...
"வாழ்க வளமுடன்"
05 அக்டோபர், 2010
முதுகுவலியா? தொப்பையா?
இந்தியர்கள் கண்டு பிடித்த யோகாசன முறையை இப்போது நாம் தான் சரியாக பின்பற்றுவதில்லையே தவிர மேலை நாட்டுக்காரர்கள் இதற்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.
*
அங்குள்ள விஞ்ஞானி கள் தீராத முதுகுவலி, மற்றும் தொப்பை வயிறு குறைவதற்கு யோகா சனத்தை சிபாரிசு செய்கி றார்கள்.
தினமும் 10 நிமிடம் `யோகா' செய்தாலே போதும். வேறு எந்த உடற்பயிற்சிகளும் தேவையில்லை என்கிறார்கள் அவர்கள்.
*
யோகாசனங்களில் அர்த்மத்ஸ் யேந்திரசனா என் றொரு பயிற்சி உள்ளது. இதனைச் செய்வதன் மூலம் முதுகுவலி, தொப்பை அறவே நீங்கி விடுமாம்.
*
சமதரையில் முதுமை நிமிர்த்தியபடி கால்களை நன்றாக நீட்டியபடி அமர்ந்து கொள்ளுங்கள். நன்றாக மூச்சு வாங்கி கொள்ளுங்கள். உங்கள் இரு கை விரல் களாலும் கால் விரல்களை முதுகு நிமிர்த்தி தொடுங்கள். இதனை 10 நிமிடம் செய்தாலே போதுமானது.
*
இந்த பயிற்சி மூலம் நல்ல இருதயவலிமையும் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/12155.html
***
"வாழ்க வளமுடன்"
மூளை வளர்ச்சிக்கு வைட்டமின்-டி அவசியம்
வைட்டமின்-டி சத்து உடலில் கால்சிய அளவை ஒரு சீராக இருக்க உதவுவதன் மூலம் ஆரோக்கியமான எலும்புகள் உருவாக இது துணை புரிகிறது. அது மட்டும் அல்லாமல், மேலும் ஒரு முக்கியமான பணியையும் இது செய்து வருகிறது. மூளை வளர்ச்சிக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.
*
வைட்டமின்-டி சத்து மீன், பால் போன்ற சில உணவுப்பொருள்களில் மட்டும் தான் காணப்படுகிறது. சூரிய ஒளியில் கிடைக்கும் அல்ட்ரா வயலட் கதிர்கள் உடல் தோலில் உள்ள உயிரி ரசாயனப்பொருளை வைட்டமின்-டி யாக மாற்றுகிறது.
*
வெள்ளைத்தோல் உடையவர்களை விட கறுப்பு தோல் உடையவர்களுக்கு தான் அதிக அளவில் வைட்டமின் டி சத்து அல்ட்ரா வயலட் கதிர்கள் மூலம் கிடைக்கின்றன.
*
இந்த உண்மைகளை ஆக்லாந்து ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர்கள் ஜாய்ஸ் சி மெக்கன், புருஸ் என்.அமெஸ் ஆகியோர் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து இருக்கிறார்கள்.
***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/11269--.html
***
"வாழ்க வளமுடன்"
சிகரெட்டை விட செல்போனை பயன்படுத்துவது அதிக ஆபத்தானது
செல்போனை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிலர் தூங்கும்போது கூட காதில் அதை கட்டிக்கொண்டே தூங்குகிறார்கள்.
*
ஆனால் அது புகை பிடிப்பதை விட அதிக ஆபத்தானது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் பலியாகிறார்கள்.
*
ஆனால் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் உயிர் ஆபத்துக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்று நிïரோ சர்ஜனும், பேராசிரியருமான குரானா தெரிவித்தார்.
*
ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அது வளர்ச்சி அடைவதற்கு 10 ஆண்டுகள் ஆகும். ஆனால் 10 ஆண்டுகள் செல்போன் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் ஆபத்து இரு மடங்காக பெருகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*
எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செல்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என்றும் நிïரோ சர்ஜன் குரானா தெரிவித்து இருக்கிறார். அதிக அளவுக்கு செல்போனை பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
*
எனவே செல்போனில் ஏற்படும் கதிரியக்கத்தை குறைக்க செல்போன் தொழிற்சாலைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
***
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/9532.html
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
பொது அறிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "