...

"வாழ்க வளமுடன்"

27 செப்டம்பர், 2010

டிப்ஸ் டிப்ஸ் ( பயனுள்ள டிப்ஸ் :-)

நண்பர்களே படித்து கலைத்து இருப்பிர்கள். ஜூஸ் குடித்துக்குட்டே இதையும் படிங்க:-)1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்

*

2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.

*

3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.

*
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.

*

5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

*

6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.

*

7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
*

8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
*

9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
*

10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.

*

11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.


*

12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.

*

13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.

*

14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.

*

15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.

*

16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.

*

17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.

*

18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.


*

19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.


*

20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.

*

21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.

*

22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.

*

23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.

*

24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.

*

25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.

*

26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

*

27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.

*

28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.

*

29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.

*

30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.

*


31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

*

32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.

*

33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

*

34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.

*

35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.

*


36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.

*

37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

*

38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.

*

39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

*

40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.

*

41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.

*

42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.

*

43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

*

44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.

*

45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.

*

46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.

*

47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.

*

48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.

*

49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.

*

50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.***

நன்றி தமிழ்களஞ்சியம்.
நன்றி http://ahamedanver.blogspot.com/


***
"வாழ்க வளமுடன்"
***
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

கருப்பட்டி ( வெல்லம் ) நினைவில் இருக்கிறதா?

கருப்பட்டி... மிக சிறந்த இனிப்பு பலகாரங்களுக்கு உதவும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மருத்துவ குணங்களும் நிறைந்தது.1) சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்

*


2) அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.இப்பேர்ப்பட்ட கருப்பட்டியை நாம் மறந்து கொண்டிருக்கிறோம். அன்பர்களே நாம் இப்படி ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருந்தால் இறுதியில் நாம் நம் அடையாளத்தை இழந்து விடுவோம்.

*

நம் குழந்தைகளிடம் நமது உணவு முறைகளையும் அதன் மகிமைகளையும் எடுத்து கூறுங்கள். மக்கள் தொடர்ந்து கேட்டால்தான் கடைகாரர்களும் அதை வாங்கி வைப்பார்கள்.

*

நாம் வெறும் பெப்சியும் கோக்கும் மட்டும் கேட்டால் அவர்கள் அதை மட்டும்தான் மக்கள் பார்வையில் வைப்பார்கள்.

*

நாளடைவில் நமது உணவு பொருள்களும் கிடைக்காது, மறந்தும் போகும் நமது அடுத்த தலைமுறையினருக்கு பெரிய ?

*

அதனால் இந்த தலை முறையினாராவது நம் பிள்ளைகளுக்கு அதனை உணவு மூலம் உடலில் சேர்த்து பழக்கினால் அடுத்த தலை முறை கட்டாய்ம் இதனை நினைவில் வைத்துக் கொள்ளும்.


***


குழந்தைக்கான இயற்கை டானிக்..1. கடலை மிட்டாய், இதுப்போல் பர்fயி அணைத்தும் உடலுக்கு வலுசேர்க்கும்.

*

2. தினமும் வாழைப்பழம், இரவு உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை, ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த கஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால் இவையெல்லாம் உடலின் எடையைச் சீராகப் பராமரிக்கும்.

*

3. குழந்தைக்கு நல்ல போஷாக்கையும் தரும். இதை தொடர்ந்து கொடுத்து வந்தாலே மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

***

by-சக்திக்குமரன் விஜயராகவன்.
நன்றி itsmytamil.blogspot.com

நன்றி கீற்று.

***
"வாழ்க வளமுடன்"


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

பாக்கு அதன் பயன்களும்

பாக்கு மரமும் பாகங்களும்:
ஒருகாலத்தில் வெற்றிலை போடும் வழக்கம் நிறைய இருந்தது. விருந்துகளின்போது கட்டாயமாக வெற்றிலை பாக்கு உண்டு. அப்போது வெற்றிலை போட்டுக்கொள்வது ஒரு மரியாதை.

*

அவர்களின் கொச்பிடலிட்ய்-யை நாம் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட பணம் பாக்கு வைத்தே அழைப்பது வழக்கம். நல்லது கெட்டது எல்லாவற்றிலும் வெற்றிலை பாக்கு இருக்கும்.பல சம்பிரதாயங்களில் வெற்றிலை பாக்கு உண்டு.

*


மங்கலகரமான எட்டுப் பொருள்களில் வெற்றிலையும் ஒன்று. இப்போதெல்லாம் வெற்றிலை போடும் வழக்கம் அருகிவிட்டது. சிலர் சிலவேளைகளில் பீடா போடுவார்கள்.

*

பீடாவைப் பற்றிய பழைய மடல் அகத்தியத்தில் உண்டு. வெற்றிலையை வெறும் வெற்றிலையாகப் போடுவதில்லை.பாக்கு, சுண்ணாம்புடன் சேர்த்துத்தான் போடவேண்டும்.

*


பாக்கைப் பழங்காலத்தில் அடைக்காய் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆங்கில மொழியில் பாக்கை Bஎடெல் ணுட், ஆரெcஅ ணுட் என்று சொல்கிறோம். அரெக்கா என்பது அடைக்காயின் மருவல்.

*

பெட்டல் என்பது வெற்றிலையின் மருவல். ஆக, இரண்டுமே தமிழ்ச்சொற்க்கள். கடாரத்தின் மிக முக்கிய ஏற்றுமதிப்பொருள்களில் பாக்கும் ஒன்று.

*

இப்போதும்கூட ஆயிரக்கணக்கில் கடாரத்தில் பாக்கு மரங்களைக் காணலாம். பினாங்குத்தீவின் பெயரில் உள்ள பினாங் என்பது பாக்கைக் குறிக்கும் சொல்தான். அங்கு பாக்கு மரங்களும் அதிகம். பாக்கு ஏற்றுமதி மையமாகவும் இருந்தது.பினாங்கு மாநிலத்தின் சின்னமே பாக்கு மரம்தான்.


***

பினாங்கு மாநிலத்தின் கொடி:ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் நானே பார்த்திருக்கிறேன். இரண்டாம் உலகயுத்தத்தின்போது குண்டுவிழுந்து தரைமட்டமாகிய வீடுகளின் இடிபாடுகளை அப்புறப்படுத்தியபின் அந்த இடங்களில் பெரும்பாலும் பழைய சிமெண்டுத்தரை அப்படியே இருக்கும்.

*

நான்கைந்துவீடுகளின் இடுபாடுகளையெல்லாம் சுத்தமாக்கிவிட்டு அந்த இடத்தில் பாக்கைப் பரப்பிக் காயவைத்து, மலைபோலக் குவித்து வைத்திருப்பார்கள். அங்கேயே சாக்குகளில் நிரப்பி கைவண்டிகளில் ஏற்றி அருகிலிருக்கும் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

*

ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்தவர்களிடம் பினாங்குத்தீவில் பாக்குக் காயவைக்கும்போது அங்கு வரும் காக்கைகளை விரட்டுவதற்கு ஆள்தேவைப்படுகிறது என்று சொல்லியே கூலிவேலைக்கு ஆள்பிடித்துக் கூட்டிவந்ததாகச் சொல்வார்கள்.அப்போது அப்படி கூட்டிவரப்பட்டவர்களின் கதை சோகக்கதை. அது வேறு கதை.

***

உரிக்காத பாக்கு:


பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர் இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பார்கள். இவ்வாறு காயவைக்கப்பட்டது.

*

பாக்கு மரங்களிலிருந்து முற்றிய பாக்கைப் பறித்து இறக்குவார்கள். அவற்றைப் பெரிய பெரிய தோம்புகளில் ஊறவைப்பார்கள். ஊறியபின்னர்இளநீரின் மட்டையை உரிப்பதுபோல பாக்கைச்சுற்றியிருக்கும் மட்டையை அகற்றுவார்கள். அதன்பின்னரே காயவைப்பது. இவ்வாறு காயவைப்பது கொட்டைப்பாக்கை அவித்து, அதை ஆறவைத்து, அதை ஸ்லைஸ் ஸ்லைஸாக வெட்டி, அதன்பின் காய வைப்பார்கள்.

*

இதைக் 'களிப்பாக்கு' என்று குறிப்பிடுவார்கள்.இது 'மொறுகுமொறுகு'வென்று இருக்கும். இதன் சுவையும்வித்தியாசமானதுதான. கொட்டைப் பாக்கை அப்படியே கடிப்பது என்பது பலருக்கு இயலாத காரியம். ஒருசிலரால் அவ்வாறு கடிக்கமுடியும். பற்களுக்கு இடையில் வைத்து 'நறுக்'கென்று கடித்துவிடுவார்கள்.'டக்'கென்று பாக்குப் பிளக்கும்.

*

நொடிப்பொழுதை ஒரு காலத்தில் 'பாக்குக் கடிக்கும் நேரம்' என்று குறிப்பிடும் சொல்வழக்கு ஒன்று இருந்தது. இவ்வளவு சிரமப்படவேண்டாம் என்று பலர் ஒரு கருவியை வைத்திருப்பார்கள். அதனைப் 'பாக்குவெட்டி' என்று அழைப்பார்கள். இரண்டு கைப்பிடிகள். இடுக்கி போல் இருக்கும்.

*
ஒரு பிடியில் பதமான கத்தி இருக்கும். பாக்கைவைத்து கைப்பிடிகளை இறுக்கினால் பாக்குப் பிளந்துவிடும். பாக்குகளை மெல்லிய இழைகளாகச் சீவிவைப்பதும் உண்டு.இதைச் சீவல் பாக்கு என்பார்கள்.

*

சீவலை நெய்யில் முந்திரிப்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, தேங்காய்ப்பூ, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றுடன் நெய்யில் வறுத்து வைப்பதும் உண்டு. சிறிய துணுக்குகளாகப் பாக்கைவெட்டி அந்தத் துணுக்குகளையும் பிஸ்தா, குங்குமப்பூ, ஏலக்காய், ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து நெய்யில் வறுத்துவைப்பதும் ஒருவகை. வாசனைப் பாக்குத்தூள் என்பது இது.

*

'அசோகா' வாசனைப்பாக்கு, மதுரை சாமுண்டி வாசனைப் பாக்கு ஆகியவை மிகவும் புகழ பெற்றவையாக இருந்தன. மதுரை மேலக்கோபுரத்தெரு முழுவதுமே சாமுண்டி பாக்குத் தூளும் டெல்லிவாலா நெய் ஸ்வீட்டுகளும் நரசு'ஸ் காப்பித்தூளும் சேர்ந்துமணக்கும். அது ஒரு தனி அலாதிதான்.

*

மதுரையில் மல்லிகை மட்டுமே மணக்கும் என்பதில்லை. 'ரெட்' படத்தின் மூலம் அந்தக் கருத்து பரவிவிட்டது. மதுரையில் பலவகையான மணங்கள் உண்டு. கொட்டைப் பாக்கு களிப்பாக்கு ஆகியவை காளமேகப் புலவரின் பாடல் ஒன்றில் வரும்.

*

கீழ்க்கண்ட படத்தில் மலேசியாவின் இருபது காசு நாணயத்தைக் காணலாம்.


மலேசிய இருபது காசு நாணயம்.
மலாய்க்காரர்களுடைய வெற்றிலைச்செல்வம்.
பாக்குவெட்டியும் அருகில் இருக்கிறது.


அந்த நாணயத்தின் ஒருபுறத்தில் மலாய்க்காரர்கள் பயன்படுத்தும் வெற்றிலைப் பெட்டி, வெற்றிலை, சுண்ணாம்பு டப்பி, ஏலக்காய் டப்பி, வெட்டப்பட்ட பாக்குத்தூள் டப்பி ஆகியவற்றுடன் முழுப்பாக்கு ஒன்றுடன் பாக்குவெட்டியையும் வெற்றிலைப் பெட்டியின் அருகில் காணலாம். வயதானவர்கள் பயன்படுத்தும் பாக்கு உரலும்கூட அவர்களிடம் உண்டு.

