் கருவிற்கு போஷாக்கு வேண்டுமே. நிறைய போஷாக்கு இருந்தால் தானே, கரு ஜம்மென்று சத்துக்களை உள்வாங்கி, ஸ்பஷ்டமாய் வளர்ந்து குழந்தையாய் வந்து இந்த பூலோகத்தில் அவதரிக்கும்.
*
மனித உடலில் போஷக்கு என்பது உதிரத்தில் இருந்து தானே கிடைக்கிறது. அதனால் கர்ப்பப்பையின் உள் தோளில் உள்ள ரத்த குழாய்கள் எல்லாம் ஸ்பான்ஞ் மாதிரி உப்பி, பெருத்து, புடைத்துக்கொள்ளும். இதனால், கரு உருவானல் அது சவுகரியமாய் சஞ்சரிக்க மெத்தையும் தயார். கருவிற்கு போஷக்களிக்கும் அதிக பட்ச ரத்த ஓட்டமும் தயார்!
*
இப்படி கர்பப்பை ரத்தமெத்தை ரெடி என்று சமிஞ்சை தந்ததும், டாண் என்று விந்தணு முட்டையை வெளியேற்ற, உடனே முட்டையை லபக்கென்று பிடித்துக்கொண்டு வந்து தன் மெத்தையில் பத்திரமாக கிடத்திக்கொள்ளும் கர்பப்பை!
*
இப்படி மெத்தையின் மேல் முட்டை வசதியாய் சாய்ந்து, தன்னோடு கூடிவிட விந்தணு வருகிறதா என்றூ காத்துக்கொண்டிருக்கும். விந்தணு வந்து முட்டையோடு சேர்ந்து கருவுருவானால் சரி. இல்லாவிட்டால், முட்டை காலாவிதியாகி, சூம்பிப்போய், சிதைய ஆரம்பித்துவிடும். இப்படி முட்டை வீணாகி போனால், ஒரு வேளை அது கருவானால் அதற்கு போஷக்கு அளிக்க அதுவரை தயார் படுத்தி வைத்த ரத்த மெத்தையும் வீண் தானே.
*
அதனால் முட்டையோடு, அந்த ரத்த மெத்தையிம் உரிந்து, வழிந்து வெளியேறி விடும். இப்படி முதல் முதலில் வெளியேரும் உதிரத்தை கண்டு தான், “ஓகோ, அப்படினா, இவ முட்டைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சிட்டா, இவளுடைய இனபெருக்க உருப்புக்கள் பூப்படைந்து பணியாற்ற ஆரம்பித்து விட்டன” என்று அதை கொண்டாடத்தான் விழா மாதிரியான வைபவங்களை நடத்துகிறார்கள் நம்மூர்காரர்கள்.
*
மனிதர்களை போல, நம்முடைய மிக நெருங்கிய பந்துக்களான, சிம்பான்சி, பொனோபோ ஆகிய மற்ற மனிதகுரங்குங்களுக்கும், இப்படி பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. என்ன, இந்த மிருகங்களுக்கு இந்த முதிர்ச்சி வந்த உடனே அவை துணை தேட ஆரம்பித்துவிடும். சட்டு புட்டு என்று இனபெருக்கத்தில் ஈடுபட்டு, வம்சத்தை விருத்தி செய்யும்.
*
ஆரம்பகால மனிதர்களிலும் இதே போக்கு தான் இருந்தது. பெண் பூப்படைந்து விட்டாள், அவள் அந்த பிரதேசத்தில் இருக்கும் தோதான ஆணோடு கூடி, குலம் வளர்த்தாள். அதற்கு மேல், இந்த உதிர போக்கை யாரும் பெரிது படுத்தவில்லை. இது அசுத்தம், இந்த சமயத்துல வீட்டுக்கு தூரமா தான் இருக்கணும், மதம் சார்ந்த சமாச்சாரங்களை பங்கேற்க்கக்கூடாது என்றெல்லாம் ஆரம்பகால மனிதர்கள் கருதி இருக்கவில்லை.
