இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்
நண்பர்களுக்கும், தோழிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் :)
அனைவரின் இல்லத்திலும் இனிய மகிழ்ச்சி பொங்கட்டும்
:)
***
"வாழ்க வளமுடன்"
இது வட இந்திய இனிப்பாகும்
தேவையானவை
ஆப்பிள் - 2
பால் - 2 கப்
முந்திரி - 10
பிஸ்தா - 10
பாதாம் - 10
சர்க்கரை - 2 கப்
செய்யும் முறை
அடுப்பில் பாலை வைத்து சுண்டக் காய்ச்சுங்கள்.
பால் சுண்டுவதற்குள் ஆப்பிளை நறுக்கி மிக்சியில் போட்டு மசித்துக் கொள்ளலாம். அல்லது தேங்காய் சீவலில் வைத்து சீவிக் கொள்ளலாம்.
பால் சுண்டி 1 கப் ஆனதும் அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கி விடவும்.
சர்க்கரை நன்கு கரைந்ததும் ஆப்பிளைப் போட்டு கலக்கவும்.
பாதாமின் தோலை உரித்துக் கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை அரை மணி நேரம் பாலில் ஊறவைத்து மிக்சியில் ஒன்றும் பாதியுமாக அரைத்து வேகும் ஆப்பிளில் சேர்த்துக் கொள்ளவும்.
ஆப்பிள் ரப்டி தயார். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து பரிமாறி அலங்கரிக்கவும்.
***
thanks Mohamed
***
"வாழ்க வளமுடன்"
தேவையானவை
முந்திரி - ஒன்றரை கப்
கடலைமாவு - 2 கப்
டால்டா - கால் கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
அரிசி மாவு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை, இஞ்சி - சிறிது
பொரிக்க எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்யும் முறை
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடலைமாவில் டால்டா, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரி பருப்பு, அரிசி மாவு இவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறிய உருண்டைகளாகவோ அல்லது சிறு கரண்டியில் அள்ளிப் போட்டோ எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பகோடா மீது சிறிது கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்து போட்டு சூடாக பரிமாறவும்.
***
thanks Mohamed
***
"வாழ்க வளமுடன்"