*

BY- கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
JayBee***

பாக்கு மென்றால் புற்றுநோய் ...
ஆசியாவின் பல பகுதிகளில் பாக்கு மெல்வது என்பது ஒரு சாதாரண விஷயம். ஆனால் இவ்வாறு செய்வதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது என்றும், அதனால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகவும் தாய்வான் மருத்துவமனை ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் சுங் ஷான் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாய் புற்றுநோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரில் 13 பேர் மரணம் அடைவது தெரியவந்துள்ளது.

*


தாய்வானின் கிராமப்புறங்களில் பாக்கு மரம் ஒரு பணப்பயிராக வளர்க்கப்படுகிறது. பெருமளவில் பாக்கு பயிர் செய்யப்பட்டதை தொடர்ந்து, தாய்வான் மக்களுக்கு பாக்கு மெல்லும் பழக்கம் அதிகளவில் ஏற்பட்டது.

*

தாய்வானில் இருக்கின்ற ஆண்களில் 14 சதவீதம் பேர் பாக்கு மெல்கின்றனர். வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு பாக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*


கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2100 பேர் வாய் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். தாய்வானில் ஆண்களின் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக வாய் புற்றுநோய் பார்க்கப்படுகிறது.

*


பாக்கு உபயோகப்படுத்துவதை தடுக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது, ஆனால் கட்டுமான பணியாளர்கள், வாகன ஒட்டுநர்கள், மீனவர்கள் போன்றவர்களிடம் பாக்கு பிரபலமாக இருக்கிறது. கேஃபைன் போன்றே பாக்கும் தங்களை விழித்திருக்க வைக்க உதவுவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

*


அரசாங்கம் தாங்கள் தொலைக்காட்சி, செய்தித்தாள், கல்விசாலைகள், தேவாலயங்கள், கிராமங்கள் போன்றவற்றில் பாக்குக்கு எதிராக செய்யும் பிரச்சாரத்தால் கடந்த 3 ஆண்டுகளாக இந்த பழக்கம் குறைந்திருப்பதாக கூறுகிறது.

*


ஆனால் வாய் புற்றுநோயால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை குறைய கொஞ்சம் காலம் ஆகும். ஏனென்றால் 1970, 1980 களில் பாக்கு மெல்ல ஆரம்பித்தவர்களுக்கு இப்போது புற்றுநோய் வர ஆரம்பித்துள்ளது.

***


வெற்றிலை பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகுமா?
கண்டிப்பாக வெற்றிலை, பாக்கு போடுவதால் ஈறு பாதிப்பு உண்டாகும். இது தவிர, புகைத்தல், மருந்துகள், வாயை சுத்தம் செய்யும் மருந்துகள், ஆஸ்பி¡¢ன், அம்மோனியா, குளோ¡¢ன், வாய்ப்புற்று நோய்க்காக அளிக்கப்படும் ரேடியக் கதிர்வீச்சு ஆகியவற்றாலும் ஈறுகள் பாதிக்கப்படும்.

*

இதை உடனடியாகக் கவனித்து சிகிச்சையளிக்காவிட்டால் ஈறுகளில் இரத்த நாளங்கள் வி¡¢வடைந்து இரத்த ஒழுக்கு ஏற்படும். நாட்பட்ட நிலையில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு ஈறு நீலம் கலந்த சிவப்பாகவும், தொட்டால் வலிக்கும் தன்மை கொண்டதாகவும் மாறும்.