*
இன்றூம், உலகின் பல ஓரங்களில் வாழும் பழங்குடி மனிதர்களிடையே இந்த தன்மை இருந்து வருகிறது. அவர்கள் பெண் வயதிற்கு வருவதை தங்கள் வம்சா விருத்திக்கு உதவக்கூடிய ஒரு சந்தோஷ நிகழ்சியாக மட்டுமே கருதுகிறார்கள்.
*
ஆதிகால குடியானவ கலாச்சாரங்களில், இந்த மாதவிடாய் உதிரத்தை சேகரித்து, விவசாயத்திற்கான விதைகளை அதில் கலந்து ஊரவைத்து, பிறகு விதைகளை தூவினால் அமோக விளைச்சல் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இருந்ததாம்.
*
தாய் வழி சமூகமாய் மனிதர்கள் வாழ்ந்த காலம் வரை, மாதவிடாய் உதிரபோக்கை பற்றி யாரும் பெரிய அபிப்ராயங்கள் கொண்டிருந்ததாய் தெரியவில்லை.
*
ஆனால் ஆண்கள் ஆட்சி பொருப்பிற்கு வந்த பிறகு, பெண் வெறும் போக பொருளாகவும், பிரசவ யந்திரமாகவும் பயன்படுத்த படலானள். இந்த காலகட்டத்தில் தான் மனித கலாச்சாரத்தில் புது மாறுதல்கள் தலை தூக்க ஆரம்பித்தன.
*
பெண் நேரடியாக தன் துணைவனை தேர்தெடுக்கும் மரபு மாறி, அவள் பெற்றோர், தங்களுக்கு பிடித்த ஒருவனுக்கு அவளை ஒரு பொருளை போல கன்னிகாதானம் செய்து தரும் வழக்கம் உருவாக ஆரம்பித்தது.
*
இப்படி பெற்றோர், தங்கள் மகளை இன்னொருவனுக்கு தானமாய் தரும் பழக்கம் வந்த பிறகு, “என் மக வயசுக்கு வந்துட்டா!” என்று அறிவிக்கும் வைபவங்களும் நடைமுறைக்கு வந்தன. இப்படி புதிதாய் பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டி, புத்தாடை அணிவித்து, அலங்காரமெல்லாம் செய்து, “இந்த பெண் இப்போது இனபெருக்க தகுதியை அடைந்து விட்டாள்” என்று அறிவித்தால், அடுத்த முகூர்த்ததிலேயே, புதிதாய் பூப்படைந்த பெண்ணை கல்யாணமே செய்து கொடுத்து விடலாம்.
*
சின்ன ஊர்களில், குட்டி குட்டி இனக்குழுக்களாக மனிதர்கள் வாழ்ந்த காலத்தில், முறைப்பையன் வந்து ஓலை கட்டி, சீர் செய்து, பெண்ணை ”புக்” செய்துக்கொள்ளும் மரபுகளும் இருந்தன.
*
ஆஃப்ரிகா, அரேபியா போன்ற நாடுகளில் பெண் பருவம் அடைந்த உடனே, அந்த வீட்டின் வாசலில் ஒரு கொடியை கட்டி பறக்க விடுவார்களாம். அந்த கொடியை கவனித்து விட்டு, பெண் கேட்டு மாப்பிள்ளை வீட்டார் வரிசை கட்டி வருவார்களாம்.
*
இப்படி பெண் பூப்படைந்த உடனே திருமணமும் ஆகி, திருமணமான உடனே கருவும் உற்று விட்டால், பிறகு அவளுக்கு கர்பகாலம், முழுக்க மாதவிடாயே ஏற்படாது. குழந்தை பிறந்த பிறகு தான் மீண்டும் உதிரபோக்கு ஏற்படும். அதன் பிறகு அவள் குழந்தைக்கு பால் கொடுக்கும் அத்தனை மாதமுமே மாதவிடாயே ஏற்படாது. மகபேற்று காலத்தில் இல்லாமல், மற்ற காலத்தில் மட்டும் இருந்து தொலைத்ததால், மாதவிடாய் “இவள் இன்னும் கருவுரலை, பிள்ளை பெக்கலை” என்பதன் அறிகுறியாக கருதப்பட்டது.