BY- - Ln. Dr. M.S. சந்திரகுப்தா, BDS., FCIP., DIM PGDHRM., PGDGC.,


***

நன்றி மார்டன் தமிழ்வெல்டு.
நன்றி www.bbc.co.uk
நன்றி visvacomplex.com


***


"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

வெற்றிலையின் மருத்துவ குண்ங்கள்

வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும். இது மலேசியாவில் தோன்றியதாகும். இச்செடி இந்தியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது.நம் தமிழர்களிடையே எந்த முக்கியமான வைபவமாக இருந்தாலும் வெற்றிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
*
இந்த வெற்றிலை தமிழ்நாட்டில் கும்பகோணம் பகுதியிலும், தேனி மாவட்டத்தில் பெரியகுளம், சின்னமனூர் பகுதியிலும் அதிகமாக பயிர் செய்யப்படுகிறது. இருப்பினும் வெற்றிலை என்றால் கும்பகோணம் தான் என்கிற அளவிற்கு கும்பகோணம் வெற்றிலை பிரசித்தம். வெற்றிலைப் பயிருக்கு பயிர் செய்ய விதை என்று எதுவும் இல்லை.
*

இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள்.
*
கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
*

காம்புகளை வெட்டிப் பதியம் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலையை பயிர் செய்யும் நிலப்பகுதியை கொடிக்கால் என்று அழைக்கின்றனர். (தேனி மாவட்டத்தில் வெற்றிலையை ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிர் செய்கிறார்கள். இவர்கள் கொடிக்கால் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகிறார்கள்.)
*
வெற்றிலையில் கருகருவென்று கரும்பச்சை நிறத்திலிருப்பது ஆண் வெற்றிலை என்றும் இளம்பச்சை நிறத்திலிருப்பது பெண் வெற்றிலை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். இந்த வெற்றிலைக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் சித்த மருத்துவத்தில் இது பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை.

*

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
*

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது.

*

வெற்றிலையை உபயோகிக்கும் முறை:

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.


***

அதில உள்ள சத்துக்காள்:

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.
*

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

*

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.


***


மருத்துவப் பயன்கள்:1. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

*

2. சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

*

3. வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

*

4. வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

*

5. குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.


*

6. வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.


*

7. குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

*


8. வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

*

9. கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

*

10. வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

*

11. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.


*

12. குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

*

13. வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

*

14. நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

*

15. சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.


*

16. நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.

*

17. வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

*

18. வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

*

19· வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

*

20· வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

*

21· இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

*

22· புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

*

23· வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.


***

மேலும் பல மருத்துவ தகவல்கள்:


1. இருமல்-சளி நீங்க:

இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து, 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன், 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*

2. ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி:

சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகும்.


*

3. காணாக்கடிக்கு:

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.

*

4. உற்சாக உணர்விற்கு:

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.


*

5. வாத நோய் நீங்க:

வாத நோய்களை குணமாக்கும் "வாத நாராயணா" எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைசாறும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.

*

6. செக்ஸ் உணர்விற்கு:

பெரும்பாலான ஆசிய நாடுகளில் வெற்றிலைக்கு செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.

*

7. தீப்புண் குணமாக:

தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட வேண்டும். விரைவில் அந்த புண் குணமாகும்.

*

8. நுரையீரல் பலப்பட:

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

*

9. வயிற்றுவலி நீங்க:

2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரைத்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடுநரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக்கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மாந்தம் குறையும்.

*

10. சர்க்கரையின் அளவு கட்டுப்பட:

வெற்றிலை - 4

வேப்பிலை - ஒரு கைப்பிடி

அருகம் புல் - ஒரு கைப்பிடி

சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்ற வைத்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

*

11. விஷக்கடி குணமாக:

உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமான வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றிலையில் நல்ல மிளகு வைத்து மென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

*

12. இருமல் குறைய:

வெற்றிலைச் சாறுடன் கோரோசனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் சளிக்கட்டு, இருமல், மூச்சுத் திணறல் குணமாகும்.

*

13. அஜீரணக் கோளாறு அகல:

வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அதனுடன் 5 நல்ல மிளகு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சிறுவர் களுக்கு உண்டாகும் செரியாமை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.

*

14. தோல் வியாதிக்கு:

100 மி.லி. தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.

*

15. தலைவலி நீங்க:

வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி சாறு எடுத்து கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.

*

16. தீப்புண் ஆற:

தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

*

17. அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

*

18. தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.


***

பிற நாட்டில் இதன் பயன்கள்:


நம் நாட்டில் மட்டுமில்லை வெற்றிலை சில சம்பிரதாயங்களுக்காகவும் பிற நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1. சீனர்கள் வெற்றிலையை இடது கையால் வாங்க மாட்டார்கள். நம் நாட்டிலும் இப் பழக்கம் இருந்து வருகிறது.

*

2. சுமித்ராவில் மனைவியை விட்டுப் பிரிய விரும்பும் கணவன் வெற்றிலையை அவளிடம் கொடுத்துத் "தலாக்" என்று மூன்று தடவை கூறி விட்டால் விவாகரத்து ஆகிவிட்டதாக அர்த்தம்.

*

3. தூக்கிலிடுவதற்கு முன்பு குற்றவாளிகளுக்கு வெற்றிலை பாக்கு கொடுக்கும் வழக்கம் மியான்மரில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

*

4. சிறையில் அடைபட்டுக் கிடக்கும் கைதிகளுக்கு மலேரியா போன்ற நச்சுக் காய்ச்சல் வராமல் இருக்க அவர்களுக்கு வெற்றிலை கொடுப்பது நெதர்லாந்து நாட்டின் வழக்கம்.

*

5. சண்டை போட்டுக் கொள்பவர்கள் சமாதானம் அடைய வெற்றிலை மாற்றிக் கொள்வது மலேசியா வழக்கம்.
*
by-கணேஷ் அரவிந்த்.


***

நன்றி மூலிகைவளம்.
நன்றி நக்கீரன் ஹெல்த்சாய்ஸ்.
நன்றி தமிழ்கூடல்.
நன்றி முத்துக்கமலம்.

***

"வாழ்க வளமுடன்"

***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.

பசுப்பால் மருத்துவ குணங்கள்

பிறந்த குழந்தைக்கு பசும் பால் நல்லது:பிறந்த குழந்தைளுக்கு தாய்ப்பாலைப் போலவே பசும்பாலும் கொடுக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
*

குழந்தை பிறந்து 15 நாட்களுக்கு பசும்பால் கொடுப்பது மிகவும் நல்லது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதன் மூலம் பல்வேறு அலர்ஜிகளை தடுக்கலாமாம்.
*

இதுகுறித்து டெல் அவிவ் பல்கலைக்கழக குழந்தைகள் பிரிவு பேராசிரியர் இட்சாக் கட்ஸ் கூறுகையில், குழந்தை பிறந்து முதல் 15 நாட்கள் வரை அவற்றுக்கு பசும்பால் கொடுத்து வந்தால், பின்னாளில் பசும்பால் புரோட்டீனால் ஏற்படும் அலர்ஜி உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியும்.
*

இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னாளில் உடலில் புள்ளிகள் வருவது, மூச்சுத் திணறல் ஏற்படுவது, அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவது போன்றவற்றையும் கூட தவிர்க்கலாம்.
*

பிறந்த குழந்தைகளுக்கு தினசரி இரவு ஒரு குவளை பசும்பால் தரலாம். அதேசமயத்தில் தாய்ப்பாலும் போதிய அளவுக்கு கொடுக்கப்பட வேண்டும்.
*

அதேசமயம், ஆரம்ப கட்டத்தில் பசும் பால் கொடுக்காமல், குழந்தைக்கு 3 முதல் 5 மாதம் இருக்கும் வரையிலான காலகட்டத்தில் பசும்பாலைக் கொடுக்கக் கூடாது. அது அபாயத்தை ஏற்படுத்தலாம்.
*

தொடக்கத்திலேயே பசும்பாலைத் தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஒரு வருடம் போன பிறகுதான் தர வேண்டும் என்றார்.