*
அந்த கால மனிதர்களை பொருத்தவரை, பெண் என்றால் வெறும், பிரசவ யந்திரம் மட்டுமே. பெண்ணின் ஒரே பிறவிப்பயனே பிள்ளை பெற்று போடுவது தான் என்று மனிதர்கள் நினைத்த காலம் அது என்பதால் அவள் பிள்ளை பெறாமல் இருந்த காலம் எல்லாமே வீண் என்றே அவர்கள் நினைத்தார்கள். அதனால் மாதவிடாயை ஒரு வித மகபேற்று இயலாமையாகவே அவர்கள் கருதினார்கள்.
*
அதுவும் போக அந்த காலத்தில் மாதவிடாய் உதிரத்தை உரிஞ்சி உட்படுத்தும் வஸ்துக்கள் ஏதும் இருந்திருக்கவில்லை. பழங்குடி பெண்கள் சும்மாவே ஆடை அணியமாட்டார்கள். அதனால் மாதவிடாய் உதிரத்தை அவர்கள் சட்டை செய்யாமல் அப்படியே விட, “காலில் சிகப்பு கோடு கொண்டவள்” என்றே கன்னிப்பெண்களை அந்த கலாச்சாரத்தில் கூப்பிடுவார்களாம்.
*
ஆனால், யூதர்கள், பாரசீகர்கள், சமனர்கள், பௌதர்கள், ஹிந்துக்கள் மாதிரியான தந்தைவழி நாகரீகத்தில் எல்லாம், மனிதர்கள் அனைவரும் உடை அணிந்திருந்தார்கள், வீடுகளில் வசித்தார்கள். இந்த இன பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால், எல்லா இடத்தையும் ரத்தக்கரை ஆக்க வேண்டாமே, பிறகு சுத்தம் செய்வது கடினம்.
*
பேசாமல் உதிரம் நிற்கும் வரை ஒரே இடமாய் உட்கார்ந்து கிடக்கலாம், என்று இந்த இன பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுத்தம் கருதி பிறர் புழங்காத ஓரத்தில் கிடக்க ஆரம்பித்தார்கள். உதிர உரிஞ்சான்கள் இல்லாத அந்த காலத்தில் இதுவே சுகாதாரமான சுலபமான யுத்தியாகவும் இருந்திருக்கும். சதா வேலை என்று பம்பரமாய் சுற்றிய பெண்களுக்கு இது ஒரு சவுகரியமான ஓய்வுக்காரணமும் ஆகிவிட, பெண்கள் எல்லாம் மிக சாமர்த்தியமாய், “நான் தூரம்” என்று விடுப்பு எடுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள்.
*
ஆண்களும் தங்கள் பங்கிற்கு “பெண்கள் அசுத்தமானவர்கள்! அதனால் மதம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக்கடவது!” என்று முடிவு செய்தார்கள்.
*
இதெல்லாம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைவரம். 1960களில் பெண்களில் இனபெருக்க உருப்புக்கள் பற்றிய பல புது தெளிவுகள் ஏற்பட, பெண்களுக்கென்றே பிரத்தியேக உதிர உரிஞ்சான்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றின் உபயத்தால், அசுத்தமாகி விடும், என்ற அச்சமே இன்றி, பெண்கள் தம் பாட்டிற்கு உரிஞ்சானை மாட்டிக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்ற சுதந்திரத்தை பெற்றார்கள். இந்த சுதந்திரம் கிடைத்த அரை நூற்றாண்டிலேயே பெண்கள் மாபெரும் சாதனைகள் பலவற்றை புரிந்து பெண்மை ஒரு ஊனமல்ல என்பதை நிருபவித்தார்கள்.
*
இதற்கிடையில் மனித ஜனத்தொகையும் முன்பு எப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டு நிற்க, பூப்படைந்த உடனேயே பிள்ளைகளை பெற்று போட்டு, ஜனதொகையை மேலும் பெருக்கி தள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால் படித்தவர்கள் மத்தியில், “என் மக வயசுக்கு வந்துட்டா, அவ இனபெருக்கத்திற்கு தயார்” என்று அறிவிக்கும் வைபவங்கள் செல்வாக்கை இழந்தனர்.
*
அதுவும் போக உறவிற்குள்ளேயே திருமணம் செய்தால் இந்த கலப்பில் பிறக்கும் குழந்தைகளுக்கு வீரியம் குறைந்துவிடுகிறது என்பது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்துவிட, முறை பையன் என்று ஒரு சொந்த காரன் வந்து பரிசம் போடும் நடைமுறையும் மாறலானது.
*
கிராமங்களில் சின்ன குலங்களாய் வாழ்ந்த காலம் போய், நகர் புறத்தில் முற்றிலும் அன்னியர்களோடு வாழ்வது நடைமுறையான பிறகு, மகள் வயதிற்கு வந்ததை பிறரிடம் போய் சொல்லிக்கொள்வது, கொஞ்சம் அநாகரீகமாகவும் கருதப்பட, பூப்படைந்த பெண்களுக்கு பெரிய விழா எடுக்கும் தன்மை நகரங்களில் குறைய ஆரம்பித்து விட்டது. அதை போல, சேனிடரி நேப்கின்களின் உபயத்தால், பெண்களை மாதவிடாய் காலத்தில் ஓரம்கட்டும் மரபும் மாறிவிட்டது.
*
இத்தனை இருந்தும், இன்னும் சில பழம் பஞ்சாங்கள், “மாதவிடாய் உதிரம் அழுக்கு. தீட்டு, கோயிலுக்கு போயிடாதே” என்று சொல்லத்தான் செய்கிறார்கள். இதெல்லாம் சேனிடரி நேப்கின் இல்லாத கால்ததின் லாஜிக், இப்போது தான் கம கம சேனிரரி நேப்கின் வந்துவிட்டனவே, இதை மாட்டிக்கொண்டு பெண்கள் எல்லாம் வெளி கிரகத்திற்கே போய் வருகிற போது, ஆஃப்டரால் மனிதன் கட்டிய கோயிலுக்கு போககூடாதா? ”கூடாது, கோயிலில் சாமி இருக்கிறது” என்று தர்க்கம் செய்தாலும் ,இந்த கால பெண்கள் மிக சமர்த்தாக கேட்கிறார்கள், “கோயில்ல மட்டும் தான் சாமி இருக்கா?” என்று. அப்படியும் கன்வின்ஸ் ஆகாத பழைமைவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். சுயமாக யோசித்து சுதந்திர முடிவிற்கு வர முடியாத அறிவியல் அறியாதவர்கள் பாவம். ஆனால் அவர்களை விட ரொம்ப பாவம் யார் தெரியுமா? ஆண்கள்!
*
பெண்களுக்காவது வயதிற்கு வந்தவுடன், “இது இது, இப்படி இப்படி” என்று பெரிய பெண்கள் எல்லாம் ஒன்று கூடி, கூச்சம், நாச்சம் இல்லாமல் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்து விடுகிறார்கள். ஆனால் ஆண்கள் வயதிற்கு வந்தால், அவர்களை சட்டை செய்ய கூட நாதி இருப்பதில்லை. பெரும்பாலான ஆண்களுக்கு தாங்கள் வயதிற்கு வந்ததே தெரிவதில்லை. அப்புறம் எங்கே கொண்டாடுவது.
*
இத்தனை காலம் தான் பெண்கள் வயதிற்கு வருவதை பெரிய வைபவமாய் கொண்டாடினோமே. இது தான் பாலியல் சமத்துவ யுகமாயிற்றே, இனி ஆண்கள் வயதிற்கு வருவதையும் கொண்டாட ஆரம்பித்தால் தானே இருபாலோரையும் சமமாய் நடத்தியதாகும்!
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"