***

பசுப்பால் சளியை தடுக்கும்:
"இவனுக்கு சளி அடிக்கடி பிடிக்கிறபடியால் நான் பசுப்பால் கொடுக்கிறதில்லை" என்றாள் தாய்.
வளரும் குழந்தை முன்பள்ளிக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறான்.
*

"நீங்கள் செய்வது தவறு. அவனது வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பால் அவசியம் அல்லவா?" எனக் கேட்டேன்.

மாப் பால் கரைத்துக் கொடுப்பதாக சொன்னாள்.
பசும் பாலுக்கு சளிபிடிக்கும் என்பது அவளது நம்பிக்கை.

*

அவள் மட்டுமல்ல எல்லாப் பெற்றோர்களது நம்பிக்கையும் கூட,
ஒட்டு மொத்த தமிழ் மக்களது நம்பிக்கை என்று கூட சொல்லலாம். அந்த நம்பிக்கை முற்று முழுதாக தவறானது என அண்மையில் ஆய்வு சொல்கிறது.
*

பசும்பாலுக்கு சளிபிடிக்காது என்று மட்டுமல்ல, அது சளிக்குக் காரணமான ஆஸ்மா, அலர்ஜி(ஒவ்வாமை) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கிறது என ஆய்வு செய்த டொக்டர் மக்ரோவாசர் ( Dr. Macro waser) கூறுகிறார். இவர் சுவிட் சர்லாந்து நாட்டு பஸல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

*

பதனிடப் படாத பாலைக் குடித்த பிள்ளைகளுக்கு அல்லது அதிலிருந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பாற் பொருட்களை உண்ட பிள்ளைகளுக்கு ஆஸ்மா அலர்ஜி ஆகியன ஏற்படுவது குறைவாம்.
*

5 முதல் 13 வயது வரையான 14893 பேரை உள்ளடக்கிய ஆய்வு இது.

இக் குழந்தைகள் பாற்பண்ணை, கிராமம், நகரம் எனப் பல்வேறு சூழல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
*

அவர்கள் எந்தச் சூழலிருந்து வந்தாலும் பசும்பால் சளியிலிருந்து பாதுகாப்பு கொடுத்தது. பசும்பாலை ஒரு வயது முதல் குடித்து வந்த குழந்தைகளுக்கு கூடியளவு நன்மை கிடைத்ததாம்.
*

பசும்பாலை பச்சையாகக் கொடுக்கக் கூடாது. காய்ச்சித்தான் கொடுக்க வேண்டும்.

*

இல்லையேல் சில நோய்கள் தொற்றக்கூடும்.
இத்தகைய காய்ச்சிய பால் தான் பாதுகாப்பை கொடுத்தது.

பதனிடப்பட்டு பைக்கற்றில் அடைக்கப்பட்ட பாலோ, மாப்பாலோ அத்தகைய பாதுகாப்பை கொடுப்பதாக அறியப்படவில்லை.
*

இதிலிருந்து சளிபிடிப்பவர்களுக்கு பசும்பால் கொடுக்காது மாப்பால் கொடுப்பது எந்த விதத்திலும் உதவப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
*

அத்துடன் சிறு வயதிலிருந்தே, அதாவது ஒரு வயது முதற் கொண்டு தினசரி பசும்பால் கொடுத்துவந்தால் ஆஸ்மா, அலர்ஜி போன்ற சளித்தொல்லைகளும் அதிகம் வராது என்பதும் தெளிவாகிறது.
*

எனவே உங்கள் குழந்தைக்கு சளித்தொல்லை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பசும்பால் கொடுத்து வாருங்கள். அதனால் சளித்தொல்லை குறைவதுடன் ஆரோக்கியமும் கிட்டும்.

*

பசும்பாலில் உள்ள என்ன பொருள் அல்லது என்ன குணாதிசயம், அலர்ஜிக்கும் ஆஸ்மாவிற்கும் எதிரான பாதுகாப்பைக் கொடுக்கின்றது என்று அறிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.


***

நன்றி டாக்டர்.
by Dr.எம்.கே.முருகானந்தன்
நன்றி தினக்குரல்.

நன்றி தட்ஸ்தமிழ் தளம்.

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "